மோனிஷா நாவல்கள்
Uruguthe Ullam Negizhuthe Nenjam - 11
Quote from monisha on February 5, 2021, 12:39 PMஅத்தியாயம் 11
எனை அன்பால்
நிறைத்த
நண்பனே!!
நட்பானவனே!!
ஏற்கயியலமோ
உனை காதலனாய்??
வாழந்திடக்கூடுமோ
நாம் தம்பதியராய்??
பதில் சொல்லவிருக்கும்
காலத்தின் மாற்றத்திற்காக
காத்துக்கொண்டிருக்கிறோம்
நீயும் நானும்…
"என்னை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமானு கேட்டா என்ன சொல்லுவ அம்ஸ்??" என இளாக் கேட்க,
"கண்டிப்பா இதை நீயா கேட்கலைனு தெரியுது. நீ என்னை தோழியா தவிற வேற மாதிரி பார்த்ததுக் கூடக் கிடையாது. எனக்கு உன்னை பத்தி தெரியும் இளா" என வேணிக் கூற,
மனதின் இறுக்கங்கள் இருந்த இடம் காணாமல் போக,
கண்ணில் ஒளிர்ந்த நிம்மதி பாவனையில், "அவ்ளோ நம்பிக்கையா அம்ஸ் என் மேல" என ஆவலாய் அவளை பார்த்துக் கேட்க,
அவனை இளகுவாக்கும் எண்ணத்தில், "எனக்கு தெரியும்டா நீ அதுக்குலாம் சரிப்பட்டு வர மாட்டேனு. லவ் பண்றதுகுலாம் ஒரு தைரியம் வேணும். அதெல்லாம் உனக்கு கிடையாது" என அவள் பழிப்பம் காட்ட,
தன் இருக்கையில் இருந்து எழுந்து அவள் மண்டையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தவன்," சீரியஸா பேசிட்டு இருக்கேன். நக்கல் பண்ணிட்டு திரியுற நீ" எனக் கூற,
அவன் குட்டியதில் ஆ வென அலறியவள், தன் தலையை தடவிக் கொண்டே "போடா கோவக்காய்... உண்மைய சொன்னா கசக்குதோ பாவக்காய்" என முகத்தை சுளித்தாளவள்.
அவளின் முகச் சுளித்தலில் வாய் விட்டு சிரித்தவன், "என்னோட மூட் ஸ்விங் ஈஸியா ஹேண்டில் செய்ற டெக்னிக் உனக்கு மட்டும் தான்டா தெரியுது அம்ஸ்" என மனதாரக் கூற,
மென்னகை புரிந்தவள், "சரி இப்ப சொல்லு. யாரு உன்னை அப்படி என் கிட்ட கேட்க சொன்னா?? யாராவது பெட் கட்டினாங்களா??" எனக் கேட்க,
"நான் நிஜமா தான் கேட்டேன் அம்ஸ். அதுக்கான காரணத்தை நான் சொல்றேன். அதுக்கு முன்னாடி நானா வந்து உன்கிட்ட அப்படி கேட்டா என்ன சொல்லுவ??" என வேணியைப் பார்த்துக் கேட்க,
குழப்பமாய் அவனைப் பார்த்த வேணி, "அதான் சொன்னேன்லடா. என்னிக்கும் நீ என்கிட்ட அப்படி கேட்க மாட்டனு எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு"
மனதில் படர்ந்த நிம்மதியின் சாரலில் அவளின் இருகைகளையும் பற்றியவன், "இது தான் வேணி இந்த ஒரு வாரமா என் மனதை அழுத்திய பிரச்சனை. எங்கே நம்ம ப்ரண்ட்ஷிப்பை நீ தப்பா நினைச்சிடுவியோ... வாழ்க்கைல என்னிக்காவது ப்ரண்டா இருக்கும் போதே நீ என்னை அப்படி நினைச்சவன் தானேனு நீ நினைச்சா என்னால தாங்க முடியாதுடா. அது நம்ம ப்ரண்ட்ஷிப்பை களங்கப்படுத்துற மாதிரி" என இளா தன் பேச்சை நிறுத்த,
"என்னடா உளர்ற?? ப்ரண்டா இருக்கும் போதே அப்படி நினைச்சவன் தானேனு நான் நினைப்பேனா?? அப்ப நாம லைப் லாங் ப்ரண்டா இருக்க மாட்டோமா?? என்னமோ நாம கல்யாணம் செய்துக்கப் போற மாதிரி பேசுற??" என குழம்பிப் போய் கேட்டாள் வேணி.
----
அங்கு வாணியிடம் தன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான் ஆஷிக்.
"வீட்டில எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க கேபி" என ஆஷிக் கூற,
"நல்ல விஷயம் தான?? அதுல என்ன குழப்பம்" என்று வாணி வினவ,
"என் வயசு என்ன?? வாழ்க்கைல செட்டில் ஆகணும் கேபி. அப்புறம் தான் மேரேஜ்னு முடிவு செஞ்சி வச்சிருந்தேன்" என்றவன் கூற,
தன் இரு கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தவள், "செட்டில் ஆகுறதுனா எப்படி?? காரு பங்களா பீச் ஹவுஸ் சொந்த லேண்ட்... இப்படியா?? அப்ப மாத வருமானம் மட்டுமே வச்சிக்கிறவன்லாம் கல்யாணம் செய்துக்கவே தகுதியில்லாதவங்களா??"
நான் சொல்றத நல்லாக் கேளு ஆஷிக், "உன் பொண்டாட்டிய காப்பாத்துற அளவுக்கு தான் நீ சம்பாத்திக்கிற. அந்தந்த வயசுல நடக்க வேண்டியது அப்பப்ப நடந்திடனும். இப்ப நீ மட்டும் தனியா வாழ்க்கைக்காக சேர்த்து வைக்குறதை கல்யாணம் முடிச்சி காதலோட கூடிய வாழ்க்கையோட இரண்டு பேருமா ஒருத்தருக்கொருதர் சப்போர்ட் செஞ்சி சம்பாதிக்கும் போது இன்னும் உற்சாகமா நீ செயல்படுவ. உன் வொய்ப் சம்பாதிக்கலனாலும் அவ உனக்கு கொடுக்குற மனப்பலம் அவ காதல் உனக்கு கொடுக்குற புத்துணர்ச்சி இது எல்லாமுமா சேர்ந்து கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறமும் நீ நினைச்சதை உன்னை அடைய வைக்கும்" எனத் தன் நீண்ட உரையை அவள் முடிக்க,
ஆச்சரியமாய் அவளை பார்தவன், "உன்னை இவ்ளோ நாளா குட்டிப் பொண்ணாவே பார்த்துட்டேன் கேபி. எவ்ளோ மெச்சூர்டு திங்கிங் உனக்குள்ள" என வியந்தான்.
"எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு கேபி. ஆனாலும் ஒரு ஆறு மாசமாவது கல்யாணத்தை தள்ளிப்போடனும் கேபி. ஆனா அம்மாகிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. அந்த பொண்ணு வீட்டுல அவங்களா ஆறு மாசம் கழிச்சி மேரேஜ்னு சொல்லனும். அதுக்கு உன் உதவி வேணும். அதுக்கு தான் உன்னை கூப்பிட்டேன்" - ஆஷிக்
"அதென்ன ஆறு மாசம் கேப்??" - வாணி
"என் மேரேஜ் செலவுக்கு நான் சேர்த்து வைக்க தான் கேபி. அதுவுமில்லாம அவ இப்ப தான் எம்ஏ படிக்கிறா... படிக்கிற பொண்ணை டிஸ்டர்ப் செய்ய மனசில்ல. நான் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டா அவங்க அப்பா அவளை வேற யாருக்காவது கட்டிக் கொடுத்திடுவாரு. அவளை விட்டுக் கொடுக்கவும் மனசில்ல. அந்த பொண்ணு போட்டோ பார்த்து இவ்ளோ டீடெயில் கலக்ட் செஞ்சி வச்சிருக்கேன் கேபி" என்றவன் கூற,
"ஹ்ம்ம் இதுல நான் என்ன செய்யனும்." என வாணிக் கேட்க,
"எனக்காக அந்தப் பொண்ணுக்கிட்ட பேசனும்." - ஆஷிக்
"அடப்பாவி ஒரு பேச்சுக்காக, உனக்காக பொண்ணுக்கிட்டயும் பேசுவேனு சொன்னா... அதேப்போல கேட்டு வந்து நிக்கிறியேடா" என வாணி மைண்ட்வாய்ஸில் பேச,
"என்ன எதுவும் பேசாம அமைதியா இருக்க?" என ஆஷிக் வாணியை உலுக்க,
"சரி. அந்த பொண்ணு பேரு என்ன?? என்னனு அந்தப் பொண்ணுக் கிட்ட பேசனும்" என்றவள் கேட்க,
"அவ பேரு ரஹானா. அந்தப் ப்ளானை நான் சொல்றேன்" என்றான் ஆஷிக்.
--
வேணியின் குழப்பமானக் கேள்விக்கு பதிலுரைத்தான் இளா.
"போன வாரம் உன் வீட்டிலருந்து உங்க அப்பா என்னை எங்க ஊருக்கு கூட்டிட்டு போனாங்கல. அப்ப உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்தாங்க. உன்னை எனக்கு கல்யாண்ம் செய்து வைக்குறதுப் பத்தி எங்கப்பாகிட்ட பேசினாங்க. எங்க அப்பாக்கும் உங்க அப்பாக்கும் இதுல ரொம்ப சந்தோசம்னு அவங்க பேச்சுலயே தெரிஞ்சுது. என்னை கேட்டாங்க... எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. உன்னோட விருப்பம் முதல்ல கேட்க சொல்லிட்டேன். நீ சொன்னதுப் போல தான்... உங்க அப்பாக்கு உடம்புக்கு எதுவும் வரதுக்கு முன்னாடி உனக்கு மேரேஜ் செய்து வைக்கனும்னு நினைக்கிறாங்க. அதை உன் கிட்ட சொல்ல உங்க அப்பாக்கு தைரியமில்லை. எப்படிப்பா உங்களால இப்படி கேட்க முடிஞ்சிதுனு நீ ஒரு வார்த்தைச் சொன்னாலும் அவர் மனசு நொந்து போய்டுவாரு அம்ஸ். அதனால அவர் என்னையவே நேரடியா உன்கிட்ட கேட்கச் சொல்லிட்டார். இன்னொன்னு இது உங்கப்பாவும் எங்கப்பாவும் சடண்ணா எடுத்த முடிவு மாதிரி தெரியலை. கிட்டதட்ட ஒரு வருஷமா அவங்க இதைப்பத்தி பேசிட்டு இருக்கிறதா தான் அவங்க பேச்சுல எனக்கு தோணுச்சு அம்ஸ்" என அனைத்தையும் விளக்கி முடித்து வேணியின் முகத்தை அவன் பார்க்க,
சிறு அதிர்ச்சி படர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் வேணி.
"என்ன அம்ஸ் ஷாக் ஆயிட்ட?? வாழ்க்கையில இப்படி ஒரு சிட்டுவேஷன் வரும்னு நினைச்சிக் கூட பார்த்தது இல்லைல. எனக்கும் எப்படி ஹேண்டில் செய்றதுனு தெரியலை அம்ஸ். ஒரு வாரமா மனசை அரிச்சிட்டு இருக்குற விஷயம். நம்மளை நினைச்சி நான் கறஞ்சிட்டு இருக்குற விஷயம் இது தான்" என இளா கூறி முடித்த வேளை,
அழைத்திருந்தாள் வேணி அவளின் தந்தையை அவளின் கைபேசியிலிருந்து.
ஸ்பீக்கரில் அதைப் போட்டவள், "அப்பா, இளா ஒரு வாரமா என்கிட்ட சரியாவே பேசலை. இளாவை இன்னிக்கு தான் நேர்ல பாத்தேன். நீங்க பேசினதுலாம் சொன்னான்பா" என இவள் கூறிக்கொண்டிருக்கும் போதே,
"அம்மும்மா அது வந்து" என அவளின் தந்தை இடையில் புக,
"இருங்கப்பா நான் முழுசா பேசி முடிச்சிடுறேன்" என்றுரைத்தவள்,
"என்கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாமேப்பா?? சின்ன வயசுலருந்து எனக்கு எது நல்லதுனு பார்த்து பார்த்து செஞ்சவர்ப்பா நீங்க. அப்பா கைகாமிக்கிற பையனைத் தான் கட்டிப்பேனு மனசுல வைராக்கியத்தோட வாழுறவப்பா நான். அப்படி இருக்கும் போது வாழ்க்கைல முதல் முதறையா ஒருத்தனை காமிச்சி கட்டிக்கிறியானு நீங்க கேட்டா நான் எப்படிப்பா வேண்டாம்னு சொல்லுவேன்"
இவளின் இவ்வார்த்தையில் இளாவிற்கு புரையேறி கண்களில் நீர் வர, தன்னருகே இருந்த நீரை அவன் பக்கம் நகர்த்தியவள்,
"நீங்க இந்த முடிவு எடுக்க எவ்ளோ யோசிச்சிருப்பீங்கனு தெரியும்ப்பா. என்னிக்குமே வாழ்க்கைல உங்க முடிவுக்கு நான் நோ சொன்னதில்லைப்பா. இதுக்கு மட்டும் எப்படி நான் நோ சொல்லிருப்பேன் நினைச்சீங்க. நட்பை களங்கப்படுத்திட்டீங்கனு சொல்லிடுவேனோனு பயந்தீங்களாப்பா. அந்த நட்பே நீங்க அங்கீகரிச்சதால தான் தொடர்ந்தேன்ப்பா. எனக்கு இந்த கல்யாணத்துல இளாவ திருமணம் செய்றதுல முழு சம்மதம். நீங்க இளாக்கிட்ட ஒரு தடவைக் கேட்டுக்கோங்க" என இளாவை நோக்கி இவள் கண் சிமிட்டிக்கூற,
"அடிப்பாவி என்னை ஏன் கோர்த்து விடுற" என இவன் வாய் அசைக்க,
"அப்பா, இளா பக்கத்துல தான் இருக்கான். கேட்டுக்கோங்க" என வேணி உரைக்க, அது வரை வேணியின் பேச்சில் அவள் தன் மீதுக் கொண்ட பாசத்தில் நம்பிக்கையில் மெய் மறந்து அதிர்ந்து நின்றவர், இளாவின் ஒப்புதல் கேட்கக் கூறிய கடைசி வார்த்தையில் தான் தன்னுணர்வு பெற்ற வேணியின் தந்தை,
"அதெல்லாம் இளா தம்பி அன்னிக்கே பெரியவங்க பார்த்து எது செஞ்சாலும் சரினு சொல்லிடுச்சுமா" எனக் கூறினார்.
"மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மும்மா. அப்பா மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்க நீ. அந்த நம்பிக்கைனால தான்டா இளாவ தேர்ந்தெடுத்தேன். இப்ப நண்பர்களா இருந்தாலும், திருமணம் உங்களை கண்டிப்பா ஆதர்ச தம்பதிகளா மாத்துங்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்குடா. இப்பவே இந்த சந்தோஷமான விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லி சீக்கிரமே நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்றேன்மா" எனக் குதூகலமாய் உரைத்து போனை வைத்தாரவர்.
வேணியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் இளா.
"என்ன இளா இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லையா??" என அவன் முகம் நோக்கி இயல்பாய் வேணிக் கேட்க,
"எப்படி அம்ஸ் உன்னால இவ்ளோ இயல்பா இருக்க முடியுது. இது லைப் லாங் கமிட்மெண்ட் அம்ஸ். நம்ம ப்ரண்ட்ஷிப்ங்கிற பாண்டை உடைச்சு காதலை உள்ள கொண்டு வரனும். முடியுமா??" என இளாக் கேட்க,
"ஏன் ப்ரண்ட்ஷிப் பாண்டை உடைக்கனும் இளா?? ஹஸ்பண்ட் அண்ட் வைப் முதல்ல நல்ல ப்ரண்ட்ஸ்ஸா தான் இருக்கனும். அவங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதெல்லாம் நமக்குள்ள ஏற்கனவே இருக்கே இளா. நமக்குள்ள இருக்க பாசம் அன்பு அதெல்லாம் காதலா மாறனும். காதல் அதெல்லாம் வாண்டட்டா வர வைக்க முடியாது இளா. அது தானா வாழ்க்கையின் போக்குல மனசுல மலரனும். அது கல்யாணம் செய்யும்ங்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு இளா" என வேணி கூறி முடிக்க,
சற்று முகம் தெளிந்திருந்த இளா, "உனக்கு ஓகேனா எனக்கு எந்த ப்ரச்சனையும் இல்ல அம்ஸ். வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு வாழ்வோம்" எனக் கூறி அவன் சிரிக்க,
"ஹப்பா இந்த ஒரு வாரத்துல இப்ப தான் சிரிச்சிருக்கப் போல" என அவனைப் பார்த்துக் கேட்க,
"ஹ்ம்ம் ஆமா. உன்னால தான் எல்லாமே" என மனதார நன்றியுரைத்தான் அவளுக்கு.
--
மதி தன் காதலை உரைத்ததும் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மஹா,
"என்னுடைய முடிவை இப்ப சொல்ல முடியாது மதி. சொல்ல முடியாத சூழ்நிலைக்கு என்னை தள்ளினது நீ தான் மதி" என்று மஹா உரைக்க,
குழப்பமாய் மதி அவளை நோக்க,
"அன்னிக்கு உன்னால அம்மாக்கிட்ட ப்ராமிஸ் பண்ணி கொடுத்தேன். எந்த ப்ரோபசல் வந்தாலும் அம்மாகிட்ட சொல்லுட்டு தான் டிசைட் செய்வேனு. அதை இன்னி வரை காப்பாத்திட்டு இருக்கேன் மதி" என மனதிலுள்ளதை அவனிடம் கூறியமுடியா தன்னிலையை எண்ணி வருத்தம் கொண்டு அவள் கூற,
"தப்பில்லை மஹா. இதெல்லாம் தனியா ஹேண்டில் செய்யக் கூடிய விஷயங்கள் கிடையாது. இந்த மாதிரி விஷயங்கள் முதல்ல நம்ம பேரண்ட்ஸ் கிட்ட தான் சொல்லனும்" என அவன் அறிவுரைக் கூற,
தன் தலையில் அடித்துக் கொண்ட மஹா, "ஏன்டா இப்படி லெக்சர் கொடுத்தே என்னைக் கொல்ற" என வாய் விட்டே புலம்ப,
"நான் வெயிட் செய்றேன் மஹா. நீ ஆன்டிக்கிட்ட பேசிட்டே எனக்கு பதில் சொல்லு" என்றவன் உரைக்க,
"நீ வெய்ட் செய்வ. என்னால வெய்ட் செய்ய முடியலையே" என மனதுக்குள் புலம்பிக் கொண்டாள் மஹா.
அவளின் பேச்சிலேயே தன்னை அவளுக்கு பிடித்திருப்பதை அறிந்துக் கொண்ட மதி, அவளின் பெற்றோரின் சம்மதத்துடன் அவள் தன் காதலை கூறுவது நல்லது என அமைதிக் காத்தான்.
அனைவரும் மேல் மாடியிலுள்ள ஃபுட் கோர்ட்டில் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்டப்பின் விடைப்பெற்றனர் ஃபோரம் மாலிலிருந்து.
ஃபோரம் மால் சந்திப்பிற்குப் பிறகு ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அந்த வாரயிறுதி நாளில் தங்களின் பெங்களூர் வீட்டில் அமர்ந்திருந்தனர் வேணி, வாணி மற்றும் மஹா.
அங்கிருந்த தன் மெத்தையில் அமர்ந்து எவ்வாறு ரஹானாவிடம் போனில் பேசவென மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.
"ஆபிஸ்ல ப்ராஜக்ட் வேலைக்கு கூட இப்டி நான் பயந்ததில்லைடா. என்னை இப்படி புலம்ப விட்டுட்டியேடா ஆஷிக்கு பையா. அந்தப் பொண்ணு மட்டும் என்னை ஏதாவது சொல்லி திட்டட்டும் உன்னை நேர்ல வந்து அதே சொல்லி திட்றேனா இல்லையா பாரு" என மனதிற்குள் ஆஷிக்குடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தாள் வாணி.
முகப்பறையில் அமர்ந்திருந்த வேணி சுவற்றை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள். அவளின் மனதில் எண்ணங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. அன்று இளாவின் நிம்மதியற்ற முகத்தை காண சகிக்காது அவனை எவ்வாறேனும் மகிழ்ச்சியாக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனின் சுகத்தை மட்டுமே மனதில் கொண்டு அவன் கேட்ட அத்தனை கேள்விக்கும் சமாதானமாய் வாழ்க்கையை எதிர்நோக்கும்படி பதிலுரைத்த வேணிக்கு திருமணத்தை எண்ணி சிறு அச்சம் தொற்றிக் கொள்ளத்தான் செய்தது. கடைசி வரை காதல் வராமலே போய்விட்டால் என்ன செய்ய என்கின்ற எண்ணம் அவளை இந்த வாரமாய் அலைகழிக்கச் செய்திருந்தது.
முகப்பறையிலிருந்து தொலைகாட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மஹாவின் மனதோ எவ்வாறு தன் பெற்றோரிடம் இக்காதலினைக் கூறப் போகிறோம் என்ற எண்ணச்சூழலில் சிக்கிக்கொண்டிருந்தது.
தன் மெத்தையிலிருந்து முகப்பறைக்கு வந்த வாணி,
"என்னங்கடி ஆளுக்கு ஒரு பக்கமா உட்கார்ந்து கனா கண்டுட்டு இருக்கீங்க? நானும் ஒரு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன்... ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்கீங்க இரண்டு பேரும். என்ன தான் ப்ரச்சனைடி உங்களுக்கு. உங்க முகத்துல சந்தோஷத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு பொண்ணுகளா" என பாசமாய் அவர்களை நோக்கி வாணிக் கேட்க,
"அதெல்லாம் ஒன்னுமில்லை வாணி. ப்ராஜக்ட் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தோம்" என இருவரும் ஒரே பதிலை கூறினார்.
அப்பொழுது அறிந்திருக்கவில்லை இரு பெண்களும் தாங்கள் மறைக்கும் தங்களின் பிரச்சனை பின்னாளில் வாணிக்கு தெரிய வரும் போது, தங்களை வெறுக்குமளவு அவள் செல்வாளென.
"மனசுல பிரச்சனை இருந்தா அதை மத்தவங்க கிட்ட சொல்லும் போது சம் டைம்ஸ் ஏதாவது சொல்யூஸன் கூட கிடைக்கலாம். அதுக்காக தான் சொல்றேன் அம்மு மஹா. அப்புறம் உங்க விருப்பம்" என்றுவிட்டு சென்றுவிட்டாள் வாணி.
வாணியின் பேச்சு எதுவும் அவர்களின் மூளையை எட்டக்கூடயில்லை. அவர்களின் எண்ணம் தான் இளா மற்றும் மதியைச் சுற்றிக்கொண்டிருந்ததே.
மறுநாள் ஞாயிறன்று மதியம் வாணி தனியே தன்னறையில் அமர்ந்திருந்தாள்.
வேணி மற்றும் மஹா, இளா மற்றும் மதியைக் காணச் சென்றிருந்தனர்.
"ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்" என வேண்டிக் கொண்டே ஆஷிக் அளித்த ரஹானாவின் கைபேசி எண்ணிற்கு அழைத்தாள் வாணி.
"ஹலோ" என அங்கு ரஹானா உரைத்ததும்,
ஹலோ என கூறிய வாணியின் குரலில் காற்று மட்டுமே வர, "அய்யோ வாய்ல காத்து தான் வருதே" என மைண்ட் வாய்ஸில் பேசியவள் தொண்டையைச் செருமி,
"ஹலோ, கேன் ஐ டாக் டூ ரஹானா??" என மனதின் நடுக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு வழியாய் கேட்டு வைக்க,
"யெஸ் ஸ்பீக்கீங்... மே ஐ நோ ஹு இஸ் திஸ்??" எனக் காட்டமாக ரஹானா மறுகேள்விக் கேட்க,
"நம்ம தேத்தி வச்சிருக்க தைரியத்தையும் இந்தப் பொண்ணுக் குரல் மொத்தமா கவுத்திடும் போலயே" என மீண்டும் மைண்ட் வாய்ஸில் பேசிய வாணி,
"ஹை திஸ் இஸ் மதுரவாணி" எனக் கூறிய மறுநிமிடம்,
"ஹை கேபிக்கா. வாட் எ சப்ரைஸ்??" என குதூகலமாய் மறுபக்கம் ரஹானாக் கேட்க,
"என்னது கேபிக்ககாவாஆஆஆஆ??" என வாயை பிளந்த வாணி,
"இந்தப் பொண்ணுக்கு எப்படி நம்மள தெரியும்?? அய்யோ மாட்டிக்கிட்டோமே" என கைகள் நடுங்க மனம் பதற எண்ணியவள், "போனை வச்சிடுவோமா??" என்றெண்ணிய நேரம்,
"அறிவாளிப் பொண்ணே அவ உன் பேரத் தானே சொன்னா?? அதுக்கு ஏன் இப்படி பதறுற" என வாணியின் மனம் இடித்துரைக்க,
இந்த இடைப்பட்ட நேரத்தில் மறுப்பக்கம் பல முறை ஹலோ ஹலோ வெனக் கூறிக் கொண்டிருந்தாள் ரஹானா.
"சாரி" எனக் கூறி வாணித் தன் பேச்சைத் தொடர,
"எப்படி இருக்கீங்க கேபிக்கா??" எனப் பல நாள் பழகியதுப் போல் ரஹானா இயல்பாய் இவளிடம் பேச,
வாணியின் வாய் தானாய் தன் நலத்தையும் கூறி அவளின் நலத்தையும் விசாரித்தது.
"புதன் கிழமை அவங்க வந்தாங்க கேபிக்கா. என்னை நிச்சயம் செஞ்சிட்டு போய்டாங்க. சிம்பிளான நிச்சயம் தான். ஆனா கல்யாணம் என் படிப்பு முடிஞ்சு தான்னு ஸ்டிர்க்டா சொல்லிட்டாங்க. எங்க அப்பாவாலயும் மறுக்க முடியலை. சரினு ஒத்துக்கிட்டாங்க" என ரஹானா நடந்ததைக் கூற,
"அடப்பாவி, ஒரு வாரம் கூட பொறுக்க முடியலையாடா உனக்கு. அதுக்குள்ளவா அந்தப் பொண்ணை யாருக்காவதுக் கட்டிக் கொடுத்துடப் போறாங்க. இருந்தாலும் உன் அலப்பறைக்கு ஒரு அளவில்லாம போச்சேடா" என மனதிற்குள் ஆஷிக்கை வறுத்தெடுத்தவள்,
"ரொம்ப சந்தோஷம் ரஹானா. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரஹானா. உன்னை லைப்ல மிஸ் செஞ்சிடக் கூடாதுனு நினைச்சான். அதான் உடனே இப்படி நிச்சயம் வச்சிக்க வந்திருக்கான்" என நண்பனுக்காக வாணிப் பேச,
"பேச ஆரம்பிச்சிட்டீங்களா?? போன் நம்பர் ஷேர் செஞ்சிக்கீட்டீங்களா??
ஹே ஆமா என்னைய எப்படி தெரியும்?"
நண்பனின் நிச்சயத்தை எண்ணி அவனின் ஆசை நிறைவேறியதை எண்ணி பூரித்துப் போய் மற்றதை மறந்து பேசிக்கொண்டிருந்தவள் தன்னிலை உணர்ந்ததும் தன் அறிமுகம் எவ்வாறென்ற கேள்வியை எழுப்பினாள்.
"ஹ்ம்ம் வியாழக்கிழமைல இருந்து பேசிட்டு இருக்கோம் கேபிக்கா. அவங்க முதல் நாள்ல அவங்க பேமிலி பத்திலாம் பேசினதுக்கப்புறம் முழுக்க முழுக்க உங்களைப் பத்தி தான்க்கா பேசினாங்க. அவங்க உங்களை அவங்களோட குட்டி லிட்டில் சிஸ்டர்னு தான் சொன்னாங்க. அவங்க சொல்ல சொல்ல உங்களை பார்க்கனும்னே ஆசை வந்துட்டுனா பாருங்களேன். உங்ககிட்ட இந்த நிச்சயம் பத்தி எதுவும் சொல்லலை. அவங்களுக்காக என் கிட்டப் பேச எப்படியும் போன் பண்ணுவீங்கனும் சொன்னாங்க. அப்ப உங்களை வம்பிழுக்கக் கூட சொன்னாங்க. எனக்கு தான் மனசு வரலை" என ரஹானா வியப்பாய் அவன் கூறியதைச் சொல்ல,
இங்கு வாணியின் கண்களில் ஒரு துளி நீர் கண்ணை விட்டு வெளி வந்தது ஆனந்தத்தில் பூரிப்பில் அவன் அவள் மீது வைத்திருந்த அன்பின் நெகிழ்ச்சியில், அதை சரியாய் புரிந்து தன்னை உயர்வாய் மதித்துப் பேசும் இந்தப் பெண்ணின் பேச்சில்.
"ஐ ஃபீல் ப்ளஸ்டு ரஹானா. அவன் சொன்னதுக்காக இல்லை. அவன் சொன்னதை சரியாய் புரிஞ்சு என்னை இவ்ளோ உயர்வாய் ஃபீல் செய்ய வைக்குற ஓர் உறவை கடவுள் கொடுத்ததுக்காக. ஐ ஃபீல் ப்ளஸ்டு ரஹானா" என மனதார உரைத்தாள் வாணி.
"என்னக்கா... இதுல என்னக்கா இருக்கு. இப்படி ப்ரண்ட்ஸ் அமையறது தான் கடவுள் புண்ணியம். அது என்னால என்னிக்கும் கெட்டுப்போச்சுனு வராதுக்கா" என ரஹானாக் கூற,
"நீங்க இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா மனமொத்த தம்பதியா வாழனும்டா" எனக் கூறி போனை வைத்தவள், அழைத்தாள் மறுநிமிடம் ஆஷிக்கின் அலைபேசிக்கு.
"ஏன்டா என் கிட்ட சொல்லலை?" என வாணிக் கேட்க,
அவளின் கேள்வியிலேயே அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தவன் வேண்டுமென்றே,
"என்ன சொல்லலை??" எனக் கேட்டான் ஆஷிக்.
"நிச்சயமே செஞ்சிட்டு வந்திருக்க. சொல்லவேயில்ல" என மீண்டும் வாணிக் கேட்க,
ஏனோ அவளை வம்பிழுக்கும் மனநிலையில் இருந்தவன்,
"நான் ஏன் உன்கிட்ட சொல்லனும். யார் நீ எனக்கு??" எனச் சிரிப்பை வாயினுள் அடக்கிக் கொண்டுப் பேச,
"டேய் நேர்ல பார்த்தேனா மண்டைலயே போடுவேன். ஒழுங்கா பேசுடா" என வாணி அவனை மிரட்ட,
"யாரு நீ என் மண்டைல போடுவியா. அரை அடி இருந்துக்கிட்டு, சேர்ல ஏறுனாக் கூட என் மண்டைய டச் பண்ண முடியாது நீ. பேசுற பேச்சைப் பாரு" என ஆஷிக் கூற,
"எனக்கு வேணும்னா நான் ஏணிப் போட்டு ஏறிக்கூட உன் மண்டைல அடிப்பேன். உனக்கென்ன வந்துச்சு. அது என் ப்ரண்ட் மண்டை. நான் என்ன வேணும்னாலும் செய்வேன்" என வாணி சிரித்துக் கொண்டேக் கூற,
"அடிப்பாவி... அது என் மண்டை. என் பர்மிஷம் இல்லாம அதை டச் பண்ணிடுவியா நீ??... பாக்கலாமா??" - ஆஷிக்
"பாக்கலாமா??" - என மீண்டும் வாணிக் கேட்க,
இருவரும் வாய் விட்டு சிரித்துக் கொண்டனர்.
"சார் என்ன செம்ம குஷி மூட்ல இருக்கீங்கப் போல??" என வாணிக் கேட்க,
"ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப" எனக் கூறினான் ஆஷிக்.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆஷிக். ரஹானாக்கிட்ட பேசினேன். மனசு நிறஞ்சி இருக்குடா. உனக்கேத்த ரொம்ப நல்ல பொண்ணுடா" என வாணி மனதாரக் கூற,
"சார் டிரைனிங் அப்படி. இரண்டு நாள்ல எப்படி டிரைன் பண்ணி வச்சிருக்கேன் பார்த்தியா??" என ஆஷிக் கேட்க,
"நீ தான் அவக்கிட்ட டிரைனிங் எடுக்கனும். நான் அவளுக்கு தான் சப்போர்ட்ப்பா" என வாணி நக்கலாய் கூற,
"பார்றா. ப்ரண்ட் பொண்டாட்டி வந்ததும் ப்ரண்டை கழட்டி விட்டுற நீ" என அவன் கேட்க,
"ஆமா உன்னை பத்தி தப்பா தப்பா போட்டுக் கொடுக்க போறேன் அவக்கிட்ட" என வாணி சிரித்துக் கொண்டேக் கூற,
"பார்க்கலாம் பார்க்கலாம். நான் அதுக்குள்ள அவளை என் காதல்ல மூழ்கடிச்சி யாரு எது சொன்னாலும் நம்பாத மாதிரி என்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்க மாதிரி மாத்திருவேனே" என அவன் கூற,
வாய் விட்டு சிரித்தனர் இருவரும்.
"நீ அவ காதல்ல மூழ்குவியோ... இல்ல அவ உன் காதல்ல மூழ்குவாளோ... எப்படியோ இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அது போதும்டா எனக்கு" எனக் கூறி போனை வைத்தாள் வாணி.
அங்கு கோரமங்களா கே எஃப் சியில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.
"பயமாயிருக்குடா" - வேணி
"என்ன பயம். அன்னிக்கு என்னமோ அபியும் நானும் பட ரேஞ்சுக்கு என் அப்பா என் உரிமைனு அவர் சொல்றதுக்குலாம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு.... எனக்கு வேற விக்ரமன் பட ரேஞ்சுக்கு அட்வைஸ் கொடுத்துட்டு என்ன பயம் இப்ப உனக்கு. நம்மளே நினைச்சாலும் இனி மாத்த முடியாது. நம்மூருல அவ்ளோ ஸ்பீடா வேலை நடந்துட்டு இருக்கு" என ஆத்திரம் பொங்க கூறியவன் வேறெங்கோ வெறித்து நோக்க,
"என்னடா என் மேல கோபமா?? அன்னிக்கு உன்னோட கவலை படிஞ்ச முகத்தை பார்க்க முடியலைடா. உன் மனசை தேத்தி சந்தோஷமாக்கனும்னு தோணுச்சு. அதுவும் அவரோட பாரத்தை உன் கிட்ட ஏத்தி வச்சி உன்னை வருத்துறாரோனு வேற தோணுடுச்சு. அதான் உடனே அப்பா கிட்ட பேசினேன். உன்னையும் ரிலாக்ஸா ஃபீல் பண்ண வச்சேன்" என கூறிக்கொண்டே வேணி இளாவைப் பார்க்க,
இளா வேறெங்கோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்க,
"நான் இங்க சீரியஸா பேசிட்டு இருக்கேன். அங்க என்னடா பார்வை??" என எதிரிலிருந்தவனின் கைகளை இவள் தட்ட,
"அங்க பாரேன் அம்ஸ். அந்த பொண்ணு நம்மரூ பொண்ணு மாதிரி இருக்குல. நீளமான பின்னல் முடி, மூக்குத்தி, களையான கருப்பு முகம். அப்படியே தமிழ் பொண்ணு மாதிரி இருக்குல" என அங்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தப் பெண்ணைக் காட்டி இவன் கேட்க,
அவனை சற்று முறைத்தவள் அவன் கண்களில் பாதையை நோக்கி தானும் பார்த்தவள்,"ஆமாடா அழகு அந்தப் பொண்ணு." என்று கூற,
"எனக்கு இந்த மாதிரி பொண்ணுங்க மூக்குத்தி போடுறது, நீளமான கூந்தல் வச்சுகிறதுலாம் பிடிக்கும்" என தன்னிலை மறந்து அந்த பெண்ணை நோக்கி கொண்டு இளாக் கூற,
முதுகுக்கு சற்று கீழ் வரை நீண்டிருந்த தன் கூந்தலை முன்னே போட்டு பார்த்தவள், "என்ன பண்றது இளா?? உனக்கு விதிக்கப்பட்டது இந்த குட்டை முடி பொண்ணு தான். வாட் டு டூ" எனப் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க,
"குட்ட முடிப் பொண்ணா?? அது யாரு??" என முகத்தைச் சுருக்கி வேணியை நோக்கி இளாக் கேட்க,
"நானே... அது நானே" என கண் சிமிட்டினாள் வேணி.
"சே சே உனக்கு குட்ட முடிலாம் இல்லை அம்ஸ். குட்டியா இருந்தாலும் நல்ல அடர்த்தி தான் உன் முடி. நீ தான் மாசமாசம் வெட்டிடுறல. நீளமா வளர்த்தீனா இன்னும் நல்லாயிருக்கும்" என அவளின் கூந்தலுக்கு அவளிடமே அவன் வக்காலத்து வாங்க,
"ரொம்ப நல்லவன்டா நீ" என மனதிற்குள் இளாவை கொஞ்சிக் கொண்டவள்,
"உனக்காகவாவது நீளமா முடியை வளர்க்கிறேன்டா. நம்ம கல்யாணத்தன்னக்கு சவுரி இல்லாம என் முடியிலேயே சடை போடுற அளவுக்கு வளர்க்கிறேன்டா" என சபதம் எடுத்தாள் வேணி.
அவன் மீதான நேசம் காதலெனும் விதையாய் மனதில் பரவ ஆரம்பித்திருப்பதை உணரவில்லை பெண்ணவள் அப்பொழுது.
திருமணம் எனும் வார்த்தையின் சக்தியிலிருக்கும் மாயை அது தானே. யாரோ ஒருவரை தனக்கு நிச்சயித்த நாளிலிருந்து தன்னவராய் உருவளித்து நெகிழும் மனம்.
"என்ன கனவு கண்டுட்டு இருக்க?? என்ன பெரிய திங்கிங்ல இருக்க??" என இளா அவளின் சிந்தனையைக் கலைக்க,
"ஹ்ம்ம் நம்ம பிரச்சனைக்கு வாடா. ஊருல நம்ம இரண்டு குடும்பத்துலயும் ஒரு மாசத்துல நிச்சயதார்த்தம் கிராண்ட்டா செய்யலாம்னு தீவிரமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. நான் இன்னும் மூனு மாசத்துல ரொட்டேஷன் ஷிப்ட்ல வர்க் பண்ண ஸ்டார்ட் செய்யனும். எல்லாம் சேர்ந்து மண்டைய குழப்புதுடா. சுத்தி பிரச்சனையா இருக்க மாதிரி ஃபீல்டா" என வேணி கூற,
"நான் தான் ஒரு பிரச்சனையவே கல்யாணம் பண்ணிக்கப் போறேனே. அதை கம்பேர் செய்யும் போது உன்னோடதுலாம் பெரிய பிரச்சனையே இல்ல அம்ஸ்" என அவன் கவலையாய் முகத்தை வைத்துக் கொண்டுப் போலியாய் கூற,
முதலில் புரியாது நெற்றிச் சுருக்கியவள், புரிந்தப் பின் "நான் பிரச்சனையாடா உனக்கு??" என எழுந்து நின்று அவன் முதுகில் நாலு அடி அவள் அடிக்க,
அவளின் கையை பற்றியவன், "நீ நம்ம நிச்சயதார்தத்துக்கு என்னலாம் அரேஞ்சமெண்ட்ஸ் செய்யனுமோ அதை செய். இனி உன் பிரச்சனை என் பிரச்சனைனு தனி தனியா கிடையாது. இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும் அது நம்ம பிரச்சனை அதை இரண்டு பேருமே சேர்ந்து ஹேண்டில் செய்வோம். நான் எப்பவும் உனக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன். அதை மட்டும் மனசுல வச்சிக்கோ" என தன் கைகளுக்குள் பொதிந்திருந்த அவளின் கைகளில் தட்டிக்கொடுத்து இளாக் கூற,
மெல்லமாய் சரியென தலையசைத்தாள் வேணி.
அவளின் பிரச்சனையை இவனும் இவளின் பிரச்சனையை அவனும் சேர்ந்து சமாளிக்கலாமென முடிவெடுத்தவர்கள், கணவன் மனைவியாய் சேர்ந்து சமாளிக்க வேண்டியிருக்கும் பிரச்சனையை எண்ணிப்பார்க்கவில்லை இருவரும்.
பெங்களூர் இஸ்கான் டெம்பிள் சென்றிருந்த மஹாவும் மதியும் ராதா கிருஷ்ணரை தரிசித்து விட்டு அங்கு ஓர் இடத்தில் அமர்ந்திருந்தனர்.
இருவரும் வந்ததிலிருந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது மனதிற்குள் கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
"மஹாவுடனான என் காதல் கல்யாணத்தில் முடியனும் கடவுளே. நாங்க ஆயுசுக்கும் இதே அன்போட வாழனும்" என வேண்டிக் கொண்ட மதி கண் விழித்துப் பார்க்க,
கண் மூடி தீவிர வேண்டுதலில் இருந்த மஹாவே அவன் கண்ணுக்குத் தென்பட்டாள்.
"மதிய ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா. அவன் கூட இருக்கும் போது நான் என்னையே மறந்துப் போற அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். அவன் அன்பால நிறைய நேரம் என் அப்பாவை நினைவுப்படுத்திருக்கான். அவன் இல்லாம வாழ முடியும்னு தோணலை கண்ணா. யெஸ் ஐம் இன் லவ் வித் ஹிம். எங்க அப்பா அம்மா மனசார சந்தோஷமா என்னை மதிக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் கண்ணா" என இவள் வேண்டிக் கொண்டயிருந்த நேரம்,
"இந்நேரம் கடவுள் கிட்ட நீ என்ன வேண்டிக்கிட்டியோ அது கண்டிப்பா நடக்கும். உன் வேண்டுதல் நிறைவேறனும்னு நானும் மனசார வேண்டிக்கிறேன்" என மஹாவின் காதருகில் மதிக் கூற,
பட்டென கண்ணைத் திறந்த மஹாவின் கண்களில் ஆனந்த நீர்த்துளி, ஏனோ அந்தக் கண்ணனே தன் வேண்டுதலுக்கு அருள்புரிந்ததாய் தோன்றியது அவளுக்கு.
தன்னருகில் இருந்தவனின் கையைப் பற்றியவள்,"ரொம்ப தேங்க்ஸ் மதி" என மஹா மனம் நெகிழ்ந்துக் கூற,
"ஹே லூசு!! இதுக்குப் போய் கண்ணுல தண்ணி வச்சிக்கிட்டு" என அவளின் தோளோடு கைப்போட்டு தன் தோளில் அவளை சாய்த்துக் கொண்டான்.
அங்கிருந்து கிளம்பி மதிய உணவு உண்ணவென உணவு விடுதிக்கு சென்றனர் இருவரும்.
அங்கே உணவை ஆர்டர் செய்தப்பின் இருவரும் அமைதியாய் அமர்ந்திருக்க,
அவ்வமைதியைக் கலைத்தான் மதி.
"ஆன்டிக்கிட்ட பேசினியா மஹா?? என்னோட ப்ரபோசல் பத்தி சொன்னியா??" எனக் கேட்டான் மதி
அத்தியாயம் 11