You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Terrace garaden tips-2

Quote

குறிப்பு – 2

நாங்கள் மாடி தோட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நிறைய ரோஜா செடிகள் வைத்திருந்தோம். பூத்து குலுங்கி எங்கள் வீடே ரோஜா பூவனமாக காட்சியளிக்கும். செடிக்கு தேவையான உரம் போட்டு வீட்டில் சமையலுக்கு உதவும் அரசி களைந்த தண்ணீர், காய்கறி கழுவிய நீர் போன்றவற்றை ஊற்றுவோம்.

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ரோஜா செடியோடு தக்காளி செடி ஒன்று முளைத்து காயாக காய்த்து தொங்கியதை பார்த்து வீட்டிற்கு வருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியம் கொண்டனர்.

அங்கிருந்துதான் எங்களின் மாடி தோட்டம் அமைக்கும் ஆசை வேர் விட்டது. அப்போதுதான் குடும்ப நண்பர் ஒருவர் மாதவரத்தில் அமைந்துள்ள அரசாங்க தோட்ட கலை பற்றி சொல்ல, அங்கே சென்று பார்த்தோம். கீரை மற்றும் காய்கறி விதைகள் உடன் தேங்காய் நார் கழிவும் தந்து அதனை எப்படி செய்வது போன்ற விளக்கத்தையும் தந்தனர்.

ஓரளவு எங்கள் வேலை சுலபமாக முடிந்தது.

அதில் முக்கியமான அம்சம்தான் தேங்காய் நார் கழிவு.

மண் வளம் குறைந்த, கடுங்குளிர் கொண்ட வெளிநாடுகளில் எப்படி விவசாயம் நடக்கிறது? அதிலும் குறிப்பாக ஹாலந்தில்தான் உலகிலேயே அதிக அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படி? அவர்கள் மண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள்தான் முக்கிய காரணம். அந்தப் பொருளும் நம் நாட்டில் இருந்தே அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. ஆம்… நாம் தினந்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய் தான் அந்த பொருள். தேங்காய் நார் துகள்கள்தான் அங்கு விவசாயத்துக்குப் பயன்படுகின்றன!

தேங்காய் நார் மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் காயிர் சிப்ஸ் மற்றும் காயிர் பித். காயிர் சிப்ஸ் என்பது தேங்காய் மட்டையை சிறுதுண்டுகளாக வெட்டுவது, காயிர் பித் என்பது நாரிலிருந்து விழும் கழிவு. இவை இரண்டும் விவசாயத்துக்குப் பயன்படுகிறது. தேங்காய் நார் துகளை உலர வைத்து, செங்கல் போன்று தயாரிக்கப்படுகிறது. இந்த செங்கல்லை உதிர்த்து தண்ணீரில் ஊற வைத்தால் 5 மண் தொட்டிகள் அளவு கிடைக்கும். இயற்கையாகவே அதிகம் உரம் தேவைப்படாது. தண்ணீரின் தேவையும் மிகக்குறைவு.

மாடிதோட்டதிற்கு தேங்காய் நார் கழிவுகள் உபயோகிப்பது மிகவும் நல்லது.

 

 

You cannot copy content