மோனிஷா நாவல்கள்
Uruguthe ullam Negizhuthe Nenjam - 5
Quote from monisha on January 31, 2021, 9:50 PMஅத்தியாயம் 5
நண்பனாய் கிடைத்திட்ட
நெறியாளன் நீ!!
காதலனாய் கிடைத்திட்ட
காவலன் நீ!!
மதி என விளித்துக்கொண்டே முகத்தில் பூத்த பூரிப்புடன் மனம் நிறைத்த மகிழ்ச்சியுடன் அம்மரத்தினருகில் நின்றிருந்தவனின் கையை பற்றினாளவள்.
"மதி எப்படா வந்த? நீ எப்படிடா இங்க? உன்னோட கம்பெனில உனக்கு ஹைதராபாத் ஆபீஸ் போட்டுருக்காங்கனு தானே சொன்ன?"
என வெகு நாட்கள் கழித்து அவனைக் கண்ட மகிழ்ச்சியில் மதியின் கைகளைப் பற்றியப் படியே துள்ளிக் குதிக்காத குறையாக கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா.
அவளின் மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தவன் ஏதும் பேசாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்னடா நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லாம என்னையவே பாத்துட்டு இருக்க?" என மகா வினவ,
"என்னடா இவ்வளவு இளச்சிட்ட? சரியாய் சாப்பிடுறது இல்லையா? இப்ப தான உடம்பு தேறி வந்திருக்க... ஹெல்த் பார்த்துக்க மாட்டியா? என் கிட்ட டெய்லி போன்ல பேசும் போது சாப்பிட்டேன்னு சொன்னதுலாம் பொய்யா??" என அவளின் உடல் நலனில் அக்கறை வைத்து அவன் கேட்க,
"இல்ல மதி... பிஜி சாப்பாடு அவ்வளவா பிடிக்கலை... அதுக்காக சாப்பிடாமலாம் இல்லபா... வேளா வேளைக்கு டானு சாப்டிடுவேன்... நீ பேச்சை மாத்தாத... நீ எப்படி இங்க??அதை சொல்லு. உன்னை மரத்துக்கிட்ட பார்த்ததும் உன்ன மாதிரியே தெரியுதேன்னு யோசிச்சேன். அப்ப உன்ன பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேனா அதனால தான் அப்படி தெரியுதோனு பாத்தா நிஜமாவே நிக்குற... அப்படியே போட்ட துணிய போட்டபடி வந்துட்டேன். அச்சச்சோ வா முதல்ல உள்ள போலாம்... ரிசெப்ஷன்ல உட்கார்ந்து பேசலாம்... உன்னை பார்த்ததுல நைட் டிரஸ் ஓடவே அப்படியே ஓடி வந்திருக்கேன்" என தன் தலையில் அடித்துக் கொண்டு அவனின் கை பிடித்து பிஜிக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.
மதியும் மஹாவும் பேசிய இந்த நேரத்தில் மஹாவின் பின்னேயே ஓடி வந்த வாணியும் வேணியும், மஹாவின் மதி என்ற அழைப்பில் பிஜியின் நுழைவாயிலிலேயே நின்றுவிட்டனர்.
"யாருடி இவன்?" வாணி வேணியிடம் கேட்க,
"எனகென்னடி தெரியும்?" வேணி கூற,
"இந்த பையன பார்க்க ஓவர் சீன் பார்ட்டியா தெரியுதுல?" வாணி வினவ,
"ஆமாடீ, மஹாவோட காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாருமே கொஞ்சம் ஹைக்ளாஸா தெரியும். போட்டோஸ் பாத்திருக்கேன். மஹா மட்டும் தான் மாடர்னா இருந்தாலும் கேஸுவலா பழகுற டைப். இவங்களும் காலேஜ் பிரண்டா தான் இருக்கனும்" என உரைத்தாள் வேணி.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சமயம் மதியும் மஹாவும் பிஜியின் நுழைவாயிலுக்குள் நுழைந்தனர். வாணியையும் வேணியையும் மதியிடம் அறிமுகம் செய்து வைத்தாள் மஹா.
மரியாதை நிமித்தமாய் சிறிது நேரம் மதியிடன் பேசிவிட்டு வாணியும் வேணியும் தங்களின் அறைக்குச் செல்ல, "நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல??" என்றுரைத்தாள் மகா.
"உன்னை பார்த்து நாலு மாசம் ஆகுது மஹா. அதான் வீகெண்ட்ல ஊருக்கு போகாம உன்னை பார்க்க வந்திருக்கேன். போதுமா விளக்கம். சண்டே நைட் ஹைதராபாத் கிளம்பிடுவேன். இந்த டூ டேஸ் ஏதாவது பிளான் வெச்சிருகியா? ஐ வாண்ட் டு ஸ்பென்ட் மை டைம் வித் யு தீஸ் டூ டேஸ்" என மதிக் கூற,
"ஹ்ம்ம் வாணி அம்மு கூட வெளில வரேன்னு சொல்லிருந்தேனே… சரி அவங்கள எப்படியாவது சமாதானம் பண்ணிட்டு வரேன். நீ ஈவினிங் வா வெளில எங்கயாவது போயிட்டு வரலாம். ஆமா நீ எங்க தங்கி இருக்க?" மஹாக் கேட்க,
"இங்க என் ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் கூட தான் தங்கிருக்கேன். ஈவினிங் நானே இங்க வரேன். இங்கிருந்து ஒண்ணா பஸ்ல போலாம்" என்று அன்றைக்கான தன்னுடைய திட்டத்தினை உரைத்துக் கிளம்பிச் சென்றான் மதி.
மதியை வழி அனுப்பிவிட்டு அறைக்கு வந்த மஹாவை சூழ்ந்துக் கொண்டனர் வாணியும் வேணியும்.
"மஹா, இப்படி ப்ரண்ட்ஸ்லாம் என் லைப்ல நான் பார்த்ததே இல்லடீ. என் லைப்ல தான் ப்ரண்ட்ஸே இல்லையே... உன்னை பார்க்குறதுக்காகத் தான் இவளோ தூரம் வந்தாங்களா?"
என இப்படியும் உலகில் நண்பர்கள் உள்ளார்களா என்கின்ற ஆச்சரியத்தில் கேட்டாள் வாணி. வாழ்வில் நண்பர்களே இல்லாமல் இத்தனை தூரம் பயணித்த வாணிக்கு, ஏனோ அச்சமயம் தமக்கு இப்படி ஓர் தோழன் இல்லையே என நினைக்க வைத்தது.
வாணியின் பேச்சை கேட்டுச் சிரித்த மஹா, "ஆமாடீ இப்படி ஒரு ப்ரண்ட் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும். அவன் எனக்கு எப்படி ப்ரண்ட் ஆனானு தெரியுமா? அதுவே பெரிய கதை” எனக் கூறி அக்கதையை கூறலானாள் மஹா.
மஹா தனக்கும் மதிக்குமான நட்பை பற்றிய நினைவில் பின்னோக்கிச் செல்ல, தன் நண்பனின் அறையில் படுத்திருந்த மதியும் மஹாவைப் பார்த்த நொடியை நினைத்துக் கொண்டுதானிருந்தான்.
பிரபுவின் ப்ரபோசலையும் மதி தன்னை தன் தாயிடம் வசமாய் மாட்டி விட்டது வரையும் மஹா சொல்லிக் கொண்டிருந்த சமயம் ஒலித்தது மஹாவின் கைப்பேசி.
கைப்பேசியில் மதியின் எண்ணை கண்டதும் முகம் மலர்ந்த மஹா, "என்னடா ரூமுக்கு போய்டியா??" என மதியிடம் கைப்பேசியில் வினவ,
மறுப்பக்கம் மதி, "ஹ்ம்ம் நான் ரூமுக்கு வந்து ரொம்ப நேரம் ஆச்சு. உன் நியாபகமாவே இருக்கு மஹா. தூக்கமே வரல... உன் கூட இருக்கப் போறது டூ டேஸ் தானே... இப்பவே வாயேன் எங்கேயாவது லன்ச் சாப்பிட்டு விட்டு அப்படியே வெளியே போய்ட்டு வரலாம்" என்றுரைக்க,
அவனிடம் சரி எனக் கூறி வேணி வாணியிடம் மதியுடன் வெளியே செல்வதாகயுரைத்துக் கிளம்ப ஆயத்தமானாள் மஹா.
"அப்பவே பேரண்ட்ஸ் கண்சல்ட் செய்யாம எப்டிலாம் ப்ரபோசல் ஹேண்டில் பண்ணிருக்க நீ... என் கிட்ட யாராவது இப்படி சொல்லிருந்தா நான் உடனே பதறியடிச்சு ஓடிருப்பேன். என் கை கால் லாம் நடுங்க ஆரம்பிச்சிருக்கும். நேரா அப்பாகிட்ட போய் தான் நின்றுப்பேன்" என மஹாவின் செயலை நினைத்து ஆச்சரியப் பாவனையில் வாணி உரைத்துக் கொண்டிருக்க,
"ஆயிரம் தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி மாதிரி உனக்கு பல ப்ரபோசல் கண்ட புடலங்காய் ப்ரின்சஸ்னு பேர் வைக்கலாம்னு நினைக்கிறேன் மஹா. நீ என்ன சொல்ற??" எனக் கண் சிமிட்டி சிரிப்பாய் வேணி வினவ,
"உன்னை வந்து கவனிச்சிகிறேன்டி அம்மு. சரிடி நான் கிளம்புறேன். நைட் தான் வருவேன். நீங்களும் எங்கேயாவது வெளில போய்ட்டு வாங்க. ரூம்லயே இருக்காதீங்க" என்றுரைத்துச் சென்றாள் மஹா.
"இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல வாணி. காலேஜ்ல ப்ரபோசல் வரதெல்லாம் சகஜம். இதுக்கூட தெரியாம உன்ன மாதிரி இருக்க பொண்ணுங்க தான் இப்ப கம்மி" என வேணி உரைக்க,
"அப்ப உனக்கும் ப்ரபோசல் வந்திருக்கா அம்மு??" என விழி விரியக் கேட்டாள் வாணி.
"சே சே... இல்ல இல்ல… இளா இருக்கும் போது யாரு என்கிட்ட வந்து தைரியமா பேச முடியும். இளாவும் நானும் பெஸ்ட் ப்ரண்ட்னு மொத்த காலேஜ்குமே தெரியும். சோ இளாவை தாண்டி தான் என்கிட்ட யாருனாலும் வந்து பேசனும். அவன் அப்படி என்கிட்ட யாரையும் பேச விட்டதில்ல" என நீண்ட விளக்கமளித்தாள் வேணி.
"ஹ்ம்ம் நீயும் இளா இளானு சொல்ற... பெங்களூர்ல தானே அவங்க இப்ப வர்கிங்... வாரம் ஆனா அவங்க கூட சேர்ந்து ஊருக்கு போய்டுற… இந்த வீக் எண்ட் தான் அத்தி பூத்தா மாதிரி இங்க இருக்கோம். இன்னிக்காவது எனக்கு இளாவ இன்ட்ரோ கொடுக்கலாம்ல" என வாணிக் கேட்க,
"ஹ்ம்ம் கண்டிப்பாடி... இன்னிக்கு ஈவ்னிங் நாம இளா கூட தான் வெளில போகப் போறோம்" என்றுரைத்தாள் வேணி.
மாலை நேரம் இளா இவர்களின் பிஜிக்கு வந்ததும் அவனுடன் கிளம்பிச் சென்றார்கள் வேணியும் வாணியும்.
அவர்களை கெம்போர்ட் சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் இளா.
அங்கே சிறப்பு வரிசையில் செல்ல நுழைவு சீட்டு வாங்கித் தருவதிலிருந்து ஒவ்வொரு இடத்திலும் புகைப்படம் எடுக்கும் வரையும் வேணியின் மீதான அவனின் அக்கறையைக் காண முடிந்தது.
அடுத்து அருகிலுள்ள டோட்டல் மாலிற்கு அழைத்துச் சென்றவன், வேணிக்காக அங்குள்ள கே ஃஎப் சி யில் சிக்கன் ஆர்டர் செய்தான்.
வாணிக்கு ஃபாஸ்ட் புட் பிடிக்காதக் காரணத்தினால் ஒரு ஃபிங்கர் சிப்ஸ் மற்றும் கோன் ஐஸ் மட்டும் வாங்கிக்கொண்டாள்.
மூவரும் ஒரு இடத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
"டேய் கோவக்காய், ரொம்ப நல்லவன்டா நீ" என அச்சிக்கனை சின்னாபின்னமாக்கியப் படி உரைத்தாள் வேணி.
வாணி இவளின் கோவக்காய் என்கின்ற விளிப்பில் "ஙே" என முழித்துக் கொண்டிருந்தாள்.
"ஹே அம்மு எப்பவுமே புடலங்காய்னு தானே திட்டுவ... அதென்ன கோவக்காய்?? இளாக்கு ரொம்ப கோவம் வருமோ??" வாணி வினவ,
"ஏன் வாணி நீங்க வேற... என்னைய பார்த்த கோவப்படுற ஆளு மாதிரியா தெரியுது??... அவ நல்லா காய் பேரு வச்சு திட்டுவா ஆனா திங்கமாட்டா... மேடம்க்கு சிக்கன் தான் பேவரிட் " என வாணியைப் பார்த்துக் கூற,
என்ன கூறவென தெரியாத பாவனையில் திருதிருத்த வாணி,"அட ஆமாங்க... பிஜில ஒரு காயும் சாப்பிடுறதில்லை" என வேணியை போட்டுக் கொடுக்க,
வேணி வாணியின் காலை உதைக்க,
வாணியின் பாவனையில் வாய் விட்டு சிரித்த இளா,"அம்ஸ் பத்தி தெரியும்ங்க... நல்ல ருசியா இருந்தா தான் சாப்பிடுவா... இல்லனா சோறு இறங்காது. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்" என்று அவளை அறிந்த நல்ல நண்பனாய் அவனுறைக்க,
"சரி அதென்ன கோவக்காய்??" - வாணி
"சொல்லவா இளா" என கண் சிமிட்டினாள் வேணி.
"நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. எதாவது எக்குத்தப்பா சொல்லுவ. நானே சொல்றேன்" - இளா
"இல்ல நான் தான் சொல்வேன்" - வேணி
"நானே சொல்றேன் அம்ஸ்" - இளா
"போடா பாவக்காய்... நான் தான் சொல்வேன்" - வேணி
இந்த பேச்சு சண்டையில் இளா வேணியின் சிக்கனை எடுத்து உண்டுக்கொண்டிருக்க, இதை சிறிது நேரம் கழித்து உணர்ந்த வேணி,
"ஏன்டா என் சிக்கனை எடுத்த??என் சிக்கனை கொடுடா" என அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.
"அடப்பாவிங்களா கோவிக்காய்க்கே விளக்கம் சொல்லலை அதுக்குள்ள பாவைக்காயா... நல்லா வருவீங்கடா நீங்க" என மைண்ட் வாய்ஸில் புலம்பினாள் வாணி.
"அய்யோ நிறுத்திறீங்களா?? நீங்க எனக்கு விளக்கமே சொல்ல வேண்டாம். ஒழுங்கா சாப்பிடுங்க போதும்" எனக் குரலை உயர்த்தி வாணி கூற,
இது இவர்களின் வழமையான சண்டை தான். வாணி முதன்முறை பார்ப்பதால் பொங்கி விட்டாள்.
இதை எண்ணி வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டனர் இளாவும் வேணியும்.
இவர்களின் சிக்கன் சண்டையில் இறுதிவரை கோவக்காய் பாவக்காய்கான விளக்கம் கூறவில்லை இருவரும்.
ஒருவழியாக அன்றைய நாள் முடிய வாணி மற்றும் வேணியை அவர்களின் பிஜியில் பத்திரமாய் சேர்த்துவிட்டுக் கிளம்பினான் இளா.
இவர்கள் பிஜி வந்த சமயம், ஏற்கனவே பிஜி வந்து சேர்ந்திருந்தாள் மஹா.
அன்றைய நாளின் முடிவில் இப்படியும் ஆண் தோழர்கள் இருக்கிறார்களா என்ற பெரிய வியப்பில் இளா மற்றும் மதி மீதான நன்மதிப்பின் எண்ணத்துடன் உறங்கிப்போனாள் வாணி.
வாயிறுதி நாட்கள் விரைவாய் செல்ல, அடுத்து வந்த திங்கட்கிழமையில் வாணி, வேணி, ராஜேஷ், ஆஷிக் ஆகிய நால்வரும் ப்ராஜக்ட் கிடைக்காமல் பென்ச்சில் இருக்க, மஹா தனக்கு ஒதுக்கப்பட்ட ப்ராஜக்ட்டில் வேலை செய்யவாரம்பித்திருந்தாள்.
அன்று ஆஷிக்கையும் வாணியையும் தன்னைக் காண வருமாறு மின்னஞ்சல் அனுப்பிருந்தார் ஹெச் ஆர் தேவ்.
அவர்கள் இருவரையும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி கிளையிலுள்ள தங்களின் கிளை அலுவலகத்திற்கு மறுநாள் போகச் சொன்னவர், அங்கு ஒரு ப்ராஜக்ட்டில் இடம் இருப்பதாகவும் அதற்காக அந்தப் ப்ராஜக்ட்டின் மேனஜர் அவர்களை நேர்முக தேர்வு செய்வாரெனவும் இவருவரில் ஒருவரை அப்பணிக்கு தேர்ந்தெடுப்பாரெனவும் உரைத்தாரவர்.
ஏற்கனவே மஹாவுடன் சேர்ந்து வாணி பங்கெடுத்துக் கொண்ட நேர்முகத்தேர்வில் மஹா அந்த ப்ராஜக்டடிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தேவ் கூறிய வாணிக்கும் ஆஷிக்குமான அடுத்த நேர்முகத் தேர்வு வாணிக்கு பீதியைக் கிளப்பியது.
எவ்வாறேனும் இதில் வென்றுவிட வேண்டுமென எண்ணிக்கொண்டாள் வாணி. ஆயினும் இந்நேர்முக தேர்வையும் தாண்டிய பயம் அவளை பீடித்திருந்தது.
சென்னையிலிருந்த வரை அப்பாவுடன், பெங்களுர் வந்ததிலிருந்து வேணி மஹாயென இவர்களுடேனேயே வெளியில் எங்கும் பயணித்த வாணி, நாளை தனியாய் தான் அவ்வலுவலகத்திற்கு மேற்க்கொள்ளவிருக்கும் பயணத்தை எண்ணி கலங்கவாரம்பித்தாள்.
இரவுணவுண்டபின் நேர்முகத் தேர்விற்காய் தயாராகப் படிக்க அமர்ந்த நிலையில் இவ்வெண்ணம் அவளின் சிந்தையை சிதறடிக்கச்செய்ய, தன் கலக்கத்தை தோழிகளிடம் உரைத்தாள்.
"ஆஷிக்கோட போடி. அவனும் அங்க தானே நாளைக்கு போகனும்... அவன்கிட்ட கால் செஞ்சி கேளு... அந்த இடம் அவனுக்குத் தெரியுமா... எப்படி போகப்போறானு கேளு" என அவளுக்கு வழி உரைத்தாள் மஹா.
அவனை வாணி கைப்பேசியில் அழைத்துப்பேச அவனுக்கும் அவ்விடத்திற்கு செல்வது இதுவே முதல்முறை எனவும், தன் நண்பர்களுடன் அவ்விடம் செல்வது எவ்வாறென கேட்டு வைத்திருப்பதாகவும் உரைத்தவன்,
"நீயும் தனியா தானே போவ... என்னுடனேயே வாயென" அவன் உரைக்க... எவ்வாறு அவனிடம் கேட்பதென தயங்கியிருந்த வாணிக்கு அவனே தன்னுடன் வருமாறு உரைத்தது பெரும் நிம்மதியாய் இருந்தது.
அவனின் இடத்திலிருத்து அவளின் பேருந்து நிறுத்தத்திற்கு அவன் ஒரு பேருந்தில் வந்திறங்கி, அங்கிருந்து அவளுடன் அவ்வலுவகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்தில் இருவரும் இணைந்து செல்லலாமென முடிவு செய்தனர் இருவரும்.
ஒருவாறாக மறுநாளைய பயணத்தை முடிவு செய்தவள் இப்பொழுது வேறோர் சிந்தையில் ஆழ்ந்தாள்.
"என்னடி இன்னும் என்ன யோசனை??" மஹா வாணியிடம் கேட்க,
"இல்லடி ஒரு மாதிரி அன்கன்பர்ட்டா ஃபீல் ஆகுதுடி. இதுவரை அப்பா கசின் அண்ணா தவிர வேற பசங்க கூட இப்படி தனியா போனதில்லை. அதான் ஒரு மாதிரி கவலையா பயமாவே இருக்கு" என தன் மனதிலுள்ளதை மறைக்காது வாணி உரைக்க,
"ஆஷிக் பத்தி தான் உனக்கு தெரியும்ல அப்பறம் என்ன பயம்... எத்தனை தடவை அவன் கூட நாம சென்னைக்கு ட்ராவல் பண்ணிருக்கோம்... அப்பறம் என்னடி?? நான் வேணா ஆஷிக்கிட்ட பேசவா??" என வாணியிடம் ஆறுதலாய் மஹா பேச,
"அய்யய்யோ வேணாம்டி. நான் அவனை நம்பலைனு நினைச்சிக்கப் போறான். நம்ம ஊருக்கு போகும் போதெல்லாம் நீ கூட இருப்படி. எது வேணும்னாலும் நான் உன் கிட்ட சொல்லுவேன். அவன் இருக்கிறதைய நான் பெரிசா எடுத்துக்கிட்டது இல்ல. அதான் இப்ப வித்தியாசமா தெரியுது. நாளைக்கு ஒரு நாள் தானே நான் மேனேஜ் செஞ்சிக்குவேன்டி" என வாணி உரைக்க,
"அடியேய் அந்த ப்ராஜக்ட்ல செலக்ட் ஆயிட்டீனா நீ டெய்லி அந்த ஆபிஸ்க்கு தான் போகனும். அதனால எப்படிபோகனும் வரனும்னு நாளைக்கு அவன் கூடப் போய் பார்த்து வச்சிக்கோ" என வேணி கூற,
"சரிடி தெரிஞ்சிக்கிறேன்" என வாணி தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு உரைக்க,
"நீ பயப்படாத வாணி. நாளைக்கு நான் உனக்கு மெசேஜ் பண்ணிட்டே தான் இருப்பேன். உனக்கு தனியா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகாது. சரியா... இப்ப பயப்படாம இன்டர்வ்யூக்கு படி" என மஹா பாசமாய் பேச,
மஹாவின் பேச்சில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது வாணிக்கு. ஆனால் இதற்கு மேல் படிக்க மனம் ஒரு நிலையில்லாமல் போக அமைதியாய் போய் படுத்துக் கொண்டாள் வாணி.
மறுநாள் காலை தன்னுடைய பேருந்து நிறுத்தத்தில் வாணி ஆஷிக்கிற்காக காத்துக் கொண்டிருக்க, அவன் ஏரியாவிலிருந்து ஒரு பேருந்தில் வந்திறங்கினான் ஆஷிக்.
பின்பு அங்கிருந்து வாணியும் ஆஷிக்கும் தங்களின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துக்காய் காத்துக் கொண்டு நின்றனர்.
நடத்துனரிடம் விசாரித்து இருவரும் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு பேருந்தில் ஏற, கர்நாடக அரசுப் பேருந்தில் பெண்கள் முன் பாதியும் ஆண்கள் பின் பாதி இருக்கையிலும் அமர வேண்டும் என்பது விதி ஆகையால் வாணி முன் பாதி இருக்கையினருகில் நின்றுக்கொள்ள, ஆஷிக் பின் இருக்கையில் நின்றுக் கொண்டிருந்தவன்,
"உனக்கும் சேர்த்து நானே டிக்கெட் எடுத்துட்டேன்... நீ எடுக்க வேண்டாம்" என குறுஞ்செய்தி அனுப்பினான் வாணிக்கு.
அக்குறுஞ்செய்தியைக் கண்டதும் வாணியின் கண்கள் கூட்டத்தில் ஆஷிக்கை தேட, அவள் தன்னை தேடுவதைப் பார்த்தவன் சிறிது கூட்டத்தை விட்டு விலகி அவளிடம் இமை மூடி தலை சாய்த்தான்.
ஆம் ஆஷிக் வாணியை தன் பார்வை வளையத்திற்குள் தான் வைத்திருந்தான். ஏற்கனவே சென்னை செல்லும் போதெல்லாம் அவளைப் பற்றி அறிந்து வைத்ததினால் அவள் முகத்தில் அவன் கண்ட அந்த அசௌகரியம் அவளை அவனின் கண் வளைக்குள் இருக்க வைத்தது.
பேருந்து இரண்டு நிறுத்தத்தைக் கடந்தப் பிறகு கூட்டம் சற்றாய் குறைந்திருக்க," சீட் கிடைக்குற மாதிரி இடத்தில நின்னு உடனே உட்கார்ந்திடு... ரொம்ப நேரம் நிக்காதே" வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தானவன்.
இருவரும் தவறுதலாய் முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்கவாரம்பிக்க, நடக்கத் தொடங்கியப் பின் தான் தவறுதலாய் இறங்கியது தெரிந்தது இருவருக்கும்.
பின் இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஒரு வழியாய் அலுவலகம் வந்தடைந்து அந்த ப்ராஜக்ட் மேனேஜரை சந்தித்தனர் இருவரும்.
அவர்கள் இருவருக்கும் இரண்டு கணிணியை வழங்கி அவர்களை அதில் அமரச்சொன்ன அவர், தங்களின் க்ளைண்ட் ஒரு புது ஆளை ப்ராஜக்ட்டிற்குள் எடுக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும், அனுமதி வழங்கியப்பின் நேர்முகத் தேர்வு நடைபெறுமென உரைத்துவிட்டார்.
"ஹப்பா கொஞ்சம் இன்டர்வ்யூக்கு ப்ரிப்பேர் பண்ணலாம்" என ஆசுவாசமானான் ஆஷிக்.
"அப்ப அவர் இன்டர்வ்யூ எடுக்குற வரைக்கும் நாம இந்த ஆபிசுக்கு தான் வரணுமா ஆஷிக்கு" - வாணி
"ஆமா கேபி. அதான் நான் இருக்கேன்ல. நீ ஏன் கவலைபடுற. ஒழுங்கா இன்டர்வ்யூக்கு படிப்பா" என ஆஷிக் உரைக்க,
அவனின் ஆறுதல் மொழியும் பார்வையும் அவள் மனதின் பாரத்தை வெகுவாய் குறைத்திருக்க, ஆஷிக்கின் மீதிருந்த மரியாதை நண்பனாய் அவனின் மீதான பாசத்தை வளர்த்திருந்தது அவளின் மனதில் அவளறியாமலே...
அன்று முழுவதும் அலுவலகத்தில் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர் இருவரும். அவள் ரெஸ்ட் ரூம் செல்லும் போதும் வெளியில் அவளுக்காய் காத்திருந்து அவளை பாதுகாத்து அவளின் பயத்தை வெகுவாய் குறைத்தானவன்.
அன்று மாலை இருவரும் அலுவலகத்திலிருந்து வாணி ஏரியாவிற்கு செல்லும் பேருந்தில் ஏறி அவளின் இடத்தை அடைய, அங்கிருந்து தன் இடம் செல்ல பேருந்தில் ஏறாமல், இருட்டுற நேரமாகையால் அவளுடன் அவளின் பிஜிக்கு நடந்து சென்றான்.
பிஜி நோக்கி நடந்துக் கொண்டிருந்த சமயம், "ஆஷிக், மஹா எதுவும் உனக்கு மெசேஜ் செஞ்சாளா??" எனக் கேட்டாள் வாணி.
"இல்லையே... ஏன் கேட்குற??" - ஆஷிக்.
"அப்பறம் எப்படி என் பயம் உனக்கு தெரிஞ்சுது. நான் இருக்கேன் நீ கவலைப்படாதனு எப்படி சொன்ன??" என ஆச்சரியமாய் வாணி வினவ,
"அதான் உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே... இதை வேற யாராவது வந்து சொல்லனுமா என்ன??... உன் பயத்தைப் போக்கி நான் உன்னை பாத்துக்க இருக்கேனு சொன்னப்புறம் தான் உன் கண்ணு கொஞ்சம் சிரிச்சுது... உன் முகம் கொஞ்சம் தெளிவாச்சு... ஆஸ் எ ஃபரண்டா இது கூட நான் செய்யலைனா எப்படி??" என பதிலுரைத்தவன் அவளை பிஜி வாசலில் விட்டு மறுநாள் பார்க்கலாமெனக் கூறி விடைப்பெற்று மீண்டும் பேருந்து நிலையம் சென்று தன் ஏரியாவின் பேருந்திலேறித் தன் இடத்தை அடைந்தான்.
வாணி அவனின் கரிசனமான பேச்சில் உண்டான பூரிப்பான சிரிப்புடனேயே தன் அறைக்குச் செல்ல, இவளுக்கு முன்பே அலுவலகத்திலிருந்து வந்திருந்த வேணியும் மஹாவும் மெத்தையில் அமர்ந்திருக்க,
"அட என்னப்பா அதிசயமா இருக்கு... காலையில முதல் நாள் ஸ்கூல்க்கு போற பொண்ணு போல யாரோ கண்ணை கசக்கிட்டு போனாங்க... இப்ப என்னடானா முகம் கொள்ளா சிரிப்போட வராங்க... அவங்க சிரிப்பின் ரகசியம் என்னவோ??அதன் மாயம் என்னவோ??" என மஹா வாணியைக் கிண்டலடித்தாள்.
மஹா நேற்றுக் கூறியதுப் போல், வாணிக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவளுடன் தொடர்பிலேயே இருந்தாள். அதன் பயனாய் ஆஷிக் தன்னை கவனத்திக் கொண்ட விதம் பற்றி சிலாகித்து மெசேஜாய் தள்ளியிருந்தாள் வாணி மஹாவிற்கு. அதன் பொருட்டு வந்த கிண்டல் வாசகமே இது.
இதையறியா வேணி,"என்னடி ப்ராஜக்ட்ல செலக்ட் ஆகிட்டியா??" என்று சந்தோஷத்தில் வாணியின் கையைப் பிடித்து வினவ,
"அட நீ வேற போடி..." என்று நடந்த அத்தனை நிகழ்வுகளையும் பூரிப்புடன் கூறிய வாணி,"ஆஷிக் ரொம்ப நல்லவன்டி" என்ற வாரத்தையுடன் முடித்தாளவள்.
கிண்டல் செய்ய ஒரு விஷயம் கிடைக்கும் போது சும்மா விடுவார்களா தோழிகள்,"பார்ரா ஆஷிக் பத்தி பேசும் போது பொண்ணு முகம் செவ்வானமா சிவக்குதே... ஓவரா வெட்கப்படுற மாதிரி தெரியுதே" என வேணி உரைக்க,
"ஆமாடி அம்மு... ஒரு நாள்லயே இப்படி கவுத்துப்புட்டானே நம்ம வாணிய இந்த ஆஷிக்கு பையன்" என சோக பாவனையில் நக்கலாய் மஹா உரைக்க,
"அடிங்க மங்கிகளா" என தன் தோழிகளை அடிக்கத் துரத்தினால் வாணி.
பயத்தில் ஆரம்பித்த அந்நாள் ஆஷிக்கின் அன்பால் கரிசனமான பாதுகாப்பால் இன்பமாய் நிறைவடைந்தது வாணிக்கு.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறாமல் இருக்க, செவ்வாய் கிழமை முதல் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள அலுவலகத்திற்கு வந்தவர்களை,
தன் க்ளைண்ட் அடுத்த வாரம் தான் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்புவார் என்றும், அதன் பிறகு கண்டிப்பாக அடுத்த வாரத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறுமென உரைத்து அடுத்த வாரமும் அவ்வலுவகத்திற்கு தான் இருவரும் வரவேண்டுமென வெள்ளிக் கிழமையன்று அவர்களிடம் கூறினார் அந்த ப்ராஜக்ட் மேனேஜர்.
வழமையாய் வெள்ளிக்கிழமை அன்று சென்னைப் பயணத்திற்கு தேவையான தோள்பையுடன் தான் அலுவலகத்திற்கே வருவர் வெளியூர்வாசிகள்.
மாலை அல்லது இரவு வேலை முடிந்ததும் அலுவலகத்திலிருந்து நேரடியாய் சாந்தி பேருந்து நிலையம் சென்றிடுவர் தங்களின் சொந்த ஊர் பயணத்திற்காக. அவ்வாறு தான் வாணியும் ஆஷிக்கும் தங்களின் பைகளுடன் அன்று அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அன்று மாலை இருவரும் தங்களின் பிஜிக்கு செல்லாமல் சாந்தி பேருந்து நிலையம் செல்வதாய் திட்டம். மஹா தன் அலுவலகத்திலிருந்து அங்கு வந்துவிடுவதாய் கூறிவிட்டாள்.
மாலை ஆறு மணியளவில் ஆஷிக் வாணி இருவரும் அலுவலகத்திலிருந்துக் கிளம்பி எலக்ட்ரானிக் சிட்டி பேருந்து நிறுத்தம் வந்தவர்கள் சாந்தி பேருந்து நிலையம் செல்லும் பேருந்திற்காக காக்கத் தொடங்கினர்.
நெடு நேரம் தாண்டியும் அரசு பேருந்து ஏதும் வராமலிருக்க தனியார் பேருந்து நிறைய வந்ததால் அதில் செல்லலாமென முடிவு செய்து ஓர் தனியார் பேருந்தில் ஏறினர் இருவரும்.
தனியார் பேருந்தில் ஆண் பெண் தனி தனியாய் அமர வேண்டுமென்ற விதி இல்லாததால் கிடைக்கின்ற இடத்தில் அமர்ந்திருந்தனர் மக்கள்.
இவர்கள் ஏறியப்பின் காலி இருக்கையைத்தேட, ஓட்டுனர் இருக்கேயினருகிலிருக்கும் மூன்று நபர் அமரக்கூடிய இருக்கையில் ஏற்கனவே இரு ஆண்கள் அமர்ந்திருக்க, ஓர் ஆள் அமரக்கூடிய இடம் இருந்த நிலையில் வாணியை அங்கே அமர வைத்துவிட்டு, சிறிது தள்ளி அப்பேருந்திலுள்ள தொலைக்காட்சி தெரியும்படி நின்றுக்கொண்டான் ஆஷிக்.
சிறிது நேரம் அங்கமர்ந்திருந்த வாணிக்கு தன்னருகில் அமர்ந்திருந்த ஆண்களிடம் வந்த சிகரெட் வாடை அவளுக்கு அருவறுப்பை உண்டாக்க,
நேரம் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆஷிக்கும் அவளின் கண் பார்வையில் இல்லாமல் காணாமல் போக, எழுந்து நிற்கவும் முடியாமல் அமரவும் முடியாமல் ஏது செய்யலாமென அவள் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் குறுஞ்செய்தி வந்ததற்கான் ஒலி வந்தது வாணியின் கைப்பேசிக்கு.
"என்னடி உன் ஆளோட மெய்மறந்து பயணம் செஞ்சிட்டு இருக்கியோ?? ரொம்ப கனவுல மிதக்காம சீக்கிரம் இரண்டு பேரும் வந்து சேருங்க... எனக்கு இங்க பஸ் ஸ்டாண்ட்ல தனியா ரொம்ப போர் அடிக்குது" என்று குறுஞ்செய்தி அனுப்பிருந்தாள் மஹா.
சென்னை செல்வதற்காக சாந்தி நகர் பேருந்து நிலையம் சென்றடைந்திருந்தாள் மஹா.
"அடியேய் நானே இங்கே கடுப்புல உட்கார்ந்துட்டு இருக்கேன். இதுல இந்த கிண்டல் தான் ரொம்ப முக்கியம்" என கடுப்பாய் வாணி குறுஞ்செய்தி அனுப்புவிக்க,
"அச்சோ என்னடி ஆச்சு??எதுவும் பிரச்சனையா??" என குறும்பைக் கைவிட்டு பொறுப்பாய் மஹா கேட்க,
தன் இருதலைக் கொள்ளி நிலைமையைக் குறுஞ்செய்தி அனுப்பினாள் வாணி.
இவளனுப்பிய சிறிது நேரம் ஏதும் குறுஞ்செய்தி மஹா அனுப்பாதிருக்க,
என்ன செய்வதென வாணி யோசித்துக் கொண்டிருக்க, அச்சமயம் வாணியின் முன் வந்து நின்றான் ஆஷிக்.
"எழுந்திரு வாணி. அங்க சீட் இருக்கு" என சிறிது தூரம் தள்ளி இடதுப்பக்கம் ஒரு பெண்ணின் அருகில் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதை காண்பித்தவன்,
"அந்த பாப்பாவை மடில வச்சிட்டு உட்கார்நதுக்கோ... அந்த அம்மாகிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன்" என உரைத்தவன் அக்கூட்ட நெரிசலில் அவள் ஒழுங்காய் சென்று அமர்ந்தாளாவென பார்த்துக் கொண்டு நின்றான்.
அவளை தன் பார்வை வளையத்தில் வைத்துக் கொண்டு அங்கேயே நின்றுக்கொண்டான்.
வாணியின் இருக்கையினருகில் இருந்தவர்கள் இறங்கவென எழுந்திரிக்க, மீண்டும் தன்னருகில் ஏதேனும் ஆடவன் அமர்ந்துவிட்டால் என்ன செய்யவென பயந்தவள், சைகையால் ஆஷிக்கை அழைத்து தன்னருகில் அவனை அமருமாறு கூறினாள் வாணி.
அவளருகில் அமர்ந்தவன், "ஏன் கேபி உனக்கு பிடிக்கலனா எனக்கு மெஸேஜ் செய்ய வேண்டி தானே. மஹா சொல்லலைனா எனக்கு தெரிஞ்சிருக்காது. நீயும் உனக்கு பிடிக்காமனாலும் அங்கேயே உட்கார்ந்திருப்ப என்ன?? நானும் டிவில படம் பார்க்கிற இன்ட்ரஸ்ட்ல உன்னை கவனிக்கலை. சாரி வாணி" என முதலில் ஆதங்கப்பட்டு பின் செய்யாத தவறுக்கு மன்னிப்பும் வேண்டினான் அவன்.
வாணியின் மனதில் பெரும் பாரமாய் இவனின் மீதான நல்லெண்ணம் ஏறிக்கொண்டது அந்த நிமிடம்.
அது இவன் தன் வாழ்வில், தான் இழக்கக்கூடாத நட்பாய் அவன் தன்னுடன் பயணிக்க வேண்டுமென்ற ஆசையை தூண்டியது.
தானும் அவனின் வாழ்வில் ஓர் முக்கிய நபராய் அவனுக்கு இருக்க வேண்டுமென்றும், அவனும் தன் வாழ்வில் அவ்வாறு இறுதி காலம் வரை வரவேண்டுமெனவும் அந்நேரம் அவளின் மனது கனவு மாளிகை கட்டியது அவளறியாமலே அவள் சிந்திக்காமலே.
"கேபி என்ன முழிச்சிட்டே கனவு காண்றியா??" என அவளை உலுக்கினான் ஆஷிக்.
"நீ என்னை இப்படி பார்த்துக்கிற அளவுக்கு நான் உனக்கு என்னடா செஞ்சேன்" என தன் மன உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலாது நா தழுதழுக்க வாணிக் கேட்க,
"அட கேபி... இதை போய் இவ்ளோ சீரியஸா எடுத்துக்கிட்டு இவ்ளோ இமோஷனல் ஆகுறியே நீ"
"ஒரு பையனை நம்பி அவன் கூட ஒரு பொண்ணை அனுப்பும் போது அந்த பொண்ணை பத்திரமா பாதுக்காக்க வேண்டியது அந்த பையனின் கடமை. அதுக்கு அந்த பொண்ணு அந்த பையனுக்கு தெரிஞ்ச பொண்ணாவோ ப்ரண்டாவோ தான் இருக்கனும்னு அவசியமில்லை. உன் இடத்துல எந்த பொண்ணு இருந்தாலும் இப்படி தான் நான் பார்த்துப்பேன்"
"இன்னொன்னும் சொல்றேன்... இதுவே உன் கூட அம்முவோ இல்ல மஹாவோ இருந்தாங்கனா இப்படி நான் உன்னை கவனிச்சிக்கிட்டு இருக்க மாட்டேன். அதான் கூட ஆளு இருக்குலனு போய்டே இருப்பேன். அதான் என் நேச்சர். சோ நீ நினைக்கிற மாதிரி ரொம்ப நல்ல நல்லவன்லாம் இல்ல நான்" என்றுரைத்தவன்,
"அப்பறம் என்னை நம்பி நீ வந்திருக்கும் போது உனக்கு ஏதாவது ஆச்சனா உங்கப்பா என்னை விட்டு வைப்பாரா என்ன??அந்த பயமும் தான்" என கண்சிமிட்டி கிண்டலாய் அவனுரைக்க,
"நீ ரொம்ப நல்லவன்டா ஆஷிக். எனக்கு தெரியும். என் அப்பா அண்ணாக்கு பிறகு உன் கிட்ட அந்த பாதுக்காப்பை உணர்றேன் ஆஷிக்" என தன் மனதிலுள்ளதை நெகிழ்ச்சியாய் உரைத்தாள் வாணி.
"என்ன கொடுமை சார் இது. நம்ம நல்லவன் இல்லைனு உண்மைய சொன்னாலும் இந்த ஊரு நம்மளை நம்ப மாட்டேங்குதே ஆண்டவா!!!" என அவ்வசனத்திற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அச்சூழலை இலகுவாக்க அவன் பேச, வாய்விட்டு சிரித்தாள் வாணி.
ஒருவழியாய் சாந்தி நிலையம் வந்தடைந்தவர்கள் மஹாவை கண்டுப்பிடித்து அவளுடன் சென்னைக்கு செல்வதற்காய் அவர்கள் டிக்கெட் முன் பதிவு செய்திருந்த பேருந்திலேறி தங்களின் இருக்கையில் அமர, அன்றைய நிகழ்வுகளை, ஆஷிக் மீதான தன் எண்ணங்களை மஹாவிடம் வாணி கூறிக்கொண்டே வர அவர்களின் பயணம் தொடங்கியது.
ஆனால் ஏனோ வாணியின் மனம் குழம்பிய குட்டையாய் ஆஷிக் பற்றிய பல எண்ணங்களை அசைப்போட்டவாறே இருந்தது அன்றைய நாளின் முடிவில்.
அத்தகைய குழம்பிய மனநிலையுடேனேயே சென்னை வந்துச் சேர்ந்தாளவள்.
வழக்கம் போல் வாணியும் ஆஷிக்கும் பூந்தமல்லியிலிறங்க, வாணியின் தந்தையிடம் சிறிது நேரம் பேசிவிட்டே சென்றான் ஆஷிக்.
அத்தியாயம் 5