kavalum kadhalum-8
8
ஆனந்தியும் ஆதியும் ஒருவருக்கொருவர் புரிந்து இருந்தாலும் இன்னும் கணவன் மனைவியாய் தாம்பத்ய உறவில் ஒன்று சேரவில்லை .முதலிரவன்று அவளுக்கு அந்த நாட்கள் ஏற்பட்டதால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதற்கு பின்பு ட்யூட்டியில் சேர்ந்து வழக்கம் போல் பணிபுரியும் பிஸியில் இதை பற்றி சிந்திக்கவில்லை.
இப்பவரைக்கும் எதுவும் நடக்கவில்லை என்று குடும்பத்தில் எவருக்கும் தெரியாது… அட இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமாம் என்று யாரிடமும் சொல்லாது இருவரும் மூடிமறைக்க… இன்னியோட கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆனது எனவே மாமியார் காமாட்சி இவர்கள் ஒன்று சேர்ந்த நாள் சரி தானே அப்படி என்றால் ஒரு மாதம் கடந்த நிலையில் நல்ல செய்தி இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அதை நாசுக்காக மருமகளிடம், “ம்ம்ம் ஆனந்தி உன் கிட்ட ஒன்னு கேக்கனும்” ..என்று தயங்கியபடி ஆரம்பிக்க
“சொல்லுங்க அத்தை” (ஆ..ஆ கிழவி இதை தான் கேக்க போகுது னு அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது)
“அம்மாடி இப்ப உனக்கு தலை கில எதாவது சுத்துற மாதிரி இருக்கா”?
“அட போங்க அத்தை எனக்கு என்ன லோ பி.பி இருக்கு?” என்று வேண்டுமென்றே அவள் நக்கல் அடிக்க..
“சரி அது போகட்டும் வாந்தி கீந்தி வருதா?” என்று மீண்டும் அதையே சுட்டி கேக்க… வெடுக்கென்று அவள்
“அத்தை நான் என்ன நோயாளி யா என்ன?” என்று சிரிப்பை அடக்க முடியாது ஆனந்தி இதை சொல்லிவிட்டு சிரிக்க.
“அட கழுத…இவ நம்ப சொல்றது புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே?” என்று சுண்டக்காய் போல முகத்தை சுருக்க, அத்தையின் முகம் வாட்டம் புரிந்தாலும் வேறு…வழியில்லை இந்த சங்கடமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க.
இதை கதவுக்கு பக்கத்தில் நின்று ஒட்டுகேட்ட ஆதி….”ச்ச இன்னைக்கு எப்படியாச்சும் இதை நடத்திரனும் இல்லாவிட்டால் ஒவ்வொரு மாதமும் தாயின் குடைச்சல் ஆனந்தியால் தாங்க இயலாது என்று எண்ணி முதலிரவிற்கு தேவையான மல்லிகை பூவும், வாசனை திரவமும் வாங்கி வர கடைக்குச் சென்றான்.
கடைக்கு போனால் அங்க அவன் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு எதிர்பாராத விதமாக வந்திருந்தார்.
“சார்? என்ன லெமன் ப்ளேவர் ரூம் ஸ்ப்ரேவா ?கும்முனு இருக்குமே வாசனை, என்ன சார் வீட்டில் எதாவது விசேஷம் நடக்குதா?” என்று கேட்டுவிட
“ம்ம்ம் ஆமான் டா யப்பா விசேஷம் தான்” என்று நொந்து கொள்ள
“சார் சொல்லியிருந்தா வந்து ஹெல்ப் பன்னியிருப்பனே? எதாவது ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டான் அப்பாவியாக..
“யோவ் ஏட்டு இது ஹெல்ப் பன்ற விசேஷம் இல்லை டா…கம்முனு போய் உன் வேலையை பாரு”
“ம்ம்ம் அப்படி என்ன விசேஷம் சார் வீட்டில் சொல்லவே மாட்டேங்குறிங்க” என்று மறுபடியும் துருவி துருவி ஆதியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க
“ஏண்டா சத்தியமா நீ இரண்டு புள்ள பெத்தவன் தானா? இவ்ளோ வெகுளியா இருக்க?” நான் வாங்குற பொருள்களை பார்த்தும் கூடவா எதுக்கு வாங்குறேனு புரியல?” என்று ஏட்டிடம் சொல்லி புரியவைக்க
“ஓ….ஓ….புரிஞ்சிருச்சு…ரை ட்டு . சார் அப்படினா லெமன் ஃப்ளேவர் வேண்டாம். ம்ம் இதோ இந்த ஸ்ட்ராபரி வாசனை வருமே அந்த வாசனை திரவம் வாங்கிக்கோங்க..
“அது சரி …அனுபவம் பேசுது”. என்று இந்த முறை ஆதி அவனை கிண்டல் செய்ய
“அட போங்க சார் எனக்கு வெக்க வெக்கமா வருது” என்று முகத்தை திருப்பிக்கொள்ள
“ப்பா வெக்க படுறத என்னால பார்க்க முடியல தயவு செய்து கிளம்பிடு”.என்று அவனை விரட்டிவிட
“ம்ம்ம்…. கிளம்புறன் சார் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் அந்த ராகவா கேஸ் ல அவனை கொன்னது யாருன்னா… ஒருபொண்ணு சார் க்ளூ கிடைச்சிருக்கு .ஆனால் அந்த பொண்ணு யாருன்னு சத்தியமா யூகிக்க முடியல… ஆனால் அது அதே தாமரை அப்பார்ட்மண்டுன்னு சொல்றாங்க” என்று க்ளூ கிடைத்த விஷயத்தை இவன் காதில் போட்டுவைக்க
“யோவ் அந்த ஆளை யார் கொன்னாங்க னு யோசிக்கிற மூடு ல நான் இல்லை…அந்த பொறுக்கி செத்தது நல்லதே.. சாவட்டும். நான் கிளம்புறன்.”என்று பைக்கை கிளப்பி கூலிங் க்ளாஸ் அணிந்து விரைந்தான்.
வீட்டில் விஷயம் தெரிந்து ஆனந்தியும் தயாராகிக்கொண்டு இருந்தாள். இதற்கிடையில் அவளுடைய நாத்தனார் அவளிடம்
“அண்ணி….என்ன ?இன்னைக்கு புடவை ல கட்டி அழகா இருக்கீங்க நீங்களும் அண்ணனும் எங்க கிளம்ப போறிங்க”
“ஏதோ ரிஸார்ட் கூட்டிட்டு போறதா சொன்னார். இன்னைக்கு நைட் அங்க தான் தங்க போறோம்”.
“ஓ….நடத்துங்க நடத்துங்க…குட்டி ஹனிமூன் கரெக்டா?”
“இருக்கலாம்”
“இதோ அண்ணன் வந்துருச்சு..இன்னா டா அண்ணா என்னைக்கும் இல்லாம மூஞ்சி இன்னைக்கு ப்ரைட்டா இருக்கு”
“அதுவா எல்லாம் ஒரு காரணமா தான். சரி சரி நானும் ஆனந்தியும் கிளம்புறோம் அம்மா வை கூப்பிடு சொல்லிட்டு கிளம்புறன்.”
….தன் தாயிடமும் தங்கையிடமும் விடைப்பெற்று கொண்டு தன்னவளின் கையை பிடித்துக்கொண்டு பார்க்கிங் ஏரியாவை நோக்கி சென்றான். காரில் முன் இருக்கையில் ஆனந்தி அவன் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள் சந்தோஷமாக இருவரும் கிளம்பிச் சென்றனர்.
போகும் வழியில் இளையராஜா வின் இன்னிசையை கேட்டு கொண்டே சென்றனர்.
“மாமா உங்களுக்கு இளையராஜா இசைனா அவ்வளவு பிடிக்குமா?” என்று அவனிடம் கேட்க அவன் சிரித்து கொண்டே,
“எனக்கு பொதுவா இசை என்றாலே மிகவும் பிடிக்கும்”என்று மீசையை வருடிக்கொண்டே கூற….இசையையும் மறந்தவளாய் அவனின் ஆண்மையின் அழகை ரசித்துக்கொண்டே இருந்தாள்.
“ஏன் மாமா…இவ்வளவு அழகா மீசையை கரெக்டா ட்ரிம் பன்னி வச்சிருக்கியே…உனக்கு அழகு மேல் அவ்வளவு கவனமா?”
“ஹாஹா….. ஆண்களுக்கு அழகே மீசை தான்னு என் அம்மா அடிக்கடி சொல்லும்…அதான் மீசைக்கு இவ்வளவு அக்கறை எடுத்துக்குறேன்.”
“ம்ம்ம் அப்படி னா பெண்களுக்கு எது அழகுனு நினைக்கிறீங்க?”
“பெண்களுக்கு அழகு னா….நீண்ட பின்னல் ..இடையை தொடும் அளவுக்கு ,அப்புறம் அந்த முகத்தில் தெரியும் வெட்கம் இப்படி சொல்லிட்டே போலாம் இன்பேக்ட் பெண் என்றாலே அழகு தான்.”
“சூப்பர் மாமா… அது சரி ஏன் இவ்வளவு தூரம் பீச் ரிசார்ட் போகனும் வீட்டிலேயே ஏற்பாடு பன்னியிருக்கலாமே” என்று அவனிடம் சாதாரணமாக கேட்க
“எது நம்ப வீடு….என் தாய் கிழவியும் என் வாலு தங்கச்சியும் பிலு பிலு ன்னு உன் பின்னாடியும் என் பின்னாடியும் சுத்திட்டே இருக்குங்க இதுல நம்ப எங்கே அன்னோன்யமா இருக்கிறது அதான்” என்று புன்னகைக்க
“பாவம்ங்க அத்தையும் வித்யாவும் நம்பள விட்டா யாரு இருக்கா? சரி அது இருக்கட்டும் ரிசார்ட் ல என்ன என்ன அம்சங்கள் இருக்கும்.”
“ம்ம்ம் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட்,கார்டன் ,ஸ்பா….”
“ஓ…..எல்லாம் ஓகே ஆனால் மவனே ஸ்பா போன செம்ம டென்ஷன் ஆயிடுவேன் பாத்துக்க”.
“ஏன்?” என்று அவன் ஆழமான பார்வையுடன் அவளை எதிர்நோக்க
“பின்ன…என்ன மாமா,ஸ்பா,மஸாஜ் பார்லர் அப்படிங்கிற பெயர்ல எவ்வளவு அநியாயம் நடக்குதுனு நம்ப தான் செய்திகளில் பார்க்கிறோமே. இதெல்லாம் தப்புக்கு வழி வகுக்கும் மாமா…” என்று அவள் சொல்லும் பதிலில் ஒரு நியாயமான காரணம் இருப்பதை புரிந்துகொள்ள
“ஹாஹா…. அப்படினா மேடம் க்கு என் மேல பொஸஸிவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. அப்படி வா வழிக்கு…சரி அதெல்லாம் நான் பன்னல…ஆனால் நமக்கு உள்ள ஒரு டீலிங் வச்சிப்போம்.”
“டீலிங்??? என்ன அது?” என்று ஆர்வமாக கேட்க
அவன் எடாகுடமாக ஏதோ காதில் சொல்ல அவள் “போ மாமா அதெல்லாம் முடியாது” என்று வெட்கம் கொள்ள கார் ரிசார்ட் வந்தடைந்ததே தெரியவில்லை.
*******
ரேணுவை தேடி அன்றிரவு பூவரசன் வந்தான் . என்ன இந்த நேரத்தில் வந்திருக்கான் என்று ஆச்சரியத்தோடு அவனை பார்க்க உள்ளே வந்தவன் ,அவர்களின் கல்யாண பத்திரிகை அடித்து விட்டதாக கூறி அவற்றை காண்பித்தான்.
“வாட் ஏ சர்ப்ரைஸ்?” என்று ரேணுகா கூற
“ம்ம்ம் எப்படி இருக்கு டிசைன்? என்ன பன்றது இதெல்லாம் எடுத்து பன்றதுக்கு உங்க வீட்டிலும் ஆளு… இல்லை என் வீட்டிலும் ஆளு இல்லை அதான் நானே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை கட்டி அணைத்து கொண்டாள்.
“பூவரசன் இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கல்யாணத்துக்கு அதுக்குள்ள தெரிஞ்சவங்க எல்லாருக்கும் பத்திரிகை தந்திடனும்”. என்றுரைத்தாள் ரேணுகா.
“…கவலையே படாத நாளைல இருந்து நமக்கு இதாம் வேலையே.” என்று பூவரசன் புன்னகைக்க
“சரி அதுபோகட்டும் உன் தங்கச்சி எப்படி இருக்காங்க?”
“அவளுக்கு என்ன நல்லாயிருக்கா ஆனால் இல்லை” என்று ஒரு புதிராகவே அவளிடம் சொல்ல
“ம்ம்ம் என்ன சொல்ற எனக்கு புரியலையே?”என்று ரேணுகா கேட்க
“பரவாயில்லை புரியலைனா விடு சரி நான் கிளம்புறன் தூங்கு குட்நைட்”.
“ஓய்….இந்த நேரத்தில் ஏண்டா கிளம்புற தூங்கி எழுந்து காலைல போக வேண்டியது தானே”என்று அனுசரனையாக கேட்க
“ம்ம்ம் க்கும் தங்கச்சி இருக்காளே தனியா இருப்பா வீட்டில்.”
“சரி ஓகே கிளம்பு குட்நைட். “என்று விடைபெற்று சென்றான் பூவரசன்.
Vanthutan ka…
Ragava kola pannathu ponnu thana..
Yara irukum..
Sikaram vanga ka.😌😌😌