மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBest proposal scenes of my novels ❤❤: Proposal scenesமகிழ் ❤ சாக்ஷி (நான் அவள் இல்லை)Post ReplyPost Reply: மகிழ் ❤ சாக்ஷி (நான் அவள் இல்லை)

Quote from monisha on January 9, 2026, 12:42 PM

மகிழ் ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளர். சிறுவயதிலிருந்தே அவன் பேசுவதில் வல்லவன். படிக்கிறானோ இல்லையோ... ஓயாமல் பேசி ஆசிரியர்களிடம் தண்டனை பெறுவான். எல்லோருமே அவனிடம் குறையாய் சொன்ன விஷயத்தை அவன் தன் நிறையாய் மாற்றிக் கொண்டான்.

அவனின் துருதுருப்பான பேச்சை தன் வேலையாக, வாழ்க்கையாகவே மாற்றிக் கொண்டான். எல்லோருமே அவன் வசீகரமான குரலிலும், அடை மழையாய் கொட்டித் தீர்க்கும் அவன் பேச்சிலும் கவர்ந்திழுக்கப்பட, அவள் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவளுக்கு அவன் நிகழ்ச்சியைக் கேட்பதில் அலாதியான இன்பம். அவன் ஆண்மை நிறைந்த குரல்... அவன் பேசும் விதத்தில் இருந்த நேர்த்தி மற்றும் தெளிவு என அவளின் ரசனைக்குரியவனாய் அவன் மாறியிருந்தான்.

மகிழ் எப்போதும் போல் அன்று நிகழ்ச்சியைத் தொகுத்து கொண்டிருந்தான். அது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி

"நீங்க கேட்டுட்டு இருக்கிறது ரேடியோ ஸ்கை... 95.5... நான் உங்க மகிழ்... இன்னைக்கு நாம பேசப் போற விஷயம் காதல் காதல் காதல்... காதல்னு சொன்னதுமே எல்லோர் மனசிலும் பட்டாம்பூச்சி பறக்குமே... காதல் அனுபவமே ஒரு சுவராஸ்யம்”

“ஆனா காதல் அனுபவமே இல்லாதவங்களுக்கு அது இன்னும் இன்னும் சுவராஸ்யம்... ஏன்னா... தெரியாத விஷயத்திலதானே ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமாயிருக்கும்... எனக்கும் அப்படிதான்”

“ஸோ லிஸனர்ஸ் எல்லாரும் டபுள் த்ரீ... டபுள் த்ரீ... டபுள் சிக்ஸ் டபுள் சிக்ஸுக்கு கால் பண்ணி என்கிட்ட

உங்க இறந்த கால காதல்... நிகழ் கால காதல்... அப்புறம் வருங்கால காதல்னு எந்த மாதிரியான காதல் அனுபவமா இருந்தாலும் ஷேர் பண்ணிக்கலாம்" என்று அவன் படபடவென பேசி முடிக்க, வரிசையாய் நிறைய நேயர்களோடு பேசிய போதுதான் முதல் முறையாய் சாக்ஷி அவனிடம் பேசினாள்.

"ம்ம்ம்... சொல்லுங்க சாக்ஷி.. என்ன பண்ணிட்டிருக்கீங்க?"

"கச்சேரிகளில் வீணை வாசிக்கிறேன்"

"சூப்பர்... வீணைன்னு சொன்னதும் நம் பாரதியாரோட ஒரு அழகான காதல் கவிதை ஞாபகத்துக்கு வருது... என்னம்மா எழுதியிருப்பாருன்னு தெரியுங்களா?"

"தெரியுமே"

"அப்போ சாக்ஷி நம்ம நேயர்களுக்காக அந்த கவிதையை சொல்லலாமே... பாடினாலும் ஒகேதான்... உங்க வாய்ஸ் வேற ஸ்வீட்டா இருக்கு"

"அய்யோ... பாடத் தெரியாது... வேண்ணா சொல்றேன்"

"வீணை வாசிக்கும் சாக்ஷி நமக்காக வீணையடி நீ எனக்கு கவிதையை சொல்லப் போறாங்க... ம்ம்ம்... சொல்லுங்க சாக்ஷி"

"பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சுறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு

பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ

மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு

பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு

ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு

பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு

பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!" என்றவள் அங்கே நிறுத்துவிட,

"ம்ம்ம்... இன்னும் முடியலயே" என்று அவன் ஆர்வமாய் கேட்டான்.

"முழுசா சொல்லிட்டிருந்தா ஷோ முடிஞ்சிருமே"

"பரவாயில்லை... நீங்க சொல்லிட்டிருந்தா... கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு... கன்டினியு பண்ணுங்க"

"இல்ல... அவ்வளவுதான் நினைவு இருக்கு"

"என்ன சாக்ஷி நீங்க?... எனக்கு பிடிச்ச வரியை சொல்லாம விட்டுட்டீங்களே... காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு... என்னம்மா ரசிச்சு எழுதி இருக்காருயா... சரி பாரதியோரோட காதல் இருக்கட்டும்… சாக்ஷியோட காதலைப் பத்தி சொல்லாமே" என்றவன் கேட்க லேசாய் ஒரு மௌனம்.

"அருவியா கவிதையெல்லாம் கொட்டிட்டு... காதல்னதும் சட்டுன்னு சைலன்ட்டாயிட்டீங்க... சொல்லுங்க ஃ ப்யூச்சரா... பாஸ்ட்டா... ப்ரசன்ட்டா?!"

அவள் தன் மௌனத்தைக் கலைக்க,

"ஹ்ம்ம்... எனக்கு ப்ரசன்ட்தான்... ஆனா ஃப்யூச்சரான்னு நீங்கதான் சொல்லணும்" தொடர்ச்சியாய் பேசிக் கொண்டிருந்தவன் அவள் சொன்னதன் அர்த்தம் புரியாமல் சற்று நிதானித்து,

"என்ன சொல்ல வர்றீங்க சாக்ஷி?" என்று கேட்க,

"உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சா காதலிக்கலாமே" என்று அவள் பளிச்சென்று உரைத்துவிட்டாள். அந்த நொடி மகிழுக்கு உண்மையிலேயே பட்டாம்பூச்சி பறந்த உணர்வுதான்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா