மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 15Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 15

Quote from monisha on August 14, 2022, 6:44 PM

15

வன்மம்
எந்த வித அலங்கரிப்பும் இல்லாத, கண்ணீரால் நனைந்து பொலிவிழந்த முகம்... அவளின் தவிப்பைச் சொல்லும் வறண்ட இதழ்கள்... வளைந்த புருவங்களுக்குக் கீழே அழுது சிவந்திருந்த கரு விழிகள்... அவன் இதயத்தைத் தாக்கிய கூர்மையான வேல் போன்ற பொட்டு... இப்போது முழு சந்திரனைப் பிரதிபலிக்கும் வட்ட நிற பொட்டாக மாறி இருக்க... அந்த மாற்றத்தோடு அவள் நெற்றி வகிட்டில் இருந்த திலகம் அவள் வேறொருவனுக்கு உரிமையானவள் என்பதை அழுத்தமாய் அவனுக்கு உரைக்க அவன் மனமோ அதை ஏற்க மறுத்தது. சோகம் படர்ந்திருந்த அவளின் வதனம் அவனை இன்றுமே ஈர்ப்பதற்கான காரணத்தை அவனால் அறிந்து கொள்ளவே முடியவில்லை. அன்று முதல்முறை அவளின் பிம்பத்தைப் பார்த்து எவ்வாறு ரசித்தானோ இன்றுமே அத்தகைய விதம் அவனின் விழிகள் அவளின் மீது லயித்துவிட அவள் மீதான கோபமெல்லாம் நொடியில் காணாமல் போய், அவனுக்குள் அவள் மீதிருந்த காதல் மீண்டுமே தலைத்தூக்கியது. அவன் தன் நிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ ஒரே ஒரு முறை கூட அவனை நிமிர்ந்து நோக்கவேயில்லை. அந்த நிராகரிப்பு மீண்டும் அவன் கோபத்தைத் தலைத்தூக்கச் செய்ய, அவன் தன் குரலை உயர்த்தி, "நாம் சந்தித்துக் கொள்ளவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது எதற்கு என்னைச் சந்திக்க வந்தாய் அக்னீஸ்வரி?!" என்று அவளைப் பார்த்தவாறு அழுத்தமாய் வினவினான் ருத்ரதேவன். அவனின் அந்தக் கேள்வி அக்னீஸ்வரியை வேதனைப்படுத்திய போதும் வேறு வழியின்றி அவனை நிமிர்ந்து நோக்கினாள். முன்னே பார்த்த அதே கம்பீரமும் தோற்றம் கொஞ்சம் கூட மாறுபடவேயில்லை, எனினும் இம்முறை அவனின் மீது எந்தவித ஈர்ப்போ சலனமோ அவளுக்குள் ஏற்படவில்லை. "தாங்கள்தானே என் கணவரை ராஜதுரோகம் செய்தார்... எனப் பழி சுமத்தி கைது செய்யச் சொல்லி ஆணைப் பிறப்பித்தது?!" என்று கோபத்தோடு கேட்க, அவன் ஏளனப் புன்னகையோடு, "ஓ! அந்த வைத்தியன்தான் உன் கணவனா?!" என்று அவன் தெரியாதது போல் வினவினான். அக்னீஸ்வரிக்கு அவன் உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறானா என்பதை நம்ப முடியவில்லை. அவனின் இதழில் தவழ்ந்த வன்மமான புன்னகையைக் கவனித்தாள். அவளின் மனம் லேசாய் கலவரப்பட, மீண்டும் ருத்ரதேவன் அவளின் தவிப்பைக் கண்டு ரசித்தபடி, "இப்போது நீ வந்ததன் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். உன் கணவரை விடுவிக்கச் சொல்லி என்னிடம் மன்றாட வந்திருக்கிறாய்... சரிதானே?!" என்றான். அந்த வார்த்தைகளைக் கேட்ட அக்னீஸ்வரி சினம் கொண்டு, "என் கணவர் எந்தவித குற்றமும் செய்யாத போது நான் எதற்காக தங்களிடம் மன்றாட வேண்டும்? அவர் மீது தாங்கள் என்ன எண்ணத்தில் இத்தகைய பழியைச் சுமத்தினீர்கள்?!" என்றாள். அவளை உற்று நோக்கியவன், "உன் அழகில் சிற்சில மாற்றங்கள் இருந்தாலும்... உன் அகந்தை மட்டும் இன்னும் துளி கூட மாற்றமடையவே இல்லை அக்னீஸ்வரி" என்று உரைக்க அவள் சந்தேகமாய் அவனை ஏறிட்டாள். அப்போது அவன் உதிர்த்த வன்மமான புன்னகை அவளுக்கு நெருப்பின் மீது நிற்பதைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்தது. அதேநேரம் அவன் தன் மீதுள்ள துவேஷத்தைக் காட்டவே இவ்விதம் நடந்து கொள்கிறான் என்றும், தன்னைப் பழித் தீர்த்துக் கொள்ளவே தன் கணவரின் மீது பொய்யான பழியைச் சுமத்தினான் என்பதையும் அவனின் பார்வை அவளுக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்த அவள் அதிர்ந்து நின்றாள். ருத்ரதேவன் வஞ்சமான புன்னகை இழையோட, "என்ன யோசனை அக்னீஸ்வரி... இன்னுமா நான் ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறேன் என்று உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!" என்று கேட்டான். "நன்றாய் புரிந்தது... என்னைப் பழி தீர்த்துக் கொள்ள தாங்கள் என் கணவன் மீது இத்தகைய மோசமான பழியைச் சுமத்தினீர்கள்... இல்லையா?!" என்று சொல்லித் தான் செய்த தவறால் இத்தனை பெரிய விளைவுகள் ஏற்பட்டதே என்று குற்றவுணர்வால் தவித்தாள். "ஆம்! உன்னைப் பழித் தீர்த்துக் கொள்ளவே அவ்விதம் செய்தேன்... என்று நீ எனக்கு சூட்டப்பட வேண்டிய மாலையை இன்னொருவனுக்கு சூடிவிட்டு, அந்த உறவைக் காப்பாற்றிக் கொள்ள என் முகத்தைக் கூட பார்க்க மாட்டேன் என்று சொல்லி நிராகரித்துவிட்டுப் போனாயோ... அன்று முடிவெடுத்தேன்... உன் விதியை நான் தீர்மானிக்க வேண்டும் என்று" என தன் மனக் குமுறலை நிறுத்தாமல் கொட்டித் தீர்த்தான். "உங்கள் கோபம் என் மீதுதானே... அதை என்னிடம் காண்பியுங்கள்... தவறிழைத்த என்னைத் தண்டியுங்கள்... அவரைத் தயவு கூர்ந்து விட்டு விடுங்கள்" என்று கெஞ்சினாள். "சற்று முன்பு நான் மன்றாட மாட்டேன் என்று கர்வமாய் உரைத்தாய்... இப்போது எங்கே சென்றது... உன் கர்வம்?!" என்றான். "என் கணவரின் உயிரை விட என் கர்வம் ஒன்றும் எனக்குப் பெரிதல்ல... அவர் எல்லோருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் கொண்டவர்... மனதாலும் கூட யாருக்கும் தீங்கிழைக்க நினைக்க மாட்டார். என் மீது கொண்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்ள தாங்கள் அவரைத் தண்டிக்க நினைப்பது நியாயமில்லை. என்ன தண்டனையாக இருந்தாலும் அதை எனக்கு வழங்குங்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று தன் வலியை எப்படியாவது அவனுக்குப் புரிய வைத்துவிட முடியாதா என்று ஏக்கத்தோடு உரைத்தாள். ருத்ரதேவனுக்கோ அவள் தன் கணவனைக் குறித்து சொன்ன புகழுரைகள் அவனுக்குள் இருக்கும் கோபத்தை மேலும் மேலும் தூண்டிவிட குரோதத்தோடு, "உன் கணவனின் உயிரைப் பறிப்பதே நான் உனக்களிக்கும் சரியான தண்டனை அக்னீஸ்வரி... உன் அருமையான கணவனை நீ இழந்தால்தான்... என்னை வசீகரித்து... என்னைப் பேதலிக்க வைத்த உன் அழகு அதன் மதிப்பிழந்து போகும்... துணைவனின்றி உன் இளமை எல்லாம் கரைந்து போகும்... தனிமையில் நீ தினம் தினம் வாடித் துன்புறவாய்... அப்போதுதான் என் வேதனையையும் தவிப்பையும் நீ உணர்வாய்" என்று உரைக்க அக்னீஸ்வரி அவனின் வக்கிரமான எண்ணத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். அந்தச் சமயத்தில் முழுவதுமாய் அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. நிலவில்லாத அந்த இருளில், அவ்விடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்கள் தம் நெருப்பு ஜ்வாலைகளால் வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ருத்ரதேவனின் அகத்தில் இருந்த குரூர எண்ணம் மொத்தமாய் அவன் முகத்தில் வெளிப்பட, அந்தத் தீப் பந்தங்களின் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் காட்சியளித்தான். மேலும் ருத்ரதேவன் தன் மனதின் வன்மமான எண்ணங்களைத் தொடர்ந்தபடி, "உன் கணவன் என்றோ இறந்து... நீ கைம்பெண்ணாய் ஆகியிருக்க வேண்டியவள்... உன் நேரம் நன்றாயிருந்ததால்... ஒரே மாதிரியான முகத் தோற்றம் கொண்ட உன் கணவனின் தமையன் இறந்துவிட்டான்!" என்றுரைக்க அக்னீஸ்வரியின் கண்கள் அகலவிரிந்தது. தன் அத்தானின் மரணம் விபத்து என்றல்லவா அவள் இது நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனின் மரணம் தன் மீது கொண்ட வஞ்சத்தால் நிகழ்த்தப்பட்டது என்று உணர்ந்த மறுகணம் அவள் உடைந்து நொறுங்கினாள். வார்த்தைகள் வராமல் அவளுக்கு மூச்சு முட்ட... ஆற்றாமையாலும் குற்றவுணர்வாலும் அவள் விழிகள் கண்ணீர் பிரவாகமாய் மாறியது. இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து கட்டுப்படுத்த முடியாமல் அவள் அந்த இடத்திலேயே கதறி அழுதாள். ருத்ரதேவன் அவள் அப்படி தேற்றமுடியாமல் அழுவதைக் கொஞ்சம் இரக்கத்தோடு பார்த்து, "நீ மட்டும் அந்த வைத்தியனை மணமுடிக்காமல் இருந்திருந்தால் உனக்கு இப்படி எல்லாம் நேர்ந்திருக்காது அக்னீஸ்வரி... என்னை மணமுடித்து நீ இந்த நாட்டின் சாம்ராஜ்யத்தை ஆளும் அரசியாய் இருந்திருப்பாய்" என்று சொல்ல அவள் கண்ணீர் உறைந்து கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. "நல்ல வேளையாக அப்படி ஒன்று நிகழவில்லை... உன்னைப் போன்றவனை மணப்பது மரணிப்பதற்குச் சமம்... பாம்பு கக்கும் நஞ்சை விட உன் மனதில் உள்ள வஞ்சம் ரொம்பவும் மோசமானது... என் ஒருத்தியின் மீது கொண்ட உன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ள இத்தனை கீழ்த்தரமான காரியங்களைச் செய்திருக்கிறாய்... நான் மட்டும் உன்னைப் பார்த்திராமல் இருந்திருந்தால்... இப்படி என் அக்கா, அத்தான் என்று யாரையும் இழந்திருக்கமாட்டேன்... என் கணவர் இப்படி சிறையில் கிடந்து துன்பப்பட்டிருக்க மாட்டார்... எங்கள் வாழ்க்கை இன்பகரமானதாக இருந்திருக்கும்...  நான் என்னை உண்மையாய் நேசித்த என் கணவரின் காதலைப் புரிந்து கொண்டிராமல்... அறிவிழந்து உன் மீது போய் காதல் கொண்டேனே... எல்லாமே என் தவறுதான்... என் அறிவீனமான செயலால் ஏற்பட்ட விளைவு... உன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள நீ இந்தளவுக்குத் தரம்தாழ்ந்து போவாய் என நான் ஒரு நாளும் எண்ணவில்லை" என்றவள் சீற்றமாய் அவனைச் சாடினாள். அவள் தன்னை ஒருமையில் மரியாதையின்றி விளித்ததும், தரம் தாழ்ந்து என்று சொன்ன வார்த்தையும் அவனைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டுச் செல்ல அவளின் அருகாமையில் வந்தவன், "யாரடி தரம் தாழ்ந்து போனது... நானா இல்லை நீயா... காதலிக்க ஒருவன்... கணவனாக உறவு கொள்ள மற்றொருவன்... நீ எல்லாம் பெண் இனத்திற்கே சாபக்கேடு" என்றான். அவனின் வார்த்தைகளைக் கேட்டு அவள் கோபம் கொள்ளாமல் அலட்சியத்தோடு அவனைப் பார்த்தபடி, "ஒரு அரசை நிர்வகிக்கும் அரசருக்கு நிகரான பதவியில் இருந்து கொண்டு நீ உன் சுயலாபத்திற்காக, உன் வஞ்சமான எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள என் அத்தானைக் கொன்றிருக்கிறாய்... என் கணவன் மீது பொய்யான பழியைச் சுமத்தி சிறையில் அடைத்திருக்கிறாய்... அதுமட்டுமின்றி நான் வேறொருவனின் மனையாளாகிவிட்ட போதும் என்னிடம் இப்படி அறிவிழந்து பேசிக் கொண்டிருக்கிறாய்... நீ இளவரசனாக இருக்க மட்டும் இல்லை... ஆண்மகனாக இருக்கவே தகுதியற்றவன்" என்று அவள் பார்வையில் அனல் தெறிக்க உரைக்க, ருத்ரதேவன் அவள் வார்த்தைகளின் வீரியத்தைத் தாங்காமல், "வேண்டாம் அக்னீஸ்வரி... நீ பெண்ணென்று பார்க்கிறேன்... இல்லையெனில்" என்று தன் கோபத்தைக் கட்டுபடுத்த முயன்றவனிடம், "இல்லையெனில்... என்ன... என் சிரத்தைக் கொய்துவிடுவாயா... ஆகட்டும் செய்... இப்போது உன் வீரத்திற்கும் வாளிற்கும் களங்கம் ஏற்படாது... ஏனெனில் நீயே முழுவதுமாய் களங்கப்பட்டுதான் நிற்கிறாய்" என்றாள். ருத்ரதேவன் அவளை வெறுப்போடு நோக்கி, "நீ யாரிடம் பேசுகிறாய் என்பதை மறந்து விட்டாய் போலும்" என்றான். "நீ இந்நாட்டின் இளவரசர் என்று மட்டும் சொல்லிக் கொள்ளாதே... அது இந்த ஆரை நாட்டிற்கே பெரும் அவப்பெயர்... என் கணவரின் உயிருக்காக உன்னைப் போன்ற ஒருவனிடம் இறங்கிப் போக என் தன்மானம் இடம் கொடுக்க மறுக்கிறது...  ஆகட்டும்... நடப்பது எதுவாயினும் அது நடக்கட்டும்... அந்த இறைவனும் நிச்சயம் எனக்கு இரக்கம் காட்டமாட்டான்... நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பும் காதலும் உண்மையெனில் மீண்டும் எங்கள் உறவை அது காப்பாற்றிப் பிணைத்து வைக்கட்டும்" என்று உரைத்துவிட்டு அக்னீஸ்வரி அங்கிருந்து கோபத்தோடு அகன்றாள். ஒரு நாள் அவள் சொன்னது நிகழும். ஆனால் அதற்காக அவர்கள் இருவரும் காலத்தின் சுழற்சியில் கணக்கிடமுடியாத நீண்டதொரு பெரும் பிரிவைச் சந்திக்க நேரிடும். அக்னீஸ்வரி அரண்மனையை விட்டு வெளியேறி நடந்து செல்ல அவள் மனம் வேதனையில் ஆழ்ந்து போனது. அன்று விஷ்ணுவர்தன் கடைசியாய் சந்தித்த போது ருத்ரதேவனைக் குறித்து அவன் எழுப்பிய கேள்வியின் காரணம் இப்போது அவளுக்குப் புரிந்தது. அவன் அன்று சொல்லிச் சென்ற வார்த்தைகள் எத்தனை ஆழமான அர்த்தம் பொதிந்தவை என்பதை இன்று அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ‘என்ன நேரினும் துணிவை மட்டும் விட்டு விடாதே அக்னீஸ்வரி’ என்று தனக்குத்தானே பலமுறை உறைத்துக் கொண்ட போதும் அவளின் கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாய் வழிந்து கொண்டே இருந்தது. தன் கணவனைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அவள் மனதில் ஆட்கொண்ட போது அன்று அவன் விழியில் தெரிந்த தவிப்பின் காரணம் இப்போது விளங்கிற்று. கண்கள் உணராத அவனின் தூய்மையான காதலை இப்போது வெகுதாமதமாய் அவள் மனம் உணர்ந்து கொண்டது. மீண்டும் அது எப்போது விழிகளின் வழியே சங்கமிக்கும் என்பதற்கான விடை தெரியாத கேள்வியோடு அவள் விரக்தியாய் நடந்து சென்றாள். * அக்னீஸ்வரி அவ்விதம் பேசிவிட்டுச் சென்ற பின் ருத்ரதேவனின் கோபம் எல்லையை மீற அவன் தனக்குத்தானே, ‘இத்தனை அகந்தையாடி உனக்கு... ஆகட்டும்... என் வாளாலேயே உன் கணவனின் சிரத்தைக் கொய்தால்தான் என் கோபமும் தீரும்... உன் அகந்தையும் அடியோடு அழியும்’ என்று சொல்லிக் குரோதத்தோடு கோட்டைச் சிறையை நோக்கி வேகமாய் நடந்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா