You don't have javascript enabled
Bhagya novelsRomantic thrillerThriller

kk-3

3

ரேணுகா அவனை தேடி கொண்டு அந்த காவல் நிலையத்திற்கு வந்தாள்.

‘ ச்ச என்ன இந்த இன்ஸ்பெக்டர் நம்பமேல சந்தேக படுறமாதிரியே நடந்துக்குறாரு முதலில் இதற்கு ஒரு தீர்வு கட்டனும்’ என்று யோசித்து கொண்டே அவள் உள்ளே நுழைந்தாள்.

“இன்ஸ்பெக்டர் சார்” என்று அவளது அழைப்பில் திரும்பியவன்,

‘இவ எதுக்கு ஸ்டேஷன் வரைக்கும் வந்துருக்கா சரி என்னனு கேப்போமே’ என்று எண்ணியவன்,

“வாங்க மிஸ் ரேணு” என்று புன்னகைக்க.

 “ம்ம்ம் க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று முனகிக்கொண்டே அவனுக்கு எதிர் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் .

“டீ காபி எதாவது?” என்று ஆதி வினவ,

“அதெல்லாம் ஒன்னும் வேணாடாம் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் என்றதும், “என்ன ஆச்சு இன்னைக்கு எதாவது குக்கர் வெடிச்சுதா மேடம்” என்று நக்கலடிக்க அவள் கோபத்தை அடக்கிக்கொண்டு பற்களை கடித்து,

“இங்க பாருங்க….. அந்த கேஸ் விஷயமா என்னை மறுபடியும் பார்க்க வீடு பக்கம் வராதிங்க ப்ளீஸ்… என் தங்கச்சியும் நானும் வயசு பொண்ணுங்க

 இப்ப தான் அவளும் என் வீட்டுக்கு வந்துருக்கா… இப்படி நீங்க வந்து போறது நல்லா இல்லை. அப்புறம் வீடு நம்பர் 26 எப்படி வந்தது தெரியனுமா?” என்றதும் ஆர்வமான பார்வையை அவளிடம் செலுத்திய ஆதி புருவங்கள் ஏற்றியவாறு

“சொல்லுங்க” என்றான்.

“நம்பர் போர்டு அடிக்கிறப்ப கார்பென்டர் 26 னு அடிச்சு கொடுத்தான் அது தவறுதலாக நடந்தது.. அதை மாற்ற கூட எனக்கு நேரமில்லை வேலைல கொஞ்சம் பிஸி அதான் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் மற்றபடி நான் எந்த தவறும் செய்யல” என்றவுடன்

“அப்படியா அப்படினா அதையும் டெஸ்ட் பன்னி பார்த்துருவோம்” என்று சிரிக்க அவனை முறைத்தவள்,

‘என்னமோ இது ஆஸ்பத்திரி மாதிரியும் அவரு டாக்டர் மாதிரியும் டெஸ்ட் பன்றேனு சொல்றாரு’ என்று மனதுக்குள் நினைத்து எரிச்சலுற்றாள். அவனோ நிறுத்தாமல் சிரித்து கொண்டிருந்தான்.

“என்ன சார் சிரிப்பு?” என்று அவள் கோபமாக கேள்வியை எழுப்ப,

“ம்ம்ம் கன்பார்ம் நீ எந்த தப்பும் பன்னல அப்படி தானே? ஹலோ சாரதா இங்க வாங்க” என்று பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து இவங்க முகத்தை வெறும் கண்கள் மட்டும் தெரியுற மாதிரி கட்டிவிடுங்க” என்றான்.

“ஏன்?” என்று தயக்கத்துடன் ரேணுகா கேட்க,

“நான் உன் கண்களை பார்க்கனும். ஆமா உன் கண்கள் மட்டுமே ஆழமா பார்க்கனும்.” என்றான்.

அப்போது அங்கிருந்த ஏட்டு, “ஏன் யோவ் 403 இன்ஸ் ஏதோ புது டெக்னிக் வச்சிருக்காரு” என்று சொல்ல,

“யோவ் ஏட்டு இது புது டெக்னிக் இல்லையா இதெல்லாம் ஏற்கனவே அதே கண்கள் படத்துலையே பார்த்தாச்சு…எனக்கு என்னமோ இன்ஸ் ஏதோ அவளை சைட் அடிக்கிற மாதிரி தோணுது” என்று தங்களுக்குள்ளாக பேசி சிரித்து கொண்டனர்.

ஆனால் ஆதியோ அவன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். அதாவது அவள் கண்களை மட்டும் கொஞ்சம் நேரம் ஆழமாக உற்று உள்ளே போய் கவனித்தவன்,

 அவள் கண்களில் வக்ரம் இல்லை வன்மமும் இல்லை ஏதோ ஒரு பயம் மட்டுமே இருக்கிறது என்று உணர்ந்தான்.

 அதற்குள் அவன் மனசாட்சி, ‘இன்னும் கொஞ்சநேரம். இப்படியே பார்த்துட்டு இருந்தா உனக்கு அவ மேல லவ் வந்துரும்’ என்று எச்சரிக்கை செய்ய சுதாரித்து கொண்டவன்,

“சரி சரி ஏம்மா சாரதா இவங்களை கிளம்ப சொல்லு” என்றான்.

“சார்… சிங்கம் சூரியா மாதிரி நைட்டியை எப்படி கழட்டுவ அப்படி இப்படி னு ஏதாவது கேள்வி இருக்கா?” என்று ரேணு நக்கலாக கேட்க,

“ஹாஹா இல்லை நீங்க கிளம்பலாம் ரேணு” என்றான்.

‘ப்பா சரியான தொல்லை டா இந்த ஆளு …நல்லா இருக்கானே னு ப்ரண்டு ஆகிடலானு …நினைச்சா இது வேலைக்கு ஆவாது போல….’ என்று மனதிற்குள் எண்ணியபடி அவள் வெளியேறிவிட்டாள்.

‘ம்ம்ம் இந்த ரேணு கண்களை பார்த்தா நமக்கே காதல் வந்துரும் போல…ப்பா….திராட்சை பழம் மாதிரி கண்ணு. ஹாஹா’ என்று மனதில் அவள் கண்களை பற்றிய ஆராய்ச்சியில் இறங்க அப்படியே நேரம் ஓடிவிட்டது. அவன் வீட்டிற்கு புறபட்டான்.

அடுத்த இரண்டு நாள் ஆதி விடுப்பு எடுத்து கொண்டு தன் ஊர் திருவிழாவிற்கு வந்திருந்தான். ஆனந்தியை பாவடை தாவணியில் பார்த்து அவனுக்கு குதூகலமானது.

“ஹாய் மாம்ஸ்…. ”

“ஆனந்தி …ஹாய் எப்படி டி இருக்க?”

“நல்லாயிருக்கேன் மாம்ஸ்”

“வழியாதடி” என்று வித்யா அவள் காதோடு சொல்ல,

“அய்யே…நாத்தனாரே நீங்க… உங்க வேலையை பாருங்க” என்றாள் ஆனந்தி.

“ஓ….மேடம் அவ்வளவு…சீக்கிரமே என் தங்கச்சி க்கு அண்ணி…ஆயிட்டிங்களா?” ஆதி கேட்க,

“மாம்ஸ்…. போங்க நான் என்ன பன்றது அத்தை தான் ஆசையை வளத்து விட்டுச்சு” என்று பதிலளித்தாள் ஆனந்தி.

“இந்த வேலை மட்டும் எல்லா அம்மாவும் நல்லா பன்னுதுங்க”

அப்போது ஊர் மக்கள் அனைவரும் கோல போட்டிக்கு ஒன்று கூடினர்.

கோல போட்டியில் ஆனந்தி ஜெயித்துவிட அந்த இடமே கொண்டாட்டமானது. அப்போது பார்த்து அவன் கைபேசி அழைக்க, அதனை எடுத்த சமயம் அது சார்ஜ் இல்லாமல் அணைந்து போனது. அதனை எடுத்து உள்ளே சார்ஜ் செய்துவிட்டு அவனும் அந்த கொண்டாட்டத்தில் பங்கு கொண்டான்.

ரொம்ப நாட்கள் கழித்து ஆதி நிம்மதியாக இருந்தான். ஊர் ஜனமே பேசிக்கொண்டது ஆதி தான் ஆனந்திக்கு நல்ல துணைஎன்று 

 ஊரில் நேரம் போவதே தெரியவில்லை ஆதிக்கு. ஆனால் அங்கும் அவன் தங்கை வித்யா அவ்வப்போது செல்போனை நோண்டுவதும் யாருடனோ பேசுவதுமாக இருக்க, வித்யாவின் நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்த ஆதி அவளை அழைத்து,

“வித்யா உனக்கு எதாவது பிரச்சனையா?” என்று கேட்க அவள் விழிகளில் மலமலவென்று நீர் வடிந்தது.

“என்னடி ஆச்சு உனக்கு ஏதாவது பிரச்சனையா கேட்கிறேன்ல சொல்லேன் டி” என்று அவன் அவள் தோள்பட்டையை உலுக்கி கேட்க, அப்போதுதான் அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது அவனுக்கு! 

“அண்ணா என்னை ஒருத்தன் ரொம்ப நாட்களா செக்ஸ் டார்ச்சர் தருகிறான்” என்று அழுது கொண்டே சொல்ல,

அதை கேட்டு அவனுக்கு அதிர்ச்சி தொற்றியது .ஒரு அண்ணணாக அவளை தேற்றுவதற்கு முன் உள்ளுக்குள் இருக்கும் போலிஸ் புத்தி தட்டி எழுப்பியது,

‘யார் இவளுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துருக்கனும்? எனக்கு வேண்டாதவங்க யாராவது பழிவாங்கும் நோக்கத்தில் செய்கிறார்களா அல்லது யாரா இருக்கும்.?’

“சரி டா மா…யார் அவன்? எப்படி இருப்பான்?

“அவன் கொஞ்சம் கருப்பா உயரமா இருப்பான் மிடில் ஏஜ் ஆளு தான்”

“மிடில்… ஏஜ்? என்னடி சொல்ற?”

“ம்ம்ம்…ஆமா அண்ணா”

“எப்படி அவனை உனக்கு தெரியும்… எல்லாத்தையும் தெளிவா சொல்லு” என்று  தன் படபடப்பை குறைத்து கொண்டு பொறுமையாக விசாரித்தான்.

“அது வந்து” என்று சற்று தயங்கியவாரே பேச்சை துவங்கினாள்

“வாட்ஸ் அப்ல மெஸெஜ் வந்தது சும்மா.. ஒரு ரிசார்ஜ் ஆபர் பற்றி அப்போ கால் பண்ணி கேட்டதுக்கு அவன் பேச ஆரம்பித்து கடைசியில் அது இப்படி வந்து முடிஞ்சிடுச்சு” என்று தரையை பார்த்தபடி தயக்கத்தோடு உரைத்தாள்.

அந்த நேரத்தில் ஒரு அண்ணணாக அவளை ஏறிமிதிக்க தோன்றியது.

“ஏண்டி எவ்வளவு விஷயம் பேப்பர் ல டீவி ல பாக்குறிங்க அப்படி இருந்தும் ஏண்டி இப்படி ஏமாறுறிங்க” என்று அவள் கன்னத்தில் அப்போதிருந்த கோபத்தில் பளாரென்று அறைந்து விட்டு மேலும் பேசினான்.

“ஏய் ரிசார்ஜ் க்கு…ஆசைபட்டு வாழ்க்கை யை தொலைப்பிங்களா டி? இங்க பாரு… கூட படிக்கிற ப்ரண்ட்ஸ் தவிற யார் கிட்ட ஆச்சும் பேசின… அம்புட்டு தான் சொல்லிட்டேன்” என்று தந்தை ஸ்தானத்தில் இருக்கும் அண்ணணாக அவளை கண்டித்தான்.

“சாரி அண்ணா” என்று அவள் கண்ணீர் வழிய சொல்லியும் அவளை முறைத்தபடி அவன் நிற்க,

“மன்னிச்சிரு அண்ணா” என்று அவள் காலில் விழுந்ததும் அவன் மனம் இறங்கியது.

அவளை எழுப்பி நிற்கவைக்க அதற்குள், “ஏய் நாத்தனாரே” என்று ஆனந்தி அழைக்கும் குரல் கேட்க,

“சரி போ….ஆனந்தி கூப்பிடுறா பாரு” என்று தன் தங்கையின் தலையை வருடிவிட்டு அனுப்பி வைத்தான்.

………..

சற்று நேரத்தில் அவன் போன் ஸ்விட்ச் ஆன் செய்ய அவனது போனுக்கு… அழைப்பு வந்தது.

“ஆதி அங்கிள்…நான் ராகாவா பொன்னு பேசுறேன்”

“சொல்லுமா”

“அங்கிள் அது வந்து உங்க கிட்ட ஒரு உண்மை சொல்லனும்” என்று புதிர் போட 

“என்ன?” என்று கேள்வி எழுப்பினான்

“அங்கிள் அது வந்து.. என்று அவள் பேச்சை இழுக்க அதற்குள் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் அவன் முயற்சிக்க அழைப்பு கிடைக்கவில்லை. அவனும் திருவிழா கோலாகலத்தில் அந்த விஷயத்தை மறந்து போனான்.

அன்று ஆனந்தி வீட்டில் வேறு தடபுடலாக விருந்து நடைபெற்றது. ஆதி நன்றாக  ரசித்து ருசித்து சாப்பிட்டான். என்னவோ சாப்பிடுவதற்கென்றே பிறந்தவன் போல!

அவன் தான் இரண்டு நாள் லீவாச்சே…அப்போ சாப்பாடு உறக்கம் உறவினர்கள் இதைதவிர வேறென்ன அவனுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும் தங்கை பற்றிய கவலையிலிருந்து அவனால் மீள முடியவில்லை.

‘தங்கச்சியை டார்ச்சர் பன்னவன் கிடைச்சான் அவன் செத்தான்’ அந்த அளவு ஆதி உள்ளுக்குள் பொங்கி எழுந்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரிடமும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தான்.

அவ்வப்போது தன் மீது தவறு இருந்ததை உணர்ந்து வித்யா தன் அண்ணன் ஆதியிடம், “சாரி சாரி” என்று ஜாடைமாடையில் கேட்டுக்கொண்டிருக்க. தன் தங்கையை குழந்தையாய் பாவிக்கும் ஆதி அவளை இன்முகத்துடன் சமாதானம் செய்தான்.

அண்ணனிடம் சொல்லிவிட்டோம் என்ற திருப்தியில் வித்யாவும் சந்தோஷமாக  இருந்தாள்.

ஆனந்தியோ ஆதியை சுற்றி சுற்றி வந்தாள். அவளுக்கு அவள் பிரச்சினை. இந்த இரண்டு நாள் சாக்கில் அவனை எப்படியேனும் மயக்கிவிட வேண்டுமென்று. 

பெரியவர்கள் ஆனந்தி ஆதியின் கல்யாணம் பற்றி ஆலோசிக்க துவங்கினர். முடிவு என்னவென்றால் இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம். 

‘செத்தான் டா…சேகரு’ என்று மனதிற்குள் தனக்குத்தானே கவுண்டர் கொடுத்து கொண்டான் ஆதி.

.

 

 

You cannot copy content