மோனிஷா நாவல்கள்
Vilakilla Vithigal Avan - E 54
Quote from monisha on August 14, 2023, 12:27 PM54
திருச்சி பேருந்திலிருந்து சென்னை வந்து இறங்கிய லெனினையும் நந்தினியையும் அழைத்துப் போக விஜ்ஜு காத்திருந்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் விஜ்ஜுவின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடந்தேறியிருந்தன.
கேரளா ஆசிரமத்தில் நந்தினி சிகிச்சையிலிருந்த போது அங்கே ஆதரவின்றி இருந்த வாய் பேச முடியாத பெண்ணொருத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டான். லெனின் தன்னிடமிருந்த பணத்தில் அவனுக்குச் சென்னையில் ஒரு சிறிய துணி கடை அமைத்துக் கொடுத்தான். வியாபாரத்தைச் சிறப்பாக நடத்தி இப்போது கார் வீடு என்று அவன் நல்ல வசதியான நிலையிலிருந்தான்.
ஆரம்ப காலத்தில் நந்தினியின் மீது நிறைய வெறுப்புகளும் கோபங்களும் அவனுக்கு இருந்தது உண்மை. ஆனால் அதெல்லாம் மாறி வெகுநாட்களானது. இப்போது அவளை தன் சொந்த தமக்கையாகத்தான் பாவிக்கிறான்.
காரின் பின்னிருக்கையில் நந்தினி அமைதியாக அமர்ந்து வருவதைப் பார்த்தவன், “அக்கா இன்னும் அப்படியேதான் இருக்காங்களா? எந்தவித முன்னேற்றமும் இல்லையா?” என்று கவலையுடன் கேட்டான்.
“உஹும்” என்று சிரத்தையின்றி தலையசைத்த லெனின் ஏதோ ஒரு ஆழமான யோசனையில் மூழ்க,
“என்ன அண்ணா? ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்று விசாரித்தான்.
“பாரதி பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்… அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்திருக்குமோன்னு கவலையா இருக்கு?”
“ஏன் பாரதி சார் எங்கே போயிருக்காரு?”
“துர்காவை இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கவே விட கூடாதுன்னு இரண்டு பேரும் முடிவு பண்ணி இருந்தோம்… ஆனா அதுக்கு என்ன செய்றதுன்னுதான் எங்களுக்கு ஒரு வழியும் கிடைக்கல
ஆனா பாரதி ரொம்ப சீர்யஸா இருக்கான்… ஏதாச்சும் பண்ணி அவளை ஜெயிக்க விடாம தடுத்துடணும்னு”
“அது ரொம்ப கஷ்டமாச்சே அண்ணா… இப்ப வரைக்கும் ரிசல்ட் எல்லாம் அவளுக்கு சாதகமாதான் இருக்கு… இந்த தேர்தலே ஒரு கண்துடைப்புதான்” என்று விஜ்ஜு சொல்ல,
“ஆமா… மக்களுக்கு அவளை பத்தி தெரியல… கண்ணை மூடிட்டு இன்னும் அந்த தீபம் கட்சியை நம்பி ஒட்டு போட்டுட்டு இருக்காங்க… ஆனா இந்த தடவை அவ ஜெயிச்சிட்டா… நிலைமை ரொம்ப மோசமாயிடும்…
தஞ்சாவூர் பிரச்சனை தெரியும்ல… அதை விட மோசமான ப்ரொஜெக்ட் எல்லாம் வர வாய்ப்பு இருக்கு… அந்த கோபால் வர்மா துர்காவை சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிறதே அதுக்காகதான்
துர்கா ஜெயிக்குறதும் வர்மா கைக்கு ஆட்சி போறதும் கிட்டதட்ட ஒண்ணுதான்… அவன் தமிழ்நாட்டையே நாசம் பண்ணிடுவான்… அதான் பாரதி இதுல சீரியஸா இறங்கி இருக்கான்”
“இதுல அந்த துர்காவை எதிர்த்து நாம என்ன ண்ணா பண்ண முடியும்?”
“பண்ண முடியும்… நமக்கு சாதகமா சில விஷயங்கள் இருக்கு… பாரதி உயிரோட இருக்காங்குற தகவலை துர்காவுக்குப் போய்ச் சேர வைச்சதே நாங்கதான்”
“ஐயோ! அது நமக்கே ஆப்பாகிடாதா?” என்று கேட்டு விஜ்ஜு அதிர,
“இதெல்லாம் நாங்க ரொம்ப முன்னாடி ப்ளேன் பண்ணுது விஜ்ஜு… நந்தினி மட்டும் இப்படி ஆகாம இருந்திருந்திருந்தா துர்காவை முதலமைச்சர் பதவில உட்காரவே விட்டிருக்க மாட்டோம்
இப்போ அந்த துர்கா ஒரு ஆக்டோபஸ் மாதிரி வளர்ந்து நிற்குற… இப்ப அவளை வெட்டி சாய்க்கிறது ரொம்ப கஷ்டம்தான்… ஆனாலும் முயற்சி செய்யாம நாடு எப்பாடியோ நாசமா போகட்டும்னு எங்களால விட முடியல
அதான் இப்படி ஒரு ரிஸ்கான ப்ளேனை போட்டோம்… அவளுக்கு அவளோட பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்தி அவளை டென்ஷன்படுத்தி பார்த்தோம்… அப்பதான் அவ எதாவது தப்பு செய்வா… அவளை சிக்க வைக்கலாம்னு… எலெக்ஷன்ல குழப்பத்தை ஏற்படுத்தலாம்னு காத்திட்டு இருக்கோம்
ஒரு பக்கம் அந்த முகுந்தனை வெளியே கொண்டு வந்தோம்… ஆனா அதுவும் உபயோகம் இல்லாம போயிடுச்சு… நாங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல
அதான் நந்தினியை சேஃபா அந்தமான் அழைச்சிட்டு போயிடலாம்னு… இந்த நிலைமைல அவங்ககிட்ட இவ மாட்டவே கூடாது”
“நிஜமாவா ண்ணா… எப்போ புறப்படுறீங்க?”
“நாளைக்கு நைட் ப்ளைட்” என்றவன் சொல்ல,
“அதுவும் சரிதான்… ஆனா பாரதி சார்” என்று விஜ்ஜு கேள்வி எழுப்ப,
“பாரதி இந்த பிரச்சனையை முடிக்காம வர மாட்டேன்னு சொல்லிட்டான்… அப்படி முடிக்கவே முடியலன்னா துர்காவையே முடிச்சிடுவேன்னு சொல்லிட்டு போயிருக்கான்” என்றவன் சொன்னதைக் கேட்டு விஜ்ஜு அச்சம் மேலிட,
“என்ன அண்ணா சொல்றீங்க?” என்று கேட்டான்.
“பாரதியோட கோபம் இன்னைக்கு நேத்துது இல்ல… பதினைஞ்சு வருஷ கோபம்… அம்மா லட்சியம் வாழ்க்கைன்னு எல்லாத்தையும் இழுந்துட்டு நிற்குறவனோட ஆழமான வலி… ஒரு வேளை நந்தினி நல்லா இருந்தா அவன் மனசு கொஞ்சமாவது பழசை மறந்து சமாதானமாவது ஆகி இருக்கும்” என்று பாரதியை எண்ணி லெனின் ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உரைக்க,
“உண்மைதான் அண்ணா… இப்ப அந்த துர்கா இருக்க முதலமைச்சர் பதவி நியாயப்படி பார்த்தா பாரதி சாருக்கு கிடைக்க வேண்டியது” என்றான் விஜ்ஜு.
“அந்த பதவி ஆசையிலதானே பாரதியோட வாழ்க்கையை அழிச்சுட்டாங்க… பதவி பணத்துக்காக எதையும் அழிக்கலாம்கிற இந்த வெறி பிடிச்ச அரசியலை ஒழிக்கணும் விஜ்ஜு”
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் அண்ணா… ஆனா இப்ப கூட துர்காவை எப்படி பாரதி சாரால நெருங்க முடியும்னு எனக்கு புரியல… அதுவும் அவ்வளவு கட்டுக்காவலை மீறி”
“சில விஷயங்களுக்கு ரிஷி மூலமும் நதி மூலமும் ஆராயாம இருக்கிறதுதான் நல்லது” என்று லெனின் சூசகமாக சொல்ல, விஜ்ஜுவிற்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.
“சரி அண்ணா… இதுக்கு மேல நான் எதுவும் கேட்கல” என்றவன் அமைதியாகிட லெனின் திரும்பி நந்தினியைப் பார்த்தான். அவள் யாருக்கு என்ன வந்தது என்று அமர்ந்திருந்தாள். அப்போது லெனின் பார்வை பின்னோடு சாலையை உற்றுக் கவனித்தது.
“விஜ்ஜு… நம்ம காரை ஒரு ஆட்டோ ரொம்ப நேரமா ஃபாலோ பண்ணிட்டு வர மாதிரி இருக்கு” என்று அவன் சந்தேகத்துடன் கூற, விஜ்ஜு முன்னிருந்த கண்ணாடியைப் பார்த்து,
“அந்த ஆட்டோவா ண்ணா?” என்று கேட்க,
“ம்ம்ம்… ஆமா” என்றான்.
சில நொடிகள் அவர்கள் பொறுமையாக கவனித்துக் கொண்டே வந்தனர். அந்த ஆட்டோ அவர்களை பின்தொடர்வதை நிறுத்தவில்லை.
“ஆமா அண்ணா… அந்த ஆட்டோ நம்மல ஃபாலோ பண்ணிட்டு வருது” என்று விஜ்ஜு ஊர்ஜிதமாக சொல்ல,
“சரி… நீ நான் சொல்ற ரூட்ல போ” என்றான் லெனின்.
அவன் சொன்னது போலவே விஜ்ஜு பாதையை மாற்றி சென்றான். ஆள் அரவமில்லாத தெரு வழியாக காரை செலுத்தியவன் லெனின் அறிவுரைப்படி காரை குறுக்கே நிறுத்தி அந்த ஆட்டோவை எந்த பக்கமும் போக விடாமல் வழிமறித்தான்.
லெனின் உடனடியாக தன் துப்பாக்கியை எடுத்து சட்டைக்குள் சொருகி கொண்டு கார் கதவை திறந்து இறங்க, “என்ன அண்ணா பண்ண போற?” என்று விஜ்ஜு அச்சம் கொள்ள,
“நந்தினியை பார்த்துக்கோ… நீயும் கீழே இறங்காதே” என்று சொல்லி கார் கதவை மூடிவிட்டு அவன் ஆட்டோவை நோக்கி செல்ல, மாலதியும் கண்ணனும் மிரண்டுவிட்டனர்.
லெனின் ஆட்டோவின் உள்ளே பார்த்து, “கீழே இறங்குங்க” என்று மிரட்ட, ஆட்டோக்காரன் உட்பட மூவரும் அரண்டுவிட்டனர்.
கண்ணனும் மாலதியும் மெதுவாக இறங்க அவர்கள் இருவரை பார்த்ததும் லெனின் குழப்பமடைந்தான். அவன் எண்ணிய ஆட்கள் அவர்கள் இல்லை என்று தோன்ற, “எதுக்கு எங்க காரை ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்க” என்று கேட்க இருவருமே அச்சத்தில் வார்த்தை வராமல் திகைத்தனர்.
“ஆமா… உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே?!” அப்போது கண்ணன் முந்திக் கொண்டு பதிலளித்தாள்.
“ஆமா சார்… சிறுமலையில… பாரதின்னு ஒருத்தரை தேடி வந்தோமே… நீங்க கூட இல்லன்னு சொன்னீங்க” என்றவன் நினைவுபடுத்த லெனினுக்கு ஒருவாறு அவர்கள் யாரென்று பிடிபட்டது.
“அது சரி… இப்ப எதுக்கு நீங்க என் காரை ஃபாலோ பண்ணிட்டு வந்தீங்க” என்றவன் மீண்டும் கேட்க இந்த கேள்விக்கான பதிலை மாலதிதான் சொல்ல வேண்டுமென்று கண்ணன் அவளைப் பார்க்க, அவள் தயக்கத்துடன் பேசினாள்.
“சாரி சார்… நாங்க அந்த மாதிரி பண்ணி இருக்க கூடாது… நீங்க வந்த பஸ்ல முன்னாடி சீட்லதான் நாங்க உட்கார்ந்திட்டிருந்தோம்… நீங்க இறங்கும் போதுதான் உங்களை பார்த்தோம்
அதான் உங்களை ஃபாலோ பண்ணிட்டு” என்றவள் விளக்கம் தர,
“அதான் எதுக்குன்னு கேட்கிறேன்” என்றவன் குரல் உயர்ந்தது.
“எப்படியாவது பாரதி சாரை பார்த்து பேசணும்னுதான்” என்றவள் சொல்ல, லெனின் திகைக்கலானான்.
அவள் மேலும், “திரும்பவும் தெரியாதுன்னு சொல்லாதீங்க… எங்களுக்கு எல்லாம் தெரியும்… அன்னைக்கு மட்டும் பாரதி சார் தியாகு தாத்தாவை வந்து பார்த்திருந்தா அவர் கொஞ்சம் மனநிம்மதியோடவாவது உயிரை விட்டிருப்பாரு” என்று சொல்ல லெனினுக்கு அந்த தகவல் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன… தியாகு சார் இறந்துட்டாரா?”
“ஆமா” என்றவள் வருத்தத்துடன் சொல்லிவிட்டு, “உங்ககிட்ட நான் சில விஷயம் சொல்லணும்… ஆனா இங்கேயே ரோட்ல வேண்டாம்” என்றவள் தயக்கமாக லெனினை பார்க்க,
“சரி நீங்க ஆட்டோவை கட் பண்ணிட்டு வாங்க… நம்ம கார்ல பேசிட்டே போலாம்” என்றவன் சொல்லிவிட்டு காரில் ஏறி கொண்டான்.
கண்ணன் கடுப்பாக மாலதியை முறைத்துவிட்டு, “என்னதான்டி உன் திட்டம்… பஸ்ல இருந்து ஆட்டோ காருன்னு எங்கதான் போய் சேர போறோம்” என்று கேட்க,
“இதுக்குதான் நீ என் கூட வர வேண்டாம்னு சொன்னேன்” என்றவள் ஆட்டோகாரருக்கு பணம் தந்து அனுப்பிவிட்டு காரில் ஏற போக, “இரு விட்டிட்டு போயிடாதே… நானும் வரேன்” என்று கண்ணன் வேறுவழியின்றி அவள் பின்னோடு வந்தான். இருவரும் நந்தினி அருகில் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
விஜ்ஜு காரை ஓட்டி கொண்டே, “யாரு அண்ணா இவங்க” என்று லெனினிடம் கேட்க,
“நான் சொல்றேன்” என்றவன் அவர்கள் புறம் திரும்பி, “நீங்க போக வேண்டிய அட்ரெஸ் சொல்லுங்க… உங்களை ட்ராப் பண்ணிடுறேன்” என, மாலதி விலாசத்தைத் தந்தாள்.
அதன் பின்னர் லெனின் அவளிடம், “சரி இப்ப சொல்லுங்க… தியாகு சாருக்கு என்னாச்சு?” என்று கேட்க, துர்கா ஆட்களை வைத்து தியாகுவை கடத்தியது மிரட்டியது முதற்கொண்டு அனைத்தையும் விவரமாகச் சொல்லி முடித்தாள்.
விஜ்ஜு அதிர்ச்சியுடன், “என்ன அண்ணா அந்த துர்கா இந்தளவு இறங்கி செஞ்சிருக்கா?” என,
“அவ இதுக்கு மேலயும் போவா” என்றான் லெனின்.
“அந்த துர்காவை சும்மா விட கூடாது சார்… எனக்கு மனசே ஆறல… தாத்தா கடைசி வரைக்கும் குற்றவுணர்வோடவே” என்றவள் பேசும் போதே வேதனையில் தொண்டை அடைத்தது.
அவள் விழிகளில் நீர் கோர்க்க, “அழாதே மாலு” என்று கண்ணன் அவள் கரத்தை அழுத்தி சமாதானம் செய்தான்.
லெனின் மாலதியிடம், “எனக்கு உன் வருத்தம் புரியுது மாலதி… பாரதிக்கு இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா நிச்சயம் உடைஞ்சு போயிடுவான்… பாரதி தியாகு சார் மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் வைச்சுருக்கான்… அவனால அவருக்கு எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுன்னுதான் அவன் அவரை பார்க்க வரல… ஆனா எப்ப திருச்சிக்கு வந்தாலும் எங்கேயாவது மறைவா நின்னு அவரை பார்த்துட்டு தான் வருவான்” என, மாலதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“கடைசில பாரதி பயந்த மாதிரியே ஆகிடுச்சு” என்று சொல்லி லெனின் வருத்தம் கொள்ள,
“இல்ல… இதுக்கு பாரதி சார் எந்தவிதத்திலயும் காரணம் இல்ல… நான்தான் காரணம்… நான்தான் அவரை தேடி சிறுமலைக்கு வந்து இவ்வளவு பிரச்சனையும் இழுத்துவிட்டுட்டேன்” என்று குற்றவுணர்வுடன் சொன்னவள் மேலும், “அந்த துர்காவை சும்மா விட கூடாது… அவளை ஏதாச்சும் பண்ணணும்” என்று சீற்றத்துடன் உரைத்தாள்.
அத்தனை நேரம் மௌனியாக இருந்த கண்ணன் இடைபுகுந்து, “இப்படித்தான் சார் உளறிட்டு இருக்கா… தேவையில்லாம எதுலாயவது தலையை கொடுத்து இவ பிரச்சனையில மாட்டிப்பாளோன்னு எனக்கு பயமா இருக்கு” என்றான்.
லெனின் உடனே, “கரெக்ட்தான் மாலதி… நீ இந்த பிரச்சனைக்குள் வராதே… இது உனக்கே ஆபத்தா முடிஞ்சிடலாம்… அதுவும் துர்கா ரொம்ப மோசமானவ… அவ எந்தளவுக்கு இறங்குவான்னு நம்மால கற்பனை கூட பண்ண முடியாது” என்று எச்சரித்தான். ஆனால் மாலதி தன் பிடியிலிருந்து இறங்கி வரவில்லை.
“பயந்துக்கிட்டே இருந்தா எதுவும் நடக்காது சார்… தியாகு தாத்தா இறந்ததுல இருந்து என்னால தூங்கவே முடியல… அதுவும் எங்க பாரு துர்காவோட போஸ்ட்ர் பேனர்தான்… அவ மூஞ்சியை பார்க்க பார்க்க அப்படியே பத்திக்கிட்டு வருது… எவ்வளவு பெரிய அநியாயத்தையும் துரோகத்தையும் செஞ்சிட்டு எவ்வளவு சாதாரணமா சுத்திட்டு இருக்கா… இதுல அவ தலைவியாம்” என்றவள் ஆக்ரோஷமாக பொங்க, எல்லோரும் அழுத்தமான மௌனத்துடன் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்குள்ளும் அதே அளவான கோபம் இருந்தது. ஆனால் மாலதியுடையது வெறும் கோபம் மட்டும் அல்ல. நடந்த அநியாயத்தை தட்டி கேட்க வேண்டுமென்ற தீவிரமும் இருந்தது அவள் குரலில்.
அவள் லெனினை தீர்க்கமாக பார்த்து, “நான் அந்த துர்காவை கலங்கடிக்கிற மாதிரி ஒரு திட்டம் வைச்சு இருக்கேன்” என்றாள்.
லெனின் அவளை ஆச்சரியமாக பார்க்க மாலதி தன் திட்டத்தை விவரித்தாள். பின் தன் பையிலிருந்தவற்றை அவர்களுக்கு எடுத்து காண்பிக்க நந்தினியைத் தவிர்த்து மற்ற மூவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
லெனின் அப்போது, “நீ சொல்ற மாதிரி செய்யலாம்… ஆனா இதுலயும் பெரிய ரிஸ்க் இருக்கு மாலதி” என்று கூற,
“எதுலதான் சார் ரிஸ்க் இல்ல… இப்போ இந்த வாய்ப்பை விட்டா வேற வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது… நான் சென்னைக்கு கிளம்புன போது பாரதி சாரை பார்க்கணும்னு நினைச்சிட்டுதான் கிளம்புனேன்… ஆனா பஸ்ல நானா உங்களை பார்த்துட்டேன்
என் உள்ளுணர்வு எனக்கு எதைச் சொன்னாலும் சரியா இருக்கும்… இந்த திட்டம் கண்டிப்பா நடக்கும்… நீங்க பாருங்க” என்றவள் குரலில் அத்தனை உறுதி.
லெனின் யோசனையோடு, “நான் இதை பத்தி பாரதிகிட்ட பேசறேன் மாலதி” என்றான். அதன் பின் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வரவும், “உங்க நம்பர் கொடுத்துட்டு போங்க” என்றவன் இருவரின் கைபேசி எண்ணையும் வாங்கி குறித்து கொண்டான்.
மாலதியும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்க எத்தனிக்கையில், “சார் எனக்கொரு டவுட்” என்று லெனினைப் பார்த்துக் கேட்க, அவன் என்னவென்று கேட்டான்.
“இப்ப சி எம் போஸ்ட்ல இருக்கிறது துர்கான்னா அப்போ நந்தினி எங்கே? அவங்க இருக்காங்களா?” என்று சந்தேகம் கேட்க, விஜ்ஜு மற்றும் லெனின் இருவரும் ஒரு பக்கமாக நந்தினியைப் பார்த்தனர்.
நந்தினி நந்தினி என்று மாநிலம் முழுக்க அவள் பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒருத்தி அந்த பெயரை வைத்து கொண்டு இல்லாத ஆட்டமெல்லாம் ஆடி கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த பெயருக்கு உரித்தானவள் இது எதுவும் உணராத நிலையில் தேமேனென்று அமர்ந்திருக்கிறாள்.
விதியை நொந்து கொள்வதைத் தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“என்ன சார்… அமைதியா இருக்கீங்க... அப்போ நந்தினிங்குறவங்க இப்போ உயிரோட” என்றவள் வார்த்தை முடிவதற்கு முன்பாக லெனின் மறுப்பாகத் தலையசைத்து,
“இல்ல இல்ல இருக்காங்க… ஆனா நாம நந்தினி பத்தி இப்போ பேச வேண்டாம்” என்ற லெனின் அந்த உரையாடலை முடிக்க, அவர்கள் இருவரும் புறப்பட்டனர்.
அவர்கள் சென்ற பின் லெனின் மாலதி சொன்னவற்றை யோசித்துப் பார்த்தான். எந்த வழியுமே இல்லை என்று குழம்பி நின்றவர்களுக்கு அவள் புது வழியை காட்டியிருக்கிறாள். லேசாக நம்பிக்கை எட்டி பார்த்தது.
கார் விஜ்ஜுவின் வீட்டினை அடைய அவன் மனைவி சீதா அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தாள். அவளுக்கு பேச்சுதான் வரவில்லையே ஒழிய உணர்வாலும் செயலாலும் தன் அன்பை அழகாக வெளிப்படுத்தினாள்.
நந்தினியை அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தாள். அவள் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டதில் லெனின் கொஞ்சம் நிம்மதியானான். அத்தனை நேரம் அவனுக்கிருந்த பயமெல்லாம் கொஞ்சம் விலகி ஓய்வாக அவன் சோபாவில் சாய்ந்து கொண்டு, “ஆமா உன் பையன் சந்தோஷ் எங்கே?” என்று கேட்டான்.
அவர்களுக்கு உணவு எடுத்து வந்த சீதா அவன் தூங்கிவிட்டதாக சைகை மொழியில் கூறினாள்.
விஜ்ஜுவும் லெனினும் பேசி கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர். நந்தினிக்குச் சீதா உணவு கொடுத்து அவளை அறையில் படுக்க வைத்தாள்.
“நாளைக்கு இங்கிருந்து கிளம்புற வரைக்கும் டென்ஷன்தான்… ஆனா அதுக்கு முன்னாடி பாரதியை ஒரு தடவை பார்த்து பேசிட்டா ரொம்ப நல்லா இருக்கும்”
“நீங்க ஃபோன் பண்ணி பாருங்களேன் அண்ணா”
“இல்ல விஜ்ஜு… அவன் எந்த மாதிரி சூழ்நிலையில என்ன பிரச்சனையில இருக்கான்னு தெரியாம நம்ம ஃபோன் பண்ண வேண்டாம்… அவனே பண்ணட்டும்”
உண்மையில் அப்போது பிரச்சனை பாரதிக்கு இல்லை. கருணாவிற்கு!
அவன் எப்போது போல தனிமையில் அவன் பிஏவின் மனைவியுடன் உல்லாசமாக இருக்க சென்றிருந்தான். ஆனால் அதற்குள் அவன் ஆட்கள் திருச்சியில் லெனினைப் பார்த்ததாக தகவல் உரைத்தனர்.
அதனை அந்த துர்காவிடம் சொல்லி வாங்கி கட்டி கொண்டவன் மேலும் அவள் சொன்னதால் தன் ஆட்கள் மூலமாகக் கண்காணிப்பு கேமராக்களில் தீவிரமாக அலசி எடுத்து அவர்கள் ஃபோட்டோவை அவளுக்கு அனுப்பிவைத்தான். அவன் இன்னும் என்ன வேலை சொல்வாளோ என்று அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
ஆனால் அவன் எதற்காக அங்கே வந்தானோ அந்த வேலை மட்டும் நடக்கவில்லை.
“இதுக்கு மேல இங்கிருந்தா சரியா வராது… நான் கிளம்புறேன்”
“என்னங்க அதுக்குள்ள கிளம்புறீங்க”
“வேற வழி… திரும்பியும் அந்த துர்கா ஃபோன் பண்ணி தொலைக்கிறதுக்கு முன்னாடி இப்பவே நான் கிளம்பிடுறேன்… நிம்மதியாவே இருக்க விடமாட்டா… ராட்சஸி
விஷயத்தை சொன்னாலும் ஏன் னு கேட்பா சொல்லலன்னாலும் ஏன்னு கேட்பா… மொத்ததுல என் உசுரை எடுப்ப… செத்தவன் உயிரோட இருக்கவன் இவ போட்டு கொடுக்கிறவன் லிஸ்டை தேடுறதே எனக்கு வேலையா போச்சு… நான் அமைச்சரா இருக்கேனா இல்ல அவளுக்கு அடியாளா இருக்கேனான்னு தெரியல” என்றவன் நீளமாக புலம்ப அந்த பெண் அவனையே உறுத்து பார்த்து விழித்து கொண்டிருந்தாள்.
“என்னடி அப்படியே பார்த்திட்டு நிற்குற… சட்டையை எடுத்து கொடு”
“இல்ல… இப்போ நீங்க துர்கான்னு சொன்னீங்களே… அது யாரு?” என்று அவள் தன்னுடைய முக்கிய சந்தேகத்தை எழுப்பினாள்.
“து… துர்கா…ன்னா சொன்னேன்” என்றவன் தடுமாறி திக்கி நின்றான்.
‘நந்தினின்னு சொல்றதுக்கு பதிலா துர்கான்னா சொல்லி தொலைச்சோமா’
“ஏன் அப்படி பேய் முழு முழிக்கிறீங்க… ஒரு வேளை எனக்கு தெரியாம துர்கான்னு இன்னொருத்தியை செட் அப் பண்ணிட்டீங்களா?” என்று அவன் பதட்டம் புரியாமல் அவள் கேட்டு வைக்க,
“அட! ச்ச்சே… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… நான் ஏதோ டென்ஷன்ல பேரை மாத்தி சொல்லிட்டேன்னா… இவ வேற” என்று அவன் காட்டமாக கத்திவிட்டு தன் சட்டையை அணிந்து கொண்டு கிளம்பினான். ஆனால் அவள் விடவில்லை.
“இது ஒன்னும் முத தடவை இல்ல… இப்படி இரண்டு மூணு தடவை இந்த பேரை சொல்லி இருக்கீங்க… மனசுல இல்லாமலா அந்த பேரை சொல்றீங்க நீங்க”
“மன்னாங்கட்டி… மனசுல வேற இருக்காளா… அவளே ஏறி என் தலையில உட்கார்ந்துட்டு சாகடிக்கிறான்னா நீ அதுக்கு மேல”
“இப்ப நீங்க திருப்பி யாரை சொல்றீங்க… துர்காவையா?” என்றவள் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க,
“ஐயோ… துர்கான்னு ஒருத்தி இல்லவே இல்லடி… நான் அந்த சி எம் பொம்பளையை பத்திதான புலம்பினேன்” என்று அவன் கத்திவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.
“டென்ஷனை குறைக்கலாம்னு இவகிட்ட வந்தா இவ அதுக்கு மேல நம்ம பிபி ஏத்தறா… இந்த பொம்பளைங்களே இப்படித்தான் போல” என்று தனக்குத்தானே புலம்பி கொண்டு காரை ஒட்டி கொண்டு சென்றவன்,
“எல்லாம் அந்த துர்காவால… சை! இப்ப கூட துர்கா துர்கான்னே வருது” என்றவன் தலையிலடித்து கொள்ள,
“அவ பேர் அதானே… அப்ப அப்படித்தான் வரும்” என்று கார் பின்னிருக்கையிலிருந்து ஒரு குரல் கேட்டது. அந்த நொடியே வயிற்றுக்குள்ளிருந்த குடல் வாய் வழியாக வந்து வெளியே விழுந்து விடுமளவுக்கு அதிர்ச்சியில் தூக்கி வாரி போட்டது அவனுக்கு.
பயத்தில் அனிச்சையாக அவன் கால் ப்ரேக்கில் பதியப் போக,
“வண்டியை நிறுத்தாதே” என்று பாரதி அவன் கழுத்தில் கத்தியை வைத்தான்.
“பா… ர… தி” கண்ணாடியில் அவன் கூரிய விழிகளைப் பார்த்தவனுக்குக் குரல் நடுங்கியது.
“என்னடா நம்ம இவனை கண்டுபிடிக்க ஆள் வைச்சு துரத்திட்டு இருந்தா… இவன் என்னடான்னா நம்ம கார்ல நம்ம பின்னாடியே உட்கார்ந்திட்டு வரான்னு ஷாக்கா இருக்கா?” என்றவன் கேள்விக்குக் கருணா கதிகலங்கிப் பார்க்க,
“நீ என்னை தீவிரமா தேடிட்டு இருந்த நேரத்துல நான் உன்னை தீவிரமா ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன்… எப்படா இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு” என்றான்.
“பாரதி… ப்ளீஸ் பாரதி… என்னை விட்டுட்டு ப்ளீஸ்… கொன்னுடாதே” என்றவன் கை ஸ்டியரிங்கை பிடிக்க முடியாமல் தடுமாறியது.
கார் அப்படியும் இப்படியும் வளைந்து நெளிந்து செல்ல, “ஒழுங்கா வண்டியை ஓட்டு டா… நீ ஓட்டுற லட்சணத்துல கத்தி பாட்டுக்கு உன் தொண்டை குழில இறங்கிட போகுது” என்று பாரதி சொன்ன நொடி, அவன் ஸ்டியரிங்கை அழுத்தி பற்றினான்.
பணம் மட்டுமில்லை. பயமும் கூட பத்தும் செய்யும்.
அந்த இரவு வேளையில் ஆள் அரவமில்லாத சாலையில் அந்த கார் மிதமான வேகத்தில் செல்ல கருணா அச்சத்துடன், “பாரதி என்னை எதுவும் பண்ணிடாதே… நீ என்ன சொல்றியோ அதை நான் செய்றேன்” என்றான்.
“நீ செய்ய வேண்டியதெல்லாம் ஏற்கனவே எனக்கு நிறைய செஞ்சுட்டியே”
“பாரதி” என்று கருணா அஞ்சி நடுங்க,
“ஹும்… உனக்கு செய்ய தெரிஞ்சதெல்லாம் துரோகம்தானேடா… அன்னைல இருந்து இப்ப வரை நீ திருந்தலயே… நண்பன் நண்பன்னு கூடவே பழகிட்டு என் முதுகில குத்தின… இப்போ என்னடான்னா கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்ற… உன்கிட்ட வேலை பார்க்கிற பிஏ வோட பொண்டாட்டியை வைச்சுக்கிட்டு அவனுக்கும் துரோகம் செய்ற” என்றவன் சொல்லி கொண்டே போக, கருணாவால் ஒன்றுமே பேச முடியவில்லை.
“ஏன் டா எவனுக்கும் உண்மையா இருக்க மாட்டியா நீ? ஒரு வேளை அந்த துர்காவுக்கு மட்டும் உண்மையா இருப்பியோ… நீ இல்லன்னாலும் அவ இருக்க வைச்சுருவா… அவதான் கூட இருக்கவனுக்கு துரோகம் செய்றதுல பி எச் டி முடிச்சவளாச்சே… அவளை எல்லாம் நீ ஏமாத்த இல்ல… ஏமாத்தணும்னு நினைக்கக் கூட முடியாது” என்றான்.
“இல்ல பாரதி… அந்த துர்காவும் முகுந்தனும்தான் எல்லாத்துக்கும் காரணம்… நான்… நான் எதுவும் செய்யல” என்று அவன் நடுக்கதுடன் கூறினான்.
“நீ எதுவுமே செய்யல இல்ல” என்று பாரதி அவன் கழுத்தில் கத்தியை அழுத்த,
“இல்ல பாரதி… அந்த முகுந்தன்தான் பதவி ஆசை காட்டினான்… அப்ப கூட அவங்க உன் பேர்ல கொலை பழி போட்டு ஜெயிலுக்கு அனுப்புவாங்கன்னு எல்லாம் எனக்கே தெரியாது… ஊரெல்லாம் உனக்கும் துர்காவுக்கு தொடர்பு இருக்கிறதா பரப்ப சொன்னாங்க… நான் அதை மட்டும்தான் செஞ்சேன்… இன்னும் கேட்டா எல்லாத்துக்கும் முக்கிய காரணம் அந்த முகுந்தன்தான்” என்றவன் கூறிய நொடி, பாரதியின் விழிகளில் கனலேறியது.
“எல்லோருமா சேர்ந்து ஒட்டு மொத்தமா என் வாழ்க்கையை கூறு போட்டுட்டு… அதுல நீ கொஞ்சம்… அவன் நிறையன்னு பங்கு பிரிக்கிறீங்களாடா?”என்று ஆவேசமாக கேட்டவன் மேலும் உஷ்ண பார்வையோடு,
“அவங்க எல்லாம் எனக்கு செஞ்சதை விட ஒரு நண்பனா நீ எனக்கு செஞ்ச பார்த்தியா… அதான்டா பெரிய துரோகம்” என்று சொல்ல, கருணா விதிர் விதிர்த்துப் போனான்.
“சாரி பாரதி… தப்புத்தான் பாரதி… என்னை ஒன்னும் பண்ணிடாதே” என்றவன் இறைஞ்ச, அவன் கண்களில் அந்த நொடி மரண பயம் தெரிந்தது.
“உன்னை என்ன பண்றதுன்னு அப்புறம் பார்க்கலாம்… முதல முகுந்தனை என்ன பண்ணீங்க?”
“நான் நான் ஒன்னும் செய்யல… அந்த துர்காதான்” என்றவன் அன்று நடந்த காட்சியைப் பயபக்தியுடன் விவரிக்க, ஒரு ஓரத்தில் முகுந்தனுக்காக மனம் வருத்தப்பட்டாலும் அவன் நந்தினிக்குச் செய்ததை எண்ணும் போது இந்த தண்டனை அவனுக்குத் தேவைத்தான் என்ற எண்ணம் தோன்றியது.
“துர்கா உன்னை கண்டுபிடிச்சு கொல்றதுல ரொம்ப தீவிரமா இருக்கா…”
“ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்” என்று நமுட்டு சிரிப்புடன் கூறியவன், கருணாவின் பேக்கேட்டிலிருந்த கைப்பேசியை எடுத்து கொண்டான்.
“பாரதி என்னை விட்டுடு ப்ளீஸ்” என்றவன் மீண்டும் கெஞ்ச,
“உன்னை கொல்லணும்னா என்னைக்கோ தேடி வந்து உன்னை கொன்னு இருப்பேன்… எனக்கு இப்போதைக்கு உன் மூலமா துர்காகிட்ட பேசணும்… அவ்வளவுதான்… உன் ஃபோன் லாக் சொல்லு” என்றான்.
அவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அவனிடம் தன் பேசியின் கடவுச் சொல்லைக் கூறி விட்டு நிம்மதியாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்ட அடுத்த சில நொடிகளில் எதிரே அதிவேகமாக வந்த கன்டைனர் நிலைதடுமாறி சரிந்து விழுந்தது.
அதே வேகத்தில் அது அவர்கள் காரையும் மோத வர அந்த காட்சியை பார்த்தவனுக்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் அதிர்ச்சியில் அப்படியே சிலையாக சமைந்துவிட, பாரதி உடனடியாக சுதாரித்து கார் ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பினான்.
கார் கண்டைனரில் இடிபடாமல் சாலைக்கு வெளியே சென்று விழ, ஏர் பேக்குகள் விரிந்து அவர்களுக்குக் காயம் ஏற்படாமல் காப்பாற்றியது. பாரதி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு நிமிர்ந்த போது கருணா உயிரற்று தன் இருக்கையிலிருந்து சரிந்து கிடந்தான்.
பாரதி கருணாவின் இதயத் துடிப்பை சோதித்தான். பயத்திலேயே அவன் உயிர் போய்விட்டது. அதற்கு மேல் இவன் செய்ய ஒன்றுமில்லை.
மிக பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது. அங்கே கூட்டம் கூடும் முன்பாக கருணாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு பாரதி அங்கிருந்து அகன்றுவிட்டான்.
அவனவனுக்கான முடிவை அவனவனே எழுதி கொல்கிறான்.
54

Quote from Marli malkhan on May 15, 2024, 7:26 AMSuper ma
Super ma