மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBest proposal scenes of my novels ❤❤: Proposal scenesவீர் ❤ தமிழச்சி (வாடி என் தமிழச்ச …Post ReplyPost Reply: வீர் ❤ தமிழச்சி (வாடி என் தமிழச்சி நாவல்)

Quote from monisha on January 9, 2026, 12:17 PM

"நாமும் அவங்களோடவே கிளம்பலாமா?!" என்று கேட்க அவன் முறைத்த முறைப்பில் அவள் கப் சிப்பென்றானாள். எவ்வளவு துணிவிருந்தாலும் அவனைப் பார்த்தால் அவள் தைரியமெல்லாம் எங்கயோ சென்று ஓடி ஒளிந்து கொள்கிறது.

என்னதான் மாயமோ?!

அந்த கடத்தல் கும்பலிடம் சிக்கிய போது கூட இவ்வளவு பயத்தை உணரவில்லை அவள். ஆனால் இப்போது அவளுக்கு தன் கணவனோடு தனித்து இருப்பதில் உள்ளுக்குள் கிலி பரவத் தொடங்கியது.

தமிழுக்குப் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கியிருந்தது. ஒருமுறை தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று எண்ணி அவன் தன் கன்னம் சிவக்கக் கொடுத்த அறை.

இப்போது அத்தகைய அறை விழுமோ!

எல்லோரும் இருந்ததால் அடிக்காமல் விட்டுவிட்டானோ!

இப்போது அடிக்கப் போகிறானோ என்று அவள் எண்ணிக் கொண்டு தவிப்புறும் போதே வீரேந்திரனின் கரம் அவளைத் தூக்கிக் கொள்ள,"வீர்" என்று அதிர்ந்தாள்.

அவனை அவள் குழப்பமாய் பார்க்க, அவன் முகமோ நிலவொளியின் வெளிச்சத்தில் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவன் உதடுகள் உதிர்த்த புன்னகையும் கண்களில் இழையோடிய காதலும்தான்.

"என்ன பண்றீங்க வீர்... இறக்கி விடுங்க" என்றாள்.

"எனக்காக இந்த கால் என்ன ஓட்டம் ஓடுச்சுடி, கொஞ்ச நேரம் உன்னை நான் தாங்கிக்கிட்டா தப்பில்லை" என்று உரைக்க தமிழ் அவனைத் திகைப்புடன் பார்த்தாள்.

அவளைப் பத்திரமாகத் தூக்கி வந்து தாமரை மண்டபத்தில் அமர வைத்தவன் கீழ் படிக்கெட்டில் அமர்ந்தபடி அவள் கால்களைப் பிடித்துக் தன் மடியில் வைத்தான்.

"வீர்" என்று பதறியவளை,

"ஷ்ஷ்ஷ், கொஞ்ச நேரம் அமைதியா இரு" என்று சொல்லி தன் பேக்கெட்டில் இருந்த மருந்தைத் தடவியபடி,

"என்ன பொண்ணுடி நீ... நேத்தே காலில் அவ்வளவு பெரிய காயம்.. எப்படிறி உன்னால ஓட முடிஞ்சுது" என்று அவன் கேட்கும் போதே அவளின் காலில் பட்ட காயம் நினைவுக்கு வந்தது. அதனால்தான் தன் கால் இந்தளவுக்கு வலிக்கிறதா என்று யோசித்திருந்தவளுக்கு அந்த நிலையில் அதெல்லாம் நினைவில் இல்லை.

மருந்து தடவி முடித்துவிட்டு எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்திருக்க, “என்ன… அப்படி பார்க்குறீங்க” என்றவள் தயக்கத்துடன் வினவினாள். அவள் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டவனின் கண்களில் நீர் பெருகியது.

“வீர்” என்றவள் பதற,

"உன் கையில இருந்த பாம் மட்டும் வெடிச்சுருந்தது... நீ துண்டு துண்டா சிதறிப் போயிருப்படி" என்று ஆதங்கத்துடனும் வலியுடனும் கூறும் போதே அவன் விழிகளில் நீர் வழிந்தோடியது.

அப்படி மட்டும் நடந்திருந்தால்… அவனால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

அவன் வேதனையைப் புரிந்தவள் அவன் கண்ணீரைத் துடைக்க எத்தனிக்க, உயர்த்திய அவள் கரத்தைத் தடுத்துப் பிடித்துக் கொண்டு, "ப்ளீஸ் தமிழ் என்னை அழ விடு... நான் அழணும்... என்னால இதுக்கு மேல முடியாது" என்று சொல்லி தான் கட்டுப்படுத்தியிருந்த வேதனையெல்லாம் கண்ணீராய் கரைத்தபடி அவள் மார்பின் மீது முகம் புதைத்து கொண்டு ஒரு குழந்தையாய் மாறி அழத் தொடங்கியிருந்தான்.

அவனின் கம்பீரத்தையும் ஆணவத்தையும் தலை நிமிர்ந்திருக்கும் ஆளுமையையும் பார்த்தவளுக்கு அவனின் இந்தப் பரிமாணம் ரொம்பவும் புதிது. அவன் தன் ஈகோவை எல்லாம் மொத்தமாய் விடுத்து அவளிடம் சரண் புகுந்துவிட்டான்.

அவள் தன் கரத்தால் அவன் கேசத்தைத் தடவியபடி அவனைச் சமாதானப்படுத்த எண்ண அது சாத்தியப்படவில்லை. அவனின் பிடிவாதம் கோபத்தைத்தான் கட்டுப்படுத்த இயலாது என்றிருக்க, இந்த நிலையிலும் அவனைக் கட்டுக்குள் கொண்டு வர அவளால் முடியவில்லை.

அவனுக்குள் இருக்கும் குற்றவுணர்வு அவனைக் குத்தி கிழித்துக் கொண்டிருந்தது. அவனின் கர்வமும் ஆணவமும் அவனின் கண்ணீரில் வழிந்தோட அவளால் அவன் அப்படி அழுவதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

"ப்ளீஸ் வீர்... நீங்க அடிச்சா கூட தாங்கிக்கிறேன்... ஆனா நீங்க இப்படி அழறதை என்னால சத்தியமா தாங்கிக்க முடியல" என்று அவளும் சேர்ந்து அவனோடு கண்ணீர் வடிக்க அந்த வார்த்தையைக் கேட்ட நொடி தலையை நிமிர்த்தி அவள் முகத்தைப் பார்த்தவன்,

"நீ இந்தளவுக்கு என்னை லவ் பண்ணாதடி... நான் உன் காதலுக்குக் கொஞ்சங்கூட தகுதியானவன் இல்ல" என்று உரைத்தபடி அவன் எழுந்து நின்று கொள்ளவும்,

"என்ன பேசுறீங்க வீர்?! தகுதி அது இதுன்னு... இப்படி எல்லாம் பேசுனிங்கன்னா எனக்கு ரொம்ப கோபம் வந்துரும் சொல்லிட்டேன்" என்றவள் கண்டிப்புடன் கூறினாள்.

"கோபப்படு தமிழ்... நான் செஞ்ச எல்லாத்துக்கும் கோபப்படு... நம்ம கல்யாணத்துக்கு உன்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சது... காரணமில்லாம உன்னை அடிச்சது... டாமினேட் பண்றேன்னு சொன்னது... உன்னைக் கீழ விழ வைச்சது... கொஞ்சமும் யோசிக்காம உன் ரூமை அடிச்சு உடைச்சதுன்னு...

எல்லாத்துக்கும் சேர்த்து கோபப்படு... ஃபைன்... அதை நான் ஏத்துக்கிறேன்... ஆனா நீ உன் உயிரைக் கொடுத்து காப்பாத்தற அளவுக்கு நான் என்னடி பண்ணேண் உனக்கு... அதை என்னால ஏத்துக்க முடியல... கில்டியா இருக்கு" என்று சொல்லியபடி அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் கடல் அலைகளை வெறித்தபடி நின்று கொண்டான்.

"வீர்... அதெல்லாம் முடிஞ்சு போன கதை... அதுவும் இல்லாம எல்லா சிட்சுவேஷன்லயும் என் தப்பும் இருக்கு... நீங்க இப்படி உங்களை மட்டும் தப்பு சொல்லிக்காதீங்க" என்று தெளிவுப்படுத்தியவள் அவனைப் பின்னோடு தன் கரத்தால் பிணைத்தபடி, தன் மனதை நிறைத்திருந்த அவன் மீதான காதலை வார்த்தைகளால் கோர்த்தாள்.

"இந்த தமிழச்சி எத்தனை முறை மறித்தாலும்... அத்தனையும் முறையும் பிறந்து வருவாள்... உனக்காக... உன்னை சேர்வதற்காக... உன்னோடு வாழ்வதற்காக" என்று சொல்லி அவன் முதுகில் ஆதரவாய் தலைசாய்த்து விழிகளை மூடி இன்புற்றாள்.

அவளின் அணைப்பிலும் வார்த்தைகளிலும் அவன் மொத்தமாய் கிறங்கிப் போனான்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா