மோனிஷா நாவல்கள்
Vilakilla Vithigal Avan - E 43
Quote from monisha on August 14, 2023, 12:08 PM43
லெனின். யார் இவன்?
இந்த கேள்விக்கான விடை தெரிய வேண்டுமென்றால் கேரள எல்லையைத் தொட்டு நிற்கும் மலைச்சாரலில் அமைந்துள்ள பசுமையான காட்டுப் பகுதிக்குள் நாம் பயணிக்க வேண்டும்.
காடு என்பது வெறும் இடம் அல்ல. அது இந்த பூமியின் சுவாசம். உயிர் காற்று. இன்னும் சொல்லப் போனால் காடுதான் இன்னும் மிச்சம் மீதியாகப் பூமியில் மரங்களைக் காத்து நிற்கும் அரண்.
மிகவும் அரிய வகையான மரங்கள் மூலிகைகள் தாவரங்கள் மிருகங்கள் என்ற செல்வச்செழிப்பான அந்த காட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளும் அங்கு வன அதிகாரியாக பணிபுரியும் விக்கிரமனுக்கு அத்துப்படி. மிகவும் நேர்மையான மனிதர். அதுவே அவரின் அடையாளம். சொத்து எல்லாம்.
விக்கிரமனுக்கு அந்த காடு எந்தளவு பரிட்சியமோ அந்த காட்டிற்கும் அவர் அந்தளவு பரிட்சியம்தான். அங்கு பணிபுரியும் ஒவ்வொரு கணத்தையும் அவர் மானசீகமாக விரும்பி செய்தார்.
காடுகளில் சுற்றித் திரிவதுதான் அவரின் பொழுதுபோக்கும் கூட. மேலும் அந்த காட்டிலேயே காலம்காலமாக வாழும் மக்களுடன் கலந்து பழகி இன்னும் இன்னும் அந்த காட்டின் சிறப்புகளைக் கேட்பதும் அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
மேலும் அந்த மலைவாசிகள் எந்தளவு அந்த காட்டை நேசிக்கவும் பாதுகாக்கவும் செய்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
காட்டிற்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் இணக்கம் மாயவித்தை போல புலப்படாத ஓர் அழகான ஆச்சரியம்.
புயல், மழை, வெள்ளம், காற்று என்று எதுவும் அந்த மலைவாசிகளை அங்கிருந்து துரத்திவிட முடியாது. இயற்கை சீற்றத்தையும் தங்கள் கடவுளின் ஆசீர்வாதங்களாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அந்த காட்டில் வாழும் மிக கொடிய மிருகங்கள் கூட அவர்களை நெருங்குவதில்லை. அதேபோல தாவரங்கள் கொடிகள் மரங்களை கூட அவர்கள் தேவையில்லாமல் வெட்டுவதோ அழிப்பதோ இல்லை.
அங்கு வசிப்பவர்களுக்குப் பேசவும் புரிந்து கொள்ளவும் மொழியும் குரலும் தேவையில்லை. ஒற்றை பார்வையில் அவர்களின் புரிதலும் இணக்கமும் இருந்தது.
அதேநேரம் பூமியின் வளத்தை சரிவிகிதத்தில் காக்கும் அற்புத சக்தியாக விளங்கியது காடு என்று சொன்னால் அது மிகையல்ல.
தன்னுடைய இத்தனை வருட பணியில் காட்டை பற்றியும் காட்டில் வாழும் உயிரினங்கள் பற்றியும் நிறையவே கற்று கொண்டார் விக்ரமன். இருப்பினும் கடலின் ஆழத்தை அளப்பது போலத்தான் காட்டினை புரிந்து கொள்வதும் கூட.
நகரங்களின் வாழும் மனிதருக்கு இதெல்லாம் புரியவும் புரியாது. இவற்றை புரிந்து கொள்ளவும் அவர்கள் முனைய மாட்டார்கள்.
ஆனால் விக்ரமன் தன்னுடைய மகன் லெனினுக்குக் காட்டு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார். காட்டில் வசிப்பவர்களுடன் சேர்ந்து அவனை வளரவிட்டார்.
லெனின் பிறந்த போதே அவனுடைய தாய் இறந்துவிட்ட காரணத்தால் அவனுக்கு எல்லாமுமே அந்த வனமும் விண்ணை முட்டி நிற்கும் அந்த மலையும்தான்.
ஒரு வகையில் விக்கிரமனின் வார்த்தைகளும் அங்கு வசிப்பவர்களும் லெனின் மனதில் காட்டின் மீதான அதீத நாட்டத்தை உருவாக்கியிருந்தது.
அந்த காட்டு வாசம் லெனினுக்கு அவன் தாயின் ஸ்பரிசத்தை நினைவூட்டியது. தாய்மை உணர்வை அறியாதவன் அந்த காட்டின் ஒவ்வொரு அசைவிலும் தாய்மையைக் கண்டான்.
தாயின் மென்மையான தொடுகையில் தென்றலின் தீண்டலையும்… மலைகளை உரசிச் செல்லும் காற்றின் சத்தத்தில்… தாலாட்டு இசையும் என்று தாயில்லாத அவன் ஏக்கத்தை அந்த காடு அவனுக்கு போக்கிவிட்டது.
அவனுக்கும் காடு மிக அற்புதமான அனுபவத்தை கற்று கொடுத்திருந்தது. விடுமுறை நாட்களில் காட்டிற்குள் வசிப்பதுதான் அவன் பொழுதுபோக்கு. சந்தோஷம் எல்லாம்.
அங்கே தங்கி களிக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு அத்தனை சுவாரசியமானது. காட்டை புரிந்து கொள்வதில் படிப்பதிலும் அவனுக்குத் தனி ஆனந்தம்.
அந்த காடு முழுக்க நிரம்பியிருந்த பல்வேறு சத்தங்களான… இனிய இசை… மனதை வருடும் அமைதி… கோபமான ருத்ர தாண்டவங்கள் என்று காடு பேசும் மொழி சாமான்ய மனிதனுக்கு வசப்படாது. ஆனால் லெனினுக்கு அங்கு வசிப்பவர்களுடன் கலந்து பழகி காட்டின் பாஷை நன்கு கைவந்தது.
அவன் சந்தோஷம் துக்கம் என்று எல்லாவற்றையும் அவன் பகிர்ந்து கொள்வது அவ்விடத்தில்தான். அவன் குரலில் தொனிக்கும் உணர்வுகளுக்கு ஏற்றவாறு காற்றும் கூட தாளம் வாசிக்கும்.
அன்றும் அப்படித்தான்.
“எனக்கு மெடிக்கல் சீட் கிடைச்சிருச்சு… ஹே… ”
மருத்துவ படிப்பு என்பது அவனுக்கு மிக பெரிய இலட்சியக் கனவாக இருந்தது. அவனது சந்தோஷத்தை மலை முகட்டில் நின்று ஆர்ப்பாட்டமாக ஆட்டம் போட்டு கூப்பாடிட்டு கூற, அவன் குரலின் குதூகலத்தோடு மரங்கள் அசைந்தாடி மேகங்கள் திரண்டு இடி முழுக்க சத்தத்தில் தாளம் வாசித்து மழை பொழிந்தது.
ஈன்ற பொழுதின் பெரு துவக்கம் ஒரு தாயின் ஆனந்தக் கண்ணீர் போலத்தான் அந்த மழை அவனை நெகிழ்ச்சியால் நனைய வைத்தது.
அந்த நொடிதான் அவன் வாழ்விலேயே மிகவும் சந்தோஷமான தருணமாக உணர்ந்தான்.
அதன் பின்பு அவன் வாழ்க்கை பாதையே மாறிப்போனது. மிகுந்த உற்சாகத்துடன் நிறைய நிறையக் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் சென்னையிலுள்ள அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தான். அவன் நாட்களும் படிப்பும் சுமுகமாகச் சென்றன.
ஆனால் அவன் சந்தோஷமாக ஆர்ப்பரித்த அந்த காடு அதற்குப் பின்பு தன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் அமைதியையும் இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த மலைக் காடு மிக மோசமான மரண போராட்டத்திற்குள்ளானது.
தன் மருத்துவப்படிப்பின் கடைசி வருடத்திலிருந்தான் லெனின். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் அவனை வந்தடைந்தது.
காட்டிலுள்ள ஒரு மரத்தில் அவன் தந்தையை மலைவாசிகள் அடித்து கொலை செய்து தொங்கவிட்டார்கள் என்பதுதான் அந்த செய்தி.
தந்தையின் மரணச் செய்தியே பேரதிர்ச்சி என்றால் அவனை அன்பாக வளர்த்த மலைவாசிகள் அவரை கொலை செய்துவிட்டதாக வந்த செய்தி அதைவிடவும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
உடனடியாக ஊருக்கு புறப்பட்டு வந்தவன் தன் தந்தை இறந்திருந்த காட்சியைப் பார்த்து சொல்லற்று செயலற்று போனான்.
தந்தையின் மரணத்திலிருந்து மெல்ல மீண்டு வந்த பிறகு அவர் கொலையில் ஏதோ மிக பெரிய சூழ்ச்சி இருப்பதாக அவன் உள்மனதிற்கு தோன்ற, உண்மையைத் தேடி அவன் காட்டுக்குள் போனான்.
அவனது ஒவ்வொரு உணர்வுகளுக்கும் காற்றின் பாஷையில் பதில் சொல்லும் அந்த காடே ஊமையாக கிடந்தது.
ஜீவனற்று காட்சியளித்த அந்த காடு அவன் மனதைப் போட்டுப் பிசைந்தன.
மரங்கள் அசையவில்லை… காற்று வீசவில்லை… மிருகங்கள் அலறவில்லை.
எங்கு பார்த்தாலும் அமைதி… அமைதி… அமைதி மட்டும்தான்.
ஏதோவொரு பயங்கரமான சோகத்தைச் சுமக்கும் அமைதி அது.
மரங்கள் பலவும் தலையில்லா முண்டமாக நின்றிருந்தன.
மலைவாசிகள் தங்கியிருந்த இடத்தில் எரிந்த குடில்களும், உருண்டு கிடந்த தட்டு முட்டு சாமான்களும், இரத்தம் தோய்ந்த பாறைகளும் நடந்த கொடூரத்தின் மௌன சாட்சிகளாக மீதமிருந்தன.
என்ன நடந்திருக்கக் கூடும் என்று அவனால் யூகிக்கக் கூட முடியவில்லை.
அப்போதுதான் அந்த மலைவாசிகளில் ஒருவன் கால்கள் நொண்டி நொண்டி மலை முகட்டைப் பிடித்து மெதுவாக ஏறிவந்தான். அவன் லெனினைப் பார்த்ததும் கதறி அழுதான்.
“லெனினு லெனினு… நம்மாளுங்க யாரும் அப்பாவை கொல்லல லெனினு” என்றவன் கதற,
“எனக்கும் அது நல்லா தெரியும் அண்ணா? ஆனா என்ன நடந்ததுன்னுதான் எனக்கு ஒன்னும் புரியல” என்றவன் கேட்கவும் அந்த மனிதன் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தான்.
“போச்சு… எல்லாம் போச்சு… பாட்டாவை கொன்னுட்டாங்க… மரத்தை எல்லாம் பார்த்தியா… வெட்டி கொண்டு போயிட்டாங்க… அப்புறம் அந்த ரவுடி பையன் மாரி” என்றதும் லெனின் குழப்பமாக,
“யாரு மாரி?” என்று வினவ,
“அதான் மலை மேல கஞ்சா தோட்டம் போட்டிருந்தானே… அப்பாதானே அவனை அடிச்சு துரத்தினாறு… அவன் ஆளுங்கதான் லெனினு… அப்பாவை கொலை செஞ்சு…இங்கே வா இங்கே வா” என்றவன் பரபரப்பாக அவன் கையை இழுத்து கொண்டு சென்று,
“தோ தோ… இந்த மரத்துலதான் தொங்க விட்டாங்க… அந்த நல்ல மனுஷனை அடிச்ச்சே கொன்னுட்டாங்க… பாவிங்க” என்றதும் லெனின் இதயம் அடித்து கொண்டது. தேகமெல்லாம் நடுங்கியது.
“அப்பாஆஅ…” என்று அவன் வெடித்து அழ,
அந்த மனிதன் அவனை மெல்ல எழுப்பி சமாதானப்படுத்தினான்.
“அந்த மாரியை நான் சும்மா விட மாட்டேன்” என்று லெனின் கோபமாகக் கிளம்ப,
“மாரி வெறும் அம்புதான் லெனினு… இதெல்லாம் செஞ்சவனுங்க அவனுக்கும் மேல இருக்கவனுங்க” என்று நடந்தவற்றை முழுவதுமாக விவரித்தான்.
சட்டப்படி காட்டின் வளத்தைத் தனிமனிதன் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் இங்கே சட்டம் என்பது சட்ட புத்தகத்தில் மட்டும்தானே இருக்கிறது.
ராஜீவ். இந்தியாவின் மிக பெரிய வியாபார புள்ளி. அவன் தொடாத வியாபாரமே கிடையாது என்று கூட சொல்லலாம். இவனைப் போன்ற வியாபாரிகளுக்கு இயற்கை அழகு என்பது ரசிப்பதற்கு அல்ல. அதுவும் கூட அவர்களின் வியாபார பசிக்கு புசிப்பதற்காகத்தான்.
உலகம் முழுக்கவும் அதிகாரமும் பணமும் படைத்த வர்க்கங்கள் இது போன்ற கொடூரங்களை நொடிக்கு நொடி அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அங்கேயும் அப்படியொரு கொடூர நிகழ்வுதான் அரங்கேறியது. மும்பையின் மிக பெரிய வியாபார புள்ளி ராஜீவ் என்ற வேட்டை ஓநாயின் கண்ணில் அந்த காடு பட்டுவிட்டது.
இயற்கை வளமிக்க அந்த காட்டின் ஒவ்வொரு அடியிலும் மிகவும் அற்புதமான மூலிகை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன.
பியூட்டி கேர், ஃபேசியல் கேர், ஹேர் கேர், டூத் கேர் என்று ஆயுர்வேதிக் அழகு சாதன பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாகத் திகழ்ந்தது ராஜீவின் ஆயுர் நிறுவனம். அந்த காட்டின் மூலிகை வளம் அவனுக்குப் பூமியின் மேலிருக்கும் புதையலாகவே தென்பட்டது.
உலகளவில் அவன் நிறுவனத்தின் பொருட்களை கொண்டு சேர்க்க அவன் தேடிக் கொண்டிருந்த அபூர்வ பொக்கிஷங்கள்தாம் அவை.
ராஜீவ் தன் பணத்தாலும் அதிகார பலத்தாலும் தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தன் கைக்குள் போட்டு கொண்டான். ஆனால் எத்தனை பெரிய பெரிய ஆட்களை அவன் தன் வசப்படுத்தினாலும் விக்கிரமன் போன்ற ஒரே ஒரு நேர்மையான அதிகாரியை அவனால் விலைக்கு வாங்க முடியவில்லை.
விக்கிரமன் அவனின் செயலுக்கும் பணத்திற்கும் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. தனிமனிதனாக அவனைத் தைரியமாக எதிர்த்து நின்றார். இருப்பினும் அவர் ஒருவரால் மட்டும் நடக்கும் அக்கிரமங்களைத் தடுத்துவிட முடியாது அல்லவா.
ஆதலால் மரத்தை வெட்ட வந்த கும்பலை திட்டமிட்டு அங்கு வசிக்கும் மலைவாசி மக்களின் துணையோடு விக்கிரமன் விரட்டியடித்துவிட்டார். அவர்கள் குழு பலமுறை முயன்றும் ஒரு புல்லைக் கூட அந்த காட்டிலிருந்து பிடுங்க முடியவில்லை.
அதற்கு பிறகுதான் அந்த பயங்கரமான மனித வேட்டை துவங்கியது.
இரவோடு இரவாக மாரியும் அவன் ஆட்களும் விக்கிரமனை கொலை செய்து அங்கிருந்து மரத்தில் கட்டி தொங்க விட்டார்கள். அந்த பழியை அங்கிருந்த மலை வாசிகள் மீது போட்டார்கள். அனுமதியின்றி அவர்கள் காட்டின் மரங்களை வெட்டுவதாகவும் விலங்குகளையும் வேட்டையாடுவதாகவும் ஒரு அபாண்டமான பழியையும் சுமத்தினார்கள்.
இதனால் அவர்களை விசாரிக்க அதிகாரிகள் அந்த காட்டிற்குள் குவிந்தனர். ஆனால் விசாரணை என்ற பெயரில் அவர்கள் செய்ததெல்லாம் அக்கிரமங்களும் அட்டூழியங்களும்தான்.
அந்த அடர்ந்த காட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மரண ஓலங்கள் எதிரொலித்தன. வேட்டை மிருகங்கள் கூட அந்த சத்தத்தில் அஞ்சி நடு நடுங்கி தங்கள் தங்கள் குகைக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டன. நடந்த கொடூரங்களைக் கண்டு அந்த காடே கிடுகிடுத்துப் போனது.
இந்த சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது மனிதன் எது? மிருகம் எது? என்று வித்தியாசமே தெரியாமல் போனது.
ஒரு வகையில் மிருகங்களை விட மனிதனே பூமியில் வசிக்கும் மிக ஆபத்தான ஜந்து என்றே தோன்றியது.
மிருகத்தின் வேட்டையை விட மனித வேட்டை உச்சபட்ச நாசத்தை விளைவித்திருந்தது.
ஈவு இரக்கமே இல்லாமல் மலைவாசி பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தும் ஆண்களைக் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியும் என்று அவர்களுக்கு நேர்ந்த அக்கிரமங்கள் வெளியுலகுக்குத் தெரியாமலே மறைக்கப்பட்டது.
விலங்குகள் கூட தங்கள் பசிக்குத்தான் வேட்டையாடுகின்றன. ஆனால் மனிதன் பேராசையாலும் பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தன் இனத்தை… தன் வாழ்வாதாரத்தை என்று அனைத்திற்கும் அழிவை உண்டாக்குகிறான்.
அந்த காட்டு மனிதன் சொன்னதை எல்லாம் முழுவதுமாக கேட்ட லெனின் அழ கூட திராணியில்லாமல் பாறை மீது சரிந்தான்.
அங்கே சூழ்ந்திருக்கும் மயான அமைதிக்கான காரணம் அவனுக்கு இப்போது விளங்கிற்று. ஒரே சமயத்தில் தந்தையையும் தாயையும் இழந்து விட்ட துயரம். நெஞ்சு குழி பாரமாக அழுத்தியது.
இத்தனை பெரிய அநியாயமும் அக்கிரமும் நிகழ்ந்திருக்க, இது மக்களுக்கு ஒரு பெட்டி செய்தியாகக் கூட போய் சேரவில்லை என்பதை எண்ணும்போதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் இது போல சமூக ஊடகங்கள் இல்லை. நடந்த அநீதியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்று எண்ணிய லெனின் பத்திரிகைகளுக்கு இந்த செய்தியை நேரில் சென்று தெரிவித்தான்.
ஆனால் ஒரு பத்திரிகை கூட அந்த செய்தியை பிரசுரம் செய்ய முன்வராததுதான் அவனுக்கு வேதனையளித்தது.
தன் தந்தைக்கும் அந்த மலைவாசி மக்களுக்கும் நீதி வேண்டி மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள் என்று அவன் சென்று பார்த்த இடங்களில் எல்லாம் அவனுக்கு அவநம்பிக்கை மட்டுமே மிஞ்சியது.
யாருமே அவன் வார்த்தைகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
அந்த அதிகாரிகளில் சிலர், “தேவையில்லாத விஷயத்தில தலையிட்டு உன் எதிர்காலத்தை அழிச்சுக்காதே” என்று எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டனர்.
லெனின் மனம் தளரவில்லை. ஏதாவது ஓரிடத்திலாவது நீதி கிடைக்குமென்று நம்பிக்கை அவனுக்குள் ஆழமாக இருந்தது.
நேரடியாக முதலமைச்சர் அறிவழகனை சென்று பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்தான். அது அத்தனை சுலபமான காரியமில்லை என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவன் தன்னால் இயன்ற முயற்சியை செய்தான்.
அவன் எழுதி வைத்திருந்த மனுவை கொடுத்தனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.
ஆனால் அவர் ஒருமுறை கூட அவனைச் சந்தித்து பேச அனுமதி வழங்கவில்லை. அலுவலகத்தின் வாசலிலேயே அவன் எத்தனை மணி நேரங்கள் தவம் கிடந்தானோ?
இறுதியாக அறிவழகன் வீட்டிற்கே சென்றான். அவர் விடுவிடுவென நடந்து சென்று தன் காரில் ஏறிவிட, எப்படியாவது சந்தித்துவிடும் பதட்டத்தில் அவர் வாகனத்தின் பின்னாலேயே ஓடினான்.
அவன் கார் மீது கை வைத்து தட்டிய சில கணத்தில் காவலர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். நீதி கேட்டு வந்தவனை முதலமைச்சரை தாக்க வந்த குற்றவாளி என்று சொல்லி கைது செய்து சிறையிலடைத்தனர்.
மருத்துவன் ஆக வேண்டுமென்ற அவன் கணவன் அன்றோடு களைந்து போனது. எந்த குற்றமும் செய்யாமல் ஒரு வருட சிறை வாழ்க்கை.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது இந்த சமுதாயத்தில் அவல நிலை. இங்கே நீதி என்பது மருந்துக்கும் கூட கிடையாது. மறந்தும் கூட கிடைக்காது.
ஒரு காடே அழிந்த போது வராத இந்த கூட்டமும் கொடுக்கப்படாத நீதியும் இன்று முதலமைச்சர் காரில் தட்டிய காரணத்திற்காக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கிறது என்றால் இது என்ன ஜனநாயகம்?
அவன் உள்ளமெல்லாம் பற்றி எறிந்தது. அவனுக்குள் ஒரு காட்டு தீ கொழுந்துவிட்டது.
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் மரண ஓலமும் கூக்குரலும் அவனைத் தினம் தினம் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது. அவன் கண்களை மூடும் போதெல்லாம் நேர்மையின் ரூபமாக வாழ்ந்த அவன் தந்தையின் பிணம் தொங்கும் காட்சி கண் முன்னே வந்து பதற வைக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவின் ஸ்பரிசமாக அவன் உணர்ந்த அந்த காட்டின் மயான அமைதி அவனை ஒவ்வொரு நொடியும் கொல்லாமல் கொல்கிறது.
எப்படி அவனால் இதெல்லாம் மறந்து நிம்மதியாக ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
அவனுடைய மருத்துவ கனவு கலைந்து போனது கூட அவனுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
காட்டையும் அந்த காட்டின் மனிதர்களையும் சர்வநாசமாக்கிய ஒவ்வொருவரையும் பழி வாங்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள் அணையா தீயாகக் கொழுந்துவிட்டது.
ராஜீவை விடவும் அவனுக்குத் துணை போன அரசாங்க அதிகாரிகள் அரசியல்வாதிகளை நினைக்கும் போதுதான் அவன் உள்ளம் கொதிகலனானது.
அந்த தனி மனிதனின் கோபம் காட்டுத் தீயாக மாறி இந்த ஒட்டுமொத்த அரசாங்கத்தையே பழி வாங்க வேண்டுமென்று துடித்தது.
43

Quote from Marli malkhan on May 14, 2024, 11:54 PMSuper ma
Super ma