மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 18Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 18

Quote from monisha on August 21, 2022, 11:24 AM

18

அக்னியில் கரைந்தாள்
ருத்ரதேவன் தன் சிரத்தைத் தாழ்த்தி அந்த சிறிய வாயிலுக்குள் நுழைய, அக்னீஸ்வரி வாட்டத்துடன் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் இதயம் அவனின் வருகையின் மூலம், பெரும் ஆபத்தின் வருகையை உணர்ந்து வேகமாய் துடிக்கத் தொடங்கியது. அவளைக் கோபமும் வெறுப்பும் ஆட்கொள்ள, அவனோ ஆணவமான புன்னகையோடு அவளை நோக்கினான். அந்தக் குடிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த விளக்கு அக்னீஸ்வரியின் முகத்தை ஓளியூட்டியபடி இருக்க, அவளின் நெற்றி திலகமின்றி வெறுமையாய் காட்சியளிப்பதைக் கண்டு அவனின் முகத்தில் வெற்றி களிப்பு ஏற்பட்டது. அவள் கணவனை இழந்து கைம்பெண்ணாய் காட்சியளிப்பது அவனுக்குள் அத்தகைய களிப்பை ஏற்படுத்தியது போலும்! அந்தப் புன்னகை அவளுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்க, அவள் சிரமத்துடன் எழுந்து நின்று, "இப்போது எதற்கு இங்கே வந்திருக்கிறாய்... உன் முகத்தைக் காணக் கூட நான் விருப்பப்படவில்லை... இங்கிருந்து சென்று விடு" என்றாள். ருத்ரதேவன் தன் புன்னகை மாறாமல், "நீ என் முகத்தைப் பார்க்க விருப்பப்படாவிடிலும்... நான் உன் வதனத்தைப் பார்க்க விருப்பப்படுகிறேனே அக்னீஸ்வரி" என்று சொல்லி வன்மமாகச் சிரித்தான். அவன் பார்வையும், அவன் உதிர்த்த வார்த்தைகளையும் கொண்டு அவனின் மனஎண்ணத்தை அறிந்து கொண்டவள் அதிர்ந்து போய் நின்றாள். அவள் உடல் நலம் குன்றியிருந்த போதும் மனோதிடத்தை வரவழைத்து கொண்டு, "எதற்கு நீ என்னைப் பார்க்க விருப்பம் கொள்ள வேண்டும்... உன்னால் நான் சந்தித்த இழப்பும் வலியும் வேதனையும் போதாதா... இன்னும் என் மீதான கோபமும் துவேஷமும் உனக்கு தீர்ந்தபாடில்லையா ?!" என்று வினவினாள். அவன் சத்தமாய் சிரித்து, "நான் உன் மீது கொண்ட கோபமும் துவேஷமும் தீர்ந்தது... ஆனால் நான் உன் மீது கொண்ட காதல்... அது எங்கனம் தீர்வது அக்னீஸ்வரி" என்று சொல்லியபடி அவன் அவளைப் பார்த்த பார்வை, அவளுக்குள் படபடப்பை உண்டாக்கியது. அவள் அந்த உணர்வை வெளிக் காட்டிக் கொள்ளாமல், "உன் பார்வையும் பேச்சும் என் மீது தீயை வாரி இறைப்பது போல் தோன்றுகிறது... ஏன் இப்படி என்னை மேலும் மேலும் வேதனைக் கொள்ளச் செய்கிறாய்" என்று அவள் வெறுப்பான பார்வையை அவன் மீது உமிழ்ந்தாள். ருத்ரதேவன் அவளின் வெறுப்பைக் கண்டு கர்வமாய் நோக்கியபடி, "ஓ! இன்று நான் பேசுவது உனக்கு தீயை வாரி இறைக்கிறது... அன்று காதலோடு நான் உன் மீது பூமாரிப் பொழிந்தேனே... அவற்றை எல்லாம் நீ அடியோடு மறந்து விட்டாயா அக்னீஸ்வரி?!" என்றான். "நான் எதையும் மறக்கவில்லை... நீ தான் உன் பண்பை மறந்து இப்படி புத்தி பேதலித்து போய் பிதற்றுகிறாய்" என்று கோபத்தின் மிகுதியால் அவள் உரைக்க, ருத்ரதேவன் சலனமின்றி அவளைப் பார்த்து, "ஆம்... புத்தி பேதலித்துவிட்டது... இன்றல்ல... என்று நான் உன் பிம்பத்தை நீரில் பார்த்தேனோ அன்று... அன்றே உன் மீது காதல் கொண்டேன்... பின் உன்னை உறவாக்கி கொள்ள முடியாத இயலாமையால் கோபம் கொண்டேன்... இப்போது என் பண்பையும் மறந்து உன் முன்னே நிற்கிறேன்... என்ன செய்வது... வேறெந்தப் பெண்ணையும் ஈர்க்காத என் மனம் முதல்முறையாய் உன்னைக் கண்டே காதலில் திளைத்தது... இன்று நீ என்னை விட்டு விலகிச் செல்கின்றாய் என்ற போதும்... என் மனம் உன்னையே நாடுகிறது... இவ்விதம் நான் ஓயாமல் உன் நினைவில் மருக... நீயோ... இப்படி என்னைப் புரிந்து கொள்ளாமல்... தவிக்கவிடுகிறாயே... நியாயமா அக்னீஸ்வரி!" என்றான். ருத்ர தேவனின் வார்த்தைகளும் அவனின் எண்ணமும் அக்னீஸ்வரியின் தலையைக் கிறுகிறுக்க செய்ய, ஒருவிதமான கலக்கம் ஏற்பட்டு அச்சம் தொற்றிக் கொண்டது. அவன் முகத்தை நேர் கொண்டு பார்க்காமல்,"நான் வேறொருவனின் மனையாளாக ஆகிவிட்டேன் எனறு அறிந்தும்... எப்படி உன்னால் இவ்விதம் பேச முடிகிறது... உன்னைப் பார்ப்பது கூட பெரும் பாவம்... என் கண்முன்னே நிற்காமல் இங்கிருந்து சென்று விடு" என்று வாசல் புறத்தில் கைக் காண்பித்து போகச் சொன்னாள். ஆனால் ருத்ரதேவன் அவளின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், "நீ வேறொருவனின் மனையாள் என்ற எண்ணத்தை விட்டொழித்துவிடு... அவன்தான் என்றோ மடிந்துவிட்டானே" என்று சுலபமாய் உரைக்க அக்னீஸ்வரி உடனே விஷ்ணுவர்தனைப் பற்றி நினைத்து கண்கள் கலங்கினாள். அவள் மனதில் நிரம்பிய வேதனையோடும் ஆற்றாமையோடும், "என் கணவர் மடிந்து விட்டதால் எங்களுக்குள் இருக்கும் உறவு முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை... இந்தப் பிரிவு எங்கள் காதலைப் பொய்யாக்கிவிடாது... என்னைப் பழித்தீர்த்துக் கொள்ள அவரை நீ இல்லாமல் செய்துவிட்டால்... எங்களுக்குள் இருக்கும் உறவும் அற்றுப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டாயா? எந்நிலையிலும் அவர் மட்டுமே என்னுடைய உறவு... உன்னைப் போன்று அவர் என் அழகின் பால் ஈர்ப்புக் கொள்ளவில்லை... அவர் என் மனதை மட்டுமே நேசித்தார்... எங்கள் காதல் கண்களிலிருந்து தோன்றாமல்... மனதினால் உணரப்பட்டது... ஒரு விஷயத்தை நன்றாய் புரிந்து கொள்... நீ என் கணவரை வீழ்த்தி விட்டதாக ஒரு போதும் பெருமிதம் கொள்ளாதே... அவரை நீ நேர்கொண்டு எதிர்கொள்ளாமல்... சூழ்ச்சி செய்தே கொன்றாய்... இல்லையெனில் என் கணவரின் மேன்மையான சிந்தனைக்கும்... புத்திக்கூர்மைக்கு முன்னே... நீ கால் தூசிக் கூட பெறமாட்டாய்" என்று அவள் அழுத்தமாய் உரைக்க, ருத்ரதேவனின் கண்களில் கோபம் கனலென எரிந்தது. வேகமாய் தன் வாளை எடுத்து அவள் கழுத்தை நெருக்கியபடி நிறுத்தியவன், "நான் இந்த ஆரைநாட்டு இளவரசன்... அவன் ஒரு சாதாரண வைத்தியன்... போயும் போயும் என்னை அவனோடு ஒப்புமை செய்ததே தவறு... இதில் என்னை நிந்தித்துவிட்டு அவனை உயர்த்திப் பேசுகிறாய்... இக்கணமே உன் நாவினை துண்டாக்கினால் என்ன?!" என்று கோபம் கொண்டு சத்தமிட்டான். அக்னீஸ்வரி அவனின் அந்தச் செயலால் சிறுதும் அச்சம் கொள்ளாமல், "நீ என் நாவைத் துண்டித்தாலும்... என் எண்ணமும் வார்த்தையும் பொய்யென்று ஆகிவிடாது... அதே நேரத்தில் நீ இந்நாட்டின் இளவரசன் என்று மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதினால்... நான் உன் அதிகாரத்திற்கு அடிப்பணிவேன் என்று மட்டும் எண்ணிக் கொள்ளாதே... அது கனவிலும் நிகழாது... உன் கரங்கள் என் நாவைத் துண்டிப்பதை விட என் சிரத்தைத் துண்டித்து விடட்டும்... அதுவே நீ எனக்கு செய்யும் பெரிய உபகாரமாய் இருக்கும்" என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு ருத்ரதேவனின் கோபம் தணிந்துவிட, அவன் புன்னகைப் புரிந்து தன் வாளைப் பின்வாங்கினான். "உன் அகந்தையும்... நீயும் என் அதிகாரத்திற்கு ஆட்பட மாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன்... ஆனால் நானோ உன் அழகின் ஆட்சிப் பிடியிலே மீளாமல் சிக்கிக் கொண்டிருக்கிறேன்... எங்கனம் என் கரங்கள் உன்னைக் கொல்வது... நிச்சயம் அத்தகைய உபகாரத்தை நான் உனக்கு செய்ய மாட்டேன்... நீ வேண்டுமானால் என் கரங்களுக்கு ஒரு உபகாரம் செய்" என்று கேட்டான். அக்னீஸ்வரி திடீரென்று அவன் கோபம் மறந்து முற்றிலும் மாறுப்பட்டவனாய் பேச, அவள் புரியாமல் மௌனமாய் நின்றாள். அவன் வன்மமான புன்னகையோடு தன் வாளை உறையில் இட்டுவிட்டு, "என் கரங்களுக்கு உன் தேகத்தைத் தழுவும் பாக்கியம் கிடைக்க பெறுமா அக்னீஸ்வரி!" என்று சொல்லிவிட்டு அந்தத் தனிமையைப் பயன்படுத்தி ருத்ரதேவன் தன் வக்கிரமான எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள அவளை நெருங்கி வந்தான். அக்னீஸ்வரி பதட்டம் நிறைந்த குரலோடு, "என்னை நெருங்கி வராதே... உன் எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது" என்று சொல்லியபடி விலகிச் சென்றாள். "உன் விருப்பம் இல்லாவிட்டாலும் என் எண்ணம் ஈடேறும் அக்னீஸ்வரி" என்று ருத்ரதேவன் அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ள தன் கைகளைப் பாய்ச்சினான். அக்னீஸ்வரி விலகி வந்து, "அப்படி ஒன்று நிகழ்வதற்கு முன்னதாக இந்த அக்னீஸ்வரி அக்னியில் கரைந்து போவாள்" என்று ஆக்ரோஷத்தோடு எச்சரித்தாள். ருத்ரதேவன் அவளின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் மேலும் அவன் பாதத்தை அவளை நோக்கி எடுத்து வைத்தபடி, "உன் அனிச்சம் மலர் போல இருக்கும் தேகமும்... அழகும்... அக்னிக்கு இரையாவதா... அதற்கு நான் ஒருபோதும் அனுமதியேன்" என்றான். அக்னீஸ்வரியின் மனம் அச்சம் கொண்ட போதும் அதை மறைத்துக் கொண்டு குரலை உயர்த்தியபடி, "என் மனதில்... நான் தேக்கி வைத்திருக்கும் கோபத்தீ உன்னைச் சுட்டெரிப்பதற்கு முன் இங்கிருந்து சென்று விடு ருத்ரதேவா!" என்று ஆவேசமானாள். ருத்ரதேவனோ அவளைப் பார்த்து பரிகாசித்து சிரித்தபடி, "எங்கே... என்னை சுட்டெரித்துவிடு பார்ப்போம்" என்று மீண்டுமே அவளை நெருங்கினான். அவனிடம் இருந்து தன்னைத் தற்காத்து கொள்ள தீவிரமாய் யோசித்தாள். கூக்குரலிட்டு யாரையாவது பாதுகாப்புக்கு அழைக்கலாம் எனில் அவளுக்கு தன் மாமனாரின் நினைவு வர, அவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இனி தன்னால் யாருக்கும் தீங்கு நேரக் கூடாது என்று எண்ணியவள்... கண நேரத்தில் அந்த அறையில் பிரகாசித்துக் கொண்டிருந்த தீபத்தைக் கூரை மீது வீசினாள். அது வேகமாய் பரவ ஆரம்பிக்க ருத்ரதேவன் அதிர்ந்தபடி, "என்ன அறிவீனமான செயல் செய்தாய் அக்னீஸ்வரி!" என்று சினத்தோடு அவளைக் கடிந்து கொண்டான். "அறிவீனமான செயலா... உன்னை அழிக்கவே இவ்விதம் செய்தேன்" என்றாள் வெற்றி களிப்போடு! ருத்ரதேவனோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு, "இந்த நெருப்பு ருத்ரதேவனைச் சுட்டெரித்து விடுமோ... நிச்சயம் முடியாது... நீ அவசரத்தில் அறிவிழந்து செய்த செயலால் உன் சௌந்தர்யம்தான் சாம்பலாய் போய்விடும்" என்றான். "போகட்டும்... இந்த அழகுதானே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது... அது இல்லாமலே போகட்டும்" என்று விரக்தியோடு அவள் உரைக்க, ருத்ரதேவன் மேற் கூரை முழுவதும் தீப் பரவி கொண்டிருப்பதைக் கவனித்தான். பின்னர் அவளை நோக்கி, "இப்போது கூட ஒன்றும் பாதகமில்லை... உன் அகம்பாவத்தை விடுத்து வெளியே வா... இல்லாவிடில் நீ இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாவது உறுதி" என்றான். "உன் வஞ்சகமான எண்ணத்தாலும் மோசமான செயல்களாலும் எனக்கு உண்டான பெரும் வலிகளும் வேதனைகளும் என் உணர்வுகளை என்றோ கொன்று புதைத்து விட்டது... இனி இந்தத் தீ என் தேகத்தைச் சுட்டெரிப்பதால் பெரிய பாதகம் ஒன்றும் நேரப் போவதில்லை " என்று அலட்சியமாய் உரைத்தாள். நெருப்பு மெல்ல மெல்ல அவர்களைச் சூழ்ந்துக் கொண்டு அந்த இடத்தை உஷ்ணப்படுத்திக் கொண்டிருந்தது. ஏற்கனவே அக்னீஸ்வரியின் தேகம் காய்ச்சலால் அனலென தகித்துக் கொண்டிருக்க, அங்கே பரவிக் கொண்டிருக்கும் நெருப்பு அவள் மேனியை மேலும் கனலெனக் கொதிப்படையச் செய்தது. ருத்ரதேவன் அவள் பிடிவாதத்தை மாற்ற முடியாது என அறிந்து, "இதுதான் உன் முடிவென்றால் அதற்கு நான் தடையாய் நிற்க போவதில்லை... என்னையும் என் காதலையும் நீ நிந்தித்ததிற்காக இந்தத் தண்டனை உனக்கு கிட்டியது என்று எண்ணிக் கொள்கிறேன்... இம்முறை உன் விதியை நீயே தீர்மானித்து கொண்டுவிட்டாய் அக்னீஸ்வரி... என்ன... எனக்கு ஒரே ஒரு வருத்தம்... இந்தத் தீ உன்னை இரையாக்கிக் கொண்டால்... எனக்குள் எரிந்து கொண்டிருக்கும் மோகத்தீ எங்கனம் அணைவது?" என்று கேள்வி எழுப்பினான். ருத்ரதேவன் இவ்விதம் உரைக்க அக்னஸ்வரி அவனை எரிப்பது போல் சினம் கொண்டு பார்த்தாள். சூழ்ந்துக் கொண்டிருக்கும் தீயும் சரி அவள் தீப்பார்வையும் சரி அவனை எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்க ருத்ரதேவன் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற கர்வப் பார்வையை அக்னீஸ்வரியின் மீது வீசியபடி, "அந்த வைத்தியன் இறக்கும் தருவாயில் என்னிடம் ஒன்று சொன்னான்... மீண்டும் பிறவி எடுத்து வந்து அவன் என்னைப் பழித் தீர்த்து கொள்வானாம்... அவன் சொன்னது போல் மீண்டுமே ஒரு பிறவி இருந்தால் நன்றாயிருக்கும்... அப்பிறவியில் மீண்டுமே உன்னை நான் சந்திக்க வேண்டும்... அப்போது உன் அகந்தையும் அழகையும் என் பாதுகைக்குக் கீழே வைத்து... அடிமையாக்கி கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கடைசியாய் அவள் வதனத்தை பார்த்து ஏக்கமுற்றபடி அந்த நெருப்பைத் துச்சமாய் கடந்து வெளியே வந்தான். ருத்ரதேவன் தீக்குள் சிக்கிவிட்டானோ என எஜமானின் விசுவாசத்தால் அவனின் குதிரை தவிப்புற, அவன் அதை ஆசுவசப்படுத்திவிட்டு தாவி ஏறி அவ்விடம் விட்டு காற்றென வேகமாக விரைந்தான். ருத்ரதேவன் கடைசியாய் சொன்ன வார்த்தைகள் ஓயாமல் அவள் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவளைச் சூழ்ந்த தீயை எண்ணி அவள் கவலை கொள்ளவில்லை. அவள் தீவரமாய் சிந்தித்தபடி, "மீண்டும் ஜனனம் எடுப்பதா? அதுவும் ஒடுக்கப்பட்ட பெண் பிறவியாகவா? நான் பெண் என்ற காரணத்தாலேயே என் விருப்பங்கள் கேட்கப்படாமலே நிராகரிக்கப்பட்டுவிட்டன... அவனின் ஏமாற்றத்திற்கு நிகரான ஏமாற்றம் எனக்குமே இருக்கும் என்பதை உணராமல்... என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பழித்தீர்த்துக் கொண்டுவிட்டான். வரிசையாய் ஏமாற்றங்கள் ஒரு புறம் இருக்க... இன்று என் பெண்மையைத் தற்காத்து கொள்ள என்னை நானே எரித்து கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. நான் பெண் என்ற ஒரே காரணத்தினாலேயே இத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டேன். அப்படி விதியின் வசத்தால் இனி ஒரு முறை இப்பூவுலகில் பிறக்க நேரிட்டால்... அன்று பெண்மையின் ஆளுமையை ஏற்றுக் கொள்ளும்... பெண்மையை ஆணுக்கு நிகராய் மதிக்கும்... அவளின் விருப்பங்களையும் ஆசைகளையும் ஏற்கும் சந்ததிக்கிடையில் உயிர்த்தெழ வேண்டும்" என்று அவள் சூளுரைக்க, அப்போது அந்தக் கோரத் தீ அவள் தேகத்தைத் தன்னோடு பிணைத்துக் கொள்ள ஆவலாய் நெருங்கி வந்தது. அக்னீஸ்வரியின் எண்ணம் பல சந்ததிகளைக் கடந்தே உண்மையாகப் போகிறது. அன்று சாம்பலாகிப் போனவள் பெண்மையின் ஆளுமையை ஏற்கும் சந்ததிகளுக்கிடையில் மனதில் தேக்கி வைத்த அதே கோபத்தீயோடு உயிர்த்தெழுவாள். சுவாமிநாதன் அந்த இருளில் மூலிகையை ஆதுர சாலைக்குச் சென்று அரைத்து எடுத்து கொண்டு வெளியே வந்த சமயத்தில் குடில் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். அதே சமயத்தில் ருத்ரதேவன் தன் குதிரையில் அங்கிருந்து செல்வதையும் அவர் கண்கள் கவனிக்க தவறவில்லை. "அக்னீஸ்வரி அக்னீஸ்வரி!!" என்று அவர் கதறிக் கொண்டு குடிலை நெருங்க அந்தத் தீ விஸ்வரூபம் எடுத்து அவரை நெருங்கவிடாமல் செய்தது. அதே சமயத்தில் அந்தத் தீயினால் ஏற்பட்ட வெளிச்சமும் புகை மூட்டத்தாலும் நீலமலையில் வாழும் மக்கள் நடப்பது இன்னதென்று அறியாமல் விரைவாக ஓடி வந்தனர். சுவாமிநாதன் கண்ணீரோடு தன் குரலை உயர்த்தி, "அக்னீஸ்வரி அக்னீஸ்வரி... என்னவாயிற்று உனக்கு?" என்று புலம்பியபடி தலையிலடித்து கொண்டார். உள்ளே இருந்து ஈன ஸ்வரத்தில், "என்னைக் காப்பாற்ற முயலாதீர்கள் மாமா... விலகிச் செல்லுங்கள்... நான் பிழைக்கமாட்டேன்...அன்று என் கணவரின் சிதையிலேயே நான் எரிந்திருப்பேன்... ஆனால் உங்களைத் தனிமையில் விடுத்து போக மனமில்லாமல் உயிரைக் காத்து வைத்தேன்... ஆனால் மானம் உயிரினும் மேலானதாயிற்றே... எனக்குமே வேறு வழியில்லை... என்னை மன்னித்து விடுங்கள் மாமா!" என்று அவள் உரைக்க சுவாமிநாதன் அதிர்ந்து போய், "அக்னீஸ்வரி... நீ பயம் கொள்ளாதே நான் வருகிறேன்!" என்றார். "நீங்கள் என்னை மகளாக எண்ணினால் ஒரு போதும் என்னைக் காக்க வரக்கூடாது... இந்த மகளுக்காக ஒரே ஒரு உபாகாரம் மட்டும் செய்யுங்கள்... என் தந்தை வீட்டில் இருக்கும் செம்பு கலயத்தையும் அரங்கநாதனையும் அழைத்து கொண்டு இவ்விடம் விட்டு வெகு தூரம் சென்று விடுங்கள்... அவனை நல்ல முறையில் தங்களால் மட்டுமே வளர்க்க முடியும்" என்று அவள் சொல்லி முடித்த பின் ஒருவித அமைதி உண்டானது. அவர் மேலும் மேலும், "அக்னீஸ்வரி... அக்னீஸ்வரி... " என்று அழைத்து பார்த்தார். அவளின் குரல் பிறகு ஒலிக்கவில்லை. பின்னர் வேதனையோடு, "நான் என்ன பாவம் செய்தேனோ... இப்படி வரிசையாய் என் பிள்ளைகளின் மரணத்தைப் பார்க்கும் துரதிஷ்டசாலியாய் ஆனேனே... இந்த நெருப்பு வாழ்ந்து முடித்த... இந்தக் கிழவனை தன் பசிக்கு இரையாக்கிக் கொள்ளக் கூடாதா?!" என்று கதறியபடி அவளைக் காப்பாற்ற முடியாமல் அந்த அனலின் தாக்கத்தில் மயக்கமுற்றார். சுவாமிநாதனை அந்த மலைவாழ் மக்கள் தூக்கிவந்து காப்பாற்றினர். அவர்கள் அந்த நெருப்பை அணைக்க முயல, அது சாத்தியமற்ற ஒன்றாய் இருந்தது. ருத்ரதேவன் உயிரைப் பலி வாங்க முடியாமல் அவளின் கோபத்தீ ஏமாற்றத்தால் அதீத உக்கிரமாய் எரிய, எல்லோரும் அது நீலமலை காட்டை நோக்கி பரவி அழித்துவிடுமோ என்று அச்சம் கொண்டனர். ஆனால் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் அந்த நெருப்பு சில மணிநேரங்களில் தன் உக்கிரத்தைத் தானே குறைத்து தணிந்தும் போனது. ருத்ரதேவனும் ஏமாற்றத்தோடு அந்தத் தீயை வெகுதூரத்தில் இருந்து பார்த்தான். அவளின் மீது கொண்ட காதல் கைக்கூடாத ஏமாற்றத்தால், வெறியாய் மாறி இப்போது அது அவளின் உயிரையே பலி வாங்கிவிட்டதை அவன் உணர்ந்தானோ தெரியாது? ஆனால் அவன் கண்களின் ஓரம் நீர் கசிந்தது. அவன் முதன் முதலில் நீரில் பார்த்து ரசித்த அவளின் பிம்பம் இப்போது நெருப்பில் கரைந்து போனது. அக்னீஸ்வரிக்கு என்ன எண்ணம் கொண்டு அவளுக்கு அப்படி ஒரு பெயரிட்டனரோ. அவளின் துயர் நீக்க அந்த அக்னியே அவளை முழுமையாய் ஆட்கொண்டுவிட்டது. அக்னீஸ்வரியின் குடும்பத்தினருக்கு மேலும் அவளின் இழப்பு பேரதிர்ச்சியாய் இருந்தது. இப்படி வரிசையாய் இழப்புகளும் இன்னல்களும் நேரிடுவதன் காரணத்தை அறியாமல் அவர்கள் வேதனையுற்றனர். ஆனால் சுவாமிநாதனுக்கு ஒரளவுக்கு நிகழும் மோசமான சம்பவங்களின் பிண்ணனியில் உள்ள ருத்ரனின் சூழ்ச்சிப் பிடிப்பட்டது. விஷ்ணுவர்தனின் மரணத்தில் புதைந்த ரகசியங்களும் அப்போது அக்னீஸ்வரி ருத்ரனின் மீது பழிச் சுமத்த அதை யாரும் நம்பவில்லை... ஏன் சுவாமிநாதனும் கூட நம்பவில்லை. ஆனால் ருத்ரன் அந்த இரவில் ஏன் குடிலுக்கு வந்தான்? யாரை காண வந்தான்? நெருப்பு மூட்டியது யார்? இவற்றை எல்லாம் கடந்து அக்னீஸ்வரி இவ்விடம் விட்டு செல்ல சொன்னதன் பொருள் என்ன? இப்படி அவர் மனம் எல்லாவற்றையும் இணைத்து ஒரு முடிவுக்கு வந்தது. கடைசியாய் அக்னீஸ்வரியின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிப் பிடிவாதமாய் அந்தச் சிறு பிள்ளை அரங்கநாதனை அழைத்துக் கொண்டு செம்பு கலயத்தையும் தம்மோடு எடுத்து கொண்டு ஆரை நாட்டை விட்டு வெகுதூரம் சென்றார். அவர் எவ்விடம் சென்றார் எனப் பின்னர் யாருமே அறிந்திருக்கவில்லை. ருத்ரதேவனின் மனதை அக்னீஸ்வரியின் மரணம் வெகுவாய் பாதித்திருந்தது. அந்த இழப்பின் வலியை யாரிடமும் காண்பிக்க முடியாமல் தனிமைப்பட்டான். ஆனால் தன்னை நிராகரித்தவள் என்ற கோபமும் அவனுக்குள் அழுத்தமாய் இருந்தது. அந்த எண்ணம் அவனுக்குப் பெண்கள் மீது மரியாதையற்று போகச் செய்தது. அந்த இழப்பிலிருந்து மீட்டுக் கொள்ள பல பெண்களை மணம் புரிந்து கொண்டான். ஆனால் ஏனோ எந்தப் பெண்ணுமே அக்னீஸ்வரிக்கு நிகரானவளாய் அவனால் எண்ண முடியவில்லை. எல்லோரின் முகத்தையும் அவளின் அழகோடு ஒப்புமை செய்து ஏமாற்றமடைந்தான். அவனால் உறவு கொள்ள முடிந்ததே ஒழிய எந்தப் பெண்ணாலும் அவனின் உணர்வுகளை உயிர்ப்பிக்க முடியவில்லை. சௌந்தர கொங்கணன் உடல் நலம் குன்றிய நிலையில் அந்த ஆட்சிப் பீடம் ருத்ரதேவனை வந்தடைந்தது. மக்கள் எல்லோரும் ஆனந்தம் கொண்டு அவனின் முடிச்சூட்டு விழாவைக் கொண்டாடினர். ஆனால் அதற்கு பின்னர் ஆரை நாட்டைப் பெரும் துரதிஷ்டம் பீடித்துக் கொண்டது ருத்ரதேவன் மக்களின் நலனை விட சாம்ராஜ்ஜயத்தை விஸ்தரிக்கவும் ஆரை நாட்டு சிற்றரசைப் பேரரசாக மாற்றும் எண்ணம் கொண்டான். அதற்காக ஏற்படும் உயிரிழப்பு பொருளிழப்பு என எதைக் குறித்தும் அக்கறைக் கொள்ளவில்லை. அவன் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எல்லாம் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் மாறிவிட, அதைக் குறித்தும் அவன் கவலைக் கொள்ளவில்லை. பெரும் சாம்ராஜ்ஜயத்தை ஆள வேண்டும் என்ற இலட்சியத்தை முன்னிறுத்தியே அவனின் ஆட்சி இருந்தது. மக்களின் நலம் பேணாத அரசன் எங்கனம் பெரும் புகழை அடைய முடியும். மக்களின் ஆதரவும் இல்லாமல் சுற்றியுள்ள சிற்றரசர்கள் எல்லாவற்றையும் எதிரியாய் மாற்றிக் கொண்டான். அவன் மனதில் பேரரசரை ஆள வேண்டும் என்ற வெறியால் நிறைய போர்களை மேற்கொண்டான். அதில் வெற்றியும் கண்டான். அவனின் வீரமும் புத்திக்கூர்மையும் பலரை அச்சம் கொள்ள செய்ய, அவனிடம் தோல்வியுற்ற சிற்றரசர்கள் பேரரசரின் உதவியோடு பெரும் படையோடு வந்து போருக்கு அறைக்கூவல் விடுத்தனர். ருத்ரதேவன் அச்சமின்றி புத்திக் கூர்மையோடு தம் படைகளைப் பிரித்து எல்லா திசைகளிலும் தன் தாக்குதலை மேற்கொண்டான். அவனை நேரடியாக வெல்வது சாத்தியமற்று ஒன்று என்று என்பதை அறிந்து கொண்டு போர் தர்மத்தை மீறி அவனை பின்னிருந்து தாக்கிச் சூழ்ச்சியால் வீழ்த்தினர். அக்னீஸ்வரியின் மீது ருத்ரதேவன் கொண்ட காதலும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றமும் அவனை இரக்கமற்றவனாக மாற்றியது. மீண்டும் தோல்வியையோ இழப்பையோ சந்திக்க கூடாது என்கிற பிடிவாத எண்ணமும் அவனின் நற்குணங்களைச் சிதைத்துவிட்டிருந்தது. இப்போது பெரும் ஆட்சியை நிர்வகிக்க வேண்டுமென்ற அவனுடைய இலட்சியமும் வெறும் கானல் நீராய் போனது. ருத்ரதேவன் தன் எண்ணமும் இலட்சியமும் ஈடேறாமல் மரணிக்க அவன் வாழ்க்கை நிறைவற்றதாகவே முடிந்து போனது. இப்படி ஏக்கமும் காதலும் கோபமும் துவேஷமும் பழிவுணர்வையும் தேக்கி வைத்த மூவரும் அவர்கள் எண்ணம் ஈடேறாமலே மரணத்தை எதிர்கொண்டனர். ஆனால் மரணம் உடலுக்கே அன்றி எண்ணத்திற்கு இல்லை. வழிவழியாய் பல சந்ததிகளைக் கடந்து நிலமகள் தம் சுழற்சியை இடைவிடாமல் மேற்கொள்ள, மீண்டுமே உயிர்த்தெழப் போகும் இந்த மூவரும் தங்கள் ஞாபகங்களை மீட்டெடுத்துக் கொள்ளாவிடிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கையை மீண்டுமே தொடரப் போகின்றனர். *முதல் பாகம் முடிவுற்றது*

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா