மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBest proposal scenes of my novels ❤❤: Proposal scenesவீரா 💛 சாரதி (அவள் திரௌபதி அல்ல)Post ReplyPost Reply: வீரா 💛 சாரதி (அவள் திரௌபதி அல்ல)

Quote from monisha on January 9, 2026, 12:36 PM

“நேத்து இன்னாவோ... நீ என் தங்கச்சிங்கள உன் தங்கச்சிங்க மாதிரி பார்க்குறேன்னு சொன்ன... இப்ப இன்னாடானா... அவங்களுக்கு செய்றதுக்கு போய் நீ என்கிட்ட விலை பேசுற... இதான் நீ அவங்க மேல வைச்சிருக்க அன்பா?” இவ்வாறாக வீரா சாரதியைப் பார்த்து கேட்டதும் அவனுக்குச் சுருக்கென்றது.

அவளை ஆழ்ந்து நோக்கியவன், “யூ ஆர் ரைட்.... நான் இப்படி ஒரு பாய்ண்ட் ஆப் வ்யூல யோசிக்கவே இல்ல” என்றான் வெகுஇயல்பாக!

“நீ யோசிக்க மாட்ட... ஏன்னா நீ வளர்ந்த விதம் அப்படி... உனக்கு எல்லாமே பிசினஸ்தான்” என்றவள் சொல்ல,

“நாட் எக்சேக்ட்லி ... ஆனா கொஞ்சம் அப்படிதான்” என்று எதார்த்தமாகத் தான் இப்படிதான் என்று அவனே ஒத்துக்கொள்ள அவள் முறுவலித்தாள். அவள் முகத்தில் கோபத்தை எதிர்பார்த்தவனுக்கு அவளின் இந்த நகைப்பு ஆச்சரியப்படுத்த அப்போது அவள் அவனிடம்,

“நேத்து நைட் மட்டும் நீ என்கிட்ட பேசலன்னு வைச்சுக்கோ... சத்தியமா நீ இப்போ இப்படி கேட்டதுக்கு நான் உன்கிட்ட கோபப்பட்டிருப்பேன்” என்க,

“அப்படி என்ன பேசினேன்?” என்று கேட்டான் குழப்பத்தோடு!

“பேசல... புலம்பின... அம்மா அப்பா இல்லாம நீ சின்ன வயசுல இருந்து எவ்வளோ கஷ்டபட்டன்னு உன் கதையெல்லாம் சொன்ன... இத்தனை வருஷத்தில யாருமே உன்கிட்ட அன்பா அக்கறையா நடந்துகிட்டதே இல்லன்னு சொன்னே....அப்புறம்... பட்டுன்னு என் கையை பிடிச்சுக்கின்னு நான்தான் உன்கிட்ட முதல் முதலா அன்பா அக்கறையா நடந்துக்கினன்னு சொன்ன”

“அப்படியா என்ன?!” என்றவன் புருவங்களை நெறிக்க,

“ஆமாம்” என்றவள் சலிப்போடு தொடர்ந்தாள்.

“அதோட நீ வுட்டியா... நீ பாட்டுக்கு புலம்பி முடிச்சு கடைசியா என்கிட்ட ஒரு சத்தியம் கேட்ட” என்றவள் சொல்ல,

“என்ன சத்தியம்?” என்று ஆவல் ததும்ப அவளை நோக்கினான்.

“நானும் என் தங்கச்சிங்களும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னை விட்டுட்டு போயிடக் கூடாதுன்னு”

சாரதியின் விழிகள் எதிர்பார்போடு அகல விரிந்தன. “சத்தியம் பண்ணியா?!” என்றவன் கேட்க, அவள் பதில் பேசமால் அவன் முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லுடி” என்றவன் மீண்டும் அழுத்திக் கேட்க,

“நீ எங்க என்னை விட்ட”

“அப்போ பண்ணிட்ட” என்று அவன் கேட்கவும், “ஹ்ம்ம்” என்று அவள் சிரத்தையின்றி தலையசைத்து ஆமோதித்தாள். அந்த நொடி சாரதியின் கால்கள் தரையில் நிற்கவில்லை. வானத்தில் பறந்தது போல் இருந்தது. அவன் இன்பத்தில் மூழ்கித் திளைக்க அவன் உதட்டில் மெலிதாய் ஓர் புன்னகை தவழ்ந்தது.

அவளோ அவன் மனநிலையை கவனியாதவளாய்,

“உன்கிட்ட பேசுன பிறகுதான் ய்யா நீ அன்புக்காக எந்தளவுக்கு ஏங்குறன்னு எனக்கு புரிஞ்சுது... எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு... அதுவும் நானே அடிக்கடிக்கு... யோசிக்காம உனக்கு குடும்பம் இல்லன்னு சொல்லி குத்தி காட்டிட்டேன்” என்று வருத்தத்தோடு அவள் தலைகவிழ்ந்து கொண்டபடி, “என்னை மன்னிச்சிருய்யா” என்றாள் குற்றவுணர்வோடு!

“ஏ! வீரா ஸ்டாப் இட்... நீ பாட்டுக்கு ஓவர் இமோஷனலா பேசி என்னை அழ வைக்காதே... அதெல்லாம் நம்ம கேரக்டருக்கு சுத்தமா ஒத்து வராது” என்றான்.

“அப்படியா?! அப்போ நேத்து என் தோள்ல படுத்துக்கின்னு குழந்தை மாதிரி அழுதது யாருங்க ஆபீசர்?” என்றவள் கிண்டல் தொனியில் கேட்க,

“திஸ் இஸ் டூ மச்... அப்படியெல்லாம் நடந்திருக்காது... நோ வே” என்றவன் ஈகோ அவனுக்கு முன்னதாக முந்திக் கொண்டு அவசரமாய் மறுதலிக்க,

“அப்போ அது நீங்க இல்லையா ஆபீசர்?!” என்று அதிர்ச்சியான பாவனையில் கேட்பது போல் சற்றே எகத்தாளமாகக் கேட்டாள்.

“சான்ஸே இல்ல” என்றவன் தீர்க்கமாக மறுக்க, வீராவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை.

அவனுக்கு உள்ளுர கோபம் ஏறிக் கொண்டிருக்க வீரா பிராயத்தனப்பட்டு தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, “எவ்வளவு பெரிய அப்பாட்டாக்கரா இருந்தாலும் பொண்டாட்டிக்கிட்ட பொய்யா நடிக்க முடியாது... ஆபீசர்” என்றவள் சொல்ல, அப்போது சாரதியின் இதழிலும் குறும்புத்தனமான புன்னகை இழையோடியது.

“பொண்டாட்டி மட்டும் புருஷன்கிட்ட பொய்யா நடிக்கிலாங்களா ஆபீசர்” என்றபடி அவளை நெருங்கி வர அவன் பார்வையில் ... கொஞ்சம் கலவரமானவள், “நான் எப்போ நடிச்சேன்?” என்று குழப்பமாக கேட்டுக் கொண்டே பின்னோடு நகர்ந்தவளை மேலே செல்ல விடாமல் ஒரே பாய்ச்சலில் அவள் இடையை தன் கரத்தில் வளைத்துப் பிடித்து,

“என்னை பிடிக்காத மாதிரியே நடிச்சியே” என்றான்.

“நடிக்க என்ன இருக்கு... பிடிக்கலதான்... விடுய்யா” என்றவள் அவனைத் தள்ளிவிட முற்பட, அவளை இன்னும் நெருக்கமாய் அணைத்து நின்றான்.

“உண்மையா பிடிக்கல?!” என்றவன் புருவங்களை நெறித்து கல்மிஷமாய் அவளைப் பார்த்து சிரித்தான்.

அவளோ அவன் கரத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தபடி, “எனக்கு உன்னை பார்த்தா பாவமாகீதுதான்.. ஆனா இப்பவும் சொல்றேன்... எனக்கு உன்னைப் பிடிக்கல பிடிக்கலதான்” என்று முகத்தை சுளித்தாள்.

அவன் மீண்டும் சத்தமாய் சிரித்துவிட்டு, “அய்யோடா... பாவம் பார்க்குறாங்கலாமே... மதர் தெரஸாக்கு அக்காவாடி நீ” என்று எகத்தாளமாய் கேட்டான்.

“இப்ப நீ என்ன விடல... செவுலு பேந்திரும்” என்றவள் மிரட்ட, “அப்படியா?” என்று அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்துக் கொண்டே தன் முதல் காதல் முத்தத்தை அவள் அதரங்களில் அழுந்தப் பதித்தான்.

அன்று போல் அல்லாது முழுக்க முழக்க மோகத்தோடு அவன் பாய்ச்சிய முத்தம், அவளைத் திக்குமுக்காட வைத்திருந்தது.

“இப்ப சொல்லு... உனக்கு என்னைப் பிடிக்கல” என்றவன் கேட்டுக் கொண்டே அவளைப் படுக்கையில் தள்ளி விட, அவள் எழுந்திருக்கும் முன்னதாக அவன் தேகம் அவளை முழுமையாய் ஆக்கிரமித்துக் கொண்டது.

அவன் விழிகளின் தாக்கத்திலிருந்து அவள் தப்பிக் கொள்ள முடியாமல் தவிப்புற, “எனக்குத் தெரியும்... உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு... இல்லாட்டி போனா நான் எவ்வளவு கட்டாயப்படுத்தி இருந்தாலும் நிச்சயம் நீ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சிருக்க மாட்ட” என்க, அவள் விழிகள் ஆச்சரியத்தில் பெரிதாகின.

நேற்று இதே கேள்வியை அவன் கேட்ட போது பதில் சொல்லாமல் தப்பிக் கொண்டவளுக்கு இப்போது அவனிடமிருந்து தப்பிக் கொள்ள இயலும் என்று தோன்றவில்லை. அவனின் நெருக்கத்திலும் அணைப்பிலும் அவள் ஊமையாகிப் போனாள். மெல்ல மெல்ல அவனிடம் அவள் தன் வசம் இழந்து கொண்டிருந்தாள்.

பல ஆண்களின் பார்வைக்கும் இச்சைக்கும் தோற்றுப் போகாமல் தன் பெண்மையைத் தற்காத்துக் கொண்டவள்... இப்போது விரும்பியே அவனிடம் தோற்றுப் போக விழைந்தாள் என்பதே உண்மை!

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா