Silendru oru kadhal-completed
அதன் பிறகு கௌதம் மற்றும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் நிச்சயதார்த்தம்…. அதை தொடர்ந்து கல்யாணம் என்று இதோ தற்பொழுது கல்யாணம் முடிந்து திருமதி ஸ்ரீமஹாலக்ஷ்மி கௌதம் அவளது புகுந்த வீட்டில் அவர்களின் அறையில் உள்ள பால்கனியில் பௌர்ணமி நிலவை தனது கணவனின் தோல் சாய்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
“கௌதம்…. நிலா ரொம்ப அழகா இருக்கில்ல?!” -என்று மனைவியிவள் வினவ.
“ஆமா… அதுவும் வலது கண்ணத்து மச்சம் இருக்கே…. சூப்பர்” -என்றான் கணவனவன்.
“என்னது….?! மச்சமா?” -என்றாள் குழப்பமாக.
“இதோ இங்க இருக்கே” -என்று ஸ்ரீமஹாலக்ஷ்மியின் வலது கண்ணத்தில் உள்ள மச்சத்தை சுட்டி காட்டினான் கௌதம்.
“என் வானில் தேயாத முழு நிலா நீதானே” -என்று காதலாக கூறியபடி அவளின் முகம் நோக்கி குனிந்தான்.
அவனின் நோக்கம் புரிந்து கண்களை வெட்கமாக முடிக்கொண்டவள் தீடீரென்று ஞாபகம் வர பெற்றவளாக அவனின் உதட்டிற்கும் தனது உதட்டிற்கும் இடையே அவளது கைகளால் தடா கையை போட்டாள்.
இவளின் செய்கையில் அதிர்ந்தவன் கேட்டான் “இன்னும் என்னடி?!” என்று.
அவளோ “நான் மறந்தே போய்ட்டேன்… உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்” -என்றாள் கைகளை பிசைந்தவாறு.
அவளின் செய்கையை சந்தேகமாக பார்த்தவாறு கேட்கும்படி செய்கை செய்தான். இவளும் தயங்கிக்கொண்டே கேட்களானாள்.
“அது… அது வந்து!! நீங்க நான் இங்க இல்லாத இந்த ஐந்து வருஷம் வேற எந்த பொன்னியுமே உங்களுக்கு பிடிகலையா?! பிகாஸ் இணைக்கு கல்யாணத்துக்கு வந்திருந்த பாதி பொண்ணுங்க உங்க பிரெண்ட்ஸ் அப்படியும் இல்லனா உங்க மாமன் பொண்ணுங்கனு சொல்லிட்டு திரிஞ்சாங்க…. அதான் கேட்கிறேன்!!” -என்று தயங்கியவாறு ஆரம்பித்து மிரட்டும் தோணியில் முடித்தாள்
“எக்ஸ்கியூஸ்மீ திருமதி ஸ்ரீமஹாலக்ஷ்மி கௌதம் அவர்களே…. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு!!! இப்போ அதுவும் ரைட்டா இந்த நேரத்தில இந்த சந்தேகம் அவசியமா?!” -என்றான் அவளின் நெற்றியை தன் நெற்றியால் முட்டியவாறு.
அவனின் பதிலில் திருப்தி ஆகாதவளாக மறுபடியும் கேட்டாள்.
“அதெல்லாம் இல்ல… நான் கேட்ட கேள்விக்கு உண்மையை சொல்லுங்க” -என்று பிடிவாதமாக ஸ்ரீமஹாலக்ஷ்மி நிற்க.
கௌதம் அவளை பார்த்து கேட்டான் –
” உண்மை சொன்னால்….
நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல்…
மன்னிப்பாயா???” -என்று பாட்டாக பாடினான்.
அவளோ வெட்கமாக அவனின் நெஞ்சில் முகம் புதைத்து அவனை நோக்கி “விளையாடாம…சொல்லுங்க அத்தான்…” -என்று செல்லமாக சிணுங்க.
“பெண்கள் மேலே மையல் உண்டு” என்று அவன் பாட இவள் போலியாக முறைத்தாள்.
இவள் முறைப்பதை கள்ளத்தனமாக ரசித்தவண்ணம் அவன் தொடர்ந்தான்-
“நான் பித்தம் கொண்டது
உன்னில் மட்டும்…
நீ முத்த பார்வை பார்க்கும் போது….
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்…” -என்று அவன் தொடர இவளை வெட்கம் பிடுங்கி தின்றது.
“நீதானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு…
வா!! சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு” -என்று படியவாறு அவளை கைகளில் ஏந்தியடி தங்களது அறையினுள் தூக்கி சென்றான் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் காதல் கள்வன்.
இவர்களின் கூடலை காண நாணிய நிலவு மகள்…. மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை ஒளித்துக்கொண்டாள்.
இவர்களின் காதல் இன்னும் மென்மேலும் பெறுக இவர்களை வாழ்த்தி விடைபெருவோமாக.
*******************************நன்றி********************************