மோனிஷா நாவல்கள்
Srushti - Episode 3
Quote from monisha on January 4, 2023, 11:35 AM3
தியா உடனடியாக லித்துவின் பள்ளிக்குத் தொடர்பு கொண்டாள். என்னவோ அந்த நொடியே மகளிடம் பேசி விட வேண்டுமென்ற தவிப்பு அவளுக்கு. ஆனால் அவள் பள்ளிக்குத் தொடர்பு கொண்ட போது அவளிடம் பேசியது கூட ஒரு இயந்திரம்தான்.
“நத்திங் டூ வொர்ரி…. உங்கப் பொண்ணு க்ளேஸ்லதான் இருக்கா… நான் புட்டேஜ் அனுப்புறேன்” என்று பதில் சொல்லியது.
“ஹேய் ஹேய்… இரு… நான் என் பொண்ணுகிட்ட பேசணும்” என்ற ஒரு தாயின் பதட்டத்தை அது உணர்ந்து கொள்வது கஷ்டம்தான். இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் லித்து வகுப்பிலிருக்கும் வீடியோ ஒன்று தியாவின் கைப்பேசியை வந்தடைய, அவள் அதனைத் திறந்து பார்த்தாள்.
லித்து இயல்பாக இருந்தது போல தெரிந்தாலும் ஒரு தாயின் பார்வை மகளின் மனக்கவலையைக் கண்டுகொண்டது.
எந்த நூற்றாண்டுகளிலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்.
மீண்டும் அவள் பள்ளிக்கும் அழைத்து லித்துவிடம் பேச வேண்டுமென்று கேட்க, “சாரி மேடம்… க்ளேஸ்ல இருக்கும் போது பேச முடியாது” என்று அது பதிலளிக்க,
“சரி ப்ரேக் டைம்லயாவது பேச வைய்யுங்க ப்ளீஸ்” என்றவள் கெஞ்சத் தொடங்கினாள்.
“நோ மேடம்… ரூல்ஸ்படி அப்படி செய்ய முடியாது” என்ற உணர்வற்ற அதன் பதிலில் தியா கடுப்பானாள்.
“ஹெல் வித் யுவர் ரூல்ஸஸ்… எனக்கு இப்போ… என் பொண்ணுகிட்ட பேசணும்… பேசியே தீரணும்” என்றவள் கத்தத் தொடங்க.
“சாரி மேடம்… இட்ஸ் நாட்பாசிபிள்” என்று அது பதில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டது.
அவள் தோழி நேகா தோளைத் தட்டி, “என்னாச்சு உனக்கு… ஏன் இப்படி டென்ஷனாகுற… கம்மான் கூல்” என,
“இல்ல… எனக்கு அந்த நியுஸை பார்த்ததுல இருந்து ஒரு மாதிரி பதட்டமாவே இருக்கு… இப்பவே எனக்கு லித்துகிட்ட பேசுனாதான் நிம்மதி” என்றாள்.
“ஓ… கம்மான்… தியா… நியுஸ் சேனல்ஸ் எல்லாம் சும்மா பரபரபுக்காக இப்படி அவங்க இஷ்டத்துக்கு எதையாச்சும் போட்டு அவங்க சேனல் ரேட்டிங்கை ஏத்திட்டு இருப்பாங்க… அதையெல்லாம் நம்பிட்டு”
“இல்ல நேகா… என் மனசு சமாதானமாக மாட்டேங்குது… நான் லித்துவைப் போய் ஸ்கூலில் பார்த்துட்டு வந்துடுறேன்” என்றவள் தன் தோள் பையை எடுத்துக் கொள்ள,
“மீட்டிங் இருக்கு தியா… அதை முடிச்சிட்டுப் போ” என்று நேகா சொல்ல, தியா தயங்கினாள்.
“புது ஜிஎம் வேற வந்துருக்காரு… இப்ப நீ கிளம்புனா சரியா வராது… எல்லாம் உன் ப்ரோமோஷன்ல வந்து விடியும்… ஸோ ஒரு அரைமணி நேரம் மீட்டிங் முடிச்சிட்டுக் கிளம்பிடு” நேகா நிலைமையை எடுத்துரைத்ததில் அவளுள் இருந்த பரபரப்பு லேசாக அடங்கியிருந்தது.
“ஓகே” என்றவள் தலையசைத்துவிட்டு அமர்ந்துவிட்டாள். ஆனால் இந்த ஒரு தருணத்திற்காக அவள் வாழ்க்கை முழுக்கவும் வருந்தப் போகிறாள். வேதனையில் துடிக்கப் போகிறாள்.
மீட்டிங் ஹாலிற்குள் நுழைந்ததும் தியாவின் முகம் கறுத்துவிட்டது.
நேகாவோ, “ஓ மை காட்… அர்ஜுன்… யுகேல இருந்து எப்போ வந்த… அதுவும் இந்த ஆஃபிஸுக்கு” என்று ஆச்சரியத்தைக் காண்பித்தபடி அவனைச் சென்று அணைத்துக் கொண்டாள்.
“டூ டேஸ் ஆச்சு… உங்களுக்கு எல்லாம் சர்பிரைஸா இருக்கட்டும்னுதான் நான் எதுவும் சொல்லல” என்று அவன் நேகாவிடம் பேசிய போதும் அவன் பார்வை தியாவிடம்தான் நின்றது.
“ஹும்… ஜி எம் ஆகிட்ட காங்கிராட்ஸ்” என்று நேகா அவனை வாழ்த்தி கைக் குலுக்கினாள்.
ஆனால் தியாவோஅவனைக் கண்டும் காணாமல் வந்து தன் இருக்கையில் அமர்ந்துவிட்டாள். அவள் முகம் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காத போதும் மனம் கரணைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தது.
‘என்ன வாயை வைச்சுட்டு காலையில இந்த அர்ஜுனை ஞாபகப்படுத்தித் தொலைச்சானோ… அவனே முன்னாடி வந்து நிற்குறான்… சை’ அவள் எரிச்சலில் இருக்க அர்ஜுன் அவளைப் பார்த்து புன்னகைத்து, “ஹாய் தியா… ஹவ் ஆர் யூ?” என்று இயல்பாக விசாரித்தான்.
“ஹும்” என்றவள் தலையை மட்டும் அசைத்தாள். பதிலுக்கு அவள் ஏதாவது பேசுவாள் என்ற எதிர்பார்ப்புடன் அவன் அவளைப் பார்த்திருக்க அவளோ தன்னுடைய மேஜையுடன் இணைந்திருந்த கணினி திரையை வெறித்துக் கொண்டிருந்தாள்.
“அவனே பேசுறான்… உனக்கென்ன? ஏன் இப்போ ஓவரா சீனை போடுற?” என்று நேகா அவள் காதோடு சொல்ல, தியா அவளை முறைத்துப் பார்த்தாள்.
அவளிருந்த மனநிலையில் அவள் அப்போதைக்கு யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. மகளைத் தவிர வேறெதுவும் அவள் மூளைக்குள் ஓடவில்லை.
அரை மணிநேரத்தில் முடிய வேண்டிய மீட்டிங் அடுத்து இரண்டு மணிநேரத்தை அனாயசமாக விழுங்கியிருந்தது.
அவர்கள் கலந்துரையாடலிலும் கேள்வியிலும் தியா பங்கேற்கவே இல்லை. மீட்டிங் முடிந்து எல்லோரும் களைந்து செல்ல நேகா மட்டும் அர்ஜுனிடம், “என்ன ஜி எம் சார்… இந்தியா திரும்பினதுக்கு பார்ட்டி எல்லாம் கிடையாதா” என்று விசாரிக்க,
“ஷுர்… நாளைக்கு நைட்… என் அபார்ட்மெண்ட்ல” என்று பதில் சொன்னவன் பார்வை அந்த அறை கண்ணாடி வழியே அவசர அவசரமாக தன் தோள் பையை மாட்டிக்கொண்டு வெளியேறிய தியாவைக் குறி வைக்க,
“ஒரு நிமிஷம்” என்றவன் நேகாவிடமிருந்து கழன்று கொண்டான்.
அவனும் அவசரமாக வெளியே வர அவள் லிஃப்ட்காக காத்திருந்தாள். அந்த சில நிமிட காத்திருப்பு கூட அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
அப்போது அர்ஜுன் பின்னிருந்து, “தியா”என்று அழைக்கவும் அவள் சங்கடத்துடன் திரும்பி,
“சாரி… எனக்கு கொஞ்சம் முக்கியமா போகணும்… எதுவா இருந்தாலும் நான் நாளைக்கு வந்து பேசுறனே” என்றாள்.
“தட்ஸ் ஓகே… ஆனா நீ எங்கே… இவ்வளவு அவசரமா கிளம்பிட்டு இருக்க… ஏதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் இல்லை… ஒரு முக்கியமான வேலை… போகணும்… அவ்வளவுதான்” என்றவள் அலட்சிய பார்வையுடன் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள். அர்ஜுன் இன்னும் நின்று கொண்டிருப்பது அந்த பளபள மார்பிள் சுவரில் தெரிய அவளுக்கு அப்படியொரு எரிச்சல்.
இப்போது பார்த்து அந்த லிஃப்ட் வேறு வந்து தொலைய மாட்டேன் என்று கடுப்படித்துக் கொண்டிருந்தது.
நடந்தே சென்றுவிடலாம் என்று பார்த்தால் நாற்பது மாடி. நினைக்கும்போதே தலைச்சுற்றியது.
“இன்னும் நீ என் மேல இருக்க பழைய கோபத்தை ஞாபகம் வைச்சுட்டு இருக்கியா என்ன?” என்றவன் மெதுவாக கேட்க,
“ஷிட்” என்று எரிச்சலுடன் அவன் புறம் திரும்பியவள், “நான் எதுக்கு அதெல்லாம் ஞாபகம் வைச்சுட்டு இருக்கணும்… நான்சென்ஸ்… எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு… பதிமூணுவயசுல எனக்கு ஒரு மக இருக்கா… உன்னைப் பத்தி யோசிக்க எனக்கு அவசியமும் இல்ல… நேரமும் இல்ல… இனிமே எப்பவும் நம்மோட பழைய உறவைப் பத்திப் பேசாதே” என்று கோபமாகச் சொல்லிவிட்டு திரும்பிய போது லிஃப்ட் வந்திருந்தது.
அவள் உள்ளே சென்று நின்றதும் கதவு மூடிக் கொண்டது. எதிரே நின்ற அர்ஜுனின் பார்வையில் கோபமில்லாத போதும் வருத்தம் இருந்ததை அவளால் உணர முடிந்தது.
முன்பே இந்த லிஃப்ட் வந்து தொலைத்திருக்ககூடாதா? தேவையில்லாமல் அவனிடம் கோபத்தைக் காண்பிக்கும்படி ஆகிவிட்டதே என்று அவள் உள்ளம் வருத்தம் கொண்டது.
கண்களை மூடித் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“வேண்டாம் அர்ஜுன்… ப்ளீஸ் அர்ஜுன்… யுகே போகாதே” அவள் கெஞ்ச,
“கம்மான் தியா… இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் திரும்பவும் கிடைக்காது” என்றான்.
“அப்போ நம்ம மேரேஜ்…நம்ம ரிலேஷன்ஷிப்… அது உனக்கும் முக்கியம் இல்லையா?”
“நீயும் அதான் அங்கேயே வந்திருன்னு சொல்றேன்”
“விளையாடுறியா… அதெல்லாம் ரொம்ப கஷ்டம்” என்றாள் தியா. அர்ஜுன் யோசித்தான். ஆனால் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
முந்தைய காலகட்டம் போல வெளிநாடுகளில் வேலை கிடைத்து அங்கேயே குடும்பத்துடன் சென்றுவிடுவதெல்லாம் நடக்காத காரியம். நிறைய கட்டுப்பாடுகள் தடைகளை மீறி ஒருவருக்கு அனுமதி கிடைப்பதே பெரும்பாடுதான். அதுவும் அவர்களின் அலுவலகம் மூலமாக வாய்ப்புகள் வந்தால்தான்.
“நீ போ.. அங்கேயே உனக்கு ஏத்தப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடு”
“என்ன பேசிட்டு இருக்க நீ… நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்”
“கம்மான் அர்ஜுன்… இப்படி சொன்ன எத்தனையோ பேரை எனக்கு தெரியும்… ஆனா போனவங்க யாரும் இந்தியா திரும்பினதே இல்ல… அப்படியே போனவங்கதான் எங்க அப்பா உட்பட”
“நான் அப்படி இருக்க மாட்டேன் தியா… என்னை நம்பு”
“உன்னை நம்புனதாலதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றாள் அவள்.
“கல்யாணம்குற வார்த்தையைச் சொல்லி என் கரியரை நீ காலி பண்ண பார்க்காதே” என்றவன் சொன்ன நொடி அவளுள் ஏதோ உடைந்தது.
“நான் உன் கரியாரை காலி பண்ண பார்க்கிறனா அர்ஜுன்?” அவள் அதிர்ச்சியுடன் கேட்க,
“பின்ன நீ செய்றது அப்படிதான் இருக்கு” என்றான் அர்ஜுன் தீர்க்கமாக. அதற்கு பிறகு அவளுக்கு அவனிடம் பேச எதுவுமே இல்லை.
சில நிமிட மௌனத்திற்கு பின், “எனக்கு கண்டிப்பா போகணும் தியா” என்றான்.
அவள் கண்களில் கண்ணீர் நிரம்பிய போதும் மிக எதார்த்துடன் பேசினாள்.
“போ அர்ஜுன்… ஆனா டிவோர்ஸ் பார்மலிட்டிஸ் முடிச்சிட்டுப் போ… அதான் உனக்கும் நல்லது… எனக்கும் நல்லது” சுலபமாக அவர்கள் உறவு முறிந்துவிட்டது.
லிஃப்ட் தரைத்தளத்தைத் தொட அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அலுலவலகம் விட்டு வெளியேறிவிட்டாள். மூடிய லிஃப்ட் கதவைப் பார்த்து கொண்டிருந்த அர்ஜுன் முகம் வெளிறியிருந்தது.
‘நீ வாழ்க்கையில ரொம்ப தூரம் போகிட்ட… ஆனா என்னால முடியல… எத்தனையோ பெண்களைப் பார்த்து பழகின போதும் எனக்கு ஏமாற்றம் மட்டும்தான் மிச்சமா இருந்துச்சு.
இரண்டு வருஷம்தானாலும் உன் கூட இருந்த மாதிரி யாரும் என் நினைப்புல மனசுல பதியவே இல்ல… திரும்பவும் நீயே வேணும்கிற ஆசையிலதான் நான் திரும்பி வந்ததே… ஆனா நீ’ என்றவன் மனதின் குமுறலை அவள் கேட்காதத் தொலைவிற்குச் சென்றிருந்தாள்.
தன் காரை எடுத்து சென்றால் சாலை நெருக்கடியில் சிக்கிப் பள்ளியே முடிந்துவிடும் என்று சிந்தித்தவள் அதிவேக ரயில் சேவையைப் பயன்படுத்தினாள்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் பள்ளி வாசலில் நின்றிருந்தாள். ஆனால் அங்கிருந்த இயந்திர மனிதர்களிடம் தன்னுடைய அடையாளங்களைக் காட்டி அவள் உள்ளே செல்வதற்குள்அரைமணி நேரம் கடந்துவிட்டது.
“இன்னும் அரை மணிநேரம்தான்… ஸ்கூல் முடிஞ்சுடும்… நீங்க உங்கப் பொண்ணைக் கூட்டிட்டுப் போகலாம்” என்று அவள் சொல்லும் காரணங்களைக் கேட்காமல் அவளைக் காத்திருப்பு அறையில் உட்கார வைத்துவிட்டார்கள்.
பள்ளி முடிந்த அறிவிப்பு ஒலி கேட்டதில் தியா முகம் பளிச்சிட்டது. மகள் தன்னைப் பார்த்தால் எந்தளவு சந்தோஷம் கொள்வாள் என்று அவள் கற்பனையில் மிதந்திருக்க விதியின் எதார்த்தம் வேறு விதமாக இருந்தது.
பள்ளியிலிருந்த மாணவ மாணவிகள் வெளியேறியதை பார்த்தபடி வந்த தியா மகளைக் காணாமல் குழம்பிப் போனாள்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் அவளை வந்தடைந்தது. வேக வேகமாக லித்திக்காவின் வகுப்பிற்கு ஓடினாள்.
அங்கே அவள் கண்ட காட்சியை அவள் எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. காலுக்குக் கீழிருந்து பூமி பிளந்து கொண்டது போல. வானம் அவள் தலையில் இடிந்து விழுந்தது போல… அவ்வளவுதான். அவள் உலகம்… கனவு எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனது.
லித்திக்காவின் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டாள். நெற்றியின் ஓரத்தில் இரத்தம் வழிந்தோட, அவளது உயரற்ற சரீரம் மேஜை மீது கிடந்தது.
அந்த மிகச் சிறிய துப்பாக்கி அவள் விரல்களுக்குள் அடங்கியிருந்தது. நவீன கண்டுப்பிடிப்புகள் மனிதனின் தரத்தை உயர்த்துகிறதா அல்லது மனிதனைக் கொன்று குழித்தோண்டி புதைக்கிறதா?
3