மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 9Post ReplyPost Reply: Paruvameithi - 9

Quote from monisha on June 13, 2022, 4:43 PM
ஆதி பெண்கள் டெஸ்டோஸ்டிரோன் ததும்பி வழிந்த பெரிய வலிமையான ஆணைத்தான் விரும்பி உறவு கொண்டார்கள். அதனால் கூடுதல் டெஸ்டோஸ்டிரோன் அடையாளம் கொண்ட ஆண்களுக்கே கூடல் வாய்ப்புகள் கூடின. தலைமுறை தலைமுறையாக இந்த தன்மை தொடர்ந்து வர, கடைசியில் பார்த்தால் பிற்காலத்தில் மனிதர்களில் ஆண்- பெண் உருவ வித்தியாசமான 'செக்ஸுவல் டைமார்ஃபிஸம்' (Sexual Dimorphism) அதிகரித்துவிட்டிருந்தது. மனிதப்பெண் முன்பு போல சிம்பான்ஸி மாதிரி சின்ன அளவிலேயே இருந்தாள். ஆனால் மனித ஆணோ பெரிதாகி கொண்டே போய் தன் இன்னொரு உறவுக்காரனான கொரில்லா மாதிரி ஆனான். இந்த கொரில்லா உடலமைப்புகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டன. கொரில்லா அதிகபட்ச டெஸ்டோஸ்டிரோன் கொண்ட மிருகம் என்பதால் அது பல பெண்களுக்கு ஒரே ஆண் என்கிற பாலிகேமி முறைப்படி வாழ்கிறது.  கொரில்லா மாதிரி உடல்வாகு கிடைத்தபின் மனித ஆண் கொரில்லாவின் கலவி முறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தான். அதுவரை ஆண் பெண்ணின் கலவி தயவுக்காக காத்து கொண்டிருந்த காலம் மலையேற, இப்போது பெண் நிறைய உணவு கொண்டு வரும் ஆணின் தயவுக்காக காத்திருந்தாள்.  தொடரும்...
9
வானத்தில் ஒளிர்ந்த முழு நிலவை அண்ணாந்து பார்த்தபடி முற்றத்தில் அமர்ந்திருந்தாள் கன்னிகை. “எத்தன நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க போற கனி… கொஞ்ச நேரம் போய் படுத்து தூங்கு” என்று அத்தை குரல் கொடுக்க, “தூக்கம் வந்தா தூங்க மாட்டேனா அத்தை… வரலயே… என்ன செய்ய… அதுவுமில்லாம… இருட்டுல என்னை மாதிரியே தனிச்சு இருக்க நிலவை பார்த்துட்டு இருக்க… மனசுக்கு ஒரு மாதிரி அமைதியா இருக்கு” என்றவள் நிதனாமாக புன்னகைத்தாள். “நீ இப்படி பேசுறது நல்லதுக்கு இல்ல கனி… அந்த திருநாவை பத்தியே நினைச்சிக்கிட்டு நீ உடம்பை கெடுத்துக்குற” கனிக்கு சரேலென்று கோபமேற, “யாரு… யாரு அவனை பத்தி நினைச்சா… அவனை எதுக்கு நான் நினைக்கணும்… அவன் ஒரு கோழை… உங்க புள்ள மாதிரியே அவனும்… அவனும் ஒரு கோழை… சை… இந்த ஆம்பளைங்க எல்லாமே இப்படிதான் இருப்பானுங்க போல… கோழை பசங்க” என்று சராமாரியாக அவள் கத்த தொடங்கியதும் அத்தையின் குரல் அடங்கியிருந்தது. “அத்தை… அத்தை… பேசுங்க… என்ன? உங்க புள்ளைய பத்தி பேசனதும் அப்படியே பொத்துக்கிட்டு வந்திருச்சா உங்களுக்கு… நான் என்ன தப்பா சொன்னேன்… உண்மையைத்தானே சொன்னேன் அவன் கோழைதானே” என்றவள் சீற, அத்தையின் பதில் குரல் கேட்கவில்லை. ஆழ்ந்த அமைதி மட்டுமே! கனி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டபடி, “போங்க… என்னை விட்டு நீங்களும் போயிடுங்க” என்று தன் இரு கால்களையும் கட்டி கொண்டு அழுதாள். திருநாவின் குடும்பம் அவள் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. அவளது சாதிய அடையாளத்தை சொன்ன மறுகணமே தங்களுக்குள்ளாக ஏதோ பேசி கொண்டவர்கள் அடுத்த நிமிடமே அவளிடம் சொல்லாமல் கூட எழுந்து போய்விட்டனர். திருநா மட்டும் அவள் முகத்தை ஏக்கமாக பார்த்து கொண்டே சென்றான். அத்தனை பெருமை மிக்க சாதியை சேர்ந்தவர்கள் போல! அவளுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. சாதிதான் முக்கியமென்றால் அதை முதலிலேயே கேட்டு தொலைத்திருக்கலாமே! எதற்கு காதல் வசனங்கள் பேசி அவள் மனதை கலைக்க வேண்டும். அவளுக்குள் ஆசைகளை விதைக்க வேண்டும். திருநா மீது அப்படியொரு ஆத்திரம் வந்த போதும் கூட கடைசி கடைசியாக கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையும் ஒட்டி கொண்டிருந்தது. அவனாக வந்து திரும்ப பேசுவான் என்று காத்திருந்தாள். அடுத்த நாள் அவள் பள்ளிக்கு சென்ற போது திருநா விடுப்பிலிருந்ததாக தெரிய வந்தது. ஒரு வாரத்திற்கு மேலாக அவன் வரவே இல்லை. அவன் அவள் கைபேசிக்கு அழைக்கவும் இல்லை. தானாக அவனிடம் சென்று பேசுவது அவளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று அவளும் அவனை அழைக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டு நாளில் அவன் ஊருக்கு திரும்பியிருந்தான். தன்னுடைய புது மனைவியுடன்! அவன் மாமனின் கடைசி மகளை திருமணம் முடித்திருப்பதாகவும் அவள் அவனை விடவும் பத்து வயது இளையவள் என்றும் அரசல் புரசலாக அவள் காது வரை கசிந்த தகவல்களை கேட்டதும் அவள் உள்ளம் கொதிகலனாக மாறியது. ஆனாலும் வெளியே தன்னுடைய உணர்வுகளை காட்டி கொள்ளாமல் மறைத்துக் கொண்டாள். முன்னமே அவள் மனம் பலவிதமான ஏமாற்றங்களுக்கு பழக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ அதனை சாதராணமாக கடந்து போகுமளவுக்கு அவள் ஒரளவு பக்குவப்பட்டிருந்தாள். ஆனால் அதே பக்குவம் எல்லோருக்கும் இருப்பதில்லை. அடுத்தவர்களின் அந்தரங்கங்களை எட்டி பார்ப்பதிலும் அதனை பலமாதிரியாக கண், காது, மூக்கு வைத்து சித்தரித்து பேசுவதிலும் இங்குள்ள மனிதர்களுக்கு கைதேர்ந்த அனுபவங்கள் இருந்தன. அப்படியாக கன்னிகை திருநாவின் காதல் முறிவை குறித்து அவதூறாக பல கதைகள் புனையப்பட்டன. அதில் அவள் சாதிய அடையாளமும் பள்ளி முழுக்க பரவிவிட்டதில் சில ஆசிரியர்கள் அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டனர். அவள் வீட்டிற்கு வழமையாக படிக்க வந்து போகும் மாணவர்களை அவர்கள் பெற்றோர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர். இதை எல்லாம் அவள் ஒருவாறு கண்டும் காணாமல் கடந்துவிட பழகி இருந்தாலும் சில நேரங்களில் இரத்தமும் சதையுமான அவள் இதயமும் குத்தி கிழிக்கப்படுகிறது. தீண்டாமை என்பது பாவச்செயல். தீண்டாமை என்பது குற்றம் என்ற வாக்கியங்கள் எல்லாம் புத்தகத்தின் முதல் பக்கத்தோடு நின்றுவிடுகின்றன. கற்று கொடுக்கும் ஆசிரயர்களே அதை பின்பற்றுவதில்லை.  இதற்கிடையில் அவளை எப்போதும் ஓரக்கண்களால் அளந்தபடி கடந்து செல்லும் திருநா இப்போதெல்லாம் நிமிர்ந்து அவளை பார்ப்பதே இல்லை. எதிரே வந்தால் கூட தலை குனிந்தபடியே அவளை கடக்கிறான். ‘சீ! இவ்வளவுதானாடா நீ’ என்றுதான் அவளுக்கு எண்ணத் தோன்றியது. அவன் வாங்கி தந்த புடவையை அவன் முகத்தில் விட்டெறிந்துவிட வேண்டுமென்ற கோபத்துடன் அதனை எடுத்து கொண்டு அன்று பள்ளிக்கு சென்றாள். எப்போதும் போல அவளை பார்த்து மறைந்து கொள்பவன் அன்றும் அவள் பைக்கை எடுக்க வரும் போது அங்கிருந்த மரத்தின் பின்னே சென்று நின்று கொண்டான். அங்கே யாரும் இல்லை என்பதை கவனித்தவள், “பி டி சார்” என்று அழைக்கவும் அவன் தட்டுத்தடுமாறி திரும்பினான்.  அவன் பார்வை அவளை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அலைபாய, “இந்தாங்க… நீங்க வாங்கி தந்த புடவை… நல்ல வேளையா இதை நான் ஒரு தடவை கூட கட்டவே இல்லை… இதை நீங்க எடுத்துட்டு போனாலும் சரி… இல்ல தீட்டுன்னு தூக்கி போட்டாலும் சரி” என்று விட்டு திரும்பி நடக்க, “கனி” என்று அழைத்தான். எரிச்சலுடன் திரும்பியவள், “என்னை அப்படி கூப்பிடாதீங்க” என்று சீற, “சாரி” என்றவன் அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “என்னை மன்னிச்சிடுங்க… அம்மாவும் மாமாவும் குடும்ப மரியாதை அது இதுன்னு என்னன்னவோ சொல்லி கட்டாயப்படுத்தி எனக்கு இந்த கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டாங்க… சத்தியமா எனக்கு இதுல உடன்பாடே இல்லை” என்று கண்ணீர் வடித்த அந்த ஆறடி மனிதனை பார்க்கும் போது அவளுக்கு அசூயையாக இருந்தது. தோற்றத்தில் மட்டும்தான் கம்பீரமும் ஆம்பளைத்தனங்களும் போல. மனதில் இல்லை. ‘கட்டாயப்படுத்தினா எப்படி… கையை பிடிச்சு தாலி கட்ட வைச்சுட்டாங்களோ’ என்று அவளுக்குள் எழுந்த கேள்வியை அவள் வாய்விட்டு கேட்கவில்லை. இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் அவர்களிடம் பதில் இருக்காது. அவனை அலட்சியமாக பார்த்து, “இதெல்லாம் என்கிட்ட சொல்லி என்னவாக போகுது” என்றவள் விர்ரென பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள். அந்த நொடியே அவளுக்குள் உருவாக்கி வைத்திருந்த அவனுடைய பிம்பம் சுக்குநூறாக உடைந்து நொறுங்கி போனது. அவன் மீது காதல் கொண்டது கூட எத்தனை அபத்தம் என்று எண்ணத் தோன்றியது. ஆனாலும் ஏமாற்றத்தின் வெளிப்பாடாக தனிமையில் இருக்கும் போதெல்லாம் அழுகை முட்டி கொண்டு வந்தது. விடிந்ததும் தன் துயரங்களை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு அவள் பள்ளிக்கு தயாராகிவிட்டு அத்தையின் படத்தின் முன்னே வந்து நின்று, “சாரி அத்தை… நான் உங்க பையனை பத்தி அப்படி பேசி இருக்க கூடாது… என்னதான் இருந்தாலும் அவன் நீங்க பெத்து வளர்த்த மகன்” என்று கம்மிய குரலில் சொன்னவள், “என்கிட்ட பழைய மாதிரி பேசுங்க… நீங்களும் இல்லனா எனக்கு யாரு இருக்கா?” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே கதவு தட்டும் ஓசை கேட்டது. பெருமூச்செறிந்து வாசல் கதவை சென்று திறக்க அங்கே வயது முதிர்ந்த மனிதர் ஒருவர் நின்றிருந்தார். “வாங்க ஐயா…?” என்று அவரை மரியாதையாக வரவேற்று உள்ளே அழைத்து தண்ணீர் தந்து உபசரிக்க,  “இல்ல மா… உன்கிட்ட நான் கொஞ்சம் முக்கியமா பேசலாம்னு வந்தேன்” என்றவர் மெதுவாக நடந்து வந்து தன்னை நிதானப்படுத்தி கொண்டு பேச துவங்கினார். “என்ன ஐயா… வாடகை ஏதாச்சும் ஏத்த போறீங்களா?” “அது இல்லமா… என் மகனும் மருமகளும் கூடி சீக்கிரம் சிங்கப்பூர் இருந்து இங்கே வந்துட போறாங்களாம்” “ஓ… நல்ல விஷயம்தான்… நீங்களும் அம்மாவும் இனிமே தனியா இருக்க வேண்டாம்” “ஆமா” என்றபடி அவளை கவலையுடன் ஏறிட்டவர், “பையன் என்ன சொல்றானா இந்த வீட்டை இடிச்சு பெருசா மாடி வீடா கட்டிடலாம்னு சொல்றான்” என, அவளுக்கு புரிந்துவிட்டது. அவரை ஆழமாக பார்த்து, “நான் உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த வீட்டை இடிக்க மாட்டேன்னு சொல்வீங்க… இப்ப என்னாச்சு?” என்று கேட்க, “அதிக தள்ளாட்டம் ஆகி போச்சு… இன்னும் எத்தன நாளைக்கு நாம இருக்க போறோம்… அதான் அவங்க விருப்பப்படி ஏதாவது செஞ்சிக்கட்டும்னு” என்றார். “சரி… நான் எப்போ வீட்டை காலி பண்ணி கொடுக்கணும்” “இந்த மாசக் கடைசில” “அவ்வளவு சீக்கிரம் எப்படிங்க ஐயா முடியும்… எனக்கு இரண்டு மாசம் டைம் கொடுங்க… நான் காலி பண்ணிடுறேன்” என்றவள் சொல்லவும் அவர் பெருமூச்சுவிட்டு வேண்டா வெறுப்பாக தலையசைத்துவிட்டு, “சரிமா… கொஞ்சம் சீக்கிரமா காலி பண்ணி கொடுங்க” என்றபடி புறப்பட்டுவிட்டார். அவர் சென்றதும் கனி அந்த முற்றத்து தூணை ஏக்கத்துடன் நெருங்கி கட்டி கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அந்த முதியவர் சொன்ன காரணமெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம். இல்லையெனில் அவருக்கும் அவளின் சாதிய அடையாளம் தெரிந்து போயிருக்கலாம். இந்த வீட்டை முதலில் வாடகைக்கு கேட்கும் போது அவள் அரசு பள்ளி ஆசிரியர் என்றறிந்து எதுவும் விசாரிக்காமல் உடனடியாக சம்மதித்தார். மனிதர்களும் மனங்களும் நேரத்திற்கு ஏற்றார் போல மாறுகின்றன. “வீட்டு ஓனர் சொல்லிட்டு போனதை எல்லாம் கேட்டீங்களா அத்தை” என்றவள் கலங்கிய விழிகளுடன் பேச அந்த வீடு அமைதியாக இருந்தது. “இந்த வீட்டுல நம்ம இரண்டு பேரும் சந்தோஷமா சேர்ந்திருந்த ஞாபகங்கள்னு எல்லாத்தையும் விட்டுட்டு போக போறோம்னு நானே கவலைல இருக்கேன்… நீங்க இன்னும் அதே பழைய கோபத்தோட பேசாம இருக்கீங்களா? இது நியாயமே இல்ல” என்றவள் கேட்க, இப்போதும் பதில் இல்லை. “நீங்க இப்படியே பேசாம இருந்தீங்க… நானும் உங்ககிட்ட பேச மாட்டேன்” என, மீண்டும் அமைதி மட்டுமே. மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள் தன்னுடைய தோள் பையை மாட்டி கொண்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியேறினாள். அத்தையின் குரல் கேட்காதது மனதில் பாரமாக அழுத்தியது. பள்ளியிலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மணியடித்து மாணவர்கள் சென்ற பின்னும் தனியே வகுப்பில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக நடந்து வந்த தலைமை ஆசிரியர் அவளை பார்த்துவிட்டு, “கனி” என்று அழைத்தபடி உள்ளே வந்தார். “சார்” என்று அவள் எழுந்து நிற்க, “என்னமா தனியா உட்கார்ந்திட்டு இருக்க… வீட்டுக்கு கிளம்பலயா?” என்று விசாரித்தார். “வீட்டுக்கு போனாலும் இப்படியே தனியாதான் சார் உட்கார்ந்திட்டு இருக்கணும்” அவள் பதிலை கேட்டு வருத்தத்துடன் அவளை ஏறிட்டவர், “நடந்திட்டு இருக்க பிரச்சனை எல்லாம் நான் கேள்விப்பட்டேன்… எனக்கும் என்ன செய்றதுன்னு புரியல” என, அவள் மௌனமாக நின்றாள். “என்னை உன் அப்பா மாதிரி நினைச்சிக்கோ கனி… உன் மனசுல என்ன கஷ்டம் இருந்தாலும் சொல்லு… என்னால என்ன பண்ண முடியுமோ நான் அதை பண்றேன்” என்றவர் அக்கறையாக பேச அவரை நிமிர்ந்து பார்த்தவள், சில நிமிட மௌனத்திற்கு பின், “எனக்கு ட்ரன்ஸ்பர் கிடைச்சா நல்லா இருக்கும்… அதுக்கு உங்களால் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா சார்?” என்று கேட்டாள். “என்னமா சட்டுன்னு இப்படியொரு விஷயத்தை கேட்ட… உன்னை மாதிரி ஒரு டீச்சரை போய் நான் எப்படி அனுப்புவேன்… நீ வந்த பிறகு எத்தனையோ பசங்க நல்லா படிக்க ஆரம்பிச்சு இருக்காங்க… பொறுப்பா இருக்காங்க… உன்னை இங்கிருந்து அனுப்ப எல்லாம் என்னால முடியவே முடியாது” என்றவர் தீர்க்கமாக உரைக்க, “என்னை புரிஞ்சிக்கோங்க சார்… என்னால இனிமே இங்கே இருக்க முடியும்னு தோணல… அத்தையோட ஞாபகத்துல நான் ஒரு மாதிரி பைத்தியம் பிடிச்ச நிலையில இருக்கேன் அதான் இடம் மாறினா நான் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவேன்… எந்த ஊரா இருந்தாலும் எனக்கு ஒகேதான்… ப்ளீஸ் சார்… எனக்கு இந்த ஹெல்ப்பை மட்டும் பண்ணுங்க” என்றவள் வேண்டுதலாக கேட்க அவர் அவள் மனநிலை புரிந்து கொண்டு, “சரி ம்மா நான் பண்றேன்” என, “தேங்க்ஸ் சார்” என்று மெலிதாக புன்னகைத்தாள். அவரிடம் பேசியது அவள் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. அவர் சொன்னது போலவே அடுத்த ஒரு மாதத்தில் அவளின் இடமாற்றல் ஆணை வந்து சேர்ந்திருந்தது. “எனக்கு இதை உன்கிட்ட கொடுக்கவே கஷ்டமா இருக்குமா” என்றவர் அந்த காகித உரையை அவளிடம் நீட்ட, அதனை ஆர்வமாக பிரித்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவள் முகமாற்றத்தை பார்த்த்வர், “என்ன கனி… ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, அவள் அதிர்ந்த நிலையில் அப்படியே நின்றாள். “என்னமா?” அவரை மெதுவாக நிமிர்ந்து பார்த்து, “இதுல போட்டிருக்க ஊர்தான் சார்… பிரச்சனை” என்றாள். “என்ன அந்த ஊருக்கு பிரச்சனை” என்றவர் அந்த ஆணையை மீண்டும் வாங்கி அதிலிருந்த கிராமத்தின் பெயரை படித்துவிட்டு, “கனிப்பத்தூர்… நல்ல ஊர்தானே மா… பெரியபாளையம் போற வழில இருக்குன்னு நினைக்கிறேன்… நான் கூட விசாரிச்சேனே” என்றார். “நல்ல ஊர்தான் சார்… ஆனா அது நான் பிறந்த ஊர்… கன்னிகைப்புத்தூர்” என்றாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா