மோனிஷா நாவல்கள்
Thooramillai Vidiyal - Episode 1
Quote from monisha on October 22, 2024, 5:53 PMதூரமில்லை விடியல்
1
நள்ளிரவு. பல்லாயிரம் அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தினுள் மெல்லிய இருளுடன் கூடிய அமைதி!
பயணிகள் பெரும்பாலானோர் உறக்க நிலையில் ஆழ்ந்திருந்தார்கள்.
சிலர் கண்களை மறைக்கும் திரைகளை அணிந்து கொண்டு அப்படியே இருக்கையில் சாய்ந்து கிடந்தார்கள்.
தங்கள் செல்பேசிகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்திருந்த சிலரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கையில் சாய்ந்து கண்ணுறங்கி விட, ஜீவிதா மட்டும் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு சுற்றிலும் உறங்குபவர்களை எல்லாம் நோட்டம்விட்டாள்.
தான் மட்டும்தான் விழித்துக் கொண்டிருக்கிறோமோ? தன்னை போல இங்கே ஒருவரும் இல்லையா ?
அவளும் ஒரு கருப்பு திரை வைத்திருந்தாள். அதனைக் கண்களில் போட்டுக் கொண்டு சாய்ந்து கொள்ள,
“தூங்குடா கண்ணா” அவள் பாட்டியின் மஞ்சள் பூசிய முகம் வந்தது. அவர் போர்வையைப் போர்த்திவிட அவள் உடலில் உஷ்ணம் பரவியது. அவள் சிணுங்கினாள்.
“இல்லை நைனிம்மா... எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது”
“நீ கண்ணை மூடுனதான் செல்லம் தூக்கம் வரும்” என்று அவளைத் தட்டிக் கொண்டே அருகில் படுத்துக் கொள்ள அவளும் கண்களை மூடினாள். ஆனால் அப்போதும் வரவில்லை.
மீண்டும் கண்களைத் திறந்து எழுந்து அமர்ந்து கொண்ட சின்னவள்,
“கண்ணை மூடுனாலும் வரலையே” என,
“வரும் செல்லம் நீ கண்ணை மூடிட்டு ஒன்ல இருந்து ஹன்டர்ன்ட் வரை கவுன்ட் பண்ணு... எங்க பண்ணு பார்ப்போம்” என்று கூறி மீண்டும் படுக்கையில் அவளை படுக்க வைத்தார்.
அவளும் கண்களை மூடிக் கொண்டு, “ஒன் டூ த்ரீ”என்று எண்ணத் துவங்கினாள். ஆனால் அப்போதும் அவளுக்கு உறக்கம் வந்தபாடில்லை. மீண்டும் கண்களைத் திறந்து,
“நான் பைவ் ஹன்டிரட் வரைக்கும் கவுன்ட் பண்ணேன்... ஆனா” என்று சொல்லும் போதே அவள் நைனம்மா ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தார்.
“நைனிம்மா... நைனிம்மா”
அவர் இழுத்து மூச்சு விடும் சத்தம் பெரிதாகக் கேட்டது. அவசரமாகத் தன் கண்களை மறைத்த திரையை விலக்க, அதேபோல சத்தத்துடன் அருகே அமர்ந்திருந்த பயணி உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். ஜீவியின் முகம் சோர்ந்தது.
சிறு வயதிலிருந்தே இப்படிதான். சுலபத்தில் அவளால் உறங்க முடியாது. அப்படியே அவள் உறங்க முயன்றாலும் ஏதாவது நினைவுகள் அவளைச் சூழ்ந்து கொள்ளும். அவள் சிந்தனைகளைத் தூண்டிவிட்டு அவளை மொத்தமாக உறங்கவிடாமல் செய்து விடும்.
அதனாலேயே அவள் பல நேரங்களில் கண்களை மூடுவது கூட கிடையாது. சில நேரங்களில் இரவின் பின் பாதியில் ஓரிரு மணிநேரங்கள் அவள் தன்னை மறந்து உறங்கிவிடுவதும் உண்டுதான். ஆனால் அதுவும் எப்போதாவதுதான்.
மீண்டும் அவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். எல்லோரும் நிம்மதியாக உறங்குவதைக் காணுகையில் அவளுக்குப் பொறாமையாக இருந்தது. அவள் மட்டும் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்தாள்.
இந்த உணர்வு அவளுக்கு இன்று நேற்று உருவானது அல்ல. பல காலமாக இப்படிதான், அவள் இரவுடனும் உறக்கத்துடனும் போராடுகிறாள்.
தூக்கமில்லாத ஒரு முழு இரவு என்பது ஒரு யுகத்தைக் கடப்பது போல... நீளும்... நீளும்... நீண்டு கொண்டே போகும்
அப்படியும் முடியாத இரவுகள் அவளைச் சலித்து நொந்து ஓய்ந்து போக வைத்துவிடும்.
இந்தக் கொடுமையிலிருந்து தப்பிக்க அவள் செய்யக் கூடாத காரியங்களை எல்லாம் கூடச் செய்திருக்கிறாள்.
ஆனால் என்ன செய்தாலும் என்ன நடந்தாலும் இந்த உறக்கமில்லா நிலையிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை.
சுவரில் அடித்த பந்து போல மீண்டும் அவள் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறாள். இரவுகள் விடியும் என்று.
காலை 8; 36 சென்னை விமான நிலையம்.
ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட விமானம் அந்தப் பன்னாட்டு விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கியது
விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் பரபரப்பாக முன்னே செல்லவும் அவர்களுடன் முட்டி மோதாமல் தன் நடையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள்.
அவள்தான் ஜீவிதா. திராவிட நிறம். ஒல்லியான உடல் வாகு. அளவான உயரம். காதுகளில் இருக்கிறதா என்று தெரியாதவளுக்கு மிகச் சிறிய ஸ்டட். சாம்பல் நிறத்தில் ஜம்ப் சூட் அணிந்திருந்தவள் ஒழுங்கற்ற முறையில் தோளில் படர்ந்த கூந்தலை மொத்தமாக இடது தோளின் பக்கமாக ஒதுக்கிவிட்டாள்.
பின் வலது தோளில் பையை மாட்டியவள் அவளுடைய பெட்டியைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
அப்போது அவள் செல்பேசி சத்தமிடவும் நடந்தபடி அதனை எடுத்துப் பார்த்தவள், ‘எப்படி கரெக்டா டைமுக்கு அடிக்குறாரு’ என்று ஒரு வித சலிப்புடன் அவ்வழைப்பை ஏற்று காதில் வைத்து, “சென்னை வந்துட்டேன் டேடி” என்றாள்.
“நேரா திருச்சி வந்து இறங்குற மாதிரி டிக்கெட் புக் பண்ணி இருக்கலாம் இல்ல” அவர் குரல் கவலையுடன் ஒலித்தது.
“எனக்கு திருச்சி வர ஐடியாவே இல்லனு உங்ககிட்ட நான் முன்னாடியே சொல்லிட்டேனே” என்றாள்.
“அப்போ நானும் ஷீலாவும் சென்னை வந்துரட்டுமா”
‘விட மாட்டார்’
“எதுக்கு... அதெல்லாம் அவசியம் இல்ல” என்றவள் தன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசும் போதே குரல் மாறியது.
“சொல்றதை கேளு ஜீவி”
“நீயுமா ஷீலா?”
“நீ தனியா இருக்க வேண்டாம்னுதான் சொல்றோம்”
“ஏன்... தனியா இருந்தா என்ன?”
அவர்களிடம் பதில் இல்லை. ஜீவிதாவே பேசினாள்.
“எனக்கு தனியாதான் இருக்கணும்... ஐ வான்ட் டூ பீ அலோன்” என்று விட்டு அழைப்பை படக் என்று துண்டித்தாள்.
சரியாக அந்த சமயம் எதிரே வந்த ஆடவனின் இரு கரங்கள் அவளை அணைத்துக் கொண்டன. திகைத்தவள் பின் அந்த இளையவனின் முகத்தைக் கண்டதும்,
“நீயா... விடு” என்று விலக்கித் தள்ளினாள்.
அவன் புன்னகையுடன், “பார்த்து எவ்வளவு நாளாச்சு சிஸ்?” என்று உற்சாகமாகக் கேட்டுக் கொண்டே அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கினான். இல்லை. கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டான்.
“டேய்” அவள் அழைக்க,
“ஜர்னி எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று பெட்டியைத் தள்ளிக் கொண்டே அவள் முன்னே நடந்தான் .
“நீ முதல என் பெட்டியைக் கொடு” என்றாள். ஆனால் அவன் கேட்கவே இல்லை.
“உன்னை யார் ஏர்போர்டு க்கு வர சொன்னது” என்று கடுப்பாக, “மாம்தான்” என்றான்.
“ஷீலாவா?”
“இல்ல... நித்யா மாம்” என்று இழுத்தான்.
அவள் மீண்டும் எரிச்சலானாள்.
“மகேஷ்... நில்லு... என் பெட்டியை கொடு... நான் கேப் பிடிச்சு போயிக்கிறேன்” என்று சொல்ல அவன் விமான நிலையம் விட்டு வெளியே சென்றிருந்தான்.
அத்துடன் அவள் பெட்டியை அவன் அழைத்த வாடகை காரின் பின்னே ஏற்றிவிட்டான்.
“ஏறுங்க” பின் கதவைத் திறந்து அவளுக்காகப் பிடித்துக் கொள்ள அவனை முறைத்துக் கொண்டே ஏறினாள்.
“காரை எடுங்க” என்றபடி ஓட்டுநரிடம் கூறிவிட்டுத் திரும்பவும், அவள் முகம் கடுகடுத்தது.
“சிஸ்” என்று அழைத்தான். அவள் எதுவும் பேசவில்லை.
அவள் கரம் மீது தன் கரத்தை பதிக்கவும், “ப்ளீஸ் மகேஷ்... என்னை தனியா விடு... நான் சென்னை வந்ததே தனியா இருக்கத்தான்... தனியா நிம்மதியா இருக்க” என்று சீறலாகக் கூற,
“மாம் எல்லாம் சொன்னாங்க சிஸ்” என்றான்.
“நீ யாரை மாம்னு சொல்ற... என் மாமையா இல்ல உன்னோட மாமையா?” என்றதும் அவன்,
“என்ன சிஸ்... நித்யா மாமும் எனக்கு மாம் மாதிரிதானே”
“மாதிரி கீதிரி எல்லாம் எதுவும் கிடையாது” என்று வெட்டிவிடுவது போலச் சொன்னவள் அதன் பின்,
“கார் எங்கே போகுது?” என்று கேட்க,
“நான் தங்கி இருக்க ஹாஸ்டல் பக்கத்துல ஒரு வீடு பார்த்திருக்கேன்... அது உங்களுக்கு பெர்கட்டா இருக்கும்” என்றான்.
“யாரை கேட்டு நீ எனக்கு வீடு எல்லாம் பார்த்த” என்று கேட்க,
“மாம்தான்” என்றவன் சொல்ல, அவள் முறைக்கவும் அவன் குரலின் சுருதி இறங்கியது.
“இல்ல உங்க மாம்தான்” என்றவன் மேலும் கூற,
“நான் அவங்களுக்கு அப்புறமா வைச்சுக்கிறேன்” என்றவள் அதன் பின் ஓட்டுநரிடம்,
“நான் சொல்ற அட்ரஸுக்கு போங்க” என்றாள்.
அவள் சொன்ன விலாசத்தைக் கேட்ட மகேஷ்,
“அங்கேயா சிஸ்” என்று அதிர,
“ஆமா அங்கேதான்” என்றாள்.
“அங்கே வேண்டாம் சிஸ்... சொல்றதை கேளுங்க”
“நீ சொல்றதை நான் ஏன்டா கேட்கணும்”
“நான் உங்க நல்லதுக்காகதான்”
“அது என் வீடு மகேஷ்”
“ஆனா”
“மகேஷ் போதும்... இந்த கான்வேஸஷனை இதோட நிறுத்திக்கலாம்” என்றவள் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள மகேஷ் அமைதியாகிவிட்டான்.
அவளுடைய பிடிவாதத்தை பற்றி அவன் அம்மா அவனிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு மேல் அவளிடம் வாதம் செய்யவும் முடியாது என்பதை உணர்ந்து தன் செல்பேசியில் குறுந்தகவல் ஒன்றைத் தட்டிவிட்டான்.
கார் அவள் சொன்ன விலாசத்தில் நின்றது. எதிரே உயரமான பத்து மாடிக் கட்டிடம்.
அதில் ‘லில்லி அப்பார்மென்ட்’ என்ற பெயர்ப் பலகை துருப்பிடித்து கருமை படர்ந்திருந்தது. அதனைப் பார்த்த மகேஷ் முகம் களையிழந்து போனது.
அவனுக்கே அந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை எனும் போது அவளால் எப்படி இந்த இடத்திற்கு மீண்டும் வர முடிகிறது. அதுவும் தங்க வேண்டும் என்கிறாள் என்ற யோசனையுடன் அவள் பெட்டிகளை இறக்கி கொடுத்தான்.
“தேங்க்ஸ்” என்று அவள் கூற, “எனக்கு எதுக்கு தேங்க்ஸ்... நான் உங்களோட பிரதர்தானே” என்றான்.
“யா... ஸ்டேப் பிரதர்” என்றவள் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்குள் நடந்தாள்.
மகேஷ் வேதனையுடன் அவள் செல்வதைப் பார்த்துவிட்டு அதே காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டான்.
உள்ளே நடந்த ஜீவி அந்தக் குடியிருப்பின் வெளியே அமைக்கப்பட்டிருந்த சிறிய பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். அவளுக்குச் சில பல பழைய நினைவுகள் தூண்டப்பட்டன.
அவற்றை எல்லாம் கடந்து அவள் செல்லும் போது பூங்காவிலிருந்து சிலரின் பார்வைகள் அவள் மீது விழுந்தன. முதலில் அதிர்ச்சியானவர்கள் பின் அருவருப்புடன் அவள் செல்வதைப் பார்த்தார்கள்.
ஜீவி அவர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை. அவள் பாட்டுக்கு மின்தூக்கியில் ஏறி ஐந்தாவது மாடியில் இறங்கினாள்.
E 5 என்ற கதவு எண் முன்பு நின்றாள். தயக்கத்துடன் நின்று அந்தக் கதவைப் பார்த்தவள் மனதில் ஒரு மெல்லிய நடுக்கம் வந்து போனது.
அவசரமாக அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு பையிலிருந்த சாவியைத் துழாவி எடுத்து பூட்டைத் திறந்து உள்ளே சென்றாள்.
முகப்பறை இருண்டிருந்தது. அங்கிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சோபா டிவி எல்லாம் துணிகள் போட்டு மூடப்பட்டிருந்தன. அவளுடைய புத்தகங்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள் எல்லாம் அட்டைப் பெட்டிகளில் இருந்தன.
அவற்றை எல்லாம் தாண்டி உள்ளே நடந்தவள் வலதுபுறம் இருந்த படுக்கையறை கதவைப் பார்த்து அப்படியே நின்று விட்டாள்.
‘இது தப்பு இல்லையா’
‘தப்பு சரின்னு எதுவும் இல்ல ஜீவி... கம்மான் ட்ரை’
அவள் மூளைக்குள் இந்த குரல்கள் தெறித்த அதே சமயம் வாயிற் கதவும் தெறித்தது. யாரோ படபடவென்று தட்டினார்கள். அவள் சென்று கதவைத் திறக்க, அந்த அடுக்குமாடி வாசிகள் எல்லாம் கூட்டமாக நின்றிருந்ததை பார்த்தாள்.
“யாரை கேட்டு திரும்பவும் இந்த அபார்ட்மெண்டுகுள்ள காலடி எடுத்து வைச்ச” எதிரே நின்ற வயதான மனிதர் அவளிடம் எகிறினார்.
அந்தக் கூட்டத்தினரை நிதானமாகப் பார்த்தவள்,
“யாரை கேட்கணும்... இது என் வீடு... நான் இங்கே வருவேன்” என்றாள்.
“இது நல்ல குடும்பங்க தங்குற பிளாட்” பின்னிருந்து ஒரு பெண்ணின் குரல் கோபமாக ஒலித்தது.
“நீ வேற ஏதாவது ஏரியால வீடு பார்த்துட்டு போ” அடுத்த குரல்.
“ஆமா நீ இந்த பிளாட்ல தங்க கூடாது தங்க முடியாது” மொத்தமாக எல்லோரும் இப்போது குரல் கொடுக்க, அவள் அசரவில்லை.
“நான் இங்கேதான் இருப்பேன்... உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க” என்று விட்டு அவள் படாரென்று கதவை மூடிவிட்டாள்.
“எவ்வளவு திமிரு” என்று அந்த முதியவர் கோபமாகக் கூற,
“இவளால்தான் நம்ம அபார்ட்மென்ட் பேரே கெட்டு போச்சு... அந்த சம்பவம் நடந்ததுல இருந்து எவனும் வாடகைக்கு கூட நம்ம பிளாட் பக்கம் வரமாட்டுறான்... இதுல மிச்சம் மீதி இருக்க பேரையும் நாரடிச்சுட்டு போலாம்னு இவ திரும்பி வந்திருக்கா போல” என்று ஒரு பெண்மணி தன் ஆதங்கத்தைக் கொட்ட,
“அவளை இங்க தங்க விட்டாத்தானே” மூடிய கதவைப் பார்த்து வெறுப்புடன் கூறினார் அந்தக் கூட்டத்தின் தலைவர்.
தூரமில்லை விடியல்

Quote from Guest on October 22, 2024, 7:00 PMஅப்ப ஜீவிக்கு ஒரு அப்பா ரெண்டு அம்மாவா.அவங்க பாட்டி கூட தான் CLOSE போல அவங்கள miss பண்றா.. அப்படி என்ன பண்ணிட்டா .இவங்க மானம் போற அளவுக்கு
அப்ப ஜீவிக்கு ஒரு அப்பா ரெண்டு அம்மாவா.அவங்க பாட்டி கூட தான் CLOSE போல அவங்கள miss பண்றா.. அப்படி என்ன பண்ணிட்டா .இவங்க மானம் போற அளவுக்கு
Quote from Marli malkhan on November 11, 2024, 2:14 PMSuper ma interesting
Super ma interesting