மோனிஷா நாவல்கள்
Terrace garden tips- 8
Quote from monisha on March 18, 2020, 8:34 PMகுறிப்பு - 8
செடி வளர்க்கும் காலமுறை
n
செடியின் தன்மை காலத்திற்கு ஏற்ப வளரும் காலமும் மாறுபடும். கீரை 20 முதல் 25 நாட்களில் நன்றாக வளர்ந்துவிடும். அதை பயிர் செய்து, அடுத்த விளைச்சல் போடலாம். தக்காளி, கத்தரிக்காய் ஆகியவை வளரவே மூன்று மாதங்களாகும். அதன் பிறகு மூன்று மாத காலம் விளைச்சல் இருக்கும். வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, கேரட், பீட்ரூட் எல்லாம் 45 நாட்களில் விளைச்சல் தரும். தக்காளி, கேரட், முள்ளங்கி, பீட்ரூட் போன்றவற்றை தட்பவெட்ப காலத்திற்கு ஏற்ப விளைவிக்கலாம்.
கீரை, வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய் போன்ற காய்களே உகந்தது. வருடம் முழுதும் விளையும் காய் வெண்டைக்காய். தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை மே மாதம் பயிர் செய்தால் ஜூலையில் விளைச்சலைக் காணலாம்.
செடிகளை மொட்டை மாடியில் பயிர் செய்யும்போது நெட் கூரை அமைப்பது நல்லது. அமைக்காவிட்டாலும் பந்தல் போட்டு கொடிகளை படரவிடலாம்.
அதிக வெயில் காரணமாக செடிகள் வாடிப் போகும் வாய்ப்புண்டு. அக்காலங்களில் விதைக. விதைப்பதை தவிர்க்கலாம்.
பாகற்காய், அவரைக்காய் போன்றவற்றுக்கு பந்தல் அமைக்கலாம். எல்லாவற்றையும் விட அந்தந்த ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காய்கறிகளை வளர்ப்பதே நல்லது.
மழைக்காலம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே செடி வளர்ந்துவிட்டால், மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இன்னொரு விஷயம். மாடியில் அல்லது பால்கனியில் தோட்டம் அமைக்க நினைத்தால், எல்லா காய்களையும் ஒரேடியாக போட்டு பயிர் செய்ய வேண்டாம். முதலில் கீரை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சின்ன தொட்டியில் வைத்து பயிர் செய்யலாம். இவை எல்லா காலத்திலும் விளையும். அடுத்து வெண்டைக்காய். பிறகு தக்காளி, கத்தரிக்காய் என ஒன்வொன்றாக பயிர் செய்வதே நல்லது. அடுக்குமாடியில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு பால்கனியிலேயே தக்காளி, பச்சை மிளகாய், கீரை வகைகளை பயிர் செய்யலாம். அல்லது குடியிருப்பில் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து பெரிய அளவில் பயிர் செய்யலாம்...
குறிப்பு - 8