மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 34Post ReplyPost Reply: Monisha's VET - 34

Quote from monisha on December 24, 2021, 4:27 PM

34
ரகு தன்னருகில் நின்றிருந்தவளைப் பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான். அவள் தன் கண்ணீரைத் துடைத்தபடி, "நான் பேசுறது கேட்குதா?" என்று கேள்வி எழுப்பினாள். அவளை அங்கே எதிர்பாராதவன் குழப்பமடைந்தான். அவன் கேட்ட வார்த்தைகள் இன்னும் அவனைக் குழப்பிவிட்டது அவள் முகத்தை அவன் ஆழமாகப் பார்த்திருக்க, "ரகு... ஏதாச்சும் பேசுங்க" என்றவள் தவிப்புடன் கூறவும் அவன் மெல்ல பேசத் தொடங்கினான். "தமிழ் எங்கே தேவி?" என்று கேட்டபடி அந்த அறையைச் சுற்றி விழிகளை அலைபாயவிட, தேவி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். அவன் நல்லபடியாக இருக்கிறான் என்று நிம்மதி கொண்டவள் பொய் கோபத்துடன் அவனைப் பார்த்து, "பக்கத்தில நிற்கிற நாங்கெல்லாம் மனுஷங்களா தெரியலயா?" என்று வினவ, அவன் விழிகள் ஆச்சரியத்துடன் விரிந்தன. அவளின் பேச்சும் அவள் பார்வையும்… அவன் கரத்தை ஆதரவாகப் பிடித்து கொண்டிருக்கும் அவள் கரமும் அவனுக்கு ரொம்பவும் புதிதாய் இருந்தது. சற்று கூர்மையாய் அவளைப் பார்த்தவன் லேசான புன்னகையோடு, "மனுஷங்களா தெரியலயே" என்றான். "அப்படின்னா வேறெப்படி தெரியுறேன்” என்றவள் முகம் சுருங்க, "எனக்கு உயிர் கொடுக்க வந்த தேவதை மாதிரி தெரியுற" என்றான். அழுது சிவந்திருந்த அவள் முகம், அவன் சொன்ன வார்த்தையால் பளீரென்று பிரகாசித்தது. அவன் யோசனையோடு, "அப்போ நீதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் காதுல ஐ லவ் யூன்னு சொன்னதா?!" என்று கேட்க அவள் பதற்றமடைந்தாள். அவள் விழிகள் அலைபாய்ந்து கொண்டிருக்க, "உங்க அக்காவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிது... என்னைக் கொன்னு புதைச்சிடுவா" என்றான். இத்தனை நேரம் மௌனம் காத்தவள் இப்போது சட்டென்று, "அக்காவுக்குத் தெரியுமே... நான் சொல்லிட்டேன்" என்றதுமே அவள் தன்னை விரும்புகிறாள் என்பது அவனுக்கு ஊர்ஜிதமானது. "சரி... அம்மா எங்கே?" என்றவன் உடனடியாகப் பேச்சை மாற்ற, "அம்மாவை இப்பதான் அண்ணானோட சாப்பிட அனுப்பி வைச்சேன்" என்றாள். "அண்ணனா... யார்? அந்த ரவியா? அவன் வந்திருக்கானா?" "ம்ம்ம்" "அவன் ஏன் இங்க வந்தான்?" "நீங்க ஏன் இப்படி கேட்கிறீங்கன்னு புரியுது... நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... அண்ணா ரொம்ப மாறிடுச்சு" அவன் அந்த நிலையிலும் ஏளனமாய் புன்னகைத்தபடி, "ஹ்ம்ம்... நம்புற மாதிரி எதாவது சொல்லு தேவி" என்றான். அந்த வார்த்தைகள் அவனுக்கு ரவி மீதிருந்த வெறுப்பைச் சுட்டிக்காட்டியது. "நம்ப முடியாதுதான்... ஆனா சில விஷயங்கள் நம்புற மாதிரி நடந்துச்சு" என்றவள் நடந்த விவரங்களைச் சுருக்கமாகச் சொல்லி முடிக்க ரகுவிற்கு தன் தோழிக்கு நடந்த அநியாயத்தை எண்ணி கண்ணீர் பெருகிற்று. "தமிழ் ரொம்ப பாவம்" என்றான். "ம்ம்ம்ம்... ஆனா மாமா எல்லாத்தையும் சமாளிச்சிட்டாரு" என்று தேவி உரைக்க , "என்ன பெருசா சமாளிச்சாரு? உங்க மாமா... மட்டும் ரவியை அரெஸ்ட் பண்ணி இருந்தா... இரண்டு குடும்பமும் பிரிஞ்சுருக்கும்... அவங்க கல்யாண உறவு ஒன்னுமில்லாம ஆயிருக்கும்... யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராம... எல்லா கஷ்டத்தையும் தானே தாங்கிக்கிட்டு தமிழ்தான் எல்லாத்தையும் ஹேண்டில பண்ணி இருக்கா" என்றான். தன் தோழி மீது அவன் கொண்ட மரியாதையைத் தேவி வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்க அவன் அப்போது பழைய நாட்களை நினைவு கூர்ந்தவன், "உனக்கு தெரியுமா தேவி? ஒரு தடவை ஒரு ரன்னிங் ரேஸ் காம்பிட்டீஷ்னல நான் ஜெய்க்கணும்ங்கிறதுக்காக ரொம்ப சுயநலமா எனக்கு ஈக்வலா ஓடி வந்தவளை லாஸ்ட் மினிட்ல தள்ளிவிட்டுட்டு வின்னிங் பாயின்ட் ரீச் பண்ணிட்டேன்... அப்போ எல்லோரும் தமிழ்கிட்ட எப்படி விழுந்தன்னு கேட்டதுக்கு அவ என்னை பத்தி சொல்லாம தானாதான் விழுந்திட்டன்னு பொய் சொல்லிட்டா... அவளுக்கு யார் கெட்டது செஞ்சாலும் கூட... அவ எப்பவுமே எல்லோருக்கும் நல்லது மட்டும்தான் நினைப்பா.. அதான் அவளோட கேரக்டர்" என்று தன் தோழியின் செயலைச் சொல்லிப் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வீரேந்திரன் அந்த அறைக்குள் நுழைந்தான். தேவியின் விழிகள் அவனைக் கவனிக்க, அவள் பார்வை போன திசையில் ரகுவும் கொஞ்சம் சிரமப்பட்டு கழுத்தை திருப்பினான். பேன்ட் பேக்கெட்டுகளில் தன் கரங்களை நுழைத்தபடி வந்தவன் தேவியைப் பார்த்து, "தேவி...நீ எப்படி இங்கே? ஆமாம் யாரு இந்த சார்? உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா?!" என்று கேட்டான். அவள் பார்வையில் ஒருவித அலட்சிய தொனி! இருவருமே ஸ்தம்பித்து இருக்க மீண்டும் அவன் தேவியிடம், "என்ன தேவி? பதில் சொல்லாம நிற்கிற... யாருன்னு சொல்லு... நானும் தெரிஞ்சிப்பேன் இல்ல" என்றான். தேவி புரியாமல் பார்க்க, ரகுவிற்கு அவன் என்ன எண்ணிக் கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறேன் என்பது குழப்பமாக இருந்தது. வீரேந்திரன் இன்னும் அழுத்தமாக, "யாருன்னு சொல்லு தேவி?" என்றான். அவள் அச்சத்தோடு, "அது வந்து... ரகு... அக்காவோட ஃப்ரண்ட்" என்றாள். வீரேந்திரன் ரகுவைப் புதிதாய் பார்ப்பது போல, "ஹாய் ரகு... நான் வீரேந்திர பூபதி... உங்க ஃப்ரண்ட்டோட... ஹஸ்பெண்ட்" என்றான். கடைசி இரு வார்த்தைகளும் அழுத்தமாய் வெளிவந்தது. ரகுவிற்குத் தொண்டை அடைத்தது. எச்சில் விழுங்கியபடி, "சா..ர்" என்றவனை இயல்பாய் பார்த்தபடி, "என் வொய்ஃபோட... க்ளோஸ்ஸ்ஸ்ஸ் ஃப்ரண்ட் நீங்க... நீங்க போய் என்னை ஸார்னு எல்லாம் கூப்பிடுகிட்டு... ப்ளீஸ் கால் மீ வீர்" ரகு பதில் பேசாமல் அமைதியாயிருக்க வீரேந்திரன் தேவியிடம், "ஆமாம்... தமிழ் எங்கே?" என்று கேட்டான். "அது... அக்கா வரல மாமா... நானும் ரவி அண்ணாவும்தான் வந்தோம்" வீரேந்திரன், ரகு இருவருமே அதிர்ச்சியாயினர். வீரேந்திரன் முகம் குழப்பமாய் மாற, "வரலையா... ஏன்? என்கிட்ட வர்றேன்னு சொன்னாளே?!" என்றவன் தேவியின் பதிலை எதிர்பாராமல் தமிழின் அலைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். எதிர்புறத்தில் அவளின் அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கேட்கவும் அவன் கொதிப்படைய முகமெல்லாம் கனலாய் மாறியிருந்தது. தேவி வீரேந்திரனிடம், "டென்ஷனாகாதீங்க மாமா... அக்கா வந்திடுறேன்னு சொன்னா… இப்போ வந்திருவா" என்றான். "உங்க அக்காவுக்கு என்னை டென்ஷன் படுத்துறதும் இரிடேட் பண்றதும்தான் வேலை" என்று வீரேந்திரன் புலம்ப, ரகுவின் மனமும் தமிழ் வராததைக் குறித்துத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தது. வீரேந்திரன் ஆழ்ந்த யோசனைக்குச் சென்றவன் பின் தேவியை நிமிர்ந்து பார்த்து, "நான் ரகு சார்கிட்ட தனியா பேசணும்... நீ வெளியே வெயிட் பண்ணு... அப்படியே கொஞ்ச நேரத்திற்கு யாரும் உள்ளே வர வேண்டாம்னு சொல்லு" என்றான். தேவி ரகுவை இரக்கமான பார்வைப் பார்த்தபடியே வெளியேற அந்தப் பார்வையின் பொருளை ரகு உணர்ந்து கொண்டானோ இல்லையோ… வீரேந்திரன் உணர்ந்து கொண்டான். தேவி சென்றதும் இயல்பாய் வீரேந்திரன் அங்கிருந்த இருக்கையை அவன் படுக்கைக்கு அருகில் போட்டபடி அமர்ந்து ரகுவை ஆழ்ந்துப் பார்த்தான். உடலின் காயங்களை விட அவனது குத்தலான பார்வை ரகுவை அதிகமாய் காயப்படுத்தியது. ரகு அவனிடம் பேச எத்தனிக்கும் போதே வீரேந்திரன் முந்திக் கொண்டு, "ஆமாம்... தமிழ் உனக்கு ஃப்ரண்டு... தேவி உனக்கு யாரு?" என்று கேட்டுப் புருவத்தை ஏற்றினான். "தேவியும் எனக்கு நல்ல ஃப்ரண்டுதான்" என்று சற்றும் யோசிக்காமல் பதிலுரைத்தான் "குட்... ஃப்ரண்டுங்கிற வரைக்கும் ஓகே... பட் அந்த லிமிட்டை நீ க்ராஸ் பண்ணிடாதே" என்று சொல்லி அவன் மிரட்டலாய் ஒரு பார்வை பார்த்தான். ரகுவிற்குக் கோபம் வந்தாலும் அதனைக் காட்ட முடியாத இயலாமையில் உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தான். மேலும் வீரேந்திரனே ரகுவைப் பார்த்து, "ஆமாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் ஃப்ரண்டைப் பத்தி தியாகி லெவலுக்கு பேசிட்டிருந்த இல்ல... கெட்டது செஞ்சா கூட அவ நல்லதே நினைக்கிறவளா... இதான் இத்தனை வருஷத்துல... நீ அவளைப் பத்தி புரிஞ்சுக்கிட்டதா?" என்று கேட்க "நான் அவளைப் புரிஞ்சிக்கிட்டதைப் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க... உங்களுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்?" என்று கேட்டு ரகு கோபமாக,  "ஹ்ம்ம்... எனக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்?" அவன் அலட்சிய புன்னகையோடுத் தொடர்ந்தான். "தமிழ் அவ நேசிக்கிற விஷயங்களை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டா... அதுதான் அவ கேரக்டர்... நீ அவளோட உயிருக்கு உயிரான நண்பனாச்சே... உன்னை மட்டும் அவ மத்தவங்க முன்னாடி விட்டு கொடுத்திருவாளா என்ன?" என்று சொல்ல ரகு வியப்பானான். அவன் வார்த்தையில் அத்தனை தெளிவும் புரிதலும் இருந்தது அவளைப் பற்றி. ரொம்பவும் குறுகிய நாட்கள் அவளுடன் இருந்தாலும் அவளைப் பற்றி நுணக்கமாய் அலசி இருந்தான். ரகு அமைதியாயிருக்க வீரேந்திரனே தொடர்ந்தான். "அவ லேசுபட்டவ இல்ல... அவளுக்குப் பிடிச்ச விஷயங்களை விட்டுக்கொடுக்காம இருக்க எந்த எக்ஸ்டென்ட்டுக்கும் போவா" என்று சொல்லும் போதே அவன் விழிகள் ரகுவின் விழிகளை ஆராய்ந்து பார்த்தன. ரகுவின் உணர்வுகளை வீரேந்திரனும் நுணுக்கமாய் கவனித்து கொண்டிருந்தான். அதே சமயத்தில் ரகு வீரேந்திரனின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு உள்ளர்த்தம் பொதிந்திருப்பதைக் கணித்து, "நீங்க தமிழைப் பத்தி இந்தளவுக்கு சொல்றதைப் பார்த்தா... அவளை நீங்க மனைவியா இல்ல... அக்யூஸ்ட்டை பார்க்கிற மாதிரி இருக்கு" என்று மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லிவிட்டான். அவன் நக்கலாக சிரித்துவிட்டு, "அக்யூஸ்ட்டை வேறெப்படி பார்ப்பாங்க... அப்படிதான்" என்றான். ரகுவிற்கு அவன் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்த, "நீங்க பேசுறது கொஞ்சங்கூட சரியில்ல" என்றான். ரகுவின் விழிகள் கோபத்தை உணர்த்த நிதானமாய் கால் மீது கால் போட்டு அமர்ந்தவன், "எது சரியில்ல ரகு... நீ போலீஸா இருந்துட்டு ஒரு அக்யூஸ்ட்டுக்கு துணை போறதா" என்று கேட்டான். ரகுவிற்கு தலைச் சுழன்றது. அதுவும் தன் தோழியை 'அக்யூஸ்ட்' என்று சொல்வதை தாங்க முடியாமல், "முதல்ல அக்யூஸ்ட்னு சொல்றது நிறுத்திக்கோங்க... என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட? அவளை அப்படி கூப்பிட" என்று சீற்றமாய் கேட்டான். ரகுவிற்கு வீரேந்திரனின் பதவி மேலும் அவன் திறமையின் மேலும் அளவு கடந்த மரியாதை இருக்கிறது... ஏன் கொஞ்சம் பயமும் இருக்கிறது?! ஆனால் தோழியைத் தரைகுறைவாய் பேசும் போது அவனால் தாங்க முடியவில்லை. வார்த்தைகள் கோபமாய் வந்து விழுந்தன. வீரேந்திரன் அவனின் கேள்வியையும் கோபத்தையும் பொருட்படுத்தாமல் மெச்சி புன்னகைத்தவன், "நட்புன்னா இதுவல்லவா நட்பு! ஹ்ம்ம்... ஆதாரம் கேட்ட இல்ல" என்று சொல்லியபடி தமிழின் சிங்க முகடாலரை அவனிடம் காட்டினான். ரகுவின் விழிகள் அகலவிரிய, "இது.... தமிழோட செயின் டாலர்... அதுவும் அவங்க ஃபேமிலி டாலர்... இது எப்படி ஆதாரமாகும்" என்று சந்தேகித்து கேட்க, "இந்த டாலர் தர்மா வீட்டில கிடைச்சுதே... அப்போ இது ஆதாரம்தானே" என்றான். அவன் உடனடியாய், "அதெப்படி சார்?... லாஸ்ட் டைம் இரண்டு பேரும் ஒன்னாதானே தர்மா வீட்டிற்கும் போனோம்... நீங்க இந்த டாலர் கிடைச்சதைப் பத்தி எதுவும் சொல்லவேயில்ல" என்று குழப்பமுற, வீரேந்திரன் உதடுகள் இகழ்ச்சியான புன்னகையைச் சிந்தியது. "நீ எனக்கு தெரியாம... என்கிட்ட சொல்லாம என்னெல்லாமோ செஞ்சிருக்க... ஆனா நான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்... இல்ல... தெரியாமதான் கேட்கிறேன்... நான் உனக்கு மேலதிகாரியா இல்ல நீ எனக்கு மேலதிகாரியா?!" என்றவன் அடிக்குரலில் சீற, ரகுவின் பதட்டம் கூடியது. "இத பாரு ரகு... இது வரைக்கும் நீ சொன்ன பொய்... போட்ட டிராமா எல்லாம் போதும்... எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்" ரகு புரியாமல், "எந்த உண்மை?" என்று வினவினான். "ஹ்ம்ம்ம்... டைரி பத்தின உண்மை... அந்த ரூம்ல மிஸ்ஸான ஓவியத்தைப் பத்தின உண்மை... கல்யாணத்துக்கு முன்னாடி அரண்மனைக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ் எங்க போனாங்கிற உண்மை... இதெல்லத்துக்கும் மேல தர்மாவோட கொலையைப் பத்தின உண்மை" ரகு அதிர்ந்தபடி, "நானும் தமிழும் தர்மா வீட்டிற்கு உங்களுக்கு தெரியாம போனது உண்மைதான்... அப்போ வேணா அவளோட டாலர் மிஸ்ஸாயிருக்கலாம்... பட் கொலைப் பத்தி தமிழுக்கும் சரி எனக்கும் சரி... எதுவும் தெரியாது" என்றான். "சரி தர்மா கொலை பத்தி அப்புறம் பேசுவோம்... நீ எதுக்கு தமிழை தர்மா வீட்டிற்குக் கூட்டிட்டுப் போன... இதுதான் நீ கேஸை விசாரிக்கிற இலட்சணமா?" "நீங்க நினைக்கிற மாதிரி இல்ல... தர்மா ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்... கண்டிப்பா தமிழுக்கு அவரைப் பத்தி தெரிஞ்சிருக்கலாம்... அந்த ஓவியங்களைப் பத்தி அவளுக்கு எதாவது தெரியோமோன்னு என் செல்ஃபோன்ல இருந்த அந்த ஓவியங்களோட ஃபோட்டோஸை தமிழ்கிட்ட காண்பிச்சேன்... பார்த்ததுமே நேர்ல அந்த ஓவியத்தைப் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிச்சா!" "நான்ஸென்ஸ்… அவ பிடிவாதம் பிடிச்சா நீ அவளைத் திருட்டுத்தனமா கூட்டிட்டுப் போவியா... நீ போலீஸ்ங்கிறதை மறந்துட்டியா" "அப்படி இல்ல... அவ அந்த ஓவியத்தைப் பார்த்தா ஏதாச்சும் மேட்டர் கிடைக்கும்னு தோனுச்சு" "நான்தானே அந்த கேஸ்ல விசாரணை அதிகாரி... அப்படி இருக்கும் போது என்கிட்ட சொல்லாம... நீ எப்படி அவளைக் கூட்டிட்டுப் போலாம்" "உங்களுக்குதான் தமிழைப் பிடிக்காதே... ஸோ... சொன்னா பெர்மிஷன் கிடைக்காதுன்னு" இதை கேட்டதும் அவன் முகம் கடுகடுவென மாற சரியாக அந்த சமயத்தில் டாக்டர் நர்ஸுடன் அறைக்குள் நுழைந்தார். வீரேந்திரன் அறைக்கு வெளியே காத்திருக்கும்படி பணித்ததால் அவன் வெளியேற வேண்டியதாயிற்று. அவன் தனக்குள்ளேயே, 'அவளைப் பிடிக்கலன்னு நான் எப்போ சொன்னேன்... இவங்க இரண்டு பேரும் சேர்ந்துகிட்டு இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்க வேண்டியது... இருக்கிற பிரச்சனை எல்லாம் இழுத்து விட்டுவிட்டு என்னை டார்ச்சர் பண்ண வேண்டியது... அவ வரட்டும்... இருக்கு அவளுக்கு' என்று மனைவியைத் திட்டியபடி பார்வையை தேவியின் புறம் திருப்பி, "இன்னும் தமிழ் வரலியா... கால் பண்ணிப் பார்த்தீங்களா?!" என்று கேட்டான். ரவியும் தேவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள அவன் மீண்டும், "என்னாச்சு? அவ ஏன் உங்க கூட வரல... அப்படி என்ன மேடமுக்கு முக்கியமான வேலை?" ரவி அப்போது அவன் முன்னே வந்து, "தெரியல... அக்கா எதுவும் சொல்லல... நீங்க போங்க, நான் பின்னாடியே வந்திடுறேன்னு சொன்னாங்க" என்றான். அவன் உள்ளமெல்லாம் கலக்கமுற ஆரம்பித்தது. அவள் புறப்பட்டாளா? ஏன் இன்னும் வந்து சேரவில்லை? என்று தன்னையே கேட்டு கொள்ள ரவி அவன் அருகாமையில் வந்து நின்றான். ரவி ஏதோ சொல்ல எண்ணுகிறான் என்பதை உணர்ந்து கொண்டவன் ஆவலோடு அவனை நிமிர்ந்து நோக்கினான். "காலையில... அக்காவுக்கு ஒரு லெட்டர் வந்துச்சு... அந்த லெட்டரை படிச்சதும் அப்சட்டாயிட்டாங்க... என்னன்னு ஒன்னும் தெரியல" என்றான். "என்ன லெட்டர்னு நீ பார்க்கலயா?" வீரேந்திரன் கலக்கமாய் வினவினான். "உம்ஹும்... பார்க்கல" வீரேந்திரன் அமைதியாய் யோசனையில் ஆழ்ந்துவிட ரவி மேலும், "இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்ற போது டாக்டர் அறையைவிட்டு வெளியே வந்திருந்தார். அவர் ரகுவின் அம்மாவிடம், "உங்க பிள்ளைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... சீக்கிரமே குணமாயிடுவாரு" என்றார். ரகுவின் அம்மா அவரை நன்றியோடு பார்த்து கண்ணீர் பெருக்கிட அவர் வீரேந்திரனைச் சுட்டிக் காட்டி, "உங்க பிள்ளை இப்போ நல்லாயிருக்காருன்னா ஏசிபி சாருக்குதான் அதிக பங்கு இருக்கு" என்றார். ரகுவின் அம்மா நெகழிச்சியோடு வீரேந்திரனின் கரத்தைப் பிடித்து கண்ணீரில் நனைக்க அவன் வார்த்தைகளின்றி நின்றான். வீரேந்திரன் தேவியிடம் தன் பார்வையால் அவரைச் சமாதானம் செய்யச் சொல்ல, அவள் அவரை அமைதியடையச் செய்தாள். வீரேந்திரன் ரகுவிடம் தான் கேட்டறிந்து கொள்ள எண்ணியதை முழுமாய் கேட்க அறைக்குள் நுழைந்தான். ரகு அவனைப் பார்த்ததும், "தேங்க்ஸ்... நீங்கதான் ரொம்ப சிரமப்பட்டு" என்று சொல்லி நன்றியுரைக்க எத்தனித்தவனைக் கையமர்த்தி, "அவசரப்பட்டு தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதே... நீ செஞ்ச வேலைக்கு உனக்கு அப்போ ஆக்ஸிடென்ட் மட்டும் ஆகியிருக்கல... நீ என் கையில அடிவாங்கி இதே மாதிரி அட்மிட் ஆகியிருப்ப" என்றான். ரகுவிற்கு அவன் எத்தகையவன் என்பதைக் கணிக்க முடியவில்லை. அவன் படுக்கைக்கு அருகில் வந்தவன், "உண்மையைச் சொல்லு... தர்மா கொலை கேஸுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்" என்று கேட்டான். "நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல... அன்னைக்கு தமிழை தர்மா வீட்டுக்குக் கூட்டிட்டு போனது கூட கேஸ்ல ஏதாச்சும் க்ளூ கிடைக்குமான்னுதான்... ஆனா தமிழ் டைரியை எடுத்தது எனக்கு தெரியாது... நீங்க டைரியைப் பத்தி கேட்டபோதுதான் நானே அதை கவனிச்சேன்!" "கேஸ் பத்தி க்ளூ கிடைக்கும்னு நீ அவளைக் கூட்டிட்டுப் போன... கடைசில அவ உன்னை காலை வாரி விட்டுட்டா... பார்த்தியா?!" என்றவன் எகத்தாளமாய் பார்க்க, அவர்களின் நட்பின் இணைப்பை உடைத்துப் பார்க்க வேண்டும் என்ற பேராசையும் அந்த வார்த்தையில் இருந்தது. ரகு மௌனமானான். இலக்கு என்று வந்துவிட்டால் நட்பு என்பதைப் பற்றி எல்லாம் இருவருமே கவலை கொள்வதில்லை. அப்படியான ஏதோ ஒரு முக்கியமான எண்ணத்தோடுதான் தமிழ் வந்திருப்பாளோ என்று ரகு தீவிரமாய் சிந்திக்க, அன்று நடந்தவற்றை நினைவு கூர்ந்தான். உடனே அவன் வீரேந்திரனை நோக்கி, "அன்னைக்கு... தமிழ் அந்த ஓவியத்தைப் பார்த்து அவங்க முன்னோர்களோட கதைன்னு அவங்க தாத்தா சொன்னதா சொன்னா" என்றான். வீரேந்திரன் ஆவலோடு, "என்ன ஏதுன்னு சொன்னாளா?!" என்று கேட்க, இல்லை என்பது போல் ரகு தலையசைத்தான். "அதானே... அவகிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் ஒரு மேட்டரை வாங்க முடியாது... சரி அந்த மிஸ்ஸான பெய்னிட்ங்" "தமிழுமே நீங்க சொன்ன மாதிரி ஏதோ ஒரு பெய்ன்டிங் மிஸ்ஸாகுதுன்னு சொன்னா... ஆனா என்னவாயிருக்கும்னு எதுவும் சொல்லல" வீரேந்திரன் ஆழ்ந்த சிந்தினையில் மூழ்கிவிட ரகு அவனிடம், "நீங்க யோசிக்கிற மாதிரி தமிழுக்கும் இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்ல... அவ இந்த கேஸ்ல இன்டிரஸ்டட்டா இருக்கா... அவ்வளவுதான்" என்றான். வீரேந்திரன் சினத்தோடு, "நீ சொல்ற மாதிரி இருந்தா… தர்மாவைக் கொலை பண்ண கத்தில தமிழோட கைரேகை எப்படி வரும்" என்று கேட்க ரகுவின் பார்வை அதிர்ச்சியில் ஓரிடத்திலேயே நிலைகுத்தி நின்றது. எப்படி இது சாத்தியம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன் வீரேந்திரனைப் பார்த்து, "அப்படின்னா... நீங்க தமிழோட கைரேகையை எடுத்து செக் பண்ணீங்களா" என, வீரேந்திரன் ஆமோதித்தான். ரகு பார்வையிலேயே வெறுப்பை உமிழ்ந்து, “பழைய கோபத்தெல்லாம் மனசுல வைச்சுகிட்டு தமிழைப் பழி வாங்க இப்படி எல்லாம் பண்ணிட்டிருக்கீங்களா? உங்கப் பேரை அவ கெடுத்துட்டாங்கிற ஒரே காரணத்துக்காக அவ வாழ்க்கையையே ஸ்பாயில் பண்ற அளவுக்குப் போயிட்டீங்களே... அந்தளவுக்கு வெஞ்சன்ஸா உங்களுக்கு அவ மேலே" என்று கேட்க, ‘வெஞ்சன்ஸ்’ என்ற வார்த்தை வீரேந்திரனை ஆழமாய் குத்தியது. அடிக்கடி தான் அவளிடம் சொல்லும் வார்த்தை எனினும் அது உண்மையல்ல. அவளைத் தான் எந்தளவுக்கு நேசிக்கிறோம் என்பது அவன் மனதிற்கு மட்டுமே தெரியும். ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டைப் பார்த்த நொடியிலிருந்து பித்துப் பிடித்தது போல அவன் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருந்தான். "என்ன ஏசிபி சார்... உண்மையெல்லாம் சொல்லிட்டேன்னு ரொம்ப குத்தலா இருக்கா" என்று ரகு கேட்க வீரேந்திரனின் கோபமும் தூண்டப்பட்டது. இரு வாள்களைப் போல அவர்களின் பார்வைகள் மோதிக் கொண்டன. "ஸ்டாப் இட் ரகு... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே... அவ வாழ்க்கையைப் போய் நான் ஸ்பாயில் பண்ணுவேன்னா... லூசா நீ... அவ என்னோட வொய்ஃப்" "இவ்வளவு நேரமும் அவளை ஒரு குற்றவாளி மாதிரி பேசிட்டு... இப்ப திடீர்னு வொய்ஃப்னு சொல்றீங்க.. அப்படி ஒரு எண்ணம் உங்க மனசில இருக்கா" "சொந்த வாழ்க்கையையும் கடமையையும் குழப்பிக்கக் கூடாது... நான் அப்படிதான்... இன்னும் கேட்டா என் கடமைக்குதான் முதலிடம்... மத்ததெல்லாம் செகண்டரிதான்... கேட்டுக்கோ ரகு... இந்த கேஸுக்காக உன் ஃப்ரண்ட்டை... சாரி என் வொய்ஃபை அரஸ்ட் பண்ண வேண்டி வந்தாலும்... ஐ வில் டூ தட்..." என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லி அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான். ரகுவின் மனம் வேதனையில் உழன்று கொண்டிருக்க, அவள் கொலை செய்திருப்பாளா இல்லையா என்பதை பற்றி எல்லாம் அவன் யோசிக்கவில்லை. அப்படியே அவள் செய்தாலும் அதில் அழுத்தமான காரணம் இருக்கும். ஆதலால் இந்தப் பிரச்சனையில் இருந்து தமிழைக் காப்பாற்றுவது எப்படி என்ற எண்ணம் மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது. வீரேந்திரன் வெளியே வந்ததும் ரகுவின் தாய் அவன் செல்வதற்கு முன்னதாக, "தம்பி" என்றழைத்தார். மனதின் எண்ணங்களை மறைத்தபடி, "சொல்லுங்கம்மா" என்றான். "நீங்கதான் தமிழை கல்யாணம் பண்ணிக்கிட்டவரா?" என்றவர் கேட்க, தமிழ் அவருக்குமே ரொம்ப நெருக்கமானவள். ஆதலால்தான் வீரேந்திரனிடம் அத்தனை முகமலர்ச்சியோடு அவர் கேட்க அவன் முகம் சுருங்கிப் போனது. அவளைத் திருமணம் செய்ததுதான் தன் வாழ்வில் தான் செய்த பெரிய தவறோ என்றளவுக்கு எண்ணியிருந்தவன் அவர் கேட்டதற்கு வேண்டா வெறுப்பாய் ஆமோதித்து புன்னகைத்தான். "ரகு மாதிரிதான் எனக்கு தமிழும்... நீங்க அவ புருஷன்னு இப்பதான் எனக்கு தெரியும்... ரகுவும் இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல" என்று அவர் ஆதங்கப்பட, "அது எங்க கல்யாணம் கொஞ்சம் அவசரமா முடிவாயிடுச்சு" என்றவன் விளக்கம் தந்தான். "புரியுது தம்பி... தேவி எல்லாம் சொன்னா... அவசரமா முடிவானாலும் ரொம்ப பொருத்தமான ஜோடிதான் நீங்க... இரண்டு பேரும் அப்படியே ஒரே போல குணம் உள்ளவங்க... தமிழ் இங்கிருந்தா எனக்கு எப்படி தைரியம் சொல்லி இருப்பாளோ... எப்படி பார்த்துக்கிட்டிருப்பாளோ... அப்படியேதான் தம்பி நீங்களும்" என்றார். அவர் சொன்னவற்றை மெலிதான புன்னகையோடுக் கேட்டுக் கொண்டிருந்தவனிடம், "ரகு குணமானதும் நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு வரணும்” என்றார். "ம்ம்ம்... கண்டிப்பா வரோம்மா" என்றவன் புறப்படுவதாக சமிஞ்சை செய்துவிட்டுச் செல்லும் போது அவர் சொன்னதைக் குறித்தே அவன் மனம் சுற்றி வந்தது. 'இரண்டு பேரும் ஒரே போல குணமுடையவர்கள்' உண்மையிலேயே இருவரும் அப்படிதானோ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அவர் சொன்னது உண்மை என்பதற்குச் சான்றாக பல சம்பவங்கள் அவன் கண் முன்னே தோன்றி மறைய, அவனின் தேடலுக்கும் குழப்பத்திற்கும் விடையை தந்தது போல் இருந்தது. அப்பொழுதுதான் அவன் மனம் தர்மாவின் கேஸில் 'தான் அவளிடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம்' என கேட்டு கொண்டே நடந்தவன் ரவி ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்னதை நினைவுப்படுத்திக் கொண்டான். மீண்டும் ரவியின் அருகில் வந்து நின்று, "நீ ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்ன இல்ல... என்னது?" என்று கேட்டான். "அது வந்து மாமா" என்று ரவி தயங்க வீரேந்திரன் சலிப்படைந்தவனாய், "எனக்கு டைம் இல்ல ரவி... சீக்கிரம் சொல்லு" என்றான். "அது... காலையில அப்பா கூட மகேந்திரன் அங்கிளும் வந்திருந்தாங்க" "ஓ இரண்டு பேரும் ஒரு வழியா வந்துட்டாங்களா... சரி இதுவா முக்கியமான விஷயம்" "இல்ல மாமா... அங்கிள் அக்காகிட்ட கொஞ்சம் பிரச்சனை பண்ணிட்டாரு... பெரிய வாக்குவாதமாகி..." என்று ரவி மேலே சொல்ல முடியாது திக்கி நிற்க வீரேந்திரனும் திகைப்புற்றான். "கரெக்ட்டா சொல்லு... பிரச்சனை பண்ணது உங்க அக்காவா இல்ல எங்க அப்பாவா?" இந்த இக்கட்டான கேள்விக்கு ரவியால் பதிலுரைக்க முடியவில்லை. அவன் அமைதியாயிருக்க வீரேந்திரனே கோபத்தோடு, "உங்க அக்காதான் ஏதாவது பிரச்சனை பண்ணி இருப்பா? அவளுக்குதான் பிரச்சனை பண்றது ரொம்ப பழக்கம்" என்றான். ரவி அவன் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியுற்றான். அவன் தன் சகோதரியை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டான் என்ற எண்ணம் அவனின் வார்த்தைகளில் லேசாய் அடிப்பட்டு போனது. வீரேந்திரனே பொறுமையிழந்து, "சரி... என்னதான் பிரச்சனை?” என்றவன் அழுத்திக் கேட்க, ரவி தயக்கத்தோடே விஷயத்தைக் கூறினான். "அது... அரண்மனையை டெமாலிஷ் பண்ணனும்னு அங்கிள் சொன்னதுதான் பிரச்சனை... அக்கா அதுக்கு சம்மதிக்க மாட்டேன் சொல்லிட்டா... பத்திரத்துலயும் கையெழுத்து போடமாட்டேன்னும் சொல்லிட்டா... அங்கிள் ரொம்ப கோபப்பட்டு நீ என் மருமகளாக இருக்கணும்னா இந்த பத்திரத்தில கையெழுத்து போட்டாதான் முடியும்னு சொல்லிட்டாரு... அக்கா..." என்று அவன் நிறுத்தியதுமே, வீரேந்திரன் நிலைமையைப் புரிந்து கொண்டான். அவள் இந்த வார்த்தைகளால் உடைந்து போயிருக்க கூடும். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் அவளுடன் துணையாய் நிற்க இயலாமல் போய்விட்டோமே என்று அவன் மனம் தவிக்கலானது. வீரேந்திரன் யோசனையோடு ரவியைப் பார்க்க அவனே மேலும், "கடைசியா அங்கிள் பிடிவாதமா உனக்கு அரண்மனைதான் வேணுமுன்னா இந்த ஜென்மத்துல என் மகனுக்கு மனைவியாய் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு" என்று சொல்லவும், அவன் இதயத்தை இரண்டு துண்டாய் பிளந்தது போன்ற உணர்வு. அந்த நேரத்தில் அவளின் நிலைமையும் அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணியவன், 'அவர் யாரு அப்படி சொல்றதுக்கு' என்று மனதிற்குள் கேட்டு கொண்டான். தன் தந்தை சொன்னது தவறாயினும் அவள் என்ன பதில் சொல்லி இருப்பாள் என்ற ஆவல், அவனைப் பரிதவிக்க செய்தது. ரவியை நிமிர்ந்து நோக்கினான். எல்லா ஆண்களுக்கும் இருக்கும் அதே எதிர்பார்ப்புதான் அவனுக்கும். தான் அவளை எத்தகைய இடத்தில் வைத்திருந்தாலும் அவளுக்குத் தான் முதன்மையானவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா