You don't have javascript enabled
Bhagya novelsRomantic thriller

Antha Araikul-10

சிவா ராகுலிடம் தெரிந்து கொண்டதை திவ்யாவிடம் பேசி விளக்குவதற்காக அவள் வீட்டிற்கு சென்றான் தலைப் பிரசவத்திற்கு வலியில் துடித்துக் கொண்டிருந்த அவளை அருகில் இருந்த உறவினர்கள் தூக்கிக்கொண்டு செல்வதை கண்டு துடித்தான்.

இந்த நேரத்தில் ராகுலை பற்றி திவ்யாவின் தந்தை செய்த செயலை பற்றியும் விளக்குவது சரியல்ல இதற்கான தக்க சமயம் வரும்போது சொல்லிக் கொள்வோம் என்றபடி திவ்யாவை  அனுமதித்திருக்கும் மருத்துவமனைக்கு சென்றான். விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள் அனைவரும் ஓடி வந்தனர் திவ்யாவிற்கு உதவியாக இருந்தாள் அருகில் இருந்த எல்லா பணிவிடைகளையும் செய்தாள்.

“லதா சாரிடி உங்க எல்லாருக்கும் கஷ்டத்தை கொடுக்கிறேன்” என்றாள் திவ்யா.

“எதுடி  கஷ்டம் பிரண்டுக்கு பணிவிடை பன்றதா போடி லூசு” என்ற செல்லமாக அவளை தட்டினாள் திவ்யாவிற்கு லேபர் வார்டு கூட்டி செல்லும் முன்பே பிரசவம் நடந்து விட்டது அழகான ஆண் குழந்தை பிறந்ததை பார்த்த நண்பர்கள் ஏதோ தான் பெற்ற பிள்ளை போல அதை ஏக்கத்துடன் பார்த்து மகிழ்ந்தனர் குவா குவா என்று அது இடும் சத்தம் அவர்கள் காதுகளுக்கு இனிமையாக இருந்தது.

திவ்யாவின் கணவர் தன் குழந்தையை கையில் ஏந்தியபடி மனைவியையும் ஒரு புறம் பார்த்து இப்போ உனக்கு சந்தோஷமா திவ்யா நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்று அவர் கூற அதை கேட்ட திவ்யா ஆனந்தக் கண்ணீர் வடிக்க அந்த இடமே புத்துணர்ச்சி நிறைந்த இடமாக மாறியது.

விஷயம் கேள்விப்பட்டு ராகுலும் அந்த குழந்தையை பார்க்க வந்தான் ஆனால் லதா கோபத்துடன் அவனைத் தடுத்தாள் “ஆமா உனக்கு இங்கே என்ன வேலை உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் கிடையாது எதுக்கு இங்க வந்த ஏன் அந்த குழந்தையை என்ன பண்ணலாம் அந்த ராஸ்கல் என்று கோபத்தின் உச்சிக்கு சென்றாள் லதா”

அவளை சமாதானப்படுத்தும் விதமாக சிவா அவள் அருகே சென்று, “லதா ப்ளீஸ் நடந்த விஷயம் வேற இதெல்லாம் நான் சொல்லனும்னு நினைச்சேன் ஆனா அவளுக்கு பிரசவ வலி வந்ததை பார்த்த உடனே என்னால் எதுவுமே பேச முடியல ஆனா இதுக்கெல்லாம் விளக்கம் நான் வந்து அப்புறமா சொல்றேன் ராகுல் மேல உனக்கு இருக்கிற கோபம் நியாயமானது தான் ஆனா அதுக்கு பின்னாடி இருக்கிற நியாயம் தெரியாத அந்த நியாயம் நான் சொல்லி புரிய வச்சு அப்புறமா நீங்களே இராகுல் பக்கம் என்ன நியாயம் இருக்கு என்றதையும் உன்னால புரிஞ்சுக்க முடியும்.”

“இல்ல சிவா இவன் பக்கம் என்ன நியாயம் இருக்க போது சொல்லு பன்னதெல்லாம் அயோக்கியத்தனம் இதுல என்ன நியாயம் இருக்க போது சொல்லு நீயே சொல்லு பாப்போம்”

“ஐயோ லதா இதெல்லாம் வந்து இங்கே பேசுற விஷயம் இல்லை இதெல்லாம் தனியாக ஒரு நாள் நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன் இப்போ நம்ம திவ்யாக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை பத்தி மட்டும் தான் நாம யோசிக்கணும் இங்கபாரு ராகுல் வந்து குழந்தையை பார்க்க மட்டும்தான் வந்திருக்கேன் ஒழிய வேறு எந்த காரணமும் அவனுக்கில்லை தயவுசெய்து புரிஞ்சுக்கோ பார்த்துட்டு போய்விடுவான் புரியுதா”

“என்ன சிவா பேசுற… நீ என்ன கொல்ல வந்தவனே நியாயம் பேசுற” என்று திவ்யா வாதாட ஆரம்பித்தாள்”

“திவ்யா உனக்கும் தான் சொல்றேன் இந்த விஷயமே வேற இதை இப்ப சொல்ற விஷயம் இல்ல தயவு செஞ்சு நீயாச்சு புரிஞ்சுக்கோ ஆமா உன் குழந்தை பார்க்கிறது உனக்கு விருப்பம் இல்லேன்னா அவனை நான் திருப்பி அனுப்பி விடுறேன் இப்போ உனக்கு சந்தோஷமா”

“முதல்ல அந்த அயோக்கியனை வெளியில் அனுப்பி சிவா என்னால அவனை பார்க்க முடியாது அவன் என் குழந்தையை பார்ப்பதே பாவம் நினைக்கிறேன்”என்றாள் திவ்யா.

இவர்களுக்குள் உரையாடல் நீண்டு கொண்டே இருக்கவே என்ன செய்வது என்று தெரியாமல் ராகுல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் நகரும் அந்த நிமிடம் லதா அவன் அருகே சென்று,

 “ஒரு நிமிஷம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

 என்ன பேசப் போகிறார் என்று கூட யோசிக்காமல் அவள் கூப்பிட்ட உடனே சட்டென்று திரும்பி பார்த்தால் ராகுல் சொர்ணலதா “என்ன சொல்லணும் நினைக்கிறாயோ சொல்லு என்ன திட்டுனா ஆசைப்பட்டாலும… இல்லையென அடிக்கணும்னா கூச ரெண்டு அடி அடிச்சிக்கோ… உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அது எனக்கு தெரியும் என உன்னை நம்ப வெச்சு நான் கழுத்தை அறுத்தேன் அது எந்த அளவுக்கு தப்புன்னு எனக்கு புரியுது”.

“பகடு காயை பயன்படுத்த உனக்கு அந்த புனிதமான காதல் தான் கிடைச்சிதா”  என்றாள் கண்ணீர் விட்டபடி..

அவள் கேட்கும் கேள்விகளுக்கு மௌனமாகவே இருந்தான் ராகுல் பாவம் அவன் என்ன செய்வான் அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை கூறினாலும் அது தற்போது எடுபடாது எனவே மௌனத்தை கடைபிடித்த படி நின்று கொண்டிருந்தான் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தால் எப்படி ஏதாவது பேசு ராகுல் என்றபடி அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.

“மன்னிச்சிடு என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர முயற்சித்தான் ஆனால் அவளோ ஓடி சென்று அவனை கட்டியணைக்க அவள் கண்களில் மட்டுமல்ல அவன் கண்களில் இருந்தும் நீர் ததும்பியது அவனால் சமாதானம் செய்ய முடியவில்லை அவளை உலுக்கி எழுப்பி சாரி லதா என்னை மன்னித்து விடு என்று அவளிடமிருந்து விலக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மீண்டும் நடக்க முயற்சித்தான் ஆனால் என்னதான் அவளை பகடைக் காயை பயன்படுத்தினாலும் ஒருவகையில் அவளுடைய காதல் உண்மையானது தான்..எனவே அவளை விட்டு செல்லவும் மனமில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியாத நிலையில் அவனிருக்க….

“ஏண்டா என்னை ஏமாத்தின நா உண்மையா தான் இருந்தேன்” என்று அவள் கதறிக் கொண்டே இருந்ததை அவரால் கேட்கமுடியவில்லை.

ஒரு முறையாவது அவளை திரும்பி பார்த்து விட்டு செல்வோமா என்றபடி திரும்பி பார்க்க அவள் கண்களில் ஏக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்..

“சாரி “என்பதுப் போல் பார்வையால் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

எப்படியோ வீட்டுக்கு   வந்து   சேர்ந்தவன் தன் மனைவியிடம் சென்று அவள் மடியில் தலை சாய்த்து அழத்துவங்கினான். அவனுடைய அழுகைக்கு காரணம் என்னவென்று அவளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. 

“நம்ப மும்பை போலாமா ராகுல்” என்றாள்

அவளை நிமிர்ந்து பார்த்தவன் சரி என்று தலையசைத்தான். மும்பை செல்லும் ஏற்பாடு நடந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content