You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Tips for terrace garden - 3

Quote

குறிப்பு – 3

முந்தைய குறிப்பில் தேங்காய் நார் கழிவு(coco peat)  பற்றி விளக்கியிருந்தேன். ஏன் தேங்காய் நார் கழிவு உபயோகிக்க வேண்டும்? இந்த கேள்வி உங்களுக்கு அல்ல. எனக்குமே ஆரம்பித்தில் மாடி தோட்டம் வைக்க எண்ணிய போது தோன்றிய கேள்வி. அதற்கு பதில்...

தேங்காய் நார் கழிவு செடிகளின் வேருக்குள் எப்போதும் ஈரபதத்தை தக்க வைக்கும். மண்ணில் வைக்கும் செடிகளுக்கு தேவை படும் தண்ணீரை விட தேங்காய் நார் கழிவுக்கு தேவைப்படும் தண்ணீர் மிக மிக குறைவுதான். ஆனால் அதற்காக தேங்காய் நார் கழிவை மட்டும் வைத்து செடி வைக்க முடியாது.

அனுபவத்தின் அடிப்படையில் யாம் அறிந்தது 1:1:1:1 விகிதத்தில்  மண்,தேங்காய் நார் கழிவு, உரம்(compost),ஆற்று மணல் இவைகளை நன்கு கலந்து  growbag இல் இட்டு வளர்த்தால் நல்ல மகசூல் எடுக்கலாம். அதிலும் ஆரம்பத்தில் கீரை விதைகளை பயிருடுவதன் மூலம் மண் வளம் பெறும். ஆர்வம் இருப்பவர்கள் இது குறித்த வீடியோக்களை தேடி பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்.

You cannot copy content