You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Terrace garden tips - 7

Quote

குறிப்பு – 7

மண்ணின் வளம்

‘சிறு துளி பெரு வெள்ளம்’ போல இங்கே என்னுடைய குறிப்புகள் யாவும் சிறு துளிதான். இன்னும் கேட்டால் இந்த குறிப்புகள் மழை பெய்வதற்கு முன்னால் மண்ணை தொட்டு சிலிர்க்க வைக்கும் முதல் துளி!

அந்த முதல் துளியை வெள்ளமாகவும் பெரு மழையாகவும் மாற்றும் தேடலும் உழைப்பும் இனி உங்களுடையதுதான்.

மாடித்தோட்டம் வைத்ததுமே அது காய் காய்த்து தொங்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீங்க. அதற்கு முன்பாக நம் நிறைய சோதனைகளை பார்க்க வேண்டும்.

சில செடிகள் பெரிதாக வளர்ந்து காய் காய்க்காது. சிலவை காய்ப்பதற்கு முன்னதாக பூச்சியால் பாதிக்கபடும். சிலவை காயத்தாலும் நாம் எதிர்பார்த்தளவுக்கான பலனை தாரது. இதெல்லாம் ஆரம்ப கட்ட நிலை.

எடுத்துக்காட்டுக்கு பள்ளியில் முதல் வகுப்பிலிருக்கும் குழந்தையை நாம் பொறுமையாக பாடம் சொல்லி கொடுப்பது போலதான். ‘ஷப்பா முடியல’ என்றளவுக்கு படாத பாடு படுத்திவிடுவார்கள்.

ஆனால் வளர்ந்த பிறகு நாம் சொல்லி கொடுத்ததை பிடித்து கொண்டு அவர்களே படிக்க கற்று கொள்வார்கள். அப்படிதான் நம்முடைய மண்ணும். முதலில் அதில் பெரிதாக சத்து இருக்காது, ஆனால் நாம் விதைக்க விதைக்க அது விளைய விளைய  கொஞ்சம் கொஞ்சமாக வளம் பெற தொடங்கும்.

அது வளம் பெற்ற பிறகு நாம் அதுக்கு எதுவும் சொல்லி தர தேவையில்லை. அதுவே தன் வேலையை செவ்வனே செய்துவிடும். தொடக்க காலங்களில் தேவைப்படும் கவனிப்பு போக போக தேவைப்படாது.

நம் உழைப்பிற்கு ஏற்ற பலனை அது கொடுக்க தொடங்கிய பிறகு நாமே நினைத்தாலும் அதன் விளைச்சலை தடுக்க முடியாது.

மண்ணின் வளம். அது ஒரு ப்ரோஸஸ். ஆரம்ப காலங்களில் மாடுகளை வைத்து உழவு செய்தார்கள். அந்த மாட்டின் சாணத்தை நிலத்திலிட்டு உரமாக்கினார்கள்.

அது விளைந்து அறுவடைக்கு பின் மீதமாகும் வைக்கோலை மாட்டுக்கு உணவாக தந்தார்கள். மாட்டுக்கு விவசாயி உதவினான். விவசாயத்திற்கு மாடு உதவியது. இந்த சைக்கிள் உடைந்த பிறகுதான் விவசாயி நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது.

அதே போல மண்ணில் லட்சக்கணக்கான நுண்ணியிரிகள் வாழ்கின்றன. அதுதான் மண்ணை செம்மைப்படுத்தி வளப்படுத்தவும் செய்கிறது. நாம் தெளிக்கும் பூச்சி கொல்லிகள் மற்றும் போடும் இராசயன உரங்கள் இந்த நுண்ணியிரிகளைதான் முதலில் அழிக்கின்றன. மண்ணை மலடாக்கிய பின் அதில் விதைப்பதும் காய் காயப்பதும் எப்படி சாத்தியம்!

ஒவ்வொருவனுக்கும் தேச பற்று வேண்டுமென்று சொல்லி தரும் நாம் இன்னொரு பற்றையும் சொல்லி தர வேண்டும்.

அதுதான் பூமி பற்று!

நம் நிலத்தையும் விவசாயத்தையும் காப்போம்!

முந்தைய பதிவில் மூலிகை பற்றி சொல்லி இருந்தேன். அது பற்றி இணையத்திலிருந்த ஒரு பதிவு.

வீட்டிலிருக்க வேண்டிய பதினைந்து மூலிகைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றி கீழே இருக்கும் லிங்குகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/health/medicine/35904-

You cannot copy content