You don't have javascript enabled
Bhagya novelsRomantic comedyRomantic thriller

kavalum kadhalum-10

சட்டென்று காரை மடக்கிய ஆதி, ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்த ஆனந்தி கதவை திறந்து இறங்கியதை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பொத்திக்கொண்டான்.

அவனை பார்த்து கண்சிமிட்டியபடி ஆனந்தி,

 “ஏய் மாமா… என்ன பாக்குறீங்க? கார் அவ்வளவு வேகமா ஓட்டினது நான் தான்.. சும்மா உனக்கு ஒரு திகில் தரலாம்னு அப்படி பன்னேன்… எனக்கு கார் ஓட்டுறது தூசி மாதிரி தட்டிவிட்டு போயிட்டே இருப்பன்” என்று தனது பெருமையை வெளிப்படுத்தியவள் அவனருகே செல்ல,

“ஹாஹா செம்ம டி..டார்லிங் நீ இவ்வளவு திறமையானவ னு எனக்கு இப்ப தான் தெரியுது. ஒரு போலிஸ்காரனை இவ்வளவு அலைய விட்டுருக்க னா சேன்ஸே இல்லை நீ திறமையான கார் ஓட்டுனர் தான்”

“ஹாஹா… பார்த்தேன் மிரர் ல…நீங்க பைக்கில் பின் தொடர்வது.”

“சூப்பர் டி….ஆனந்தி…யூ ஆர்..க்ரேட் சரி வா வீட்டுக்கு போவோம்” என்று அவளை அழைத்து கொண்டு சென்றான்.

வீட்டில் அவளை விட்டுவிட்டு கமிஷனர் ஆபிஸுக்கு சென்றான் ஆதி. ரிசார்ட் ஒன்றில் ராகவன் மனைவியை பார்த்ததாக கூறவே கமிஷனர் சந்தேகம் எழுப்பினார். கரெக்ட் மிஸ்டர் ஆதி…ஒரு பொம்பளைக்கு ரிசார்ட் ல என்ன வேலை? ஒரு வேலை யார் கூடவாது தொடர்பு இருக்குமோ…கள்ளக்காதலுக்கு புருஷன் தடைனு கொன்னுட்டாளோ…” என்று சந்தேக கேள்வியை எழுப்பினார்.

“பக்கா சார்…நீங்க சொல்ற மாதிரியும் இருக்கலாம். நான் விசாரிக்கிறேன்.”

அன்று இரவு ஆதி தனது வீட்டில் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது ராகவனின் மனைவியை பற்றி பேச துவங்கியபோது ஆனந்தி குறுக்கிட்டாள்.

“மாமா…நீ போய் ஏதோ பேசிட்டு வந்தியே அந்த பொம்பளையவா சொல்ற?”

“ம்ம்ம் ஆமா… அவமேல் தான் சந்தேகம் டி எனக்கு.”

“மாமா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டல?”

“சொல்லு டி…உன்னை தப்பா நினைக்க என்ன இருக்கு.”

“அது வந்து நீ என்னை தப்பா நினைக்க மாட்ட ஆனால் நான் சொல்ல போற விஷயத்தை தப்பா புரிஞ்சிக்காத னு சொல்ல வந்தேன்… அது என்ன னா?அன்னைக்கு நைட் நான் ஸ்பா போனேன் ல” என்று எதையோ சொல்ல முற்பட்டாள்.

“ஆமா என்று தலையசைத்தான் ஆதி”.

“அப்போ…அந்த பெண் பாவம் ஆம்பளைங்க செக்ஷன் ல அது ஒரு ஆளுக்கு ஆயில் மசாஜ் பன்னிட்டு இருந்தது… அப்போ அந்த பொம்பள புலம்புன விஷயம் என்ன தெரியுமா?”

“என் தலை எழுத்து இந்த கன்ட்ராவி எல்லாம் பன்ன வேண்டி இருக்கு என் புள்ளைய காப்பாற்ற….” அது கேக்குறப்ப எனக்கே மனசு சங்கடமா போச்சு. ஸ்பா ல நாலு சப்ப மூக்கிங்க கூச்சநாச்சமே இல்லாம மத்த ஆம்பளைங்க உடம்பபை  தடவுறாங்களே னு நினைச்சிட்டு இருந்தன் ஆனால் அதுல கூட குடும்ப கஷ்டத்துக்காக பாவம் சகிப்பு தன்மையோடு வேலை செய்யுற இந்த மாதிரி பெண்களும் இருக்காங்க சமுதாயத்தில் னு புரிஞ்சிக்கிட்டேன் மாமா.”

இவள் சொல்லி முடித்த அடுத்த நொடி கண் கலங்கி நின்றான். “ச்ச என்னோட சந்தேக புத்தி ஏன் இப்படி யோசிக்க வைக்குது.”

மாமா வருத்தப்படாத உன் போலிஸ் தொழில் அந்த மாதிரி எல்லாத்தையும் சந்தேகமாக தான் பார்க்க வைக்கும்… நீ என்ன பன்னுவ பாவம்.

“ஆனந்தி மனசு சங்கடமா இருக்கு உன் மடியில் கொஞ்ச நேரம் படுக்கவா?”

“இது என்ன கேள்வி?வா…படுத்துக்க” என்று அவனை தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.

மனைவி என்பவள் இன்னொரு தாய் என்பதை நிருபிக்க அவனை தன் மடியில சாய்த்து தலை கோத அவனுக்கு கண் சொருகியது. அவன் தூங்கும் அழகை ரசித்தப்படியே இரவு இரண்டு மணி வரை தூங்காமல் இருந்தாள். இடையில் எழுந்தவன்,

“ஆனந்தி நீ இன்னும் தூங்கல ?என்று வினவ

“இல்லை மாமா..”.

“ஏன் தூக்கம் வரலையா?”

“ம்ம்ம்…. “

“உன் தோளில் சாஞ்சிக்கவா?”

“ஹாஹா….. என் இதயத்துடிப்பு உன் தூக்கத்தை கெடுக்கும் கொஞ்சம் இறங்கி வயிற்றில் தலை வைத்து படு” என்று தானும் சாய்ந்து அவளையும் தன் மேல் சாய்த்துக்கொண்டான். 

அவளும் அவனும் நிம்மதியாக உறங்கினர். போலிஸ்காரன் வீட்டில் நிம்மதியான தூக்கம் என்பதே ஒரு கனவு போல தான்.

மறுநாள் பொழுது விடிந்தது..இருவரும் தாழ் இடாமல் படுத்திருந்த நிலையில் வித்யா சட்டென்று உள்ளே வர…அலரி அடித்துக்கொண்டு ஓடினாள்…

“ச்சி அண்ணா வும் அண்ணியும் தாழ் இடாமலே தூங்குதுங்க நாமளும் லூசு மாதிரி உள்ள போயிட்டோம்… ஆனால் உள்ளுக்குள் அவளுக்கும் கல்யாணம் ஆசை வந்தது… ச்ச நமக்கு ஒரு ஜோடி  இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும்.” என்று. 

இதை கவனித்த தாய் காமாட்சி… வயசு பொன்னு இருக்கும் இடத்தில் தம்பதிகள் இப்படி அன்னோன்யமா இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தும் எனவே விரைவில் வித்யாவுக்கு திருமணம் செய்து முடிக்கவேண்டும் என்று நினைத்தார்.

காக்கிச்சட்டையை அணிந்து பட்டன் போடும் நேரத்தில் பட்டன் பிய்த்து போன நிலையில் ஆனந்தி வந்து பட்டன் தைத்து தா…என்று கூப்பிட விறு விறு என்று காமாட்சி தன் மகனின் சட்டை பட்டனை தைக்க வந்தாள்….பட்டன் தைத்தவாறு பேச்சு துவங்கினர்..

“ஆதி கன்னு அம்மா உன் கிட்ட ஒன்னு சொல்லனும்” என்று தயங்கியபோது ..சொல்லுங்க மா என்று அவளின் தாடையை தூக்கி நிமிர்த்தி புன்னகைத்தான்.

“கன்னு… நம்ப வித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கலானு நினைக்கிறேன் அதுவும் சிவகாமி மகன் கார்த்திக்”

“மா…அப்படி னா எனக்கு ஓகே தான்.. நல்ல பையன் அவன் சின்ன வயசுல இருந்தே அவனை பார்க்கிறேன் . இப்ப கூட அவன் ஏதோ பிஸியோதெரபி படிச்சு முடிச்சிட்டு கிளினிக் வச்சிருக்கிறதா கேள்வி பட்டுறுக்கேன்.”

“ஆமா டா ஆதி….அதான் ..நீ வித்யா கிட்ட இதைப்பற்றி பேசு டா”

“அவ கிட்ட நான் எப்படி மா கேக்குறது போ மா…நான் என் கல்யாணம் பற்றியே பெருசா எதுவும் பேசல யார்கிட்டயும்.”

“அதுகில்ல டா…அவகிட்ட ஒரு அம்மாவா நான் பேசினாலும் ஏதோ சுயநலமா பேசுற மாதிரி இருக்கும். இதுவே ஒரு அண்ணணா நீ பேசும் போது அக்கறை ல பேசுற மாதிரி இருக்கும் அதான்.”

“இதெல்லாம் கேட்டுட்டு இருந்த வித்யா “”மா…அதுக்கு அவசியமே இல்லை.. கார்த்திக் யாருன்னு சொல்லு கிடு கிடுனு போய் கழுத்தை நீட்டிட்டு வந்துடுறேன்”

“ஹாஹா”

“அடி பாவி அவ்வளவு வேகத்தில் இருக்கிறியா நீ… அப்ப சரி அவனையே பேசி முடிச்சிடுறன்” என்று தாய் காமாட்சி சிரிக்க இதை எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்த ஆனந்தி…தன்னவனுக்கு டிபன் பரிமாற டைனிங் டேபிளில் இட்லி எடுத்து வைத்தாள்…அதற்குள் ஆதி அமர்ந்தான்….

“என்னங்க இட்லி க்கு வெங்காயம் சட்னி பன்னிருக்கேன் போதுமா?”

“போதும்?”

“ஏங்க…இன்னொரு இட்லி?”

“போதும் டி…”

“என்னங்க… உங்க கிட்ட நான் ஒன்னு கேக்கனும்”

“என்ன???”

“இல்லை…. வித்யா எனக்கு நாத்தனார் தானே அவ கல்யாணம் பற்றி அபிப்பிராயம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது தானே? என்ன இந்த குடும்பத்தில் ஒருத்தியா நினைச்சு கூட என்கிட்ட இது பற்றி யாருமே பேசலை.”

“அ…ஆனந்தி அப்படி லா ஒன்னுமில்லை உன்னை மீறி பன்னிடுவோமா சொல்லு நீ தானே டி இந்த வீட்டில் ஒரே மருமகள் அப்படி இருக்க …..உன்னை முன்னாள் நிறுத்தி தான் எல்லாம் செய்வோம் …இப்ப ஜஸ்ட் கார்த்திக் பத்தி அம்மா சொன்னாங்க நானும் சரிதானு சொன்னேன்.” 

அதற்குள் வித்யா ஆனந்தியிடம், “ஓய் அண்ணியாரே இதுகெல்லாமா பீல் பன்னுவ?இங்கே பாரு கல்யாணத்துக்கு எனக்கு புடவை செலக்ட் பன்றதுல இருந்து மருதாணி போடுற வரைக்கும் எல்லா டிபார்ட்மெண்டு உன்னோடது ஓகே வா…?” என்றாள்.

“ஹாஹா கண்டிப்பா வித்யா”

இவர்கள் பேசியதை கேட்டு சிரித்தவாறே அவன் வேலைக்கு கிளம்பினான்.

“ஆதி மாமா பை…”

“பை” என்றவள் கையசைத்து கொண்டு வாசலிலேயே நிற்க,

“அண்ணியாரே போதும் போதும் அங்க கை ஆட்டுறது வா உள்ளே போலாம்.” என்று வித்யா கேலி செய்தாள்.

ஆதி கமிஷனர் ஆபிஸ் போற வழியில் வடபழனி முருகன் கோவிலில் விமர்சையாக திருமணம் ஒன்று அரங்கேறியது. இவன் பைக்கை நிறுத்திவிட்டு பலகையை பார்க்க, “ரேணுகா வெட்ஸ் பூவரசன் “னு போடவே,

“ஐயோ… இன்னைக்கு ரேணுகாவிற்கு கல்யாணம் னு கூப்பிட்டாளே மறந்துட்டேனே….”

உடனே அருகில் இருந்த கடையில் மொய் கவர் வாங்கி அதில் 1000 ரூபாய் வைத்து …உள்ளே சென்றான். தன் நண்பனை பார்த்த சந்தோஷத்தில் துள்ளினாள் ரேணுகா, “ஆதி வா..வா வந்து போட்டோவுக்கு நில்லு” பூவரசனிடம் அறிமுக படுத்தினாள்.

பூவரசனை பார்த்த ஆதி, “இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே னு” யோசிக்க….

“ஆதி சார்… என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லை ?” என்று பூவரசன் கேட்க… அவன் யோசித்தவாறு கை குலுக்கி வாழ்த்துக்கள் கூறிவிட்டு நகர்ந்தான்.

வெடுக்கென்று மல்லிகா ஆதி மீது மோதி கொண்டாள்

“ஆதி அண்ணா சாரி சாரி ..”

“பரவாயில்லை மல்லிகா”

“அண்ணா…வீட்டில் ஆனந்தி அக்கா வித்யா லா எப்படி இருக்காங்க?”

“நல்லாயிருக்காங்க மா….அப்புறம் உன் லைப் பத்தி என்ன முடிவு பன்னியிருக்க?”

இதை கேட்டவுடன் அவளுக்கு வியர்த்துபோனது. “எ…என் லைப் பத்தி முடிவு பன்ன என்ன இருக்கு?” என்று பதற்றத்துடன் கூற..

“ஏ…ஏய் மல்லிகா ரிலாக்ஸ் ஏன் டென்ஷன் ஆயிட்ட… நான் சாதாரணமாக தான் கேட்டேன்.” 

“ஓ…சாரி கல்யாணம் களைப்பு அதான் டென்ஷன்.”

“ம்ம்ம் சரி பை மா…”.

“இவள் ஏன் நம்பள பார்த்து இப்படி பதற்றம் அடைறா? ம்ம்ம் ஒன்னும் புரியலையே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content