மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBest proposal scenes of my novels ❤❤: Proposal scenesசெல்வி ❤ சிவசங்கரன் (ஆதியே அந்தமா …Post ReplyPost Reply: செல்வி ❤ சிவசங்கரன் (ஆதியே அந்தமாய் நாவல்)

Quote from monisha on January 9, 2026, 1:09 PM

அந்த அறையில் நிலுவிய மௌனத்தை யார் கலைப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டியே நிகழ்ந்து கொண்டிருக்க, செல்வி தன் பொறுமையிழந்து,

"இப்படியே விடாம என் கையை எவ்வளவு நேரம் பிடிச்சிட்டிருக்க போறீங்க" என்றுக் கேட்டாள்,

"நான் சாகிற வரைக்கும்" என்றவன் சொல்ல, பதறிப்போனவள்,

"என்ன பேச்சு இதெல்லாம்?" என்று சற்றுக் கோபமாகவே கேட்டாள்.

அவன் அவள் கரத்தை வருடியபடியே நிதானமாக, "என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன் கையைப் பிடிச்சிட்டிருப்பேன்... உனக்கு எந்தப் பிரச்சனையும் வரவிடமாட்டேன்" என்றவன் அழுத்தமாய் சொல்ல அவள் நெகிழ்ந்து போனாள்.

அந்த நொடியே அவள் தரையில் சரிந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு, "என்னை மன்னிச்சிருங்க" என்று அழ அவன் பதறிபோய் அவளைத் தூக்கி நிறுத்தி,

"என்னடி செய்ற?" என்று உணர்ச்சிவசப்பட்டான்.

"நான் உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்... அதுவும் மரியாதையில்லாம அவமானப்படுத்தியெல்லாம் பேசி இருக்கேன்" என்றவள் கண்ணீர் வடிக்க அவள் கன்னத்தை வருடியவன்,

"அதெல்லாம் விடு செல்வி... போகட்டும்... இப்போ நீ என்னை புரிஞ்சிக்கிட்ட இல்ல... அதுவே போதும்" என்றவன் சொல்லி அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் கிடந்தவளுக்கு அந்த உணர்வு ரொம்பவும் புதிதாய் இருந்தது. அதனை அனுபவித்து லயித்திருந்தவளுக்குச் சற்றுமுன்பு நடந்த பிரச்சனை விடாமல் மனதை உறுத்திக் கொண்டிருக்க, அதைப்பற்றி அவனிடம் கேட்டாள்.

"நீங்க கீழே எல்லார்க்கிட்டயும் கொஞ்சம் பொறுமையாய் பேசி இருக்கலாம்" என்க, கோபமாய் அவளைவிட்டு விலகி நின்றவன்,

"நானாவா பேசினேன்... அவங்கதானே என்ன பேச வைச்சாங்க" என்று பொங்கினான்.

அவள் தயக்கத்தோடு, "இல்ல நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே" என்று அவள் இழுக்க,

"என்னை எங்கண்ணே என்ன சொன்னாலும் நான் பொறுமையா இருந்திருப்பேன் செல்வி... ஆனா உன்கிட்ட அப்படி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கு?" என்றவன் அழுத்தமாய் கேட்க அவள் உள்ளூர பூரித்து போனாள்.

இருந்தாலும் அவள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்க, எதற்கு தேவையில்லாத பிரச்சனையென்று எண்ணியவள்,

"குடும்பன்னா அப்படிதான் இருக்கும் நம்மதான் இதையெல்லாம் சகிச்சிக்கணும்... அதுவுமில்லாம சண்டை... பிரச்சனை இதெல்லாம் எதுக்குங்க... போதாக்குறைக்கு நான்தான் உங்களை தூண்டிவிட்டேனு எனக்கு கெட்ட பேரு வேற" என்றவள் வருத்தமான முகபாவனையோடு தன் எண்ணத்தைச் சொல்லிமுடித்தாள்.

"சொல்லிட்டு போகட்டும்... மதனி அண்ணனைத் தூண்டிவிடலயா? அப்பா இல்லாத நேரமா பாத்து பிரச்சனை பண்ணி அண்ணனுங்களை எனக்கெதிரா திருப்பிவிடனும்னு பார்க்கிறாங்க... அவங்க எண்ணம் எனக்கு தெரியாம இல்ல.. வம்பு வேண்டாம்ன்னு ஒதுங்கி இருக்கேன்" என்று அவன் கோபமாகவே விளக்கம் தர,

"எதுக்கு அக்கா அப்படி செய்யணும்?" என்று புரியாமல் கேட்டாள் செல்வி.

"எல்லாம் பொறுப்பையும் நானே பாத்துக்கிறேன் இல்ல... அண்ணன்களோட உரிமையை பறிச்சுக்கிறேன்னு அவங்களுக்கு நினைப்பு... யாருக்கு தெரியும்? இப்போகூட ஏதாவது நமக்கெதிரா திட்டம் போட்டுட்டு இருப்பாங்க" என்று சரியாய் கணித்தவன் மேலும் அவளிடம்,

"ஆனா இப்போதைக்கு அதைப்பத்தி எல்லாம் கவலைபடற மாதிரி நான் இல்லை" என்று தன் படுக்கையின் மீது அமர்ந்துக் கொண்டு, அவள் இடையை தன் கரத்தால் சுற்றி வளைத்து அருகில் இழுக்க... அவள் மிரண்டு போனாள்.

அதோடு அல்லாது அவன் தன் முகத்தை அவள் வயிற்றில் புதைத்து கொண்டு சீண்ட அவள் தவிப்புற்று, "விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு" என்று நெளிந்தாள்.

அவன் விடுவேனா என்று தன் சீண்டல்களை மேற்கொண்டிருந்தவன்,

அவள் சேலையை விலக்க எத்தனிக்க அவள் பதட்டத்தோடு அவனைத் தள்ளிவிட்டு பின்னோடு சென்றாள்.

அவளை ஏக்கமாய் பார்த்தவன் "படுத்தாதடி... வாடி" என்றவன் அழைக்க, "உம்ஹும்" என்று இடமும் வலமுமாய் தலையசைத்தாள்.

"ஓடி பிடிச்செல்லாம் என்னால விளையாட முடியாது... ஒழுங்கா என் பக்கத்துல வந்திரு" என்றவன் முறைப்பாய் கேட்க,

"எனக்கு பயமா இருக்குங்க" என்று தரையை நோட்டமிட்டபடி அவள் சொல்ல முகவாயைத் தடவியபடி யோசித்தவன் ஏதோ நினைவு வந்தவன் போல, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என்று கேட்டான்.

அவள் என்னவென்பது போல் தலையை நிமிர்த்திப் பார்க்க, "பக்கத்தில வா சொல்றேன்" என்றான்.

"உம்ஹும்... நீங்க அங்கிருந்தபடியே சொல்லுங்க" என்க, மூச்சை ஏற்றமாய் இறக்கமாய் விட்டவன் அவளைப் பார்த்து

"மதினி என் மேல கோபமா இருக்க இன்னொரு காரணமும் இருக்கு" என்றான்.

"என்னது?"

"மதனி அவங்க தங்கச்சி அமுதவல்லியை என் தலையில கட்டி வைக்க பாத்தாங்க... நான் ஒத்துக்கல... அதனாலதான் அவங்களுக்கு என் மேல ரொம்ப கோபம்... முக்கியமா உன் மேல" என்று சொல்ல செல்வியின் முகம் வாடிப் போனது.

"அப்போ அமுதவல்லியை நீங்க கல்யாணம் பண்ணிட்டிருந்தா... இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வந்திருக்காதா?" என்றவள் வேதனையோடு கேட்க,

"அதுவும் சரிதான்... பண்ணி இருந்தா எந்தப் பிரச்சனையும் இருக்காது... நானும் நிம்மதியா இருந்திருப்பேன்" என்றவன் சூட்சமமாய் சிரித்தபடி சொல்லி முடிக்க அவள் முகம் இருளடர்ந்தது.

"அப்போ உங்க மனசில அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சோ?" என்றவள் தன் விழிகளை விரிக்க,

"இதுவரைக்கும் இல்ல, ஆனா இனிமே வரலாம்" என்றவன் எகத்தாளமாய் சொல்ல அவள் முகம் சுருங்க,

"இனிமேவா?" என்று அழுகை தொனியில் கேட்டாள்.

"ஹ்ம்ம்... பேசாம மதனியோட தங்கச்சியை நான் இரண்டாவதா கட்டிக்கிறேன்" என்றவன் சொன்னதுதான் தாமதம்.

அவள் முகத்தை மூடிக் கொண்டு வெடித்தழ அவன் சற்றும் அசறாமல், "நீ இப்படியே அழுது அங்கயே நின்னிட்டிருந்த... நான் சொல்றதுதான் நடக்கும் செல்வி" என்றவன் கோபமாக மிரட்டினான்.

அவள் தன் கரத்தை விலக்கி அவனை விழிஇடுங்க பார்த்தவள்,

"நான் உங்க பக்கத்தில வரத்தான் இப்படி எல்லாம் சொன்னீங்களா?" என்று சினம் பொங்கக் கேட்டவள் தன் கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் துடைத்துக் கொண்டு,

"வரமாட்டேன் போங்க" என்று கோபமாய் திரும்பி நின்று கொண்டாள்.

அவனுக்கு அதற்கு மேல் பொறுமை இராமல் அவள் பின்புறம் கருநாகம் போல நீட்டமாய் பின்னப்பட்டிருந்த கூந்தலைப் பற்றி இழுக்க,

"ஆ வலிக்குது " என்றவள் கதறிக் கொண்டே படுக்கையின் மீது சாய்ந்தாள்.

"வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்... நீ என்னைவிட்டு விலகி போற ஒவ்வொரு தடவையும் எனக்கும் இப்படித்தாண்டி வலிச்சுது" என்று சொல்லியவன்,

"நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்னு சொன்னா நீ உடனே நம்பிடுவியா... உன்னைத்தான் கட்டிக்கிடுவேன்னு என் குடும்பத்தையே எதிர்த்துக்கிட்டவன்டி... நான் எப்படிறி உன்னை விட்டுடுவேன்...

உன்னை தவிர வேறொருத்தியை இன்னை வரைக்கும் நான் மனசால கூட நினைச்சதில்லை... தெரியுமா?" என்றவன் உணர்ச்சி பொங்க சொல்லி முடிக்க, அவள் கண்களில் நீர் ததும்பியது.

"தப்புதான்... நான் அப்படியெல்லாம் யோசிச்சிருக்க கூடாது.... நான் இருந்த நிலைமையில நீங்க மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கலன்னா... காலம் பூரா இந்த ஊர்ல நான் பைத்தியக்காரி பட்டத்தோடவே இருந்திருப்பேன்" எனறு சொல்லி விம்மத் தொடங்கினாள்.

அவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி, "இந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு நல்லது செஞ்சிருக்காங்க" என்று சொல்ல, செல்வி புரியாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.

"உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளைங்க கிட்ட எல்லாம் உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொன்னதுதான். இல்லாட்டி போனா நீ எவனையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊர விட்டு போயிருப்ப... எனக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிருக்கும்... நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லடி... ரொம்ப சுயநலக்காரன்" என்றான்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா