மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Vithai panthuVithai panthu-5Post ReplyPost Reply: Vithai panthu-5

Quote from monisha on January 23, 2020, 10:53 PM

5

அறம்
இந்த தலைப்பு அவ்வை பாட்டியின் ‘அறம் செய்ய விரும்பு’ல இருந்து எடுத்ததில்லை. ஜெயமோகனின் அறம் என்ற சிறுகதையிலிருந்து சுட்டது. சமீபமாகத்தான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இருப்பினும் முன்பே பலரால் அந்த புத்தகத்தின் சிறப்பை கேட்டறிந்திருக்கிறேன். ‘என்ன பா இன்னும் நீ அறம் படிக்கலையா?’ இப்படியான கேள்விகளை எதிர்கொள்ளும் போது, ‘அப்படி என்னடா அப்பேர்ப்பட்ட புத்தகம்னு’ ஆச்சரியப்பட வைத்தது அந்த அறம்! ஆனால் முதன்முதலில் நான் அறம் பற்றி கேள்விப்பட்டது சஷி அக்காவின் வாயிலாகத்தான். இரண்டு வருடம் முன்பு அந்த அறம் சிறுகதையிலிருந்த ஒரு வசனத்தை என்னிடம் சொன்னார். வசனம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு எழுத்தாளனுக்குள்ளும் கர்வம் புகட்டும் உயிரோட்டமான உணர்வுகள் அவை. அப்போது முடிவு செய்தேன். இதை நாம் படித்தே ஆக வேண்டும். அப்படியென்ன வசனம் அது? அதுதான் விதைபந்துடைய இன்றைய பதிவின் final touch… வாருங்கள்… தொடர்ந்து பயணிப்போம். அறம் பற்றி சொல்வதற்கு முன்னதாக முந்தைய பகுதியின் விட்டகுறை தொட்ட குறை ஒன்று இருக்கிறதே. எனக்குள் இருந்த விதை விருட்சமாக மாற முக்கிய பங்காற்றிய அந்த புத்தகம் FIRST BOOK அப்படியென்ன இந்த புத்தகத்திலிருந்தது??? இந்த கேள்விக்கான பதில் அனுபவங்கள்… நூற்றுக்கணக்கான எழுத்தளார்களின் அனுபவங்கள். ஒவ்வொரு வார்த்தைகளின் எனக்குள் உறைந்திருந்த எழுத்தாளனை தட்டி எழுப்பியது. அவற்றிலிருந்து சில வரிகள் உங்களுக்காக //Practical tips from Best-Selling authors on writing your First Book// Research well before you write “Research. Do it! Don’t Assume you know something because there will always be an expert out there to shoot you down if you get it wrong. Always Go back to original sources if you can” - Charolette Betts(Fashion designer authored four books) “Don’t just plan to write- write. It is only by writing. Not dreaming about it, That we develop your own style” – P.D. James(English crime writer) “Don’t worry too much about having the perfect idea or the perfect time. There’s no such thing. Start getting things down and tweak them”-Sarah Franklin author “Start blog and a twitter account- they are a great way to keep writing and a fantastic way to connect and keep in touch with other writers and help you feel less “alone” through the writing process”-Hazel Gaynor Ireland author “find your best time of the day for writing and write. Don’t let anything else interfere. Afterward it won’t matter to you that the kitchen is a mess”-Esther Freud “Writing is like a muscle-the more you use it, the more limber you become”-Martina Devlin Bestselling author “Write all the time. Quantity produces Quality. If you only write few things, you’re doomed”-Ray Bradbury American writer “Be proud of your achievements. Many people talk about writing books but few reach THE END” – Mary Malone author “The best book writing tip is to write like you speak!”-Jenna McCarthy author “For a thriller the most important thing is pace. You need to draw your reader in fast- preferably on the first page- keep them turning to the end. Make sure chapter finishes in a way that compels them to read another page, even if its already two in the morning! That doesn’t mean a cliff-hanger. Sometimes Something subtle but ominous works just as well”- Guysavuille author “Start telling the stories that only you can tell, because there’ll always be a better writers than you and there’ll always be smarter writers than you. There will always be people who are much better at doing this or doing that- but you are the only YOU” – Neil Gaiman English author //The purpose of your book is to convey your thoughts or to narrate a story. Not to impress your readers with your knowledge of English vocabulary// (இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்) “where you have a choice, use the short word instead of the long one. Keep your paragraphs relatively short”-V.S. Naipaul Indian writer “Be honest with yourself. If you are no good, accept it. If the work you are doing is no good accept it”-Jeanette Winterson written 22 more books won whitebread prize for her first novel “Write with passion. Fill your paper with the breathings of your heart” -William Wordsworth இவையெல்லாம் அந்த பெருவெள்ளத்தின் சிறு துளிகள். என்னை மாற்றிய சிறுதுளிகள்… என் விதைகளில் விழுந்த சிறுதுளிகள். உனக்கு இதெல்லாம் முன்னமே தெரியாதா? இவையெல்லாம் ஒன்றும் புதிதாக இல்லை என்று கூட சொல்ல தோன்றும். முன்னமே தெரிந்த விஷயங்கள் கூட அதை யாராவது சொல்லும் போதுதான் அது தனி மதிப்பு பெறுகிறது. நம் மூளைக்குள் உறைக்கிறது. ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை’ அல்லவா? அதுவும் அந்த துறையில் சாதிப்பவர்கள் சொல்லும் போது அதன் மதிப்பே தனிதான். இன்று புதிதாக நிறைய எழுத்தாளர்கள் உருவாகிய போதும் அதில் வெகுசிலருக்கு மட்டுமே PASSION. பலருக்கும் அது TIME PASS. அவர்களின் எழுத்துக்களை வைத்தே நாம் அவற்றை பிரித்தறிய முடியும். கனவு என்பது பெரியதோ சிறியதோ? அது நம்முடைய கனவு. அதன் மீது நமக்கு ஒரு பிடித்தம் வேண்டும். கர்வம் வேண்டும். காதல் வேண்டும். இது எழுத்தளர்களுக்கு மட்டுமல்ல. பலதரப்பட்ட கனவுகளை கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும். கனவுகள் இருப்பவனுக்குதான் தேடல்கள் இருக்கும். அந்த தேடலின் மூலமாக நாம் நிறைய பெறுவோம். எதை எடுத்து கொள்ள வேண்டும். தூக்கியெறிய வேண்டுமென்பதெல்லாம் நம்முடைய சாய்ஸ். அப்படியான என் தேடலில் கிடைத்ததுதான் இந்த FIRST BOOK. அப்படி உங்கள் கனவுகள் மெய்ப்பிக்கும் புத்தகங்களும் கூட எங்காவது இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கும். விடாமல் தொடர்ந்து தேடுங்கள். படியுங்கள்! இறுதியாக இந்த கனவு, தேடல், காதல் எல்லாம் கடந்து நம் சொல்லிலும் செயலிலும் ஓர் அறம் வேண்டும். அறம் என்பது வெறும் மூன்று வார்த்தை. சிறிய சொல். ஆனால் அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆராய்ந்தால் இந்த பூமிபந்தே சிறியதாகி போகும். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவர்கள் எழுத்தின் மீது நிச்சயம் காதல் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் எழுதுவதும் காதல்தான். ஆனால் நான் அதை குறிப்பிடவில்லை. மற்ற வேலைகள் போல் எழுத்தில் வெற்றி என்பது பணம் அல்ல. கேட்டாலும் அது கிட்டாது. ஒரு வேளை எழுத்தை காதலாக அல்லாது காமச்செயலாக செய்பவனுக்கு வேண்டுமானால் அது கிட்டுமோ என்னவோ? இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் தன் எழுத்துக்களுக்கான அங்கீகாரத்தை தேடித்தான் ஓடி கொண்டிருக்கிறான். அந்த நீண்ட ஓட்டத்தில் சிலர் துவண்டு பாதியிலேயே நின்று போகிறார்கள். எல்லாமே அவரவர்களின் மனஉறுதியை பொருத்ததுதான். ஆனால் உண்மையிலேயே தன் எழுத்தின் மீது காதலும் கர்வமும் கொண்டவன் அப்படி துவண்டு போக மாட்டான். அதனை உணர்த்தும் வரிகள்தான் அறம் சிறுகதையில் இடம்பெற்றது. “லட்சுமி வருவா போவா… ஆனா சரஸ்வதி ஏழு சென்மம் பார்த்துதான் கண்ணு பார்ப்பான்னு சொல்வாங்க” காசும் பணமும் வரும் போகும். ஆனால் எழுத்து ஞானம் அத்தனை சுலபமாக கிட்டிவிடுவதில்லை. சரஸ்வதி நம்மை பார்க்க ஏழு ஜென்மம் வேண்டுமாம். அப்படியான எழுத்து ஞானம் கொண்ட நாம் கர்வப்பட்டு கொள்ள கூடாதா? ஆனாலும்… படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்கள் என்று ஆகிவிட முடியாது. அது போல… எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் என்று ஆகிவிட முடியாது. எவன் ஒருவன் அந்த எழுத்தை அறத்தோடு செய்கிறானோ அவனே எழுத்தாளனாகிறான். அந்த அறத்தை பின்பற்றாத எழுத்தும் எழுத்துக்களும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கவல்லது. அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் ரவிவர்மனின் ஓவியம்! தாசிகளை வைத்து அவர் பெண்தெய்வங்களை வரைந்ததாகவும் அந்த ஓவியங்களைதாம் நாம் பக்தியோடு பூஜையறையில் வைத்து வணங்குகிறோம் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பினும் அதில் வியந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஒரு சிறிந்த கலைஞன் நினைத்தால் தாசியை கூட தெய்வமாக மாற்றி வழிப்பட வைக்க முடியும். அதே போல தெய்வத்தையும் தாசிகளாக மாற்றிவிட முடியும். ஆனானப்பட்ட சரஸ்வதியும் இதில் அடக்கம்தான். நான் சொல்வது சரியாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எழுத்து, சிந்தனை, செயல் இந்த மூன்று வார்த்தைகளும் ‘அறம்’ என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கிவிட்டால் எல்லாம் நலமே! தொடர்ந்து விதைப்போம்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா