மோனிஷா நாவல்கள்
Vilakilla Vithigal Avan - E 35
Quote from monisha on July 26, 2023, 1:34 PM35
“அப்போ துர்காதான் நந்தினி… நந்தினிதான் துர்காவா?” என்று மாலதி அதிர்ச்சியாக தியாகுவிடம் வினவ,
“ம்ம்ம்” என்றவர் தலையை மட்டும் அசைத்துவைத்தார்.
“எனக்கு ஒரு டவுட் தாத்தா… துர்கா நந்தினியா நடிக்கிறாளா? இல்ல நந்தினி துர்காவா நடிச்சாளா?” என்று கேட்க,
“எனக்கு அதை பத்தி தெரியல… ஆனா ஒன்னு… பாரதியோட வாழ்க்கையை நாசம் பண்ணத்தான் அவன் வாழ்க்கைக்குள்ள துர்கா வந்திருக்கான்னு தோணுது” என்றவர் அழுத்தமாகச் பதிலுரைத்தார்.
“ஏன் பாரதியோட வாழ்க்கையை துர்கா நாசம் பண்ணணும்… அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கணும் இல்ல”
சில நொடிகள் விட்டத்தைப் பார்த்து தீவிரமாக யோசித்தவர், “பாரதி முன்னாள் சி எம் அறிவழகனோட ஒரே வாரிசு… அதுதான் காரணமா இருக்க முடியும்” என்றதும் மீண்டும் ஜெர்க்காகிய மாலதி,
“ஒ எம் ஜி தாத்தா? என்ன நீங்க… இப்படி ஷாக் மேல ஷாக்கா கொடுக்கிறீங்க… நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? உங்க வீட்டுல இருந்த பாரதி… முன்னாள் சி எம் மோட மகனா?” என்று பெரிதாக வாயைப் பிளந்தாள்.
பாரதிக்கு பதிமூன்று வயதிருக்கும் போது அறிவழகனும் வித்யாவும் மனக்கசப்பால் தங்கள் திருமண பந்தத்தை முறித்து கொண்டனர். அதன் பின்தான் வித்யாவும் பாரதியும் அவர்கள் வீட்டில் வந்து குடியேறினர். விளக்கமாக இந்த கதையெல்லாம் தியாகு உரைக்கவும் மாலதி சந்தேகமாக,
“ஒரு வேளை துர்கா அறிவழகனோட ஆளா இருப்பாளோ… இந்த சதியை அவரே மகனுக்கு செய்திருப்பாரோ?” என்று கேட்டாள்.
“இல்ல மாலதி… அறிவழகன் பாரதியை இந்த கேஸ்ல இருந்து காப்பாத்த எவ்வளவோ முயற்சி செஞ்சாரு… பாரதிக்கிட்ட எப்படி எப்படியோ பேசி பார்த்தார்… ஆனா அவன்தான் ஒத்துக்கல… அவங்க அம்மா வித்யா எந்த சூழ்நிலையிலும் உங்க அப்பாவை தேடி நீ போக கூடாது… அவரோட உதவியையோ இல்ல அடையாளத்தையோ பயன்படுத்தவே கூடாதுன்னு திட்டவட்டமா பாரதிக்கிட்ட சொல்லி இருந்தாங்க” என்றார்.
அவர் சொன்ன அனைத்தையும் வியப்பாக கேட்டவள், “ஏன் தாத்தா? அன்னைக்கு ஒரு போட்டோ கிழிச்சீங்களே… அதுல இருந்த பாரதி சாரை நான் சரியா பார்க்கல… இப்ப பார்த்துட்டு தரேன்… கொடுக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
தியாகு உள்ளே சென்று அந்த புகைப்படத்தை எடுத்து வந்து கொடுக்க அதனைக் கூர்ந்து பார்த்த மாலதிக்கு விழிகள் வியப்பில் விரிந்தன.
“தாத்தா தாத்தா… நான் இவரை பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்” என்று அவள் பரபரக்க,
“என்ன சொல்ற மாலதி… நிஜமாவா?” என்று தியாகு ஆச்சரியப்பட,
“ஆமா ஆமா… பார்த்திருக்கேன்” என்றாள்.
“ஆனா எங்க பார்த்தன்னு ஞாபகத்துக்கு வரலயே” என்று தலையைப் பிடித்துக் கொண்டவள்,
“எங்க பார்த்தேன்… எங்க பார்த்தேன்… ஐயோ! இப்ப ரீசிண்டாதான் பார்த்தேன்… ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே.. கடவுளே” என்றவள் நிலைக்கொள்ளாமல் தவித்தாள்.
“நிதானமா யோசிச்சு பாரு… ஞாபகத்துக்கு வரும்” என்று தியாகு அவள் தோளில் தட்டி கொடுக்க,
சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவள், “ஆ… ஆன்… ஞாபகம் வந்துருச்சு… ஞாபகம் வந்துருச்சு தாத்தா” என்று துள்ளி குதித்துவிட்டு,
“எங்க டீம்ல ரீசென்ட்டா ஒரு ப்ரோக்ரம் பண்ணோம் தாத்தா … தமிழ்நாட்டு சி எம் ஆனா என்ன பண்ணுவீங்கன்னு.. அதுல அவரும் பேசியிருந்தார்” என்றவள் அதே படபடப்போடு தன் கைப்பேசியை எடுத்து அந்த நிகழ்ச்சியில் பாரதி பேசியதை தியாகுவுக்குப் போட்டு காண்பித்தாள்.
“நீங்க தமிழ் நாட்டோட சி எம் ஆனா என்ன பண்ணுவீங்க?” என்று மாலதி கேட்க,
“ஒரு வேளை அப்படி ஆனா… அப்ப நான் என்ன பண்ணுவேன்னு சொல்றேன்” என்றவன் மைக்கை நகர்த்திவிட்டு செல்ல,
“சார் சார்… சொல்லுங்க” என்றவள் தொடர்ந்து பின்னே சென்று அவனை தடுத்தி நிறுத்தி கேட்கவும் அவளை முறைத்து கொண்டே பேசினான்.
“நம்ம ஊர்ல கேள்வி கேட்கிறது கருத்து சொல்றது… இதெல்லாம் ரொம்ப சுலபமா இருக்கு இல்ல… ஆனா அதையே செயல்படுத்த சொன்னா யாராலும் முடியறதுல்ல” என்று கடுப்பாக உரைத்தவன் மேலும்,
“கவர்மென்ட் ப்ளேஸ்டிக் பொருட்களை பேன் பண்றாங்க… ஆனா நம்ம பயன்படுத்தாம இருக்கோமா? மழை நீர் சேகரிப்பு தொட்டி வைக்க சொன்னாங்க… அதை ஒழுங்கா செஞ்சோமா?
நல்ல திட்டம் கொண்டு வரலன்னு கவர்மென்ட் குறை சொல்லிட்டு ஒரு வேளை அப்படி கொண்டு வந்தா நம்ம ஒழுங்கா கடைப்பிடிக்கிறோமா? கிடையாது…
முதல நம்ம எல்லோரும் நல்ல குடிமகனா செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்கா செய்வோம்… அதுக்கு அப்புறம் முதலமைச்சர் பதவிக்கு போவோம்…
ஒரு நல்ல குடிமகனா இருக்கிறவனாலதான் சரியான முதலமைச்சரா இருக்க முடியும்” என்றவன் பொறிந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.
தியாகு அப்படியே திகைப்பில் ஆழ்ந்துவிட்டார்.
‘நீ மாறவே இல்லடா பாரதி’ என்று சொல்லி கொண்டவருக்கு அவனின் அதே நேர்கொண்ட விழிகள் தெளிவான பேச்சு அறிவார்ந்த சிந்தனையும் மீண்டும் பார்க்க மகிழ்வாக இருந்தது. ஆனால் தோற்றத்தில் முன்பை விடவும் அகண்ட உடற்கட்டமைப்பும் வலியப் புஜங்களுமாகக் காதோரம் லேசாக நரைத்த முடியும் கன்னங்களில் அடர்ந்து கருத்திருந்த தாடியும் அதீத கம்பீரத்தை அவனுக்கு அளித்திருந்தன.
தியாகு அந்த காணொளியை கண்ணீர் மல்க பார்த்து ரசித்தார்.
இத்தனை வருடங்களாக அவன் எப்படி இருக்கிறானோ என்று அவர் மனதை குடைந்திருந்த கவலை எல்லாம் ஒருவாறு நீங்கியது.
“ரொம்ப ரொம்ப நன்றி ம்மா” என்று மாலதியின் கையை பிடித்து அவர் நெகிழ்ந்து கூற,
“இதுக்கே நன்றி சொல்லிட்டா எப்படி? அவரை தேடி கண்டுபிடிச்சு… உங்க முன்னாடி நிறுத்துறேன்… அப்படி மட்டும் செய்யல என் பேர் மாலதி இல்ல” என்று சவாலாக உரைத்துவிட்டு உடனடியாக துள்ளிக் குதித்து புறப்பட்டுவிட்டாள்.
தியாகுவின் மனதில் நம்பிக்கை துளிர்விட்டது. நிச்சயமாக விரைவில் பாரதியைப் பார்த்துவிடுவோம் என்று!
மாலதி அவரிடம் சொல்லிவிட்டு கண்ணனை அழைத்துப் பேச,
“நான் கூப்பிட்டா மட்டும் வர மாட்ட… நீ கூப்பிட்டா மட்டும் நான் வரணுமா?” என்று கடுப்படித்தவனிடம்,
“ஒரு சின்ன ஹெல்ப் கூட செய்யமாட்டியா?” என்று கேட்க,
“சரி வர்றேன்” என்றான்.
காணொளியில் பாரதி இருந்த இடத்திற்கு இருவரும் சென்றனர்.
“யாரு இவங்க… நம்ம ஏன் இவரை தேடனும்?” என்று கண்ணன் வினவ,
“அதெல்லாம் நான் அப்புறமா சொல்றேன்… இந்த வீடியோ காண்பிச்சு இவர் எங்க இருக்காரு என்னன்னு விசாரி… இந்த ஏரியா முழுக்க விசாரிக்கணும்… நீ அந்தப்பக்கம் போ… நான் இந்தப்பக்கம் போறேன்” என்றவள் பாரதியை தேடுவதில் மும்முரமாக இருக்க, கண்ணனுக்குதான் எரிச்சலாக வந்தது.
“இந்த வேலை பார்க்கிறதுக்குதான் இவ்வளவு அவசரமா கூப்பிட்டாளா?” என்று கோபமாக வந்தது. வேண்டா வெறுப்பாக அவன் ஒவ்வொருவராக விசாரிக்க யாருக்கும் பாரதியைப் பற்றித் தெரியவில்லை.
“தெரியாது” இந்த பதிலைத்தான் எல்லோருமே மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.
கண்ணன் சோர்ந்து போய் அமர்ந்துவிட, மாலதியின் முகமும் வாடிப்போனது.
“கண்டுப்பிடிச்சிடலாம்னு நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்…”
“நீ தேடுறவர் இதே ஏரியாவா இருக்கணும்னு என்ன அவசியம் இருக்கு… திருச்சில அவர் எங்க வேணா இருக்கலாம்… அவர் திருச்சியே இல்லாம கூட இருக்கலாம்”
“அதெல்லாம் சரிதான்… ஆனா அவர் இந்த ஏரியா வந்திருக்காருன்னா ஏதோ ஒரு காண்டெக்ட் நிச்சயமா இருக்கும் இல்ல… அதை கண்டுபிடிக்கணும் கண்ணா” என்றாள்.
‘யாரு இவன்? நாம் எதற்காக இவனைத் தேட வேண்டும்’ என்று கண்ணனுக்கு கடுப்பாக இருந்தாலும் வேறுவழியில்லாமல் அவளுடன் தேடலைத் தொடர்ந்தான்.
அப்போது கண்ணன் எதேச்சையாக விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் பாரதியின் படத்தைக் காண்பிக்க, “இந்த அங்கிளை எனக்கு தெரியும்” என்றவள் உற்சாகமாகக் கூறினாள்.
“மாலு… இந்த பாப்பாவுக்கு இவரை தெரியுமா?” என்று அழைத்துச் சொன்னவன் அந்த சிறுமியிடம் பாரதி பற்றி விசாரிக்க,
“எங்க வீட்டுக்கு என்னை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து விட்டதே… இந்த அங்கிள்தான்” என்றாள்.
அதன்பின் மாலதியும் கண்ணனும் அந்த சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்த போது அதிர்ஷ்டவசமாக அவர்கள் மூலம் பாரதியை பற்றிய தகவல்கள் கிடைத்தது.
“தெய்வம் சார் அவரு… எங்க குழந்தையை கண்டுப்பிடிச்சு கொடுத்தவர்… சிறுமலை குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு திரும்பும் போது எங்க பாப்பாவை தொலைச்சிட்டோம்… அடர்ந்த காட்டுக்குள்ள எங்க தேடறதுன்னு ஒன்னும் தெரியல… அங்கேயே ஒரு வாரம் தங்கித் தேடிப் பார்த்தோம்… போலிஸ்கிட்ட சொல்லியும் கூட ஒன்னும் பிரயோசனம் இல்ல…
வீட்டுல எல்லோரும் ரொம்ப பயந்துட்டோம்… பாப்பாவை கண்டுப்பிடிக்க முடியாம ஊருக்கு திரும்பி ஒரு வாரம் கழிச்சுதான் இவர் நேர்ல தேடி வந்து பாப்பாவை ஒப்படைச்சிட்டு போனாரு… நாலு நாளா காட்டுகுள்ள மாட்டிகிட்டு ரொம்ப அவஸ்த்தைப்பட்டு இருக்கா… அவர் மட்டும் காப்பாத்தலன்னா எங்க பொண்ணை உயிரோடவே பார்த்திருக்க முடியாது” என்று அந்த சிறுமியின் பெற்றோர்கள் பாரதியை பற்ற மிக உயர்வாகப் பாராட்டிப் பேசக் கண்ணனும் மாலதியும் வியந்து கேட்டிருந்தனர்.
“அவரை நாங்க பார்க்கணும்… டீடைலஸ் ஏதாச்சும் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க” என்று மாலதி அவர்களிடம் விசாரிக்க அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
மாலதி தளர்ந்து நின்றுவிட்ட சமயம், “ஆனா சிறுமலையிலதான் அவர் வீடு இருக்கணும்” என்று அவர்கள் கொடுத்த தகவல் அவள் நம்பிக்கையை மீண்டும் துளிர்விட செய்தது. அவர்களுக்கு நன்றி நவின்றுவிட்டு வெளியே வந்தவள்,
“சிறுமலை… எங்க இருக்கு கண்ணா?” என்று கேட்டாள்.
“இங்கதான் திண்டுக்கல்… அது ரிஸ்ரவ்ட் பாரஸ்ட்… கார்ல போனான் ஒரு இரண்டு மணி நேரம்”
“நீ எப்படியாச்சும் கார் அரேஞ் பண்ணு… நம்ம இரண்டு பேரும் சிறுமலை போலாம்” என்றவள் சொல்லக் கண்ணன் ஆச்சரியத்தோடு,
“நிஜமாவா? நம்ம மட்டுமா… இப்போவே போறோமா?” என்று பல மாதிரியாகக் கேட்டாள்.
“ஆமா… நீ உனக்கு தேவையான திங்கஸ் எல்லாம் எடுத்துட்டு வா… நானும் போய் ரெடியாயிட்டு வந்துடுறேன்… கார் அரேஞ் பண்ணிடு… நம்ம இன்னைக்கே புறப்படுவோம்… எதுக்கும் நம்ம கேமரா மைக்கெல்லாம் எடுத்துட்டு வா” என்று அவள் பரபரவென உரைக்க, அவன் அந்த கணமே வானத்தில் பறக்க துவங்கினான்.
அவன் பதிலின்றி நின்றிருப்பதை பார்த்தவள், “ஏன் கண்ணா? உனக்கு ஏதாச்சும் ப்ராபளமா?” என்று வினவ,
“எனக்கு என்ன ப்ராபளம்… இதோ இப்பவே என் ப்ரெண்ட் கிட்ட கார் வாங்கிட்டு நானும் ரெடியாயிட்டு வந்துடுறேன்… நம்ம போலாம்” என்று ஆர்வமாகக் கூறிவிட்டு உடனடியாக புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்தான்.
அன்று மதியமே இருவரும் சிறுமலைக்கு காரில் புறப்பட்டனர்.
கார் மிதமாக அந்த நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் செல்ல,
“நான் ஏன் இவரை தேடுறேன்னு நீ கேட்ட இல்ல… இப்ப சொல்றேன்” என்று மாலதி பேச ஆரம்பிக்கவும்,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நானும் எதுவும் கேட்க போறதில்ல… இந்த ட்ரிப் என்னை பொருத்துவரைக்கும் நமக்கானது… நீயும் நானும் தனியா ரொம்ப தூரம் போக போறோம்… இப்படி உன் கூட ஒரு லாங் ட்ரைவ் போக எனக்கு அவ்வளவு ஆசை தெரியுமா?
இந்த ட்ரிப்பை அப்படியே நான் முழுசா என்ஜாய் பண்ண போறேன்… நீ ஏதாச்சும் சீரியஸான கதை சொல்லி என்னோட சந்தோசத்தை ஸ்பாயில் பண்ணிடாதே… ப்ளீஸ்” என்று ஆழ்ந்து ரசனையோடு காதல் பாட்டை ஒலிக்க விட்டு வாஞ்சையாகக் காதலியை ஒரு பார்வை பார்க்க, மாலதி மிதமாகப் புன்னகைத்தாள்.
வளைந்து நெளிந்து சென்ற அந்த சிறுமலையின் சாலையில் தொடர்ந்த அவர்கள் பயணத்தில் அழகான ஒரு காதல் கதை படிக்கும் வாசகன் போல கண்ணன் அவளுடனான அந்த தருணத்தை மனதார ரசித்தபடி வர, மாலதியோ ஏதோ திகில் கதை பக்கங்களை புரட்டுவது போல பாரதியின் வாழ்வில் அடுத்தடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆர்வத்தோடும் தேடலோடும் சென்று கொண்டிருந்தாள்.
அதேபோல துர்காவும் கூட பாரதியின் வழித்தட சுவட்டைத் தேடிக் கொண்டிருந்தாள். அந்த வரியும் குரலும் அவனுடையதுதான் என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது.
அந்த நடுநிசி இரவிலும் தன் உதவியாளர் மலரை அழைத்து அந்த பாட்டை குறித்து விவரங்களைக் கேட்டாள்.
“அந்த பாட்டோட லைன்ஸ் திடீர்னு ஃபேஸ் பக்ல ட்ரேன்டாச்சு மேடம்… யாரு பாடினது மியுசிக் போட்டதுன்னு யாருக்கும் தெரியல… முதல நிறைய பேர் இது இந்த படத்தோட பாட்டு அந்த படத்தோட பாட்டுன்னு சொன்னாங்க… ஆனா அது எந்த படத்துலயும் வரல… யாரு பாடினான்னு தெரியல… பாட்டும் வாய்ஸும் ரொம்ப நல்லா இருக்குன்னு நிறைய பேர் ஷேர் பண்ணிட்டு இருக்காங்க” என்றவள் கூற, துர்காவுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத பயம் தொண்டைக்குழியை அடைக்க, தேகத்தில் லேசான நடுக்கம் பரவியது.
‘பாரதி உயிரோடதான் இருக்கான்’ என்று எண்ணி பதட்டமானவளுக்கு அன்றைய இரவின் உறக்கம் மொத்தமாக வடிந்து போனது.
அடுத்த நாள் காலை காரியதரிசி ராஜேந்திரனை வரவழைத்து அந்த பாட்டை போட்டுக் கேட்கச் செய்தவள், “இந்த பாட்டை யார் ஃபேஸ் புக்ல போஸ்ட் பண்ணதுன்னு எனக்கு உடனே தெரியனும்” என்க,
“அது ரொம்ப கஷ்டம் மேடம்… கடலில தூக்கி போட்ட பொருளை தேடுற மாதிரிதான்… அதுவும் பேஸ் புக்ல கண்டுப்பிடிக்கிறது” என்றவன் இழுக்க, அவள் சீற்றமாக முறைத்தாள்.
“எப்படியாச்சும் கண்டுபிடிங்க… எனக்கு தெரியனும்” என்றவள் அழுத்தி கூற தயங்கி நின்ற ராஜேந்திரன்,
“மேடம் உங்களுக்கு இந்த போஸ்ட்டை போட்டவங்களை கண்டுபிடிக்கணுமா… இல்ல இந்த பாட்டை பாடினவரையா?” என்றவன் தெளிவாக கேட்க,
“இந்த பாட்டை பாடினது யாருன்னு எனக்கே தெரியும்… எனக்கு அவரைத்தான் கண்டுபிடிக்கணும்” என்றதும் ராஜேந்திரன் நம்பிக்கையாக,
“அது ரொம்ப ஈஸி மேடம்… நீங்க அவரோட போட்டோ டீடைல்ஸ் இருந்தா கொடுங்க… அவர் மட்டும் தமிழ்நாட்டுல இருந்தா ஒரே நாளில கண்டுபிடிச்சிடலாம்” என்றான்.
துர்காவின் முகம் மீண்டும் யோசனையாக மாறியது.
“பாரதியோட எந்த அடையாளமும் மிச்சம் இருக்கக் கூடாது… அவன் அறிவழகன் மாமாவோட பையன்னு யாருக்குமே எந்த காலத்திலையும் தெரிய கூடாது… அப்படி ஒருத்தன் வாழ்ந்ததுக்கான ஆதாரமே இருக்க கூடாது” என்று முகுந்தன் அவனுடைய அடையாளங்களை ஒன்று விடாமல் தேடி தேடி அழித்தான்.
அவனுடைய பதவியைக் கொண்டு அதனைச் சாதித்தவன் துர்காவிடம் அத்தகைய கட்டளையை கொடுத்திருந்தான். இந்த சந்தர்ப்பத்தில் அந்த சம்பவம் அவள் மூளைக்குள் குடைந்தது.
பாரதி வீட்டிலிருந்த அவனுடைய புகைப்படம் கல்லூரி மற்றும் பள்ளி சான்றிதழ் அவனுடைய அடையாள அட்டைகள் என்று அனைத்தையும் துர்கா கிழித்து போடுவதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்ட வசுமதி, “ஏய்… என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று கேட்டு கதவைப் பலமாகத் தட்டினாள்.
“ஐயோ! பாரதி அண்ணாவோட செர்டிபிக்கேட்… ஐடி எல்லாம் கிழிச்சு போட்டுட்டு இருக்க… பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு” என்று அவள் கத்தவும் துர்கா என்ன செய்வதென்று புரியாமல் கையை பிசைந்தபடி நின்றாள். தான் வகையாகச் சிக்கிக் கொண்டோம் என்று தோன்றியது.
“இதுக்கு மேல உன்னை விட மாட்டேன்… அப்பா வரட்டும்… இதெல்லாத்தையும் நான் காண்பிக்கிறேன்” என்றவள் கோபமாக உரைக்கும் போதே துர்கா கதவைத் திறந்தாள்.
வசு உடனடியாக உள்ளே வந்து துர்கா மீது பாய வர, துர்கா சுதாரித்து அங்கிருந்த மர கப்போர்ட்டை இவள் மீது சரித்துவிட்டாள்.
வசுமதி உள்ளே சிக்கிக் கொண்ட மறுகணமே துரிதமாக வாயிற் கதவையும் ஜன்னல் கதவுகளையும் மூடிவிட்டாள். வசுமதி எழுந்து கொள்ள முற்பட துர்கா அவளிடம் வந்து, “நான் என்னடி பண்ணேன் உனக்கு… எப்பப்பாரு நீ என் விஷயத்துல தலையிடுற” என்று ஆவேசமாக பேச,
“ஆ… வலிக்குதே!” என்று வசு வலியில் துடித்தாள். அவள் கால்கள் உள்ளே சிக்கிக் கொண்டன.
“வலிக்குது” என்று துடித்தவளை பொருட்படுத்தாத துர்கா,
“சாரி வசு… நீயாதான் என்னை இதெல்லாம் பண்ண வைக்குற… நான் இப்படியெல்லாம் உன்னை பண்ணனும்னு நினைக்கல… உனக்கு என் கஷ்டம் புரியாது…. உன்னை பார்த்துக்க நல்ல அப்பா நல்ல அண்ணன் எல்லாம் இருக்காங்க… உன்னை கைக்குள்ள வைச்சு தாங்குறாங்க… ஆனா எனக்கு… எனக்கு யாருமே இல்ல” என்று கண்ணீரோடு பேசிய துர்காவை கடுப்பாக பார்த்த வசு அந்த வலியிலும்,
“சும்மா நடிக்காதே… உன்னை பாரதி அண்ணா நல்லாத்தான் பார்த்துக்கிட்டாரு… உன்னை கல்யாணம் பண்ணிக்க கூட தயாரா இருந்தாரு… இப்போ அவர் ஜெயிலுக்கு போனது கூட உன்னை காப்பாத்தத்தான்… ஆனா நீ என்ன பண்ற அவருக்கு?” என்று கடிந்து கொண்டாள்.
“அவரு மட்டும் என்னடி பண்ணாரு எனக்கு? நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் அவரும் அவங்க அம்மாவும் என்னை அந்த ஆசிரமத்துல கொண்டு போய் சேர்த்தாங்க இல்ல” என்றவள் சீற,
“உன் நல்லதுக்காகதானே அவங்க செஞ்சாங்க” என்றாள் வசு.
“ஆமா செஞ்சாங்க… ஆனா அங்கே எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியுமாடி உனக்கு?” என்று உணர்ச்சிவசத்தோடு கண்ணீர் வழிய கேட்டவள்,
“உனக்கு நான் அதெல்லாம் சொன்னாலும் புரியாது… கதையில வேணா ராமன் சீதையை கற்போட இராவணன்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கலாம்… ஆனா நிஜத்துல அதெல்லாம் முடியாது வசு” என்று உடைந்து அழ, வசுவின் விழிகள் அவளை இரக்கமாக பார்த்தன.
“சாரி துர்கா… நான் அப்பாகிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்” என்று இறங்கி வந்தவள், “கால் ரொம்ப வலிக்குது துர்கா… ப்ளீஸ் என்னை வெளியே இழுத்துவிடேன்” என்று இறைஞ்ச அவளை குரூரமாக பார்த்த துர்கா,
“நீ உயிரோட இருந்தா எனக்குத்தான் பிரச்சனை… இதோட எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டியாகனும்… என்னை மன்னிச்சிடு” என்று சொல்லி முகத்தை துடைத்துவிட்டு எழுந்தவள் துரிதமாக சமையலறைக்குள் இருந்து எரிவாயுவை வெளியே எடுத்து அதனை திறந்து கசிய விட்டாள்.
தன் முகத்தை மூடிய ஒரு பர்தா போன்ற உடையை அணிந்து கொண்டாள். தனக்கு என்ன நிகழப் போகிறது என்று வசு கணிப்பதற்கு முன்னதாக துர்கா அத்தகைய கொடூரத்தை செய்திருந்தாள்.
‘இங்க யாரும் கெட்டவங்களா இருக்கணும்னு நினைக்கிறது இல்ல… சூழ்நிலைகள்தான் யார் எந்த பாதையில போகனும்னு தீர்மானிகுது… ஒரு வேளை பாரதி என் காதலை முதலேயே ஏத்துகிட்டு இருந்திருந்தா நான் இத்தனை பெரிய பதிவில வந்து உட்கார்ந்திருக்க முடியாது
ராஜாங்கத்தை துறந்துட்டு காட்டுல வந்து வாழுற ராமனை விட கடத்திட்டு போன ராவணன் பெட்டர்னு எனக்கு தோணுச்சு… அதுல என்ன தப்பு’ தான் செய்த காரியங்களுக்கான நியாயத்தை அவளே கற்பித்து கொண்டாள்.
தன்னை பலி கொடுக்க நினைப்பவர்களை முந்தி கொண்டு அவள் பலி கொடுத்துவிடுவதுதான் அவளுடைய நியாயம்.
பழைய நினைவுகளில் மூழ்கி சிந்தனைவயப்பட்டிருந்த துர்காவை பார்த்தபடி ராஜேந்திரன் தயக்கத்தில் நிற்க அவளாகவே தலையை உலுக்கியபடி இயல்பு நிலைக்கு வந்தாள்.
“ஆமா என்ன சொல்லிட்டு இருந்த உங்ககிட்ட” என,
“அந்த பாட்டு பாடினவரோட போட்டோ டீடையில் கொடுத்தீங்கனா” என்று அவன் வினவவும்,
புருவத்தைச் சுருக்கி நெற்றியைத் தேய்த்து கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “ஆன்… அவர் ஆயுள் தண்டனை கைதியா பத்து வருசம் ஜெயில இருந்தாரு… அதை வைச்சு கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்டதும்,
“கண்டிப்பா மேடம்… என்ன கேஸ் என்ன வருஷம்னு சொன்னீங்கன்னா கண்டுபிடிச்சரலாம்” என்றவன் திடமாக கூறினான்.
துர்கா அவனிடம் விவரத்தைக் கூறிவிட்டு, “கொஞ்சம் சீக்கிரம் தேடி சொல்லுங்க… ஆனா எதுவும் அஃபிஸியலா வேண்டாம்” என்று முடிக்க, அவனும் சம்மதமாகத் தலையசைத்தான்.
35

Quote from Marli malkhan on May 14, 2024, 3:31 AMSuper ma
Super ma