You don't have javascript enabled
Bhagya novelsRomantic thrillerThriller

Antha Araikul-4

4

நடக்கும் மாற்றத்தை என்னவென்று அறியாமல் பயந்து போய் அனு நிற்க கதவிற்கு பின்னால் நின்றிருந்த லதா வெளியே வந்து “பே” என்று சிறுபிள்ளை போல் கையை அகட்டி பயமுறுத்த அவள் எந்தவித அசைவுமின்றி பிரமை பிடித்தது போல் நின்றாள்.

“ஹலோ ஹலோ ரொம்ப பயந்துட்டியா?” என்று அவள் உலுக்கி,

“சாரி டியர் உனக்கு உதவியாக இருக்கலாமே னு தான் கிச்சன் பக்கம் வந்தேன் சரி கொஞ்சம் திகில் ஏத்தி வேடிக்கை பார்க்கலானு தான் இதெல்லாம் பன்னேன்” என்று கூற முகத்தை திருப்பியவள்,

“இங்கே பாரு லதா எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது ஏற்கனவே இந்த வீட்டில் இருக்கிறதுக்கு பயமாவே இருக்கு இதுல இப்படியெல்லாம் பயமுறுத்தினா ஹார்ட் அட்டாக் வந்திரும் போல நான் எவ்வளவு உள்ளுக்குள் பயந்தேன் னு எனக்கு மட்டும் தான் தெரியும்.” என்று அவளுடைய பய உணர்வின் உட்சக்கட்ட நிலையை எடுத்து கூற,

 லதாவோ, “சாரி என்று அவள் தாடையை பிடித்து திருப்பி மன்னிப்பு கேட்க,

 “ஓகே சமையல் எல்லாம் முடிஞ்சிறுச்சு எல்லாரையும் கூப்பிடு லதா பறிமாறலாம்”என்று இயல்பு நிலைக்கு வந்துவிட லதா அனைவரையும் அழைக்க சென்றாள். 

முகப்பறையில் இருந்த ராகுலை முதலில் கூப்பிட்டு அடுத்தடுத்து விஜய் ஜெய்யை அழைத்துவிட்டு, சிவாவிடம் விஜய் மூலம் அழைப்பு விடுக்க லதா தனது தோழியான திவ்யாவை அழைக்க அவளது அறைக்கதவை தட்டினாள். தாழ்பாள் போடாமல் இருந்தது. சரி திறந்து உள்ளே நுழைவோம் என்று உள்ளே செல்ல திவ்யா அங்கில்லை…

“திவ்யா… திவ்யா எங்கே இருக்க?” என்று குரல் கொடுத்தபடி அறையை முழுவதுமாக நோட்டமிட்டாள்.

“அவள் அறையில் உள்ள பாத்ரூமில் இருப்பாளோ என்னவோ என்று பாத்ரூம் கதவை திறக்க முயற்சித்தபோது அது உள்பக்கம் பூட்டியிருக்க “திவ்யா”உள்ள இருக்கியா?என்ற கேள்விக்கு பதில் எதுவும் வரவில்லை.

“தி…திவ்யா”

பதில் ஒன்றும் வரவில்லை. பயத்தில் நடுங்கி போய் உணவு வகைகளை பறிமாறிக்கொண்டிருந்த அனுவிடம்,

“அ..அனு கொஞ்சம் என்கூட வாயேன்” என்று திவ்யாவின் அறைக்கு அழைத்துச்செல்ல,

 “ஏய் திவ்யா உள்ள கழிப்பறை ல இருக்காளோ என்னவோ கதவு தாழிட்டு இருக்கு ஆனால் உள்ளிருந்து அவளுடைய குரல் எதுவும் வரவில்லை டி இப்ப என்னடி பன்றது?”என்று அனுவிடம் கேட்க,

“லதா,.. ப்ளீஸ் பதற்றம் வேண்டாம் இரு நான் ஆம்பளைங்கள கூட்டிட்டு வரேன் கதவை உடைச்சா தான் என்னனு தெரியும். இந்த கதவு எல்லாம் ரொம்ப உறுதியாக இருக்கிறது இதை நாம உடைக்க முடியாது இரு நான் வரேன்” என்று சிவாவிடம் கூறி அங்கிருந்த சிவா ஜெய் விஜய் மூவரும் வந்தனர். பின்னாடியே ராகுல் சென்றான்.

கதவை உடைக்க முயற்சித்து தோல்வி அடைய அப்போது தான் நம் விஜய்க்கு ஒரு யோசனை தோன்றியது.

“மச்சி இந்த பாத்ரூம்க்கு மேல ஒரு கூரை தான் மூடியிருக்கும் அதனால நான் மேல் மாடிக்கு போய் அந்த கூரையை பிரித்து எடுக்குறன் அப்புறம் உள்ள ஏணி விட்டு இறங்கி அவளை தூக்கிட்டு வந்திடலாம்” என்று கூற அந்த யோசனை சரி என்று தோன்றியது. 

விஜய் மேல்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டு பின்பு கூரையை விலக்கி எட்டிபார்த்தால் அங்கு திவ்யா மயங்கிய நிலையில் இருந்தாள்.

“மச்சி திவ்யா மயங்கி போய் இருக்கா டா வாங்க ஏணி எடுத்துக்கொண்டு” என்று குரல் கொடுக்க ஏணியுடன் சிவா ஜெய் சென்றனர்.”

“ஏங்க நீங்களும் போங்க” என்று ராகுலை லதா அனுப்ப நினைத்தபோது,

 “அதான் உன் ப்ரண்ட்ஸ் மூனு பேர் போய்ர்காங்க ல இதுல நான் வேறயா?”என்று கேட்க,

 “ச்ச ஒரு அவசரத்தில் கூட சட்டுனு ஓடமாட்டிங்களா? அப்படினா எனக்கொரு ஆபத்து என்றாலும் இப்படி தான் நடந்து கொள்வீரோ?” என்று கேள்வியை எழுப்பிக்கொண்டே போக எங்கு இவர்கள் இருவருக்கும் சண்டை வந்திடுமோ என்று பயந்த அனு,

“விடு லதா ராகுல் சொல்றமாதிரி மூனு பேர் போயிருக்காங்க ல அவங்க பார்த்துப்பாங்க” என்று சமாதானம் செய்ய அமைதியானாள் லதா.

அவளை தூக்கிக்கொண்டு வந்தனர் மூவரும். முகத்தில் தண்ணீர் தெளித்தும் அவள் எழவில்லை. என்னசெய்வது என்று புரியாது. அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

“மச்சி இந்த வீட்டில் ஏதோ அமானுஷ்யம் இருக்கும் டா திவ்யாவை ஏதோ பன்னியிருக்கு” என்றான் சிவா.

“ஏங்க நீங்க வேற பயமுறுத்தாதிங்க?” என்றாள் அனு.

“விஜய்யும் ஜெய்யும் டாக்டர் வெளியே வரட்டும் என்னனு கேட்போம் அமைதியாக இருங்கள்” என்று கூறிவிட்டு டாக்டர் வருகைக்கு காத்திருந்தனர்.

டாக்டர் அவளை சோதித்துவிட்டு வெளியேவர, “டாக்டர் டாக்டர் திவ்யாவுக்கு எப்படியிருக்கு?” என்று விஜய் ஓடிச்சென்று கேட்க,

“எதையோ பார்த்து பயந்துருக்காங்க இப்ப கான்ஷியஸ் வந்திடுச்சு ஒன்னும் பிரச்சினை இல்லை போய் பாருங்க” என்று டாக்டர் கூறியதை கேட்டு உள்ளே நுழைந்தனர்.

“உனக்கு ஒன்றுமில்லை யே” என்று ஓடிச்சென்று விஜய் அவளை கட்டி அணைத்து அழ..அவளும் கதறி அழுதாள்.

“எ…எனக்கு பயமா இருக்கு என்ன யாரோ என்னமோ பன்ன முயற்சிக்கிறாங்க” என்றவள் திடுக்கிடும் தகவல் கூற. 

“நான் அப்பவே சொன்னேன் ல அமானுஷ்யம் இருக்குனு” என்று சிவாவும் சேர்ந்து கொள்ள,

“இருக்கலாம்” என்று ராகுல் எதர்ச்சையாக கூற. திவ்யா பேச்சை துவங்கினாள்

“நான் கிணற்றில் விழுந்ததும் யாரோ தள்ளிவிட்டு தான் அதேபோல் நான் பாத்ரூமிற்கு உள்ளே நுழைந்தபோது கூர்மையான கத்திமுனையை கொண்டு என்னை வெட்ட வரும்போது நான் கூச்சலிட்டபடியே இருக்க அந்த …அந்த.. உருவம் ம..மறைஞ்சிடுச்சு” என்றாள் பீதீயோடு!

“என்னது..? உருவமா?” என்று அனைவரும் அதிர்ந்து பார்க்க,

 “ஆமாம் உருவம் தான்.என் கண்களுக்கு ஒரு உருவமா தெரிஞ்சுது என்னால அந்த உருவத்தை தொட்டு உணரவே முடியல. அந்த உருவம் ஆணா பெண்ணா தெரியவில்லை” என்று விஜய்யின் தோளில் சாய்ந்தபடி கண்களை துடைத்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருக்க.. அனைவரின் முகமும் பயத்தில் வியர்த்தது. 

“மச்சான்ஸ் சிவா சொல்ற மாதிரி சம்திங் ராங்” ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்கு. நம்ப திவ்யா வை அந்த ஆபத்து தொடர ஆரம்பிச்சிருக்கு” என்று விஜய் கூற .

“ஆமாம் டா எதாவது செய்யனும்”என்று ஜெய் கூற. சரி சரி விஸிட்டிங் டைம் முடிஞ்சுது நம்ப எல்லாம் வெளியே வெயிட் பன்னலாம்” என்று அனைவரும் நகர விஜய் மட்டும் திவ்யாவை பார்த்து,

“உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் திவ்யா,நீ ப்ரண்டு மட்டுமின்றி எனக்கு அம்மா மாதிரி. எத்தனையோ நாள் உன் கை எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டுருக்கு, எத்தனையோ கஷ்டமான தருணங்களில் உன் அறிவுரை என் மனசை தேற்றியுருக்கு.” என்று கண்களை கண்ணிர் சிந்துவதற்கு முன் அதை தன் கைகுட்டையால் துடைத்துக்கொண்டே வெளியே வந்தான் விஜய்.

“மிஸ்டர் விஜய் உங்கள் கிட்ட ஒன்று கேட்கலாமா?” என்று சற்றே முதன்முதலில் அனு விஜயிடம் ஒரு கேள்வியை எழுப்பினாள்.அ

வள் என்ன கேட்பாளோ என்பதை கூட யோசிக்கும் மனநிலையில் இல்லாதபோதிலும் அவளுடைய கேள்விக்கு பதிலளிக்க சற்றே ஆவலுடன்,

 “கேளு மா” என்று தன்னுடைய குரலை சரி செய்தவாறு கூற,

 “விஜய் நான் உங்களை கவினிச்சிட்டே தான் இருக்கேன். உங்களுக்கு மற்ற ப்ரண்ட்ஸ் ஒப்பிட்டு பார்க்கிறப்ப திவ்யா ஏன் உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷல்?” என்று பளிச்சென்று கேட்டுவிட இவனால் பதில் கூறவும் முடியவில்லை கூறாமல் இருக்கவும் முடியவில்லை .

“அனு..நீ நினைக்கிற மாதிரி எனக்கு திவ்யா ஸ்பெஷல்னு எல்லாம் சொல்லமுடியாது அவள் என்னோட வாழ்க்கைல ஒரு அங்கம் அவ்வளவு தான். “

“புரியலை” என்று தன் புருவத்தை சுருக்கியபடி கேட்க

“திவ்யா.. எனக்கு ஒரு கல்லூரி தோழியா அறிமுகம். ஆனால் அவளுடைய அன்பு அக்கறை என்னை அவள் மேல் வைத்திருந்த அன்பை அதிகப்படுத்தியது. அதுக்கு பேரு காதல் எல்லாம் கிடையாது.”

“பின்ன?” என்று மீண்டும் புரியாமல் அனு கேட்க.

“அம்மா..என் அம்மா மாதிரி. என் அம்மா இறந்துவிட்ட நிலையில் சரியாக கல்லூரிக்கு போகாமலும் சாப்பிடாமலும் முடங்கி இருந்த நேரத்தில் இவளுடைய அன்பு தான் என்னை மாற்றியது”

“ஸோ நைஸ்… உங்கள் ப்ரண்டிஷ் பார்க்கிறப்ப ரொம்ப பொறாமையா இருக்கு. நான்கூட நீங்க இவ்வளவு அக்கறை எடுத்துகிறத பார்த்து திவ்யாவை ஒருகாலத்தில் நீங்க காதலிச்சிங்கனு நினைச்சேன்”

சாரி என்று அவனிடம் முகத்தை பாவமாக வைத்து சொல்ல, “விடுமா இதுக்கெல்லாம் ஏன் சாரி.உன் மனசுல இருக்கிற சந்தேகம் தீர்ந்துருச்சுல அது போதும்.அப்றம் திவ்யானு இல்லை யாருக்காக இருந்தாலும் நான் கண்டிப்பாக உதவி பன்னுவேன்” என்று இன்முகத்துடன் கூற அவளும் அவ்விடத்தை விட்டு நகரந்து சிவா பக்கத்தில் நின்றாள்.

“என்ன மேடம் விஜய் கிட்ட கேக்க வேண்டிய டவுட் எல்லாம் கேட்டுட்டியா?” என்று சிவா சிரித்தவாறே கேட்க”

“தோனுச்சு அதான் கேட்டேன்” என்று தனது தோள்பட்டை குலுக்கி சொல்ல,

“இந்த பொண்ணுங்களே இப்படிதான் பா ஒரு பையன் இறங்கி போய் எந்த உதவியும் ஒரு பொண்ணுக்கு பன்னிடகூடாது உடனே அதுக்கு ஒரு சப்பக்கட்டு கட்டிருவீங்க இப்படியான் அப்படியான் நொப்புடியானு என்று அவளை வசைப்பாட அவளோ,

 “ஏங்க சும்மா தானேங்க கேட்டேன். இதுக்கு போய் இப்படி ரவுண்டு கட்டுனா எப்படி” என்று பாவமான முகபாவனையில் உரைத்தாள்.

“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் மச்சி. இப்ப நம்ப திவ்யா விஷயத்தை எப்படி டீல் பன்றது சொல்லுங்க” என்று ஜெய் கேட்க, அனைவரும் ஆளாளுக்கு ஒரு பதில் கூறினர்.

“சாமியார் போய் பார்க்கலாம்” என்று சிவா கடைசியாக சொல்ல,

 “மந்திரவாதி அழைத்து வரலாம்” என்று விஜய் உரைக்க, இவர்களது பேச்சை கவனித்துக்கொண்டிருந்த ராகுல்,

“முதல்ல ஒரு சைக்காலஜி டாக்டர் போய் கன்செல்ட் பன்னுவோம்”என்று மிடுக்காக அவன் அபிப்பிராயத்தை சொன்னான்.

லதாவும் ராகுல் சொல்வதே சரி என்று ஆமோதிக்க. மற்றவர்கள் இவர்களது யோசனையை பரிசிலினை செய்ய ராகுல் கூறியது ஒருவகையில் சரியாகவே பட்டது.

“டேய் ராகுல்” என்றாள் லதா . 

“என்ன டி”?

“நம்ப அ..அந்த விஷயத்தை சொல்லிடுவோமா?” என்று நடுக்கத்துடன் லதா கேட்க,

“இப்ப அதெல்லாம் சொல்லாத விடு. அமைதியா விடு” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content