மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 19Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 19

Quote from monisha on August 22, 2022, 12:27 PM

19

மீண்டும் உயிர்த்தெழு
இந்தப் பூமித்தாயானவள் மனிதன் உருவெடுத்த காலகட்டத்திலிருந்து இன்றுவரையில் எத்தனை லட்சபோலட்சம் சந்ததிகளைக் கண்டிருப்பாளோ என யார் கணக்கிடக் கூடும். ஆனால் இப்பூவுலகின் மீது பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு குணங்களையும் திறமைகளையும் கொண்டு தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருப்பான் என்பது மட்டும் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் மனிதன் வழிவழியாய் தம் முன்னோர்களின் தோற்றத்தையும் குணாதிசயங்களையும் நினைவுகளையும் அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களையும் மரபியல் ஞாபகங்களாய் தமக்குள் சுமந்திருப்பான் என அறிவியல் உரைக்கிறது. அது உண்மை என்பது போல் நாம் சிரமப்பட்ட கற்றுக் கொண்ட ஒன்றை நம் குழந்தைகள் ரொம்பவும் சுலபமாகச் செய்வதையும் வரும் சந்ததிகள் நாளுக்கு நாள் அதிக புத்திக் கூர்மையோடு விளங்குவதையும் யாரும் மறுக்க முடியாது. தாத்தா, பாட்டியைப் போன்ற பழக்கவழக்கங்கள் மற்றும் தோற்றம் கொண்ட பேரன், பேத்திகள் இருப்பதாகச் சொல்வதும் இவ்விதமே. பல சமயங்களில் நம் முன்னோர்கள் செய்ய முடியாமல் தோல்வி கண்ட நிறைய விஷயங்களை அவர்களின் வருங்கால சந்ததிகள் சாதித்து வெற்றி கண்டிருப்பர். அது மட்டுமல்லாது நாம் சில நேரங்களில் இதுவரையில் ஒரு முறைக்கூட பார்க்காத முகங்களை முன்பே பார்த்தது போலவும், பார்த்திராத இடங்களை ரொம்பவும் பழகிய இடமோ என்ற அனுபவமும் ஏற்பட்டிருக்கும். அவை நம் முன்னோர்கள் கடந்து வந்த பாதையின் மூலம் ஏற்பட்ட மரபியல் ஞாபகங்களாகவும் இருக்கலாம் என அறிவியல் அறிஞர்கள் உரைக்கின்றனர். இதே போல் ஆன்மிகம் தன்னுடைய முக்கிய கருத்தாகப் பறைச்சாற்றுவது எண்ணங்கள் அபரிமிதமான சக்தி கொண்டது என்றும், அவற்றிற்கு அழிவில்லை என்பதும்தான். நாம் ஆழமாக எண்ணிக் கொண்ட விஷயம் அழிவுப் பெறாது என்றும் காலத்தின் சுழற்சியில் அவை மீண்டும் உயிர்ப்பெற்று தான் எண்ணியதை ஈடேற்றிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இப்படி காலம்காலமாய் நமக்குள் சில கருத்துக்கள் வெவ்வேறான வடிவில் புகுத்தப்பட்டிருக்க, உண்மைக்கும் பொய்மைக்கும் அப்பாற்ப்பட்ட இத்தகைய கோட்பாடுகளைத் தழுவியே வரும் நிகழ்வுகள் அமையப் போகிறது. அக்னீஸ்வரி, ருத்ரதேவன், விஷ்ணுவர்தன் ஆகிய மூவரும் தங்கள் எண்ணங்கள் நிறைவேறாமலே உயிர் நீத்துவிட, மீண்டும் அவர்கள் நீண்ட கால இடைவெளிகளைக் கடந்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள உயிர்த்தெழுவார்கள். இவர்கள் தங்கள் ஞாபகங்களை மீட்டெடுத்துக் கொள்ள போவதில்லை எனினும் அவர்கள் தங்களின் முடிவற்ற பயணத்தை முற்றிலும் மாறுப்பட்ட காலக்கட்டத்தில் தொடரப் போகிறார்கள். நிலமகள் வெளிச்சத்திற்காக சூரியனையும் சந்திரனையும் எதிர்பார்த்திருந்த காலங்கள் மலையேறி அவள் தன்னைத் தானே ஒளியூட்டிக் கொண்ட காலக்கட்டம் அது. எங்கும் பிரகாசமாய் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருக்க இரவும் பகலும் ஒரேப் போல இருளைத் தொலைத்துவிட்டுக் காட்சியளித்தது. மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நிலமகள் நாளுக்கு நாள் கலங்கப்பட, ஆதவன் தன் உக்கிரப் பார்வையைக் கொண்டு அவள் மீது வெப்பத்தைக் கனலாய் வீசிக் கொண்டிருந்தான். ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாய் நிலமகளின் பசுமை குலைந்து நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் பசும் புல்வெளிகளும் நீர் நிலைகளாலும் படர்ந்திருந்த நிலமகளின் தோற்றம் முற்றிலுமாய் மாற்றம் கண்டிருந்தது. கோபுரம், மாட மாளிகைகள், விவசாய நிலங்கள், நதி பிரவாகங்கள், அடர்ந்த காடுகள், பச்சைப் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்த மலைகள் என இயற்கையோடு இயைந்திருந்த அவளின் சௌந்தர்யம் இப்போது உயர்ந்த கண்ணாடி மாளிகைகள் கண்ணைப் பறிக்க, விவசாய நிலங்கள் வீடுகளாக மாறியிருக்க, மின்விளக்குகள் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்க அவளின் அழகு இன்றைய காலகட்டத்தில் இயந்திரத்தனமாய் மாறியிருந்தது. காலங்கள் கடந்ததினால் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களுக்கு இடையில் வெண்மதியோன் மட்டும் சுயநலமின்றி பூமித் தேவதைக்காக தேய்வதும் வளர்வதுமாய் மாற்றமின்றி இருப்பதின் காரணத்தை யார் அறியக் கூடும்?! பாரத தேசம் தம் வல்லமையோடு பெரிய சாம்ராஜ்ஜியங்களை ஆட்சி செய்த காலக்கட்டம் எல்லாம் காணாமல் போய் ஆங்கிலேயர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் பிடிக்குள் சிக்குண்டு தம் பெருமைக்குரிய வரலாறுகளைத் தொலைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் கரையான்களாய் நம் தேசத்தின் புகழை அரித்துக் கொண்டே இருந்தனர். சுதந்திர தாகத்தால் செத்து மடிந்த பல்லாயிரக் கணக்கோரின் கல்லறையின் மீது இந்திய தேசம் பிறந்தது. 1947 இந்திய நாடு சுதந்திரப் பெற்றதாக அறிவிக்கப்பட, அது வெறும் பிம்பமே! ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடி விலகியதே ஒழிய நாம் நம் பழமையான கலச்சாரம் பண்பு நாகரிகங்களை மறந்து மேற்கத்திய கலாச்சாரம் கல்வி முறை பழக்க வழக்கங்களுக்கு இன்னும் அடிமைப்பட்டுதான் இருந்தோம். அதில் நாம் தொலைத்த முக்கியமான ஒன்று நம் பழமையான வைத்திய முறை. மெல்ல மெல்ல பழமையான வைத்திய முறைகள் மறக்கடிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சித்த ஆயுர்வேத வைத்தியம் பழமையான முறை எனவும் அது நோய்களைத் தீர்க்க வெகு நாட்கள் ஆகும் என்றும் கருத்து பதியப்பட, எல்லோரும் வேகமாய் குணப்படுத்தும் மருத்துவமனைகளை நோக்கி பயணப்பட்டார்கள். ஆங்கிலேய மருத்துவ முறை அபரிதமாய் வளர்ச்சி அடைந்த அதே நேரத்தில் நோய்களும் ஏகபோகமாய் வளர்ச்சிப் பெற்றது. மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு மருந்து மாத்திரைகளின் பின் விளைவுகளையோ... ஏன் அவற்றின் பெயர்களையோ கூடத் தெரியாமல் விழுங்கி கொண்டிருந்த நாம் மருத்துவம் எனும் பெரும் வியாபாரச் சந்தைக்குள் சிக்க வைக்கப்பட்டோம். இங்கிருந்தே மீண்டும் நம் பயணம் தொடரப் போகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் குடியரசு நிர்மானிக்கப்பட சிற்றரசுகள் பேரரசுகள் மற்றும் அவற்றை ஆண்டு கொண்டிருந்த அரசர்களும் பெயரின்றி தொலைந்து போயினர். ஆனால் அத்தகைய விதம் தன்னை தொலைத்துக் கொள்ள மனமில்லாத ராஜமகாதேவன் தம் செல்வங்களை பெரும் வியாபாரங்களில் முதலீடு செய்து மீண்டும் தன் ஆளுமையை நிர்மானிக்க முடிவெடுத்தார். அவ்விதமே சில வியாபரங்களில் வெற்றியும் கண்டு மெல்ல மெல்ல வளர்ச்சியுற்றார். இறுதியில் சில வெளிநாட்டு நிறுவனங்களைக் கூட்டாகக் கொண்டு 'ரா' மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை நிர்மானித்தார். அங்கே தொடங்கிய வியாபார யுக்தி நம் நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளை மெல்ல மெல்ல முடக்க ஆரம்பித்தது. ராஜமகாதேவனுக்குப் பிறகு அவரின் வாரிசு சௌந்தராஜன் ரொம்பவும் புத்திக்கூர்மையும் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். வியாபார நுணக்கங்களை நன்கறிந்து இந்திய தேசம் முழுவதும் பல வியாபரங்களையும் தன் கைவசப்படுத்த ஆரம்பித்தார் எனலாம். அவர் நாளடைவில் கடல் கடந்தும் தன் ஆளுமையைக் கொண்டுச் சென்றிருந்தார். அதிலும் முக்கியமாக மருந்து உற்பத்தியில் உலகம் முழுக்க உள்ள பல ஆராய்ச்சி மையங்களோடு பிணைத்து கொண்டு 'ரா' மெடிக்கல் ரிசர்ச் சென்டர் மற்றும் ஃபார்மாசிட்டிக்கல் இன்டஸ்டிரிஸ்ஸில் பெரும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தார். மக்களின் நலனுக்காக மருத்துவ துறை வளர்ச்சியடைந்த அதே நேரத்தில் அதற்கு பிண்ணனியில் பெரும் வியாபார அடித்தளம் இருந்ததை யாரும் அறியவில்லை. சௌந்தராஜன் எல்லா வியாபரங்களிலும் தம் ஆளுமையை நிருபித்து வெற்றி கண்ட திருப்தியில் தன் நாற்பதாவது வயதில் திருமணம் செய்ய முடிவெடுக்க, அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கி பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்த நடிகை அவந்திகாவை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கிடையில் கிட்டதட்ட பதினெட்டு வயது வித்தியாசம் இருந்த போதும் பணம் பெயர் செல்வாக்கின் முன் அவை எல்லாம் பெரிய விஷயமாக இல்லை. இரண்டு வருட திருமண வாழ்க்கையில் மூன்று முறை அவந்திகா கருத்தறித்தாள். ஆனால் கருவிலேயே பெண் என்று அறியப்பட சௌந்தரராஜன் தன் முதல் வாரிசு ஆணாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் கலைத்துவிட தீர்மானித்தார் . இறுதியாக அவர் எண்ணம் ஈடேறும் விதமாய் அவந்திகா ஆண் வாரிசைக் கருத்தறிக்க இன்று அவள் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள். சௌந்தராஜன் பிறக்கப் போகும் ஆண் வாரிசைக் குறித்து பெரும் கனவுகளைத் தேக்கி வைத்திருந்தார். தொழிற்துறையில் வேகமாய் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த அன்றைய பம்பாய் மாநகரத்தில் உள்ள பிரமாண்டமான வீடு. அந்த வீட்டின் பரந்து விரிந்த முகப்பு அறையைப் பார்க்கும் போதே அதன் ஆடம்பரமான வடிவமைப்பு தலைச்சுற்ற வைத்தது. அரண்மனை என்றே சொல்லும் அளவிற்கு பாரம்பரியமான முறையில் அவை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் முதல் தளத்தில் இருந்த படுக்கை அறை பார்ப்பவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாய் அத்தனை விஸ்தரமாய் இருந்தது. அந்த அறையைச் சுற்றிலும் வண்ணவிளக்குள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. நடுவில் பெரிய படுக்கையும் இடது புறத்தில் உட்கார்ந்து பேச அழகிய இருக்கைகளும் மேஜைகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த பொருட்கள் நுணுக்கமான அழகியல் அமைப்போடு நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அங்கே அமைந்திருந்த வட்ட நிற கண்ணாடியின் முன் தன் அழகை ரசித்தபடி இருந்தாள் அவந்திகா. அவளோ அந்த அறையில் இருக்கும் ஓர் அழகு பதுமையாகவே காட்சியளித்தாள். அவள் அணிந்திருந்த நீண்ட ஸ்கட்டில் வயிறு மட்டும் பெரிதாக முன்புறம் நிற்க அதனைத் தொட்டுப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த சமயத்தில் சௌந்தராஜன் அறைக்குள் நுழைந்தார். அவர் தன் மனைவியின் பின்புறம் வந்து தோள்மீது கை வைத்து நிற்க, அந்த கண்ணாடி இருவரின் உருவத்தையும் ஒருசேர பிரதிபலித்தது. அவர்களின் பொருத்தமில்லாத பந்தத்தைப் பார்க்க விருப்பமில்லாமல் அவந்திகா தன் கணவனைப் பார்த்து, "கிளம்பிட்டீங்களா சௌந்தர்!" என்று வினவினாள். "ம்... ஆனா இந்த மாதிரி சமயத்தில... உன்னை விட்டுட்டுப் போக மனசே வரல... டியர்" என்று சொல்லி மனைவியைப் பிரிய முடியாமல் அவள் கன்னத்தைத் தடவிப் பெருமூச்செறிநதார். "ஜஸ்ட் த்ரீ டேஸ்தானே... போயிட்டு வாங்க... ஐ கேன் மேனேஜ்" என்று அவள் உரைக்க சௌந்தராஜன் முகமோ ஏக்கத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. மீண்டும் அவந்திகா கணவரின் கவலையைக் கண்டு கொள்ளாதவளாய், "மிஸ்டர். சுந்தரையும் உங்க கூட அழைச்சிட்டுப் போறீங்களா?!" என்று வினவினாள். சௌந்தராஜனின் எல்லா வேலைகளுக்கும் வலது கரமாகத் திகழ்பவர் சுந்தர். அவள் அப்படி கேட்க அவர் திகைப்போடு, "வாட்... சுந்தர் இல்லாம எப்படி அவந்தி?!" என்றார். "த்ரீ டேஸ் டிர்ப்தானே... நீங்க தனியா மேனேஜ் பண்ண முடியாதா என்ன? லெட் ஹிம் பி ஹியர்... இப்ப இருக்கிற நிலைமையில் நானும் எதையும் கவனிச்சிக்க முடியாது... ஸோ... இங்க எல்லாவற்றையும் கவனிச்சிக்க யாராவது இருக்கணும் இல்லையா?!" என்று கேட்டாள். சௌந்தரன் தன் எல்லா வியாபாரங்கள் குறித்த நுணக்கங்களையும் திட்டங்களையும் அவந்திகாவிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதனாலேயே அவந்திகா கணவருக்கு நிகராக வியாபாரத்தைக் கவனித்து கொள்வதில் தேர்ந்தவளாயிருக்க மனைவியின் கருத்து அவருக்கு வேதவாக்கு. ஆதலால் மறுத்துப் பேசாமல், "ஓகே... ஜஸ்ட் த்ரீ டேஸ்தானே" என்று தலையசைத்து ஆமோதித்தார். பின்னர் அவந்திகாவின் வயிற்றைப் பார்த்து, "கம் சூன் மை பாய்... யூ கோயிங் டு ரூல் தி வார்ல்ட்" என்றார். முதன்முறை இவ்விதம் சௌந்தராஜன் உரைக்கவில்லை. பல்லாயிரம் முறை இந்த வாக்கியத்தை அவர் தொடர்ச்சியாய் உரைக்க அது வயிற்றில் உள்ள அவர் சிசுவின் மனதில் ஆழ பதிந்திருந்தது. பின்னர் சௌந்தராஜன் மனைவியை அணைத்து முத்தமிட அவந்திகா வேண்டா வெறுப்பாக அதை வாங்கிக் கொண்டு இயந்திரத்தனமாய் புன்னகைப் புரிந்தாள். சௌந்தரன் முகப்பு அறைக்கு வர சுந்தரம் தயாராகக் காத்து கொண்டிருந்தார். அவரிடம் தன்னுடன் வர வேண்டாம் என உரைத்து சில வேலைகளை வரிசைக் கட்டி செய்யும்படி பணித்துவிட்டு முன்னேறிச் சென்றார். அந்தப் பிரமாண்டமான வாசலைக் கடந்து சௌந்தரன் வெளியே வந்து வானத்தில் பறக்க தயாராகக் காத்திருந்த ஹெலிக்காப்டரில் ஏறித் தன் பயணத்தை மேற்கொண்டார். அதுவே அவரின் கடைசி பயணமாக அமைந்தது. கணவருக்கு கையசைத்துவிட்டு வானத்தில் அந்த ஹெலிக்காப்டர் தன் சிறகைச் சுழற்றிக் கொண்டு மேலே மேலே உயர பறந்துக் கொண்டிருக்க அதனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் அவந்திகா. மிகுந்த உயரத்தில் சென்ற அந்த ஹெலிக்காப்டர் யாரும் எதிர்பாராத விதமாய் திடீரென்று வானிலேயே சில கோளாறுகள் காரணமாக வெடித்து சிதறியது. வானில் நடந்த அந்த விபத்து பெரும் பதட்டமான சூழலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவந்திகா வஞ்சமாகப் புன்னகைத்தாள். சௌந்தராஜன் பணபலம் பொருந்திய பெரும் புள்ளி. ஆதலால் அவந்திகாவிற்கு விருப்பமில்லாவிடிலும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டானது. அவள் தன் ஆசை இலட்சியங்களை உடைத்தெறிந்துவிட்டு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள நேரிட்டது. போதாக்குறைக்கு மூன்று கருகலைப்பு மேலும் அவள் வெறுப்பை வளர்த்துவிட்டது. தலைவிதியே என்று அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அவள் விரும்பவில்லை. அதனால் அந்த மூன்று வருட வாழ்க்கையில் வியாபாரம் முதற்கொண்டு வேலையாட்கள் வரை சௌந்தரனுக்கு தெரியாமலே அவள் தன் ஆதிக்கத்தைக் கொண்டுவந்தாள் சுந்தரம் சௌந்தரனின் வியாபாரத்தைப் பற்றிய அனைத்து விஷயங்களை அறிந்தவராதலால் அவரைப் போகவிடாமல் சூட்சுமமாய் தடுத்துவிட்டாள். சரியான சமயத்தைப் பயண்படுத்தி அவள் தன் புத்திக்கூர்மையால் வெகுநாளாய் தீட்டி வைத்த திட்டத்தில் வெற்றி கண்டாள். கணவனைக் கொல்ல அவள் செய்த சூழ்ச்சியை யாரும் கணிக்க கூட முடியவில்லை. சௌந்தராஜனோ அவந்திகாவின் மீதிருந்த அலாதியான காதலாலும் மயக்கத்தாலும் அவள் மனதில் குடிக்கொண்டிருந்த வெறுப்பை உணரவில்லை. அதுவே அவரின் மரணத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்தது. அவந்திகா தான் நினைத்ததை சாதித்த ஆனந்தத்தினால் சௌந்தரனின் மரணம் நிகழ்ந்த அன்றே அவள் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்தாள். தன் தந்தையின் சாம்பலில் இருந்து அவரின் கனவுகளை சுமந்து கொண்டு உயிர்த்தெழுந்தான். அவன்தான் ஈஷ்வர்தேவ்! சௌந்தரனின் மரணம் அவர் நிர்மானித்த வியாபார சாம்ராஜ்ஜயத்தை சரித்திவிடும் என்று பலரும் எதிர்பார்க்க, நடந்தவை நேர்மாறாய் இருந்தது. அரசர் காலத்திலிருந்து வரிசை வரிசையாக ஆண்களின் ஆளுமையைக் கண்ட மகாதேவன் வம்சம் முதல்முறையாய் ஒரு பெண்ணின் ஆளுமைக்குக் கீழ் வந்தது. அவளால் நிச்சயம் நிர்வாகிக்க முடியாது என்று எண்ணி அவளின் வீழ்ச்சிக்காகப் பலரும் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவந்திகா எல்லா வியாபாரங்களிலும் அந்த இளம் வயதில் திறம்பட ஆதிக்கம் செலுத்தி வியக்க வைத்தாள். அது மட்டுமின்றி ஈஷ்வர் தேவ்விற்கு அவனின் பத்தாவது வயதிலேயே எல்லா வியாபார நுணக்கங்களையும் கற்றுக் கொடுத்து நிர்வாகப் பொறுப்புகளை அவன் தலையில் சுமத்தினாள். பெற்றோரின் புத்திக்கூர்மையில் பன்மடங்கு கொண்டவன் அப்போதே வெகு சாமார்த்தியமாய் செயல்பட, இன்று அவனுடைய முப்பதாவது வயதில் வியாபார தந்திரங்களின் வல்லமை பொருந்தியவனாய் இருந்தான். அவனின் ஆதிக்கத்தில் 'ரா' க்ரூப் ஆஃப் கம்பனிஸ் எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கியது. அதிலும் முக்கியமாய் ஃபார்மாசிட்டிக்கல்ஸ் இன்டஸ்டிரீஸில் முதன்மையான இடத்தில் இருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா