You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 25

Quote

25

ஜீவிதா வீட்டைப் பூட்டிக் கொண்டிருந்தாள். அதேநேரம் ஜீவா தன் அம்மாவிடம், “கிளம்பறேன்  மா... மாத்திரை எல்லாம் மறக்காம போடுங்க... நல்ல ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி விட்டு வாயிலைக் கடந்தான்.

இருவரும் எத்தனை மணிக்கு கிளம்புகிறோம் என்று குறுந்தகவலைப் பரிமாறிக் கொண்ட பின்னே தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தார்கள்.

 மின்தூக்கி முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள, “ம்மா எப்படி இருக்காங்க” என்று கேட்டபடி ஜீவிதான் பொத்தனை அழுத்தினாள். 

“ஒன்னும் பிரச்னை இல்ல... இப்போதைக்கு சித்தி கூட இருக்காங்க... கூடிய சீக்கிரம் வேலைக்கு ஆள் யாராச்சும் போடணும்” என்றவன் மேலும், “அது சரி... நீ எப்படி இருக்க நல்லா தூங்குனியா?” என்று கேள்வியில் அவள் கண்களில் மின்னல் வெட்டியது.

“நல்ல்ல்ல்லா தூங்குனேன்... அப்புறம் என் டிரஸஸ் எல்லாம் எடுத்து பெட்ரூம்ல இருக்க என் வாட்ரூப்ல அடுக்கிட்டேன்” என்று சொன்னதைக் கேட்டு அவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

“நிஜமாவா?”

“நிஜமா” என்றவள் சொல்லும் போது அவள் முகத்தில் விரிந்த புன்னகையை ரசனையுடன் பார்த்தவன்,

“நீ இப்படியே சிரிச்சுட்டே இருக்கணும் ஜீவி” என்றான்.

“ஓ இருக்கலாமே” என்று அதே சிரிப்புடன் தலையசைக்கும் போது மின்தூக்கி வந்து நிற்க, இருவரும் உள்ளே சென்று நின்றனர்.

தரைத்தளப் பொத்தானை அழுத்தியவள் கதவு மூடிக் கொண்டதுமே அவனை அணைத்துக் கொண்டாள்.

 “ஏய்... யாராவது வர போறாங்க” என்று பதறினாலும் அவள் தொடுகையில் அவன் உடலும் மனமும் கிறங்கியது.

அப்போது அவள், “தேங்க்ஸ்” என்று காற்றோடு அவன் காதில் பேச அவன் உடல் சிலிர்த்தது. அவனும் அவள் காதருகே நெருங்கி,   

“நீ செஞ்சதுக்கு எல்லாம் நான் தேங்க்ஸ் சொல்லணும்னா கணக்கில்லாம சொல்லணும்” என்று சொன்ன நொடி அவள் தன் முகத்தை நேராக காட்டி, “சொல்லு” என்றாள்.

அவளின் அந்த பார்வை வார்த்தைகளை விழையவில்லை. அவனிடம் விவகாரமாக ஒரு வேண்டுதலை வைக்க அதனை உணர்ந்தவன்,

“யாராவது வர போறாங்க” என்று  சொல்லி முடிக்கும் போது போதே மூன்றாவது தளத்தில் கதவு திறந்தது. அந்த நொடியே இதயம் படபடக்க அவளை விட்டு அவன் விலகி நின்றான்.

அப்போது அந்த தளத்தில் ஏறிய லீலா, “குட் மார்னிங் சார்” என்று புன்னகை செய்ய அவனுடைய இதயம் இன்னும் அதே வேகத்தில் அடித்து கொண்டிருந்தது.

தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டவன், “குட் மார்னிங் மா” என்றான்.

லீலா திரும்பி ஜீவியிடமும், “அக்கா” என்று பேச அவள் எந்தப் பதிலுரையும் தரவில்லை. 

மின்தூக்கி நின்றதுமே வெளியே வந்த ஜீவி அவனிடம் ஏதோ செய்கை செய்ய, அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

அந்த நொடியே கோபித்துக் கொண்டவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.

என்ன செய்வதென்று புரியாமல் ஜீவா குழம்ப அப்போது லீலா, “அக்கா என் மேல கோச்சுக்கிட்டாங்க போல” என்று வருத்தப்பட்டாள்.    

“அப்படி எல்லாம் இருக்காது” என்றவன் விழிகள் ஜீவி செல்லும் வழியைப் பார்த்தபடி,

“நீ முன்னாடி போ... எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்” என்றான்.

“இன்னைக்கு நீங்க ஸ்கூலுக்கு வருவீங்க இல்ல சார்... நீங்க இல்லாம ஒரே போர்” என்று லீலா சொல்ல,

“அதெல்லாம் கண்டிப்பா வருவேன்... நீ போ” என்றவன் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றான்.

அங்கே ஜீவிதா தன் பைக்கில் அமர்ந்திருக்க அவள் முன்னே சென்று நின்றவன், “என் ஸ்டூண்டட் முன்னாடி என் மானம் போயிருக்கும்” என்று சொல்ல,

“அதான் ஒன்னும் நடக்கல இல்ல... நீங்களும் ஒன்னும் கொடுக்கல” என்றவள் உதட்டைப் பிதுக்கினாள்.

அவளை கூர்ந்து பார்த்தவன்,  “கொடுக்க கூடாதுனு இல்ல... கொடுக்க முடியாத சூழ்நிலை” என,

“அப்போ சாயந்திரம் ஸ்கூல் முடிச்சுட்டு மாடிக்கு வாங்க நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள்.

“அந்த மாணிக்கம் பார்த்தானா திரும்பவும் எங்க அம்மாகிட்ட போட்டு கொடுத்திருவான்” என்ற ஜீவா பதற்றமாகக் கூற அவள் சாதாரணமாக,

“சொன்னா நல்லதுதானே... நமக்கு வேலை மிச்சம்” என்றாள்.

“நீ என்னை நல்லா வம்புல மாட்டிவிட பார்க்குறடி”

“எது டீ... யா?”  

“அதிகாரமாத்தான் சொல்ல கூடாது... ஆசையா சொல்லலாம் இல்ல?” என்று அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு வெட்கப் புன்னகை பூத்தது.

அந்த நாணத்தை மறைக்கக் குனிந்து வண்டியில் சாவியை நுழைப்பது போல, “வழி விடு ஜீவா... நான் வண்டியை எடுக்கணும்” என, அவன் அசையாமல் நின்றான்.

“ஜீவா என்ன?” என்றவள் நிமிரவும் அவள் கன்னத்தை அவன் வசமாகப் பிடித்துக் கொண்டான். அவள் திகைப்புடன் நோக்கும் போது அவன் இதழ்கள் அவள் முகம் முழுக்க பட்டும் படாமல் பதிந்தன.

அத்தனை நேரமும் அவனை விட்டு விலக முடியாமல் காந்தமாக ஒட்டி கொண்டிருந்த அவள் கண்களைப் பார்த்தவன், “இந்த தேங்க்ஸ் போதுமா” என்று கேட்க அவளால் பதில் பேச முடியவில்லை.

அதன் பின் அவனாகவே, “சரி ஈவினிங் மீட் பண்ணுவோம்” என்று விட்டு திரும்பி நடந்தான். அந்த மயக்க நிலையிலிருந்து மெல்ல மீண்டாலும் அந்த உணர்விலிருந்த மீள முடியவில்லை.

அவள் உடல் பைக்கில் பயணித்தாலும் அவள் மனம் காற்றில் பறந்தது. காதல் தரும் அனுபவத்தை உள்ளார்ந்து ரசித்தது.

நடந்த அத்தனையும் வாகன நிறுத்ததினுள் உள்ள தூணுக்கு பின்னே நின்று பார்த்திருந்த மாணிக்கம்,  ‘ச்சே ச்சே  இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க... இதுல இந்த ஜீவாவை போய் ரொம்ப நல்லவன்னு வேற நம்பிட்டிருந்தேன்’ என்று அருவருப்பாக உதட்டை சுழித்து கொண்டார்.

அத்துடன் விடாமல் செல்வியிடம் போய் அத்தனையும் ஒப்புவிக்க, அவரால் நம்பவே முடியவில்லை. தன் மகன் இப்படி எல்லாம் செய்வானா என்று குழம்பிக் கொண்டிருந்த நிலையில் மாணிக்கம் தொடர்ந்து ஜீவிதாவின் முன்கதை சுருக்கத்தை எல்லாம் சொல்லி தன்னால் முடிந்தளவு அவர்கள் காதலில் மண்ணள்ளிப் போட்டார்.

இதை எல்லாம் யோசித்துப் பயந்த செல்வி, மகனுக்கு உடனடியாகக் கல்யாணம் செய்துவிடுவதுதான் சரி என்று நினைத்தார். ஆதலால் சீதாவின் மூலமாகப்  பெண் வீட்டாரிடம் பேசி, அவர்களை அன்றே நேரில் வரும்படி சொன்னார்.  

அதேநேரம் அலுவலகத்திற்குச் சென்ற ஜீவிதாவிற்கு  வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.

 எப்போதும் போல அவள் தன் மடிக்கணினியைத் திறந்து வேலை செய்து கொண்டிருக்க, உஷாராணி அவளைத் தன் அறைக்கு அழைத்தார்.

 அங்கே ராஜசேகரும் உள்ளே நின்றிருக்க, ஏதோ சரியில்லை என்று அவளுக்குப் பட்டது. என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே,

“குட் மார்னிங் மேடம்... குட் மார்னிங் சார்” என்றாள்.

அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்த உஷா தன் கையில் வைத்திருந்த நாளிதழை அவளிடம் நீட்ட, அவற்றை வாங்கி படித்தவள் முகத்தில் பேரதிர்ச்சி.

“மேடம்” என்றாள்.

“அந்த நியூஸ் பேப்பர்ல குறிப்பிட்டு இருக்க பொண்ணு” என்று அவர் கேட்க,

அவள் தயக்கத்துடன் ஆமோதித்துவிட்டு, “ஆனா” என்று விளக்க முற்படுவதற்குள்,

“உனக்கு இனிமே இந்த ஆபிஸ்ல வேலை கிடையாது” என்று விட உஷா அந்த கணமே ராஜசேகரிடம்,

“ரெசிக்னேஷன் வாங்கிட்டு அனுப்பிவிடுங்க” என, ஜீவிதாவிற்கு கோபம் மூண்டது.

“வாட் தி ஹெல்” என்று அவள் சீறிவிட,

“ஜீவிதா மரியாதை” என்று ராஜசேகர் அதட்டினார். ஆனால் அதே கோபத்துடன் அவர்கள் இருவரையும் மையமாகப் பார்த்து,

“இத்தனை நாளில் என் வேலைல ஏதாவது நான் தப்பு செஞ்சிருக்கனா... இல்ல அப்படி செஞ்சிருக்கனு சொல்லுங்க... இப்பவே நான் என் வேலையை விட்டு போறேன்” என்றாள்.

அதற்கு உஷா, “உன் பாஸ்ட் பத்தி சொல்லாம மறைச்சது தப்பு இல்லையா?” என்றார். 

“நீங்களே சொல்லிட்டீங்களே அது என் பாஸ்டனு... அப்புறம் எதுக்கு அது”

“இப்பவும் நீ டிரக் அடிக்ட் இல்லன்னு யாருக்கு தெரியும்... நாளைக்கு நீ ஏதாவது எடாகுடமா பண்ணி வைச்சா அப்புறம் அதுக்கு யார் பதில் சொல்றது... கம்பெனி ரெப்யூட்டேஷன்தான் பாதிக்கும்... அந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் என்னால எடுக்க முடியாது” என்று கண்டிப்பாகப் பேச,

“மேடம்.. நான் ட்ரக் அடிகிட்டா இருந்தேன்... உண்மைதான்... ஆனா இப்போ கிடையாது” என்று விளக்கிய போதும் அவர் கேட்கவில்லை.

 “உங்களுக்கு நம்பிக்கை இல்லனா... நான் மெடிக்கல் டெஸ்ட் எடுத்து ப்ரூப்... பண்றேன்” என்றவள் சொல்ல,

“அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்ல... நீ ரெசிக்னேஷன் எழுதி கொடுத்துட்டா போ... இல்ல நாங்களா டிஸ்மிஸ் பண்ண வேண்டியிருக்கும்” என்று உஷா தீர்க்கமாக உரைக்க ஜீவிதாவின் பொறுமை கரைந்து போனது.

“டூ இட்... அன் டெப்ன்ட்லி யூ ல் ரெக்ரெட் பார் திஸ் டெசிஷன்” என்றவள் தன் கழுத்திலிருந்து ஐடி கார்ட்டை தூக்கி விசிறி எரிந்து விட்டுச் செல்ல, இருவரின் முகமும் இருளடர்ந்து போனது.

அவள் தன் பையை மூடி எடுத்துக் கொண்டு வெளியே வர, “என்ன... உன்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்களா” என்று வழியில் நின்ற ராஜன் கேலியாக கேட்டான். 

இருந்த கடுப்பிற்கு அவனை அடித்துவிடலாம் என்று அவள் திரும்பினாள். அவனோ தொடர்ந்து, “உனக்குத் தெரியுமா? நான்தான் அந்த பேப்பரை மேடம் கிட்ட கொடுத்தேன்” என்று வாக்குமூலம் கொடுக்க, அவள் அதிர்ச்சியுடன் நின்றுவிட்டாள்.

“ஆபிஸ் டீடைல்ஸ உன் அட்ரஸ் பார்த்தேன்... அப்பதான் அந்த அபார்ட்மென்ட் பெயரை எங்கேயோ பார்த்தோம்னு ஞாபகம் வந்துச்சு... இன்டர்நெட்ல தேடுன இதுதான் மேல வந்தது... கூடவே உன்னை பத்தின மொத்த விவரமும்” என்றவன் சொன்னதை நின்று கேட்டவள் பல்லைக் கடித்துக் கொண்டு,

“ஓ அந்த டிடக்டிவ் வேலையைப் பார்த்தவன் நீதானா” என,

“ஆமா அது நானேதான்” என்று காலரை தூக்கிவிட்டு கொண்டான். அவள் நிதானமாக, “இது மூலமா நீ எனக்கு ஒரு நல்லது செஞ்சிருக்க” என, அவன் கேள்வியாகப் பார்த்தான்.

“இங்க வேலை பார்க்குற ஒரே காரணத்தால நான் ஒரு விஷயத்தைச் செய்யவே முடியாம இருந்துச்சு... இப்போ எனக்கு வேலையே போயிடுச்சு... ஸோ அந்தக் காரியத்தைச் சுதந்திரமா நான் செய்யலாம் இல்ல” என, அவள் என்ன காரியத்தைச் சொல்கிறாள் என்று யூகிப்பதற்குள் அவள் கரம் அவன் கன்னத்தில் இடியாக இறங்கியது.

அந்த அடி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள் அவள் மின்தூக்கியில் இறங்கியிருந்தாள்.

அவளுக்கு உள்ளம் குமுறியது. உடைந்து அழுதுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பைக்கை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

சோபாவில் வந்து சரிந்தவளுக்கு ஜீவாவிடம் இதெல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்தது. செல்பேசியை எடுத்தவள் அவன் வகுப்பில் இருப்பான், தொல்லை செய்ய வேண்டாமென்று மீண்டும் படுத்துக் கொண்டாள்.

இனி வேறு வேலையை எப்படித் தேடுவது. அப்படியே கிடைத்தாலும் மீண்டும் இதே போன்ற பிரச்சினைகள் வந்து வேலை போய்விட்டால்...

இப்படியாக யோசனைகள் தாறுமாறாக அவள் மூளையில் ஓடின.

எப்படி யோசித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. பசி எல்லாம் மறந்து அப்படியே அவள் படுத்துக் கிடக்க, படபடவென்று கதவு தட்டும் ஓசை.

‘யாரு பெல் அடிக்காம கதவை தட்டுறது’ என்று யோசித்துக் கொண்டே எழுந்து கதவைத் திறக்க வாயிலில் செல்வி நின்றிருந்தார்.

அவள் வீட்டு கதவு பூட்டப்படவில்லை என்பதைக் கவனித்தவர் இன்றே இதற்கு ஒரு முடிவுகட்டிவிட வேண்டுமென்று நினைத்தார்.

இது எதுவும் அறியாத ஜீவிதா, “வாங்க மா... உள்ளே வாங்க” என்று கதவைத் திறந்துவிட,

“தூ... உன் வீட்டுக்குள்ள நான் வரணுமாடி” என்று இழிவாக ஆரம்பிக்க, அவள் விக்கித்து நின்றாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.  

அவர் தொடர்ந்து, “எவனாவது வாட்டசாட்டமான ஆம்பளை கிடப்பான் அவனை மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு காத்திட்டு இருப்பீங்களாடி நீங்க எல்லாம்” என்று கன்னாபின்னாவென்று பேசிக் கொண்டே போனார்.

ஜீவி பொறுமையாகப் புரிய வைக்க நினைத்தாள். ஆனால் அவர் கேட்கவே இல்லை. ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல்,

“நீங்க ரொம்ப தப்பா பேசிட்டு இருக்கீங்க” என்று கை நீட்டி எச்சரிக்க அதற்குள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்ட அக்கம்பக்கத்தினர்,

“என்ன தப்பா பேசிட்டாங்க... எல்லாம் உன் இலட்சணத்தைதான் சொல்றாங்க” என்று செல்விக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

 ஒட்டுமொத்தமாக எல்லோரும் அவளைத் தாக்க, அவர்களுக்கு நிகராக நின்று அவளால் சண்டை போட முடியவில்லை. ஏற்கனவே வேலை போய்விட்டதில் நொந்து போயிருந்தவளுக்கு இது இன்னும் வேதனையில் ஆழ்த்தியது.  

அதற்கு மேல் அவர்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்க முடியாமல் கதவை மூடிவிட்டாள். மூடிய பிறகும் அவர்களின் வசைகள் தொடர்ந்து கேட்க, காதுகளை அழுத்தமாக மூடிக் கொண்டு வந்து உள்ளே அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு யார் குரலும் கேட்கவில்லை. ஆழ்ந்த அமைதி நிலவியது.

எழுந்து வந்தவள் செல்பேசி எடுத்து இம்முறை அவனிடம் பேசியே ஆக வேண்டுமென்று ஜீவாவுக்கு அழைத்தாள். தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தாள். அவன் எடுக்கவே இல்லை.

“ஜீவா போனை எடு... போனை எடு ஜீவா” என்று புலம்பிக் கொண்டிருந்த சமயத்தில் இடையில் வந்த வேறொரு அழைப்பு அவள் கைப்பட்டு தவறுதலாக ஏற்கப்பட்டது. 

“சிஸ்” என்றான் மகேஷ். அவன் குரலை கேட்டதும். அவளுக்கு ஐயோ என்றாகிவிட்டது.

“என்னடா பிரச்னை உனக்கு... ஏன்டா போன் பண்ணி பண்ணி என் உயிரை எடுக்குற... போனை வய்யுடா” என்று கத்தினாள்.

“நாளைக்குதான் அம்மா அப்பா கல்யாண நாள்... நீங்க வருவீங்கன்னு கார் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அதன் பின் ஜீவா அழைப்பான் என்று அந்த செல்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு நிலைக்கு மேல் அப்படியே அயர்ந்து தரையில் படுத்து விட்டாள்.

அதேநேரம் வீட்டிற்கு வந்து சேர்ந்த ஜீவா, முகப்பறைகளில் கூட்டமாக அமர்ந்திருந்த மனிதர்களைக் குழப்பத்துடன் பார்த்தான்.

எங்கேயோ பார்த்திருக்கிறான் என்று தெரிந்ததே ஒழிய யாரென்று சரியாக நினைவுக்கு வரவில்லை. 

அப்போது செல்வி, “இவன்தான் என் பையன் ஜீவா” என்று அறிமுகம் செய்ய,

“யாரும்மா” என்று வினவினான். 

“நம்ம சொந்த காரங்கதான்... நீ போய் டிரஸ் மாத்திட்டு வா” என்றவர் குரலைத் தாழ்த்தி, “நல்ல சட்டை பேண்டா போட்டுக்கோ” என,

“எதுக்கு?’ என்றான்.  

“இதெல்லாம் ஒரு கேள்வியாடா... போட்டுட்டு வா” என்றவர் அறைக்குள் அமர்ந்திருந்த சித்ராவிடம்,

“நீ வெளியே வா... தம்பி ட்ரிஸ் மாத்தணும்” என அவள் வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். அவளுக்குக் கூட்டம் என்றால் அறவே பிடிக்காது.

“அக்கா இருக்கட்டும் விடுங்க... நான் சட்டை மட்டும் மாத்திட்டு வரேன்” என்றவன் பீரோவை திறந்து சிவப்பு சட்டை ஒன்றை எடுத்து அணியும் போது,

“ஜீவா ஜீவா பாட்டு போடுறியா” என்று சித்ரா கெஞ்சி கேட்டாள்.

அப்போதுதான் அவனுக்குத் தன் செல்பேசியின் நினைவு வந்தது. ‘ஸ்கூலயே வைசுட்டோமா’ என்று பையைத் துழாவிய போதுதான் அது அடியில் இருப்பதைக் கண்டான்.

ஜீவிதாவிடமிருந்து நிறைய அழைப்புகள் வந்ததை பாரத்துப் பதற்றமாகி அவன் திருப்பிக் கூப்பிடும் போது, செல்வி மீண்டும் அறைக்குள் வந்து, “மாத்திட்டியா?” என்று வினவ,

“மாத்திட்டேன்மா” என்றதுமே அவர் மேலும் கீழுமாகப் பார்த்து,

“இது நல்லாவே இல்ல... இதை போடு” என்று உள்ளிருந்து வேறொரு விலையுயர்ந்த சட்டையை எடுத்துக் கொடுத்தார்.

“எதுக்கு இவ்வளவு அலப்பறை பண்றீங்க... முதல யார் அவங்க அதை சொல்லுங்க” என்று கேட்க,

“அதான் ஏற்கனவே சொன்னேனே உங்க மாமியோட சொந்தகாரங்க... அவங்க உன்னை நேர்ல பார்த்துட்டு... அப்படியே ஜாதகம் வாங்கிட்டு போலாம்னு வந்திருக்காங்க” என்றதும் அவன் சீற்றத்துடன்,

“யாரை கேட்டு நீங்க இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க... நான் வரமாட்டேன்”  என்றான்.

“நீதானே ஹாஸ்பெட்டில கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட”

“நான் இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லல”

“அப்புறம்... வேற எந்த பொண்ணு... அந்த பக்கத்து வீட்டு பொண்ணயா?”

அந்த கேள்வியில் அவன் அதிர, “இந்த கர்மத்தை எல்லாம் பார்த்து தொலைக்குறதுக்கு அன்னைக்கே நான் நெஞ்சுவலி வந்து செத்து போயிருக்கலாம்” என்றார்.

“என்னம்மா பேசுறீங்க?”

“நீ செஞ்ச காரியத்துக்கு வேற எப்படி பேச சொல்ற” என்றவர் மகனிடம் எகிறியது எல்லாம் அந்த பக்கம் ஜீவிதாவிற்கு கேட்டது.

அவளுக்கு தாறுமாறாக கோபமேறவும், தலையைக் கொண்டையிட்டுக் கொண்டவள் நேராக ஜீவாவின் வீட்டிற்கு நடந்தாள்.

மறுபுறம் செல்வி ஜீவாவை மிரட்டி கொண்டிருக்க, ஏதோ தடால் புடால் என்று வெளியே உருளும் சத்தம் கேட்டது.

அப்போது அவர்கள் வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்த ஜீவிதா, உள்ளே வந்ததுமே மேஜை மீதிருந்த பழ தட்டுக்களை எல்லாம் தள்ளிவிட்டாள்.

 “யாரும்மா நீ... வந்து தட்டு எல்லாம் தள்ளிவிடுற” என்று அங்கிருந்தவர்கள்  எழுந்து நின்று அவளை முறைத்தனர். 

“யாரா... நான்தான ஜீவாவை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு” என்று அழுத்தமாகச் சொல்ல அவர்கள் ஒன்றும் புரியாமல் நின்றனர்.

அப்போது செல்வி வருவதை பார்த்த அவர் உறவினர்கள், “என்னங்க இந்த பொண்ணு ஏதேதோ சொல்லுது” என்று கேட்க அவருக்கு கோபம் மூண்டது,

“நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க... அந்த பொண்ணு ஒரு அரை பைத்தியம்... பக்கத்து வீட்டுல இருக்கு” என்று  சொல்ல,

“எது நான் அரைபைத்தியமா?” என்று ஜீவிதா சீறினாள். ஜீவா குழம்பி நின்றான். அவனுக்கு என்ன நடந்தது, நடக்கிறது என்று கிரகித்துக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது.

அந்த சமயம் பார்த்து செல்வி நெஞ்சைப் பிடித்துச் சாயப் போக,

 “ம்மா ம்ம்மா... ம்ம்மா என்னம்மா பண்ணுது... ம்மா டாக்டருக்கு போன் பண்ணட்டுமா?” என்று பதறி துடித்தபடி அவரை தாங்கி பிடித்துக் கொண்டான் ஜீவா.

அப்போது அவர், “நீ முதல அவளை நம்ம வீட்டை விட்டு வெளியே போ சொல்லு” என அவன்,

“ஜீவிதா... போ” என்றான்.

“அவங்களை நம்பாதே... எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணி உனக்கு யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண ப்ளான் பண்றாங்க” என்ற அவள் குற்றச்சாட்டில் அதிர்ச்சியும் மறுபுறம் சீற்றமுமாகி,

“என்ன நீ... எங்க அம்மாவை பார்த்து இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க” என்று வினவ,

“பின்ன அவங்க பண்றதுக்கு பேர் என்ன” என்றவள் அழுத்தமாகச் சொன்னது அவன் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.  

“பைத்தியம் மாதிரி பண்ணி பிரச்னையை பெருசாக்கிட்டு இப்போ எங்க அம்மாவை குத்தம் சொல்லிட்டு இருக்க... அவங்களே ஹார்ட் பேஷன்ட்... தேவையில்லாம இன்னும் இன்னும் ஏதாவது பேசி அவங்க டென்ஷன் ஏத்தாத... போ” என்றவன் படபடவென்று வெடிக்க,

“உன் கண்ணுக்கும் நான் இப்போ பைத்தியமா தெரியுறேனா ஜீவா” என்றவள் வருத்தமாக கேட்க,

“ஜீவா என்னால முடியல” என்று செல்வி தவிக்க,

“நல்லா நடிக்குறாங்க உங்க அம்மா” என்று ஜீவிதாவின் வார்த்தைகள் அவனை வெறி கொள்ள செய்தது.   

 “முதல போடி வெளியே... போடி” என்று குரலை உயர்த்தியதில் அவள் நடுங்கிவிட்டாள்.

“சரி... போறேன்... மொத்தமா போயிடுறேன்... திரும்பி வர மாட்டேன்.... வரவே மாட்டேன்” என்றவள் வேதனையுடன் தன் வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்து கொண்டாள்.

கண்ணீர் உறைந்த நிலையில் பால்கனிக்கு சென்று நிற்க, அன்று நடந்து ஒவ்வொன்றும் அவள் கண்முன்னே காட்சிகளாகத் தோன்றியது.

அத்தனை வழிகளிலும் இறுதியாக ஜீவாவின் ‘போ’ என்ற வார்த்தை மட்டுமே அதிக வலியைத் தந்தது. உயிர் போகுமளவுக்காய் வலி. உயிரே மாய்த்துக் கொள்ளுமளவுக்காய் வலி.  

 இனி வாழ்வதே வீண் என்ற உணர்வு உண்டானது. இதற்கு மேல் எதற்காக யாருக்காக உயிர் வாழ வேண்டும் என்ற கேள்வி வந்து முன்னே நின்றது.

அந்தக் கேள்வி பூதாகரமாக வளர்ந்து கொண்டே போனது. தன் உயிரைப் பிடித்து வைத்துக் கொள்வதற்கு என்று எந்த நோக்கமும் தனிப்பட்ட ஆசையும் அவளுக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.

அந்த ஒரு கணம்... அவள் அந்த பால்கனியின் கீழே குனிந்து பார்த்தாள். குதித்துவிட நினைத்தாள்.

சுவரின் மீது ஏறப் போகும் போது ஓர் அழைப்பு மணிச் சத்தம்.   

‘இல்ல குதிச்சுடணும்’ என்று கண்களை மூடிக் கொண்டு மீண்டும் ஏற முயல, தொடர்ந்து அந்த அழைப்பு மணிச் சத்தம் கேட்டது. கேட்டுக் கொண்டே இருந்தது.

ஜீவாவாக இருக்குமோ என்று ஒரு நொடி தோன்ற, அவள் பின்வாங்கினாள்.

அவள் சென்று கதவைத் திறக்க அங்கே ஜீவா இல்லை. மகேஷ் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தாலும் ஒரு நொடி தன் வாழ்வில் பிடிப்பே இல்லை என்ற எண்ணம் பொய்யென்று தோன்றியது.

‘போ போ’ என்று எத்தனை முறை துரத்தினாலும் அவன் தனக்காக வந்து நிற்கிறான் என்று நினைத்துக் கொண்டவள்,

“சிஸ்” என்றவன் பேச எத்தனிப்பதற்குள்,

“இப்போ என்ன... நான் உன் கூட திருச்சிக்கு வரனும்... அதானே... போலாம்... எனக்கு ஒரு டென் மினிட்ஸ் டைம் கொடு” என்று விட்டு உள்ளே சென்று கிளம்பினாள். அவனுக்கு  ஒன்றுமே புரியவில்லை.

கடைசி முயற்சியாக அவளிடம் நேரில் பேசலாம் என்று எண்ணித்தான் அந்தக் குடியிருப்பின்  காவலாளியிடம் குரங்கு வித்தை எல்லாம் காட்டி தப்பித்து ஓடி வந்தான்.

ஆனால் அவன் எதுவும் பேசுவதற்கு முன்பாகவே அவள் சம்மதித்துவிட்டாள் .  நம்ப முடியவில்லை என்றாலும் எப்படியோ அவள் வரச் சம்மதித்து விட்டதே போதுமென்று இருந்தது அவனுக்கு. 

akila.l, sumathi.mathi and eswari.skumar have reacted to this post.
akila.lsumathi.mathieswari.skumar
Quote

Very nice story! Read all the updates in one day. Waiting for the next update eagerly. When will you update mam?

Quote
Quote from Guest on February 5, 2025, 10:32 AM

Very nice story! Read all the updates in one day. Waiting for the next update eagerly. When will you update mam?

thank you so much for sharing ur views. i ll update tonignt

 

akila.l has reacted to this post.
akila.l
Quote

Super ma 

You cannot copy content