மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil kavidhaigal: Monisha kavidhaigalவேண்டுமடிPost ReplyPost Reply: வேண்டுமடி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on October 22, 2019, 4:11 PM</div>வேண்டுமடி ஒருவன் இரும்பினை ஒத்த கைகளால் எனக்காக பூங்கொத்தினை ஏந்திட வேண்டுமடி! பாறையான மார்பகத்தில் பளிங்கினை போன்ற இதயம் வேண்டுமடி! பார்வதியின் பதி போல பாதியாக அவனுள் நான் வேண்டுமடி! கண்களாலும் பிறப் பெண்களை தீண்டிடாத உள்ளம் வேண்டுமடி! பறவையாய் நானிருக்க அவன் வானமாய் விரிந்திட வேண்டுமடி! ஆசையானாலும் மீசையானாலும் அதில் ஒரு அழகான நேர்த்தி வேண்டுமடி! கடலென நிரம்பிய நம்பிக்கையும் அதில் ஓயாத அலையென மோதிடும் அன்பும் வேண்டுமடி! நிறத்தில் கண்ணனாகவும் என்னை மட்டும் சுற்றும் கள்வனாக வேண்டுமடி! இராஜ்ஜியங்கள் மாறி பூஜ்ஜியங்களாய் போனாலும் புன்னகை செய்திட வேண்டுமடி! தங்க ஆபரணங்கள் வேண்டாத சொக்க தங்கமாய் ஒருவன் வேண்டுமடி! என் முதல் காதலான தமிழின் மீது அவனுக்கும் தீராத பற்றுதல் வேண்டுமடி! அருமையோ, வெறுமையோ என் கவிதைகளை படித்து குறை சொல்ல வேணும் சற்று ஆர்வமும், பொறுமையும் வேண்டுமடி!</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா