மோனிஷா நாவல்கள்
Thooramillai Vidiyal - Episode 24

Quote from monisha on January 30, 2025, 5:42 PM24
ஜீவிதா மிகுந்த ஆர்வத்துடன் கண்ணாடி முன்பு நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் பேன்ட் சட்டை அல்லது குர்தி போன்ற உடைகளை அணிபவள், இன்று தேடி எடுத்து அந்த நீலவண்ண சுடிதாரை உடுத்திக் கொண்டாள்.
அந்தச் சுடிதாரின் அடித்தளம் தங்கச்சரிகையில் பூ போலச் சுற்றிலும் விரிந்து அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. துப்பட்டாவிலும் அதே போன்ற சரிகை வேலைப்பாடுகள் இருந்தன. அவள் அதனைத் தன் இருபக்கத் தோளில் சரித்துக் கொண்டு அழகு பார்த்திருக்கும் போது வாயில் அழைப்பு மணி கேட்டது.
உற்சாகமாகச் சென்று திறக்க, அவள் எதிர்பார்த்தது போலவே ஜீவா நின்றிருந்தான்.
தன்னுடைய உடையலங்காரத்தை அவன் கவனித்து ரசிப்பான் என்று அவள் நினைத்திருக்க, அவனோ வேறு மனநிலையில் இருந்தான்.
“ஜீவி ஒரு ஹெல்ப்... அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றாங்க” என்று வெளியே நின்றபடி அவன் விஷயத்தைச் சொல்ல அவள் பதிலுக்கு, “நேத்தே சொன்னீங்களே” என்றாள்.
“அதான்... என்னன்னா அம்மாவை கூட்டிட்டு வருதுக்கு போகணும்... இதுல அக்காவையும் ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போறதுனா” என்றவன் இழுக்க அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது.
“சித்ராவை பார்த்துக்கணுமா?” என்று அவன் சொல்லத் தயங்கியதை அவளே கேட்டுவிட்டாள்.
“ஆமா... ஆனா அக்கா எப்பவும் ஒரே போல இருக்க மாட்டா... அக்காவை பார்த்துக்கிறது ரொம்ப கஷ்டம்தான்... சம்டைமஸ் கொஞ்சம் அரகென்டா நடந்துப்பா... அதனால்” என்றவன் பேசியதைக் கேட்டு மிதமான புன்னகையுடன்,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ஜீவா... நீ கவலைப்படாம போயிட்டு வா” என்று நம்பிக்கையுடன் சொல்ல,
“தேங்க்ஸ் ஜீவி” என்றான்.
“தேங்க்ஸ் எல்லாம் நமக்குள்ள எதுக்கு” என்றவள் தந்த புன்னகையில் அவன் முகமும் மலர்ந்தது.
“சரி நான் கிளம்புறேன்... அக்கா ரூம்லதான் தூங்கிட்டு இருக்கா... ஒரு வேளை முழிச்சிட்டனா என்னை போக விடமாட்டா” என்று விட்டு, “இது எங்க வீட்டு சாவி... பார்த்துக்கோ” என்று அவள் கையில் தந்தான்.
அதனை பெற்று கொண்டதுமே அவன் கிளம்பிவிட்டான்.
இவ்வளவு நேரத்தில் ஒரு முறை கூட அவன் தன் உடை மற்றும் அலங்காரத்தை கவனிக்கவில்லை என்று வருத்தப்பட்டாலும்,
‘பாவம் டென்ஷன்ல இருக்காரு’ என்றபடி தன் ஏமாற்றத்தைச் சமாளித்துக் கொண்டாள்.
அதேநேரம் மருத்துவமனைக்குச் சென்ற ஜீவா பணம் கட்டிவிட்டு அறைக்குச் செல்ல, அங்கே செல்வியும் ஜெயந்தியும் கிளம்பி தயார் நிலையில் இருந்தனர்.
“பில் எல்லாம் கட்டிட்டேன் ம்மா... நர்ஸ் வந்து சொன்னதும் கிளம்பலாம்” என்றவன் செல்வியிடம் கூற,
“எனக்கு இந்த மருந்து வாசனையே பிடிக்கல... சீக்கிரம் கிளம்பிட்டா... நல்லா இருக்கும்” என்று புலம்பியவர் அப்போதுதான் மகள் அவனுடன் வராததை கவனித்து, “எங்கடா சித்ராவை காணோம்” என்று கேட்க,
“ஜீவிகிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றான்.
“யாருடா ஜீவி?”
“அதான் ம்மா சொன்னேனே... நம்ம பக்கத்து வீட்டுல இருக்க பொண்ணு”
“அந்த பொண்ணா” என்றவர் முகம் சுணங்க,
“இன்னைக்கு நீங்க நல்லா இருக்க அந்த பொண்ணுதான் காரணம்... அதுவும் உங்களை ஐசியூல வைச்சிருந்த போது சித்ராவை பார்த்துக்க ஹெல்ப் பண்ணது எல்லாம் ஜீவிதாதான்” என்று கூறினான்.
“இவ்வளவு எல்லாம் செஞ்சுச்சா அந்தபொண்ணு” என்று வினவியவர் பின் குழப்பத்துடன், “ஆனா நீ அந்த பொண்ணை பத்திதானே... ஏதோ சொன்ன... சரி இல்ல அது இதுன்னு” என்று கேட்டார்.
“இல்லம்மா... நான்தான் தப்பா ஏதோ புரிஞ்சிக்கிட்டேன் அப்படி எல்லாம் சொல்லிட்டேன்” என்றான். ஆனால் அவன் அம்மாவின் பார்வையிலும் சந்தேகம் தீரவில்லை. அதற்கு மேல் அவரை சமாளிக்க முடியாமல் வெளியே வந்தவன்,
“எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க” என்று செவிலியரிடம் கேட்க, இப்போ அப்போ என்று நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர்.
அவனுக்கோ சித்ராவை ஜீவிதாவிடம் விட்டு வந்துவிட்டோமே. எப்படிச் சமாளிக்கிறாளோ என்ற கவலை எழ அவள் எண்ணுக்கு அழைத்தான். அதற்குள்,
“இங்கதான இருக்கீங்களா... டாக்டர் உங்களை கூப்பிடுறாங்க” என்று தெரிவித்தாள் ஒரு செவிலியப் பெண்.
“தோ வந்துட்டேன்” என்றவன் உடனடியாக, ‘அக்கா ஓகேவா... எதுவும் பிரச்னை இல்லையே’ என்று ஜீவிதாவின் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும் அந்த மருத்துவர் அம்மாவை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடுகள் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.
அவன் தலையசைத்துக் கேட்டுக் கொண்டாலும் ஜீவி என்ன பதில் அனுப்பி போகிறாளோ யோசித்து கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து பதில் வந்தது.
“தூங்கி எழுந்துட்டாங்க... எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து டிபன் கொடுத்தேன்... சாப்பிட்டுட்டு டிவி பார்த்துட்டு இருக்காங்க”
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படி எந்த பிரச்னையும் செய்யாமல் சித்ரா இருக்கிறாள்? என்று யோசித்தாலும் அப்போதைக்கு அவளின் தகவல் கொஞ்சம் நிம்மதியையும் தந்தாது.
அதன் பின் ஒரு வாடகை காரை வரவழைத்து அம்மாவையும் ஜெயந்தியும் அழைத்துக் கொண்டு தன்னுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தான்.
“ம்மா சாவி வாங்கிட்டு வரேன்” என்றவன் எடுத்து வந்த பையை எல்லாம் வெளியே வைத்துவிட்டு ஜீவிதாவின் வீட்டின் முன்னே வந்து நின்று அழைப்பு மணி அடித்தான்.
திரும்பத் திரும்ப அடித்தும் கதவு திறக்கப்படாமல் போக அவன் பதற்றமானான். ஜீவியின் செல்பேசிக்கு அழைக்க எடுத்த போது அவளே வந்து கதவைத் திறந்தாள்.
அவள் முகம் பேயறைந்தது போலிருந்தது.
“என்னாச்சு ஜீவி” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே, சித்ராவின் அழுகை சத்தம் கேட்டது.
சித்ரா ஒடுங்கி சுவரோரமாக அமர்ந்து அழுது கொண்டிருப்பதை உள்ளே வந்து பார்த்தவன், “என்னக்கா ஆச்சு” என்று விசாரிக்க,
“என்ன அடிச்சு” என்று ஜீவியை காட்டை அரைகுறையாக வார்த்தைகள் கோர்த்து சொன்னாள். கூடவே தேம்பி தேம்பி அழவும் அவன் ஜீவிதாவின் புறம் திரும்பினாள். அவள் மிரட்சியுடன் நிற்க,
“ஜீவி என்னாச்சு” என்று கேட்டான். ஆனால் அவன் கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னவோ பெரிய பிரச்னை என்று புரிய,
“ஜீவி” என்றவன் அவளிடம் பேச நினைக்க, சித்ரா அவனை விடவில்லை. “ஜீவா... போலாம் ஜீவா” என்று தொடர்ச்சியாக உரைத்து அவன் தோளை அழுத்தி அணைத்து கொண்டாள்.
வீட்டு சாவி மேஜை மீதிருந்ததை பார்த்தவன் வேறு வழியில்லாமல் அதனை எடுத்து கொண்டு சித்ராவை அழைத்து வந்தான்.
வீட்டிற்குள் வந்ததுமே சித்ரா அறையும் குறையுமாக, “அவ அடிச்சா... தள்ளிட்டா” என்றெல்லாம் சொல்ல,
“ஏன் டா... அவ சித்ராவை அடிச்சா” என்று செல்வி ஆத்திரமடைந்தார்.
“ம்மா உனக்கு அக்காவை பத்திதான் தெரியுமே” என்று சொல்லும் போது ஜெயந்தியும், “இல்ல சித்ராவும் எதாச்சும் பண்ணி இருப்பா” என்று கூற,
“அதுக்கு... கை நீட்டுவாளாம்” என்று செல்வி பொங்கினார்.
“இப்பதான் உடம்பு குணமாகி வீட்டுக்கு வந்திருக்கீங்க... திரும்பவும் டென்ஷனாகி உடம்பை கெடுத்துக்காதீங்கமா” என்று ஜீவா கூற, “ஆமா க்கா” என்று ஜெயந்தியும் அவனுக்கு சாதகமாக பேச, செல்வி வேறு வழியில்லாமல் அடங்கிவிட்டார்.
மறுபுறம் ஜீவாவிற்கு என்ன நடந்திருக்கும், ஏன் அவள் அப்படி நின்று கொண்டிருந்தாள். இப்போது என்ன செய்வது? அப்போதைக்கு அவளிடம் சென்று பேச முடியுமா என்று யோசித்து தவித்து கொண்டிருந்த நிலையில் மாணிக்கம் வந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு அம்மாவின் உடல் நிலையைப் பற்றி விசாரிக்கிறேன் பேர் வழி என்று பக்கம் பக்கமாக அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
போதாக்குறைக்கு அன்று என்னவோ அம்மாவின் உயிரை அவரே காப்பாற்றியவர் போல அளந்து விட, ஜீவாவிற்கு கோபம் மூண்டது.
“ஜீவிதாவாலதான் எங்க அம்மா இன்னைக்கு நல்லா இருக்காங்க” என்று அவன் முகத்திலடித்தது போல சொல்ல,
“அதுவும் என்னவோ உண்மைதான்” என்று சமாளித்தவர் மேலும் செல்வியிடம், “அதனால்தான் உங்க புள்ளைக்கு அந்த பொண்ணு மேல தனி பாசம் வந்திருச்சு” என்று போட்டு கொடுக்க செல்வி மகனைத் திரும்பிப் பார்த்தார்.
அத்துடன் அவர் நிறுத்தவில்லை. “அதான் லிப்ட்ல இரண்டு பேரும் கை பிடிச்சு” என்றதும் ஜீவா, “சார்” என்று பல்லைக் கடித்தான்.
“இல்ல பேசிட்டு இருந்தீங்கனு சொல்ல வந்தேன்... ஆமா பேசிட்டுதானே இருந்தீங்க” என்றவர் மூட்டிவிடும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்துவிட்டு செல்ல, செல்வி மகனைக் குற்றவாளி போலப் பார்த்தார்.
“ம்மா அந்த ஆளு ஏதோ உளறான்... நீயும் அதை கேட்டுட்டு என்னை முறைக்குற”
“என்னடா... பெரிய மனுஷனை போய் ஆளு கீளுங்குற”
‘யாரு அவனா... பெரிய மனுஷன்’ என்று வாயிற்குள் முனகினாலும், “சரி தப்புத்தான்... நீங்க அவர் பேசுறது எதையும் நம்பாதீங்க... எல்லாம் பொய்” என்றான்.
அவனுக்கு கோபமேறிய போதும் அம்மாவிடம் உடல் நிலை கருதி எதுவும் பேசவில்லை. செல்வியும் அதற்கு மேல் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அதேநேரம் அவர் சந்தேகமும் தீர்ந்துவிடவில்லை.
அன்று இரவு எல்லோரும் உண்டு முடித்ததும் ஜெயந்தி செல்வி மற்றும் சித்ரா மூவரும் அறையினுள் படுத்துக் கொள்ள அவன் முகப்பறை சோபாவில் படுத்துக் கொண்டான். அவனுக்கு உறக்கம் வரவில்லை.
ஜீவியிடம் எப்படியாவது பேச நினைத்தவன்,
‘என்னாச்சு ஏன் மெசஜ் போட மாட்டுறீங்க’ என்று குறுந்தகவல்கள் அனுப்பினான். அழைத்தும் பார்த்தான். எதற்கும் அவளிடம் பதிலில்லை.
அதற்கு மேல் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா என்று எட்டிப் பார்த்தவன் சத்தமில்லாமல் கதவை மூடிவிட்டு வந்து ஜீவிதாவின் வீட்டு கதவைத் தட்டப் போக, அது தானாகவே திறந்து கொண்டது.
அவன் குழப்பத்துடன், “ஜீவி” என்று அழைத்துக் கொண்டே நுழைய அவளை காணவில்லை. போதாக்குறைக்கு அந்த அறை அடர்ந்த இருளில் மூழ்கி கிடக்கவும் அவன் மின்விளக்கைத் தேடிப் போட்டான்.
ஜீவிதா சுவரோரம் கால்களை மடித்து கொண்டு தரையில் அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு... ஏன் இருட்டுல இப்படி தனியா உட்கார்ந்துட்டு இருக்க” என்று அவன் பதற அவள் அப்போதும் அசையவில்லை. அவனுக்குப் பதிலும் சொல்லவில்லை.
“ஜீவி” என்றவன் அவள் தோளை உலுக்கவும் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தவள் போல அரண்டு போய் அவனைப் பார்த்து வைத்தாள்.
“என்னாச்சு உனக்கு” என்று அவன் மீண்டும் கேட்க அவள் கரம் நடுக்கத்துடன் எதிரே இருந்த அறையை சுட்டிக்காட்டியது.
“என்ன இருக்கு அந்த ரூம்ல”
“மைக்கலோட உடம்பு” என்று சொல்ல அவனுக்குப் பீதியானது.
“என்ன சொல்ற?” என்றவன் எழுந்து லேசாக திறந்திருந்த அந்த அறைகதவை நோக்கி நடக்க,
“ஜீவா போகாத” என்று அவள் பதறினாள்.
“டென்ஷன் ஆகாத நான் என்னனு பார்க்குறேன்” என்றவன் உள்ளே எட்டி பார்க்க அங்கே தும்பும் தூசியுமாக இருந்தது.
கூடவே இறந்து உடலைச் சுற்றி வரையும் வெள்ளைக் கோடுகள் தரையில் திட்டு திட்டாகத் தெரிந்தன.
அவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்துவிட்டது.
அவளிடம் திரும்பி வந்தவன், “அங்க ஒன்னும் இல்ல” என,
“இல்ல இருக்கு... மைக்கல் டெட்பாடி அங்கேதான் இருக்கு” என்று அவள் அதே பதற்றத்துடன் கூற,
“அப்படி எதுவும் இல்ல” என்றவன் கதவை நன்றாக திறக்க போக, “வேணாம் ஜீவா” என்று கத்தினாள். ஆனால் அவன் திறந்து வைத்தான். உள்ளே எதுவும் இல்லை.
அவள் நடுக்கம் லேசாக மட்டுப்பட்டது.
அவள் மெதுவாக எழுந்து நின்று எட்டிப் பார்த்தாள். பின் ஜீவாவை பார்த்து, “ஆனா” என்று “அது சரி நீ எப்போ பார்த்த” என்று கேட்டான்.
“நான் அந்த ரூமை எப்பவும் திறக்க மாட்டேன்... ஆனா சித்ரா சொல்லச் சொல்ல கேட்காம அந்த ரூம் கதவை திறந்துட்டாங்க... அப்பத்தான்” என்றவள் உரைக்க, அவனுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது.
“அங்கே ஒன்னும் இல்ல ஜீவி” என்று அவள் தோளை அணைத்து பிடித்தவன், “நீ பயந்து போயிருக்க... வா வந்து உட்காரு” என்று அவளை சோபாவில் அமர்த்திவிட்டு தண்ணீர் எடுத்து வந்து தந்தான்.
“குடி” என்று அவன் சொல்ல அந்த டம்ளரில் அவள் முழுவதுமாக பருகினாள். அவள் அருகே அமர்ந்தவன்,
“என்னாச்சு... யாரு அந்த மைக்கல்?” என்று விசாரிக்க அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
“சொல்ல விருப்பம் இல்லனா வேண்டாம் விடு” என்றவன் கூற, “இல்ல சொல்றேன்” என்ற அவள் மைக்கலுடன் தோழமையாகப் பழகியது, போதைக்கு அடிமையானது, அவன் காதலைச் சொன்னது, அனைத்தையும் கூறிவிட்டு,
“நான் அவன் காதலை மறுத்ததை அவனால ஏத்துக்க முடியல... ரொம்ப கோபப்பட்டான்... மோசமா நடந்துக்கிட்டான்... பொருள் எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சான்
நான் பயந்து அந்த ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துட்டேன்... அவன் அப்போ என்கிட்ட வந்து வற்புறுத்தி ட்ரக் எடுத்துக்க சொன்னான்... நான் முடியாது வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன்... அவன் கேட்கவே இல்ல... ரொம்ப போர்ஸ் பண்ணவும் பயந்து வெளியே ஓடி வந்து அவனை உள்ளே வைச்சு கதவை பூட்டிட்டேன்” என்று நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் நீரூற்றாக கொட்டியது.
“அப்புறம்”
அவள் தடுமாற்றத்துடன், “கத...வை திறந்ததா... மைக்கல் உள்ளே செத்து கிடந்தான்” என்றாள்.
“எப்படி ஜீவி?”
“ட்ரக் ஓவர்டோஸ்” என்றவள் முகத்தை மூடி கொண்டு, “நான்தான் ஜீவா அவனை கொன்னுட்டேன்... அவன் சாக நான்தான் காரணம்” என்று திரும்ப திரும்ப சொல்ல வெதும்பினாள்.
“ஜீவி... ஜீவி இங்க பாரு... இங்க என்னை பாரு” என்றவன் அவள் முகத்திலிருந்த கரத்தை பிரித்து தன் முகம் பார்க்க வைத்து,
“இது எதுக்கும் நீ காரணம் இல்ல... இது உன் தப்பு இல்ல... எல்லாத்துக்கும் மேல் அதெல்லாம் முடிஞ்சு போன கதை... நடந்து எப்பவோ முடிஞ்சு போச்சு... இப்போ பிரச்னை அந்த ரூம்ல இல்ல... உன் மனசுல... உன் மூளைல... நீ அதுல இருந்து வெளியே வரணும்... இந்த ரூமை நீ பழைய மாதிரி யூஸ் பண்ணனும்” என்று அறிவுறுத்த அவள் மறுப்பாக தலையசைத்து,
“என்னால முடியல ஜீவா” என்றாள்.
“எனக்கு தெரியும்... நடந்த எதையும் மாத்த முடியாது... ஆனா மறக்க முடியும்... அதுக்கு நீ அந்த ரூமை பழைய மாதிரி யூஸ் பண்ணனும்...
நீ யூஸ் பண்ண யூஸ் பண்ண... அதுல இருக்க மைகல்லோட ஞாபகங்கள் மறந்து போகும்... நிச்சயம் மறந்து போகும்” என்றவன் கூற,
“ஆனா எனக்கு அந்த ரூமை பார்த்தாலே மைக்கலோட வாய் மூக்கெல்லாம் இரத்தம் சிந்தி உயிரில்லாம கிடந்துதான் ஞாபகத்துக்கு வருது” என்று சொன்னாள்.
அப்போது அவள் கன்னங்களை பற்றியவன், “இனிமே வராது... நம்ம அந்த ஞாபகத்தை அழிக்கிறோம்” என,
“எப்படி” என்று கேட்டாள்.
“எப்படின்னு நாளைக்கு சொல்றேன்... நீ இப்போ தூங்கு” என்றான்.
“நான் தூங்க மாட்டேன்... நீ என்னை தனியா விட்டுட்டு போகாத” என்றவள் அவன் தோளின் மீது ஒண்டி கொள்ள,
“நான் போக மாட்டேன்... நீ தூங்கு” என்றவன் அப்படியே அவளைத் தன் மடியில் சாய்த்து படுக்க செய்தான்.
அவள் விழிகள் அவனையே பார்த்திருக்க, “கண்ணை மூடு” என்றான்.
“கண்ணை மூடுனாலும் எனக்கு தூக்கம் வராது”
“வரும்... இன்னைக்கு நீ தூங்க போற” என்றவன் தன் கரத்தால் அவள் நெற்றியை இதமாக வருடி கொடுத்தபடி இருந்தான்.
அந்த வருடல் அவளுக்கு அமைதியைத் தந்தது.அப்படியே கண்களை மூடி கொண்டாள். மெது மெதுவாக அவள் உடல் தன்னிலை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தது.
நொடிகள் நிமிடங்களைக் கடந்து அவள் நீண்ட நேரம் உறங்கி விழித்த போது அவள் கண்டது விடியலைத்தான்.
இலகுவான அமைதியான காத்திருப்பு இல்லாத ஒரு அழகான விடியல். அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு...
இரவுக்கும் விடியலுக்கும் அத்தனை தூரமில்லை என்று அந்த நொடி அவள் உணர்ந்து கொண்டாள்.
ஆனால் இதெல்லாம் தானாக நிகழவில்லை. ஜீவா நிகழ்த்தினான். நிர்மலமான உறக்கத்தைத் தந்தது அவன் மடிதான் என்று எண்ணியபடி எழுந்து அமர்ந்தவள் முகத்தில் சூரியக்கதிர்கள் பட்டன.
அந்த ஒளி கிரணங்கள் அவளுக்குப் புது உற்சாகத்தைத் தந்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டவள் மீண்டும் திறந்திருந்த படுக்கையறையைப் பார்த்ததுமே மிரட்சியடைந்தாள்.
ஜீவா இரவு சொன்னது எல்லாம் அவள் நினைவில் இருந்தது. இருப்பினும் அந்த அறைக்குள் நுழைய, அவளுக்கு இப்போதும் பயமாகத்தான் இருந்தது.
எழுந்து அதனை மூடி விட எத்தனித்த போதுதான் கவனித்தாள். அறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதுவும் தரையிலிருந்த மைக்கலின் தேக அடையாளத்தைக் காணவில்லை. எப்படி என்று யோசித்தவளுக்கு ‘ஜீவாவின் முகம் வந்து போனது.
கூடவே ஓர் சின்ன புன்னகையும் சிறு துளி நீரும் ஒருசேர அவள் முகத்தில் பிரதிபலித்தன.
அந்த அறையை மூடும் எண்ணத்தை விடுத்தவள் வெளியே கிடந்த தன் துணிகளை எல்லாம் கொண்டு அங்கிருந்த வாட்ரூபில் அடுக்கினாள்.
24