Antha Araikul-5
5
அந்த கதவை வேறு திறந்து விட்டோமே இதனால் எதாவது நடந்துக்கொண்டிருக்குதோ என்ற பீதியில் லதா மூழ்கியிருக்க, அவளுடைய நண்பர்கள் அனைவரும் திவ்யாவை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் பிறகு மற்றது பற்றி. யோசிக்கலாம் என்றபடி ஒரு சிறந்த நிபுணரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றனர். மருத்துவர் திவ்யாவிடம் தனியாக பேசவேண்டும் என்பதால் மற்றவர்கள் வெளியே காத்துகிடந்தனர்.
“சொல்லுங்கள் மிஸஸ் திவ்யா நீங்க எதையாவது பார்த்து பயந்துங்களா?”
“ம்ம்ம் ஆமாம் டாக்டர் நான் ரெஸ்ட்ரூம் போனப்ப கூட அந்த பெண் உருவத்தை பார்த்தப்ப எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு இதெல்லாம் ஏன் நடக்குது அப்படினு எனக்கு ஒன்னுமே புரியல?”
“சரி கிணத்துல உங்கள் கைகளை கட்டிய நிலையில் உங்களை யார் தள்ளி விட்டுது?” என்று டாக்டரின் கேள்விக்கு பதில் தேட துவங்கினாள். அவளால் யோசிக்க கூட முடியவில்லை..
“நீச்சல் தெரியாத நான் ஏன் தண்ணீர்ல விழப்போறன்? என்னை ஏன் தள்ளி விடனும்? என்னோட நண்பர்கள் எல்லாரும் தண்ணீர்ல தானே இருந்தாங்க? வேற யார் அந்த இடத்தில் இருந்திருக்க முடியும்? எல்லாமே கேள்விக்குறியா தான் இருக்கிறது டாக்டர்.” என்று தலைமீது கைவைத்தபடி எதை எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள்.
திவ்யா உங்கள் வீட்டுக்கு புதுசா ஒருத்தன் வந்திருக்கானே அவனால எதாவது பிரச்சினையா இருக்குமோ என்று டாக்டர் புதிர்போட இவளோ பட்டென்று “அய்யோ டாக்டர் நீங்க வேற அவன் என் ப்ரண்டு லதாவோட லவ்வர் மும்பை ல இருந்து வந்திருக்கான். என்னை கொல்ல அவனுக்கு என்ன காரணம் இருக்கப்போது” என்று விளக்கமாக பதிலளிக்க.
டாக்டர் சற்று யோசித்து விட்டு “இந்த மாத்திரை எல்லாம் இரண்டு நாளைக்கு எடுத்துக்கோங்க… இது எல்லாமே உங்களுக்கு இருக்கிற படபடப்பு குறைவதற்கான மாத்திரை. இது நல்லா தூக்கம் வரும். எதற்கும் நீங்க இந்த வீட்டை விட்டு கிளம்பி உங்கள் ஹஸ்பண்டு வீட்டுக்கு போறது நல்லது நினைக்கிறேன்”.என்று ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதி அவளிடம் நீட்ட அந்த மாத்திரையை விட அவரிடம் பாரத்தை இறக்கிவிட்ட நிம்மதி அவளிடம் தெரிந்தது. சில நேரங்களில் மருந்து மாத்திரையை விட ஆதரவான வார்த்தை தான் பிரச்சனையை சரிசெய்யும்.
வெளியே வந்தவுடன், “ஏய் திவி மா டாக்டர் என்ன சொன்னாரு” என்று லதா கேட்க”
“இது நார்மலா நான் மனசை அமைதிபடுத்த தந்த மாத்திரை மத்தபடி எதுவும் சொல்லல. அப்றம் சாரி ப்ரண்ட்ஸ் நான் என்னோட வீட்டுக்கு கிளம்பலானு இருக்கேன். நீங்க இங்க இரண்டு நாள் தங்கிட்டு போறதா இருந்தால் தங்கிட்டு போங்க” என்று திவ்யா சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு சரி என்று பட, “அப்படினா நாங்கள் மட்டும் இருந்து என்ன பன்ன போறோம்? நாங்களும் கிளம்புறோம்” என்றனர் நண்பர்கள்.
மருத்தவமனையிலிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தடைந்ததும். பெட்டி படுக்கை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு தயாராகவும் வீட்டிலிருந்த பெரியவர்கள் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது. “என்ன பிள்ளைங்களா எல்லாம் கிளம்பிட்டிங்க?”என்று கலா கேட்க,
“அம்மா என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஊருக்கு கிளம்புறாங்க அதான் நானும் என் வீட்டுக்கு போலாமேனு” என்று கையில் பையை பிடித்தபடி கூற.
“அதுக்காக இப்படி திடுதிடுப்புனு ஏன் கிளம்புறிங்க” என்றார் ஆனந்தன்.
“இல்லை சித்தப்பா நான் கிளம்புறன்” என்று அவள் தயங்கியபடி கூற, “சரி பத்திரம்மா எல்லாரும் அவங்க அவங்க ஊருக்கு போய் சேருங்க எல்லாரும் போயிட்டு போன் பன்னுங்க பசங்களா.” என்று வழியனுப்பி வைத்தனர் வீட்டு பெரியவர்கள்.
“பை பை” என்று எல்லோரும் விடைப்பெற்று சென்றுவிட்டனர். ரயிலில் இந்த நட்பு வட்டாரங்கள் ஏறி அமர்ந்தது. திவ்யா பஸ் பிடித்து கணவன் வீட்டிற்கு புறப்பட்டாள்.
ராகுலும் இவர்களுடன் சென்னை வந்துக்கொண்டிருக்க அனைவரும் இரண்டு நாள் காரைக்குடி நிகழ்வினை அசைப்போட்டபடி வந்தனர்.
அனு சிவாவிடம், “ஏங்க திவ்யா விஷயம் ஒன்னுமே புரியலைங்க…கிணற்றில் தள்ளி விட்டது யாரா இருக்கும்?”
“அந்த ஊரில் அவளுக்கு வேண்டாதவங்க யாராவது நேரம் பார்த்து இப்படி பன்னிருக்கலாம்” என்று சிவா கூற.
“அது சரி கழிவறையில் அவளை கொல்ல வந்தது யாரா இருக்கும் ஒரு பெண்ணோட உருவம்னு சொல்றாளே?இது தான் என்னை ரொம்பவே குழப்புது” என்றான் விஜய்.
“சாரி சாரி” என்று பேச்சை துவங்கினாள் லதா..”என்ன லதா திடீரென சாரி சொல்ற” என்றான் ஜெய்.
“அது வந்து அன்னைக்கு ராகுல் என்னை துறத்திட்டே வந்தப்ப அந்த அறைக்கதவ நான் திறந்துட்டு உள்ளே போயிட்டேன்… அந்த அறைக்குள் எதாவது அமானுஷ்யம் இருக்குதோ என்னவோ அதனால தான் திவ்யாவுக்கு எதாவது கெடுதல் நடக்குதோ என்னவோ” என்று லதா கூற… அனைவரின் கோபமும் லதா மீது திரும்ப அனைவரும் அவளை கடிந்து கொண்டனர்
“ஏண்டி அறிவிருக்குமா உனக்கு அந்த அறைக்கதவை திறக்காதிங்க னு அந்த வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் சொன்னாங்கல அதைமீறி ஏன் திறந்திங்க.” என்று ஜெய் கூற.
“ப்ச்ச் மிஸ்டர் ஜெய் அவளை ஏன் திட்டுறீங்க என் கண்ணு முன்னாடி என் ஆளை திட்டுரது எனக்கு பிடிக்கல. அதான் ஒத்துக்குறோம்ல தெரியாமல் திறந்துட்டோம்னு அப்றம் என்ன?”
“என் ப்ரண்டை திட்ட எங்களுக்கு உரிமை இருக்கிறது” என்றான் ஜெய்.
“ஹலோ அதெல்லாம் இவளோட லைப்ல நான் வருவதற்கு முன்னாடி. இப்ப இவளுக்காக நான் வந்துட்டேன் ல”
“சரி சரி விடுங்க இதுக்கு நீங்க ஏன் சண்டை போட்டுக்குறிங்க” என்றாள் லதா.
…….
நாட்கள் உருண்டோடின.
அனு அன்று அசந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். என்னடா இவ இவ்வளவு நேரம் தூங்குறாளே உடம்புக்கு முடியலையோ என்று பதறியபடியே அவளை மெதுவாக தட்டி எழுப்பினான் சிவா.
“என்ன ஆச்சு அனு நீ இப்படி தூங்கவே மாட்டியே ? உடம்புக்கு எதாவது பிரச்சனையா? “
“இல்லைங்க என்னனு தெரியல ஒரு மாதிரி மயக்கமா இருக்கு. எதை சாப்பிட்டாலும் குமட்டல் வருது” என்று கூற, “சரி வா ஒரு எட்டு டாக்டரை பார்த்துட்டு வந்திடுவோம்” என்றழைக்க.
“அதெல்லாம் அவசியமே இல்லை டா” சிவா என்று அவனுடைய தாய் சிரித்துக்கொள்ள… எதுவும் புரியாதவனாய்,
“மா என்ன சொல்றீங்க” என்று கேட்க, “அவ வயித்துல நம்ப வம்சம் வளர்ந்துட்டு இருக்கு டா அளிவுக்கெட்டவனே. 50 நாட்கள் தள்ளி போயிருக்கு இது கூடவா தெரியல. ஹாஹா முதல்ல அந்த ப்ரெக்னன்ஸி கார்டு வாங்கி செக் பன்னி பாருங்க அதுக்கப்புறம் கன்பார்ம் பன்ன டாக்டரை பார்க்கலாம்… ம்ம் எல்லாம் சின்ன புள்ளையாவே இருக்குதுங்க” என்று புலம்பிக்கொண்டு போக.. தாய் சென்றவுடன் தன் மனைவியை தூக்கி கையில் ஏந்தியவன், “ஏய் பொண்டாட்டி அம்மா சொல்றது உண்மையா மட்டும் இருக்கட்டும், நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன்” என்று அவளை கையில் ஏந்தியபடி சுற்ற.
“அய்யோ விடுங்க போதும். முதல்ல உங்கள் அம்மா சொல்ற மாதிரி கார்டு வாங்கி வாங்க”
“அய்யோ நீவேற அனு,எனக்கு ஒருபக்கம் படபடனு அடிக்குது… சரி இரு வாங்கிட்டு வந்திடுறேன் டெஸ்ட் பன்னியே பார்த்துருவோமே”.
டெஸ்ட் கார்டு வாங்க சென்றவன் நேரமாகியும் வராததால் பயந்து போன அனு அவன் நம்பருக்கு அழைத்தாள். “ஏங்க எங்கே இருக்கிங்க”
“மெடிக்கல் ஷாப் தான் வந்தேன் வந்த இடத்தில் ஒரு முக்கியமான போன் வந்தது அதான்…சரி கார்டு வாங்கிட்டேன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்”என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு வாகனத்தை செலுத்தி வீடு வந்து சேர்ந்தான்.
“இ…இந்தா ..இதானே அம்மா சொன்ன டெஸ்ட் கார்டு பிடி.. நான் உடனே ஊருக்கு கிளம்பியாகனும்”என்று பதறியபடியே கூற.
“என்னங்க என்ன ஆச்சு ஏன் உங்கள் முகமெல்லாம் வியர்க்குது எதாவது பிரச்சனையா… ஆமா எந்த ஊருக்கு போறிங்க”.
“காரைக்குடி”.
“வாட்”?
“ம்ம்ம் ஆமாம் காரைக்குடி தான் திவ்யா வீட்டுக்கு தான் போறேன். என்றவுடன் “ஏங்க இப்படி திடீருனு நம்ப அங்கயிருந்து வந்து பத்து நாள் கூட ஆகலையே இப்ப என்ன அங்க போகவேண்டிய காரணம்.?” என்று அவள் கேட்க.
அவள் முகத்தை பார்த்தபடி “தி…திவ்யாவோட” என்று இழுக்க..
“ஐயோ சொல்லுங்கள் திவ்யாவுக்கு என்னங்க ஆச்சு?” என்று அவள் அவனது தோளை உலுக்கி கத்த.
“ஐயோ அனுமா ப்ளிஸ் நீ டென்ஷன் ஆகாத இந்த மாதிரி நேரத்தில் அமைதியாக இரு. திவ்யாவோட சித்தப்பா ஆனந்தன் இறந்துட்டாங்க லாம் போன் வந்தது. அதான் ப்ரண்ட்ஸ் எல்லாம் இப்ப கிளம்புறோம். நீ இந்த சமயத்தில் வரவேண்டாம் அம்மாவோட இரு”
“இ…இல்லைங்க நானும் உங்களோட வரேன் என்னால நீங்க இல்லாமல் இருக்கவும் முடியாது கடைசியா அவங்க சித்தப்பா முகத்தை பார்த்துட்டு அவங்க சித்தி தேவி ஆண்டிக்கு நாலு வார்த்தை ஆறுதல் வார்த்தை சொல்லிட்டு வரனும்ங்க”
“ஐயோ ப்ளீஸ் அனுமா இப்பதான் அம்மா வாயால ஒரு சந்தோஷமான வார்த்தை கேட்டேன் அது பலிக்கனும்னு ஆசைப்படுறன் முதல்ல நீ டெஸ்ட் பன்னி பாரு.”
அவன் சொல்படி அவள் அந்த டெஸ்ட் கார்டை வைத்து பார்த்துவிட்டு இரண்டு பாஸிட்டிவ் கோடுகள் இருப்பதை சந்தோஷத்துடன் அவனுக்கு காண்பிக்க அதை வாங்கி கண்கலங்கியபடி பார்த்தவன்,
“அனு மா இந்த சந்தோஷத்தை கொண்டாட கூட முடியாத சூழ்நிலை ல இருக்கேன். நான் போயிட்டு வந்திடுறன். நீ பத்ரமா அம்மாவோட இருடா. சாயந்திரம் அம்மாவோட டாக்டர் க்ளீனிக் போயிட்டு வந்திடு” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன் புறப்பட முற்பட்டபோது,
“என்னங்க ஆனந்தன் அங்கிள் எப்படி இறந்துட்டாங்க?”என்று கேட்க.
“அவரை யாரோ கொலை பன்னிருக்காங்க. இப்போதைக்கு இது தான் தெரியும்”. என்று கூறிவிட்டு கிளம்பினான்.
“கொ…கொலையா” என்று அதிர்ந்தாள் அனு.
யார் அந்த கொலையாளி. திவ்யாவிற்கு நடந்த சம்பவத்திற்கும் அவளுடைய சித்தப்பா இறந்ததற்கும் எதாவது சம்மந்தம் இருக்கா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
விறுவிறுப்பு கட்டத்தில் கதை .,
Ada pavame…
Chitthappa va kola pannitanga la…
Super anuma..
Ragul romba pesara ne???ivana irupano..
Waiting ka..