மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 13Post ReplyPost Reply: Paruvameithi - 13

Quote from monisha on June 20, 2022, 6:24 PM
ஆதி மனிதனுக்கு அவ்வளவாக அறிவியல் தெரியாது. பெண்ணின் இடைகுள்ளே ஒளிந்திருக்கும் சினையங்கள் ரகசியமாக கருமுட்டைகளை வெளியேற்றிக் கருவுறுதலுக்கு உண்டான தங்கள் பங்களிப்பை செய்யும் சமாச்சாரமெல்லாம் அந்தக்கால ஆண்களுக்கு தெரியாதே! அதனால் ஆண்தான் விதைகளை உருவாக்கும் அதிமுக்கியமான பணிகளை செய்கிறான் என்றும் பெண் விளைநிலமாக இருந்து விதையை வளர்க்க உதவுகிறாள் என்றும் எண்ணினான். ஏன் இன்று வரை ஆணின் விந்தணுவை ஆங்கிலத்தில் ஸ்பெர்ம் Sperm என்றுதானே அழைக்கிறோம். கிரேக்க மொழியில் ஸ்பெர்ம் என்றால் 'விதை' என்று அர்த்தம். நிஜத்தில் ஆணின் விந்தணு ஒரு விதை இல்லை. விந்தணு என்ற ஓர் அடுக்கு குரோமோசோம் கரு முட்டை என்ற மற்றொரு அரை ஜீனோம் செல்லோடு சேர்ந்தாலே ஒழிய விதை என்ற அந்தஸ்த்தை பெற முடியாது.  ஆனால் இந்த விந்தணு = ஒரு குட்டி மனிதன் என்ற மூடநம்பிக்கையை மனித ஆண் நம்புவதற்கு பின்னணியில் ஒரு சுவாரிசியமான கதை இருந்தது.  தொடரும்...
13
பருவ வயதை எட்டியதுமே உடலுக்குள் ரசாயன மாற்றங்கள் துவங்கிவிடுகின்றன. இருபாலினரின் உடலும் மனமும் இனப்பெருக்கத்திற்கு தயாராகி அவர்களை எதிர்பாலினத்தை நோக்கி ஈர்க்கச் செய்கிறது. பூமியில் வாழும் எந்த ஜீவராசிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த உணர்வுகளுக்கு எல்லாம் சாதி மத வேறுபாடுகளே கிடையாது. இது இயற்கையின் நியதி. ஆனால் மனிதன் முன்னேற்றம் என்ற பெயரால் தங்கள் கூட்டத்தின் நியதியையும் நாகரிகத்தையும் மாற்றி கொண்டானே ஒழிய பருவ வயதை எட்டும் குழந்தைகளுக்கு அதனுடைய சரியான கற்பிதத்தையும் அத்தகைய சூழ்நிலையை கையாளும் அறிவையும் போதிக்க தவறிவிட்டான். கனியும் அப்படித்தான் மனத்தால் தவறினாள். அது எந்த வகையிலும் அவளுடைய தவறு இல்லை. சமத்துவமும் பகுத்தறிவும் இல்லாத நம் சமூகத்தின் தவறு.  அன்று பேருந்தில் பேசிய பிறகு மீண்டும் சிலமுறைகள் அவனை பேருந்தில் பார்த்தாள். அவன் புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். வெளியே இயல்பாக தன்னை காட்டி கொண்டாலும் அவனை பார்க்கும் போதெல்லாம் உள்ளுர அவளுக்குள் ஒரு மாதிரி உஷ்ணம் பரவியது. ஒவ்வொரு முறை அவனை பார்க்கும் போதும் ஜூர நிலைக்கு ஆட்பட்டவள் போல அவதியுற்றாள்.  இதுநாள்வரையில் தனக்கே உரித்தான கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தவள் அதன் நிஜ ரூபமாக ஒருவன் எதிரே வந்து நிற்கவும் தடுமாறி போனாள். அன்று பேருந்து தாமதமானது. “இன்னும் பஸ் வரலயே” என்று தன் கைகடிகாரத்தை பார்த்து கொண்டே வந்து அவன் அவள் அருகே வந்து நிற்க, “உஹும்” என்று தலையை மட்டும் அசைத்தாள். “எவ்வளவு நேரமா வெயிட் பண்ற” “இப்பதான் கொஞ்ச நேரமா” “ஓ” என்றவன் கல்லூரி போகும் அவசரத்தில் இருந்தான். அவன் பேருந்து வருகிறதா என்று எட்டி எட்டி பார்க்க, அவள் அவன் தவித்து கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள். சட்டென்று அவன் விழிகள் அவள் புறம் திரும்பவும் அவள் சாமர்த்தியமாக தன் பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள். “இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டாகுது தெரியலயே… எப்பவும் டைமுக்கு வந்துடும்…” என்றவன் படபடப்புடன் கூற, “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும்” என்றாள் அவனை ஆசுவாசப்படுத்தும் வகையில்! “வர காணோமே… ப்ச் லேடாகுது… அதுக்குதான் பஸ்ஸும் வேணாம் ஒன்னும் வேணாம்… நான் பைக்ல போறேன்னு சொன்னேன்… இந்த அப்பத்தாதான்” என்றவன் நாலாவது முறையாக தன் வாட்சையும் பேருந்து வரும் வழியையும் பார்த்து புலம்பிவிட்டு, “உஹும் இது வேலைக்கு ஆகாது… யாரையாவது லிப்ட் கேட்டு போயிட வேண்டியதுதான்” என்று முந்தி கொண்டு முன்னே நின்று சாலையில் வரும் வண்டிகளை பார்த்து கொண்டிருந்தான். எந்த வாகனமும் வருவதக தெரியவில்லை. அவனுக்கு டென்ஷன் ஏறியது. ஆனால் கனி எந்தவித படபடப்புமின்றி நிதானத்துடன் நிற்பதை கவனித்தவன், “உனக்கு லேட்டாகல… நீ டென்ஷனாகாம நிற்குற” என்று கேட்க, “லேட்டாகுதுதான்… ஆனா என்ன பண்றது… எத்தனை மணிக்கு வந்தாலும் எனக்கு இந்த பஸ் விட்டா வேற வழி இல்லயே” என்று சாதராணமாக பதிலளித்தாள்.  அவன் பதிலை கேட்டதும் புன்னகை பூத்தவன், “கரெக்ட்தான்… நமக்கு வேற ஆப்ஷனே இல்லனா நாம டென்ஷனே ஆக வேண்டாம் இல்ல… சின்ன பொண்ணா இருந்தாலும் நீ நல்ல தெளிவா பேசுற” என, அவள் அமைதியாக தலையை குனிந்து நின்றிருந்தாள். அவனின் புன்னகை முகத்தை பார்க்கையில் ஏற்பாடும் தடுமாற்றத்தில் அவள் தவித்து கொண்டிருக்க, “ஆமா… நீ ஸ்கூல் முடிச்சிட்டு என்ன கோர்ஸ் ஜாயின் பண்ண போற” என்று சகஜமாக பேச்சு கொடுத்தான். அவள் யோசனையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு, “தெரியல” என்றாள். “ஏன்… அடுத்த என்ன பண்ண போறோம்னு உனக்கு எந்த ஐடியாவும் இல்லையா?” “நான் ப்ளஸ் டூ பாஸா ஆவனான்னே தெரியல” என்றவள் ஒரு மாதிரி நம்பிக்கையின்றி பேசவும் அவன் சிரித்துவிட்டு, “அதென்ன பெரிய விஷயமா… அதெல்லாம் பாஸாகிடலாம்” என்றான். அவன் சுலபமாக சொல்லிவிட்டான். ஆனால் அவளுக்கு அது பெரிய விஷயம்தான். அடுத்த சில நொடிகளில் பேருந்து வந்து நிற்க அவர்கள் உரையாடல் அத்துடன் துண்டிக்கப்பட்டது. பேருந்து மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. அதற்கு பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் கூட்டத்துடன் கூட்டமாக இருவரும் ஐக்கியமாகிவிட்டனர். ஆனால் அவனுடைய ஸ்டாப் வந்ததும் அவள் தலையை குனிந்து ஜன்னல் வழியாக பார்க்க, அவனும் அதை எதிர்பார்த்தவன் போல கையசைத்துவிட்டு கடந்தான். அப்போதுதான் அவள் மூளைக்கு உரைத்தது. அவன் பெயர் என்னவென்று கேட்கவே இல்லையே! கேட்டிருக்க வேண்டுமோ? அடுத்த முறையாவது கேட்க வேண்டுமென்று எண்ணி கொண்டாள். ஆனால் அதன் பின்பு அவனை பேருந்தில் அவள் பார்க்கவே இல்லை. தேடலும் தவிப்புமாக மனம் களைத்து இவ்வளவுதான் தனக்கு வாய்த்தது என்று அவள் தன்னைத்தானே ஆறுதல்படுத்தி கொள்ளும் போது மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. பள்ளியிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள். அவர்கள் ஊருக்கு செல்ல ஒரே ஒரு பேருந்து மட்டும்தான் இருந்தது. அதுவும் கூட்டமாக! ஏறலாமா வேண்டாமா என்று சிலமுறைகள் குழம்பி வேறு பேருந்து வருகிறதா என்று பார்த்துவிட்டு அந்த பேருந்து புறப்படவும் வேறு வழியில்லாமல் அவள் வேகமாக அதில் ஏறி கூட்டத்தில் தன்னை நுழைத்து கொள்ளும் போது, “கன்னிகை” என்று பின்னிருந்து அவன் அழைப்பு குரல் கேட்டது. குல்மொஹர் மரம் போல அவள் மேனி நரம்புகளெல்லாம் பூவாக மலர்ந்து அவளின் காதல் உணர்வுகளை தூண்டிவிட்டன. அவள் பொங்கிய உற்சாகத்துடன் அவன் புறம் திரும்ப, “என்ன? உன் சீட்டை யாரோ பிடிச்சிட்டாங்க போல” என்று கேலி புன்னகையுடன் கேட்டான். “ப்ச்… ஆமா” என்று கவலையுடன் தலையசைத்தாலும் அது ஒன்றும் இப்போது அவளுக்கு அத்தனை வருத்தமாக இல்லை. அவள் மேலும், “ஆமா என்ன நீங்க இங்கே… எப்பவும் காலேஜ் பஸ் ஸ்டாப்லதானே ஏறுவீங்க” என்று கேட்கவும், “இன்னைக்கு காலேஜ் கட்டு… பிரண்டோட படம் பார்க்க வந்தேன்” என்றதும், “அப்படியா?” என்றவள் இன்றாவது அவனிடம் பெயரை கேட்கலாம் என்று திரும்பும் போது நடத்துனர் டிக்கெட் போடுகிறேன் பேர் வழி என்று,  “உள்ளே போ… உள்ளே போய் நில்லு… ஏன் வழிலயே நிற்குற” என்று சொல்லி அவர்கள் இருவரையும் தனித்தனியாக பிரித்துவிட்டார். அதற்கு பிறகு அவர்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகுதான் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள நேரிட்டது. ஊருக்குள் போகும் சாலையின் இருபுறமும் பச்சை பசலென்று வயல் வெளிகள் இருக்கும். அந்த சாலையில் நடந்து வலது புற வயல்களிலூடே வரப்பு ஓரத்தில் நடந்து சென்று அங்கிருந்து மாந்தோப்பிற்குள் புகுந்து சில தூரங்கள் நடந்தால் கனியின் வீட்டை அடையலாம். ஆனால் சேதுராமன் வீட்டிற்கு செல்ல சாலையில் நேராக கொஞ்ச தூரம் நடந்தாலே போதும். அவ்வழியாக கனியின் வீட்டிற்கும் செல்லலாம் என்றாலும் அவர்கள் குடும்பத்தினர் அந்த சாலைக்குள் செல்வதை யாரும் விரும்பமாட்டார்கள். வேலிகள் போட்டு தடுக்காவிட்டாலும் சந்ததி சந்ததியாக சொல்லி வளர்க்கப்பட்ட சாதி எனும் தீண்டாமை முள்வேலிகள் மனித மனங்களில் மண்டி கிடந்தன. நிஜமுள்வேலிகளை விட அது ஆபத்தானது. அதனை தாண்டிச் செல்வதும் தகர்த்து எறிவதும் மிகவும் கடினம்.  கனி தன் வழியில் திரும்ப, அவன் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு தன் வழியில் செல்ல போகவும் சட்டென்று திரும்பி, “ஆமா… உங்க பேர் என்ன?” என்று கேட்டுவிட்டாள். அவளை வியப்புடன் பார்த்தவன், “என் பேர் தெரியாதா உனக்கு?” என்று எப்போதுமான அவனின் அக்மார்க் புன்னகையுடன், “அருள்மொழி” என்றான். அவன் பெயரை கேட்டு அவள் புருவங்கள் உயர்ந்து நிற்க, “ஆக்சுவலி என் முழு பெயர் அருள்மொழி வர்மன்” என, “பேர் புதுசா இருக்கு” என்றாள். அவள் உலகத்திற்கு புரிபடாத பெயர் அது. “புதுசா இருக்கா… இந்த பேர் அதர பழசுமா… அதுவும் ஆயிரம் வருஷத்துக்கு பழைய பேர்” என்று சிரித்து கொண்டே சொன்னவன். “ராஜராஜசோழன் தெரியுமா உனக்கு” என்று கேட்க, அவள் ஞே என்று விழித்தாள். “ராஜராஜ சோழன் தெரியாதா உனக்கு… நீ ஸ்கூல் புக்ல படிச்சதில்லை” அவ்வளவு பெரிய படிப்பாளி எல்லாம் அவள் இல்லை என்பதால் அவனை சங்கடத்துடன் பார்த்து, “படிச்ச மாதிரி இருக்கு” என்று இழுத்தாள். “எங்க தாத்தா இருக்காரு இல்ல… அவருக்கு பொன்னியின் செல்வனா ரொம்ப பிடிக்கும்… நாமெல்லாம் ராஜராஜசோழன் வம்சம்னு பெருமையா சொல்லுவாரு… அந்த இன்ஸ்பிரேஷன்லதான்… நான் பிறந்ததும் இந்த பெயரை வைச்சிட்டாரு” “பொன்னியின் செல்வனா… அப்படினா?” அவள் விசித்திரமான பாவனையுடன் கேட்க, “ஆக்சுவலி அது ஒரு சரித்திர நாவல்… நீ கேள்விப்பட்டதில்லை” என்றவன் மீண்டும் அவளை பார்க்க, “உஹும்” என்று உதட்டை பிதுக்கினாள். “சரி… நாளைக்கு பஸ்ல போகும் போது நான் உனக்கு அந்த புக்கை எடுத்துட்டு வந்து தர்றேன்” என்றவன் சொல்ல, “நாளைக்கு நீங்க பஸ்ல வருவீங்களா?” என்று மனதில் பொங்கிய ஆர்வத்துடன் அவள் கேட்டுவிட, “வருவேனே… போன வாரம் முழுக்க காலேஜ்ல பங்ஷன் நடந்துச்சு… அதான் பைக்ல போனேன்… இனிமே பஸ்லதான் வருவேன்” என்றவன் அவன் சொன்னதை கேட்டதும் அவளுக்கு அப்படியொரு சந்தோஷம். அப்போதுதான் அவள் கவனித்தாள். அவனிடம் பேசி கொண்டே சாலை வழியாக வந்துவிட்டதை! “ஐய்யய்யோ! நான் அந்தப் பக்கமா போகணும்” என்றவள் அப்படியே தயங்கி நின்றுவிட, “ஏன்? இந்த வழியா போனா உங்க வீடு வருதா?” என்று கேட்க, “இல்ல… இப்படி போனா ஊருக்குள் போய் போகணும்… நான் அதோ தெரியுதே… அந்த மாந்தோப்பு பின்னாடி போய் சுடுகாட்டுக்கு போற… ஒத்தையடி பாதைல வீட்டுக்கு போயிடுவேன்” என்று அவனிடம் தலையசைத்து புன்னகைத்துவிட்டு தன் வழியில் திரும்பும் போது அவனை மீண்டும் பார்த்தாள். அழகாக புன்னகைத்து கையசைத்தான். அந்த ஒற்றையடி பாதையில் தனியாக நடந்து வந்தவளுக்கு தன் வாழ்வும் தன் நிலைமையும் நினைவுக்கு வந்தது. ஊர் தலைவர் சேதுராமனின் பேரன்… அருள்மொழி வர்மன்… ராஜராஜ சோழன் வம்சம் என்று பெருமைப்பட்டு கொள்பவன். ஆனால் தான் யார்? ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழும் வெட்டியான் மகள்! கண்ணில்லாதவன் வரையும் ஓவியம் போல எதார்த்தமும் ஆதாரமுமற்ற கற்பனைகள் அவளுடையது என்பதை அவள் அறியாதவள் அல்ல. ஆனாலும் அதனை தவிர்க்க முடியாத ஏதோவொரு உணர்வு அவளை அடுத்தடுத்த நிலைக்கு கடத்திச் சென்றது. பிரவாகமாக பொங்கி வரும் நதியின் ஓட்டத்தில் சிக்கி கொண்ட கூழாங்கற்களை போல பருவமெய்திய அப்பெண் தனது உணர்வுகளுக்குள்ளாக அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தாள். எதிர்காலத்தில் அந்த உணர்வுகளே காட்டாற்று வெள்ளமாக அவளை தடம் தெரியாமல் தூக்கியெறிந்துவிட போகும் என்ற அபாயத்தை அறியாமல். கனி விழிகளை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். பேருந்து அமைதியாக தன் பாதையில் சென்று கொண்டிருந்தது. இன்னும் அவள் ஊர் வருவதற்கு நிறைய நேரம் இருந்தது. மீண்டும் விழிகளை மூடி கொண்டதும் பொன்னியின் செல்வன் நாவலுடன் அருள்மொழி வர்மன் பிரசன்னமானான். “இதான் அந்த புக்… மொத்தம் அஞ்சு பாகம்… நீ இந்த புக்கை படிச்சி முடிச்சு கொடுத்ததும் இரண்டாவது பாகத்தை எடுத்துட்டு வந்து தர்றேன்” என்று அந்த புத்தகத்தை கொடுத்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கிவிட்டான். அவன் செல்லும் திசையை பார்த்துவிட்டு அவன் கொடுத்த நாவலை பார்த்தாள். ‘இவ்வளவு பெருசா இருக்கு… இதெப்படி படிக்கிறது’ என்று முதல் பாகத்தை பார்த்தே பெருமூச்சுவிட்டவள் அதனை பத்திரமாக தன் பையில் வைத்து கொண்டு பள்ளிக்கு சென்றுவிட்டாள். பதினொன்றாம் வகுப்புகளை பெரும்பாலும் எந்த ஆசிரியரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். யாராவது ஒன்றிரண்டு பேர் மட்டும் பொறுப்பாக வந்து பாடம் நடத்திவிட்டு செல்வார்கள். மற்ற நேரங்களில் அவளும் கயலும் கதையடித்து கொண்டு இருப்பார்கள். இதுதான் வழக்கமாக நடப்பது. ஆனால் அன்று அவளுக்கு என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்ற ஆவலுடன் அந்த நாவலை பிரித்து படிக்க ஆரம்பித்தவள்தான். அதற்குள்ளாகவே மூழ்கி போய்விட்டாள். அவளுக்கே வியப்பாக இருந்தது. பத்து நிமிடத்திற்கு மேலாக எந்த புத்தகத்தையும் கையில் வைத்து அவளால் படிக்க முடியாது. “இம்புட்டு நேரமா என்னடி படிக்கிற…” என்று கயல் கடுப்பாகி அவளை தொந்தரவு செய்த போதும் கனி கண்டுகொள்ளவே இல்லை. வீட்டிலும் இதே கதைதான் நடந்தது. “ஏய் கனி… தண்ணி கொண்டாந்து வைச்சிட்டு படிச்சாதான் என்ன?” என்று சாந்தி கடுப்பாக, “சரி சரி எடுத்துட்டு வரேன்” என்று ஏனோ தானோவென்று சொல்லும் வேலையை செய்துவிட்டு மீண்டும் படிக்க அமர்ந்து கொள்வாள். “என்னடி ஒரு குடம்தான் எடுத்துட்டு வந்து வைச்சிருக்க?” என்று சாந்தி எரிச்சலாகி கத்த, “நாளைக்கு எடுத்துகலாம் மா” என்று சலித்து கொண்டு மீண்டும் பொன்னியின் செல்வனுடன் வீட்டின் மூலையில் முடங்கி கொண்டாள். சாந்திக்கு அவள் படிப்பது கதை புத்தகமா பாடப்புத்தகமா என்று வித்தியாசம் தெரியவில்லை. “சரி புள்ள ஏதோ படிக்குது” என்று அதற்கு மேல் சாந்தியும் மகளை எதுவும் கேட்டு கொள்ளவில்லை. மூன்றே நாளில் முதல் பாகத்தை முடித்துவிட்டு வந்தவள் அருளிடம் சென்று, “இரண்டாம் பாகம் எடுத்துட்டு வந்து தர்றீங்களா?” என்று கேட்கவும் அவன் ஆச்சரியத்துடன், “அதுக்குள்ள முதல் பாகம் முடிச்சிட்டியா?” என்று வினவினான். “ரொம்ப நல்லா இருந்துச்சு… அதான் படிச்சிட்டேன்” என்று கனி முதல் பாகத்தை திருப்பி கொடுக்க, அடுத்த நாள் அவன் பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கும் போது இரண்டாம் பாகத்தை கொண்டு வந்து கொடுத்தான்.  பொன்னியின் செல்வன் படிப்பதன் நீட்சியாக அருள்மொழியுடனான கனியின் பழக்கமும் சந்திப்பும் நீண்டது. நாவலை பற்றியும் நாவலில் வரும் கதாபாத்திரங்களை பற்றியும் பேருந்தில் சந்திக்கும் போதெல்லாம் கனியும் அருளும் பேசுவார்கள். இருபது நாளில் நாவல் முழுவதையும் முடித்துவிட்டாள். அன்று பள்ளி முடித்து இருவரும் பேருந்திலிருந்து இறங்கியதும் கனி அவனிடம் இறுதி பாகத்தையும் முடித்துவிட்டதாக சொல்லி புத்தகத்தை திருப்பி தந்தாள். “பரவாயில்ல… அஞ்சு புக்கையும் நீ செமா பாஸ்டா படிச்சு முடிச்சிட்ட… சரி இப்போ சொல்லு உனக்கு… எந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சுது” “உங்களுக்கு யார் பிடிக்கும்னு முதல சொல்லுங்க… அப்புறம் நான் சொல்றேன்” என்று கனி அவனை திருப்பி கேட்க, “ஆப்வியஸ்லி எனக்கு வந்தியதேவனைதான் பிடிக்கும்” என்றவன் மீண்டும் அவளை பார்த்து, “உனக்கும் வந்தியதேவனைதானே பிடிக்கும்” என்று வினவினான். “பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்னு சொல்ல மாட்டேன்” என்றாள். “அப்படியா? சரி இரு… நானே சொல்றேன்” என்று அருள் அவளிடம், “அருள்மொழியை பிடிக்கும் கரெக்டா?” என்று கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இல்ல… எனக்கு அருள்மொழியை பிடிக்கல” என்றாள். “பிடிக்கலயா” என்றவன் அதிர்ச்சியுடன் பார்க்க, “ம்ம்ம் ஆமா பிடிக்கல” என்றாள். “என்னம்மா இப்படி சொல்ற… கதையே அவரோடதுதானே” “ஆனா எனக்கு பிடிக்கலயே” “அப்படினா உனக்கு ஆதித்த கரிகாலனை பிடிக்குமா?” “ஏன் ஆம்பிளைங்க பேராவே சொல்றீங்க” “அப்போ குந்தவையா?” “உஹும்” “குந்தவையும் இல்லனா நந்தினிதானே” என்றவன் திடமாக சொல்ல அவள் இல்லையென்று மறுக்க, “அம்மா தாயே நீயே சொல்லிடு எனக்கு தெரியல” என்றவன் கும்பிடு போடவும் அவள் சிரித்துவிட்டு, “எனக்கு பூங்குழலியைதான் பிடிச்சிருந்தது” என்றாள். “பூங்குழலியா?” என்றவன் ஆச்சரியமாக பார்க்க, “ஆமா” என்றவள் அவனை பார்த்து, “மத்த எல்லோரும் ஏதோ ஒரு வகையில ராஜவம்சத்தோட சம்பந்தப்பட்டவங்க… ஆனா பூங்குழலி அப்படி இல்ல… சாதாரண குடும்பத்தில பிறந்தாலும் அவ எவ்வளவு தைரியமா இருக்கா… அந்த தைரியம்தான் பிடிச்சிருந்துச்சு” என்றவள் உணர்வுபூர்வமாக அந்த கதாபாத்திரத்துடன் தன்னை பிணைத்து கொண்டிருந்தாள். “பூங்குழலிய பிடிக்கிறது ஓகே… ஆனா அருள்மொழியை பிடிக்கலன்னு ஏன் சொன்ன?” “அருள்மொழி பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா எனக்கு பிடிச்சிருக்கும்” “அதெப்படி.. ராஜவம்சத்துல பிறந்த அருள்மொழி எப்படி ஒரு சாதாரண பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்” “அப்போ பிறந்த சாதியும் குலமும்தான் பெருசு இல்ல… எல்லா காலத்திலயும் சாதி இருந்திருக்கு… சாதி வெறி பிடிச்ச மனுஷங்க இருந்திருக்காங்க… நாம மேலே கீழன்னு தரம் பிரிக்கிறாங்க… பிடிச்ச பொண்ண தைரியமா எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாதவன் எவ்வளவு பெரிய தேசத்திற்கு மன்னனா இருந்ததான் என்ன?” என்றவள் படபடவென பட்டாசு போல வெடித்து முடிக்கவும் அருள்மொழி அவளை ஆழமாக பார்த்தான். சில நொடிகள் அவர்களுக்கு இடையில் ஒரு கனத்த மௌனம் சஞ்சரித்தது. வயல்களுக்கு இடையில் பிரியும் சாலைகளில் நடப்பது போல நட்புக்கும் காதலுக்கும் இடையில் நகரும் சாலையில் இருவரும் பயணித்தனர். அது நட்பும் இல்லை. காதலும் இல்லை. பரஸ்பர ஈர்ப்பு நிலையா என்று இருவருக்குமே தெரியவில்லை. மௌனமாக முன்னே நடந்தவன் அவளிடம் திரும்பி, “நீ இந்த கதையை வேற மாதிரி பாயின்ட் ஆப் வியூல பார்க்கிற கனி” என, அவள் தலையை கவிழ்ந்து கொண்டு, “என் அறிவுக்கு என்னை தோணுச்சோ அதை சொன்னேன்” என்றவள் அதன் பின் அவனை திரும்பியும் பாராமல் தன் வழியில் சென்றுவிட்டாள். அவள் பேசிய விஷயங்களை பற்றி தீவிரமாக யோசித்து கொண்டே அருள்மொழி தன் வீடு வந்து சேர, அதற்கு முன்பாகவே அவனும் கனியும் அடிக்கடி பேருந்தில் சந்தித்து கொள்வதும் பேசி பழகுவதும் சேதுராமன் காதிற்கு சென்று சேர்ந்திருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா