மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Paruvameithi...Paruvameithi - 25Post ReplyPost Reply: Paruvameithi - 25

Quote from monisha on July 13, 2022, 7:16 PM
கலாச்சாரம் வளர வளர பெண்ணின் நிலைமை மோசமாகி கொண்டே போனது. ஏதோ பிள்ளையை பெற்று கொடுக்கும் அந்த பெரும் பணியை அவளால் மட்டுமே செய்ய முடியும் என்பதால் கர்ப்பம் தரிக்கும் கருவி என்று அவள் பயன்படுத்தப்பட்டாள். மற்றபடி அவளுக்கு மதிப்பு எதுவும் இல்லை.  இன்னும் கேட்டால் பெண்களை பெற்றெடுப்பது பேரிழப்பாக கருதப்பட்டது. என்னதான் பெண்ணை பெற்று வளர்த்து ஆளாக்கினாலும் அவள் வேறொருவனுக்கு சொந்தமாக போகிறாள். அவளுடைய வாரிசு அவர்கள் குடும்ப பெயரை சுமக்க போகிறது. பெற்றோரின் முதுமையிலும் உடன் இருந்து உதவவும் போவது இல்லை. பிறகு எதற்கு பெண் பிள்ளைகள்! இப்படிதான் பெண் சிசு கொலைகள் அதிகரித்தன. உலகெங்கும் உள்ள அம்மாக்கள் தங்கள் பெண் சிசுக்களை கொல்லத் தொடங்கினார்கள். அரேபிய அம்மாக்கள் பெண் குழந்தைக்களை பாலைவன மணலில் புதைத்தும் இந்திய அம்மாக்கள் நெல்மணி, அரளி விதை, கள்ளிப் பால் கொடுத்தும், சீன அம்மாக்கள் நிராதரவாக தூக்கி போட்டுவிட்டும் சென்றார்கள், இதை ஒரு குற்றமாக அல்லது பாவச்செயலாக எந்த அம்மாக்களும் கருதவில்லை. பெண்ணாக பிறந்து அதுவும் என்னை மாதிரி கஷ்டப்பட வேண்டுமா? அதற்குப் பதிலாக அது எதுவும் தெரியாமல் போய் சேர்வதே மேல், என்றுதான் எல்லோரும் நம்பினார்கள்.
25
அவர்கள் பயணித்த கார் சென்னை மாநகரத்திற்குள் நுழைந்து வாகன நெரிசலுக்குள் சிக்கி மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. கனி தன் கைப்பேசியில் நேரத்தை பார்த்தாள். ஊரிலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போகிறது. இன்னுமும் அவன் சொன்ன இடம் வந்து சேரவில்லையா என்ற கடுப்புடன் அவன் புறம் பார்வையை திருப்ப, “டைம் பார்த்துக்கிட்டே இருந்தா மாயாஜாலமா நாம் போற இடம் பக்கத்துல வந்திருமா என்ன?” என்றவன் எகத்தாளமாக உரைத்தான். அதுவும் பார்வையை திருப்பமாலே! ‘ரோட்டை பார்க்குற மாதிரி… இவன் நம்மலதான் பார்த்துக்கிட்டு வரான் போல… என்னதான் இவன் மனசுல நினைச்சிட்டு இருக்கான்’ என்றவள் வாயிற்குள் முனங்கவும், “என்னன்னு சொல்லவா?” என்றவன் அவள் புறம் திரும்பி நக்கலாக புன்னகைக்கவும் அவள் ஒரு நொடி திகைப்புற்றாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு, “நான் ஒன்னும் உன்கிட்ட பேசல… நீ என்கிட்ட பேசுற வேலை வைச்சுக்காதே” என்றபடி முறைத்தாள். “இல்ல… நான் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கன்னு கேட்ட மாதிரி இருந்துச்சு” “நான் ஏதோ தனியா புலம்பிட்டு வந்தேன்… நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டு பேசாதே… ஒழுங்கா வண்டி ஓட்டுற வேலையை மட்டும் பாரு… ஸ்பீட் பிரேக்கர் கூட தெரியுமா எடகுடமா ஓட்டிக்கிட்டு” என்றவள் எரிந்து விழ, “அது ஏதோ ஒரு தடவை ஜெர்க் ஆகிடுச்சு… அதுக்கு நான் எடகுடமா ஓட்டுறேன்னு சொல்லுவியா… ஏன்? நீ வேணா வந்து ஒட்டு… நான் உட்கார்ந்துட்டு வரேன்” என்றவன் பதிலுக்கு அவளிடம் ஏற, “எனக்கு ஒட்ட தெரிஞ்சா… ஓட்ட மாட்டேனா?” என்றவள் திரும்பி அவனை முறைத்தாள். “தெரியாது இல்ல… அப்போ பேச கூடாது… வாயை மூடிக்கிட்டு வரணும்” “நான் அமைதியாதான் வந்தேன்… நீதான் என்னை வம்பிழுத்த” “முதல நீதான் என்னை பத்தி ஏதோ புலம்பிட்டு வந்த” என்றவன் அவளை பார்த்து அழுத்தமாக சொல்லவும், “சரியான நசை… உன் கூட வந்திருக்கவே கூடாது” என்றவள் சொல்லும் போது காரை அவன் ஓரங்கட்டி நிறுத்தினான். “வந்துட்டோமா?” என்றவள் ஆர்வமாக இறங்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். அது ஒரு அசைவ உணவகம்! “இங்கேயா?” என்றவள் குழப்பத்துடன் நோக்க,  “இங்கேதான்… வா சாப்பிடலாம்” என்றவன் காரை நிறுத்திவிட்டு இறங்க அவள் கடுப்பாகிவிட்டு,  “எனக்கு பசிக்கல… கிளம்பலாம்” என்றவள் திரும்பி நடந்தாள்.  “எனக்கு பசிக்குது… நான் சாப்பிட போறேன்” என்றவன் பாட்டுக்கு உள்ளே சென்று அந்த உணவகத்திலிருந்த சௌகரியமான இருக்கையாக பார்த்து ஐக்கியமாகிவிட்டான். “எங்கேயோ போகணும்னு பரபரப்பா என்னை கூட்டிட்டு வந்துட்டு… இப்போ ஹோட்டல வந்து உட்கார்ந்துட்டு சாப்பிடலாம்குற” என்றவள் எரிச்சலுடன் மொழிய, “காலைல இருந்து சாப்பிடல… மனுஷனுக்கு பசிக்காதா?” என்றவன் அவளிடமிருந்து பார்வையை திருப்பி கொண்டு, “பேரர்” என்று அங்கே நின்றிருந்த சிப்பந்தியை அழைத்தான். “ஒன் மினிட் சார்” என்றவன் மெனு கார்டை கொண்டு வந்து கொடுக்க அதனை பிரித்து பார்த்தவன் அசைவ உணவுகளின் அத்தனை வகைகளையும் சொல்லி முடித்துவிட்டு நிமிர, கனி அவனை எரிப்பது போல பார்த்து கொண்டு நின்றிருந்தாள். “எதுக்கு இப்படி முறைச்சிட்டு நிற்குற… உட்காரு… உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லிக்கோ… இங்கே முயல் கறி நல்லா இருக்கும்… சாப்பிட்டு பாரு” அவள் முகம் கோபத்தில் சிவந்தது. “நான் உன் கூட முயல் கறி சாப்பிடவா வந்தேன்” என்று சீற, “அவங்களுக்கு எதுவும் வேண்டாமா… நீ எனக்கு எடுத்துட்டு வாபா” என்றவன் அவளை கண்டுகொள்ளாமல் சிப்பந்தியிடம் திரும்பி பேச, அவன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அவள் அவனை முறைத்து கொண்டு நிற்க, அவன் பாட்டுக்கு எழுந்து சென்று கைகள் கழுவி கொண்டு வர அவள் அப்படியே நின்றாள். அதற்குள் சிப்பந்தி அவன் சொன்ன உணவு வகைகளை கொண்டு வந்து வைக்க, “நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் நின்னுக்கிட்டேவா இருக்க போற” என்று கேட்டவனை கடுப்பாக பார்த்தவள் அங்கிருந்த கை கழுவும் அறைக்கு சென்று முகம் அலம்பி கொண்டு திரும்பினாள். அதற்குள் அவன் அமர்ந்திருந்த மேஜை முழுக்க அசைவ உணவுகள் நிறைக்கப்பட்டிருந்தன. “இவ்வளவையும் நீ தனியா சாப்பிட போறியா” என்றவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க, “ஏன் கண்ணு வைக்குற… உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லிக்கோவேன்” என்றவன் சாப்பாடு தட்டை பார்த்து கொண்டே அவளுக்கு பதில் தரவும் அவள் தலையிலடித்து கொண்டு பக்கத்து மேஜையின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவனை பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருக்க சிப்பந்தி அவளிடம், “ஆர்டர் மேடம்” என்று வந்து நிற்க, வேறுவழியின்றி அந்த மெனு கார்டை புரட்டிவிட்டு, “எனக்கொரு பைனாப்பிள் ஜுஸ் மட்டும்” என்றாள். பெரிய கண்ணாடி டம்ளரில் பழச்சாறு கொண்டு வந்து பரிமாறப்பட்டது. அதனை குடித்து கொண்டே அவ்வப்போது மாயனை திரும்பி பார்த்தாள். அவன் கொஞ்சமும் இவளை கண்டுகொள்ளாமல் தன் முன்னே இருந்த உணவு வகைகளை காலி செய்வதிலேயே மும்முரமாக இருந்தான். அவளுக்கு பிபி எகிறியது. ‘இவன் கூட வந்திருக்கவே கூடாது… வேணும்டே என்னை வெறுப்பேத்தவே பண்றான்…பாரு… காட்டுமிராண்டி மாதிரி சாப்பிடுறான்’ என்றவள் வாயிற்குள் முனங்கி கொண்டே அந்த பழச்சாறை குடித்து முடித்திருந்தாள். அவனும் அவளை நன்றாக காக்க வைத்து ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க, “அப்பாடா சாப்பிட்டான்” என்றவள் நிம்மதி பெடுமூச்சுவிட்டு எழுந்து கொள்ள பார்க்க, “மேடம் பில்” என்று சிப்பந்தி நீட்டி கொண்டு நின்றான். “எவ்வளவு?” என்றவள் தன் பர்ஸை திறக்க, “2450 மேடம” என்றவன் சொன்னதும் அதிர்வுற்று அவன் கையிலிருந்து பில்லை வாங்கி பார்த்துவிட்டு, “நான் ஒரு ஜூஸ் மட்டும்தான் குடிச்சேன்” என்றாள். “சார் அவர் சாப்பிட்டதுக்கும் சேர்த்து பில் போட்டு உங்ககிட்டதான் கொடுக்க சொன்னாரு” என்ற அந்த சிப்பந்தி சொன்னதை கேட்டு திரும்பி மாயனை தேட அவன் சாவகாசமாக கைகளை கழுவி கொண்டு டிஷுவால் துடைத்தபடி வந்து நின்றான். “நீ சாப்பிட்டதுக்கும் சேர்த்து நான் ஏன் பில் பே பண்ணனும்?” என்றவள் அவனை முறைக்க, “உன் வேலையாதானே வந்தேன்… அப்ப நீதானே கொடுக்கணும்… கொடுத்துட்டு வா… நான் கார்ல வெயிட் பண்றேன்” என்றவன் அசட்டையாக சொல்லிவிட்டு நடந்து சென்றுவிட அந்த சிப்பந்தி அவளை பார்த்து கொண்டு நின்றான். தன் பர்ஸை துழாவியவள், “கார்டை கூட எடுத்துட்டு வரல” என்று யோசிக்க, அவன் நிலைமை புரிந்த அந்த சிப்பந்தி, “கூகுள் பே இருக்கு மேடம்” என்றதும், “ஆமா இல்ல” என்றவள் தன் செல்பேசி மூலமாக பணத்தை மாற்றிவிட்டு காரில் வந்து அமர்ந்து, “ஆமா என்ன உன் மனசுல நினைச்சிட்டு இருக்க” என்று கடுப்பானாள்.  “உன்னைதான்” என்றவன் குறும்பு பார்வையுடன் அவளை திரும்பி பார்த்து உரைத்துவிட்டு வண்டியை இயக்கவும், “மாயா” என்றவள் சீறினாள்.  “உன்னைனா உன்னை இல்ல… உன் பிரச்சனையை எப்படி முடிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் மா… அதுக்குள்ள ஏன் தப்பா நினைச்சுக்குற” என்றவன் சொன்னதை கேட்டு அவள் தலையை பிடித்து கொண்டாள். ‘இவன்கிட்ட பேசவே கூடாது’ என்றவள் நினைத்து கொண்டிருக்கும் போது சில தூரங்கள் சென்றுவிட்டு மீண்டும் காரை நிறுத்தியவன், “காருக்கு பெட்ரோல் போடணும்… ஒரு ஐந்நூறு ரூபா கொடு” என்றான்.  “எது?” அதிர்ச்சியாக நிமிர்ந்து கார் நின்றிருக்கும் இடத்தை பார்த்துவிட்டு,  “ஏய் என்ன நீ உன் மனசுல நினைச்சிட்டு இருக்க” என்றாள் மீண்டும்.  “இந்த கேள்விக்கு ஏற்கனவே நான் பதில் சொல்லிட்டேன்” “ஐயோ!” என்று பொறுமியவள், “நான் எதுக்கு நீ பெட்ரோல் போட காசு கொடுக்கணும்” என்று கேட்டு முறைக்க, “நான்தான் உனக்கு யாரோ இல்ல… அப்புறம் நான் எதுக்குமா உனக்காக செலவு பண்ணணும்” என்றவன் பதில் கேள்வி கேட்டுவிட்டு மேலும், “பெட்ரோல் போடலனா வண்டி பாதி வழிலயே நின்னுடும்… அப்புறம் போற இடத்துக்கு நாம் போய் சேர முடியாது… அப்புறம் உன் இஷ்டம்” என்றான். அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு தன் பர்ஸில் இருந்த ஒற்றை ஐந்நூறு ரூபாயை பரிதாபமாக பார்த்து கொண்டே நீட்டினாள். அதனை வாங்கி பெட்ரோல் போட்டுவிட்டு அவன் வண்டியை இயக்கினான்.  ‘ஒரே நாளில மூவாயிரம் ரூபாவை கரைச்சிட்டான்… பாவி’ ‘இவன் கூட வந்ததே தப்பு… எங்க கூட்டிட்டு போறான்னு ஒன்னும் தெரியல… எல்லாம் வாசுப்பா நிம்மிம்மாவாலயும்’ என்றவள் புலம்பி கொண்டே வர, “அப்புறம் வந்து என்னை திட்டலாம்… இப்போ இறங்கு” என்றவன் காரை நிறுத்திவிட்டு இறங்க, ‘இப்ப எங்க கூட்டிட்டு வந்திருக்கான்னு தெரியலயே’ என்று கலக்கத்துடனே இறங்கி பார்த்தாள். வாயிலிருந்த பெரிய பேனரை பார்த்தாள். அந்தக் கட்சியும் அதன் பெயரும் தமிழ்நாட்டில் மிக பிரசித்தமாயிற்றே!  எல்லா சாதிக்கும் ஒரு கட்சி இருப்பது போல அவர்களை போன்ற பட்டியல் இனத்தவர்களுக்காக செயல்ப்பட்டு கொண்டிருக்கும் கட்சி இது. ஆனால் கனிக்கு இது போன்ற அரசியல் கட்சிகள் மீதெல்லாம் எப்போதும் நம்பிக்கை கிடையாது. பெரும்பான்மையான கட்சிகள் மக்களுக்காக இயங்குவதில்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவும்தான் இயங்குகின்றன.  வெளிவாயிலில் நின்றபடி கனி அந்த கட்சி பேனரை யோசனையுடன் பார்த்து கொண்டிருக்கும் போது, “வா உள்ளே போலாம்” என்று அழைத்தான் மாயன்.  அவனுடன் சேர்ந்து நடந்தவள், “உனக்கு இந்த கட்சில யாரையாச்சும் தெரியுமா?” என்று கேட்க, “தெரியும்” என்றவன் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தான். அவளும் உள்ளே நுழைய அப்போது உள்ளிருந்து வெளியே வந்த நபர், “வா மாயா… எப்படி இருக்க?” என்று முகமன் கூறி விசாரித்தனர். கனி அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள். இவனுக்கு இந்த கட்சியில் செல்வாக்கு இருக்கிறது போலவே என்றவள் வியந்து கொண்டிருக்கும் போதே, “சரி நான் கிளம்புறேன்… ஐயா உனக்காகதான் காத்திட்டு இருக்காரு… நீ உள்ளே போய் பேசு” என்றுவிட்டு அந்த நபர் நகர்ந்துவிட்டார்.  மாயன் கனியிடம் திரும்பி, “கனி… நீ இங்கேயே வெயிட் பண்ணு… நான் உள்ளே போய் பேசிட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அங்கிருந்த சோபாவை காட்டி அமர சொல்லிவிட்டு வலது பக்கமிருந்த கண்ணாடி கதவை திறந்து அவன் உள்ளே சென்றுவிட்டான். கனி சோபாவில் அமர்ந்து கொண்டாள். கட்சி ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அதிகமாக ஆண்களின் நடமாட்டம். எல்லோரும் அவளை கூர்ந்து பார்ப்பது போன்ற உணர்வில் அவள் சங்கடமாக உணர்ந்தாள். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கைபேசியில் அவள் தலையை விட்டு கொண்டிருக்க, “கனி… உள்ளே போலாம் வா” என்று மாயன் அழைக்கவும் எழுந்து சென்றாள். அந்த அலுவலக அறையில் நுழைந்தவளுக்கு தன் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. இருக்கையில் அமர்ந்திருந்த அந்த கம்பீரமான மனிதரை அவள் தொலைக்காட்சிகளில் பலமுறை பார்த்திருக்கிறாள். தமிழக அரசியலின் மிக முக்கியமான பிரபலமான அந்த கட்சியின் நிறுவனர் வளவன்! “உட்காரு மாயா… நீயும் உட்காரும்மா” என்றவர் அவளிடம் இயல்பாக பேசவும் அவள் மாயனை வியப்புடன் ஏறிட, “ம்ம்ம்ம் உட்காரு” என்றவன் அமர்ந்துவிட்டு, “நடந்த எல்லாத்தையும் ஐயாகிட்ட சொல்லு” என்றான். அவள் இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை. இருவரின் முன்பாகவும் காபி எடுத்து வந்து வைக்கப்பட்டது. “காபி குடிங்க” என்றவர் சொல்ல இருவரும் காபியை பருகினர். “ஆமா மாயா… இரண்டு பேரும் ஒரே ஊர்காரங்களா” என்றவர் கேட்கவும், மாயன் பட்டென்று, “கனி… என் சொந்த மாமா பொண்ணுங்க ஐயா” என்று பெருமை தொனிக்க சொல்ல, காபியை குடித்து கொண்டிருந்த கனிக்கு பொறையேறியது. “பார்த்து மா பொறுமையா குடி” என்றவர் அக்கறையாக சொல்ல கனி மாயனை கடுப்பாக பார்த்தாள். அவன் எப்போதும் போல அலட்சியமாக புன்னகைத்தான். அதன் பின் அந்த மனிதர் கனியை பார்த்து, “சொல்லுமா என்ன பிரச்சனை” என்று விசாரிக்க, மாயனோ, “நீ நம்ம ஊருக்கு வந்ததுல இருந்து நடந்த எல்லாத்தையும் சொல்லு” என்று உரைத்தான். அவள் ஆரம்பத்தில் கொஞ்சம் தட்டுத்தடுமாறி பேசினாலும் பின் அனைத்தையும் விளக்கமாக சொல்லி முடித்தாள். “இதெல்லாம் வேணும்னே செய்றது” என்றவர் மாயனை பார்த்து, “எனக்கு அந்த அமுதவாணனை நல்லா தெரியும்… அவனே அவங்க ஆளை விட்டு இந்த பொண்ணு வீட்டுல கலட்டா பண்ண சொல்லி இருப்பான்” என்றார். “நானும் அதான் நினைக்குறங்க ஐயா” என்று மாயன் பதில் பேச,  “அமுதவாணன் ஏற்கனவே பதவி கையை விட்டு போற கடுப்புல இருப்பான்… இதுல நம்ம ஆளுங்க ஊருக்குள்ள வந்தா அவனால தாங்கிக்க முடியுமா” என்று தொடர்ந்து பேச, கனிக்கு அவர்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லை. இந்த விஷயத்தில் அமுதவாணன் எங்கிருந்து நுழைந்தான் என்றவள் யோசித்திருக்க,  வளவன் தீவிரமான முகபாவனையில், “இதை இப்படியே விட கூடாது… நீ இந்த பொண்ணு கூட போய் ஸ்டேஷன்ல கம்பிளைன்ட் கொடு… நான் எஸ்.பி கிட்ட பேசுறேன்… இந்த தடவை அந்த அமுதவாணனை ஒரு வழி பண்ணிடணும்” என்றார். “சரிங்க ஐயா… நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுடுறேன்” என்றான் மாயன்.  வளவன் கனியை பார்த்து, “நீ ஒன்னும் கவலைப்படாதே ம்மா… இன்னும் இரண்டு நாளில இந்த பிரச்சனையை ஒன்னும் இல்லாம பண்ணிடலாம்… அதுக்கு அப்புறம் பழையபடி நீ ஸ்கூலுக்கு போகலாம்” என, கனியின் முகம் பிரகாசித்தது. “தாங்கஸ் சார்” என்றவள் புன்னகையுடன் சொல்ல, “எனக்கு எதுக்கு மா நன்றி… நம்மாளுங்களுக்கு பிரச்சனைனா நாமதானே முன்னே நின்னு அதை சரி பண்ணனும்” என்று கனிவுடன் பேசியவர் இருவரையும் பார்த்து, “என்கிட்ட வந்துட்டீங்க இல்ல… இனி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க தைரியமா போங்க” என்றார்.  “நன்றிங்க ஐயா… நாங்க வரோம்” என்று இருவரும் அங்கிருந்து புறப்பட எத்தனிக்கும் போது, “ஆ மாயா… சொல்ல மறந்துட்டேன்… போன தடவை வந்த போது நீ கொடுத்துட்டு போனியே… நீ எழுதின ‘சாதீ’ ங்குற சிறு கதை தொகுப்பு… அது நான் படிச்சேன்… ரொம்ப நல்லா இருந்துச்சு… ஒவ்வொரு கதைலயும் சாதிங்குற நெருப்பு ஏற்படுத்துற அழிவை உணர்ச்சிபூர்வமா எழுதி இருந்த… தொடர்ந்து இது போல எழுது… இந்த மாதிரியான புரட்சிகரமான எழுத்துக்கள் நம் சமுதாயத்துல நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என்றவர் பாராட்டி முடிக்க, மாயன் தன்னடக்கமாய் சிறு நன்றியுடன் முடித்து கொண்டான். அவர் பேசுவதை கேட்டு கனி வியப்பின் விளம்பிற்கே சென்றுவிட்டாள். மாயன் புத்தகம் எழுதி இருக்கிறானா என்று அவள் யோசிக்க, “கனி போலாம்” என்றதும் அவனை வியப்பாக ஒரு பார்வை பார்த்தாள். “என்ன…?” என்றவன் கேட்க, “உஹும்” ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்துவிட்டு அமைதியாக வந்து காரில் அமர்ந்தாள். அவன் காரை இயக்கவும் அவள் அவன் புறம் திரும்பி பார்க்க, அவனும் திரும்பி என்ன என்பது போல புருவத்தை உயர்த்தினான். “நீ என்ன படிச்சிருக்க?” என்றவள் மெல்ல கேட்க, “நான் என்ன படிச்சிருந்தா உனக்கு என்ன? உன்னை பொறுத்தவரை நான் ஒரு பொறுக்கி… புறம்போக்கு… முடிச்சவக்கிதானே” என்றவன் சொன்னதை கேட்டு அவளுக்கு குற்றவுணர்வானது. இத்தனை நாளாக அவளும் அவனை அப்படிதானே நினைத்து கொண்டிருக்கிறாள். ஏன் ? சில நிமிடங்களுக்கு முன்பு வரை கூட அவள் அப்படியான கண்ணோட்டத்தில்தானே அவனை பார்த்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா