மோனிஷா நாவல்கள்
Thooramillai Vidiyal - Episode 5
Quote from monisha on November 18, 2024, 10:52 PM
- 5
பேருந்தில் வந்து இறங்கிய ஜீவிதா தன் குடியிருப்பிற்கு வரும் வழியிலிருந்த மளிகைக் கடையில் நின்று வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கூடவே சின்னதாக ஒரு மாவு பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டாள்.
இன்னும் இரண்டு நாளுக்கு இதை வைத்தே ஓட்டிவிடுவாள். அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுக்கு மாடி குடியிருப்பிற்குள் நுழையவும், சில கழுகுப் பார்வைகள் அவளை வட்டமிட்டன.
எப்படி அவளைத் துரத்துவது என்று மீட்டிங் போட்டெல்லாம் பேசினார்கள். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. அந்த கடுப்பில் அவள் போகும் போதும் வரும் போது பார்வையால் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜீவி மின்தூக்கியில் ஏறி பொத்தானை அழுத்த, சீருடையிலிருந்த பள்ளி மாணவி ஒருத்தி நிறுத்த சொல்லி கை காட்டிக் கொண்டே ஓடி வந்தாள்.
அவள் அந்த பெரிய பையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்த ஜீவிக்கு பாவமாக இருந்தது. உடனடியாக மின்தூக்கி கதவை நிறுத்த, அவள் உள்ளே நுழைந்தாள்.
“தேங்க்ஸ் க்கா” என்றவள் மூச்சு வாங்கிக் கொண்டே மூன்று என்ற பொத்தனை அழுத்திவிட்டு, “ஆமா நீங்க புதுசா க்கா... உங்களை பார்த்ததே இல்ல” என்று கேட்டாள்.
“புதுசு எல்லாம் இல்ல... ரொம்ப வருஷமா இந்த பிளாட்லதான் இருக்கேன்”
“நான் உங்களை பார்த்ததே இல்ல”
“கடந்த ஆறு மாசமா நான் வெளியூர்ல இருந்தேன்”
“ஓ... அப்பத்தான் நாங்க குடிவந்தோம்” என்று சொல்ல, மின்தூக்கி நின்றது.
“பை க்கா” என்று விட்டு அப்பெண் சென்றுவிட ஜீவிதாவிற்கு அந்தப் பெண்ணின் சீருடையைப் பார்க்க அவளது பள்ளிக் காலம் நினைவு வந்தது.
எஸ் ஆர் எஸ் பள்ளிக்கூடம். நடந்து செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது. இருப்பினும் அவள் நைனாம்மா அவளை தனியாக அனுப்பவே மாட்டார்.
தாத்தா உயிருடன் இருந்த வரை காலையும் மாலையும் அவர் துணைக்கு வந்தார். அவர் இறந்த பிறகு அவள் நைனாம்மா உடன் வருவார்.
“பக்கத்துல இருக்க ஸ்கூலுக்கு நீங்க கூட வந்தே ஆகணுமா?” என்று அவள் என்ன சொல்லியும் பிடிவாதமாக நடந்து வருவார்.
மின்தூக்கி ஐந்தாம் தளத்தில் நின்றது. ஜீவிதா இறங்கி தன் கதவின் பூட்டைத் திறந்தாள். ஓரளவு பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டாள்.
தொலைக்காட்சித் தவிர மற்ற எல்லா மின்சாதனப் பொருட்களுக்கும் இணைப்பு கொடுத்திருந்தாள். ஆனால் இப்போது வரை அவள் தன்னுடைய படுக்கையறையைத் திறக்கவில்லை. அதனைத் திறக்கும் துணிவு அவளுக்கு வரவில்லை.
ஜீவி வாங்கி வந்த பொருட்களைச் சமையலறையில் வைத்து விட்டு குளியலறை சென்று முழுவதுமாக தண்ணீரில் நனைந்தாள். உடலும் மனமும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.
அதன் பின் கருப்பு காபியைப் போட்டுக் குடித்துக் கொண்டே தன் மடிக்கணினியை இயக்கியபடி சோபாவில் அமர்ந்தாள். மின்னஞ்சல்களைத் திறந்து சோதித்தாள்.
பின்னர் வங்கிக் கணக்கைத் தபார்த்தாள். அதில் குறைந்தபட்சத் தொகை கூட இல்லை.
மிச்சம் மீதி இருந்ததையும் அவள் விமானப் பயணச்சீட்டிற்காகத் துடைத்து எடுத்துவிட்டதால் செலவுக்குக் கூட காசு இல்லை.
“இனிமே நான் உனக்கு ஒரு ரூபாய் கூட அனுப்ப மாட்டேன்... உங்க அப்பாவையும் அனுப்ப கூடாதுன்னு சொல்லிடுவேன்... அப்பத்தான் உனக்கு எங்களோட அருமை புரியும்” என்று அவள் அம்மா வீம்பாகக் கூற அவளும் சீற்றத்துடன்,
“எனக்கு உங்க பணமும் அவசியம் இல்ல... உங்க தேவையும் எனக்கு இல்ல... நானே வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்குவேன்” என்று அதிரடியாக சவால் விட்டுக் கிளம்பி இருந்தாள்.
ஏதோ கையில் மாற்றி வந்த இந்திய ரூபாய்கள்தான் இப்போதைக்குக் கொஞ்சம் கை கொடுக்கிறது.
எப்படியோ வேலையும் வாங்கிவிட்டாள். ஆனால் சம்பளம் வர ஒரு மாதம் ஆகுமே. அதுவரை எப்படி ஓட்டப் போகிறோம்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுடன் அவளுக்கு ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இதில் பராமரிப்பு தொகை தரவில்லை என்றால் இன்னும் சிக்கல்தான்.
என்ன நடந்தாலும் சரி. அம்மா அப்பாவிடம் பணம் கேட்கக் கூடாது என்று நினைத்தபடி சோபாவில் சாய்ந்தவள் பணச்சிக்கலைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள்.
. திடீரென்று அவள் உறக்கம் களைந்து விழிக்க, முழுவதுமாக அந்த அறை இருளில் ஆழ்ந்திருந்தது. எழுந்து மின்விளக்கைப் போட்டவள் நேரத்தைப் பார்க்க, இரவு மணி எட்டு.
இதற்குப் பிறகு உறக்கம் வராது. இவ்வளவு நேரம் உறங்கியதே பெரிய விஷயம். பசி எடுத்தது. சமையலறை சென்று தான் வாங்கிய வெங்காயம் தக்காளியை எண்ணெய்யில் வதக்கி சட்னி அரைத்தாள்.
அதன் பின் மாவைப் பாத்திரத்தில் கொட்டிக் கரைத்து மொறுமொறுவென்று தோசைகளை வார்த்தாள்.
நைனாம்மா அவளுக்குச் சமையல் வேலைகளை கற்றுக் கொடுத்திருந்தார். அரைத்தச் சட்னியைத் தொட்டு நாக்கில் வைக்கவும், இயல்பாகவே அவரின் நினைவுவந்தது.
“உன் வேலை நீதான் செஞ்சிக்கணும்... முடிஞ்ச வரை யாரையும் எதுக்காகவும் எதிர்பார்க்காத”நைனாம்மா குரல் ஒலித்தது.
தோசைகளை எடுத்துக் கொண்டு வந்து பால்கனி இருக்கையில் வந்து அமர்ந்த ஜீவி, எதிரே தன் செல்பேசியை நிறுத்தி வைத்து நெட்பிளிக்ஸில் தொடர் ஒன்றைப் பார்க்கத் துவங்கினாள்.
அவள் அதனைப் பார்த்தபடி உண்டு கொண்டிருக்க, குறுந்தகவல் ஒன்று எட்டிப் பார்த்தது.
அவள் முகம் மாறியது. இருப்பினும் அதனைத் தவிர்த்து விட்டு மீண்டும் தொடரில் கவனம் செலுத்த அடுத்தடுத்து இரண்டு மூன்று குறுந்தகவல்கள் வந்தன.
அவள் பொருட்படுத்தவில்லை. இறுதியாக அவள் செல்பேசி அலற, கடுப்பாகிவிட்டாள்.
அதனை எடுத்து, “ப்ளீஸ் டோன்ட் கால் மீ... டோன்ட் மெஸஜ் மீ” என்று கத்தத் துவங்க,
“ஐம் சாரி ஜீவி... ஐம் ஸோ சாரி... அன்னைக்கு நடந்தது இட்ஸ் எ மிஸ்டேக்” என்றான். அவளுக்கு எரிச்சல் மூண்டது.
“எது... என் தங்கச்சியை எங்கேஜ் பண்ணிட்டு என்னை கிஸ் பண்ணது... வெறும் மிஸ்டேக்கா?”
“தெரியல ஜீவி... ஆனா அந்த நிமிஷம்... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல”
“உங்களுக்கு ஒரு தம்பி இருந்து அவனை சவீ கிஸ் பண்ணிட்டு இதே மாதிரி காரணத்தை சொன்னா என்ன பண்ணுவீங்க... எப்படி பீல் பண்ணுவீங்க?”
“நான் செஞ்சது தப்பு இல்லன்னு நான் சொல்லல ஜீவி... ஆனா”
“உங்களுக்கு புரியாது... என் வாழ்க்கை புரியாது... என் பிரச்னை புரியாது... நான் என்ன மாதிரியான சூழ்நிலைல அங்கே வந்து தங்குனணும் கூட உங்களுக்கு தெரியாது” என்று பொங்க,
“எனக்குப் புரியும்... உன்னைப் பத்தி எல்லாமே சவீ என்கிட்ட சொன்னா” என்றான்.
“ஓ... நான் ஒரு டிரக் அடிக்ட்ணும் சொன்னாளா”
“நீ அதுல இருந்து எல்லாம் மீண்டு வந்துட்டன்னும் சொன்னா”
“மீண்டு வரல... தப்பிச்சு வந்தேன்... இப்பவும் என்னோட எமோஷன்ஸ் என்னால கன்டிரோல பண்ண முடியலனு நான் டிரக் எடுப்பேன்... மை லைப்... இட்ஸ் டோட்டலி ***ட் அப்” என்றாள்.
சர்வேஷிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
“நான் போனை வைச்சுடுறேன்?” என்று ஜீவி கூற,
“நான் சவீக்கு துரோகம் பண்ணனும்னு எல்லாம் நினைக்கல” என்றான்.
“அது உங்க தப்பு மட்டும் இல்ல... என் தப்பும் கூடதான்... நான் உங்க கூட அவ்வளவு நெருக்கமா பழகி இருக்கக் கூடாது”
“நோ... நோ... இதுல உன் தப்பு எதுவும் இல்ல” என்றான்.
“இது யாரோட தப்பா இருந்தாலும் இதுல பாதிக்கப்பட்டது என்னவோ சவீதானே... நீங்க என்கிட்ட பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சா கூட அவளால தாங்கிக்க முடியாது... அந்தளவு அவ உங்களை லவ் பண்றா” என்றவள் வருத்தத்துடன் சொல்ல,
“எனக்கு அதெல்லாம் நல்லா தெரியும் ஜீவி” என்றான்.
“தெரிஞ்சுதான்... கல்யாண டேட்டை கேன்சல் பண்ணீங்களா?”
“இப்போதைக்கு வேண்டாம்னு நினைச்சேன்”
“நீங்க செஞ்சது பெரிய தப்பு “
“கல்யாணம்கிறதே முட்டாள்தனம்னு சொன்ன நீயா இப்போ இப்படி பேசுற”
“நான் எங்க அம்மா அப்பா வாழ்க்கையை வைச்சு அப்படிச் சொன்னேன்... அதுக்காக உங்க வாழ்க்கையையும் அப்படி இருக்கணுமா என்ன?”
“அப்படினா உன் வாழ்க்கைலயும் அப்படிதான் இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லதானே” என்றதும் ஜீவி மௌனமானாள்.
“என்ன... சைலன்ட் ஆகிட்ட... பதில் சொல்லு”
“இப்ப வரைக்கும் எனக்கு யார் மேலயும் லவ் எல்லாம் வந்ததில்லை... அன்னைக்கு நீங்க என்னை கிஸ் பண்ணதை நான் அக்ஸ்பெக்ட் பண்ணது கூட இட்ஸ் ஜஸ்ட் ஆ மொமன்ட்... அவ்வளவுதான்”
“எனக்கு அது புரிஞ்சுது... ஆனா நீ இப்படி தனியா வாழ்றது உனக்கு நல்லது இல்ல... நீ உன் வாழ்க்கைக்கான ஒருத்தரை கண்டுப்பிடிக்கணும்... அதுதான் உனக்கும் உன் வாழ்க்கைக்கும் ஒரு பிடிப்பைத் தரும்” என்றான்.
“எனக்கு அப்படி எந்த பிடிப்பும் வேணாம்” என்றாள்.
“இந்த ஆட்டிட்டியூட்தான் உன்னுடைய எல்லா பிரச்னைக்கும் காரணம்”
“என் பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்... உங்க பிரச்னையை மட்டும் நீங்க பாருங்க”
“கோபம் படுறத விட்டுட்டு நான் சொன்னதைக் கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு” எனவும், அவள் சிந்தனை எங்கெங்கோ ஓடியது.
அவள் மௌனத்தில் இருக்கவும் சர்வேஷ் மேலும்,
“ப்ளீஸ்... திரும்பவும் அடிக்ட் ஆகிடாத” என்றான்.
அவனுடைய இந்த அக்கறைதான் அவன் நெருக்கத்தை தவிர்க்க முடியாமல் செய்தது. இப்போதும் அவன் தந்த முத்தத்தை அவள் காமத்தில் சேர்க்கவில்லை. அது ஓர் ஆழ் மன அன்பின் வெளிப்பாடு.
அவள் குடும்பத்திடம் உணராத அன்பு அவனிடம் கிடைத்ததால் கொஞ்சம் தடுமாறிவிட்டாள். அவள் அந்த யோசனையில் மௌனமாகிவிட, “ஜீவி”என்று சர்வேஷ் குரல் ஒலித்தது.
அவளுடைய சிந்தனை ஆபத்தான விதத்தில் செல்வதை உணர்ந்து சுதாரித்தவள்,
“இந்த மாதிரி சூழ்நிலைல நீங்க எனக்குக் கால் பண்றது சரி இல்ல... சவீக்கு மட்டும் இது தெரிஞ்சா பெரிய பிரச்னையாகும்... என் மேலதான் அவளோட வெறுப்பும் கோபமும் திரும்பும்...
அதனால்தான் சொல்றேன்... ப்ளீஸ்... எனக்கு இனிமே கால் பண்ணாதீங்க சர்வேஷ்... நான் போனை வைச்சுடுறேன்” என்று உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
அதன் பிறகு அந்த இரவு முழுக்க அவள் உறங்கவில்லை. கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தவள், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டும் என்று சர்வேஷ் சொன்னதை பற்றி தீவிரமாகச் சிந்தித்தாள்.
ஒரு வகையில் அவள் மனமும் அவன் கருத்துடன் ஒத்து போனது. அதுவும் காதல் என்ற போதை தன்னுடைய போதையை ஒரு வேளை மறக்கடிக்க உதவலாம் என்று தோன்றியது.