You don't have javascript enabled
Monisha NovelsRomantic comedysivaranjani novels

Vithai-7

விதை 7

      அதற்கு அடுத்தநாள்  இரவு வந்தனா வர்ஷனை அழைத்து வசை மாரி பொழிந்தாள் .

      “டேய்ய்!என்னடா இப்டி செஞ்சு வச்சிருக்க

     “ஓஹ்! மேட்டர் இப்போதான் தெரிஞ்சுதுபோல”  என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

      ” ஆமா!  இப்போதான் வீட்டுக்கு கால் பண்ணினேன்.எல்லாம் சொன்னாங்க.உனக்கு என்னடா அவ்ளோ அவசரம்.என்கிட்ட கூட சொல்லாம வீட்ல போய் பேசிட்டு வந்திருக்க. நான் சொன்னப்பறம்  போய் பேசிருக்கலாம்ல”

     “நீ சொல்ற வரைக்கும் வச்சுக்கிட்டு இருப்பாங்களாக்கும். எனக்கெல்லாம் அவ்ளோ பொறுமை இல்லடி. பட்டுனு பேசி சட்டுன்னு உன்னை சம்சாரமாக்கிக்கணும். உன் கூடவே இருக்கனும் போல இருக்குடி.”

      “என்னடா சொன்ன எங்க வீட்ல?மயங்கி விழாத குறைதான். எப்டி சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். மொத்த சோலியும் முடிச்சிட்ட. உங்க வீட்ல பேசிட்டியா?”

      “நேத்தே பேசிட்டேன் என் வீட்ல.உங்க வீட்ல மருமகன்னு பேர்ல உங்களுக்கு மூத்த  மகனா இருக்க ஆசைப்படறேன். சம்மதமான்னு கேட்டேன்.

அப்டியே ஷாக் ஆயிட்டாங்க.

எல்லா விஷயமும் சொன்னேன். அதிதிய பேச வச்சேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.அவங்களுக்கு என்னை பிடிச்சிருந்துச்சு.அதிதி சொன்னதுல நம்பிக்கை. ரொம்ப ஹாப்பி ஆயி ஆனந்தக்கண்ணீர்லாம் விட்டாங்க.

வந்தனா எப்படி சொல்றதுன்னு தயங்குவா,அதான் அவளுக்கே  தெரியாம நான் வந்து பேசறேன்.அவளை தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னேன்.

இதுல இன்னுமா  ஹாப்பி ஆய்ட்டாங்க.எங்க வீட்லயும்  படு ஹாப்பி.நாளைக்கு என் பேரண்ட்ஸோட போய் பேசிட்டு வரேன். அதுக்கப்பறம் உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இப்போ உன் போட்டோ அனுப்பு. அம்மாக்கு  பார்க்கணுமாம்.”

     அவள் பிரமித்து  போய் உறைந்துவிட்டாள்.

     “வந்தனா”

     “எவ்வ்வ்ளோ  ஸ்பீடு. என்னால பிக்  அப் பண்ண முடிலடா.”

     “என்னாலயும்  வெயிட் பண்ண முடியாதுடி.ஐ வாண்ட்  யூ ஏஸ் மை பொண்டாட்டி ASAP”

     ” தேங்க்ஸ்டா மானஸீக  புருஷா”

       “எதுக்குடி தேங்க்ஸ்.பிட்வீன் நீ சொன்ன ‘  மானசீக புருஷா’குளுகுளுனு இருக்குடி.”

       ” நான் போற பாதைல  முள் எல்லாம் எடுத்துட்டு பூவை  நிரப்பி வச்சது  போல இருக்குடா”

     “வாவ்! வாயாடி ! நீ இப்டி கூட பேசுவியா ?”

     “டேய்ய்!  எவ்வ்ளோ ஃபீலிங்கு பிழிஞ்சு சொன்னேன்.ஏன்டா டைல்யூட் பண்ற”

    ” உனக்கு செட் ஆகல.அதான்”

   “அதென்னமோ  உண்மைதான்.சரி அதை விடு, போட்டோ நாளைக்கு  அனுப்புறேனே”

    “ஏன்டி?”

    “புடவை  கட்டி ‘ பூ’லாம் வச்சு அனுப்புறேன்”

    அவன் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு,

    ” நீயாடி  பேசற?”  என்றான்

     ” ஆமாடா, நானேதான்,எனக்கே வித்யாசமாதான் இருக்கு.ஆனா தோணுதே”

    ” அதெல்லாம் வேணாம்.அப்டியே ஒரு செல்பி எடுத்து அனுப்பு போதும்.ஜஸ்ட்  ஒரு க்யூரியாசிட்டில  கேக்கறாங்க அவ்ளோதான்”

     ” ஆர் யூ ஸ்யூர்”

    ” யா!  100%”

     “ஓகே டா பை “

      ” பை”

அதன்பின் வர்ஷன் கூறியதுபோல்  வந்தனா வீட்டிற்கு,வர்ஷன் அவன் பெற்றோருடன்  சென்று,பேசி முடித்துவிட்டனர்.இரு மாதத்தில்  திருமணம் என்றும்,அதற்கு முதல் நாளே நிச்சயதார்த்தம்  என்றும் முடிவு செய்தனர்.

      அதிதியும் அமரும் கூட தத்தம் வீட்டில் பேசி சம்மதம்  பெற்றுவிட்டனர்.அவர்கள் இரு  வீட்டிலுமே மிகுந்த மகிழ்வுடன் ஒப்புக்கொண்டனர்.

   எனவே கடலை வறுத்து, ஸ்வீட் நத்திங்ஸ் பேசி, சங்கீத  ஸ்வரங்கள்  பாட்டு பாடி ,வாட்சாப், மெசெஞ்சர் என அனைத்திலும்  மொக்கை போட்டு அதன் ‘ஸ்மைலி’ களை  கதற விட்டு என நாளொரு மேனியும் பொழுதொரு  வண்ணமுமாய்  காதல் வளர்த்தனர்  நால்வரும்.

     ஒரு நாள், வர்ஷன் தன் இல்லத்திற்கு  வந்தனாவை அழைத்துச் சென்றான். பிரம்மாண்ட பங்களா  என்றில்லை. ஆனால் பங்களா என்று கூறும்  அளவில்  இருந்தது.ஆனால் நிறைய நறுமணம் கமழும்  மலர்கள் நிறைந்த தோட்டம் ஒரு ரம்மியத்தினை  ஏற்படுத்தி  அவளை வரவேற்றது.

      அவன் உள் நுழையும் போதே,”என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை பார்,என்னை பிடிக்கும்” என்று பாடிக்கொண்டே  சென்றான்.

       அவன் பெற்றோரும் வாரணம்  ஆயிரம் சூர்யா  சிம்ரனை  நினைவுபடுத்துவது  போன்று,மிகுந்த தோழமையுடன் பழகினர். தலைமுறை  இடைவெளி என்ற ஒன்று இருப்பதாகவே  தோண்றவில்லை.இந்தத் தலைமுறை மக்களுடன்  பழகுவது  போன்றே தோன்றியது அவளுக்கு.

      அவனது அப்பா கன்ஸ்ட்ரக்ஷன்  தொழிலில்  உள்ளார். அம்மா இல்லத்தரசி. சிறு குடும்பம்தான்.ஆனால் அழகாக அன்யோன்யமாக  இருந்தது.

அவளுக்கு பிடித்தது  என்று கூறுவதெல்லாம்  மிகவும் குறைவான  வார்த்தை. ஏதோ  ஃபேரி டேல், பேண்டஸி  உலகம் என்பார்களே, அதற்குள் போவது போன்றே உணர்ந்தாள்.

      அவளைத் திரும்ப கூட்டிச் செல்லும்போது, “நான் பாடின  பாட்டு கரெக்ட்டுதானே” என்று கேட்டான்

    அவள் வெடுக்கென்று, “ரொம்ப தப்பு”  என்றாள்.

     ‘ஏன்டி?’ என்று அதிர்ந்து கேட்டான்.

    “உன் வீட்டை பார்த்தப்பறம் உன்னைப் பிடிக்கல,உன் வீடுதான்  பிடிச்சிருக்கு.நீ படு மொக்கையா தெரியற இப்போ”  என்றாள்

   அவன் மலர்ந்து சிரித்துவிட்டு,

“வாயாடி, என் தங்கச்சிங்களை கம்பேர்  செஞ்சா நீ கூடத்தான் மொக்கையோ  மொக்கை ”  என்றான்

     ” ஆஹான்!  இருக்கும்,இருக்கும்”  என்று  பழிப்பம் காட்டினாலும்  அவளும் என் தங்கச்சிங்க என்ற பதத்தில்  நெகிழ்ந்து சிரித்தாள்.

     “இதை சொல்லவே பிடிக்கலதான். ஆனாலும்  சொல்றேன்.நீ இந்த ட்ரெஸ்ல  ரொம்ப அழகா க்யூட்டா  இருக்க ”  என்றான்.

       வந்தனாவுக்கு ஒரு புது பிரச்சினை. அவனுடன்  பேசிய  பொழுதில்,

“வெட்கமா ? அது என்ன புது  பிஸ்ஸா  நேமா? ,எந்தக் கடைல கிடைக்கும்? எனக்கெல்லாம் வராது,என்னை பார்த்து பயந்து ஓடிரும்” என்று பந்தாவாக பேசுவாள்.

     ஆனால் அவனைப் பார்த்தாலே, அவ்வளவு ஏன்,அவனை நினைத்தாலே  வெட்கமாக  வருகிறது.

     அது அவளுக்கு இதமாகவே இருந்தாலும், அவன் கண்ணில் பட்டுவிட்டால் ஓட்டித் தள்ளிவிடுவான்  என்று, அதை வெளிக்காட்டாமல்  பாதுகாத்தாள்.

          இருந்தும் இன்று அது அவளுக்கு அழகாக  ஆப்பு அடித்தது. அவன் இவளைப் பார்த்து,

          “இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா க்யூட்டா இருக்க” என்று கண்ணில் காதல் மின்ன பரவசத்துடன்  கூறவே, இவளை ஆட்கொண்டது அழகிய நாணம்.

      க்யூட் என்ற வார்த்தையும் , அவன் உணர்வும் கலந்து நிகழ்த்திய  வினையின் விளைவில் இவளுக்குள்  பல வேதியியல்  மாற்றங்கள். அதனால் சில தடுமாற்றங்கள். 

      இந்த திடீர் வேதி  மாற்றத் தாக்குதலில், மொட்டவிழ்ந்த நாணப் புன்னகையை மறைக்க, அனிச்சையாய், ஆனால் அலுங்காமல்  குலுங்காமல்  அவள் நெற்றியில் கை வைத்துத் திரும்பி ‘தேங்க்ஸ்’  என்றாள்.

       ஆனால் இந்தக் கள்ளத்தனம் கண்டுகொண்டான் அவள் உள்ளம் களவாடிய  கள்வன்.

         கண்மணியே!

உன் கைகள் மீது

கடும் கோபம் எனக்கு!

இந்த மண்ணின் மீது

மாளாத பொறாமை எனக்கு!

உன் வெட்கத்தின்

உரிமையாளன் நான்!

நான் கண்டு,

கொள்ளைபோக வேண்டிய

உன் வெட்கத்தை,

இடையில் புகுந்து

இவை கொள்ளை

அடித்துச் செல்கிறதே !!!

       இவ்வாறு அவள் நாணத்தை  வரி்களில் வடித்தான்  தமிழார்வம்  கொண்ட நவீன தலைவன்.இது மேலும் அவள் நாணத்தை ஏற்றியது. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு விறைப்பாக,

        “உன் கவிதை நல்லாத்தான்  இருக்கு. பட் அதுல இருக்குற அந்த நாணம்லாம் இங்க இல்ல, எப்போவும் எதிர்பார்த்திராத”  என்றாள்.

    அவன் விடுவதாக இல்லை.’பொய் சொல்லக்  கூடாது காதலி ‘என்று பாடிவிட்டு,

       “இனிமேல் நீ அடிக்கடி வெட்கப்படுவ. அப்போல்லாம்  நான் இப்டி கவிதை எழுதுவேன். ஒரு புக்கே போடற அளவுக்கு  கன்டென்ட்  குடுப்ப பாரு”

        “NPK. (நினைப்புதான்  பொழப்பை  கெடுக்குது) சான்ஸே இல்ல.”

         “பெட்  வச்சுக்கலாமா?”

       “தாராளமா”

        “என்ன பெட்?”

        “தோத்தவங்க  ஜெயிச்சவங்களை  உடனே கல்யாணம் செஞ்சுக்கணும்” என்று கூறவே இருவரும் ஒருசேர  சிரித்தனர் .

      அடுத்த நாள் இருவரும் மதிய உணவிற்கு வெளியில் செல்வதாகத் திட்டமிட்டனர்.

      அவள் அந்த உணவகத்தை  அடைந்தபொழுது  அங்கு அவன் அவளுக்காகக்  காத்திருந்தான்.

     வரும் வழியில்  அவள் மைண்ட் வாய்ஸ்:

“இந்த  ஃப்ராடு  நல்லா பிளான்  பண்ணி தான் பெட் கட்டிருக்கான். ஏதோ ஒரு கதைல  வருமே, குரங்கை  நினைக்க  கூடாதுனு சொல்லி அனுப்பினா குரங்கைத்  தவிர ஒன்னும் மனசுல வராது.

அது போல இப்போ வெட்க  படக்கூடாதுனு  வெறப்பா இருந்தா அடிக்கடி வந்து வெறுப்பேத்துதே. முன்னலாம் எப்படி கட்ஸா அவன் கண்ணைப் பார்த்து பேசுவேன். இப்போ அவன் மூஞ்சியப் பார்த்தாலே தடுமாறுதே. எப்டியோ  சமாளிப்போம்.”

     இவளைக்  கண்டவுடன்  முகம்  கொள்ளாக் குறும்புடன்  புன்னகைத்து   வரவேற்றான்.

        அவள் மைண்ட் வாய்ஸ்:  “டேய்  கேடி. இப்போ புரியுதுடா உன் திட்டம். ரொமான்டிக் சுச்சுவேஷன் கிரியேட்  பண்ணி என்னைக்  கவுத்தலாம்னு பார்க்குறியா? டேய் வரு உன் கிட்ட சிக்காது  இந்த மீன். கண்ணைப்  பாரு. குறும்பை குத்தகைக்கு  எடுத்தது  போல.”

       “என் வாள் விழிகளின்  கூர்மையில்,

குதித்தாடும்  உன் கண் குறும்புகளைக்

குற்றாலத்திற்கு  அனுப்பிவிடுவேன்.”

  பார்ரா!  இந்த தமிழ் பண்டிட்  கூட சேர்ந்து நமக்கும்  கவிதை வருது.

மனசாட்சி:  இது கவிதையா? கொடுமை. இருந்தாலும் உன் நட்பை  எண்ணி நான் வியக்குறேன்.  ஃப்ரண்ட்ஸ் இருக்குற இடமா  (குற்றாலம்  குரங்கு)  பார்த்து சொல்லிருக்கியே.

  வந்தனா ரிப்ளை  டு மனசாட்சி:  “கொலை வெறில இருக்கேன். ஓடிரு”

     அதுவும் “ரைட்டு விடு” ன்னு  சொல்லிட்டு ஓடிருச்சு.

        இதெல்லாம் அவள் அவனுக்கு ஹாய் சொல்லி புன்னகைத்துவிட்டு  இருக்கையில்  அமர்ந்து மெனு கார்ட்  பார்ப்பது  போல் தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்த தருணத்திலும் அதற்கிடைப்பட்ட  தருணத்திலும் போட்ட மைண்ட் வாய்ஸ்கள்.

  அவனோ  குறும்போடே,

    ” எதிரில்  இருப்போரைத் 

      துல்லிய எல்லையில் நிறுத்தும்

      உன் வாள் விழிகளின்

      கூர்மை  எங்கே?

      நாணம் வந்து குடியேறியதில்

      தற்காலிக  ஓய்வு பெற்றுக் 

      குற்றாலம் சென்று விட்டதோ?” என்றான்.

         ஆச்சர்யத்தில், அதிர்ச்சியில்  விழி விரிய, நாணத்தில் சிறிதாய் இதழ் விரிய பார்த்தவள்,

       “அடப்பாவி!  வெட்கத்தைதான் கேட்ச்  பண்றான்னு  பார்த்தா மைண்ட் வாய்ச கூட கேட்ச் பன்றானே! எப்படி சமாளிக்கவோ  தெரிலயே!” என்று மைண்ட் வாய்ஸ் போட்டாலும்  வெளியில் விறைப்பாக,

       “குற்றாலத்துக்கும் போகல குலுமணாலிக்கும் போகல. எல்லாம் இங்கதான்  இருக்கு.  பிட்வீன் எந்த நாணமும் வந்து இங்க குடியேறவுமில்லை. நாம வந்த வேலையப் பார்க்கலாமா?” என்று கூறிவிட்டு, அவனுக்கும்  சேர்த்து இவளே  ஆர்டர்  செய்தாள்.

     அவனோ “லுக் அட்  மை ஐஸ்”  என்றான்.

    நிமிர்ந்து ஒரே ஒரு கணம்தான்  அவன் விழிகளைப் பார்த்திருப்பாள்.

அதில் தெரிந்த  காதலும் ,தெறித்த  குறும்பும் , இவளுடன்  போர்  தொடுத்து  இவள் சிறை செய்திருந்த  நாணத்தை  மீட்டெடுத்தன.

   அவனோ,

     “அதிகாலை  ஆதவன்  அழகா?

         இல்லை, அவள் அடைகாக்கும் 

         நாணம் அவள் கன்னங்களில் 

         வண்ணமேற்றுவது  அழகா?” என்றான்.

    அவளோ ,

     ”  அச்சோ!  பின்றானே!  புட்டு  புட்டு வைக்கிறான். அடைச்சு வச்சது  வெடிச்சிரும்  போலயே ”  என்று மைண்ட் வாய்ஸ் போட்டு, திரு திருவென விழித்தாள்.

        அதற்கும் அவன்,

     “அடைத்து  வைத்த  நாணம்

         வெடித்துவிடாமல்  காக்க

         உருண்டு  உருண்டு உழலும் 

         உன் விழிகள்  உலுக்குகிறது

         என்னை” என்று கவிதை படித்தான்.

   அதற்கும்  மேல் பொறுக்க  மாட்டாதவளாய்,

     “நான் ரெஸ்ட்  ரூம் போய்ட்டு வரேன் ”  என்று தப்பிக்கப்  பார்த்தாள்.

       “ஏன்? ஒரு ஓரமா போய் ஃப்ரீயா வெட்கப்பட்டுட்டு  வரலாம்னு பாக்கறியா?”

      இவ்வாறு அவன் கேட்டதில் வெடித்து சிரித்துவிட்டாள், வந்த நாணத்தை மறைக்காமல் முற்றிலும் அனுமதித்தவாறு.

       அவன் இன்னும் விடாமல்,

    “தெறித்து  விழுந்த  உன் நாணம்

      நாணேற்றிய  வில்லிலிருந்து  வந்த

      எரி அம்பாய் என் இதயத்தில் ஏற,

     எரிந்து  இன்புறுகிறது  என் இளமை”   என்றான்.

   அவளும் சிரித்துவிட்டு, “அய்யா சாமீ,என்னை விட்ரு, யெஸ்,ஒத்துக்குறேன், எனக்கு வெட்கம் வருது. வேணும்னா டெக்லேரேஷன் ஆஃப் டெஃபீட் பாண்ட்ல  சைன் பண்ணி தரேன். இப்டியே போச்சுன்னா  நீ என் வெட்கத்தையும்  நான் உன் கவிதையையும்தான்  சாப்ட்டு போகணும்”

      அவன் வெடித்து சிரித்துவிட்டு,

  “அப்பாடா ‘மிஷன்  நாணம் ‘அக்கம்ப்லிஸ்ட்”  என்றான்.

     “எமகாதகன்டா நீ! உன்கிட்ட ஒரு மைண்ட் வாய்ஸ் கூட போட முடில. படிக்கறதெல்லாம் தமிழோட  நிறுத்துடா! என்னையும்  சேர்த்து படிச்சா நான் எப்படி வண்டி ஒட்றதாம்?”

     “படிக்க படிக்க தமிழை விட சுவாரஸ்யமா இருக்கியே, நான் என்  செய்வேன்?” என்று கூறி மீண்டும் அரங்கேறியது  நாணக்  காவியம் .

      “போதும்டா”  என்று ஏறக்குறைய  சிணுங்கினாள் .

      அவனும் அதற்குமேல்  அவளை இம்சிக்காமல், பொதுவாய்ப்  பேசிவிட்டு, உணவு முடித்துக் கிளம்பினர். இவர்களின் இன்பம் நிலைக்குமா????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content