Kavalum kadhalum – 6
யார் இந்த பூவரசன்?
அழகான குடும்பம் அமைதியான வாழ்க்கை அன்பான தங்கை அவனுக்கு சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் என்று அவன் தங்கைக்கு அந்த துயர சம்பவம் நடந்ததோ அன்றையிலிருந்து அவனுடைய ஒட்டு மொத்த சந்தோஷமும் பறிபோனது.
ஆம் அவனுடைய பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர் ஆனால் பூவரசன் எழுந்து நின்றான் கம்பீரமாக வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில்…
****
அன்று ஆதி ரோட்டில் நின்றுகொண்டிருந்த போது ஒரு நாய் குட்டி துள்ளி குதித்து ஓடுவதை பார்த்தான் அது அந்த சிறுமி வளர்த்த நாய் போல இருக்கவே அதை பிடிக்க முயன்றான் அது ஓடி ஓடி கடைசியில் தாமரை அப்பார்ட்மண்டுக்கு செல்ல பின் தொடந்தான் அது நேராக 21 ராகவா வீட்டுள் நுழைந்தது.
‘என்ன டா இது சம்மந்தமே இல்லாமல் அந்த வீட்டை அடைகிறதே’ என்று குழப்பம். அவன் உள்ளே செல்லவும் சற்று தயக்கம். ஆனால் வேறு வழியின்றி உள்ளே சென்றான்…
வலதுபுரம் இருக்கும் மாஸ்டர் பெட்ரூமில், “என்னை விடு… ப்ளீஸ் விடு போதும் விடு… ஆ…அம்மா என்னால முடியலனு” கதறல் சத்தம் அந்த கதறல் சத்தம் ராகவா பெண்ணின் குரல்!
அவளை எப்படியாவது காப்பாற்றியாகனும் கதவை உடைக்க முயற்சித்தான் பிறகு அங்கிருந்த இரும்பு ராடினை கொண்டு கதவை பிளக்க முயற்சித்தான் கதவு அவனுக்கு ஏற்றாற்போல் சிரமம் தராமல் பிளந்துகொண்டது, பாவம்! அந்த பெண்ணின் அலறல் சத்தம் கதவின் செவிகளுக்கும் கேட்டுவிட்டது போலும்.
கதவை உடைத்து உள்ளே சென்றான் ஆதி. அவன் வசமாக சிக்கிக்கொண்டான். அங்கிருந்த ராகவன் மகள் விலகியிருந்த அவளுடைய சுடிதாரை சரிசெய்து கொண்டு.
“ஆதி அங்கிள் தாங்க்ஸ்….. இவன் ரொம்ப நாளாகவே இப்படி தான் யாரும் இல்லாத நேரம் வந்து என்னை இப்படி படுக்கைக்கு கூப்பிட்டு என்னை சீரழிப்பான்…..எங்க அப்பா இவன் கிட்ட பிஸினஸ் பார்ட்னரா இருந்துருக்காரு …இவன் கிட்ட கடன் அதிகமா வாங்கிருக்காரு போல…அவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்ப முடியவில்லை என் தாயாலும் என்னாலும் எனவே அதை ஈடுகட்ட இவன் என்னை படுக்கையில் அதை ஈடுகட்டுமாறு வற்புறுத்தி சீரழிக்கிறான்” என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க,
இதை கேட்ட ஆதியிற்கு காவலன் என்பதை தாண்டி ஒரு சராசரி தங்கைக்கு அண்ணணாக நினைக்க, “இவனை சும்மாவே விடக்கூடாது ராஸ்கல்”என்று அவனுடைய நரம்புகள் துடிக்க ஆரம்பித்தது.
அவளை தன் மகள் போல் அரவணைத்து தன் தோளில் சாய்த்தான் ஆதி. அப்புறம் தன்னுடன்.பணியில் இருக்கும் போலிஸ்காரர்களை வாக்கி டாக்கியில் அழைத்து அங்கு வரும்படி கூற, அவர்களும் உடனே அவன் கையில் விலங்கு மாட்டி தர தரன்னு இழுத்து சென்றனர்.
“அன்னைக்கு ஊரில் இருக்கிறப்ப இந்த பொன்னு போன் பன்னது இதை சொல்றதுக்குதானா?’ ஆதி மனதில் எண்ணி கொண்டான்.
அன்றே பேசியை தான் எடுத்து அந்த பெண் சொல்வதை கேட்டிருந்தால் இவன் அப்பவே சிக்கியிருப்பான் என்று தோன்றியது.
ஆனால் விசாரணையில் இவனுக்கும் ராகவா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிந்தாலும் இவன் ஒரு பெண் பித்து பிடித்தவன் என்பது தெரிய வந்தது. அதேநேரம் இவன்தான் வித்யாவிற்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததும் இவன் தான் என்று விசாரணையில் தெளிவாக தெரிந்தது.
“டேய் எருமை அன்னைக்கு சேஸ் பன்னப்ப தப்பிச்சு ஓடினியே இன்னைக்கு வசமா மாட்டின பத்தியா…சும்மா விடுவேனா உன்னை… ரேப் கேஸ் ல உள்ள தள்ளி தண்டனை வாங்கி தரலை என் பேரு ஆதி இல்லை” என்று அவன் சூளுரைக்க, அப்போது அந்த சிறுமி வந்தாள்.
“ஆதி மாமா….நீங்க ஏன் என் மாமாவை புடிச்சு வச்சிருக்க?” என்று வினவ,
“ஹாஹா உங்க மாமா ,ஒரு பேட் பாய் டா செல்லம் அதான்.” என்று அந்த குழந்தையிடம் கூறினான்.
“அப்போ எனக்கு யாரு இருக்கா?” என்று மீண்டும் அந்த சிறுமி அப்பாவித்தனத்தோடு கேட்க,
அவளைதன் கரங்களில் தூக்கி கொஞ்சியவன்,
‘அம்மு உனக்கு தான் உன் பப்பி திருப்பி கிடைச்சிருச்சே… இதோ பாரு” என்று அந்த நாய் குட்டியை காண்பித்தான்.
“ஐ…..என் பப்பி திருப்பி வந்துட்டான்” என்று சிரித்து கொண்டே நாயுடன் விளையாட ஆரம்பித்தாள். யாரும் இல்லாமல் அனாதையாக இருக்கும் அந்த சிறுமியை அரசு குழந்தைகள் காப்பகத்தில்வி டுத்தான். ஆனால் அவளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் ஆதி தன் சொந்த செலவில் செய்து வந்தான்.
ஆதியின் திருமண நாள் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆதி அவனுடைய ஆனந்திக்கு இனிய ஹஸ்பண்டு ஆகும் நாள் தான் இது. அவனுக்கே உரியவளானாள்
ஆனந்தி கழுத்தில் மங்கள நாண் பூட்டி அவளை தன் மனையாளாக மாற்றி கொண்டான் ஆதி. உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்… கல்யாணத்துக்கு வந்த ரேணுகா தன்னுடைய வருங்கால மணக்கோலத்தை ஒரு நிமிடம் மனதில் காட்சியாக ஓட்டி பார்த்தாள். அவளுக்கு உதட்டில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
முதலிரவு ஏற்பாடு அன்றிரவு பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டன
ஆதி அவளுக்காக காத்திருக்க, அவளது வருகை தாமதமானது நகத்தை கடித்து துப்பி தன் பதற்றத்தை வெளிப்படுத்தினான். என்னதான் காவலன் என்றாலும் முதலிரவில் சராசரி ஆண்மகனுக்கு ஏற்படும் அதே உணர்வு பதற்றம் தானே இவனுக்கும் இருக்கும். மெல்ல அவள் உள்ளே நுழைந்து தாழிட்டாள்.அவன் டென்ஷனாக இருப்பதை உணர்ந்தவள்.
“ஏய் மாம்ஸ் என்ன ஒரே டென்ஷன்?”
“ஒன்னுல… ஆமா ஏன் டி லேட்” என்று கேட்க
“ம்ம்ம் அது எப்படி சொல்வது உன்கிட்ட” என்று தடுமாறியவள்
“என்ன?” என்று அவனின் கேள்வியில் சிக்கிய மீன் போல உண்மையை உடைத்தாள்.
“ரெஸ்ட்ரும் போய்ட்டு வர லேட் அதான் ..”என்று பேச்சை அதோட நிப்பாட்ட நினைத்தாலும் ஆதி அவளை விடுவதாக இல்லை. மீண்டும் அவனிடமிருந்து கேள்வி எழும்பியது.
“ரெஸ்ட்ரும் போயிட்டு வரவா இவ்வளவு நேரம்?”
“ஏய் மாமா அது வந்து எனக்கு இப்போ அந்த நாட்கள் ஆயிடுச்சு. அது இந்த பெருசுங்க கிட்ட சொன்னா என்னைய உள்ள அனுப்பிருக்க மாட்டாங்க அதான் யாருக்கும் தெரியாம விஷயத்தை மறைச்சிட்டு வருவதற்குள் தாமதம் ஆயிடுச்சு”.என்று சிரித்தாள்
“ஹாஹா எப்படி இருந்தாலும் இப்பொழுது நான் ஒன்னும் உன்னை பன்ன முடியாது அப்புறம் ஏன் உள்ள வந்த..?” என்று குறும்புத்தன பேச்சை ஆரம்பிக்க
“ம்ம்ம் சும்மா உன் கூட பேசாலானு தான்…அது என்ன சினிமாவில் மட்டும் முதலிரவு என்றால் ஆரம்பத்துல கொஞ்சம் நேரம் பேசுறாங்க ,அப்படியிருக்க நிஜத்தில் ஏன் பேசக்கூடாது முதலிரவு அன்று” என்று வினவ,
“அடிப்போடி நான் பர்ஸ்ட் நைட் நினைச்சு எவ்வளவு ஆசை வச்சிருந்தன் இப்படி சொதப்பிருச்சே.” என்று தலையில் கைவைத்தபடி தனது நிலையை நினைத்து வேதனை பட.
“விடு மாம்ஸ் இன்னும் த்ரீ டேஸ் தான்.அதுக்கப்புறம் யாரும் உன்னை தடுக்கவே முடியாது ஓகேவா இங்கே பார் கவலை படாதிங்க மாமா”
“போடி..என் கிட்ட வராத ஓடிரு..நான் செம்ம காண்டுல இருக்கேன்” என்று பொய் கோபம் அவளிடம் காட்டினான்.
“ஓய் ரொம்ப தான் உனக்கு…ஏன் மாமா என்கிட்ட எதுவும் பேசமாட்டியா?”
“சரி சரி….எனக்கு தூக்கம் வருது ஆனந்தி நாளைக்கு வேற ப்ரண்டுஸ் க்கு பார்ட்டி வைக்கனும்.வேலை இருக்கு. குட்நைட் என்று கூறிவிட்டு படுக்கையில் ஒருபுறம் சாய்ந்தவாறு படுக்க..
“ச்ச….போயா என்று சினுங்கி அவனிருக்கும் படுக்கையில் இன்னொரு ஓரத்தில் அவளும் சாய்ந்தாள். சிறிது நேரத்தில் அவளுக்கு நித்திரை தழுவியது.
ஆனால் சிறிது நேரத்தில் கண்விழித்து அவனோ அவளிருக்கும் பக்கம் திரும்பி அவளை ரசித்துக்கொண்டே இருந்தான். ஜன்னல் வழியே வரும் காற்றின் அசைவில் அவளது சேலை காற்றில் அசைந்தாடியது, சற்று நேரத்தில் மெதுவாக சேலை இடையை விட்டு சற்று அகல…கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் அவனது மனம் ஏங்க… திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தவள் சேலையை சரிசெய்தவாறு.
“மாமா நீ இன்னும் தூங்கலையா?”
“இல்லை… எப்படி டி வரும் தூக்கம்?”
“ஏன் ஒரே பீலிங்ஸா?” என்றாள் சிரித்துக்கொண்டே
“ஹாஹா ஆமா…பயங்கர பீலிங்ஸ் டி. என் பீலிங்ஸ் நாவல் கதையா எழுத ஆரம்பிச்சா ஒரு பத்து அத்தியாயம் எழுதலாம்” என்றவுடன் அவனுடைய ஆசையை புரிந்து கொண்டவளானாலும் அவள் உடலில் இயற்கை தந்த மாற்றத்தை மாற்றமுடியுமா என்ன. அன்றைய இரவு ஏக்கத்துடனே கழிந்தது.
பொழுது விடிந்தது.
ராகவா கேஸ்ஸில் முக்கியமான ஒரு இன்பார்மேஷன் தொலைபேசி மூலம் கிடைத்தது ஆதியிற்கு. அதாவது அவனை கொன்றது அதே அப்பார்ட்மண்டில் இருக்கிறவங்க தான் யாரோ கொன்னுருக்காங்க என்று. ஆனால் ஆதி கல்யாண ஆன புதிது என்பதால் விடுப்பில் இருக்கிறானா. விடுப்பு முடிந்து போனால் தான் அதைப்பற்றி எடுத்து விசாரிக்க முடியும். அது வரைக்கும் கேஸ் பெண்டிங் தான்.