You don't have javascript enabled
Bhagya novelsThriller

Antha Araikul- 6

6

ஆனந்தன் இறந்த செய்தியை கேட்டு திவ்யாவின் நட்புகள் ஈமச்சடங்குகளில் கலந்துக்கொள்ள சென்றனர் ராகுல் உள்பட. காரில் புழுதியை கிளப்பிக்கொண்டு ஸ்டார்ட் செய்தவாறு கார் புறப்பட்டது. 

“மச்சி எதுக்கும் மெதுவாவே போ டா நம்ப போறது சாவுக்கு நீ போற வேகத்தில் நம்ப செத்துருவோம் போலயே” என்றான் விஜய். 

“இல்லை மச்சி கொஞ்சம் வேகம் பிடிச்சா தான் சீக்கிரம் ஊர் போய் சேரமுடியும்…” என்றான் ஜெய். கூடவே லதாவும் ராகுலும் அவர்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு வந்தனர். 

சற்று நேரம் கடந்தவுடன். டீ சாப்பிட காரை ஓரங்கட்டினர். 

“டேய் சிவா எல்லாருக்கும் டீ சொல்லிடு” என்று விஜய் கூற அனைவருக்கும் டீ ஆர்டர் செய்யப்பட்டது. அனைவரும் டீ குடித்துவிட்டு காரில் ஏறிக்கொண்டு புறப்பட்டனர். 

“இப்ப நான் ஓட்டுரேன்” என்றான் சிவா..ட்ரைவர் சீட்டில் உக்கார்ந்த சிவா காரை கிளப்பியவன், “ஆமா வண்டி லோடு இழுக்கமாட்டேங்குது “என்னவா இருக்கும் என்று யோசிக்க “மச்சி வண்டியில் நம்மள தவிர யாரும் இல்லை அப்றம் ஏன் ஓவர் லோடு மாதிரி வண்டி இழுக்கல?” என்று சிவா சந்தேக கேள்வியை கேட்க..

“எல்லாம் நம்ப லதா தான் காரணம்.. தீணி பண்டாரம் தின்னு தின்னு உடம்பு ஊதிபோய் கெடக்கு” என்று நக்கலடித்தான் ஜெய்.

“ஹலோ…போதும் என்ன கலாய்ச்சது வண்டி ஸ்டார்ட் பன்னி போங்க..”

மறுபடியும் க்ளட்ச் விட்டு ஆக்ஸிலேட்டர் மிதிக்க வண்டி தடுமாறி கிளம்பியது. இப்படியே ஓட்டிக்கொண்டிருக்க வண்டி ராமநாதபுரம் வரை நெருங்கியது. “ஸ்ப்பா…கொஞ்சம் நேரம் வண்டியை நிப்பாட்டி வச்சிட்டு எதாவது சாப்பிட வாங்கிக்கலாமா” என்றாள் லதா.

“நான் சொல்லல்ல இது தீணி பண்டாரம் னு” என்று ஜெய் ஆரம்பிக்க,

“அதுக்கு சொல்லல டா ஜெய் அங்கு காரைக்குடி போயிட்டா நாளைக்கு வரை அங்க எதுவுமே சாப்பிட முடியாது இங்கேயே எதாவது வாங்கி சாப்பிட்டு கிளம்பலானு தான் சொன்னேன்” என்றாள் லதா.

“ஆமா வந்தது ல இருந்து ராகுல் ஏன் அமைதியாக இருக்காரு” என்று ஜெய் கேட்க…

“அதெல்லாம் ஒன்னுமில்லை” என்று நகத்தை கடித்தபடி ராகுல் கூற.. “ஏன் ராகுல் இப்படி நிகம் கடிக்கிற, இந்த பேட் ஹேபிட் உன்னை விட்டு எப்பவுமே போகாதா?” என்று லதா கடிந்து கொள்ள.

“எதாவது பதற்றம் ஆனால் நகத்தை கடிப்பேன் மற்றபடி வேற எதுக்கு கடிக்கிறன்” என்று ராகுல் கூற “ஆமா உங்களுக்கு என்ன பதற்றம் இறந்தவரு என்ன உங்கள் மாமனாரா?”,என்று சிவா நக்கலடிக்க..

“அதானே” என்று மற்ற நண்பர்களும் கூற.. ‘இது என்ன வம்பா போச்சு நிகத்தை கடிக்கிறதுக்கு எல்லாம் காரணம் கேக்குது பக்கிங்க’ என்று ராகுல் நொந்து கொள்ள.. ஒருவழியாக காரை நிறுத்திவிட்டு ஓரு பரோட்டா கடையினுள் நுழைய அனைவரும் பரோட்டா வாங்கி சாப்பிட துவங்கினர்.

..

..

நேரம் மாலை 7.15.

பரோட்டா சாப்பிட்டு முடிக்கவும் திவ்யா அழைக்கவும் சரியாக இருந்தது. “என்னங்கடா கிளம்பியாச்சா..” என்று எதிர்முனையில் அவள் கேட்க..

“இதோ வந்துட்டே இருக்கோம்” என்று பதிலளித்துவிட்டு காரை கிளப்ப முயற்சித்தப்போது கார் டிக்கியை யாரோ உள்ளிருந்து தட்டுவது போல் உணர்ந்த சிவா..”மச்சி டிக்கியில் யாரோ இருக்காப்புல”

“ஆமா சிவா” என்றபடி கார் டிக்கியை ராகுல் திறக்க அங்கு கைகள் கால்கள் கட்டபட்ட நிலையில் ஒரு அழகான பெண் இருந்தாள்.

“ஏய் நீ…நீ யார்?” என்று அனைவரும் வினவ.

“நான்.. நான்.. யாருன்னா கேட்டிங்க..அது வந்து” என்று வார்த்தைகளை முழுங்கியவாறு ராகுலை நோக்க,

“இந்த புள்ள ராகுலை ஏன் பார்க்குது” என்று அனைவரும் யோசிக்க அதற்குள், “சரி இதுக்கெல்லாம் நேரம் இல்லை.. நீ எப்படியோ வந்த விடு…நீ உங்கள் வீட்டுக்கு வந்த வழியே போயிடு தாயே” என்றான் விஜய்.

“டேய் மச்சி அந்த பொண்ணு என்ன சொல்றானு கேப்போமே” என்றான் ஜெய். 

அதற்குள் ராகுலும் அந்த பெண்ணும் ஜாடைமாடையில் ஏதோ பேசிக்கொண்டனர். இருவரின் கண்களும் உரையாடல் நடத்திக்கொண்டிருந்தன. இதை எதர்ச்சையாக கவனித்து விட்டான் சிவா. 

“லதா..நீ கார்ல ஏறு ம்ம்ம் அப்புறம் விஜய் நீ கார் ஸ்டார்ட் பன்னு” என்று ஏவினான் சிவா…இதை கவனித்த ராகுல்…வாங்க நாமளும் ஏறுவோம் இந்த பொண்ணு வந்த வழியே போகட்டும் நமக்கு என்ன வந்தது என்று கூற..

“மிஸ்டர் ராகுல் மரியாதையா இந்த பொண்ணு யார் சொல்லிடு..இவளுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்?”

“சிவா இது உனக்கு தேவையில்லாத விஷயம்”.

“சரி இவ ஏன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் டிக்கியில் ஏத்துன?”

பேசிக்கொண்டு இருக்கும்போதே வில்லத்தனமான சிரிப்பினை வெளிப்படுத்தினாள் அந்த பெண். 

“ஹாஹா… ஏண்டா நான் என்ன லூசா கை கால் கட்டப்பட்ட நிலையில் டிக்கி ல படுக்க?”

“என்னடி சொல்ற”

“நான் வான்டடா தான் உங்கள் கார்ல ஏறினேன் எப்ப தெரியுமா டீ குடிக்க வண்டி நிப்பாடாடுனீங்கல அங்க தான்”.

“மத்தவங்க பார்வைக்கு நீங்க என்னை கடத்திட்டதா நாடகம் ஆடுறதுக்கு தான்.”

“இதனால உனக்கு என்ன டி லாபம்?”.என்று சிவா கேட்க..

“நீங்க எல்லாம் ஜெயிலுக்கு போயிடுவிங்க அதுவே எங்களுக்கு லாபம் தானே”?

“என்ன சொல்ற”

“யெஸ் மிஸ்டர் சிவா…இதுல எனக்கும் ராகுலுக்கும் நிறைய லாபம் இருக்கு.”

“ஏய்…ஏய் அப்படினா ராகுல்?: என்று பதற்றத்துடன் சிவா கேட்க..

“ராகுல்…என்னோட புருஷன்”

“வாட்?”

“நீ…நீ..சொல்றது ஒன்னுமே புரியல..நீங்க இரண்டு பேரும் யாரு?எதற்கு எங்களை மாட்டிவிடனும் னு ட்ராமா பன்னுரீங்க சத்தியமா புரியல” என்றான் சிவா..

“இங்க பாரு உங்கள் கார் டிக்கியில் இருந்தது .அதிலிருந்து நான் எழுந்தது எல்லாம் படம் பிடிச்சு வச்சிருக்கேன். நீங்க தான் என்னை கடத்துனிங்க னு எவிடன்ஸ் காட்டி ட்ராமா பன்னி உங்களை மாட்டிவிடவும் முடியும்”.என்று அவள் ஏளனமாக கூற..ஒன்றும் புரியாமல் குழம்பிப்போய் நின்றான் சிவா.

“நீங்க கடத்துன மாதிரியும் கடைசியில் நான் வந்து காப்பாத்துன மாதிரி தான் சீன்” என்று அலட்சியமாக சிரித்தான் ராகுல்..

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க லதாவை இவன் எதற்காக ஏமாற்றுகிறான் என்பது தான் சிவாவிற்கு புரியவில்லை. லதாவோடு இவன் ஏன் பழகனும்? இது தான் புரியாத புதிராக இருந்தது சிவாவிற்கு.

“மச்சி சீக்கிரம் வா…ஏண்டா அந்த பொண்ணு இன்னுமா கிளம்பல,டேய் ராகுல் நீயும் வா” என்று லதா கூப்பிட அந்த பெண் தானும் இவர்களுடன் வந்து போற வழியில் இறங்கிக்கொள்வதாக கூறி ஏறிக்கொண்டு அமர்ந்து விட்டாள். இந்த சூழலில் சிவா எதுவும் செய்ய முடியவில்லை…. இந்த பெண் ஏன் நம்மை எல்லோரையும் மாட்டிவிட வேண்டும்? ராகுல் ஏன் லதாவை காதலிக்கிற மாதிரி நடிக்க வேண்டும் எல்லாம் புரியாத ஒரு புதிராகவே இருந்தது அவனிற்கு.

காரை கிளப்பி போகும் வழியில் அந்த பெண் இறங்கிவிட மீண்டும் கார் முன்னேறி செல்ல……

“சிவா ஏண்டா ஒரு மாதிரி இருக்க” என்று விஜய் கேட்க..

“ஒன்னுமில்லை” என்றான் சிவா

“இல்லை நீ கார் ல ஏறினதிலிருந்து சரியில்லை” என்றான் ஜெய்யும். 

“இதெல்லாம் பேச நேரமில்லை விஜய் நம்ப காரைக்குடி போகனும் சீக்கிரம் வண்டி ஓட்டு”என்ற சிவா..அந்த பொண்ணு எப்போது வண்டியில ஏறியிருக்கும் ஒன்னுமே புரியவில்லை என்று குழப்பிக்கொள்ள..

“ஆமாம் அந்த பொண்ணு யார் என்னனு கூட கேக்கலையே வர அவசரத்தில் அப்படியே வந்துட்டோம் அவளும் இறங்கி போயிட்டா… ஆமா அந்த பொண்ணை யார் கை கால் கட்டியபடி நம்ப காரில் போட்டுருப்பாங்க? “ என்று லதா கேள்வி எழுப்ப ராகுல் எதுவும் தெரியாது போல் முகத்தை சாதாரணமாக வைக்க சிவாவிற்கு டென்ஷன் தலைக்கேறியது .

“லதா கொஞ்ச நேரம் சும்மா வா” என்று கத்தினான் சிவா.

கார் கொஞ்ச தூரத்தில் வந்துக்கொண்டிருக்க சிவாவின் மனசில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது. காரை சட்டுனு நிறுத்தசொல்லி “லதா நீ முன்னாடி வந்து உக்காரு நான் பின்னாடி உக்காரேன் “என்று லதாவை முன்னே அமர சொல்லி பின்னே ராகுல் பக்கத்தில் அமர்ந்தான். 

“என்ன மிஸ்டர் பயமா?” என்று நக்கலாக சிரித்தான் ராகுல். 

“உன்னையே ராஸ்கல்” என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல…”ஒன்னுமே கிழிக்க முடியாது” என்று அவனது ஏளனச்சிரிப்பு உணர்த்தியது.

காரைக்குடி சற்று தூரத்தில் தான் அதற்குள் லதா “டேய் ஒரு மாலை வாங்கிக்கலாம் டெத்துக்கு போறோம் மாலை வாங்காமல் எப்படி?” என்று காரை விட்டு இறங்க கூடவே சிவாவும் இறங்கினான்.

“லதா… லதா”

“என்ன சிவா”

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும் . அந்த ராகுல் நல்லவன் இல்லை”

“வாட்…?” விளையாடாத சிவா. 

“அய்யோ லதா உனக்கு எப்படி புரியவைக்க.. எனக்கு எல்லாம் குழப்பமா இருக்கு. ஆனால் அந்த ராகுல் உனக்கு உண்மையா இல்லை டி .அந்த.. அந்த பொன்னு நீ பார்த்த ல?”

“எந்த பொண்ணு”

“அதான் கார் டிக்கி ….அவதான் டி”

“அவள் யாரோ டா சிவா அவளை யாரோ கட்டி போட்டு நம்ப கார் டிக்கியில் போட்டு போய்ர்காங்க உண்மையை சொல்லனும் னா என்ன ஏதுனு கூட விசாரிக்காம அவளை நம்ப அனுப்பி வச்சதே தப்பு..”

“ஏய் பைத்தியம்.. அவள யாரும் ஏத்தல…அந்த பொண்ணு போட்ட நாடகம் அது…”

“யூ மீன் ?”

“அய்யோ…அந்த ராகுல்…ப்ளான் அது. எந்த ப்ளான் காக நம்ப கூட அவன் இருக்கானு சத்தியமா தெரியல ஆனால் அவனை நம்பாத அவ்வளவு தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும்”

“டேய் என்ன டா சொல்ற”

“ஆமாம். இப்போதைக்கு நம்ப அவன்கிட்ட இருந்து ஜாக்கிரதை யா இருக்கிறது தவிர எதுவும் செய்ய முடியாது. ஆனந்தன் டெத் பார்த்துட்டு வரவரைக்கும் எந்த பொல்லாப்பும் வேண்டாம் ஓகேவா”

“சிவா நீ சொல்றத கேக்குறப்ப எனக்கு பயமா இருக்கு”

“ஒன்னுமே பயப்படாத இந்த விஷயம் உனக்கு தெரியாத மாதிரி காட்டிக்கிறது இப்போதைக்கு நல்லது புரியுதா வா போலாம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content