You don't have javascript enabled
vaanisri novels

Silendru oru kadhal-1

1

மலேசியாவில் உள்ள சுங்கை லாங் – காஜாங் (Sungai Long -Kajang) என்றழைக்கப்படும் நகரத்தின் மையபுரத்தில் நிமிர்ந்து நின்றது அக்கல்லூரி கட்டடம்.

அது ஓர் சிட்டி-காம்பஸ்(City-Campus).

அக்கல்லூரியின் ஏழாம் தளத்தில் உள்ள அறிவியல் கூடத்தின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

“ஸ்ஸ்….மஹா…. மஹா…. ஹேய்!!! ஸ்ரீமஹாலக்ஷ்மிஈஈஈஈஈஈஈய்” – என்று அலறினாள் யோகா என்றழைக்கப்படும் யோகதர்ஷினி.

அதற்க்கு மஹாவோ  சிடுசிடுத்தாள்- “ம்ப்ச்… ஏன் இப்போ கழுதை மாதிரி கத்தி என் பேரை ஏலம் போடுற?”

அதற்க்கு யோகாவோ ” ஹு?! மீ..கழுதை?! ஹௌ டார் யூ?!” – என்று பொங்கி எழ.

இவர்களின் அளப்பறையை கண்டும் காணாமலும் நோட்டிற்குள் தலையை நுழைத்துக்கொண்டு மிக தீவிரமாக படித்துக்கொண்டிருந்த நிவாஷினி இருவரையும் அடக்கினாள்.

“ஹேய்… யோகா… மஹா!!! அடக்கிவாசிங்க!!! இது மார்க்கெட் இல்ல சயின்ஸ் லேப். உள்ளுக்கு பிராக்டிக்கல் டெஸ்ட் நடந்துகொண்டிருக்கு.” – என்று நிவாஷினி நினைவூட்டினாள்.

“நான் ஒண்ணுமே செய்யல!!! இந்த மஹாதான் டெலிவரி வாட்டில் மனைவியை உள்ள அனுப்பிட்டு வெளில நிக்கிற கணவர்மார் மாதிரி டென்ஷனா நடக்கிறாளே…. ஏதாவது ஹெல்ப் செய்யாலாமேனுதான் ஒரு அக்கறைல கூப்பிட்டேன்!!! ஒடனே ஓவரா சிலிர்த்துகிறா” – என்று குற்றப்பதிரிகையை வாசிக்க ஆரம்பித்தாள் யோகதர்ஷினி.

“மஹா… என்ன இதெல்லாம்?! ஏன் இவ்ளோ டென்ஷன்…. ரிலாக்ஸ்” – என்றாள் நிவாஷினி கூலாக.

“இல்ல…நிவாஷினி!!! நான் என்னோட லேப் கோட்டை (lab coat) வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். இப்போ அந்த லேப் அசிஸ்டண்ட் தவளை வாயன் தங்கராஜ் என்ன சொல்லுவார் ஏது சொல்லுவாரோனு நானே டென்ஷன்ல இருக்கேன்!!! அது தெரியாம இவ வேற…. ஏ-லக்ஷ்மி… பி-லக்ஷ்மினு உயிர வாங்குறா” – என்று கூறி லேப் கோட்டை மறந்து தனது வீட்டிலேயே விட்டு விட்டு வந்த தன் மடத்தனத்தை நினைத்து வருந்திக்கொண்டே கூறினாள்.

“அச்சச்சோ!!! இப்போ என்ன செய்றது? நீ பேசாம என்னோட லேப் கோட்டை யூஸ் செய்துக்கோ!!” – என்று உதவி கரம் நீட்டினாள் யோகா.

“ஹேய்… யோகா!! மணிச்சுக்கோடி ஓவரா திட்டிட்டேன்…. ஐ ஆம் ரியலி சாரி…பிலீஸ்!!” -என்று உடனே வருந்தி மன்னிப்பு கேட்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

இதுதான் இவர்கள் மூவரின் நட்பும். இவர்களால் தங்களது கோவத்தை நீண்ட நேரம் தற்காத்துக்கொள்ள இயலாது. ஒருத்திக்கு கஷ்டம் என்றால் மற்ற இருவரும் தனக்கே வந்ததைப்போல வருந்துவர். இவர்களின் நட்பு இன்று நேற்று தொடங்கிய ஒன்றல்ல. பள்ளி பருவத்திலிருந்தே இம்மூவரும் இணைப்பிரியா தோழிகள். இப்பொழுது மூவரும் ஏ-லெவல்ஸ் (A-Levels) படித்துக்கொண்டிருக்கினர் இக்கலூரியில்.

இன்று நடக்கவிருக்கும் கெமிஸ்ட்ரி லேப் டெஸ்டிற்குத்தான் இவ்வளவு போராட்டம்.

“அடடடடா…. போதுமே!!! யோகா… இணைக்கு உனக்கும் தான் டெஸ்ட்!! ஞாபகம் இருக்காமா?? இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுத்த பாட்ச் ஸ்டுடெண்ட்ஸை கூப்பிடுவாங்க. அப்போ என்ன செய்யறதா உத்தேசம்?!” – என்று கேட்டாள் நிவாஷினி.

“ஹிஹிஹி!!! ரைட்டு…. மறந்துட்டேன்!!” -என்று அசடு வழிந்தாள் யோகா.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே இவர்களின் கெமிஸ்ட்ரி பேராசிரியர் அடுத்த பாட்ச்சை கூப்பிட இவர்கள் மூவரும் பேய் முழி முழித்தனர். இவர்கள் மூவரும் நிற்கும் லட்சணத்திலேயே எதுவோ சரியல்ல என்று பட அம்மூவரையும் பார்த்துக் கனிவாக கேட்டார் அவர்களின் கெமிஸ்ட்ரி பேராசிரியர் ராமதாஸ் “வாட் ஹப்பான்ட்?!” -என்று.

அதற்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியோ பயந்துகொண்டே “சார்… நான் என்னோட லேப் கோட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன். இப்போ எப்படி? கண்டிப்பா மிஸ்டர் தங்கராஜ் எக்ஸ்பிரிமெண்ட் செய்ய விடமாட்டார். அதான் சார்….” – என்று இழுக்க.

“ஆல்ரைட்…. எவ்ரிவான் பிலீஸ் கெட் இன். ஸ்ரீமஹாலக்ஷ்மி பிலீஸ் வெயிட்!!!” என்று கட்டளையிட்டார். அவர் கூற்றை ஏற்று யோகா மற்றும் நிவாஷினி தயங்கிவாறே உள்நுழைய ஸ்ரீமஹாலக்ஷ்மியோ சோக கீதம் வசிக்கத்  தயார் ஆனாள்.

“ஸ்ரீமஹாலக்ஷ்மி…. யூ காட் பைவ் மினிட்ஸ். பக்கத்து லேபில் உள்ள ஸ்டுடெண்ட்ஸ் யாராவதிடம் கேட்டு கெட் அ கோட் அண்ட் கம் இன்சைட்” என்று கட்டளையிட்டவாறே சென்றுவிட்டார்.

“தாங்கியூ சர். இன்னும் பைவ் மினிட்ஸ்ல நான் உள்ள இருப்பேன்” – என்று கூறிக்கொண்டு பியலஜி லேப் மாணவர்கள் கூடத்தை நோக்கி விரைந்தாள். இவளின் துரதிஷ்டம் அந்த வாரம் எல்லோருக்கும் லேப் டெஸ்ட் நடந்துகொண்டிருந்தது. மற்ற மாணவர்களால் இவளுக்கு உதவி செய்ய முடியவில்லை.

“போச்சு!!! இணைக்கு டெஸ்ட் கோவிந்தா… கோவிந்தா தான்” – என்று மஹா நொந்துகொண்டிருந்த வேளையில் அவளின் முன் ஒரு முறுக்கேறிய ஆண்மகனின் கரம் நீண்டு அவளிடம் லேப் கோட்டை நீட்டியது.

தன் முன் லேப் கோட்டை நீட்டிய அக்கரத்திற்கு சொந்தமானவனை  பரவசத்துடன் பார்த்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

“ஸ்ரீமஹாலக்ஷ்மி சுப்ரமணியம்?!” – என்று இவளின் முழுப்பெயரை சொல்லி சந்தேகமாக அழைக்க.

இவளோ “யெஸ்… நான் தான் ஸ்ரீமஹாலக்ஷ்மி சுப்ரமணியம். இந்த லேப் கோட் எனக்கா?!” – என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள் அப்புத்தியவனை நோக்கி.

“யெஸ்…உனக்கு தான்!!! ஆல் தி பெஸ்ட்!! இப்போ டெஸ்ட்டை நல்லா செய்துட்டு வா. நான் நாளைக்கு கோட்டை வாங்கிக்கிறேன்” – என்று முடித்தான்.

“ஓ மை காட்!!! ரொம்ப நன்றி!! நாளைக்கு ஒரு மணிக்கு உங்களை மூன்றாவது கார்ட்ஹவுஸில் சந்திக்கிறேன். பை-பை” -என்று விடை பெற்றுச்  சென்றால் ஸ்ரீமஹாலக்ஷ்மி அவளின் கெமிஸ்ட்ரி லேப்பை நோக்கி.

இவள் மகிழ்ச்சியாக துள்ளி குதித்துக்கொண்டு செல்வதையே  கைகளை மார்பின் குறுக்கே மடக்கிக்கொண்டு தனது வலது காலை மடக்கி சுவற்றில் பதித்தவாறு கண்களில் நேசம் பொங்க அவளை நோக்கினான் கௌதம்.

பின் மெதுவாக அவளது பெயரை சொல்லி பார்த்துக்கொண்டான் “ஸ்ரீ… ஸ்ரீமஹாலக்ஷ்மி!!!” என்று.

******************************************************************************

மஹா சந்தோஷமாக கோட்டுடன் லேப்பிற்குள் நுழைய அதைப் பார்த்த யோகா மற்றும் நிவாஷினியையும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது.

பின் இவ்விருவரும் கண்களால் “எப்படி?!” என்று வினவ அதே வேளையில் இவர்களின் லேப் அசிஸ்டண்ட் தவளை வாயன் தங்கராஜ் வரவும் சரியாக இருந்தமையால் ஸ்ரீமஹாலக்ஷ்மி  தனதிரு தோழிகளையும் நோக்கி “பிறகு பேசிக்கலாம்” என்று வாயசைக்க யோகா மற்றும் நிவாஷினி அவர்களின் எக்ஸ்பிரிமெண்ட்டில் கவணமாகினர்.

ஒருவழியாக லேப் டெஸ்ட்டை முடித்துவிட்டு பெருமூச்சை விட்டபடி லேப்பிலிருந்து வெளியாகினர் அம்மூன்று தோழிகளும்.

லேப்பை விட்டு வெளிவந்தவுடன் யோகா ஆர்வமாக “யாரோட கோட் இது? இவ்ளோ பெருசா இருக்கு உனக்கு…” -என்று வினவினாள்.

அதற்கு மஹாவோ “அச்சச்சோ… அவசரத்தில் பேர கேட்க மறந்துட்டேன்!!! யார்னு தெரில!! சரியா கவனிக்கில பட் கண்டிப்பா நம்ப பாட்ச் இல்ல. இதுக்கு முன் நான் நம்ப காம்பஸ்ல பார்த்ததே இல்ல. நல்ல சிக்ஸ் பீட் ஹையிட். மாநிரத்திற்கு கொஞ்சம் கூடுதலான நிறம். அகன்ற நெற்றி. கூரான கண்கள்….” -என்று அடுக்கிக்கொண்டே போக.

“ஹேய்!!! வெயிட்…வெயிட்… வெயிட்….ஹ்ம்ம்… சரியா கவனிக்கில்லைனு சொல்லிட்டு அங்க அடையாளங்களை பிட்டு பிட்டு வைக்கிறியேமா…. என்ன கதை மேடம்?!” – என்று நிவாஷினி தனது தோழியை கூர்மையாக நோட்டமிட்டவாறே வினவினாள்.

“ரைட்டா சொன்னடி என் செல்லக்குட்டி” என்று நிவாஷினியின் தோலில் முழங்கையை மடக்கி ஊன்றியவாறு ஸ்ரீமஹாலக்ஷ்மியை நோக்கி சந்தேகமாக கூறினாள் யோகா “ஹேய்…. தக்காளி!!! உன் முழியே சரி இல்ல”.

ஸ்ரீமஹாலக்ஷ்மியோ மனதிற்குள் ” என்ன இது சிலபஸ்ல இல்லாத கேள்வியா இருக்கே!!” என்று நொந்துக்கொண்டு பின் அவர்கள் இருவரையும் நோக்கி “வேற வேலை இல்லை உங்க ரெண்டு பேருக்கும்?? எப்ப பார்த்தாலும் நொய்யி நொய்யினு கேள்வி கேட்டுகிட்டு!!! உங்க கிட்ட மாடிக்கிறதுக்கு அந்த தவளை வாயனே பெட்டர்” -என்று நொடிந்துக்கொண்டே முன் நடந்தாள் மஹா  இவர்களின் கேள்வி நச்சரிப்பில் இருந்து தப்பிக்கொள்வதற்காக.

“என்னமோ சரி இல்ல!!! பிடிப்போம்… கண்டு பிடிப்போம்” -என்று யோகா மற்றும் நிவாஷினி ஒரு முடிவுடன் பேசியபடி நம்பியார் ஸ்டைலில் கைகளை தேய்த்துக்கொண்டனர்.

One thought on “Silendru oru kadhal-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content