மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET- 31Post ReplyPost Reply: Monisha's VET- 31

Quote from monisha on December 16, 2021, 8:28 PM

31
ஆதி அவன் பெயரை உச்சரித்த மறுகணமே விஷ்வாவின் பார்வை சீறும் பாம்பை போல அவள் புறம் படமெடுத்தது. நல்ல வேளையாக அதற்குள் அந்த அறையினுள் ஒரு பெண் செவிலியர் நுழைய அவன் தன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான். "விழிச்சிட்டீங்களா?!" என்று ஆதியைக் கேட்டபடி அப்பெண் அவள் உடல்நிலையைச் சோதித்தாள். பின்னர் விஷ்வாவின் புறம் திரும்பி, "அவங்க ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல்தான்... அவங்களை நீங்க அழைச்சிட்டுப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு" என, அவன் முகம் கடுகடுத்தது. "அதுக்குள்ளயா? ஒரு இரண்டு நாளாவது அட்மிட் பண்ணுங்க" என்றவன் கூற, "எதுக்கு… உஹும் அதெல்லாம் வேண்டாம்" என்று ஆதி அவசரமாக மறுத்தாள். அப்போது அந்த நர்ஸ், "அதெல்லாம் அவசியமில்லை... ஜஸ்ட் விழுந்த அதிர்ச்சியில அன்கான்ஷியஸ் ஆயிட்டாங்க... அவ்வளவுதான்... மத்தபடி அவங்க நல்லாதான் இருக்காங்க" என்று ரிப்போர்ட்ஸை அவனிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்டவன், “அவ நல்லா இருக்கிறதுதான் பிரச்சனையே" என்று புலம்பியபடி அறையை விட்டு வெளியேற, ஆதி அவனைப் பின்தொடர்ந்தாள். அவர்கள் இருவரும் வீட்டை அடையும் வரை அவன் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. வீட்டை அடைந்ததும் விஷ்வா யாரையும் கவனிக்காமல் நேராக தன் அறைக்குள் நுழைந்துவிட்டான். 'கோபம் வந்தா ஒன்னு பேசி டார்ச்சர் பண்ணுவான்… இல்ல பேசாம டார்ச்சர் பண்ணுவான்' என்று எண்ணிக் கொண்டே அவள் உள்ளே வர, விஷ்வாவின் தந்தை கருணாகரனும் தாய் சாரதாவும் அவளிடம் நடந்தவற்றைக் குறித்து விசாரித்தனர். "ஜஸ்ட் பைக் ஸ்கிட்டாயிடுச்சு அங்கிள்...மத்தபடி ஐம் ஆல்ரைட்... இதுக்கு போய் அந்த விஷ்வா மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டான்" என்றாள். இருவரும் புன்னகைக்க சாரதா அவளிடம், "அவனுக்கு உன் மேல அவ்வளவு இஷ்டம்மா! உனக்கு ஒன்னுன்னா அவனால தாங்க முடியாது" என்றார். அந்த ஒரு காரணத்துக்காகதானே அவன் எவ்வளவு கோபப்பட்டாலும் தாங்கிக் கொள்ள நேர்கிறது என அவள் பெருமூச்சுவிட்டபடி அறைக்குள் நுழைய, அவனோ உடையெல்லாம் மாற்றி படுக்கையின் மீது அமர்ந்திருந்தான். அவன் கோபத்திற்கான காரணம் அவளுக்குத் தெரியாமல் இல்லை. அந்த சிலைக்கடத்தல் கட்டுரையை அவள் பிரசுரித்தால் உன் மனைவியைக் கொன்றுவிடுவோம் என ஒரு வாரம் முன்பு விஷ்வாவின் கைப்பேசியில் வந்த மிரட்டல் அழைப்பு... அது குறித்து அவன் அவளிடம் சொல்லி எச்சரிக்கை விடுக்க, அவள் இதெல்லாம் தன் வேலையில் இயல்பெனச் சொல்லி சமாளித்துவிட்டாள். அன்று நடந்த சில மணிநேர வாக்குவாதத்திற்குப் பின்னர் அவளின் சாதுரியமான பேச்சால் அவனுமே சமாதானமடைந்தான். ஆனால் இப்போது நிலைமை அவள் சொன்னதற்கு எதிர்மறையாய் நிகழ்ந்திருந்தது. ஆதி மெல்ல அவன் தோள்களில் கை வைத்து, "விஷ்வா... நான் சொல்றதைக் கேளு" என்று சொல்லும் போதே அவன் அவள் கரத்தைத் தட்டிவிட்டு எழுந்து நின்று கொண்டான். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க, "என்கிட்ட பேசவே பேசாதே" என்று அழுத்தமாய் உரைத்தான். உலகத்தின் அத்தனை கோபத்தையும் மொத்தமாய் குத்தகை எடுத்தவனைப் போல ஒரு பார்வை... அந்த நொடி கொஞ்சம் அரண்டு போனவள், தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகள் வராமல் திணறினாள். அவன் ஓரிடத்தில் நில்லாமல் அப்படியும் இப்படியுமாய் நடந்து அவனின் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றும் சாத்தியப்படவில்லை. "விஷ்வா... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் சொல்றதை... ஒரே நிமிஷம் கேளு" என்றவள் தவிப்புடன் கூற, நின்று அவள் முகம் பார்த்தவன், "ஹ்ம்ம்ம்.. சொல்லுடி... நீ சொல்றதுக்கு இன்னும் என்னவெல்லாம் கதை இருக்கோ... எல்லாத்தையும் சொல்லு" என்றான். அவனின் குரல் ஒலித்த தொனியிலேயே அவள் விக்கித்து போயிருக்க அவனே தொடர்ந்தான். "கொஞ்சங் கூட பயமே இல்லையாடி உனக்கு... நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதைதான் செய்வ... அப்படிதானே" என்று கேட்டான். அவன் பேசும் போதே அவன் கரத்தில் ஒரு நடுக்கம். அவளுக்கு என்னவானதோ என்ற பதட்டத்தில் உண்டான நடுக்கம், இன்னுமே அவனுக்குக் குறையவில்லை என்பதை உணர்ந்தவள் அவன் கரத்தைப் பற்றவும் அவன் உதறிவிட்டு சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டான். திருமணமாகி ஒரு வருடம் முடிவுற்ற நிலையிலும் அவன் கோபம் இம்மியளவு கூட மாறுபடவில்லை. அவள் மூச்சை இழுத்துவிட்டு, "நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல விஷ்வா... ஜஸ்ட் பைக் ஸ்கிட்டாயிடுச்சு" என்றாள். அவன் முகத்தில் ஏளனமான புன்னகை வெளிப்பட்டது. "வெளியே அவங்களை ஏமாத்தன மாதிரி என்னையும் ஏமாத்தலாம்னு பார்க்ககிறியா... இந்த விஷ்வாவை என்ன இளிச்சவாய்னு நினைச்சியா?!" "இல்லடா... உண்மையாதான்" என்று அவள் சொல்லும் போதே, "எது உண்மை? நீ ஸ்கிட்டானதா? நீ எப்படி டிரைவ் பண்ணுவன்னு எனக்கு தெரியாதாடி... திரும்ப திரும்ப என்னை முட்டாளா மாத்தாத்தே... சொல்லிட்டேன்" என்றவன் கோபமாகப் பேசிய போதும் அவள் நிதானமாக அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள். "ஏன் விஷ்வா புரிஞ்சிக்க மாட்டிற... என் வேலையில இதெல்லாம் சகஜம்... இதுக்கு எல்லாம் பயந்துட்டா... சில சமூக விரோதிகளை எப்படி மக்களுக்கு அடையாளம் காட்ட முடியும்" என்றவள் எடுத்துரைக்க, அவனுக்கு உள்ளம் குமிறியது. "உன் சமூக அக்கறையெல்லாம் சரிதான்... ஆனா இப்படி உயிர் போற அளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமா ஆதி?” என்றான். "எனக்குதான் எதுவும் ஆகலையே... அப்புறம் என்ன?" என்று அவள் கேட்கவும் அவன் முகம் சிவக்க, "ஆயிருந்தா? !" என்று பதிலுக்குக் கேட்க, "நீ ஏன் இப்படி நெகட்டிவ்வாவே திங் பண்ற... அம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க... எப்பவுமே பாஸ்ஸிட்டிவ்வாதான் திங் பண்ணனும்னு” என்று அவள் தெளிவுப்படுத்தினாள். அவன் கைகளைக் கட்டிக் கொண்டு எகத்தாளமான பார்வையுடன், "சொல்றதெல்லாம் ரொம்ப ஈஸிதான்... என் இடத்தில நின்னு பாரு தெரியும்" என, அந்த கணம் அவள் முகத்திலும் கோபம் துளிர்விட்டது. "மறந்து போச்சா விஷ்வா உனக்கு... கத்தி குத்துப்ட்டு நீ சாக கிடந்தியே... அன்னைக்கு நீ பிழைச்சுக்கணுங்கிற எண்ணத்தைத் தவிர வேறெதுவும் நான் நினைக்கல... அந்த நம்பிக்கைதான் உன்னை காப்பாத்துச்சு நான் இப்பவும் நம்புறேன்..." என்றாள். "எல்லாம் சரி... ஆனா அன்னைக்கு என்னைக் குத்தின கத்தி எனக்கு குறியாய் வந்ததா?... சொல்லு" என்று கேட்க அவள் மௌனமானாள். "பிரச்சனையை எல்லாம் வாலன்ட்டியரா இழுத்துவிட்டுக்கிறது நீதான்... உலக நியாயம் எல்லாம் பேசுற உனக்கு... ஏன் என் வலி புரிய மாட்டேங்குது?! உன் வேலைக்கும் உன் விருப்பத்திற்கும் நான் சப்போர்ட்டிவ்வா இருக்கணும்... ஆனா என் ப்லீங்ஸுக்கு நீ மதிப்பே கொடுக்கமாட்ட... அப்படிதானே?" என்று அவன் கோபாவேசத்துடன் வினவினான். “சரி.. இப்ப நான் என்னதான் பண்ணனும்ங்கிற?!" என்றவள் பொறுமையாகக் கேட்கவும், கோபமெல்லாம் மாறி யோசனையாய் நின்றவன் அமர்த்தலாகவே உரைத்தான். "ஜர்னலிஸத்தை விட்டுடு ஆதி... எனக்காக... ப்ளீஸ்ஸ்ஸ்" அப்படியே அதிர்ந்து நின்றவள் மேலே எதுவும் பேசாமல் மௌனமானாள். வெகு நேரம் பொறுமை காத்தவன் பின் எரிச்சலான பார்வையோடு, "எனக்கு தெரியும் ஆதி... உன்னால அது முடியாது... ஏன்னா உன் சுயஅங்கிகாரம் பாதிக்கப்படும்... அப்படிதானே?" என்று கேட்டான். அவள் பதில்பேசாமல் உணர்வற்று பார்த்து 'ஆமாம்' எனத் தலையசைத்தாள். அந்த கணமே அவன் சத்தமாக, "தென் யூ கில் மீ டேமிட்" என்று கத்திவிட்டான். அவள் பதட்டமடைந்து, "விஷ்வா... ப்ளீஸ் காம் டவுன்… வெளியே அங்கிள் ஆண்ட்டி இருக்காங்க" என்று கூற, அவனோ நிறுத்துவதாக இல்லை. "ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு என்ன ஆகிடுமோன்னு நான் பயந்து பயந்து சாகிறதை விட... இட்ஸ் ஃபார் பெட்டர்... யூ கில் மீ" என்று அவன் ஆக்ரோஷமாக சொல்லிக் கொண்டே அவள் தோள்களைப் பற்றி உலுக்கவும், அவனை அமைதிப்படுத்த எண்ணியவள் அவன் சட்டையைப் பற்றி தன்னருகில் இழுத்து அவன் இதழ்களை அவளின் இதழ்களால் அழுந்த மூடிவிட்டாள். எதிர்பாராத அவளின் அந்த முத்தத்தால் தன்னிலையை இழந்து மீளமுடியாமல் ஆழமாய் அவளோடும்... அவளின் இதழோடும் மூழ்கித் திளைத்திருந்தவனை, அவள் சமன்படுத்தி விலக்கிவிட எத்தனிக்க அவன் தன் கரத்தால் அவளை பின்னிருந்து வளைத்துக் கொண்டு அவளை விலகிப் போகவிடாமல் தன் அணைப்புக்குள் கிடத்திவிட்டான். வாய்த்த சந்தர்ப்பத்தை அவன் வெகு சமார்த்தியமாய் பிடித்துக் கொள்ள, இப்போது அவள் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள். முதல் பாதியில் அவன் அவள் வசமிருக்க, அடுத்த பாதியில் அவள் அவன் வசம் இருந்தாள். கோபம்... காதல்... காமம்... என அவனின் எல்லா உணர்வுகளோடும் அவள் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அந்த முத்தம் நீண்டு கொண்டேயிருந்தது. இறுதியாய் அவள் அவனிடமிருந்து போராடி விடுபடவேண்டியதாய் போயிற்று. விஷ்வாவின் முகம் மலர்ந்திருக்க அவன் உதட்டில் கல்மிஷ்மான புன்னகை வழிந்தோடியது. அவன் முற்றிலுமாய் வேறு பரிமாணத்திற்கு மாறியிருந்தான். மாறியிருந்தான் என்று சொல்வதை விட அவளின் முத்தம் மாற்றியிருந்தது. ஆனால் அவளோ அவனை முறைப்பாய் பார்த்திருந்தாள். அவளைச் ஏறஇறங்க பார்த்தவன், "ஏ ஆதி... நான் கில் மீ... ன்னுதானேடி சொன்னேன்... கிஸ் மீன்னு சொல்லவே... இல்லையே" என்று கேட்டுப் பரிகாசமாய் புன்னகை புரிய அவள் கோபமாய் திரும்பிக் கொள்ள அவன் அவள் முன்னே வந்து நின்று, "பரவாயில்லை டியர்... சின்ன மிஸ்அண்டர்ஸ்டான்டிங்தான்... இட்ஸ் ஓகே" என்றான். அவள் எரிச்சலோடு, "டே விஷ்வா... இரிடேட் பண்ணாதே... போயிடு" என்று அவனிடமிருந்து விலகி நடந்தாள். அவன் பின்னோடு அணைக்க எத்தனிக்க உதறிவிட்டவள், "ராஸ்கல்... என்ன பேச்சு பேசிட்ட நீ... வந்த கோபத்துக்கு செவுல்ல ஒன்னு விட்டிருப்பேன்... நீ அப்புறம் லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சிடுவ... அதான் வேறவழியில்லாம நான் உன்னை கன்ட்ரோல் பண்ண இப்படிச் செய்ய வேண்டியதா போயிடுச்சு" என்றாள். அவன் சிரிப்பு தாளாமல், "ஓ... அப்போ இது களவியல் முத்தமில்ல... உளவியல் முத்தம்... இதுக்காகவே அடிக்கடி கோபப்படலாம் போலயே" என்று அவன் கிண்டலாகக் கூற, அவள் கோபம் உச்ச நிலையை எட்டியிருந்தது. பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டாள். அவன் சிறிதும் அதிர்ச்சியுறாமல் சிரித்தவன், "இது யூஸ்வல்தான்... பட் முன்னாடி கொடுத்ததுதான் அன்யூஸ்வல்" என்றான். அவள் கோபமாக அவன் சட்டையைப் பற்றிக் கொண்டு, "இன்னொரு தடவை ஜர்னலிஸத்தை விட்டுடுன்னு சொல்லி பாரு" என்று முறைக்கவும், அவன் ரொம்பவும் யதார்த்தமாய் அவள் இடையை வளைத்துக் கொண்டு, "சொன்னா என்னடி பண்ணுவ?" என்று கேட்டான். "உன்னை விட்டுருவேன்" என்றவள் சாதாரணமாகக் கூற, "நான் உன்னைக் கொன்னுடுவேன்" என்றவன் பதிலுக்குக் கூறினான். இருவரின் விழிகள் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் இருவருமே கலீரென சிரித்துவிட்டனர்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா