You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - Episode 8

Quote

8

“தியா… நீ நீ இங்கே” என்றவன் அவளைப் பார்த்து திகைப்படைய,

“இன்னும் உனக்கு நைட் அடிச்சது தெளியலயா அர்ஜுன்?” என்றவள் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவன் உதட்டைக் கடித்து, “ஜஸ்ட் எ ஸ்மால்தான்” என்று தயங்கித் தயங்கிக் கூற,

“ஆமா ஆமா… ஸ்மால்தான்” என்று கிண்டலாகத் தலையசைத்து, “சீக்கிரம் போய் ஃப்ரஷாகிட்டு வா… வில் ஹேவ் எ காபி டுகெதர்” என்றாள்.

“யா ஷுர்” என்றவன் அவசர அவசரமாகக் குளியலறைக்குள் சென்று காலை கடன்களை முடித்து முகம் அலம்பி வெளியே வர தியா அவனுக்காக சோஃபாவில் காத்திருந்தாள்.

அவனைப் பார்த்ததும், “என்னடா உன் வீட்டுல ஒரு காபி மிஷின் கூட இல்ல… எங்கே வைச்சு இருக்க?” என்று விசாரிக்க, அவளுடைய உரிமையான அழைப்பும் பேச்சும் ஆச்சரியப்படுத்தியது.

“நான் மிஷன்ஸ் போடுற காபியைக் குடிக்கிறது இல்ல தியா… நானேதான் எனக்கான காபியை பிரப்பேர் பண்ணிப்பேன்” என, அவள் வியப்புடன், “சீரியஸ்லி” என்று வினவ,

“எஸ்” என்றவன் தன் சமையலறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றிச் சூடு செய்து டிகாஷன் தயாரிக்கும் வேலையில் இறங்கினான். அவன் சமையலறையைச் சுற்றிப் பார்த்தவள், “கிச்சன் செட்அப் எல்லாம் பயங்கரமா இருக்கு… நீ குக் பண்ணுவியா என்ன?” என்று கேட்க,

“எப்பவுமே இல்ல… டைம் கிடைக்கும் போது” என்றவன் காபியைத் தயாரித்துக் கொண்டே, “நீ எப்போ தியா…இங்க வந்த” என்று விசாரித்தான்.

“நான் எப்போ வந்தேன்னு கூட தெரியாதளவுக்கு சார் போதைல இருந்தீங்க” என்றவள் எள்ளலாகச் சொல்ல,

“இல்ல… நான் எப்பவும் குடிக்கமாட்டேன்” என்றவள் முகம் பார்க்கத் தயங்கினான்.

“நான் அப்படி பேசுனதால ரொம்ப அப்செட் ஆகிட்ட… அதானே” என்றாள் தியா.

அவன் பதிலேதும் பேசாமல் நிற்க, “சாரி அர்ஜுன்… நான் அப்படி பேசி இருக்கக் கூடாது… நான் பேசுன வார்த்தை உன்னை எந்தளவுக்கு காயப்படுத்தி இருக்கும்னு என்னாலப் புரிஞ்சிக்க முடிஞ்சது… அதான் உன்கிட்ட சாரி கேட்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தேன்.

ஆனா நீ கான்ஸியஸ்ல இல்ல… ஏதேதோ புலம்பிட்டு இருந்த… உன்னை அப்படியே விட்டுப் போக மனசு வரல… காலையில எழுந்ததும் அதே அப்செட் மூட்லயே எழுந்திருப்ப… அதான் நீ எழுந்துக்கிற வரைக்கும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றவள் சொல்லி முடிக்கவும் அவன் புன்னகையுடன்,

“தேங்க்ஸ் தியா” என்றான்.

“நான் சாரி கேட்டதுக்கு நீ தேங்க்ஸ் சொல்றியா?”

“இல்ல… இந்த பியுட்டிஃபுல் மார்னிங்காக” என்றபடி தான் தயாரித்த காபியை அவளிடம் நீட்ட அதன் வாசத்தை முகர்ந்தவள், “ம்ம்… குட் அரோமா” என்றபடி ஆவலுடன் வாங்கிப் பருகினாள்.

பின்னர் அவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்து, “சீரியஸ்லி மேன்… ரொம்ப நல்லா இருக்கு… எக்ஸலன்ட் டேஸ்ட்… நான் இப்படி குடிச்சதே இல்ல” என்று கூற,

“மிஷின்ஸ்க்கு காபி போடத் தெரியும்… ஆனா ஒவ்வொருத்தரோட டேஸ்டுக்குப் பிடிச்ச மாதிரி போடத் தெரியுமா என்ன? தட்ஸ் இம்பாஸிபிள்… அது அதுல பதியப்பட்ட அளவுலதா போடுது… நாமளும் குடிக்கிறோம்.

நாளுக்கு நாள் மிஷினோட டேஸ்ட்டுக்கு நாம பழகிட்டு இருக்கோம்… அதனாலயே நாமளும் மிஷினா மாறிட்டு இருக்கோமோன்னு கூட எனக்கு தோனும்…

இது எல்லாத்துக்கும் மேல நம்ம லவ்வபிள் ஒன்ஸ்க்கு நம்மலே காபி போட்டு தர்ற மாதிரியான சந்தோஷம் வேற எதுலயும் வராது” என்றவன் அவள் கண்களைப் பார்த்து சொல்லும் போது தியாவின் கையிலிருந்த காபி கோப்பை நடுங்கியது. ஏதோ ஒரு தடுமாற்றம் அவள் உள்ளத்தில் வருவதை அவளால் உணர முடிந்தது.

“இப்படி எல்லாம் பேசாதே அர்ஜுன்… எனக்கு எம்பாரஸிங்கா இருக்கு” என்றவள் தன் மனவுணர்வை வெளிப்படையாக உரைத்துவிட,

 “நாம இன்னைக்குப் பிரிஞ்சு இருக்கலாம்… நம்ம காதலும் இன்னைக்கு இல்லாம இருக்கலாம்… ஆனா நீ எனக்கு எப்பவும் லவ்வபிள் பெர்ஸன்தான் தியா” என்றான்.

“நீ முன்ன இப்படி எல்லாம் இல்லையே அர்ஜுன்… வேலை வேலைன்னு எப்ப பாரு வேலை பின்னாடி ஓடிட்டு இருந்தவன்தானே நீ… இப்ப என்ன புதுசா காபி போடுற… காதலைப் பத்திப் பேசுற”   

“அனுபவம் பேசுது தியா… நான் யூகே போன பிறகு பணம் மட்டும் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லன்னு புரிஞ்சுகிட்டேன்… சுத்தி இருக்கிற எல்லா விஷயத்துலயும் ரோபாட்ஸ்… எது மனுஷன் எது ரோபோட்னு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத மாதிரி…

காதலோட அருமை அதுக்காக ஏங்கும் போதுதான் புரிஞ்சது… மிஷின் மாதிரியான ஒரு வாழ்க்கை… நம்மளும் கூட ரோபோட்ஸ் மாதிரி உணர்ச்சியே இல்லாத ஜடமா மாறிடுவோமோன்னு பயம் வந்திருச்சு.

என் வாழ்க்கையோட வெறுமையையும் தனிமையையும் போக்கிக்க நான் கத்துக்கிட்ட சில விஷயங்களில் இந்த குக்கிங்கும் ஒன்னு… முக்கியமா ரோபோட்ஸ் டிபென்ட் பண்ணாம இருக்க என்னோட வேலைகளை நானே செய்ய கத்துக்கிட்டேன்” என்றவன் சொல்வதை கேட்டு அவள் வியப்புடன்,

“நம்பவே முடியல அர்ஜுன்… நீ நிறைய மாறி இருக்க… யு நோ வாட்… உன்னை மாதிரி ஒரு பார்ட்னர் கிடைக்க இங்கே நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… டைம் வேஸ்ட் பண்ணாம யாராவது ஒரு பொண்ணை டேட் பண்ணி ரிலேஷன்ஷிப் ஃபார்ம் பண்ணு” என்றாள்.

“ப்ச்… வொர்க்அவுட் ஆக மாட்டேங்குது தியா”

“ஏன் அப்படி சொல்ற… நம்ம ஆஃபிஸ்ல வொர்க் பண்ற பொண்ணுங்க நிறைய பேருக்கு உன் மேல கண்ணு… நான் பார்த்திட்டுதானே இருக்கேன்”

“இல்ல தியா… செட்டாகாது”

“ஏன் டா?”

“ஏன்னா யாருமே உன்னை மாதிரி இல்ல தியா”

“என்னை மாதிரி ஏன் இருக்கணும் அர்ஜுன்… எல்லோருக்குமே அவங்க அவங்களுக்கான யுனிக் கேரக்டர்ஸ் இருக்கும்”

“இங்கே நீ சொன்ன மாதிரி யுனிக் கேரக்டர்ஸ் யாரும் இல்ல… எல்லோருக்குமே அவசர கெதில ஒரு ரிலேஷன்ஷிப் தேவைப்படுது… செக்ஸ் தாண்டி பெருசா அந்த உறவுல எதுவுமே இல்ல…ஒரு லாங் டைம் ரிலேஷன்ஷிப்புக்கு யாருமே தயாராவும் இல்ல… ஜஸ்ட் லைக் தட்… எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கிறாங்க… வேணான்னா தூக்கிப் போட்டுட்டுப் போயிடுறாங்க… உன்னை மாதிரி யாரும் உறவுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறது இல்ல தியா”

“நீ கொடுத்தியா அர்ஜுன்… நீயும் வேணான்னு என்னைத் தூக்கிப் போட்டுட்டுப் போனவன்தானே”

“அதனாலதான் நான் இப்படி தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்”

“அதுக்கெல்லாம் அவசியம் இல்ல அர்ஜுன்… நீயா தேவையில்லாம எதையாச்சும் போட்டுக் குழப்பிட்டு இல்லாம உனக்கான ஒரு நல்ல பார்ட்னரைத் தேர்ந்தேடு… இட்ஸ் நாட் டூ லேட்” என்று சொன்னவள் வாசலை நோக்கி நடக்க,

“என்னால உன்னைத் தவிர வேறெந்தப் பொண்ணையும் பார்ட்னரா யோசிக்க முடியல தியா” என்றவன் பேசிக் கொண்டே அவளைப் பின்தொடர அவனைக் கடுமையாக முறைத்தாள். 

“பார்டனரா இருக்க வேண்டாம்… ஒரு ஃப்ரெண்டா என் கூட எப்பவும் இரு… ப்ளீஸ்” என்றவன் கெஞ்சுதலாகக் கேட்க,

“ஃப்ரெண்டாவா? நான் உன்கிட்ட பேசாத போதே கரண் என்னைப் பார்த்து… அர்ஜுன் திரும்பி வந்ததாலதான் என்னை ஈஸியா தூக்கிப் போட்டுட்டியான்னு கேட்கிறான்… இதுல நாம ஃப்ரெண்டா இருந்துட்டா” என்றவள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தவன்,

“ஓ மை காட்… என்னால உனக்கும் கரணுக்கும் இடையில பிரச்சனையா?” என்று கேட்க,

“பிரச்சனை உன்னால இல்ல… என்னாலதான்… என்னால ப்ராக்டிக்கலா இருக்க முடியல… இந்த சமூகத்தோட ஒத்து வாழ முடியல… நான் ஒரு இமோஷனல் இடியட்” என்று சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென அவ்விடம் விட்டு அகன்றாள்.

அர்ஜுனுக்கு ஒன்றும் புரியவில்லை. அலுலகத்தில் நேகாவை விசாரித்த போதுதான் கரண் தியாவிடம் விவாகரத்துக் கேட்டிருந்த விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது.

தியாவை தன் கேபினுக்கு அழைத்து, “உன்கிட்ட கொஞ்சம் பெர்ஸ்னலா பேசணும் தியா… இன்னைக்கு ஈவனிங் மீட் பண்ணலாமா?” என்று கேட்க,

“வேண்டாம் அர்ஜுன்… நமக்குள்ள எந்த பெர்ஸ்னல் டாக்கும் வேண்டாம்… அன்னைக்கு நான் உன் வீட்டுக்கு வந்தது கூட உன்கிட்ட சாரி கேட்கத்தானே தவிர வேற எதுக்காகவும் இல்ல” என்று சொல்லிய மறுகணம் அவன் அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அர்ஜுன் மனம் அல்லாடியது. தியாவின் குடும்பத்திற்குள் தன்னால்தான் பிரச்சனை வந்துவிட்டதோ என்ற குற்றவுணர்வு அழுத்தியது.

அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அன்று வீட்டிற்கு வந்த பிறகு தியா அவனிடம் முகம் பார்த்து பேச மறுக்கிறாள். எப்போது அவள் எப்படி இருப்பாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.

விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் நேரடியாக அர்ஜுன் கரணைச் சென்று சந்தித்தான்.

“சொல்லுங்க அர்ஜுன் என்னவோ பேசணும்னு சொன்னீங்க” என்று கரண் இயல்பாகவே அவனிடம் பேச்சை ஆரம்பிக்க, “அது வந்து” என்று தயங்கியவன் பின்,

“உங்க பெர்ஸ்னல் விஷயத்தைப் பத்திப் பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்று சொல்லவும்,

“தியாவுக்கும் எனக்குமான டிவோர்ஸ் கேஸ் பத்திப் பேச போறீங்களா?” என்று கரண் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“இல்ல கரண்… நான் தியா ஆஃபிஸ் வந்ததுனாலதான் உங்களுக்குள்ள குழப்பம் வந்திருச்சோன்னு… அதான் நான் உங்கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணலாம்னு” அர்ஜுன் தயங்கி தயங்கிப் பேச,

“அவசியம் இல்ல அர்ஜுன்… எனக்கு தியாவைப் பத்தி நல்லா தெரியும்… நீங்களும் அவளும்… என்ன ஒரு இரண்டு வருஷம் சேர்ந்து வாழ்ந்திருப்பீங்களா… ஆனா நானும் அவளும் பதினைந்து வருஷம் ஒன்னா வாழ்ந்திருக்கோம்.

தியாவை என்னால சந்தேகப்பட எல்லாம் முடியாது… ஏதோ கோபத்துல அவகிட்ட உங்களைப் பத்தி ஒரு வார்த்தை பேசிட்டேன் அவ்வளவுதான்” என்று தெளிவாக விளக்கிய கரண்,

“எங்கப் பிரச்சனையே வேற அர்ஜுன்… உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? லித்துவோட டெத் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்… அது ஒரு அக்ஸிடென்ட்… ஆனா தியா அதை ஏத்துக்கமாட்டுறா… சிஷுவாலதான் அவ தற்கொலைப் பண்ணிக்கிட்டான்னு சிருஷ்டி மேல கேஸ் போடுறன்னு கிளம்பிட்டா… அவளை என்னால சமாளிக்கவே முடியல… சொல்றதைக் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா… எங்களுக்குள்ள பிரச்சனை வந்ததுக்குக் காரணமே இதுதான்” என்றவன் சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.

இதெல்லாம் கேட்ட பின் என்ன பேசுவதென்று புரியாமல் அர்ஜுன் மௌனமாக அமிர்ந்திருக்க,  “முடிஞ்சா நீங்க தியாகிட்ட இதைப் பத்திப் பேசிப் பாருங்க… அவ செய்ற முட்டாள் தனத்தைச் சொல்லிப் புரிய வையுங்க” என்று விட்டு,

“எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ணனும்… நான் கிளம்புறேன் அர்ஜுன்… நைஸ் மீட்டிங் யு” என்று சொல்லி அவனிடம் கைக்குலுக்கி விடைப்பெற்றான். 

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content