Kaavalum kaathalum – 1
காவலும் காதலும்
1
“இன்ஸ்பெக்டர் நீங்க அந்த ஏழாவது மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்ட ராகவனின் மனைவியை நேரில கூட்டிட்டு வாங்க விசாரிக்கலாம்”
“சார்… எனக்கு என்னமோ அவங்க மேல துளி கூட சந்தேகம் இல்லை… ராகவன் ஏதோ கடன் தொல்லை ல தான் தற்கொலை பன்னியிருக்கணும்”
“லுக் மிஸ்டர் ஆதி நீங்க ட்யூட்டி க்கு புதுசு ,போலிஸ் னா பல ஆங்கில்ல யோசிக்கனும் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ண கூடாது புரியுதா.?” அந்த காவல் நிலையத்தின் அசிஸ்டன்ட் கமிஷனர் சொல்ல,
“சரிங்க சார்.” என்று தலையசைத்து கேட்டு கொண்டு நடந்தான் ஆதி!
‘சை! என்ன பிழைப்பு டா இது… இப்படி மேல் அதிகாரிகள் ஏச்சுக்கள் வாங்கி வேகாத வெயிலில் காய்ந்த கருவாடு ஆகி ….ச்ச…..சரி போய் தொலைவோம்’ என்றவன் மனதில் எண்ணி கொண்டே அந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு சென்றான்.
ஏழாவது மாடிக்கு செல்ல லிப்டை பயன்படுத்தாமல் அவன் படியில் ஏறினான். அவன் மூன்றாவது மாடியை நெருங்கிய போது அந்த கதவு எண். 26ல் ஏதோ புகையாக கிளம்பி கொண்டிருந்தது.
“என்ன ஆச்சு? புகையா வருது” என்று யோசித்தவன்,
‘போலாமா வேண்டாமானு’ என்று மனதில் பட்டிமன்றம் நடத்திவிட்டு இறுதியாக, “சரி என்னன்னு போய் பார்ப்போம்” என்று அந்த வீட்டின் கதவை தட்டினான்.
யாரும் திறக்கவில்லை. சில நிமிடங்கள் தட்டி பார்த்தவன் பின் அந்த வீட்டின் முகப்பறை ஹால் பக்கமாக இருந்த ஜன்னலை திறந்து எட்டிப்பார்த்தான்.
அவனை பதற்றம் தொற்றி கொண்டது. பதறி போனவன் அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து அந்த கதவின் தாழப்பாளை உடைத்தான்.
.உள்ளே ஓர் இளம் பெண் மயங்கிய நிலையில் இருக்க, அதற்குள் அந்த குடியிருப்பு மக்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டிருந்தனர்.
அதில் ஒரு சிலர் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப அவன் தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்தான்.
அவர்கள் பதட்டமாக என்ன நடந்தது என்று கேட்கவும், “ஒன்னுல்ல குக்கர் வெடிச்சிருச்சு பயத்துல அப்படியே மயங்கிட்டேன்” என்று அரைமயக்க நிலையிலேயே அவள் பேசினாள்.
அதற்கு பின் அங்கு கூடியிருந்தவர்கள் மெல்ல கலைந்து போக ஒருவர் மட்டும் ஆதியை கை காண்பித்து, “சார் நல்ல நேரத்துல உங்க வீட்டில புகை வர்றத பார்த்து எங்களை எல்லாம் உதவிக்கு கூப்பிட்டாரு” என்று அவனுக்கு புகழுரை பாடிவிட்டு சென்றார்.
அந்த பெண்ணின் பார்வை ஆதியின் மீது விழுந்தது. நல்ல கம்பீரமான தோற்றதோடு கூடிய அந்த காக்கி உடை அவனுக்கு வெகுபொருத்தமாக இருந்தது.
எல்லோரும் சென்றுவிட அவள், “தாங்க்ஸ்” என்றாள்.
“இட்ஸ் ஓகே… இப்போ உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லல்ல… நார்மலாகிட்டுங்களா?” என்று கேட்டான்.
“யா ஐம் பைன்” என்றவள் அவனை சந்தேகமாகவும் குழப்பமாகவும் பார்க்க,
அவள் எண்ணத்தை படித்தவனாக, “ஐயம் இன்ஸ்பெக்டர் ஆதி… ஏழாவது மாடி ல ஒரு சூசைட் கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்” என்றான்.
அவன் மேலும் “ஓகே நான் கிளம்புறேன்… இனிமே வேலை செய்யும் போது கொஞ்சம் கவனமா இருங்க” என்று அவளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது,
“மிஸ்டர் ஆதி… ஒரு நிமிஷம்” என்று அழைத்தாள் அந்த பெண்!
அவன் அவள் புறம் திரும்ப, “ஐம் ரேணுகா… நான் ஒரு ஆர்டிஸ்ட்(ஓவியர்)” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
“ம்ம்ம்…. ஓகே” என்றவன் ‘எதுக்கு இப்போ நம்மகிட்ட இதெல்லாம் சொல்லுது இந்த பொண்ணு’ என்று யோசிக்க,
“சார்… அந்த சூசைட் கேஸ் பத்தி விசாரிக்க வந்ததா சொன்னிங்க இல்ல… ஸோ….எனக்கு தெரிஞ்ச விஷயம் சொல்லலாம் னு நினைக்கிறேன்” என்றதும் அவனை ஆர்வம் பற்றி கொண்டது.
“ஒ எஸ்… சொல்லுங்க” என்றவன் கேட்க,
“அது வந்து” என்று தடுமாறியவள் பின் மெல்ல தொடரந்தாள்.
“அந்த ராகவன் சூசைட் பன்னல அது ஒரு மர்டர் ஆக்ச்சுவலா அவன் பேரு ராகவேந்திரா… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் குடி பழக்கம் பொண்ணுங்க கிட்ட போறதுனு அவன் கேரக்டரே சரியில்லை” என்றாள்.
ஆதி அவளை கூர்மையாக நோக்கி, “ஓ! இதெல்லாம் நீங்க எப்படி இவ்வளவு தெளிவாக சொல்லுறீங்க” என்று கேட்கவும்,
“அ….அது வந்து ஒரே அபார்ட்மெண்ட் அதான் தெரிஞ்சுது” என்றவள் வார்த்தைகள் தந்தியடித்தன.
“சரி ஓகே” என்று அவள் சொன்னதை கேட்டு கொண்டவன் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நான் கிளம்புறேன்” என்றபடி நகர்ந்துவிட்டான்.
அவன் ஏழாவது மாடிக்கு சென்று அந்த வீட்டின் கதவை தட்ட ராகவனின் மனைவி கதவை திறந்தாள்.
“உங்கள விசாரிக்க ஏசி வர சொன்னாரு… கொஞ்சம் என்கூட ஸ்டேஷன் வரைக்கும் வர முடியுமா?” என்று அவன் பணிவாக கேட்க,
“சார் என் புருஷன் தற்கொலை பண்ணதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று பதறினாள் அவள்!
“பதறாதீங்க மா… இந்த விசாரணை ஒரு பார்மாலிட்டிக்குதான்” என்றவன் சொன்ன மறுகணம், “ம்ம்ம்.” என்று அந்த பெண்ணும் அவனுடன் புறப்பட்டாள்.
கீழே அவளை அழைத்து கொண்டு செல்வதை ரேணுகா அவளது ஜன்னல் வழியாக பாரத்து,
“ப்பா… செம்மையா இருக்கானே” அவனை ரசித்து கொண்டிருந்தாள்.
அந்த பெண்மணியை காவல் நிலையம் அழைத்து வந்தான் ஆதி.
“சார் இவங்க தான் ராகவா மனைவி” என்று ஏசியிடம் சொல்ல,
“ம்ம்ம்… உன் பெயர் என்ன மா” என்றவர் அதிகாரமாக கேட்டார்.
“சந்திரா” என்றவள் பயபக்தியோடு பதில் சொல்ல,
“ம்ம்ம் நீயும் உன் புருஷனும் காதலித்து கல்யாணம் பண்ணீங்களா?” என்று அடுத்த கேள்வி கேட்டார்.
“சார் இது தேவை இல்லாத கேள்வி” என்று ஆதி பட்டென்று தன் மனதில் பட்டதை மேலதிகாரி என்றும் பாராமல் உரைத்துவிட,
அவர் முறைத்த முறைப்பில் அவன் மௌனமானான்.
மீண்டும் விசாரணை துவங்கியது.
“ம்ம்ம்… உங்க இரண்டு பேருக்கும் நடுவுல எதாவது பிரச்சினை இருந்துதா?”
“சார்…அவரும் நானும் சந்தோஷமா தான் வாழ்ந்தோம்… திடீர்னு எங்களுக்கு கடன் அதிகமாகிடுச்சு… அந்த வேதனை தான் அவரை இப்படி பண்ண வைச்சிடுச்சு” என்றவள் தன் விழிகளில் வழிந்த நீரை துடைத்து கொண்டே பேச சில நொடிகள் மௌனமாக யோசித்தவர், “சரி நீங்க போலாம்… ஆதி அவங்கள விட்டுட்டு வந்துரு” என்றார்.
“ம்ம்ம் க்கும்” என்று மனதிற்குள் சலித்து கொண்டவன்,
“மா வாங்க வீட்டில் விட்டுடுறேன்” என்று சந்திராவை அழைத்தான்.
“இல்லை சார் வேண்டாம் நான் நடந்தே போய்கிறேன்” என்றவள் சொல்ல,
“ஏன்?” என்று அவன் புரியாமல் பார்த்தான்.
“இல்லை இப்படி பத்து வாட்டி ஜீப்பில் ஏறி இறங்கினா என் மானம் போகும் நாலு பேரு முன்னாடி” என்றவள் சொன்னது அவனுக்கு சரியென்று தோன்றியது.
“அதுவும் சரிதான் மா நீங்க கிளம்புங்க…அ…அப்புறம் மூன்றாவது மாடி ரேணுகா பற்றி என்ன நினைக்கிறிங்க?” என்று வெளியே வந்து அவளிடம் தனியாக வினவ,
“எதுக்கு சார் கேக்குறிங்க?” என்று அவனை குழப்ப பார்வை பார்த்தாள்.
“சும்மா சொல்லுங்க” என்றான் ஆதி!
“அவ நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது சார்… வேற எதுவும் அவளை பற்றி தெரியாது”
“சரி…மா…உங்க வீட்டு நம்பர் என்ன 21 தானே?”
“ம்ம்ம் ஆமா சார்”
“சரி நீங்க போங்க” என்று ஆதி சொல்ல சந்திரா மனதிற்குள் ஏன் அவன் ரேணுக்காவை பற்றி சம்பந்தமே இல்லாமல் கேட்டான் என்று தோன்றியது. அந்த யோசனையோடே அவள் அங்கிருந்து புறப்பட்டாள்.
ஆதியின் வீடு. அன்று இரவு வேலைகள் முடித்துவிட்டு திரும்பியவன் அசதியாக சோபாவில் அமர,
அவனது தாய் காமாட்சி அருகில் அமர்ந்து அவன் தலையை வருடியவாறு, “ஆதி… என்ன டா களைப்பா? சூடா காபி போட்டு தரவா? என்று பரிவாக கேட்டார்.
“அதெல்லாம் வேணா ம்மா கொஞ்சம் தலையை மட்டும் அழுத்தி விடுங்க… வலிக்குது” என்று அப்படியே சாய்ந்து படுத்து கொண்டான்.
“ம்ம்ம் அதுசரி காலாங்காலத்துல கல்யாணம் பன்னா தானே… உனக்கு வயசு 27 ஆச்சு… எவ்வளவு நாள்தான் நானே உனக்கு பணிவிடை பண்ண முடியும்” என்றவர் கேட்க,
“அது சரி… கல்யாணத்துக்கு முன்னே இப்படி பேசவேண்டியது… அப்புறம் மருமக வந்த உடனே மல்லுக்கு நிக்க வேண்டியது” என்று சொன்னவன்,
“பேசாம முதல்ல உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணு” என்றான்.
“அவ தான் காலேஜ் படிக்கிறாளே”
“போதும் அவ படிச்சது… காலம் கெட்டு போயிருக்கு முதல்ல வித்யாக்கு மாப்பிள்ளை பாருங்க மா”
“அதுவும் சரி தான் டா கன்னு… உங்க அப்பா இல்லை…. இப்ப நீ தான் உன் தங்கச்சியை அப்பா ஸ்தானத்தில் இருந்து கரை சேர்க்கனும்… அண்ணி னு ஒருத்தி வீட்டில் இருந்தா… வித்யாவுக்கு ஒரு ஆதரவு இருக்கும்… அதுக்கு தான் உனக்கு முதலில் கல்யாணம் பண்ணலாம் னு யோசிக்கிறேன்”
“எனக்கு கால் கட்டு போடணும்னு முடிவு பண்ணிட்ட… சரி செய்… உன் விருப்பம்… நீ எந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்ட சொல்றீயோ அவளை கட்டிக்கிறேன் போதுமா?” என்றவன் தன் அம்மா மடியில் படுத்து கொள்ள,
“இப்ப தான்டா எனக்கு நிம்மதியாக இருக்கு” என்றார்.
அதோடு நிறுத்தி கொள்ளாமல், “பேசாம உன் மாமன் மக ஆனந்தி யை பேசி முடிக்கட்டுமா?” என்று கேட்க,
“ஆனந்தியா… யாரு அந்த வாய் இல்லா பூச்சியா?” என்று கேலியாக சிரித்தான்.
“ஏன் அவளுக்கு என்ன?” என்று காமாட்சி மகனை ஆழமாக பார்க்க,
“ஒன்னும் இல்ல… நல்ல பொண்ணுன்னு சொல்ல வந்தேன்” என்று சமாளித்துவிட்டான்.
அவர்கள் உரையாடல் இப்படி நீண்டு கொண்டிருக்க, “ம்ம்ம் சரி வா சாப்பிடலாம்” என்று மகனை அழைத்துவிட்டு அவர் செல்ல,
“டேய் அண்ணா சீக்கிரம் வா பசிக்கிது” என்று அவன் தங்கை வித்யா குரல் கொடுத்தாள்.
“ஏய் வாலு இரு வரேன்.” என்று அவன் எழுந்து சென்றான்.
மீனாட்சி சத்தமாக சிரித்துவிட்டு, “உன்னை விட்டு என்னைக்கும் அவ சாப்பிட்டது இல்லை… வாங்க எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்” என்று அவர் அமர்ந்து கொண்டு இருவருக்கும் உணவு பரிமாறினார்.
Nice starting