You don't have javascript enabled
Bhagya novelsRomantic thriller

kavalum kadhalum-11

நாட்கள் நகர்ந்து செல்ல…. கார்த்திக் தனது எதிர்கால மனைவியான வித்யாவை சந்திக்கும் நாள் வந்தது. இருவரும் ஒரு மெட்ரோ ரெயிலில் பயணித்தவாறு பேசிக்கொண்டிருக்க. கோயம்பேடுவி லிருந்து ஆளந்துர் செல்லும் ரயில் அது. எனவே அந்த சிறிய இடைவெளி நேரத்தை பயன்படுத்தி இருவரும் அவர்களது அன்பை வார்த்தைகள் மூலம் பரிமாறிக்கொண்டனர்.

முதல்சந்திப்பு என்பதால் இருவருக்கும் முதலில் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது, என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று ஒன்றும் புரியவில்லை.

“ஆ…ம்ம்ம்… கார்த்திக் ,எதுக்கு திடீருனு என்னை பார்க்க வரசொன்னிங்க?”என்று அவள் முதலில் பேச்சை துவங்க,

“ஹாஹா இல்லை இல்லை.. அது வந்து போன்ல என்ன தான் பேசினாலும் முகத்துக்கு நேராக பேசுற மாதிரி இருக்காது அதான் உங்களை நேரில் வரச்சொன்னேன்” என்று கூறி பேச்சை ஆரம்பித்தான்

“ம்ம்ம் …சரி இது என்ன புதுசா மெட்ரோ ரயிலில்  சந்திப்பு?” என்று அவள் அவனிடம் நக்கலாக கேட்க,

“ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கட்டும்னு தான்… சும்மா எப்ப பாரு பீச் பார்க் னு சுத்துறதுக்கு இது ஒரு வித்தியாசமான பயணம்.”

“ஓ…..மிஸ்டர் கார்த்திக்.. நான் கல்யாணம் முடிந்து கல்லூரி போக அனுமதிப்பிங்களா?” என்று தன் சந்தேகத்தை முன்வைக்க

“சாரி வித்யா அது மட்டும் வேண்டாம் எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. நாங்க கொஞ்சம் பாரம்பரிய குடும்பம்… ப்ளீஸ் நான் வேணும்னா உனக்கு வீட்டிலேயே இருந்து படிக்கிற மாதிரி ஏற்பாடு பன்னி தரேன்.” என்று கூற 

அவன் கூறியதை கேட்டதும் அவள் முகம் வாட்டமுற்றது. அதற்குள் அவன் சட்டென்று அவள் மூக்கை கிள்ளி “ஏய் வருங்கால பொண்டாட்டி இப்படி எல்லாம் சொல்லுவேனு நினைச்சியா… ஹாஹா… உன் விருப்பம் போல நீ காலேஜ் போலாம்… நானே எங்க வீட்டுல அடங்கமாட்டேன்… இங்க பாரு இன்னொரு முக்கியமான விஷயம் கல்யாணம் முடிஞ்சு நம்ப தனிக்குடித்தனம் தான் போகனும் ஓகேவா….?? இதுக்கெல்லாம் நீ ஒத்துகிட்டா தான் டி கல்யாணம்”என்று சொல்லி முடிக்க,

“ஹாஹா” என்று அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை அவன் தோளில் செல்லமாக அடித்து அவனோ வலிப்பது போல் “விடு டி வலிக்கும் “னு சினுங்க….. ஆளந்துர் வந்ததே தெரியவில்லை…. இருவரும் இறங்கினர்.

அதற்குள் ஆனந்தி வித்யாவுக்கு போன் செய்தாள். “மாப்பிள்ளை யை பிடிச்சிருக்கா வித்யா?பேசி பார்த்தியா?” என்று வினவ

“அண்ணி சூப்பர் மாப்பிள்ளை… எனக்கு ஓகே,அம்மா கிட்டயும் அண்ணன் கிட்டயும் சொல்லிடுங்க.”என்று போனை துண்டித்து விட்டு மீண்டும் அவனுடன் பேச்சை துவங்கினாள்

வெடுக்கென்று பிடுங்கி காரத்திக் அவளுடைய அண்ணிக்கு டையல் செய்து  ஆனந்தியிடம், “என்ன தங்கச்சி மா….விசாரிப்பு ல பலமா இருக்கு?” என்று கேட்க

“ஐயோ கார்த்திக் அண்ணா இது ஜஸ்ட் பார்மாலிட்டிஸ் க்கு கேட்டேன் மற்ற படி நீங்க சூப்பர் கேரக்டர் னு பார்த்தாலே தெரியுது.” என்று வருங்கால வீட்டு மாப்பிள்ளைக்கு ஐஸ் வைக்க

“ஐயோ …..வெத்தலை ல எதாவது மை போட்டு பார்த்திங்களா? எப்படி இப்படி என் குணத்தை புரிஞ்சிக்கிட்டிங்க”

“ம்ம்ம் அவ்வளவு லா திறமை இல்லை அண்ணன்…எல்லாம் ஒரு யூகம் தான்”

“ஹாஹா… சரி தங்கச்சி மா போன் வை உங்க நாத்தனார் ஒன்னும் பன்னிட மாட்டேன்… பத்ரமா அனுப்பி வைக்கிறேன்” என்று கூற

அவ்வளவு எளிமையான முறையில் அண்ணியிடம் பேசிக்கொண்டு இருந்ததை ரசித்தவாறு பார்த்தாள் வித்யா.

“ஏய் வித்யா என்ன அப்படி பார்க்கிற?”

“உங்களால எப்படி இவ்வளவு கேஷுவலா இருக்க முடியுது?”

“வெரி சிம்பிள் வித்யா “லைப் ல யாரையும் வெறுக்கவும் கூடாது யாரையும் ரொம்ப நெருங்க விடவும் கூடாது…”இப்படி இருந்தாலே போதும் எல்லார் கூடவும் கேஷுவலா இருக்கலாம்.

“ஹாஹா உண்மை தான்.”

வித்யா ….சரி கிளம்புலாம் வா ..அடுத்த ரயில் வருது…கோயம்பேடுல இறங்கி அங்கருந்து உன்னை வீட்டில் விட்டுட்டு நான் கிளம்ப சரியா இருக்கும் டைம் ஈவ்னிங் கிளினிக் போகனும்.

“கார்த்திக்….”

“சொல்லு டி….”

“இப்பவே உங்க கூட வந்துருனும் போல இருக்கு” என்று கண்கலங்க

“எனக்கும் இப்பவே கூட்டிட்டு போகனும் இருக்கு என்ன செய்வது ஸ்வீட் ஹாட்”

மீண்டும் ரயிலில் ஏறினர் இருவரும் உட்கார இருக்கை இருந்தத, இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள ரயில் புறபட்டது.

வெளியே சலசலவென்று மழைத்தூரல் திடிருனு பெய்ய ஆரம்பிக்க…அதை ரசித்தபடி வந்தாள் வித்யா….சிறிது நிமிடத்தில் அவனது மூச்சு காற்று அவளுடைய காதோரத்தில் உணர்ந்தவளாய் சட்டென்று திரும்ப தங்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகமானதை உணர்ந்தாள். இருவரின் விழிகளும் பேசிக்கொண்டன.

அவளை சந்தித்துவிட்டு உள்ளே நுழைந்த கார்த்திக் தன் தந்தை பேப்பர் படிப்பதை பார்த்து “டேட்…காலை ல வந்த பேப்பர் ஈவ்னிங் வரைக்கும் படிக்கிற அளவு அப்படி என்ன இருக்கு அதுல?

“டேய் வேற என்ன டா பன்றது ரிடைர்டு ஆயிட்டு…”

“ம்ம்ம் அம்மாவுக்கு மிக்ஸி போட்டு கொடுக்கலாம்,இதோ வேலைக்காரி அக்காக்கு மாப்பு போட்டு கொடுக்கலாம் அப்படியே என் கூட க்ளினிக் வந்து பேஷன்ட உள்ள அனுப்பலாம் இப்படி எவ்வளவு வேலை இருக்கு என்று நக்கல் அடிக்க. அவனை முறைத்தபடி பேப்பரை…தூக்கி வைத்துவிட்டு கார்டனில் வாக்கிங் செய்ய போனார்.”

“ப்பா….இப்படியெல்லாம் கலாய்ச்சாதான் அவரோட ஹெல்த் அவரு பாத்துப்பாரு போல..”என்று மனதிற்குள் நினைக்க

அப்படியே கிச்சன் பக்கம் சென்றவன், “என்ன சிவகாமி காப்பி போடுறியா?” என்று அம்மாவிடம் வம்பிழுக்க

“ம்ம்ம் இல்லை …காது கொடையுறன்”என்று மகனை மிஞ்சி கலாய்க்க

“ஹாஹா பரவாயில்லை என் கூட சேர்ந்து உங்களுக்கு ஹியுமர் சென்ஸ் நல்லாவே வருது. சரி இப்ப தான் நான் உன் வருங்கால மருமகள பார்த்துட்டு வரேன்…ரொம்ப நல்ல பொன்னு மி..”

“ம்ம்ம் உன்னை யார் அவளை பார்க்க போக சொன்னது”

“ஆ..ஆ…இந்த மீ கிட்ட நானே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேன்…”என்று மனதிற்குள் நினைக்க

“டேய் உன்னை தான்.”

“சொல்லு மீ”

“கல்யாணம் முன்னாடி சந்திக்க கூடாது டா தப்பு டா கார்த்திக்.” என்று வலியுறுத்த

“ஸோ…கல்யாணம் ஆயிட்டு முட்டி மோதிக்கோங்கனு சொல்றீயா மீ…??? தெரியாம தான் கேக்குறன் கல்யாணம் என்ன பிஸினஸ் -ஆ???நீ…அம்பது சவரன் போடு உன் பொண்ணை கட்டிக்கிறேன்…னு மீ..இது வாழ்க்கை …வாழ்ந்தா தானே தெரியும். சும்மா இரண்டு குடும்பமும் பேசினா போதுமா…கட்டிக்கிற நாங்க பேசினா தானே தெரியும்.”

“எப்படியோ பன்னு…இந்தா காப்பி குடி.”.

மீ..காப்பி தூளா போட்ட?”

“இல்லை….கருவேப்பிலை தூள் போட்டேன் ம்க்கும்.” என்று தன் வாயை சுளிக்க

“பாத்து மீ வாய் சுளுக்கிட போது “

“உன்னைய…..இருடா” என்று தாய் அவனை துரத்த

“மீ என்னை துரத்தாத காப்பி கப்பு கீழ போட்டு உடைஞ்சிரும் …கொஞ்சம் வெயிட் பன்னு குடிச்சிட்டு வரேன்.”

“டேய் கிளினிக் கிளம்பு டைம் ஆகுது…”.

“ஆமா ல…ஐயோ..இன்னைக்கு வேற பெராலிஸஸ் பேஷண்ட் க்கு எக்ஸர்ஸைஸ் சொல்லி தரனும்….அப்பாய்ன்மென்ட் குடுத்துருக்கேன்….பை பை…”

வீட்டுக்கு வந்த வித்யா..தன் அறைக்கு சென்று தலையணையை அணைத்தபடி படுத்தாள்…அவனது நினைப்பு வாட்டியது “கார்த்திக்”,அவன் பெயரை உச்சரித்து பார்த்தாள்.மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி வந்தது.

ஐயோ நாளைக்கு செமஸ்டர் தேர்வு என்று அப்போது தான் நினைவுக்கு வந்தது புத்தகத்தை திறந்தாள்.எல்லாம் தலைகீழாக தெரிந்தது. ச்ச…ஒன்னுமே மண்டைல ஏறல…

ஆனந்தி அப்போது அவள் அறைக்கு வந்தாள் “ம்ம்ம் நாத்தனாரே புக் ஏன் தலகீழா இருக்கு..?

ஸ்ஸ் “அய்யோ அண்ணி….நாளைக்கு தேர்வு இருக்கு ஆனால் சுத்தமா மறந்துட்டேன்.”

“எப்படி ஞாபகம் வரும் அதான் கார்த்திக் எல்லாத்தையும் மறக்கடிச்சிட்டாரே.”

“போங்க அண்ணி”

“சரி சரி…இந்தா டீ சாப்பிட்டு படி”

“ம்ம்ம் தேங்க்ஸ்.”

நிச்சயதார்த்தம் தேதி குறிக்கபட்டது. முறைப்படி மண்டபத்தில் பெரியோர் முன்னில் நிச்சயம் நடைபெற வேண்டும் என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். இதற்கிடையில் ஆனந்தி தாய்மை அடைந்தாள். அவளின் மாமியார் காமாட்சி க்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி ஒரு பக்கம் மருமகளின் விசேஷம் இன்னொரு பக்கம் மகளின் வாழ்க்கை. ஒட்டு மொத்த சந்தோஷமும் கையில் கிடைத்த ஒரு தருணம்.

தொடரும்.

One thought on “kavalum kadhalum-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content