மோனிஷா நாவல்கள்
Vilakilla Vithigal Avan - E48
Quote from monisha on August 14, 2023, 12:16 PM48
முகுந்தன் பாரதியின் காலை பிடித்துக் கதறி அழ, அவன் எந்தவித உணர்வுமின்றி அப்படியே கல்லாகச் சமைந்திருந்தான். அவனுடைய உணர்வுகளெல்லாம் மறுத்துப் போய் பல வருடங்களானது.
இவனுடைய கண்ணீரும் மன்னிப்பும் அவனை துளியும் அசைத்துப் பார்க்கவில்லை.
சில நிமிடங்கள் முகுந்தன் அழுது தீர்த்த பின் பாரதி அவனைச் சலனமற்ற பார்வை பார்த்து, “உன்னை கொல்றதால நடந்த ஏதாவது மாறிட போகுதா இல்ல… மாத்திட முடியுமா?” என்று கேட்டான்.
முகுந்தனால் பதில் சொல்ல முடியவில்லை.
பாரதி இகழ்ச்சியாக புன்னகைத்து, “சரி… அழுது முடிச்சிட்டன்னா எழுந்திரு… நம்ம கிளம்பணும்” என, முகுந்தன் அவனை புரியாமல் பார்த்தான்.
பாரதி அவனருகில் ஒரு சாப்பாட்டு பொட்டலத்தையும் துணி பையையும் வைத்துவிட்டு, “சாப்பிட்டுட்டு சீக்கிரம் இந்த ட்ரஸை மாத்திக்கோ… உன் முகத்தில இருக்க தாடி எல்லாம் ஷேவ் பண்ணிடு” என்றான்.
‘எங்கே ஏன்’ என்பது போல முகுந்தன் குழப்பமாக பார்த்தான்.
“அதெல்லாம் போகும் போது தெரிஞ்சிப்ப… காப்பகத்துல இருந்து உன்னை ஆளுங்க தேடி வரதுக்கு முன்னாடி நம்ம இங்கிருந்து தப்பிச்சாகணும்” என்று பாரதி பரபரப்பாக கை கடிகாரத்தை பார்த்து கொண்டே சொல்ல, முகுந்தன் மறுவார்த்தை பேசாமல் அவனுடன் புறப்பட்டான்.
****
கண்ணாடி கோப்பைகளில் பல வண்ணங்களில் மது வகைகள் நிரப்பப்பட்டிருந்தன. ஆட்டமும் பாட்டமும் குதூகலமாக மதுவைக் குடித்து மதுப்பிரியர்கள் கொண்டாடிக் களித்திருந்தார்கள்.
வசதி படைத்த பணக்கார குடிகாரர்களுக்கான இடம் அது. சென்னையின் முக்கிய புள்ளிகள் பலரும் விரும்பி வரும் இடம் என்று கூட சொல்லலாம். பார்கிங் முழுக்க விலையுயர்ந்த கார்களின் அணிவகுப்புகள்.
இரவு நடுநிசியை நெருங்கவும் ஒவ்வொரு காராக அங்கிருந்து அகன்றது. ஆட்டம் பாட்டமெல்லாம் சற்றே அடங்கி அந்த நட்சத்திர பார் அமைதி நிலையை எட்டியிருந்தது.
ஆனால் ஒருவன் மட்டும் அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல், “ஒன் மோர் ப்ளீஸ்” என்று மயக்கத்தில் தள்ளாட,
“சார்… க்ளோஸிங் டைம்” என்று பணிவாக அவ்விடத்தின் சப்ளைர் வந்து சொன்னான்.
“எனக்கு இன்னும் டைம் முடியல… போ போ எடு… எடுத்துட்டு வா… ஊத்து” என்றான்
அந்த சப்ளைர் என்ன சொல்லியும் அவன் கேட்டபாடில்லை.
“எனக்கு க்ளோஸிங் டைம் ஒபனிங் டைம் எல்லாம் நோ… ஆல் டைம் டிரிங்கிங் டைம் ஒன்லி” என்றவன் விடாப்பிடியாக நின்றான்.
அவனிடம் எப்போதும் இதே தலைவலிதான் அவர்களுக்கு. தினந்தோறும் அவனுக்கு இது வழக்கமாகிவிட்டது.
அவர்களால் அவனைப் பகைத்து கொள்ளவும் முடியாது. அவனிருக்கும் இடம் அப்படி. முதலமைச்சர் நந்தினிக்கு தம்பி என்ற அடையாளத்தை சுமந்து கொண்டுதான் அவன் இப்படியெல்லாம் ஆடி கொண்டிக்கிறான்.
தற்போதைய நந்தினி என்கிற துர்கா சேஷாத்திரி குடும்பத்துடன் பெரிதாக ஒட்டி உறவாடவில்லை எனினும் கூட உறவுமுறையை மாற்ற முடியாது இல்லையா?
முகுந்தனின் குற்றம் நிரூபணமாகி அவன் தண்டனை பெற்ற பின் அறிவழகன் குடும்பத்தின் பெயரும் தீபம் கட்சியின் பெயரும் லேசாக வீழ்ச்சியைக் கண்டதென்னவோ உண்மை! ஆனால் எப்போது நந்தினி என்ற பெயரால் துர்கா பதவி ஏற்றாளோ அந்த நொடியே மீண்டும் எல்லாம் பழையபடி மாறிவிட்டது.
தீபம் கட்சியும் அறிவழகன் குடும்பமும் தமிழகத்தின் மாற்ற முடியாத அடையாளம் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமானது. திரும்பத் திரும்ப அறிவழகன் குடும்ப வாரிசுகள்தான் ஆள வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாகவே மாறியது.
துர்கா அந்த விதியை மாற்றியமைத்திருந்தாலும் அந்த பதவி அவளுக்கு நந்தினி என்ற பெயரால்தான் கிட்டியது என்பதையும் மறுப்பதற்கில்லை.
அதனால்தான் சேஷாத்திரியின் கடைசி மகன் கிருஷ் என்கிற கிருஷ்ணனின் அட்டூழியத்திற்கு எல்லோரும் பொறுத்துப் போக வேண்டியிருந்தது. நாளை அவனும் கூட முதலமைச்சரானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எப்போதும் போல அந்த பாரின் மேனேஜரே கிருஷ்ணனை காலில் விழாத குறையாக கெஞ்சி கைத்தாங்கலாக அழைத்து வந்து அவனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
ஆள் அரவமே இல்லாமல் வெறிச்சோடியிருந்த சாலையில் அந்த கார் வழுக்கி கொண்டு சென்றது.
தான் காரில் பயணித்து கொண்டிருப்பதை கூட உணராமல், “இன்னும் ஒரு லா…. ர்ஜ் கொண்டு வர சொல்லு” என்றவன் போதையில் உளர,
“கிருஷ்… டே கிருஷ்” என்று பலமாக அவன் தோளை குலுக்கி முகுந்தன் எழுப்ப முயன்றான்.
கிருஷ் ஒரு நொடி கண்களை திறந்து பார்த்தான். பூலோகமே சுழன்றது. எதிரே இருந்தவனின் உருவமும் சுழன்றது. போதை மயக்கத்தில் கிறங்கியபடி அவன்,
“ஏய் மேனேஜர்… எங்கே… னை கூட்டிட்டு வந்த” என்று வாய் குழறி பேச முடியாமல் பேச,
“நான் மேனேஜர் இல்ல… உன் அண்ணன்டா” என்றான்.
“அண்ண… னா” என்றவன் கேட்டு கொண்டே மயங்கிவிட,
“என்ன இவன் இவ்வளவு போதைல இருக்கான்… இப்போ நம்ம என்ன பண்றது” என்று முகுந்தன் அந்த காரை இயக்கிக் கொண்டிருந்த பாரதியிடம் கேட்டான்.
“இவனால நமக்கு எந்த யூஸும் இல்ல… அப்படியே இவனுக்கு மயக்கம் தெளிஞ்சாலும் நமக்கு அவன் கண்டிப்பா உதவ மாட்டான்… அவன் உன்னை மாட்டிவிடத்தான் பார்ப்பான்” என,
“என்னது?” என்று முகுந்தன் அதிர்ந்தான்.
“அவன் குடிக்க இவ்வளவு எல்லாம் செலவு பண்றது யாருன்னு நினைச்ச? எல்லாம் அந்த துர்காதான்… அவளுக்கு எதிரா உன் தம்பி நிச்சயமா எதுவும் செய்ய மாட்டான்” என்று பாரதி தெளிவுபடுத்த, முகுந்தன் முகம் கடுகடுத்தது.
‘துர்கா’ என்ற பெயரின் மீது அவ்வளவு வெறுப்பும் கோபமும் உண்டானது.
அப்போது கிருஷ்ணன் செல்பேசி ரீங்காரமிட, அவன் பேன்ட் பாக்கேட்டிலிருந்து அதனைத் தேடி எடுத்த முகுந்தன் ‘அம்மா’ என்ற பெயரை பார்த்ததும், “அம்மாதான் கூப்பிடுறாங்க… நான் பேசட்டுமா?” என்று கேட்க,
“வேண்டாம்… நீ காப்பகத்துல இருந்து காணாம போனதால அவங்க ஃபோனை எல்லாம் டேப் பண்ண வாய்ப்பிருக்கு” என்றான்.
“இப்ப நம்ம வீட்டுக்கு போனா மட்டும் கண்டுபிடிச்சிர மாட்டாங்களா?” என்று முகுந்தன் சந்தேகமாக வினவ,
“கண்டிப்பா வீட்டை சுத்தியும் ஆள் போட்ருப்பாங்க… அதனாலதான் உன் தம்பி வண்டில போகலாம்னு ப்ளேன் போட்டேன்… யாரும் அவன் காரை செக் பண்ண மாட்டாங்க… மோரோவர் உள்ளே போயிட்டா பிரச்சனை இல்ல… வீட்டுக்குள்ள பெருசா செக்யுரிட்டி இல்ல… தோட்டக்காரன்… அப்புறம் இரண்டு வேலைக்காரங்க… அவங்களும் இந்த நேரத்துல முழிச்சிருக்க மாட்டாங்க” என்று பாரதி தெளிவாக கூற, அவன் முன்னமே திட்டம் தீட்டிவிட்டுத்தான் தன்னை காப்பகத்திலிருந்து கடத்தி இருக்கிறான் என்று முகுந்தனுக்கு புரிந்தது.
கிருஷ்ணனின் காரை பார்த்ததும் வேறெதையும் கவனிக்காமல் வீட்டுக் காவலாளி கதவைத் திறந்துவிட்டான்.
முகுந்தனுக்குக் கொஞ்சம் படப்படப்பாகவே இருந்தது. போர்டிகோவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காட்டிய பாரதி, கிருஷ்ணனை கை தாங்கலாக அழைத்துச் செல்லும் சாக்கில் முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல சொன்னான்.
பாரதி மட்டும் காரை விட்டு இறங்கவில்லை.
மதியழகி சோபாவில் அமர்ந்திருந்தாள்.
கிருஷ்ணனின் கார் சத்தம் கேட்ட நொடி எழுந்து வந்த மதியழகி, “ஐயோ! இவன் ஏன் தான் இப்படி ஆயிட்டானோ? குடிச்சு குடிச்சு இப்படி உடம்பை கெடுத்துக்கிறானே” என்று புலம்பியபடி அருகில் வந்தவர் ஷாக்கடித்தது போல நின்றுவிட்டார்.
“முகு…” என்றவர் வாயைத் திறக்கப் போகவும் முகுந்தன் உடனடியாக ஜாடையில் ஏதோ சொல்ல,
தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டவர் அதன் பின் எதுவும் பேசாமல் கிருஷ்ணனை அவனுடன் அறைக்கு அழைத்து சென்றார்.
இருவரும் கிருஷை படுக்கையில் கிடத்தினர். அதன் பின் அவசரமாகச் சென்று கதவை மூடிவிட்டு வந்த மதியழகி மகனை ஆரதீர அணைத்துக் கொண்டார்.
“எப்படி இருக்க முகுந்தா…” என்றவர் அக்கறையாக மகனின் கன்னங்களைத் தாங்கி கேட்க,
“அதான் பார்க்கிறீங்களே… சாகல… உயிரோடதான் இருக்கேன்” என்றவன் பதிலளிக்க அவர் அதிர்ந்து பார்த்தார்.
“என்னடா இப்படி பேசுற… உன்னை பார்க்கணும்கிறதுக்காகதான் இந்த உயிரையே நான் பிடிச்சிட்டு இருக்கேன்” என்றவர் வருத்தமாகக் கூற,
“பார்க்கணும்னு எண்ணம் இருக்கவங்க… என்னை ஜெயில ஒரு தடவையாவது வந்து பார்த்திருக்கணும்” என்றான்.
“அந்த துர்காதான் டா உன்னை நாங்க பார்க்க விடாம செஞ்சுட்டா… இல்லாட்டி போனா உன்னை பார்க்காம நான் எப்படிறா இருந்திருப்பேன்” என்றவர் கண்ணீர் சிந்தி,
“அம்மா மேல கோபப்படாதே முகுந்தா” என்றார்.
அவன் அப்போதும் மௌனமாகத்தான் நின்றான்.
மதியழகி பாட்டுக்கு தன் வேதனையை மகனிடம் கொட்டி கொண்டிருந்தார். “இந்த வீட்டுல இருக்க ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு… பார்த்த இல்ல… கிருஷோட நிலைமையை… அவன் தினம் தினம் இப்படிதான் குடிச்சிட்டு வரான்… உன்னை எப்படியாவது வெளியே எடுத்துடலாம்னு நானும் அப்பாவும் எவ்வளவோ முயற்சி பண்ணோம்… ஆனா அந்த துர்கா சதிக்காரி… விடவே இல்லை
அவகிட்ட நேரடியா போய் கெஞ்சுனோம்… ஆனா அவ திட்டம் போட்டு உன்னை மனநல காப்பகத்துக்கு மாத்திட்டா …. பாவி… அவளாலதான் நம்ம குடும்பமே இப்படி நிலைகுலைஞ்சு போயிடுச்சு” என்றவர் கோபமாகக் கூற,
“நம்ம குடும்பம் இப்படி நிலைகுலைஞ்சு போனது அவளால இல்ல… உங்களாலதான்” என்றவன் அவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.
“என்னடா பேசுற… நம்ம குடும்பம் நாசமா போகணும்னு நான் நினைச்சேனா?!”
“நம்ம குடும்பத்துல நந்தினியும் ஒருத்தி தான்… அவ நல்லா வாழணும்னு நீங்க நினைக்கவே இல்லயே ம்ம்மா” என்றவன் கேட்ட நொடி மதியழகியின் முகம் தொங்கிப் போனது.
“அவளுக்கு நம்ம செஞ்ச பாவத்துக்கான தண்டனைதான இப்ப நீங்களும் நானும் அனுபவிக்கிறது எல்லாம்” என்றவன் தெளிவாக கூறினான்.
மதியழகியால் எதுவுமே பேச முடியவில்லை. அவர் குற்றவுணர்வோடு நிற்க, “நீங்க நந்தினி மேல காட்டின வெறுப்புதான் ம்மா சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஆழமா பதிஞ்சு போச்சு… அதனாலதான் நான் நந்தினியை காரணமே இல்லாம வெறுத்து ஒதுக்கினேன்… இன்னைக்கு அதுக்கெல்லாம் சேர்த்துத்தான் நான் அனுபவிக்கிறேன்” என்று மகன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த உண்மை அவர் நெற்றி பொட்டிலறைந்தது.
இவர்களின் சம்பாஷணைக்கு இடையில் அந்த அறையின் கதவு தட்டப்பட, இருவரும் பதட்டமாகினர்.
முகுந்தன் எங்கே ஒளிந்து கொள்வது என்று யோசிக்க,
அப்போது, “மதி” என்ற சேஷாத்திரியின் குரல் கேட்டது. இருவரும் நிம்மதி பெருமூச்செறிந்தனர்.
மதி கதவைத் திறக்க உள்ளே வந்த சேஷாத்திரி மகனை பார்த்த நொடி ஆடி போனார்.
“முகுந்தா… நீ நீ எப்படி இங்கே? தப்பிச்சு வந்தியா யார் கண்ணுலயாச்சும் மாட்டினா அப்புறம் ரொம்ப பிரச்சனையாயிடும்” என்றவர் படபடப்பாகப் பேச, அவன் அவர் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.
அவரின் முகம் பார்க்கக் கூட விழையாமல் மதியழகியிடம் திரும்பி, “வீட்டுல உங்க இரண்டு பேரை தவிர வேற யாருமில்லதானே?” என்று விசாரித்தான்.
“இல்லடா… சமையல்காரர் ஏழுமலையும் அவர் பொண்டாட்டியும் கூட அவுட் ஹவுஸ்ல தங்கி இருக்காங்க” என்று பதிலளிக்க, அவன் உடனடியாக அலைபேசியில் தகவல் அனுப்பினான்.
பின்னர் அவன், “நான் ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது” என்று சொல்லி கொண்டே அறையை விட்டு வெளியே வர,
சேஷாத்திரி அவன் பின்னோடு வந்து, “முகுந்தா நில்லு… நீ தப்பிச்சு வந்தன்னு தெரிஞ்சா அந்த துர்கா உன்னை உயிரோட விட மாட்டா” என்றார்.
அத்தனை நேரம் அவர் முகத்தைக் கூட பார்க்காமல் தவிர்த்தவன் அவர் சொன்ன வார்த்தையை கேட்டு திரும்பி பார்த்து, “போதும் உங்க அக்கறை… பெத்த மகளையே உங்க சுயலாபத்துக்காகப் பலி கொடுத்தவர்தானே நீங்க” என்று அழுத்தமாக கூற,
மதியழகி சேஷாத்திரி இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர். அவனுக்கு எப்படி உண்மை தெரிந்ததிருக்கும் என்ற அதிர்ச்சிதான் அவர்களுக்கு.
அவர்களின் உணர்வுகளை அவன் கண்டு கொள்ளாமல் பின் வாசல் கதவைத் திறந்து பாரதியை உள்ளே வரச் செய்தான். மதியழகியும் சேஷாத்திரியும் பேச்சற்று நின்றனர்.
“என் ரூம் மேல இருக்கு… அங்கதான் நான் எல்லாத்தையும் வைச்சேன்” என்று பாரதியிடம் சொன்னவன் பின் மதியழகியிடம் திரும்பி,
“என் ரூம்ல இருக்க திங்க்ஸ் எதையும் நீங்க எடுக்கவோ மாத்தி வைக்கவோ இல்லயில்ல” என்று கேட்க, மதியழகி இல்லையென்பது போல தலையசைத்தார். அவருக்கு இப்போது நடப்பது ஒன்றும் புரியவில்லை.
அவர்களிடம் பேசி நேரத்தை வீணாக்காமல் முகுந்தன் தன்னறைக்கு பாரதியை அழைத்து சென்றான். அங்கே அவனுடைய பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அவன் படுக்கைக்குக் கீழே இருந்த பெரிய பெட்டியை வெளியே எடுத்தான்.
“இதெல்லாம் நீலாங்கரை பங்களால நந்தினி ரூம்ல இருந்து எடுத்த திங்க்ஸ்…” என்றான்.
பாரதி அந்த பெட்டியை திறந்து பொருட்களை ஆராய்ந்தபடி முகுந்தனிடம், “ஆமா… ஏன் நீ இதெல்லாம் நந்தினி வீட்டுல இருந்து எடுத்த” என்று விசாரித்தான்.
“என்னை பத்தி தீபம் சேனல நியுஸ் வந்த பிறகு என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க… நான் ஜாமீன்ல வந்த பிறகுதான் ஆளுங்களை கூட்டிட்டு அங்கே போய் அந்த வீட்டையே துவம்சம் பண்ணிட்டு வந்துட்டேன்
அப்ப இருந்த கோபத்துக்கு அந்த வீட்டையே எரிச்சிடணும்னு… ஆனா வர்மா ஜீதான் நந்தினிகிட்ட ஏதோ முக்கியமான ஆதாரம் இருக்கு… அது வேணும்னு சொன்னாரு… அவகிட்ட இருந்த டாகுமென்ட்ஸ் சுவிஸ் அகௌன்ட் டீடெயில்ஸ் அப்புறம் அந்த துபாய் ஓட்டல் பத்தின டீடையில் அவ லேப்டாப் எல்லாம் அவர்கிட்ட எடுத்து கொடுத்திட்டேன்… இதெல்லாம் மிச்சமா இருந்த திங்க்ஸ்…
எல்லாத்தையும் கொளுத்திடலாம்னுதான் நினைச்சேன்… அதுக்குள்ள கேஸ் பெருசாகி என்னை திரும்பியும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க” என்றவன் சொல்லி கொண்டிருக்க, அப்போது பாரதி உள்ளே இருந்த புறா பொம்மை ஒன்றை கையிலெடுத்தான்.
“லூசு பசங்க… நந்தினி ரூம்ல இருந்த பொம்மையைக் கூட விட்டு வைக்கல” என்று முகுந்தன் சொல்ல, பாரதிக்கு அது வெறும் பொம்மை என்று தோன்றவில்லை.
அன்று நந்தினியின கையில் இந்த புறா பறந்து வந்து விழுந்தது அவன் நினைவுக்கு வந்தது. இந்த பொம்மையில் நந்தினிக்கு மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது.
மேலும் அவன் ஆராயும் போது இரண்டு ஜோடி புறாக்களை இணைத்தபடி ஒரு அழகான பரிசு பெட்டி கண்ணில்பட்டது.
அதனைப் பார்த்த நொடி முகுந்தன் அவஸ்தையோடு, “இது நந்தினி உனக்காகச் செஞ்சி வைச்சிருந்த கிஃப்ட் பாரதி” என்றான்.
பாரதி அவனை நிமிர்ந்து பார்க்க, “இந்த கிஃப்டை நான் உடைச்சிர போறன்னு பயந்து நந்தினி என்ன பண்ணா தெரியுமா?” என்றவன் அன்று நடந்தவற்றை அப்படியே அவனிடம் விவரித்தான்.
அவள் தன் சான்றிதழ்கள் அடையாள அட்டைகளை எல்லாம் எரித்துவிட்டதைச் சொன்ன போது பாரதி அதிர்ந்துவிட்டான்.
“அவ உன்னை எந்தளவுக்கு காதலிச்சான்னு வெறும் வார்த்தையால சொல்ல முடியாது பாரதி… நான்தான்… துர்காவை உன் வாழ்க்கையில அனுப்பி எல்லாத்தையும் மொத்தமா கெடுத்துட்டேன்” என்று முகுந்தன் வருந்திக் கூற, அத்தனை நேரம் சலனமற்று இருந்த பாரதியின் முகம் சிவந்தது. கண்கள் கலங்கின.
பாரதி அந்த பொம்மையை வேதனையோடு பார்த்திருக்க முகுந்தன் அதன் சுவிட்சை போட்டு, “ப்ளே” என்றான்.
‘சுட்டும் விழிச் சுடரே கண்ணம்மா’ என்று அவன் குரலில் பாட்டிசைக்க, துக்கத்தில் பாரதியின் தொண்டை அடைத்தது. அவன் குரல் அவனுக்கே சோகத்தை வாரி இறைத்தது.
என்னவென்று சொல்ல முடியாத உணர்வு. இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வலி. அந்த ஜோடி புறாக்களுக்குக் கீழே இருந்த பெட்டியை அவன் மெல்லத் திறந்து பார்க்க, அவன் கண்ணீர் அணை உடைந்தது.
அவன் தன் அம்மாவிற்காக தன் கைகளாலேயே செய்து பரிசளித்த வளையல்.
‘என்னை ஏன் நந்தினி இந்தளவுக்கு காதலிச்ச… அப்படி என்ன உனக்கு நான் செஞ்சிட்டேன்’ என்றவன் தினம் தினம் கேட்டு கொண்டிருக்கும் கேள்விக்கு அவனுக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை.
அந்த நொடி கத்தி கதறி அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அந்த பெட்டியிலிருந்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்து தான் கொண்டு வந்த பையில் இடமாற்றி கொண்டான்.
பின் அவன் முகுந்தனிடம், “இனிமே நீயும் நானும் ஒண்ணா இருக்க வேண்டிய அவசியமில்ல… நீ உன் வழியை பார்த்துட்டு போ… நான் என் வழியை பார்த்துட்டு போறேன்” என்றவன் அறையை விட்டு வெளியேறிச் செல்ல,
“பாரதி ப்ளீஸ் என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போ” என்றபடி அவன் பின்னோடு நடந்தான்.
பாரதி அவனை தவிர்த்துவிட்டு செல்ல அப்போது சேஷாத்திரி அவனை வழிமறித்து, “ஒரே ஒரு விஷயம் உன்கிட்ட கேட்கணும் பாரதி” என்றார்.
அவன் அமைதியாக அவரை என்ன என்பது போலப் பார்த்தான்.
சேஷாத்திரியின் கண்களில் நீர் நிறைந்தது. அவனை வேதனையோடு பார்த்தவர், “நந்தினி உண்மையிலேயே செத்துட்டாளா?” என்று கேட்க, முகுந்தன் மதியழகி முதற்கொண்டு எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி பரவியது.
பாரதி பதில் சொல்லாமல் அவரை கூர்ந்து பார்த்தான். அந்த பார்வையில் ஆயிரமாயிரம் கேள்விகள்.
சேஷாத்திரி குற்றவுணர்வோடு, “அவ உயிரோட இருந்தா அவ காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும்னு ஒரு நப்பாசைதான்” என்றார்.
அவரை அலட்சியமாக பார்த்தவன், “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
48

Quote from Marli malkhan on May 15, 2024, 12:24 AMSuper ma
Super ma