You don't have javascript enabled
RomanceRomantic comedyvaanisri novels

silendru oru kadhal-2

மறுநாள் மதியம் ஒரு மணிக்கு கார்ட்ஹௌஸில் நின்றனர் அம்மூன்று தோழியினரும். ஸ்ரீலக்ஷ்மியின் கைகளிலோ அப்புத்தியவனிடமிருந்து அவள் பெற்றுக்கொண்ட லேப் கோட் அழகாக தோய்து பின் அயன் செய்து ஓர் பேப்பர் பேக்கினுள் மடித்து அதில் “தாங்கியூ” என்ற கிரீட்டிங் கார்டுடன் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்தது.

“என்னடி இன்னும் யாரையும் காணும்?? எனக்கென்னமோ யாரும் வர்ற மாதிரி தெரியல….” -என்று வம்பிழுத்தாள் யோகா.

“பாரு…. நிவாஷினி இந்த யோகா பிசாசை!!! நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த லேப் கோட்டை துவைச்சு… காயவச்சு… அயன் செய்து… இந்த பேப்பர் பேக்ல வைச்சு அழகா கொண்டு வந்திருக்கேன். இவ கொஞ்சம் கூட என் கஷ்டம் புரியாம சென்ஸ் இல்லாம பேசுறா!!” -என்று ஸ்ரீமஹாலக்ஷ்மி புகார் செய்ய.

நிவாஷினியோ, “அட ராமா!!! கொஞ்சம் அமைதியாதான் இரேன் யோகஆஆஆஆ” -என்று கூறி யோகாவை அடக்கினாள்.

யோகாவோ “ஆமா!!! ஆகாத மருமக கை பட்டா குத்தம்… கால் பட்டா குத்தம்ன்ற கணக்கா என்னையே குறை சொல்லுங்க!” -என்று நொடிந்துக்கொண்டாள்.

அந்நேரம் சரியாக அங்கு தனது மோட்டார்சைக்கிளில் பிரசன்னம் ஆனான் கௌதம். இவர்களைக் கண்டதும் அவனது தலைக்கவசத்தை கலட்டியவாறே அவனது மோட்டார்சைக்கிளிலிருந்து இறங்கி இவர்கள் நின்ற கார்ட்ஹவுஸை நோக்கி வந்தான்.

வலது கையில் ஹெல்மட்டை தூக்கிக்கொண்டு இடது கரத்தால் களைந்திருந்த தலை முடியை கோதியவாறே இவர்களை நோக்கி நடந்து வந்தான். பின் இவர்களை நெருங்கியவுடன்   “ஹை!!” என்றான் மூவருக்கும் பொதுவாக.

ஸ்ரீமஹாலக்ஷ்மியும் இதழில் புன்னகையை படரவிட்டவாறு பதிலுக்கு “ஹை… எப்படி இருக்கீங்க? வந்து… நேற்று அவசரத்தில உங்க பேர கூட கேட்க மறந்துட்டேன் ….” என்று இழுக்க.

அவனோ சிரித்தவாறே இவளை நேராக பார்வையிட்டு ” ஐ ஆம் கௌதம் ஸ்ரீனிவாசன்” என்றான் தனது பேரில் அழுத்தம் கொடுத்து சிறு எதிர்பார்ப்புடன்.

“கௌதம்….கௌதம் ” என்று அவனது பெயரை தனக்குள்ளாகவே சொல்லிப் பார்த்துக் கொண்டாள் மஹா.

இதுதான் சான்ஸ் என்று “ஹலோ அண்ணா…. ஐ அம் யோகதர்ஷினி@யோகா!!” -என்று யோகாவும்.

 “ஹை ப்ரோ!!! ஐ அம் நிவாஷினி” என்று நிவாஷினியும் தங்களை தாங்களே அறிமுகம் படுத்திக்கொண்டனர்.

கௌதம் இருவரையும் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி அப்பொழுதுதான் ஞாபகம் வரப்பெற்றவளாக ” ஐ அம் ஸ்ரீமஹாலக்ஷ்மி சுப்ரமணியம். மனிச்சிருங்க…நேத்து டெஸ்ட் இருக்குற டென்ஷன்ல சரியா பேச முடியலை. ஆமா… நீங்க என்ன கோர்ஸ்?? டிகிரியா??” என்று கௌதமை நோக்கி வினவினாள்.

“இட்ஸ் ஓகே… யெஸ்… டிகிரி இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்! பட் இதுதான் கடைசி செமஸ்டர்..” என்று சிரித்தவாறே கூறினான்.

“ஒஹ்… வாவ்!! வணக்கம்…. சீனியர் சர்”என்று நிவாஷினி போலி பவ்யம் காட்ட கௌதம் “வணக்கம்….. ஜூனியர்ஸ்” என்று பதிலுக்கு வணக்கம் வைக்க மஹாவோ மனதிற்குள் “இது சரியா வராது…. ” என்று எண்ணிக்கொண்டு கௌதமை நோக்கி “கௌதம்…. நிஜமாகவே தாங்க்ஸ் அ லாட். நீங்க இல்லனா என்னோட கெமிஸ்ட்ரி  டெஸ்ட் கோவிந்தாதான். இந்தாங்க உங்க லேப் கோட்…. அண்ட் ஒன்ஸ் அகயின் ரொம்ப ரொம்ப நின்றி”  என்று மனமார நன்றி உரைத்தாள்.

தன் தோழிகளிடம் திரும்பி “வாங்கடி போகலாம்!! அடுத்த க்ளாஸுக்கு டைம்மாகுதுல” என்று தனதிரு தோழிகளையும் துரித படுத்தினாள் மஹா.

 பின் மூவரும் கௌதமை நோக்கி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினர்.

கௌதம் தன் கைகளிலிருந்த பேப்பர் பேகினுள் இருந்த “தாங்கியு” அட்டையை பிரித்து பார்த்து உதட்டில் உறைந்த புன்னகையுடன் நடந்தான்.

******************************************************************************

ஒரு வாரம் சென்ற பிறகு…..

ஓர் பின்மாலை நேரத்தில் மறுநாள் நடக்கவிருக்கும் பிஸிக்ஸ்  அரை செமஸ்டர்  (mid-semester) தேர்விற்காக கல்லூரியின் நூலகத்தில் மும்முரமாக படித்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. யோகா மற்றும் நிவாஷினி பிஸிக்ஸ் பாடம் எடுக்காத காரணத்தினால் அவர்கள் இருவரும் வீட்டிற்குச் சென்று விட்டிருந்தனர்.

அப்பொழுது இவள் முன் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள் ஆச்சரியமான முக பாவதுடன் “என்ன சீனியர் சர்… காத்து இந்த பக்கம் வீசுது?!” -என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி விசாரித்தாள்.

கௌதமோ “இல்ல ஜூனியர் மேடம்… சில நோட்ஸ் எடுக்க வந்தேன்… பட் என்னோட ஜூனியர் ரொம்ப நேரமா மண்டையை உருடிக்கிட்டு இருக்கிறதை பார்க்க சகிக்காமல் ஹெல்ப் செய்யலாமேனுதான் வந்தேன்” என்று கூறிக்கொண்டு அவளின் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு “இப்போ சொல்லு…. என்ன பிரோப்ளேம்?” என்றான்.

இவளோ முகத்தை அஷ்டக்கோணலாக சுளித்தவாறு “இப்படி சட்டுன்னு கேட்டா… நான் என்னனு சொல்ல?! புக் புஃல்லா பிரோப்ளேம் தான்” என்று கண்களை உருடியவாறு அந்த பிஸிக்ஸ் புக்கை தூங்கி காட்டினாள்.

“ஹாஹாஹா…. அப்படி என்ன பெரிய விஷயம்?! இங்க குடு நான் எல்லாம் கிளியர் செய்றேன்!” என்று கூறி அவளது நோட்ஸை எடுத்து அதில் உள்ள அவளது குழப்பங்களை நிவர்த்தி செய்ய ஆரம்பித்தான்.

நேரம்  செல்வதறியாமல் இருவரும் நூலகத்தில் இருந்தனர். ஒருவாறு தனது ரிவிஷனை முடித்து விட்டு நிமிர்ந்தவள் அதிர்ந்தாள் தன் முன்னிருந்த சுவற்றில் உள்ள கடிகாரத்தைப் பார்த்து.

“ஈஸ்வரா…. மணி ஒன்பது ஆகிடுச்சு!!வீட்டுல அம்மா தேடுவாங்க… அப்போ நான் கிளம்புகிறேன்!! ஹெல்ப் செய்ததுக்கு ரொம்ப நன்றி!! எனக்காக பிரே பெண்ணுங்க” -என்று கூறியவாறு தனது புத்தகம் மற்றும் நோட்ஸை சேகரித்தாள் மஹா.

“ஆல் தி பெஸ்ட்!! என்னோட ப்ரேயர்சில் நீ எப்பவுமே இருப்ப!! ஏதாவது டௌப்ட் வந்தா… திஸ் இஸ் மை நம்பர்!!! ஜஸ்ட் வாட்ஸாப் மீ” – என்று கூறி தனது மொபைல் நம்பரை ஓர் காகிதத்தில் எழுதி அவள் முன் நீட்டினான் கௌதம்.

“ஓ… தாங்க்ஸ்” -என்று கூறி அந்த காகிதத்தை வாங்கி தனது பென்சில் பாக்ஸினுள் வைத்துக்கொண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி. பின் அவனிடம் விடைப்பெற்று நூலகத்தை விட்டு வெளியேறினாள்.

அவள் செல்வதையே வெகு நரேம் பார்த்துக்கொண்டு நின்றான் கௌதம். பின் சத்தமாக முணுமுணுத்துக்கொண்டான் “இன்னுமா ஸ்ரீ… உனக்கு என்னைய அடையாளம் காண முடியலை?” என்று நடந்துச் செல்லும் அவளது பிம்பத்திடம் வினவினான்.

******************************************************************************

மறுநாள் காலையில் ஸ்ரீமஹாலக்ஷ்மி தேர்வு நடக்கும் அறையை நோக்கி செல்கையில் ஓர் சீன மாணவி அவளின் முன் வந்து ஓர் அழகிய உதா நிறத்திலான பென்சில் கேஸ் ஒன்றை நீட்டினாள். அதில் ஓர் சிறிய ஸ்டிக்கி நோட்டில் என்னவோ எழுதியிருந்தது.

அந்த பென்சில் கேஸ்ஸை வாங்காமல் அப்புத்தியவளை பார்த்து “என்ன?” என்ற ரீதியில் விழித்தாள்.

அப்புத்தியவளோ ” திஸ் இஸ் பாஃர் யூ!! ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்து கூறி அவளது கைகளில் அந்த பென்சில் கேஸ்ஸை திணித்து விட்டு சிட்டாக ஓடி விட்டாள்.

இவளோ மனதிற்குள் “என்னங்கடா இது?! என்னைவிட பெரிய லூசா இருப்பாளோ?!” – என்று எண்ணிக்கொண்டு அவள் கொடுத்த பென்சில் கேஸ்ஸின் மேல் இருந்த ஸ்டிக்கி நோட்டை படிக்கலானாள்.

” மை பெஸ்ட் விஷ்ஷஸ் டு யூ!! கீப் திஸ் அஸ் மை கிப்ட். உன்னோட பென்சில் கேஸ் நேற்று கொஞ்சம் கிழிஞ்சு இருந்தது. அதற்கு பதிலாக இதை யூஸ் பெண்ணிக்கோ! டேக் கேர்!! வித் ரிகார்ட்ஸ் -கௌதம்-” என்ற வாழ்த்தைக்கொண்டிருந்தது அந்த ஸ்டிக்கி நோட்.

“ம்ப்ச்… இவர் வேற!! இப்போ நான் இதை எல்லாம் கேட்டேனா?! கண்ணுல சிக்காமலா போய்டுவார்?? அப்போ வைச்சிக்கிறேன்..!” -என்று முணுமுணுத்துக்கொண்டு அந்த புதிய பென்சில் கேஸ்ஸை எடுத்து தனது பேக்கில் வைத்துக்கொண்டாள். பின் தேர்வு நடைபெறவிருக்கும் அறையை நோக்கி வேக வேகமாக சென்றாள்.

******************************************************************************

நாட்களும் யாருக்காகவும் காத்திராமல் வேக வேகமாக உருண்டோடியது.

அன்று திடீரென்று இரண்டு பீரியட் தொடர்ந்து கான்சல் செய்யப்பட்ட காரணத்தினால் தோழியர் மூவரும் நூலகத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். நூலகம் ஆறாம் தளத்தில் இருந்தமையால் மின் தூக்கியை பயன் படுத்த முடிவெடுத்து அதில் உள்நுழைந்தனர்.

மின் துக்கியின் கதவு மூடும் தருவாயில்  கம்பீரமாக வலது கையால் கழுத்தில் உள்ள டையை சரி செய்தவாறு நேவி ப்ளூ நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற பாண்ட்டில் ஆளை அசத்தும் தோற்றத்துடன் உள்நுழைந்தான் கௌதம்.

நுழைந்தவுடன் இவர்கள் மூவரையும் பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தான். பின் ஒன்பதாம் தளத்திற்கு செல்லும் பொத்தானை அழுத்தினான். அவனின் கண் சிமிட்டலில்  மங்கையர் மூவரும் சிரித்தனர்.

யோகா வேகமாக மஹாவின் காதில் ரகசியம் கூறினால் -” ஹேய்… மஹா!!! உன் லேப் கோட் பார்ட்டி…டி!! செம்ம ஸ்டைல்… ச்ச!! சான்ஸே இல்ல” என்று பெருமூச்சு விட.

நிவாஷினி உடனே “யோகா…. கேட்டுற போகுதுடி… அமைதி… அமைதி… அமைதியோ… அமைதி” -என்று எச்சரித்தாள்.

இங்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியோ – “இப்போ என்ன செய்றது? எப்படி பென்சில் கேஸ் பற்றி பேசுறது…. ஹ்ம்ம்…. இதுங்க ரெண்டுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா போதும்!! அதை சொல்லியே என்னை ஒரு வழி ஆக்கிடுவாங்க!!! இப்போ என்ன தான் நான் செய்வேன்” -என்று மனதில் எண்ணிக்கொண்டு வெளியே அமைதியாக காட்சியளித்தாள்.

பின் இவர்கள் செல்ல வேண்டிய தளம் வந்ததும் மூவரும் வெளியாயினர். வெளியேறும் பொழுது மஹாவின் முன் கைகளை குறுக்காக நீட்டிய கௌதம் “இப்போ எனக்கு ஒரு முக்கியமான ப்ரெசென்டஷன் இருக்கு…. விஷ் செய்ய மாட்டியா?!” -என்று கண்களை சிமிட்டியவாறே கேட்களானான்.

அவன் கண்களை சிமிட்டிய தோரணையில் குறும்பு செய்த சின்ன கண்ணனைக் கண்ட ஸ்ரீமஹாலக்ஷ்மியோ ஒரு நொடி தன்னை மறந்து நின்றாள். பின் தன்னை சமாளித்துக்கொண்டு “ஆல் தி பெஸ்ட் கௌதம். நீங்க கண்டிப்பா சூப்பரா செய்வீங்க! பை” என்று அவன் கண்களைப் பார்த்து கூறியவள் அந்த மின் தூக்கியில் இருந்து வெளியானாள்.

இவள் கூறிய வாழ்த்தைக் கேட்டவனோ மிக சந்தோஷமான மன நிலையில் தலையசைத்து விடைப்பெற்றான்.

உதட்டில் உறைந்த புன்னகையுடன் திரும்பிய ஸ்ரீமஹாலக்ஷ்மி அதிர்ந்தாள் தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த… இல்லை… இல்லை… முறைத்துக்கொண்டிருந்த தன் இரு தோழிகளையும் கண்டு.

பின் அசடு வழிந்தவாறே “ஹிஹிஹி… அது வந்து… ஏதோ முக்கியமான பிரேசன்டெஷனாம் அதான்…. வி-விஷ்ஷஸ் சொன்னேன்!!! தப்பா?!” என்று அப்பாவியாக கேட்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

“தப்பில்லமா…. தப்பே இல்லை!! ஆனால் இப்படி அசடு வழிஞ்சிக்கிட்டு நிக்கிறியே அது தான் டௌட்டாவே இருக்கு!!” -என்று தனது தாடையை தடவி யோசிப்பதைப் போல பாவனை செய்துக்கொண்டே தனது தோழியை நோட்டமிட்டாள் யோகா.

“ஆஆஆ…. இந்தக் கொசுத் தொல்லை தாங்கலையே….” -என்று முணுமுணுதவாறு “ஈஈஈஈஈஈஈய்” என்று மலுப்பலாக சிரித்தாள் ஸ்ரீமஹாலக்ஷ்மி.

“இந்த சிரிப்பெல்லாம் இப்போ போனாரே சீனியர் சர்… அவர்கிட்ட வச்சிக்கோ செல்லம்!!! இப்போ மேட்டர்ர செப்பண்டி.. ஹ்ம்ம்… செப்பு செல்லம்” -என்று தன் தோழியை கிடுக்குப்பிடி பிடித்தாள் யோகா.

“அது… வந்து… ஆ…ம்!! அவர் விஷ் சொல்ல சொல்லி கேட்டார்… நான் விஷ்ஷஸ் சொன்னேன்!!! நாளைக்கே நீ கேட்டா கூடத்தான் சொல்வேன்!! வேணும்னா இப்போ கூட சொல்றேன்! ஆ… ஆல் தி பெஸ்ட்ட்டட்ட்!!!! போதுமா!? இப்போ போகலாமா??” -என்று பட பட பட்டாசு போல்  தனது தோழிகளிடம் பட படத்து விட்டு நூலகத்தை நோக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினாள் மஹா.

இவள் ஓடுவதை பார்த்த யோகா சந்தேகமாக “நிவாஷினி….!!!” -என்று ராகமிழுக்க.

அதற்கு நிவாஷினியோ  “யோகதர்ஷினி…!!” என்று எதிர் ராகம் போட.

“தக்காளி ஏன் அம்மணமா ஒடுதுன்னு தெரியுமா?!” -என்று யோகா கேட்டாள்.

“தக்காளியா?! அது எலினுல சொல்லுவாங்க!!” -என்று தனது அதி முக்கியமான சந்தேகத்தை நீவாஷினி கேட்க யோகா வெளிப்படையாகவே தலையை அடித்துக்கொண்டாள்.

“மண்டு… மண்டு…! இப்போ ரொம்ப முக்கியம்!! எலியா இருந்தா என்ன…? தக்காளியா இருந்தா என்ன? இப்போ அதுவா முக்கியம்? எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு” -என்று கோபத்தில் ஆரம்பித்து சந்தேகத்தில் முடித்தாள் யோகா.

“எனக்கும் அப்படித்தான் தோணுது! மஹா  என்னமோ நம்ப கூட தான் இருக்கா… ஆனால்…ஹ்ம்ம்… சம்திங் இஸ் ராங் !” -என்று முடித்தாள் நிவாஷினி. “இரு… சரக்கு முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்!!! பார்ப்போம்” -என்று யோகா கூற இருவரும் வேறு வழியின்றி நூலகத்தை நோக்கிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content