மோனிஷா நாவல்கள்
Thooramillai Vidiyal - Episode 13
Quote from monisha on December 27, 2024, 7:30 PM13
ஜீவிதா அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது மகேஷ் அவள் செல்பேசிக்கு அழைத்தான்.
“சொல்லு மகேஷ்”
“அது ஒரு விஷயமா?” என்று அவன் ஆரம்பிக்கும் போதே,
“பைக் வேணுமா... எங்க கொண்டு வரணும்னு சொல்லு... நானே கொண்டு வந்து விட்டுடுறேன்... இந்த அபார்ட்மென்ட் செகரட்டரி வெளியாளுங்க வர கூடாதுன்னு ஒரே கெடுபிடி” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“சிஸ்... இப்போதைக்கு எனக்கு பைக் தேவை இல்ல... நீங்களே வைச்சுக்கோங்க” என்றான்.
“அப்போ வேற என்ன?”
“நான் வேற எந்த விஷயத்துக்காகவும் உங்களுக்குக் கால் பண்ண கூடாதா?” என்றவன் கேட்க வீட்டைப் பூட்டிவிட்டு மின்தூக்கி முன்பு வந்து நின்றவள்,
“அப்படி நான் சொல்லலையே” என்றாள்.
“ஒன்னும் இல்ல என் பர்த்டேவுக்கு நாங்க எல்லாம் பிரண்ட்ஸா வெளியே போறோம்... உங்களையும் இன்வைட் பண்ணலாம்னு”
உடனடியாக அவள், “எனக்கு ஆபஸ்ல நிறைய வேலை இருக்கு” என்று விட,
“இன்னைக்கு இல்ல சிஸ்... வர சண்டேதான்” என கூறினான். ஜீவாவை பார்க்க அன்றுதானே அவள் முடிவு செய்திருக்கிறாள்.
“இல்ல மகேஷ் சாரி... சண்டே கூட சைட்டுக்கு போக வேண்டிய வேலை இருக்கே” என்று ஜீவி பொய்யுரைக்க,
“அப்படியா சிஸ்” என்றவன் குரல் உள்ளே போய்விட்டது.
“சாரி மகேஷ்... நீ என்ஜாய் பண்ணு... எனி வே... அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அதன் பின் மின்தூக்கியில் ஏறியவள் தன் செல்பேசியைப் பார்த்துக் கொண்டு நிற்க, மூன்றாவது தளத்தில் கதவு திறந்தது.
கனமான தோள் பையுடன் பள்ளிச் சீருடையில் உள்ளே வந்த பெண் ஜீவிதாவை பார்த்ததும், “ஹாய் க்கா” என்றாள். இருவரும் அவ்வப்போது இப்படி மின்தூக்கியில் சந்தித்துக் கொள்வது வழக்கம் என்பதால் ஜீவியும் புன்னகையுடன்,
“ஹாய் லீலா... என்ன... உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்லையா... லேட்டா போற” என்று விசாரித்தாள்.
“ஐயோ இருக்கு க்கா... லேட்டாயிடுச்சு... ரொம்ப நேரம் தூங்கிட்டேன்... அம்மா ஆபிஸ் போயிட்டாங்க... அப்பாவும் எழுப்ப மறந்துட்டாரு” என்று முகத்தைச் சுருக்கி கொண்டு தன் சோகக் கதையைச் சொல்ல,
“நான் வேணா உன்னை ட்ராப் பண்ணவா?” என்று கேட்டாள் ஜீவிதா.
“பக்கத்துல தான் க்கா... நான் நடந்து போயிடுவேன்”
“நீ இவ்வளவு பெரிய பையைத் தூக்கிட்டு நடந்து போறதுக்குள்ள இன்னும் லேட்டாகிடும்... வா நான் கொண்டு விடுறேன்” என்று சொன்னவள் மின்தூக்கி நிற்கவும்,
“நீ பார்க் கிட்ட வெயிட் பண்ணு... வந்துடுறேன்” என்று உள்ளே சென்று விரைவாகத் தன் பைக்கை எடுத்து வர, லீலாவும் ஏறிக் கொண்டாள்.
அந்த குடியிருப்பை வெளிக்கதவை தாண்டியதும் அடுத்த கட்டிடமே அவர்கள் பள்ளிதான்.
“நானும் இந்த ஸ்கூலில்தான் படிச்சேன்... பக்கத்துலயே இருந்தாலும் என் பாட்டி என்னை தனியா அனுப்பவே மாட்டாங்க” என்று தன் கதையை அவள் சொல்ல,
“ஆமா உங்களுக்கு அப்போ பிடிச்ச டீச்சர் யார்?” என்று லீலா கேட்டாள்.
“அப்படி யாருமே இல்ல லீலா” என்றபடி கொண்டு வந்து வண்டியைப் பள்ளி முன்பு நிறுத்திவிட்டு,
“ஆமா உனக்கு யாரைப் பிடிக்கும்” எனவும்,
“எனக்கு எங்க கிளாஸ் டீச்சர் ஜீவா சாரைதான் பிடிக்கும்” என்றவள் சொல்ல, ஜீவியின் முகம் பிரகாசமானது.
“கெமிஸ்ட்ரி எடுக்குறாரா?” என்று கேட்க,
“ஆமா உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று ஆச்சரியமான லீலா மேலும், “அதோ எங்க சாரே வர்றாரு” என்று கை காட்டிய இடத்தில் ஜீவா பேருந்திலிருந்து இறங்கி வருவதை ஜீவிதா காண நேர்ந்தது.
அவள் முகம் மலர... லீலாவோ பதற்றத்துடன் , “நான் க்ளாஸுக்கு லேட்டா வந்ததை பார்த்தா... திட்டுவாரு... நான் போறேன்” என்று வேகமாக உள்ளே நடக்க ஜீவிதா அவன் அவளை கடந்து உள்ளே போகும் வரை அங்கேயே நின்றாள்.
வாயில் வரை சென்ற ஜீவா ஒரு நொடி நின்று அவள் பைக் நின்ற பக்கம் பார்வையைத் திருப்பவும் சுதாரித்துக் கொண்டவள் அவசரமாகத் தன் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டாள்.
அவன் பார்வை அவள் புறம் விழுந்தது. ஆனால் ஹெல்மெட் அவள் முகத்தை மறைத்திருக்கக் குழப்பத்துடன் பார்த்துவிட்டு அவன் திரும்பி உள்ளே நடந்தான்.
பேருந்தில் சந்தித்த போது தான் வாங்கி தந்த பயணச்சீட்டை அவன் தவறவிட்டது, அவனிடம் தான் வழி கேட்டது, தான் படித்த பள்ளியில் அவன் வேலை பார்ப்பது, அவனை அவள் பணிபுரியும் அலுவலகத்தின் அருகே உள்ள வீட்டில் பார்த்தது, அதே நபரை டேட்டிங் செயலியில் பார்த்துப் பழகியது எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடைய சம்பவங்களாகவே அவளுக்கு தோன்றியது.
அதேநேரம் இது எதுவும் தற்செயல் என்று அவள் நம்பவில்லை. ஒரு வகையில் அவர்கள் உறவை விதியே தீர்மானித்ததாக நினைத்தாள்.
இதெல்லாம் யோசித்தபடி அவள் பைக்கை இயக்கி சென்றதில் முன்னே, சாலையைக் கடந்த மனிதனைக் கவனிக்காமல் கிட்டத்தட்ட மோதப் போய்விட்டாள்.
நல்ல வேளையாக அவள் உடனடியாகச் சுதாரித்து வண்டியை நிறுத்திவிட, “யோவ்... இப்படியா வருவ” என்று அந்த நபர் அதிர்ச்சியிலும் கோபத்திலும் இவளிடம் எகிறி கொண்டு வந்தான்.
“இந்த பசங்க எல்லாம் இப்படிதான் ஒட்டுறானுங்க” என்று வேறு சிலரும் அவளைச் சூழ்ந்து கொண்டு சாட, “சாரி சாரி” என்று அவள் பதற்றத்தில் சொல்லிக் கொண்டே அவர்களிடமிருந்து தப்பித்து வந்தாள்.
“அட பாவமே... இப்போ எல்லாம் பொம்பள புள்ளயங்களும் இப்படிதான் இருக்கு போல” என்று அவர்கள் சொன்னதை அவள் காதில் வாங்காமல் ஒரு வழியாக அவ்விடத்தைக் கடந்துவிட்டாள்.
‘இனிமே வண்டி ஓட்டும் போது எதையும் யோசிக்கக் கூடாது... முக்கியமாக ஜீவாவை பத்தி’ என்று நினைத்துக் கொண்டே அலுவலகத்தில் இறங்கியவள், என்னதான் முயன்றும் ஜீவாவை பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அவனைப் பள்ளியில் பார்த்த காட்சியை அந்தப் புத்தகத்தில் பென்சில் ஓவியமாக வரைந்தாள். ஆனால் இம்முறை ஜீவாவின் முகம் மிகத் தத்ரூபமாக வந்திருப்பது அவளுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அவனுடைய முகம் அவளையும் அறியாமல் அவள் உணர்வுகளுக்குள் ஆழப் பதிந்துவிட்டன என்று எண்ணிய போதுதான் இந்தப் புத்தகத்தை ஜீவாவிற்கே பரிசாக வழங்கினால் என்ன என்ற யோசனை வந்தது.
அன்று இரவு ஜீவாவிடம் பேசும் போது, “நான் உங்களை மீட் பண்ண வரும் போது உங்களுக்காக ஒரு கிப்ட் எடுத்துட்டு வரேன்” என்று அனுப்ப,
“கிப்ட் எல்லாம் எதுக்கு?” என்றான்.
“எனக்கு கொடுக்கணும்னு தோனுச்சு”
“நீங்க கொடுத்தா நானும் கொடுக்கணுமே”
“அப்படி எல்லாம் நான் எதுவும் எதிர்பார்க்கல ஜீவா”
“நானும்தான் எதிர்பார்க்கல”
“ஆனா நான் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்”
“அப்படி என்ன கிப்டு?”
“அது சர்ப்ரைஸ்... சண்டே கொடுக்கிறேன்... நீங்களே பார்த்துக்கோங்க” என்ற அவளுக்கு அவன் இந்தப் படங்களை பார்த்து என்ன மாதிரி உணர்வான் என்று யோசிக்கவே குதுகலமாக இருந்தது.
அவனோ அவள் பரிசு கொடுக்கும் போது தான் மட்டும் வெறுங்கையுடன் போவதா என்று யோசித்து மாடியிலிருந்த மஞ்சள் ரோஜாச் செடியைப் போலவே ஒரு சிறிய செடியை வாங்கித் தொட்டியில் வைத்து அவளுக்குப் பரிசாக எடுத்துச் செல்ல நினைத்தான்.
ஞாயிற்றுக்கிழமை இருவருமே ஒருவரை ஒருவர் சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருந்தார்கள். ஜீவிதா இந்த சந்திப்பிற்காக பிரத்தியேகமாக வாங்கிய மஞ்சள் நிற சுடிதாரை அணிந்து கொண்டாள்.
பின்னர் அவள் கண்ணாடியில் பார்த்து தன் முகத்தில் எளிமையான ஒப்பனைகள் செய்து கொண்டாள். இன்னும் சிலதடவைகள் தன் ஒப்பனைகளைச் சரி செய்து அது திருப்தியாக உள்ளதா என்று மீண்டும் மீண்டும் பார்த்து ஒரு வழியாக அவள் மனதிற்கு முழுத் திருப்தியாகத் தோன்றவும் கிளம்பி வந்து பைக்கை எடுத்தாள்.
மறுபுறம் எந்தவித எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜீவா எண்ணிய போதும் அவனால் தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
தனக்கு பிடித்தமான சிவப்பு நிறச் சட்டையைப் பீரோவிலிருந்து எடுத்து அவன் அணிந்து கொள்ள, “எங்க ஜீவா போற?” என்று செல்வி அவன் தயாரான விதத்தைக் கண்டு சந்தேகத்துடன் விசாரித்தார்.
“பிரண்டை பார்க்க போறேன் ம்மா”
“எந்த பிரண்டு?”
“ம்மா காலேஜ் பிரண்டு... உனக்கு தெரியாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“நானும் வரவா ஜீவா உன் கூட” என்று கேட்டபடி வந்து நின்றாள் சித்ரா.
“இந்த தடவை வேணாம் க்கா... நெக்ஸ்ட் டைம் கூட்டிட்டு போறேன்” என்றவன் மாடிக்குச் சென்று பரிசாகத் தயார் செய்து வைத்திருந்த அந்த ரோஜாச் செடியை எடுக்கச் சென்றான்.
அப்போது பசுமையாகச் செழித்திருந்த அந்தத் தோட்டத்தைப் பார்த்தவனுக்கு அப்பெண்ணை இங்கே அழைத்து வர வேண்டும் என்று தோன்றியது. அந்த நொடித் தானும் அவளும் இந்தத் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை காட்சி அவன் மனதில் படமாக ஓடிக் கொண்டிருக்கும் போது அபஸ்வரமாக ஒரு சத்தம் அவன் எண்ணத்தைத் தடை செய்தது.
தன் வீட்டிற்குள் நுழையும் காரை பார்த்த ஜீவா,
‘என்ன மாமாவோட கார் வருது... எதுக்கு வர்றாரு... சாதாரணமா வீட்டுப் பக்கம் வர மாட்டாரே’ என்று யோசிக்கும் போதே காரை திறந்து கொண்டு சிவகுமாரும் அவர் மனைவியும் இறங்கினார்கள். இன்னும் அதிக ஆச்சரியத்துடன்,
‘என்னடா மாமியும் வந்திருக்காங்க... அப்படி என்ன விஷயம்’ என்ற அவன் அந்த ரோஜாச் செடியை திரும்ப அங்கேயே வைத்து விட்டு இறங்கப் போகும் போது சிவகுமார் அவன் மாடியில் நிற்பதைப் பார்த்துவிட்டார்.
“ஜீவா” என்று கையசைக்க, “வாங்க மாமா வாங்க மாமி” என்றபடி அவர்களுடன் வீட்டிற்குள் நடந்தான்.
அதேசமயம் காபி ஷாப்பிற்குள் நுழைந்த ஜீவிதா அவன் வந்து விட்டானா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவன் வரவில்லை என்று அறியவும் ஓரமாக இருந்த இருக்கையில் அவள் அமர்ந்தாள். சிப்பந்தி வந்து நின்று, “மேடம் ஆர்டர்” என்றான்.
“பிரண்டு வந்துட்டு இருக்காரு... வந்ததும் ஆர்டர் தர்றேன்” எனவும் அவன் நகர்ந்துவிட்டான்.
அவள் தன் பையிலிருந்த புத்தகத்தை புரட்டி பார்த்து கொண்டிருக்கும் போது அவள் பின்புறம் ஒரு உருவம் வந்து நிற்கும் உணர்வு ஏற்பட ஆர்வமாகத் திரும்பியவள்,
“ஜீ...” என்ற ஆரம்பித்த வார்த்தைகள் அப்படியே அவள் தொண்டைக்குள் சென்றுவிட்டன.
எதிரே மகேஷ் நின்றிருந்தான். அவள் முகம் அப்பட்டமான ஏமாற்றத்தைக் காட்ட, “என்ன சிஸ்... யாராச்சும் பிரண்டுக்காக வெயிட் பண்றீங்களா?” என்று கேட்டான்.
“அது வந்து... என் ஆபிஸ் பக்கத்துலதான் இருக்கு... நான் இங்க அடிக்கடிக்கு வருவேன்” என்று ஒருவாறு அவள் சமாளிக்க,
“ஆனா இன்னைக்கு சைட்டுக்கு போற வேலை இருக்குனு சொன்னீங்க” என்று கேட்டான்.
“அது... அப்படி சொன்னேனா?”
“ஆமா என் பர்த்டேக்கு நான் வெளியே கூப்பிட்ட போது சொன்னீங்களே?”
“ஆமா இல்ல... சொன்னேன்... போகணும்... அது நான் ஆபிஸ் போயிட்டு போகணும்... ஆபிஸ் போறதுக்கு முன்னாடி காபி குடிச்சிட்டு போலாம்னு” என்றவள் ஏதேதோ சமாளித்து கொண்டே,
“ஆமா உனக்கு பர்த்டே இல்ல... நான் மறந்தே போயிட்டேன்... ஹாப்பி பர்த்டே” என்று கை கொடுத்து வாழ்த்தியதோடு பேச்சையும் மாற்றினாள்.
“பிரண்ட்ஸோட ஏதோ வெளியே போற ப்ளான்னு சொன்ன... போகல”
“அதுக்குதான் போயிட்டு இருந்தேன்... உங்க பைக்கை பார்த்ததும் நீங்க இங்க இருக்கீங்களோனு நினைச்சுதான் உள்ளே வந்தேன்” என்று மகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“மேடம் ஆர்டர்” என்று சிப்பந்தி மகேஷ்தான் அவள் சொன்ன நண்பன் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் வந்து கேட்டான். ஜீவிதாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“என்ன சிஸ்... உங்களுக்கு என்ன வேணும்”
‘இப்பொதைக்கு இவன் கிளம்ப மாட்டான் போலவே’ என்றவள் காபி எடுத்து வரச் சொல்ல மகேஷும் அதையே எடுத்து வரச் சொல்லித் தெரிவித்தான்.
ஜீவிதாவின் மனமோ மிகுந்த பதற்றத்தில் இருந்தது. இந்த நேரத்தில் ஜீவா வந்தால் என்ன செய்வது? அவனுக்குத் தன்னை தெரியாது என்றாலும் மகேஷ் முன்னிலையில் அவனிடம் எப்படித் தன்னை அறிமுகம் செய்து கொள்வது,
போதாகுறைக்கு மகேஷிற்கு தெரிந்தால் அது ஷீலாவிற்கும் தெரிந்து போகுமே என்று அவளுக்கு அச்சம் ஏற்பட்டது.
“என்னாச்சு சிஸ்... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று மகேஷ் அவள் முக மாற்றங்களைப் பார்த்து விசாரிக்க, ஜீவிதா இன்னும் பதற்றமானாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லயே” என்றவள் மேலும், “ ஆமா... உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ண மாட்டாங்களா” என்று கேட்டாள்.
“பிரச்னை இல்ல... உங்க கூட இருக்கேன்னு மெசஜ் பண்ணிட்டேன்” என்று அவன் கூற ஜீவிதாவிற்கு உள்ளூர கடுப்பாக இருந்தது. இன்னொரு புறம் ஜீவா வருகிறானா என்று அவள் பார்வை சுற்றிலும் சுழல,
“உண்மையிலேயே நீங்க யாருக்காகவும் வெயிட் பண்ணலையா?” என்று மகேஷ் சந்தேகமாகக் கேட்டான்.
“நான் யாருக்காக வெயிட் பண்ண போறேன்... அதெல்லாம் இல்லையே” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழகான வட்டக் கப்பில் அவர்கள் இருவருக்கும் காபி எடுத்து வந்து வைக்கப்பட்டது.
அவள் அவசரமாக அதனைக் குடித்துவிட்டு அவனையும் அங்கிருந்து துரத்தி விட எத்தனிக்க,
“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று மகேஷ் குடிப்பதை நிறுத்திவிட்டு அவளிடம் பேசத் துவங்கினான். ‘சுத்தம்’ என்று உள்ளூர எரிச்சலானவள்,
“எனக்கு ஆபிஸ் லேட்டாகுது... நம்ம வேற டைம்ல பேசுவோமா?” என்று அந்தக் காபியை அவசரமாகக் குடித்து விட்டு எழுந்து கொண்டாள்.
“கொஞ்ச நேரம்தான் சிஸ்... உட்காருங்க”
“மகேஷ்”
“உங்க பிளாட்டுக்கும் வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க... போன்லயும் சரியா பேச மாட்டுறீங்க”
“நீ கால் பண்ணு... நம்ம பேசுவோம்”
“கொஞ்ச நேரம் சிஸ்” என்று கெஞ்சலாகக் கேட்க அவளால் தவிர்க்க முடியவில்லை. மீண்டும் அவள் விழிகள் வாயிலைத் தொட்டுவிட்டு வந்தன.
“ப்ளீஸ் சிஸ்” எனவும்,
“சரி சொல்லு” என்று விட்டு அமர்ந்து கொள்ள,
“அடுத்த மாசம் அம்மா அப்பா கல்யாண நாள் வர போகுது... சின்னதான் ஒரு செலிபிரேஷ்ன் பண்ணலாம்னு ... நீங்களும் வந்தா நல்லா இருக்கும்... அம்மா அப்பாவும் சந்தோஷப்படுவாங்க” என்றவன் பேசப் பேச அவள் முகம் கறுத்துவிட்டது.
அவள் மௌனமாக அமர்ந்திருக்க அப்போது அவள் செல்பேசியில் இருந்த வந்த சத்தம் அவள் கவனத்தை ஈர்த்தது.
ஆர்வமாக அதனை திறந்தவள், ‘சாரி என்னால இன்னைக்கு வர முடியாது’ என்ற ஜீவாவின் தகவலை பார்த்து அவள் மனம் வேதனையில் திளைத்தது. அந்த நொடி கட்டுப்படுத்த முடியாதளவுக்குக் கோபம் மகேஷ் மீது உண்டானது.
இதனை உணராத மகேஷ், “சிஸ்” என்று மேலும் ஏதோ சொல்ல வர, எழுந்து நின்று கொண்ட ஜீவிதா, சிப்பந்தியை அழைத்து அவர்கள் குடித்த காபிக்கான பணத்தைத் தந்து விட்டு வெளியே நடந்தாள்.
“சிஸ்... சிஸ்... இந்த ஒரே ஒரு தடவை... எனக்காக வாங்க” கெஞ்சிக் கொண்டே மகேஷும் அவள் பின்னே வர,
“எனக்கு விருப்பம் இல்லை மகேஷ்... நான் வரமாட்டேன்” என்று விட்டு பைக்கில் ஏற போனவள் அப்படியே நின்று விட்டு, “நான் ஹெல்ப்னு கேட்டதும் பைக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்... இந்தா உன் பைக் சாவி” என்று சாவியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“சிஸ்... எனக்கு இப்போ பைக் எல்லாம் வேண்டாம்... நீங்களே வைச்சுக்கோங்க” என்று மகேஷ் சொன்ன போதும் அவள் சாவியை பைக்கில் போட்டுவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்றுவிட்டாள். அவள் கண்களில் மடை திறந்த வெள்ளமாக கண்ணீர் கரைபுரண்டோடியது.
13