மோனிஷா நாவல்கள்
Thenmozhi - நானும் நாவலும்
Quote from monisha on October 24, 2020, 9:50 PMவாழ்த்துக்கள் தேன்மொழி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் தேன்மொழி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:Quote from monisha on October 31, 2020, 8:14 PMநானும் நாவலும்.....
முதலில் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மோனிஷா அவர்களுக்கு. இப்படி ஒரு அழகான தலைப்பைக்கொடுத்து என் போன்றவர்கள் கடந்து வந்த பாதையை மீண்டும் ஒரு முறை நினைவூட்டச்செய்தமைக்கு.
வாசிப்பதையே சுவாசமாகக் கொண்டிருக்கும் இந்தப் பழக்கத்தை நம் போன்றவர்களைத் தவிர யாரும் கொண்டாடி நான் பார்த்ததில்லை. " அதில் என்ன தான் இருக்குமோ தெரியல , எப்பொழுதும் புத்தகமும் கையுமாகவே இருக்கிறாய் " என்று சொல்பவர்கள் தான் அதிகம். ஒரு எழுத்தாளரான நீங்கள் வாசிப்பவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட இந்த அனுபவங்களைக் கேட்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
" வாசிப்பு " இந்த பழக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்று பார்த்தால் என் எட்டு வயதில், அப்பொழுது தொலைக்காட்சி எல்லாம் இல்லாத காலம் , காேவையில் நாங்கள் இருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு அக்கா, சிறிது தொலைவிலிருந்த நூலகத்திற்கு தனியாகச் செல்லாமல் என்னைத் துணைக்கழைத்துச் செல்வார். எங்களுக்கு அதற்கு சன்மானமாக மிட்டாய் மட்டுமல்லாமல் அவர் எடு்க்க வேண்டிய நூல்களில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு வண்ணப்படங்கள் உள்ள கதை புத்தகங்களை எடுத்துத்தருவார். அவர் அடுத்த முறை செல்வதற்குள் அவரிடம் புத்தகங்களை பத்திரமாக திருப்பித்தர வேண்டும். இப்படியாக தொடங்கிய வாசிப்பு என் வீட்டில் எப்பவும் சர்குலேஷனில் வரும் குமுதம் , விகடனை புரட்டிப்பார்த்துச் சில துணுக்குகள், சிரிப்புகள், ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிப்பது என்பதாக தொடர்ந்தது. அந்த வயதில் அதற்கு மேல் தொடர சந்தர்ப்பம் இல்லை ஆனால் என் வீட்டில் என் அம்மா , சித்தி இவர்கள் வார இதழ்களில் வரும் சில தொடர்களை தொடர்ந்து வாசித்து கதை பற்றியும் அந்த எழுத்தாளர் பற்றியும் பேசுவது எங்கள் மனதில் பதிந்தது .அப்படி பதிந்த பெயர்கள் தான் சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், அனுராதா ரமணண் இதெல்லாம்.
இதன் தாெடர்ச்சியாக வாசிப்பு "நாவல்" என்ற ஒன்றில் வந்து நின்ற தருணம் எதுவென்றால் என் பத்தாம் வகுப்பில் வகுப்புத் தோழியைச் சந்திக்க அவள் வீட்டிற்கு சென்று காத்திருந்த சமயம் அங்கு மேஜையிலிருந்த ரமணி அம்மாவின் புத்தகங்களான "காதல் எனும் சோலையிலே" மற்றும் "விடியலைத் தேடும் பூபாளம் " இரண்டையும் பார்த்த சமயத்தில். முதலிரண்டு பக்கங்களை புரட்டிப்பார்த்துவிட்டு அவள் வந்தவுடன் , "யார் புத்தகம் சுதா இது" என்றதற்கு "அக்கா நூலகத்திலிருந்து எடுத்து வைத்திருக்கிறாள்" என்றவுடன் நான் வாசித்துவிட்டுத்தரவா என்று கேட்கச்செய்தது.
ஆரம்பம் ஆயிற்று நமக்கான ஒரு வண்ணமயமான உலகம் அந்த நிமிடத்திலிருந்து. ஆனால் அந்த வயதில் தொடர இயலவில்லை . படிப்பில் கவனம் இருந்த காரணத்தால். விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டிற்குச் செல்கையில் அங்கு அருகே வசிப்பவர்கள் மூலம் க்ரைம் நாவல்களாக தொடர்ந்தது.
கல்லூரிக்காலம் அதே பாட்டி வீட்டிலேயே தொடர்ந்த காரணத்தால் மீண்டும் நாவல் வாசிப்பு ஆரம்பமாயிற்று. அதே போல் மீண்டும் ஒரு அக்காவுடன் தொடங்கிய நூலக பயணம், இந்த முறை ஒருவருக் காெருவர் துணையாக , பல நல்ல புத்தகங்களை வாசிக்கச்செய்தது. இத்தனைக்கும் அது ஒரு பொது நூலகம் அல்ல. லெண்டிங் லைப்ரரி தான். புத்தக விலையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் செலுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்பக்கொடுக்க வேண்டும்.
மனதில் பெயரளவில் மட்டுமே பதிந்திருந்த எழுத்தாளர்களின் எழுத்துகள் எல்லாம் என் உலகை மெது மெதுவே ஆக்கிரமிப்பு செய்யத்துவங்கிய காலகட்டம் அது.
அனைத்தும் கனமான கதைக்களங்களே. சிவசங்கரி அவர்களின் "மலையின் அடுத்த பக்கம்" , அகால வயதில் மரணமடைந்த கணவனின் இழப்பை தாங்க முடியாமல் "இந்தச்சின்ன வயதில் ஏன் அவரை அழைத்துக்கொண்டார் இறைவன் " என்று பரிதவிக்கும் மனைவிக்கு "ஒரு தோட்டத்தில் இருக்கும் பூவை பறித்துக்கொள்ளச்சொன்னால் வாடிய பூவை பறிப்போமா, அல்லது நன்றாக புத்தம் புதிதாக மலர்ந்துள்ள மலரை பறிப்போமா?அது போல கடவுள் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமான கோபியை உனக்கு காெடுத்துச் சீக்கரமே எடுத்துக்கொண்டார் " என்ற விளக்கம் என் மனதில் பதிந்து அதன் பிறகான இரண்டே வருடங்களில் என் தாய் மாமா முப்பது வயதில் குழந்தைகளை தவிக்க விட்டு்ச்சென்றபோது என்னைத்தேற்றிக்கொள்ள உதவியது.
இந்துமதியின் "தொடுவான மனிதர்கள் " கார்த்திக்கும், ராம்குமாரும் பெண்ணை இப்படிப்பாதுகாக்கலாம் என்று இரண்டு விதத்தில் உயர்ந்து நின்றவர்கள் . ஒருவன் அன்பினாலேயே அவளுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றிக் காத்தான் என்றால் மற்றொருவன் யார் துணையும் இல்லாத நிலையிலும் பெண் தனித்துச் செயல்பட வேண்டியவள் . அதுவே அவளை முன்னேற்றும் என்று என் மனதில் பதிய வைத்தவன். We can share but we should not be dependent என்றும் "பரஸ்பர உதவிகளும் சாருதலும் மட்டுமல்ல காதல் , பரஸ்பர மரியாதையும் அந்தரங்களையும் மதிக்கிறது கூடத்தான் " என்றும் சொன்ன கார்த்திக். வியந்த ஆண் கதாபாத்திரம் அன்றைய பருவ வயதில். பெண் ஆணைச்சார்ந்தவளாக இருக்க வேண்டியதில்லை என்று உணர்த்தியவன்.
"ஒருத்தர் மேல வெறுப்பா இருக்கும்போது வார்த்தைகள் எக்குத்தப்பா வந்திடும். இது எல்லோருக்குமே ஏற்படற ஸ்லிப். விட்டுக்கொடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலை. அதனால் லாபம் உண்டேயொழிய நஷ்டமேயில்லை. உன் தன்மானத்தை கழற்றி வச்சிட்டு ஒரு பத்து தடவை விட்டுக்கொடுத்துப்பாரு அதற்கப்புறம் மாற்றம் தன்னால் வரும். சரியா பயன்படுத்தினா அன்பை மாதிரி ஒரு அற்புதமான ஆயுதம் வேறு எதுவும் இல்லை " கணவன் , மனைவிக்கு ஒரு கதையில் சொல்லும் பிகேபி சாரின் இந்த வரி என் டைரியில் இடம்பிடித்த முதல் வரி . இன்றளவும் இதை நான் செய்து மாற்றம் கண்டவள், இயல்பாகவே விட்டுக்கொடுத்து போனவர்களின் உயர்வையும் கண்டவள்.
இது போல் பலப்பல கதைகளும் அந்தக்கதாபாத்திரங்களும் என் வாழ்வோடு இணைந்தவர்களே.
மாருதியின் கைவண்ணம் கண்டு கண்மணி புத்தகத்தை வாங்கும் வழக்கத்தை ஆரம்பித்ததில் அறிமுகமானவர்கள் வித்யா சுப்ரமணியம், ஜி.ஏ.பிரபா, காஞ்சனா ஜெயதிலகர் போன்றவர்கள் . இன்றளவும் இந்தப்பழகத்தை விட முடியவில்லை. முயன்று குறைத்து வருகிறேன், பாதுகாக்க இயலாத காரணத்தால். திருமணமாகி வேறு ஊருக்கு வந்தவுடன் நான் முதலில் தேடியது நூலகத்தை தான்.
திருமணமாகி சற்றே தாமதமாக குறிஞ்சி மலர் போல் என் மகள் எனும் மலர் பூக்க தாமதமான பனிரெண்டு ஆண்டு காலத்திலும் என்னோடு இணைந்து என் உணர்வுகளுக்கு, மகிழ்ச்சியோ , வருத்தமோ அனைத்திற்கும் வடிகாலாய் இருந்தது புத்தகங்கள் மட்டுமே. இந்தக்கால கட்டத்தில் சேர்த்தவை தான் என்னிடமுள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை. எழுத்தாளர் பெயர் பார்த்துப்பார்த்து சேர்த்தவை பல. தாய்மையடைந்த நிலையில் துணைக்கு யாரும் இல்லாத சூழ்நிலையில் மருத்துவமனையில் விட்டுவிட்டு என் கணவர் பணிக்குச்செல்வார். குறைந்தது இரண்டு மணி நேரம் அங்கு உட்கார்ந்திருக்கும் சமயங்களில் உடன் வந்தவர்களுடன் மற்றவர்கள் உரையாடிக்கொண்டிருக்கையில் நான் தனித்திருக்கிறேன் என்று உணர்ந்ததே இல்லை. அந்த நேரத்தி்ல் ஒரு நாவலை முடித்துவிடுவேன்.
பிறகு ஐந்து வருடங்கள், வாசிப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போய் குழந்தை வளர்ப்பில் சென்றது. மீண்டும் தொடங்கிய போது அடுத்த கட்ட எழுத்தாளர்கள் கதைகளில் தொடங்கியது. அவர்கள் அனைவரும் அவர்களுக்குரிய தளங்களி்ல் எழுதுபவர்கள் என்று அறிந்து காெண்டதில் ஆன்லைன் வாசிப்பு மட்டுமல்லாமல் இப்பொழுது கிண்டிலிலும் தொடர்கிறது.
பல முறை என் கணவர் இடப்பற்றாக்குறை மற்றும் வீடு மாற்றும் போதும் கோபத்தில் "எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிடுகிறேன் பார் " எனும் போது "அப்படியே அதோடு என்னையும் " என்று ஒரு வார்த்தை சொல்வேன் , பல்லைக்கடித்துக்கொண்டு "உன்னையெல்லாம் திருத்தவே முடியாது " என்ற முடிவிற்கு வந்துவிடுவார். வெளியூரில் இருப்பதால் அதிகம் சொந்த ஊருக்கு பயணப்படும் போதும் சரி இரண்டு முறை நீண்ட நாட்கள் வடநாட்டுச் சுற்றுலாசென்ற சமயத்திலும் என் கைப்பையில் முதலில் வைத்தது புத்தகங்களைத்தான்.
ஆக, நானும் நாவலும் இணைபிரியாதவர்களே. வாசிப்பு என்றும் என்னை மேம்படுத்திய ஒன்று என்று நான் பெருமையாக இத்தருணத்தில் பதிவு செய்யவிரும்புகிறேன்.
நன்றி.
தேன்மொழி
நானும் நாவலும்.....