மோனிஷா நாவல்கள்
Sundari sezhili - நானும் நாவலும்
Quote from monisha on November 6, 2020, 2:41 PMவாழ்த்துக்கள் சுந்தரி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் சுந்தரி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:
Quote from சுந்தரி செழிலி on November 6, 2020, 3:36 PMநண்பர்களுக்கு வணக்கம்…! நான் சுந்தரி செழிலி. பேரு சொன்னதும் தெரிஞ்சுக்குற அளவு அவ்ளோ பெரிய ஆளா நீ னு நீங்க நெனைக்குறது புரியுது. ஆனால் சத்தியமா இல்ல. சரி அதை விடுங்க என் நாவல் வாசிப்பு பயணம் தொடங்கியது எவ்வாறு… அத தான் சொல்ல வந்துருக்கேன். பெருசா ஒன்னுமில்ல. அதான் பெருசா ஒன்னும் இல்லல அப்றம் எதுக்கு சொல்ல வந்த னு நீங்க நினைக்கலாம். சரி பெருசா இல்லனாலும் சிறுசாவது சொல்லுவோமே னு தான். ஈஈஈ…
நானும் நாவலும்…
நிஜமா சொல்லணும் னா எனக்கு வாசிக்குறது பிடிக்கும் னு எனக்கு தெரிஞ்சதே நான் காலேஜ் படிக்கும்போது தான். என் தோழி ஒருத்தி புத்தகம் வாசிப்பா. நாமளும் படிச்சு பாப்போமே னு தான் ஆரம்பிச்சேன். படிச்சேன் நல்லா இருந்துச்சு. அப்டி னு தான் தோணுச்சு. மத்தபடி ரொம்ப ஆர்வம் வரல.
ஒருநாள் எனக்கும் என் இன்னொரு தோழிக்கும் ஒரு பெரிய சண்டை. அவளுக்கு நான் அவக்கூட பேசாம புத்தகம் வாசிச்சா பிடிக்காது. சண்டை நால அவக்கூட பேசவும் முடியாது. அதே சமயம் எனக்கு நேரமும் போகல. அப்போ தான் எங்க கல்லூரி லைப்ரரி ல இருந்து பெரிய கதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். என்னை முழுசா ஈடுபடுத்தி வாசுச்சேன். அந்த உணர்வு, வாசிக்கும் போது நம்ம மனசுல தோன்றிய கற்பனை எல்லாம் ரொம்ப ரம்மியமா இருந்துச்சு. அதுல இருந்து தான் ஆர்வம் அதிகமாச்சு.
நான் வாசிச்ச முதல் நாவல் எது னு தெரியல. ஆனா என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின நாவல் சாண்டில்யன் நாவல் மதுமலர். படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுச்சு. இப்படி தாங்க ஆரம்பிச்ச என்னோட வாசிப்பு அப்றம் இன்னொரு தோழியின் பரிந்துரைப்பின்படி ஆன்லைன் கதைகள் வசிக்குறதுல தொடர்ந்து இன்னும் முடியாம போயிட்டு இருக்கு. என் தோழி கூட சண்டை முடிஞ்சு சமாதானம் ஆன அப்றம் கூட கல்லூரி ல வச்சு வாசிச்சுட்டே இருக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு கூட ஒரு சின்ன சண்டை வந்துச்சு..🤣. இன்னும் இது முடிய கூடாது னு வாழ்க்கை முழுக்க தொடரனும் னு ஆசை படுறேன்.
ஏன்னா வாசிப்பு நமக்கு அனுபவம் பண்ணாமையே புது புது அனுபவம் கொடுக்குறதா நான் நினைக்குறேன். நாம் வாசித்த கதைகளோ கருத்துக்களோ கண்டிப்பாக நமக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் சரியான முடிவை எடுக்க உதவும் னு நான் நம்புறேன்.
இது தாங்க என் வாசிப்பு பயணத்தின் முதல் அடி. நன்றி நண்பர்களே…!
நண்பர்களுக்கு வணக்கம்…! நான் சுந்தரி செழிலி. பேரு சொன்னதும் தெரிஞ்சுக்குற அளவு அவ்ளோ பெரிய ஆளா நீ னு நீங்க நெனைக்குறது புரியுது. ஆனால் சத்தியமா இல்ல. சரி அதை விடுங்க என் நாவல் வாசிப்பு பயணம் தொடங்கியது எவ்வாறு… அத தான் சொல்ல வந்துருக்கேன். பெருசா ஒன்னுமில்ல. அதான் பெருசா ஒன்னும் இல்லல அப்றம் எதுக்கு சொல்ல வந்த னு நீங்க நினைக்கலாம். சரி பெருசா இல்லனாலும் சிறுசாவது சொல்லுவோமே னு தான். ஈஈஈ…
நானும் நாவலும்…
நிஜமா சொல்லணும் னா எனக்கு வாசிக்குறது பிடிக்கும் னு எனக்கு தெரிஞ்சதே நான் காலேஜ் படிக்கும்போது தான். என் தோழி ஒருத்தி புத்தகம் வாசிப்பா. நாமளும் படிச்சு பாப்போமே னு தான் ஆரம்பிச்சேன். படிச்சேன் நல்லா இருந்துச்சு. அப்டி னு தான் தோணுச்சு. மத்தபடி ரொம்ப ஆர்வம் வரல.
ஒருநாள் எனக்கும் என் இன்னொரு தோழிக்கும் ஒரு பெரிய சண்டை. அவளுக்கு நான் அவக்கூட பேசாம புத்தகம் வாசிச்சா பிடிக்காது. சண்டை நால அவக்கூட பேசவும் முடியாது. அதே சமயம் எனக்கு நேரமும் போகல. அப்போ தான் எங்க கல்லூரி லைப்ரரி ல இருந்து பெரிய கதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். என்னை முழுசா ஈடுபடுத்தி வாசுச்சேன். அந்த உணர்வு, வாசிக்கும் போது நம்ம மனசுல தோன்றிய கற்பனை எல்லாம் ரொம்ப ரம்மியமா இருந்துச்சு. அதுல இருந்து தான் ஆர்வம் அதிகமாச்சு.
நான் வாசிச்ச முதல் நாவல் எது னு தெரியல. ஆனா என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின நாவல் சாண்டில்யன் நாவல் மதுமலர். படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுச்சு. இப்படி தாங்க ஆரம்பிச்ச என்னோட வாசிப்பு அப்றம் இன்னொரு தோழியின் பரிந்துரைப்பின்படி ஆன்லைன் கதைகள் வசிக்குறதுல தொடர்ந்து இன்னும் முடியாம போயிட்டு இருக்கு. என் தோழி கூட சண்டை முடிஞ்சு சமாதானம் ஆன அப்றம் கூட கல்லூரி ல வச்சு வாசிச்சுட்டே இருக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு கூட ஒரு சின்ன சண்டை வந்துச்சு..🤣. இன்னும் இது முடிய கூடாது னு வாழ்க்கை முழுக்க தொடரனும் னு ஆசை படுறேன்.
ஏன்னா வாசிப்பு நமக்கு அனுபவம் பண்ணாமையே புது புது அனுபவம் கொடுக்குறதா நான் நினைக்குறேன். நாம் வாசித்த கதைகளோ கருத்துக்களோ கண்டிப்பாக நமக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் சரியான முடிவை எடுக்க உதவும் னு நான் நம்புறேன்.
இது தாங்க என் வாசிப்பு பயணத்தின் முதல் அடி. நன்றி நண்பர்களே…!
Quote from monisha on November 6, 2020, 9:15 PMஅருமை சுந்தரி
என்னோட அனுபவத்தை வைத்து சொல்றேன்... நாம படிக்கிற எல்லா புத்தகமும் உபயோகமானதுதான். அதில் மாற்று கருத்தே இல்லை. இன்னும் பலதரபட்ட வித்தயாசமான புத்தகங்களுடன் வாசிப்பின் நீண்ட தூர அழகான ரயில் பயணத்தில் உங்களை இணைத்து கொள்ள என் வாழ்த்துக்கள்
அருமை சுந்தரி