மோனிஷா நாவல்கள்
Womens day wishes
Quote from bhagyasivakumar on March 8, 2020, 8:13 PMஅனைத்து மகளிருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில். நீங்கள் சாதிக்க விரும்புவதை முதலில் கனவு காணுங்கள். அதற்கான முயற்சியில் இறங்குங்கள் ,நிச்சயம் வெற்றி ஒரு நாள் உங்களை வந்தடையும்.
உங்கள் குடும்பத்தை ஓர் பல்கலைக்கழகமாக்குங்கள். உங்களது அறிவாற்றலை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லதை எப்போதும் தைரியமாக கூறுங்கள். தவறுகளை நாசுக்காக சுட்டிக்காட்டி அவர்களை நல்வழி படுத்துங்கள். உங்கள் சமையல் திறனை நாளுக்கு நாள் அதிகப்படுத்துங்கள். சமையல் என்பது கூட ஓர் கலையே.
எப்போதும் தன்னம்பிக்கையை கைவிடாது இருங்கள். முடிந்தவரை கோபத்தை குறைத்து மற்றவரை எளிதாக புரிந்து கொள்ள முயலுங்கள். நல்ல நட்பு வட்டாரத்தை உருவாக்குங்கள். தேவையற்ற நட்புக்களை தவிர்க்கவும். உறவினர்களுடன் உறவாடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சந்தோஷமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருப்பது ஒரு வகையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவி புரியும்.
நன்றி வணக்கம்.
அனைத்து மகளிருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில். நீங்கள் சாதிக்க விரும்புவதை முதலில் கனவு காணுங்கள். அதற்கான முயற்சியில் இறங்குங்கள் ,நிச்சயம் வெற்றி ஒரு நாள் உங்களை வந்தடையும்.