மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 8Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 8

Quote from monisha on March 30, 2022, 10:12 AM

8
தேர்வுகள் முடிந்து தன் ஊருக்கு ரயில் ஏறி புறப்படயிருந்த தமிழை வழியனுப்ப வந்த மஞ்சுளா தேம்பித் தேம்பி அழ, அவளை சமாதானப்படுத்த முயன்று ஒரு நிலைக்கு மேல் கடுப்பானவள், “அட ச்சை! அழுறதை நிப்பாட்டு… நம்ம இரண்டு பேரும் ஒரே கம்பெனிலதானே செலக்ட் ஆகியிருக்கும்… இன்னும் ஆறு மாசத்தில ட்ரைனிங் போட்டுட போறாங்க… அங்கன பார்க்கத்தானே போறோம்” என்று திட்டி அவளை அமைதிப்படுத்திவிட்டுப் புறப்பட்டாள். இதே போன்ற ஒரு ரயில் பயணத்தில் கமாராஜை சந்தித்தது அவள் நினைவுக்கு வந்து மனம் வலித்தது. நடந்த பிரச்சனையின் மூலம் காமராஜ் வேலையை விட்டு நீக்கப்பட்டதை அவளால் இப்போதும் ஏற்க முடியவில்லை. குற்றவுணர்வில் கூனிக் குறுகி மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தவளிடம் காமராஜ்தான், “இதெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டு பரீட்சைல எதுவும் கோளாறு பண்ணிட கூடாது தமிழு… முக்கியமா கேம்பெஸ்ல நீ செலெக்ட் ஆகணும்… அதுமட்டுமில்ல… நீ பெருசா எதாச்சும் சாதிக்கோணோம்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டே அவன் விடைபெற்றான். உண்மையிலேயே அவன் அப்படி சொல்லவில்லை என்றால் அவளால் அந்தப் பிரச்சனையை விட்டு வெளியே வந்திருக்கவே முடியாது. தற்போது அந்தப் படிப்பும் பட்டமும் அவள் கனவு லட்சியம் என்பதை விட அவன் வார்த்தையில் இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகப்பட்டதில் அவள் தம் இறுதி தேர்வுகளை இன்னும் சிறப்பாகவே எழுதியிருந்தாள். அதே போல கேம்பசில் வந்த மிகப் பெரிய நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட முப்பது நபரக்ளில் அவள் பெயர்தான் முதலில் இடம்பெற்றது. அவள் மீது அவதூறான பழிகளைச் சுமத்தியவர்கள் முன்பாக இந்த சந்தர்ப்பத்தில் தன் திறமையை அவள் நிருபித்தும் காட்டிவிட்டாள். ஆனால் அந்த சந்தோஷத்தை தன் மதிப்புக்குரிய ஆசனான காமராஜிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதுதான் அவளுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. அன்று இருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவன் தொடர்பு எண்ணை அவள் வாங்கவில்லை. இத்தகைய மனநிலையோடே பேருந்தில் அவள் தன் ஊர் எல்லையை அடைந்தாள். தோளில் ஒரு பையும் கையில் ஒரு பெரிய பையுமாக அவள் இறங்கும் போது அவள் கால்கள் இடறி தடுமாறிய சமயத்தில் முன்னே சென்ற பயணி அவள் பையை தன் கையில் வாங்கிக் கொண்டு அவள் இறங்க உதவினான். அவள் இறங்கியவுடன், “தேங்க்ஸ்” என்று சொல்லி தன் பையை வாங்க முற்பட்ட போதுதான் அவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக, அவளைப் பார்த்து அவன் கடுப்பானான். சந்திரனா அது? திடகாத்திரமான ஆண்மகனாக, வலிய புஜங்களோடு உயரமும் கம்பீரமுமாக முறுக்கு மீசையோடு நின்ற அவனைத் தன்னையும் அறியாமல் அவளுடைய ஆழ்மனம் வியக்கவும் ரசிக்கவும் தொடங்கியிருந்தது. அவனைப் பார்வையால் அளவெடுத்தபடி அவள் நிற்க, “நீயா” “சை இது உன்னுடைய பேகா?!” என்று அடுத்தடுத்து அவள் மீது பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தவன் அந்த நொடியே அவளின் பேகை தன் கையிலிருந்து உதறிவிட்டு முன்னே செல்ல, அவளுக்குக் கோபமேறியது. தன் பையைத் தூசி தட்டிக் கையிலெடுத்தவள், “எருமை பன்னி! இவனை யாரு பேகை வாங்க சொன்னது… நான் கேட்டேனாக்கும்” என்று புலம்ப, அவள் திட்டியது அவன் காதுகளை எட்டியது. அவன் கடுப்போடு அவளைத் திரும்பி ஒரு அலட்சிய பார்வைப் பார்த்துவிட்டு முன்னேறி நடக்க, அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது. கடந்த மூன்று வருடங்களாக அவள் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அவனைப் பற்றிய தகவல்கள் அவளை எட்டிக் கொண்டுதான் இருந்தன. தன் பாட்டியின் நிலத்தையும் தான் ஆசையாக வளர்த்த காளையனையும் அவன் பஞ்சாயத்தில் பேசி தன் பெரியம்மாவிடம் கேட்டு வாங்கியிருந்தான். பஞ்சாயத்தில் சொன்னதால் கோமதியாலும் மறுக்க முடியவில்லை. அதேநேரம் அந்த வீட்டையும் பாட்டி வைத்திருந்த கறவை மாட்டையும் அவர் தரமாட்டேன் என்று திட்டவட்டாமாகச் சொல்லிவிட்டார். அவனும் அதில் எல்லாம் பங்கு கேட்கவில்லை. அவன் அந்த நிலத்திலேயே தான் தங்குவதற்கு ஏற்றார் போல சிறிய கூரை வீட்டை அமைத்துக் கொண்டான். அதேநேரம் ஊரிலிருந்தவர்களின் உதவியோடு தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டதும் கடந்த வருடம் ஈரோடு ஜல்லிக்கட்டில் அவன் பங்கேற்று வெற்றி பெற்றதும் அவள் காதுக்கு வந்த தகவல்கள். ஆனால் அவற்றையெல்லாம் கேட்டும் கேட்காமல் இருந்துவிடுவாள். அதே போல ஊர் பொது இடங்களில் அவனைப் பார்க்க நேர்ந்தாலும் பார்த்தும் பார்க்காமல் இருந்துவிடுவாள். அவனும் அப்படிதான் இருப்பான். என்னதான் பார்த்தும் பார்க்காமல் கேட்டும் கேட்காமல் இருந்தாலும் அவன் வளர்ச்சியில் ஏதோ ஒரு ஒரத்தில் அவள் ஆழ்மனம் சந்தோஷப்பட்டதும் உண்மை. அதற்கும் மேலாக அன்று அவன் விடுத்த சவாலை எண்ணிக் கொள்ளும் போது வெளிப்படையாக அவள் சொல்லாவிட்டாலும் பேச்சிக் கிழவியின் வளர்ப்பு தப்பாகப் போகவில்லை என்பதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவே செய்தது. அவளுக்கே தெரியாமல் அவன் மீது அவளுக்குள் உண்டாகியிருந்த நல்ல அபிப்பிராயங்கள் பழைய விஷயங்களை ஓரங்கட்டிவிட்டது. ஆனால் அவனுக்கு அப்படியில்லை. தினம் தினம் அவள் மீதான வெறுப்பிலும் கோபத்திலும்தான் கண்விழிக்கவே செய்தான். அவள் முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறியிலேயே அல்லும் பகலும் பாராமல் உழைத்ததன் பலனாக அவன் நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்திருந்தது. ஆனால் அந்த வெற்றியெல்லாம் அவனுக்குப் போதவில்லை. இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று அவன் உள்ளம் ஓய்வில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அதனால்தான் இந்த மூன்று வருட கால இடைவெளியும் அவன் கோபத்தைக் கொஞ்சமும் குறைக்கவில்லை. எனினும் அவள் மீதான கோபத்தில் அவன் மனம் அதிகமாக சிந்தித்ததும் அவளைப் பற்றிதான். அதனால்தான் அவளைப் பார்த்த மாத்திரத்தில் அந்தளவு வெறுப்பை அவன் பார்வையாலேயே வீசியது. அவள் பின்னே நடக்க அவன் அவள் முன்னே வேகமாக நடந்து சென்றுவிட்டான். அவளோ அதற்கு மேல் அந்தப் பைகளை எடுத்து கொண்டு நடக்க முடியாமல் ஓய்ந்து போய் ஒரு மரத்தின் நிழலில் சாய்ந்தபடி பையிலிருந்து கைபேசியை எடுத்து வீட்டிற்கு அழைக்க எத்தனிக்க, அதில் பேட்டரி தீர்ந்து அணைந்து போயிருந்தது. ‘கடவுளே!’ என்று அலுப்பும் சலிப்புமாக மீண்டும் தன் பையைத் தூக்கிக் கொண்டு நடக்க முன்னே சந்திரனை நிறுத்தி வைத்து ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார். “ஐயோ! பரிமளம் சித்தி பேச ஆரம்பிச்சா இப்போதைக்கு நிறுத்தாதே” என்றவள் யோசிக்கும் போதே அவருடைய கடைக்கண் பார்வை இவள் மீது விழுந்துவிட்டது. “அட நம்ம… தமிழு… எப்படி கண்ணு இருக்க… ஆளு ரொம்ப இளைச்சி போயிட்டாயிட்டுமா இருக்கு” என்றவர் அவளைப் போக விடாமல் தம் விசாரணைகளைத் தொடர அவளுக்கோ ஒரு பக்கம் தோளில் மாறியிருந்த பை கனத்தது, இன்னொரு பக்கம் நிற்க முடியாமல் பாதங்கள் கெஞ்சத் தொடங்கின. இதுவல்லாது சந்திரனையும் போகவிடாமல் அவர் நிறுத்திப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு அங்கே நிற்க சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது அவன் முகபாவனையே காட்டிக் கொடுக்க அவள் பொறுமையிழந்து, “சித்தி… நேரமாவது… வீட்டுக்குப் போகோணோம்” என்று சொல்லவும், “சரி கண்ணு நீ கிளம்பு” என்றவர் எப்படியோ மனசு வந்து அவளை அனுப்பிவிட்டு சந்திரனிடம் திரும்பியவர் சட்டென்று முன்னே சென்றவளை, “தமிழு” என்று அழைக்க, ‘ஐயோ! இந்த ரம்பம் விடாது போலேயே’ என்றவள் மனதிற்குள் கடுகடுத்தபடி, “என்னங்க சித்தி?” என்று திரும்ப, “ஆமா… வர வெள்ளிகிழமை மாப்பிளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வாராங்க” என்று கேட்டார். “மாப்பிளை வீட்டுக்காரங்களா? யார் வீட்டுக்கு” “நல்ல்ல்ல்லா கேட்ட போ” என்றவர், “ஒன்ற வீட்டுக்கு… ஒன்னைய பார்க்கத்தான் வராங்க… என்னவோ தெரியாத மாதிரி கேட்குற?” என்க, அவள் தலையில் இடியே இறங்கியது. அவள் அதிர்ந்து நிற்க நிலைமை புரியாமல் பரிமளமோ, “மாப்பிளை கூட ஒன்ற படிப்புதான் பிடிச்சு இருக்காராம் இல்ல… தோப்பு துறவு எல்லாம் இருக்காம்… எந்தக் கெட்ட பழக்கமும் இல்லையாம்… சும்மா சொல்ல கூடாது அதிர்ஷ்டகாரிதான்டி நீயி” என்றவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்க, அவள் பதிலேதும் சொல்லவில்லை. அதேசமயம் சந்திரன் அவரிடம், “எனக்கு நிலத்தில கொஞ்சம் வேலை கிடக்கு… நான் புறவு வந்து உங்ககிட்ட பேசுறேன்” என்று சொல்லி விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான். அதேநேரம் அதிர்ச்சியில் நின்றிருந்த தமிழிடம் பரிமளம், “என்னடி உனக்கு மாப்பிளை பார்க்குற விசயமே தெரியாதா? ஒனக்கு சொல்லாமல மயினி இம்புட்டு ஏற்பாடு பண்ணியிருக்காவுங்க” என்று கேட்ட கேள்வியில் அவள் யோசனையாக அவரை நோக்கினாள். ‘தெரியாது’ என்று சொல்லிவிட்டால் தன் பெற்றோரை அவமானப்படுத்தியதாகிவிடுமோ என்று எண்ணியவள், “இல்லீங்க சித்தி… வர போறாங்கன்னு தெரியும் ஆனா எப்போன்னு சொல்லல” என்று தன் உள்ளத்தின் வேதனையை மறைத்து கொண்டு சமாளிப்பாக பதிலளித்தாள். “அப்படியா கண்ணு” என்று புன்னகைத்தவர், “சரி நீ கிளம்பு… நான் வேலையெல்லாம் முடிச்சு போட்டு வூட்டுக்கு வரேன்” என்க, அவள் அந்த கணமே அங்கிருந்து கிளம்பினாள். அவள் பாதங்கள் அந்தப் பாதையில் அனிச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. அத்தனை நேரம் கனமாக இருந்த பை கூட அப்போது கனக்கவில்லை. வலித்து கொண்டிருந்த கால்களின் வலியை கூட அவள் அப்போது உணரவில்லை. அவள் மனதில் ஏறியிருந்த பாரத்தின் முன் அந்தப் பையின் கனம் அவளுக்குப் பெரிதாக இல்லை. நடந்தே தன் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தான் கேட்ட செய்தி உண்மையாக இருக்க கூடாது என்று மனதினோரமாக இருந்த கொஞ்சம் நம்பிக்கைதான் இன்னும் அவள் உடையாமல் இருக்க காரணம்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா