You don't have javascript enabled
Romancevaanisri novels

Silendru oru kadhal-4

அம்மம்மா வருவதை பார்த்த ஸ்ரீமஹாலக்ஷ்மி வேகமாக வண்டியில் ஏறி அதனை உயிற்பித்தாள். பின் அவர் ஏறி அமர்ந்ததும் வண்டியை கிளம்பிக்கொண்டு கோயில் வளாகத்திலிருந்து வெளியானாள்.

சிறிது நேர அமைதிக்குப் பின் இவளது அம்மம்மா ஆரம்பித்தார் “மஹாலக்ஷ்மி…. நீ செய்றது ஒன்னும் சரி இல்லை! இப்படித்தான் அந்த பிள்ளை மனசை நோகும் படி பேசுறதா?” -என்று மனதாங்களுடன் கேட்டார்.

அவர் கூறியதை கேட்ட இவளோ “அம்மம்மா பிலீஸ்…. கொஞ்சம் நிம்மதியா வண்டி ஓட்ட விடுங்க!! இல்லனா பெருமாளிடமே போய் சேர்ந்திடுவோம்” -என்று கூற அம்மம்மா அமைதியாகி விட்டார்.

வீட்டுக்கு வந்து சேர்ந்த இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்துக்கொள்ள அதை பார்த்த மஹாவின் அன்னை நேசமலரோ, “என்னமா… பாட்டிக்கும் பேத்திக்கும் மறுபடியும் சண்டையா??” -என்று எதார்த்தமாக வினவ.

அதற்கு மஹா, “ஏன் என்கிட்ட கேட்குறீங்க?! அதோ உங்களை பெத்த ஆத்தாகிட்டையே கேளுங்க” -என்று கூறி சென்றுவிட்டாள்.

நேசமலர் அவரது அன்னையை நோக்க அவரோ, “ஏன் என்னைய பார்க்கிற??? நீ பெத்ததுகிட்டையே கேளு! வளர்த்து வச்சிருக்கா ஒரு அவசரக் குடுகையை!!! இவளை நினைச்சாலே எனக்கு தூக்கம் வராது” -என்று புலம்பியவாறு சென்று விட்டார்.

நேசமலரோ, “என்னய்யா நடக்குது இங்க?!” -என்ற ரீதியில் முழித்தார்.

******************************************************************************

மறுநாள் மாலையில் தோழியர் மூவரும் மஹாவின் வீட்டில் கூடியிருந்தனர். இந்த வாரம் அவர்களுக்கு ஸ்டடி பிரேக் என்றழைக்கப்படும் ரிவிஷன் வாரம். ஆதலால் மூவரும் இன்று மஹாவின் வீட்டில் கூடி படிப்பதாக முடிவெடுத்திருந்தனர். அதன் படி காலையில் இருந்தே படிப்பதை ஆரம்பித்து விட்டார்கள்.  காலையில் இருந்து அறையிலேயே முடங்கி கிடந்த படியால்  ஒரு மாற்றத்திற்காக மூவரும் வீட்டு வராண்டாவில் அமர்ந்து காற்று வாங்கியவாறே படித்துக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஓர் பெரிய கார் ஒன்று மஹாவின் வீட்டின் முன் வந்து நின்றது.

“எவரது…?” -என்று கேள்வியாக நோக்கியவள் அதிர்ச்சிக்குள்ளாகினாள் ஏனெனில் அவள் வீட்டின் முன் வந்து நின்ற வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கியது சாட்சாத் கௌதமே தான்.

“எத்தனை முறை சொன்னாலும் விட மாட்டான் போல!!! சரியான விடாகண்டன்” -என்று எண்ணிக்கொண்டு திறு திறு என்று விழித்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. கௌதமை பார்த்த யோகா ” ஹேய்… சீனியர்!! அச்சச்சோ… என்னடி வீ-வீட்டுக்கு அப்பா அம்மாவோட வந்திருக்கார்?” -என்று தடுமாற.

அதற்குள் அவர்களை நெருங்கிய கௌதமின் பெற்றோர்கள் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நோக்கி “நீ தான் மஹாவாமா?! கௌதம் சொன்னான்!! அப்பா அம்மா எல்லாரும் வீட்டில் இருக்காங்களா?!” -என்று கேட்க.

இவளும் “ஹலோ அங்கிள்… வாங்க!! ஹான்… எல்லாரும் வீட்டில தான் இருக்காங்க” -என்று கூறி உபசரித்தாள்.

அவர்கள் உள் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு அவர்களின் பின் உள் செல்ல முயன்ற கௌதமின் கையை பற்றியவள் கோவமாக வினவினாள் “என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?! ஹௌ டு ஐ லுக் டு யூ?!”.

இவனோ “இங்க பார் ஸ்ரீமஹாலக்ஷ்மி…. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு!! யூ ஆர் க்ரோஸிங் யூர்ஸ்!! இப்போ கையை விடு!!” -என்று காட்டமாக கூற.

“வாட்?? லிமிட்டை பற்றி யார் பேசுறதுன்னு பாரேன்….” என்று கோவமாக கூறுகையில் உள்ளிருந்து அவளது தந்தை சுப்ரமணியத்தின் குரல் சந்தோஷமாக ஒலித்தது “அடடே… ஸ்ரீனிவாசா…. எவ்ளோ வருஷம் ஆச்சு உன்னை பார்த்து….” என்று வந்தவர்களை உபசரித்தார் சுப்ரமணியம்.

தந்தையின் குரலை கேட்டவள் கௌதமை பிடித்திருந்த தன் கைகளின் பிடியை தளர்த்த அவனோ வெடுக்கென்று தன் கையை உதறிக்கொண்டு இவளை முறைத்தவாறு வீட்டினுள் நுழைந்தான்.

அவன் செல்வதையே பார்திருந்தவள் தனது தோழிகளை திரும்பி பயத்துடன் பார்த்தாள்.

“இப்போ என்ன நடக்க போகிறதுனு நினைத்தாலே பயமா இருக்கு” -என்று கூற. தோழிகள் இருவரும் அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டனர். பின் அவர்களின் அணைப்பை விடுத்து ஸ்ரீமஹாலக்ஷ்மி வேகமாக உள்சென்று தனது அறையில் முடங்கிவிட்டாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவளது தாய் அவளை அழைக்கும் குரல் கேட்க இவள் விறைப்புற்றாள்.

“மஹாலக்ஷ்மி…. மஹாலக்ஷ்மி…. ஸ்ரீமஹாலக்ஷ்மி…”

********************************************************

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.

இன்று.

“மிஸ் ஸ்ரீமஹாலக்ஷ்மி…. மிஸ் ஸ்ரீமஹாலக்ஷ்மி!! யூர் பிஃலைட் ஹஸ் சேப்ஃலி லாண்டட் மிஸ்!! யூ மே கெட் டௌன் நௌ” -என்று தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீமஹாலக்ஷ்மியை அரும்பாடுபட்டு எழுப்பினாள் அவ்விமானப் பணிப்பெண்.

சற்றென்று விழித்தில் எது கனவு? எது நிஜம்? என்று பிரித்தறிய முடியாமல் திகைத்து விழித்தாள் மஹா. பின் ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு அப்பணிப்பெண்ணைப் பார்த்து நன்றி உரைத்துவிட்டு Kuala Lumpur International Airport (KLIA)-ல்  ஐந்து ஆண்டுகளுக்குப் பின் காலை பதித்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

ஒருவழியாக எல்லா ப்ரோசிடியர்ஸையும் முடித்து விட்டு வந்தவள் அதிர்த்தாள்?! ஏனெனில் தன்னை வரவேற்க எப்படியேனும் தனது மொத்தக் குடும்பம் மற்றும் தோழியர் இருவரும் வந்திருப்பர் என்று எதிர்பார்த்தவள் அங்கு தனக்காக காத்திருக்கும் காரோட்டியை பார்த்து தன்னுள் ஏதோ ஒன்றுடைவதைப் போல உணர்ந்தாள்.

பின் அதை ஒத்துகியவாறு அவரை பார்த்து புன்னகைத்தவள் தனது ட்ரோலியை தள்ளிக்கொண்டு அவருடன் நடக்கலானாள்.

தனது லக்கேஜை எல்லாம் ஏற்றிவிட்டு காரின் பின் சீட்டில் அமர்ந்தவள் காரோட்டியிடம் நலம் விசாரித்துவிட்டு தனது வீட்டினார்களைப் பற்றி கேட்களானாள்.

“ராம் அண்ணா…. எங்க அப்பா, அம்மா, தம்பிங்க யாருமே இல்லையா?!” -என்றாள் ஒரு வித எதிர்பார்ப்புடன்.

அவரோ ரிலாக்ஸாக “அதுவாமா?! எல்லாரும் நம்ப கௌதம் தம்பியோட நிச்சயத்துக்கு ஷாப்பிங் செய்ய போயிருக்காங்க” -என்று அழுங்காமல் குழுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கினார்.

“க…கௌ… கௌதம் ஸ்ரீனிவசனா?!” -என்று தடுமாற்றத்தோடு கேட்டாள்.

“ஆமாம்மா… அந்த தம்பி தான்! இந்த ஐந்து வருஷத்துல தம்பி தான் நீங்க இல்லாத குறையை நிவர்த்தி செய்தார். எலார்கிட்டையும் கல கலனு பேசி வீட்டையே அமர்க்களப் படுத்திடுவார்னா பார்த்துக்கொங்க!!” -என்று இவள் மனநிலை அறியாமல் கௌதம் புராணம் பாட ஆரம்பித்தார் ராம் அண்ணா.

இவளுக்கோ கௌதமிற்கு நிச்சயம் என்றலவில் தனது மூலை வேலை நிறுத்தம் செய்ததைப் போல் ஓர் தோற்றம். கௌதமிற்கு நிச்சயம் நடக்கவிருப்பதைப் பற்றி தனக்கு ஏன் யாரும் தெரியப் படுத்தவில்லை என்று ஒருவிதமான அலைப்புறுதலுடன் தனக்குள்ளாகவே எண்ணிக்கொண்டாள். தாங்கொணா வலியுடன் இமைகளை மூடிக் கொண்டு காரின் இருக்கையில் தலை சாய்த்தாள்.

அவளின் அனுமதியின்றியே அவளது மனம் பின்னோக்கி பயணித்தது.

சரியாக சொல்ல வேண்டும் எனில் கௌதம் தன் பெற்றோருடன் அவளது வீட்டிற்கு முதல் முதலாக வந்த தினத்திற்குச் சென்றது.

******************************************************************************

அன்று தாய் தன்னை அழைக்கவும் அறையை விட்டு வெளிவந்தவள் என்ன?! ஏது?! என்று விசாரிக்காமல் சற்றென்று கௌதமின் பெற்றோர் ஸ்ரீனிவாசன் – ஜானகி தம்பதியினர் முன் வந்து நின்று பேச… அல்ல.. அல்ல… குற்றப்பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்து விட்டாள்.

“அங்கிள் இங்க பாருங்க…. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல! ஆரம்பத்தில் உதவி செய்ற மாதிரி செய்துட்டு அதுக்கு பிறகு உங்க பையன் ஒரே டாச்சர்தான் செய்தார். எப்பப் பார்த்தாலும் நான் போகிற இடத்துக்கெலாம் வந்து நான் கேட்காத கிப்ட்ஸ் எல்லாம் குடுத்து என்னைய தர்மசங்கடப் படுத்துவார்!!! நான் என் அப்பா பேச்சை மீறி எப்பவுமே நடக்க மாட்டேன் அங்கிள்! உங்க கிட்ட நான் தப்பா பேசியிருந்தா பிலீஸ் என்னை மனிச்சிருங்க….பிலீஸ் அங்கிள் இவரை இதை இத்தோடு  நிப்பாட்ட சொல்லுங்க!!” -என்று இரு கரம் கூப்பி மன்றாடி கேட்டாள்.

கௌதமின் அப்பாவிற்கு எதுவோ சரி இல்லை என்று தோன்றியது.சற்று நேரத்திற்கு அங்கு ஒரே நிசப்தம்.

முதலில் பேசியதே ஸ்ரீனிவாசன் தான் “சரிடாமா… இனிமே நீ படிச்சு முடிக்கும் வரை என் மகன் உன் கண் முன்னால் வர மாட்டான்!! அதற்க்கு நான் பொறுப்பு. நீ நிம்மதியா படிச்சு உன்னோட எக்ஸாம்ஸ் எல்லாம் முடிச்சு சந்தோஷமா இருக்கணும்… என்ன நான் சொல்றது புரியுதா?!” -என்று வாஞ்சையுடன் கூறினார்.

“தென்…. என் பையன் உன்னை டிஸ்டார்ப் செய்ததுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு…” என்று ஸ்ரீனிவாசன் கூறுகையில்.

“அப்பா….” -என்று கௌதமும் “ஸ்ரீனி… என்ன செய்ற?!” என்று சுப்ரமணியமும் சங்கடப்பட.

ஸ்ரீமஹாலக்ஷ்மி அவரின் முன் இரு கரம் கூப்பி கெஞ்சினாள் “அங்கிள் பிலீஸ் டோன்ட் மேக் திஸ் ஹார்ட் பாஃர் மீ!!!” -என்றால் கன்னத்தில் கண்ணீர் வழிய.

“ச்ச.. ச்ச!! நாட் அட் ஆல்!! சரி சுப்பிரமணி… நாங்க கிளம்புறோம்!! கண்டிப்பாக குடும்பத்தோட வீட்டுக்கு வரணும்” -என்ற அழைப்புடன் விடைபெற்று சென்றார் ஸ்ரீனிவாசன்.

கௌதமின் அம்மா ஜானகியோ “போயிட்டு வரேன் மா!! நல்லா படி மனசை போட்டு குழப்பிக்காதே என்ன?!” -என்று கனிவாக கூறியபடி இவளை உச்சி முகர்ந்து வெளியேறினார்.

இவளுக்கோ என்னவோ போல் இருந்தது!

“ரொம்ப அவசரப்பட்டு முடிவெத்துட்டோமோ?! அப்பவே அம்மம்மா சொல்லுவாங்க…. பொறுமை… பொறுமைன்னு!!!” -என்று தவிப்பாக எண்ணினாள்.

ஜானகி செல்வதை பார்த்து கொண்டு திரும்பிய ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸ்தம்பித்து நின்றாள் தன் முன் குற்றம் சுமத்தும் பார்வையை தாங்கி நின்ற கௌதமை பார்த்து. அவனின் கூரான கண்கள் அவளை பாரபட்சமின்றி குற்றம் சுமத்தியது. அதைக் கண் கொண்டு காணமுடியாமல் ஸ்ரீமஹாலக்ஷ்மி கண்களை மூடிக்கொண்டாள்.

அவளின் முன் சென்றவன் அவளின் புறம் குனிந்து அவளது காதுகளில் “கடைசி வரைக்கும் என்னைய புரிஞ்சுக்கவே இல்லல்ல?! யூ நெவர் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ ஐதர்!!!” -என்ற குற்றச்சாட்டுடன் விறு விறுவென்று சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தாள் மஹா.

“ஆனாலும் உனக்கு இவ்ளோ அவசரம் ஆகாதுடி….” -என்ற நிவாஷினியின் குரலில் சுயநினைவுக்கு வந்தாள் மஹா.

நிவாஷினியுடன் சேர்ந்து அவளது அமம்மாவும் அவர் பங்கிற்கு அர்ச்சனையை ஆரம்பிக்க முயல சுப்ரமணியத்தின் குரல் ஒலித்தது.

“யாரும் லக்ஷ்மிமாவை ஒன்னும் சொல்ல கூடாது!!! நீ உள்ள போமா… அப்பா பார்த்துகிறேன்” -என்று முடித்துவிட்டார்.

அவள் அவளது அறைக்குச் சென்ற பின் “யாரும் இணைக்கு நடந்ததைப் பற்றி அவளிடம்  இனி பேசக்கூடாது!!!” -என்று கூறிவிட்டு சென்றார்.

அதற்குப்பின் யாரும் அவ்விஷயத்தை பற்றி பேசவில்லை. ஆனால் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஏனோ கௌதம் அன்று கூறிவிட்டு சென்ற வார்த்தைகளே கனவிலும் நினைவிலும் துறதுவதைப் போல ஓர் பிரம்மை.

ஒரு மாதத்திற்குப் பின் அவர்களின் தேர்வு முடிவுகளும் வந்தன. தோழியர் மூவருமே சிறப்பாக தேர்ச்சிப்பெற்றிருந்தனர்.

எதிலுமே நாட்டம் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த மகளை சுப்ரமணியம் தான் ஆசைப்பட்டவாறு மஹாவை கனடாவில் வசிக்கும் தன் தங்கை குடும்பத்துடன் தங்கி படிக்குமாறு அனுப்பிவைத்தார்.

“போக மாட்டேன்” என்று அடம் பிடிப்பாள். “இங்கு தான் இருப்பேன்” என்று முரண்டு பிடிப்பாள் என்று எண்ணிக்கொண்டிருந்த தந்தையின் எண்ணத்தை பொய்யாக்கினாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. யாருமே எதிர்பார்க்காதவாறு அமைதியாக தந்தை சொன்னதை ஏற்று கனடாவிற்கு பயணப்பட்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி தனது எதிர்காலத்தை நோக்கி.

பிரிந்தேயிராத தன் குடும்பத்தை  பிரிந்திருக்கவே இயலாதென்று எண்ணிய தன் உயிர்த் தோழிகளை விட்டு விட்டு விமானம்  ஏறினாள் மஹா கனடாவிற்கு.

நாட்கள் செல்ல செல்ல அங்குள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பொருத்திக்கொண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. அத்தை மகள் இவளின் மன மாறுதலுக்கு பெருத்த காரணமாக இருந்தாள். ஐந்து வயதே ஆன அச்சிறுமி சிறுக சிறுக இவளின் மன உளைச்சலை தீர்த்து வைத்தாள்.

கனடாவில் இருந்த அந்த ஆரம்ப நாட்களில் தான் மஹா தான் செய்த தவற்றை நன்கு உணர்ந்தாள். தான் கௌதமிற்கு அநியாயம் இழைத்து விட்டதாக சொல்லி சொல்லியே  அவளது மனசாட்சி அவளை கொன்றது. ஒருமுறையேனும் அவன் சொல்ல வந்ததை தான் பொறுமையாக கேட்டிருக்கலாமோ என்ற காலம் கடந்த ஞானோதயமும் வந்தது மஹாவிற்கு.

தன் மனதை வேறு விஷயங்களில் ஈடுபடுத்த எண்ணி மஹா ஓய்வு நேரத்தில் தனது அத்தை மகளுக்கு வரைய கற்றுக் கொடுப்பாள். அப்படடி ஒரு நாள் மனித முகம் வரைகையில் தான் வரைந்த ஓவியத்தைப் பார்த்த மஹா அதிர்ந்தாள் ஏனெனில் அவள் வரைந்தது சாட்சாத் கௌதமையே தான். அதுவும் அன்று மின் தூக்கியில் டையை சரி செய்தவாறு நுழைந்த அவன் உருவத்தை தத்ரூபமாக வரைந்திருந்தாள்.

அக்கணம் தான் மஹா தன் மனதில் கௌதமிற்கான இடம் எது என்பதை நன்கு உணர்ந்தாள்.

அவளின் அறிவோ “இது தப்பு…. வேண்டாம்” என்றது. ஆனால் மனமோ “கௌதம் தான் வேண்டும்!!!” என்று பிடிவாதமாக போராடியது.

 அறிவுக்கும் மனசுக்கும் நடந்த போராட்டத்தில் மனமே வென்றது! கௌதம் வெற்றிகரமாக மஹாவின் மனதில் சிம்மசொப்பனமிட்டு அமர்ந்தான்.

 ஆனால் ஏனோ கௌதமின் மேல் தான் கொண்டிருக்கும் நேசத்தினை தன் பெற்றோரிடம் தெரிவுப்படுத்தும் தைரியம் தனக்கில்லை என்றே மஹாவிற்கு தோன்றியது. தனது காதலை தான் தந்தையிடம் தெரிவுபடுத்தப் போய் அதை அவர் நிராகரிக்கும் பட்சத்தில் தன்னால் தந்தையை மீறி தனது காதலை தக்கவைத்துக் கொள்ள இயலும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

 ஆகையால் கௌதமின் மேல் தான் கொண்டிருக்கும் நேசத்தினை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிலேயே பூட்டி வைத்தாள். இவ்விஷயத்தில் கௌதமின் முடிவு எவ்வாறாக இருக்கும் என்பதை மஹாவினால் அறிய முடியவில்லை. ஏனெனில் கௌதம் இது வரை மஹாவிடம் எதையும் கூறியதில்லை. சரியாக சொல்ல வேண்டும் எனில் இவள் கூறவிட்டதில்லை.

 அது மட்டும் இல்லாமால் மஹா தன் காதலை அவள் வெளிப்படுத்தும் வேளையில் தான் கௌதமின் அறிவுக்கும் திறமைக்கும் அவனுக்கு சமம்மானவளாக இருக்க வேண்டும் என்றெண்ணினாள். 

அதற்காக கடுமையாக படித்து தேர்ச்சி பெற்றால். இவளது திறமையை பார்த்து கனடாவிலேயே இவளுக்கு வேலை கிடைத்தது. வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக தனது மாஸ்டர்ஸை முடித்தாள்.  தனது திறமையை, அறிவை, செல்வ நிலையை மேம்படுத்திக்கொண்டு இதோ இந்த ஐந்து வருடத்தில் முதல் முறையாக மலேசியா திரும்புகிறாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

எவ்வளவு தூரம்… எவ்வுளவு வருடங்கள் கடந்த பின்னரும் கூட அவளை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருப்பது என்னவோ யாரும் அறியாமல் தன் மனதில் சுமந்துகொண்டிருக்கும் காதல் மற்றும்  வாரத்திற்க்கொருமுறை தன் குடும்பத்தாருடனும் தோழிகளுடனும் பேசும் தொலைபேசி அழைப்புகள் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content